Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uravai Thedi
Uravai Thedi
Uravai Thedi
Ebook225 pages1 hour

Uravai Thedi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இதிலுள்ள சிறுகதைகள் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டவை. அந்தந்தச் சூழ்நிலையிலிருந்த மனோ பாவங்களையும், தார்மீக நியாயங்களையும் பிரதிபலிப்பவை. கற்பனையில் பிறந்த கதாபாத்திரங்கள்தான் என்றாலும் சில நாயக நாயகிகள் என் மனதில் நிலைத்து நின்றுவிட்டார்கள்.
தன் ஏழ்மையிலும் தான் படைத்த லட்சிய கதாபாத்திரத்தின் உன்னதம் சிதைந்துவிடக் கூடாது என்று நினைக்கும் திலீபன், வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு எப்படி அமைந்ததோ அதை ஏற்றுக் கொள்ளும் ஜோதிநாதன், தொலைந்து விட்ட உறவுகளால் எப்போதும் தாழ்வு மனப்பான்மைக்குள் அழுந்திக் கிடக்கும் அபிஷேக், அவனுக்கு உறவு என்கிற வார்த்தைக்கான உண்மைப் பொருளைப் புரியவைக்கும் ரேகா, சுதந்திரப் பறவையான துணிச்சல் நிறைந்த பெண் சுஷ்மா, தன் தாய் தன்னைப் புறக்கணித்த காரணத்தைத் தேடி பம்பாய் செல்லும் சிறுமி நிம்மி என்று இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். எழுதுவது என்பது ஓர் இனிமையான அனுபவம். நானும் எழுத வேண்டும் என்கிற என் எண்ணத்திற்குத் தூண்டுகோலாக அமைந்தது பல பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள். அப்படிப்பட்டவர்களில் திரு எஸ். லட்சுமி சுப்பிரமணியம் முக்கியமானவர். - (எஸ்.எல்.எஸ்) - அவருடைய கட்டுரைகள், கதைகள், புதினங்கள் எல்லாவற்றையும் ஒரே மூச்சில் படித்துவிடுவேன்.
ஆரம்பத்திலிருந்தே நான் அவருடைய எழுத்தின் ரசிகை. தெளிந்த நீரோடை போன்ற தமிழ்நடையில் சுவாரஸ்யம் குன்றாமல் கதை சொல்லுவது அவருக்குக் கைவந்த கலை. எஸ்.எல்.எஸ், பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளரும் மட்டுமல்ல. பொறியியல் வல்லுனராகத் தமிழக அரசில் தலைமைப் பொறியாளர் பதவியை வகித்தவர். ஆன்மீகம், மருத்துவம், மனோதத்துவம், பயண அனுபவம் வரலாறு, விஞ்ஞானம், கட்டிடக்கலை, சிறுகதைகள், நாவல்கள் என்று எழுத்தில் இவர் தொடாத விஷயமே இல்லை. சுமார் தொண்ணூறு புத்தகங்களை எழுதி, இன்னமும் தன் எழுத்துலகப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பவர் இவர்.
1972ஆம் ஆண்டு குடும்பத்துடன் நான் பெங்களூர் சென்று கொண்டிருந்தபோது முதல் முறையாக அவரைச் சந்தித்தேன். தான் இன்னார் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே அவர் என் எழுத்தைப் புகழ்ந்ததும், அவர் பிரபல எழுத்தாளர் லட்சுமி சுப்பிரமணியம் என்பதை நான் தெரிந்து கொண்டபோது பிரமித்ததும் மறக்க முடியாத அனுபவம். அதன்பின் அவர் எங்கள் குடும்ப நண்பரானார்.
என்னை நிறைய எழுதும்படி உற்சாகப்படுத்துவார். என் முதல் சிறுகதைத் தொகுப்பான 'பிரம்மோபதேசம்' வெளியாவதற்கு அவர்தான் காரணமாக இருந்தார்.
சுயவிளம்பரமோ, தன் சாதனைகளைக் குறித்த அகந்தையோ சிறிதும் இல்லாத அமைதியான அவர் குணம் எல்லோரையும் எளிதில் கவர்ந்துவிடும்.
அத்தகைய சாதனையாளர் என் சிறுகதைத் தொகுப்பிற்கு அணிந்துரை வழங்க இசைந்தது என் எழுத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவம். அதற்காக எஸ்.எல்.எஸ். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
லக்ஷ்மி ரமணன்
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580125805119
Uravai Thedi

