Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Meendum Samyukthai
Meendum Samyukthai
Meendum Samyukthai
Ebook196 pages1 hour

Meendum Samyukthai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'மேவாரின் சரித்திரம் ராஜபுத்திரர்களின் சரித்திரம். ராஜ புத்திரர்களின் சரித்திரம் இந்தியாவின் சரித்திரம்' என்று சொல்லுவதுண்டு. வீரக்கதைகள் கொண்ட அவர்களது சரித்திரத்தில் அன்பும், பண்பும், சாகசங்களும் ரெளத்ரமும், சிருங்காரமும், நவரசங்களும் அவற்றை சுவாரஸ்யமுள்ளதாக்கி விடுகின்றன. விஸ்தாரமான இராஜபுத்ர இதிகாசங்களின் பக்கங்களைப் புரட்டியபோது ஓரிரு பக்கங்களில் அடங்கி விடக்கூடிய உதிரியான சில சம்பவங்கள் என் கவனத்தை ஈர்த்தன. அதே சம்பவங்களை வெவ்வேறு சரித்திரப் பேராசிரியர்கள் வித்தியாசமான கோணங்களில் கையாண்டு எழுதியிருந்ததை வைத்து ஆய்வு செய்து பார்த்தபோது அரசகுமாரி தாராவைக் கதாநாயகியாக வைத்து நான் எழுதிய சரித்திரக் கதைதான். இந்தப் புதினத்தின் முதல் பாகம்.

கதையைத் தொடர்ந்து எழுதினால்தான் அது முழுமைபெறும் என்கிற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. தொடர்ந்து சரித்திரப் புத்தகங்களைத் துழாவியதில் இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களைச் சேகரிக்க முடிந்தது. ராஜபுத்திரப் பெண்களின் முகத்திரை அணியும் பழக்கம் (பர்தா) ஒரு புதினத்தைப் படைக்கும் அளவுக்குத் தகவல்களை அள்ளித்தந்தது இருக்கட்டும், அது மேவாரின் சரித்திரத்தையே மாற்றி அமைக்கும் சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தது என்று அறிந்தால் என்னைப்போல் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள். சரித்திர ஆதாரங்களோடு கற்பனையைச் சேர்த்துப் புனைந்ததும் இன்னொரு சம்யுக்தை எனக்குக் கிடைத்தாள்!

- லக்ஷ்மி ரமணன்

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580125804551
Meendum Samyukthai

Read more from Lakshmi Ramanan

Related authors

Related to Meendum Samyukthai

Related ebooks

Related categories

Reviews for Meendum Samyukthai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Meendum Samyukthai - Lakshmi Ramanan

    http://www.pustaka.co.in

    மீண்டும் சம்யுக்தை

    Meendum Samyukthai

    Author:

    லட்சுமி ரமணன்

    Lakshmi Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முதல் பாகம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    இரண்டாம் பாகம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    என்னுரை

    'மேவாரின் சரித்திரம் ராஜபுத்திரர்களின் சரித்திரம். ராஜ புத்திரர்களின் சரித்திரம் இந்தியாவின் சரித்திரம்' என்று சொல்லுவதுண்டு. வீரக்கதைகள் கொண்ட அவர்களது சரித்திரத்தில் அன்பும், பண்பும், சாகசங்களும் ரெளத்ரமும், சிருங்காரமும், நவரசங்களும் அவற்றை சுவாரஸ்யமுள்ளதாக்கி விடுகின்றன.

    விஸ்தாரமான இராஜபுத்ர இதிகாசங்களின் பக்கங்களைப் புரட்டியபோது ஓரிரு பக்கங்களில் அடங்கி விடக்கூடிய உதிரியான சில சம்பவங்கள் என் கவனத்தை ஈர்த்தன. அதே சம்பவங்களை வெவ்வேறு சரித்திரப் பேராசிரியர்கள் வித்தியாசமான கோணங்களில் கையாண்டு எழுதியிருந்ததை வைத்து ஆய்வு செய்து பார்த்தபோது அரசகுமாரி தாராவைக் கதாநாயகியாக வைத்து நான் எழுதிய சரித்திரக் கதைதான். இந்தப் புதினத்தின் முதல் பாகம்.

    கதையைத் தொடர்ந்து எழுதினால்தான் அது முழுமைபெறும் என்கிற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. தொடர்ந்து சரித்திரப் புத்தகங்களைத் துழாவியதில் இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களைச் சேகரிக்க முடிந்தது. ராஜபுத்திரப் பெண்களின் முகத்திரை அணியும் பழக்கம் (பர்தா) ஒரு புதினத்தைப் படைக்கும் அளவுக்குத் தகவல்களை அள்ளித்தந்தது இருக்கட்டும், அது மேவாரின் சரித்திரத்தையே மாற்றி அமைக்கும் சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தது என்று அறிந்தால் என்னைப்போல் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்.

    சரித்திர ஆதாரங்களோடு கற்பனையைச் சேர்த்துப் புனைந்ததும் இன்னொரு சம்யுக்தை எனக்குக் கிடைத்தாள்!

    லக்ஷ்மி ரமணன்

    *****

    மீண்டும் சம்யுக்தை

    முதல் பாகம்

    1

    பனாஸ் நதியை ராஜபுதனத்தின் கங்கை என்று சொல்லுவதுண்டு. கங்கையின் வேகமும், இமயத்தின் மடியிலிருந்து எழுந்தோடி வருகையில் அதனிடம் தெரியும் ஆவேசமும், துள்ளலும் இதனிடம் இல்லை.

    அதன் அழகும், அகல ஆழமும், இதிகாசச் சிறப்பும் இதற்கில்லைதான். ஆனால்...

    எங்கோ தொலைதூரத்தில் ஆரவல்லி மலைகளுக்கு மத்தியில் கும்பல்கர் கோட்டைக்குச் செல்லும் வழியில் பாதை பிரிந்து, காட்டுச் சோலைக்குள் ஊடுருவிச் சென்றால் பனாஸ் நதி ஊற்றெடுத்து ஜனனமாகும் பைரவமடத்தை அடையலாம்.

    அங்கே ஊற்று, குளமாகி நிரம்பி வழிந்து பாறைகளுக்கிடையில் கசிந்து பெருகி, 'கோல்வாடா' என்னும் இடத்தில் கீழே இறங்கி, நடுவில் வந்து இணையும் கிளையாறுகளைச் சேர்த்துக் கொண்டு குடும்பப் பெண்ணைப் போல் அடக்கமாக வந்தாலும், தான் வழியில் கடக்க நேரிடும் சிற்றூர்களையும் இராஜ்ஜியங்களையும் செழுமையுள்ளதாக்கிய சரித்திர முக்கியத்துவம் இதற்கு உண்டு. பனாஸ் நதியைத் தொட்டுக் கொண்டு அமைந்த தோடபுரமும் (டோடா ராய்சிங் என்று இதைக் குறிப்பிடுகிறார்கள்) இதன் இணைநகரமான தக்திபுரமும் சோளங்கி ராஜபுத்ர பரம்பரையினரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சமயம்.

    பனாஸின் கருணையால் அங்கு வளமைக்கும் பசுமைக்கும் பஞ்சமில்லை. கோட்டையின் ஒரு பக்கத்திற்கு இது இயற்கை அமைத்துக் கொடுத்த அரணாக இருந்தது என்றுகூடச் சொல்லலாம். பனாஸ் நதியின் நீரைச் சுரங்கக் கால்வாய் வழியே கோட்டைக்குள் கொண்டு வந்து அங்கிருந்த வயல்களுக்கும், தோப்புகளுக்கும் நீர்ப்பாசனம் நடந்தது கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற தானிய வயல்களும், கண்களுக்கெட்டும் தூரம் வரை மாந்தோப்புகளும், மல்லிகையும், சம்பங்கியும், மனோரஞ்சிதமும் பூத்துக் குலுங்கும் உத்தியானவனங்களுமாய்த் தோடபுரத்தின் அழகு காண்போரின் கண்களைக் குளிர்வித்தது. பிரம்மாண்டமான கோட்டைச் சுவர்களுக்கு மத்தியில் பரந்து கிடந்த நிலப்பரப்பில் அரண்மனையைச் சுற்றி மாடமாளிகைகளும் சிற்பக்கூடங்களும், தேவாலயங்களும், கல்விச் சாலைகளும், சபா மண்டபமும், கோசாலைகளும் இருந்தன.

    அரண்மனையையொட்டி அமைந்திருந்தன குதிரை லாயங்களும், தானியக் கிடங்குகளும் விசாலமான சாலைகளின் இருபுறங்களிலும் வரிசை கட்டி நின்ற மரங்களும், அவற்றை அடுத்திருந்த அழகிய வீடுகளும் தோடபுரத்துக்குத் தனியானதொரு கம்பீரத்தைச் சேர்த்தன.

    தோடபுரத்துச் சிற்றரசர் சக்தி சேனனுக்கும் மனைவி லாஜ்வந்தி தேவிக்கும் மகப்பேறு அமையவில்லை. அந்தக் குறை அவர்களுக்குத் தெரியாதவண்ணம் இளைய சகோதரன் சூரிய சேனனின் மகள் தாரா அவர்களைத் தன் புத்திசாலித்தனத்தினாலும், எதற்கும் அஞ்சாத குணத்தினாலும் கவர்ந்ததுடன், அவர்கள்மீது பாசமழை பொழிந்தாள். தாராதான் நம் கதாநாயகி!