Read more from Lakshmi Ramanan

Related authors

Related to Uravai Thedi

Related ebooks

Reviews for Uravai Thedi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uravai Thedi - Lakshmi Ramanan

    http://www.pustaka.co.in

    உறவைத் தேடி

    சிறுகதைகள்

    Uravai Thedi

    Sirukathaigal

    Author:

    லக்ஷ்மி ரமணன்

    Lakshmi Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. சுமை

    2. ஒரு குற்றவாளியின் மனம் நீதிமன்றமாகிறது!

    3. எல்லாமே...

    4. புரியவில்லை!

    5. ஓர் இரவு முடிகிறது

    6. எதிரொலியான சில சப்தங்கள்

    7. இவள் இன்றைய மங்கை

    8. சுதந்திரப் பறவை

    9. ஒரு பெண் தெய்வமாகிறாள்!

    10. உறவைத் தேடி...

    11. ஆசை

    12. கிளிஞ்சல்

    13. எப்படித் தேடுவேன்...?

    14. திலீபனின் தீர்மானம்

    15. சாதனை

    16. வராதே ஞாயிறே!

    17. மல்லிகைச் சரம்

    18. நீரஜா சொன்னது நிஜந்தானா?

    19. கிழக்கும் மேற்கும்

    20. பிறந்த வீட்டுப் பாசம்

    21. அது ஒரு காதல் காலம்

    அணிந்துரை

    தமிழில் குங்குமப்பூ போட்ட பால்பாயசம் போல, நகைச்சுவையைக் கலந்து எழுதுகிற சிறுகதை எழுத்தாளர்கள் மிகவும் குறைவு. அமரர் வாசன் உருவாக்கிய 'ஆனந்த விகடனி'ல், எஸ். வி. வி. முதல் தேவன், துமிலன், சாவி போன்றவர்கள் அன்று நகைச்சுவைக்கே முதல் இடம் தந்து எழுதி இருக்கிறார்கள். 'கல்கி'யும்கூட 'கர்நாடகம்' என்ற பெயரில் எழுதியுள்ள கட்டுரைகளில், நகைச்சுவையே பிரதானம் என்றுதான் எழுதி இருக்கிறார்.

    ஆனால், 'ஆனந்த விகடன்' கூட, அவர் காலத்திலேயே 'சீரியஸ் விகடன்' ஆகி விட்டது. அதில் வெளி வந்த நூற்றுக்கு மேற்பட்ட முத்திரைக் கதைகள் எதிலுமே நகைச்சுவை அடிநாதமாகக்கூட மணக்கவில்லை என்று என்னால் சொல்ல முடியும். ஜெயகாந்தன், 'பிலஹரி' போன்ற எழுத்தாளர்களுக்கு இணையாக, எனக்கும் முப்பது கதைகளுக்கு முத்திரை கிடைத்துள்ளது. அவை எதிலுமே நகைச்சுவை ஆதார சுருதியாகக்கூட இல்லை!

    இப்படிப்பட்ட சிறுகதை உலகில் விடாப்பிடியாக நகைச்சுவைக்கே முதல் இடம் தந்து எழுதிக்கொண்டு வரும் தைரிய சாலியான எழுத்தாளர், எனது சகோதரி லட்சுமி ரமணன். அவர் தன்னுடைய அறிமுகம் செய்யும் உரையாக அமைந்துள்ள என்னுரையில், என்னைத் தூண்டுகோல் என்று குறிப்பிட்டிருப்பது அவருடைய பெருந்தன்மை. குத்துவிளக்கு சுடரொளி தர அதன் திரியும் முத்து போன்ற கொழுந்தும் தான் பிரதானம். நான் ஒரு தூண்டுகோல் குச்சி மட்டுமே. முழுமனத்துடன் எழுத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அவருடைய படைப்பின் வெற்றிக்கு அவருடைய முயற்சியே பிரதானம். என்னைப் போன்றவர்கள் சுருதி கூட்டித் தரும் தம்புரா (இப்போது மின்-இயல் பெட்டிகூட வந்துவிட்டது!) மட்டுமே.