    தாராவின் தாய் பூர்ணாவதி ஷங்காலப் பரம்பரையைச் சேர்ந்தவள். தங்களுக்கு ஆண் வாரிசு இல்லையே என்று அவளோ, சூரியசேனனோ வருந்தியது கிடையாது.

    தாராவை ஓர் ஆண்மகனைப் போலவே அவர்கள் வளர்த்தார்கள் என்றால் அது மிகையில்லை. ஆறாவது வயதிலேயே தாராவுக்குக் குதிரையேற்றம், வாட்போர் முறை எல்லாமே கற்றுத்தரப்பட்டன. வில்லில் நாணேற்றி இலக்கினைக் குறிபார்த்து அம்புவிட்டு வீழ்த்துவதிலும் அவள் கெட்டிக்காரியாக இருந்தாள்.

    அதே சமயத்தில் பெண்மையின் குணநலன்களான பொறுமை, சாந்தம், இறையுணர்வு அனைத்துமே அவளிடம் குடி கொண்டிருந்தன.

    தாரா தினமும் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு வந்து குலதெய்வமான பவானியை வணங்கியபின் தன் பெரிய தந்தையாருடன் புரவிமீது நகர்வலத்துக்குக் கிளம்பிவிடுவாள்.

    சின்னப் பெண்ணாக இருந்தாலும் எல்லாவற்றையும் சுவாரஸ்யத்துடன் கற்றறிகிற ஆர்வம் அவளுக்கு நிறையவே இருந்தது.

    சக்திசேனனுக்குத் தாராவைப் பற்றிய எதிர்காலக் கனவுகள் ஏராளமாய் இருந்தன. அவளைத் தோடபுரத்து அரசியாக்க முழுத் தகுதிகளை உடையவளாகச் செய்ய வேண்டும் என்று மனசுக்குள் திட்டமிட்டுச் செயல்பட்டார்.

    சோளங்கி பரம்பரையினரின் கீர்த்தியை உன்னத நிலைக்குக் கொண்டு செல்லத் தாராவால் நிச்சயம் முடியும் என்று அவர் நம்பினார்.

    ஆனால்...

    அவருடைய முற்போக்கான சிந்தனை அந்தக் காலத்துக்கும், சூழ்நிலைக்கும் ஒவ்வாதது என்று நினைத்தவர்களும் தோடபுரத்தில் இருந்ததுதான் பல மறைமுக எதிரிகள் உருவாகக் காரணமாகி விட்டது.

    அப்படிப்பட்டவர்களில் முக்கியமானவன் தளபதி வினோத கேசரி, ஏற்கனவே மிகுந்த பதவி மோகம் கொண்ட அவனுக்கு ஆண் வாரிசு இல்லாத அரசப் பரம்பரையின் வம்சாவளியில் சூர்யசேனனுக்குப் பிறகு அரியணையில் அமரத் தனக்கு மட்டுமே எல்லாத் தகுதிகளும் இருப்பதாக அவன் நினைத்தான். அந்த நிகழ்வு வெகுதூரத்தில் இல்லை என்று ஆவலுடன் காத்திருந்தான்.

    ஆசை வெறியாகும்போது நியாயங்கள் மறந்துபோகும். தாராவைப் பற்றிய அவனது கணிப்பும், அபிப்பிராயங்களும் வேறாக இருந்தன.

    அப்போது தாராவுக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும். ஆயிரம் தகுதிகள் இருந்தாலும் அவள் இராஜபுத்ரப் பரம்பரையில் வந்தவள். அதிலும் அழகுப் பெட்டகம், அதனால் அரண்மனையை விட்டு வெளியே எங்கு செல்வதானாலும் முகத்திரை அணிந்து செல்ல வேண்டும் தாராவை இன்னொரு அரசப் பரம்பரையைச் சேர்ந்த வாரிசுக்கு மணமுடித்து அனுப்பிவிட்டால் பிறகு குழந்தை, குடும்பம் என்று அவள் கவனம் அதில் பதிந்து விடும். அப்போது தோடபுரத்துக்கு அரசனாகும் வாய்ப்பு தானே அவன் மடியில் வந்து விழப்போகிறது என்று அவன் கனவு கண்டான்.

    அது கலைந்து போகும் நேரம் விரைவில் வந்தது.

    ஒரு நாள்...

    சபா மண்டபத்தில் அரசவை கூடியிருந்தது.

    தோடபுரத்தில் கலைக்கூடம் ஒன்றை அமைக்கிற யோசனையையும், ஜாலோரிலிருந்து ஆயுதங்களை வாங்கிவரச் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைப் பற்றியும் விவாதித்து முடிவெடுக்க அரசர் சக்தி சேனன் அவையைக் கூட்டியிருந்தார்.

    அந்த நேரத்தில்...