    இந்தச் சிறிய சிறுகதைப் புத்தகத்தில் வெளி வந்துள்ள இருபத்தொன்று சிறுகதைகளை இப்போது கொஞ்சம் ஆய்வு செய்து பார்ப்போம். அவருடைய வழக்கமான நகைச்சுவை மணக்கவில்லை என்பதே இந்தத் தொகுதியின் வித்தியாசமான பதினெட்டு மலர்களின் சிறப்பு. ஆனால், எல்லோரும் - குறிப்பாக எல்லா பெண்மணிகளும் - விரும்பி ஏற்கும் ரோஜாவும், கனகாம்பரமும் கூட அப்படித்தானே இருக்கின்றன? இப்போது இந்த மாறுபட்ட மலர்த் தொகுப்பை ஒவ்வொரு கதையாக ஆராய்வோம். இவை பெரும்பாலும் நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பெண்களை, வாலிபர்களை, பெற்றோர்களை வைத்தே பின்னப்பட்டவை.

    இசைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் இளம் பெண் ஹம்ஸா. அதன் மூலம் புகழ் பெற வேண்டும் என்ற ஆசையே அவருக்கு இசையைச் சுமையாக ஆக்கி, முதுகில் ஏறி உட்கார்ந்து கொள்கிறது. அவருடைய ஆசையும் நிராசையும், பிரசுரத்துக்காக ஏங்கும் இன்றைய எழுத்தாளனின் எதிர்பார்ப்பின் நிழலாக எனக்குத் தெரிகின்றன.

    பெற்றோரைத் தவிக்கவிட்டு, காதல் மொட்டை நம்பி வந்து, அது மலராமலே போய்விடுவதால் வாடி வதங்கும் இன்றையப் பெண்ணின் பிரதிநிதியாக விளங்குகிறாள் சிந்தா.

    திலீப்பின் பெற்றவர்கள் வருவதற்குக்கூட முன்கூட்டியே தேதி சொல்ல வேண்டும். ஆனால், திலீப் - ஆர்த்தி இருவருக்கும் பிறக்கும் சிஸேரியன் குழந்தை, ஒன்றரை மாதம் முன்பே பிறந்துவிட்டதே? அதைத் திருப்பி அனுப்ப முடியுமா? கொஞ்சம் புன் முறுவலும் பூக்கலாமே என்று கேட்கிறது இந்தக் கதை.

    புலியைப் பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் தவிக்கும் சாரு, அது வீட்டு வாசலுக்கே வரும்போது கிலிக்கு ஆளாகிறாள். ஒரே புலியிடம் இரண்டு விதமான உணர்வுகளா?

    கணவன் மறைந்தும் குங்குமம் மறையாத மனைவி தீபாதேவி. ஆம் - ரூப்சந்த் மட்டுமே மறைந்து ஸ்வாமி ஞானானந்தர் ஆகிறான். மனைவியோ இன்னும் சுமங்கலியாக இருக்கிறாள். இப்படி ஒரு வினோதமான தம்பதியரைச் சந்திக்கிறோம் ஓர் இரவு முடிகிறது! என்ற கதையில்.

    தன்னுடைய வாழ்க்கையைப் புதிதாக அமைத்துக் கொள்ள, காதலன் மறுக்கும் பெண், அவன் மூலமே வாழ்க்கைப் பயணம் புதிதாகத் தொடங்கும் அனுபவத்தில் தன்னை மாற்றிக் கொள்ளுகிறாள் ரேகா, எதிரொலியான சில சப்தங்கள் என்ற சிறுகதையில்.

    உடன்கட்டை ஏறும் பெண்ணின் முடிவிலேயே ஆதாயம் தேடும் பெற்றோர் - சமைக்கக் கற்றுக் கொள்ளும் மனைவியின் நம்பிக்கை, கணவன் ஏமாற்றுவதை எண்ணி மனத்துக்குள் புலம்பும் மனைவி - குடும்பத்தின் எதிர்காலத்துக்காகத் தனது எதிர் காலத்தைத் துறக்கும் மகன் - குற்றவாளியாக இருந்து திரும்பியவன் அதைத் தனது காதலியிடம் நிரூபிக்க முடியாமல் தவிக்கும் தவிப்பு - இப்படிப் பல உணர்ச்சிச் சிதறலான பாத்திரங்கள் நம்மைச் சுற்றி வலம் வருகின்றன.

    குடிவெறியில் தடுமாறும் கணவனிடம் வாழ்க்கையின் எதிர்பார்ப்புகளைப் பறி கொடுக்கும் பெண், தகாத உறவில் பிறந்த குழந்தையைத் தியாகம் செய்து அனுப்பி விட்டு, சந்தோஷப் பூக்களிடையே வாழும் தாய், காதலன் என்ற உறவை மதித்துக் கணவன் என்ற உறவைத் தியாகம் செய்யும் ஜென்னி, ஒரு பெண்ணின் ஆசைக்காகத் தனி வாழ்க்கையின் சுக சௌக்கியங்களைத் தியாகம் செய்யும் பெற்றோர்.

    இப்படி வித்தியாசமான வண்ணப் பூக்களின் தொடுத்த மாலையாக இந்தத் தொகுப்பு கண்ணைப் பறிக்கிறது. பெண்மையின் வெவ்வேறு ஏமாற்றங்கள், தியாகங்கள், தவிப்பு மற்ற தடுமாறல்களைத் திசை திருப்பும் பிரதிபலிப்புகள் என்று பல உணர்வுகளும் நெஞ்சை மீட்டுகின்றன. இந்தக் கதைகளில் வில்லன்களே இல்லை. சந்தர்ப்பங்களே அப்படி மாறி வில்லனாகத் தோற்றம் தருகிறது.

    நமக்குப் பெண்மையின் கூந்தற் பின்னலை பூப்பின்னலாக்கி அழகிட்டுக் காட்டும் முயற்சியில் கதாசிரியைக்கு நிச்சயமாக அபார வெற்றிதான்.

    (இந்த நாளில் கூந்தலைப் பின்னலாக்கிப் பூக்களை வைத்து ரசிக்கும் பெண்கள் மிகக் குறைவு).

    இந்தத் தொகுப்பும் அப்படி வித்தியாசமானது தான்!

    வாழ்த்துக்களுடன்

    எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

    என்னுரை

    இதிலுள்ள சிறுகதைகள் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டவை. அந்தந்தச் சூழ்நிலையிலிருந்த மனோ பாவங்களையும், தார்மீக நியாயங்களையும் பிரதிபலிப்பவை. கற்பனையில் பிறந்த கதாபாத்திரங்கள்தான் என்றாலும் சில நாயக நாயகிகள் என் மனதில் நிலைத்து நின்றுவிட்டார்கள்.

    தன் ஏழ்மையிலும் தான் படைத்த லட்சிய கதாபாத்திரத்தின் உன்னதம் சிதைந்துவிடக் கூடாது என்று நினைக்கும் திலீபன், வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு எப்படி அமைந்ததோ அதை ஏற்றுக் கொள்ளும் ஜோதிநாதன், தொலைந்து விட்ட உறவுகளால் எப்போதும் தாழ்வு மனப்பான்மைக்குள் அழுந்திக் கிடக்கும் அபிஷேக், அவனுக்கு உறவு என்கிற வார்த்தைக்கான உண்மைப் பொருளைப் புரியவைக்கும் ரேகா, சுதந்திரப் பறவையான துணிச்சல் நிறைந்த பெண் சுஷ்மா, தன் தாய் தன்னைப் புறக்கணித்த காரணத்தைத் தேடி பம்பாய் செல்லும் சிறுமி நிம்மி என்று இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். எழுதுவது என்பது ஓர் இனிமையான அனுபவம். நானும் எழுத வேண்டும் என்கிற என் எண்ணத்திற்குத் தூண்டுகோலாக அமைந்தது பல பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள். அப்படிப்பட்டவர்களில் திரு எஸ். லட்சுமி சுப்பிரமணியம் முக்கியமானவர். - (எஸ்.எல்.எஸ்) - அவருடைய கட்டுரைகள், கதைகள், புதினங்கள் எல்லாவற்றையும் ஒரே மூச்சில் படித்துவிடுவேன்.