    சபா மண்டபத்திற்கு வெளியில், யாரோ பலத்த குரலில் அழும் சப்தம் கேட்டது.

    தெருவோடு சென்ற யாரோ தங்கள் உறவினரை இழந்ததால் அழுகிறார்கள் போலும் என்று அரசர் அதை ஒதுக்கிவிட நினைத்தார். ஆனால், அழுகைச் சப்தம் அதிகமாகிக் கொண்டே போயிற்று.

    சக்திசேனன் தன் இளைய சகோதரனை அழைத்து, சூர்யா! அங்கே என்ன பிரச்சினை என்று அறிந்து வா! என்று பணித்தார்.

    சூர்யா திரும்பி வந்தபோது, பின்னாலேயே காவலாளிகள் அழுது கொண்டிருந்த முதியவர் ஒருவரை அழைத்து வந்தார்கள். விவாதம் பாதியில் நின்று அவைக்கூடமே அமைதியில் ஆழ்ந்தது.

    உள்துறை அமைச்சர் கீர்த்திவர்மன் காவலாளிகளைப் பார்த்து, என்ன நடந்தது? இந்தப் பெரியவரை நீங்கள் அடித்துத் துன்புறுத்தினீர்களா? இவர் ஏன் அழுகிறார்? என்று கேட்டார்.

    ஐயா! மன்னிக்க வேண்டும். நாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை. இந்த முதியவர் கடைத்தெருவின் மத்தியில் நின்று இப்படி அழுது கொண்டிருந்தது போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்தது. அவர் அழுவதன் காரணம் உடல் உபாதையினால் இருக்குமானால், மருத்துவரிடம் அழைத்துப் போவதாகச் சொன்னோம். அதற்கு இவர் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். அதனால் வைத்தியரிடம் போக வேண்டிய அவசியமில்லை என்று சொல்லிவிட்டார். வேறு எந்தவிதமான பிரச்சினையும் இவருக்கிருப்பதாகத் தெரியவில்லை. விசாரித்ததில் இவரது மகனும், மருமகளும், பேரப்பிள்ளைகளும் இவரிடம் அளவற்ற பாசத்துடனும் மரியாதையுடனும் நடந்து கொள்கிறவர்களாக இருப்பது தெரிந்தது. அக்கம்பக்க வீடுகளில் வசிப்பவர்கள் அதை உறுதிப்படுத்தினார்கள். இத்தனைக்குப் பிறகும் கிழவர் அழுவதை நிறுத்தவில்லை. அதன் காரணத்தை அவர் தங்களிடம்தான் சொல்லுவேன் என்று பிடிவாதம் பிடித்தார். அதனால்தான் இங்கு அழைத்து வந்தோம் என்று காவலாளிகளில் ஒருவன் சொல்லி முடித்தான்.

    அப்படியா? என்ற கீர்த்தி, வந்தவனை விசாரிக்க அனுமதியை வேண்டி அரசரை நோக்கினார்.

    காரணம் என்னவென்று கேளுங்கள் அமைச்சரே! சக்திசேனன் சொன்னதும், முதியவன் அழுவதை நிறுத்திவிட்டு அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

    பிறகு சொல்லத் துவங்கினான்:

    வாழ்க அரசர் சக்திசேனன்! வளர்க சோளங்கி பரம்பரையினரின் புகழ்! அரசே! இது என்னுடைய பிரச்சினை மட்டுமன்று தோடபுரத்து மக்கள் அனைவரையும் குழப்பிக் கொண்டிருக்கும் கேள்வி இது. தங்களுக்கு மக்கட்பேறு இல்லாததால், தங்களுக்குப் பிறகு வாரிசாக இளைய சகோதரர் சூரியசேனன் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார் என்று நாங்கள் நிம்மதியாக இருந்தோம். ஆயின் இப்போது அவருக்குப் பிறகு இந்த நாட்டின் கதி என்ன என்கிற அச்சமும், சந்தேகமும் எங்களை வாட்டுகிறது. இந்த நாட்டிற்கு ஒரு வாரிசைத் தரவாவது அவர் இன்னொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று விளக்கம் தந்து முடித்தான் அவன்.

    இதற்காகவா இத்தனை அழுது ஆர்ப்பாட்டம் செய்தீர்? நேராக வந்து அரண்மனைக்கு எதிரிலுள்ள முறையீடு மண்டபத்தில் என்னிடம் இதைப்பற்றிக் கேட்டிருக்கலாமே சக்திசேனன் வினவினார்.

    "அரசே! அங்கே மக்கள் தங்கள் சொந்தப் பிரச்சினைகளையும், குறைகளையும் முறையிட்டுக் கொள்வதற்காக மட்டுமே நேரத்தை ஒதுக்கியுள்ளீர்கள். இது

    Enjoying the preview?
    Page 1 of 1