    ஆரம்பத்திலிருந்தே நான் அவருடைய எழுத்தின் ரசிகை. தெளிந்த நீரோடை போன்ற தமிழ்நடையில் சுவாரஸ்யம் குன்றாமல் கதை சொல்லுவது அவருக்குக் கைவந்த கலை. எஸ்.எல்.எஸ், பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளரும் மட்டுமல்ல. பொறியியல் வல்லுனராகத் தமிழக அரசில் தலைமைப் பொறியாளர் பதவியை வகித்தவர். ஆன்மீகம், மருத்துவம், மனோதத்துவம், பயண அனுபவம் வரலாறு, விஞ்ஞானம், கட்டிடக்கலை, சிறுகதைகள், நாவல்கள் என்று எழுத்தில் இவர் தொடாத விஷயமே இல்லை. சுமார் தொண்ணூறு புத்தகங்களை எழுதி, இன்னமும் தன் எழுத்துலகப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பவர் இவர்.

    1972ஆம் ஆண்டு குடும்பத்துடன் நான் பெங்களூர் சென்று கொண்டிருந்தபோது முதல் முறையாக அவரைச் சந்தித்தேன். தான் இன்னார் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே அவர் என் எழுத்தைப் புகழ்ந்ததும், அவர் பிரபல எழுத்தாளர் லட்சுமி சுப்பிரமணியம் என்பதை நான் தெரிந்து கொண்டபோது பிரமித்ததும் மறக்க முடியாத அனுபவம். அதன்பின் அவர் எங்கள் குடும்ப நண்பரானார்.

    என்னை நிறைய எழுதும்படி உற்சாகப்படுத்துவார். என் முதல் சிறுகதைத் தொகுப்பான 'பிரம்மோபதேசம்' வெளியாவதற்கு அவர்தான் காரணமாக இருந்தார்.

    சுயவிளம்பரமோ, தன் சாதனைகளைக் குறித்த அகந்தையோ சிறிதும் இல்லாத அமைதியான அவர் குணம் எல்லோரையும் எளிதில் கவர்ந்துவிடும்.

    அத்தகைய சாதனையாளர் என் சிறுகதைத் தொகுப்பிற்கு அணிந்துரை வழங்க இசைந்தது என் எழுத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவம். அதற்காக எஸ்.எல்.எஸ். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    லக்ஷ்மி ரமணன்

    1. சுமை

    (தம்ப்ராஸ் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை)

    உங்க பெண்ணுக்குப் பாடத் தெரியுமோ? ஹம்ஸாவைப் பெண் பார்க்க வந்த வாசுவின் தாய் ரோகிணி கேட்ட முதல் கேள்வி இதுதான்.

    தெரியுமாவது... ஆறு வயசிலேருந்து சங்கீதம் கத்துக்கறா. பல போட்டிகளிலே பரிசு வாங்கி இருக்கா. இந்த அலமாரிலே இருக்கிற மெடல்கள், கோப்பைகள் எல்லாமே அவ வாங்கினதுதான். வானொலியில் அப்பப்ப கச்சேரிக்கு சான்ஸ் வருது. ஹம்ஸாவின் தந்தை ராமமூர்த்தி பெருமையுடன் சொன்னதும் உடனே எழுந்து போய் மெடல்களை எடுத்துப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் வாசுவுக்குள் எழுந்தாலும், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

    அப்படியா சந்தோஷம். ஹம்ஸா ஒரு பாட்டுப் பாடும்மா.

    ரோகிணி சொல்லுவதற்காகவே காத்திருந்தவளைப் போல் ஹம்ஸாவின் தாய் மீனாட்சி தம்புராவைக் கொண்டுவந்து மகளிடம் கொடுக்க... சுருதி சேர்த்துக் கொண்டு ‘வருவாய் மயில்மீதினிலே... வடிவேலுடனே வருவாய்!' கானடா ராகத்தில் பாரதியாரின் சொல் வளத்தில் இனிமையைக் குழைத்துக் கொண்டு அழகனாய் முருகன் பவனி வந்தான். தேன்மழையில் நனைந்த பரவசத்துடன் வாசு உட்கார்ந்திருந்தான்.

    'அம்மா ரோகிணி நிச்சயம் 'இம்ப்ரெஸ்ஸாகி' ஹம்ஸாவின் பாட்டைப் புகழப் போகிறாள்.' அவன் தாயின் முகத்தைப் பார்த்தான்.

    'குட்' என்ற சுருக்கமான விமர்சனத்தில் அவன் எதிர்பார்ப்பு கலைத்துப் போடப்பட்டது. ரோகிணி தொடர்ந்தாள்.

    எங்க குடும்பத்திலே சங்கீதத்திலே எல்லாருக்கும் ஈடுபாடு. என் பெண் சாரு அற்புதமா வயலின் வாசிப்பா. வாசு மிருதங்கம் வாசிப்பான். வாசுவின் அப்பாவும் நானும் கச்சேரி சீஸன்லே வீட்டிலேயே இருக்க மாட்டோம். ஏன் இத்தனை சொல்லுவானேன். 'நன்னு பாலிம்ப நடச்சி வச்சிதிவோ'ன்னு மோகனத்துலே தியாகையர் கீர்த்தனையைக் கேட்டுக்கிட்டிருக்கிறப்போ தான் அவர் மூச்சு பிரிஞ்சுது. நடந்ததை நினைவு கூர்கையிலேயே அவள் கண்கள் பளபளத்தன. ஒரு நிமிஷம்தான்... அதற்குள் சுதாரித்துக் கொண்டவளாய்... வீட்டுக்கு மருமகளா வரப்போகிறவளுக்குக் கொஞ்சமாவது சங்கீத வாசனை இருக்கணுமேன்னு கவலையா இருந்தது. ஹம்ஸாவை எல்லா விதத்திலேயும் எங்களுக்குப் பிடிச்சிருக்கு. சரிதானே வாசு?

    அந்தத் திடீர் கேள்வியை எதிர்பார்க்காத வாசு தடுமாறி ... ஆமாம் என்றுவிட்டு ஹம்ஸாவை ரகசியமாகப் பார்த்தான். அவள் முகத்தில் வெட்கம் படர்ந்தது. புன்னகையுடன் தலை குனிந்தாள். மனசுக்குள் ஆனந்த ஆரவாரம் சங்கீதத்தை ஆராதிக்கிற குடும்பம். திருமணமான பின் அவள் பாடக் கூடாது என்று நிச்சயம் முட்டுக்கட்டை போடமாட்டார்கள். இசையுலகில் தான் ஒரு சின்ன இடத்தையாவது பிடித்துவிட வேண்டும் என்கிற இலட்சியம் நிறைவேற உறுதுணையாக இருப்பார்கள். ஹம்ஸாவின் இல்லறம் நல்லபடியாகத் துவங்கியது. ரோகிணி, தொலைக்காட்சி மெகாத்தொடர்களில் வருகிற மாமியார்கள் மாதிரி இல்லாமல் அன்பும் பாசமும் கொண்டவளாக இருந்தாள். சமையலறையில் ஹம்ஸாவை வேலை செய்யவே விடவில்லை. தான் பார்த்துப் பார்த்த சமைத்த உணவு வகைகளை மகனையும் மருமகளையும் உட்கார வைத்துப் பரிவுடன் பரிமாறினாள். ஹம்ஸாவின் கூந்தலைத் தழைய வாரிப்பின்னி பூவைத்து இந்தக் காலத்திலே சாட்டையாட்டம் யாருக்கு இத்தனை தலைமயிர் இருக்கு... கண் படப் போகுது என்று திருஷ்டி கழித்தாள்.

    ஹம்ஸா அதிகாலையில் எழுந்து குளித்து உடை

    Enjoying the preview?
    Page 1 of 1