Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kathai Kathaikkum Kavithaikal
Kathai Kathaikkum Kavithaikal
Kathai Kathaikkum Kavithaikal
Ebook96 pages31 minutes

Kathai Kathaikkum Kavithaikal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களால் தமிழுக்கு அறிமுகம் செய்யப்பட்ட வடிவமே தன்முனைக் கவிதைகள் ஆகும்.இதில் உரைநடை அதையொட்டிய தன்முனைக் கவிதை கொண்ட வடிவமே தன்முனை உரைப்பா ஆகும் . கவிஞர் இராஜு ஆரோக்கிய ஸ்வாமி அவர்களால் உருவாக்கப்பட்ட தன்முனை உரைப்பா வகைமையில் தமிழில் முதலில் வெளி வரும் என் சாதனை நூலான "கதை கதைக்கும் கவிதைகள் " என்ற இருமொழி நூல் படிப்பவரைக் கவரும் என நம்புகிறேன்.

Languageதமிழ்
Release dateMay 11, 2024
ISBN6580175410799
Kathai Kathaikkum Kavithaikal

Read more from Dr. Sivagamasundari Nagamani

Related to Kathai Kathaikkum Kavithaikal

Related ebooks

Reviews for Kathai Kathaikkum Kavithaikal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kathai Kathaikkum Kavithaikal - Dr. Sivagamasundari Nagamani

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கதை கதைக்கும் கவிதைகள்

    Kathai Kathaikkum Kavithaikal

    Author:

    முனைவர். சிவகாமசுந்தரி நாகமணி

    Dr. Sivagamasundari Nagamani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-sivagamasundari-nagamani

    பொருளடக்கம்

    நூலாசிரியர் பற்றி

    வாழ்த்துரை

    அணிந்துரை

    Foreword

    என்னுரை

    1. ஒல்லிப் பிள்ளையார்

    2. தாலாட்டு

    4. கிலியும், புலியும்

    5. மமதை மயக்கம்

    6. நிறைகுடம்

    7. மிக்ஜாம்

    8. சீரும், சிறப்பும்

    9. முரண்கள்

    10. தலையணை மந்திரம்

    11. இயந்திர இணைய வர்த்தகம்

    12. வேண்டாதவள்

    13. பொய்க்கூக்கள்

    ‘Lie’ kus

    14. கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்

    15. தேடினேன் வந்தது

    16. பிம்பங்கள்

    17. வருண பகவானுக்குச் சாபம்

    18. பிரசாதம்

    19. ஞானச்செருக்கு

    20. நிகழ்வுகளை நிழலாக...

    21. தயவுசெய்து கிடைத்துவிடு

    22. தங்க மகன்

    23. நன்றி சொல்வோம்

    கருவாக்கியவருக்கும்...

    உருவாக்கியவருக்கும்...

    இந்த நூலைச் சமர்ப்பிக்கிறேன்...!

    நூலாசிரியர் பற்றி

    சென்னையில் இயற்பியல் ஆசிரியையாகப் பணிபுரியும் Dr. சிவகாமசுந்தரி நாகமணி, சிறுவயதிலிருந்தே கவிதை, கதை மற்றும் நாடகங்கள் எழுதி வருகிறார். படிப்பு M.Sc, B.Ed., PGDCA.

    முகநூலில் ஹைக்கூ மற்றும் பலவிதமான படைப்புக்களை எழுதி, பல பரிசுகளையும் விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். சென்னை வானொலியில் இவர் சிறுகதைகள், நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. பல தொகுப்பு நூல்களில் இவர் படைப்புக்கள் வெளியாகி உள்ளன. பல தனி (ஆங்கில மற்றும் தமிழ்) நூல்களையும் வெளியிட்டுள்ளார். மெல்லிசையிலும் தேர்ச்சி பெற்ற இவர், வில்லிசையும் நிகழ்த்தியுள்ளார். ராஜ் தொலைக்காட்சியில் பாட்டுக்குப் பாட்டு மற்றும் அகடவிகடம் நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றுள்ளார்.

    இவரது இலக்கிய மற்றும் ஆசிரியர் பணியைப் பாராட்டும் வகையில், கௌரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். தம்முடைய 27 ஆண்டுகால ஆசிரியர் பணியில் அரசுப் பொதுத்தேர்வில் இவருடைய இயற்பியல் பாடத்தில் மாணவர்களின் வெற்றி விழுக்காடு 100 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாழ்த்துரை

    கவிச்சுடர்.கா.ந. கல்யாணசுந்தரம்,

    நிறுவுநர்,

    தன்முனைக் கவிதைகள் குழுமம்,

    உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம்,

    சென்னை.

    தன்முனைக் கவிதை உலகில் இன்னுமோர் சாதனையாக தன்முனை உரைப்பா (Narrative verses) உருவெடுத்துள்ளது. தன்முனைக் கவிதைகளுக்கு ஏற்றவாறு உரை எழுதி கவிஞர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வரும் கவிஞர் சிவகாமசுந்தரி நாகமணி அவர்கள் கதை கதைக்கும் கவிதைகள் என தன்முனை உரைப்பா நூல் வெளியிடுவது மிகுந்த மகிழ்வளிக்கிறது.

    தன்முனைக் கவிதைகளை அறிமுகப்படுத்திய தருணத்தைவிட இப்போது கூடுதல் ஆனந்தத்தை அளிக்கிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பட்டயப்படிப்பும் நடந்து வருகிறது. தமிழ்க்கவிதை உலகில் இதைவிட வேறென்ன அங்கீகாரம் வேண்டும்.

    அண்மையில் இந்த நூலின் ஆசிரியர் முனைவர். சிவகாமசுந்தரி அவர்கள் ‘எங்கே சென்றுள்ளது அந்தப் பட்டாம்பூச்சி’ என்ற இருமொழி ஹைக்கூ நூலினை வெளியிட்டுள்ளார். இவரது தமிழ்ப்பற்றும் ஆர்வமும் கவிதை உலகுக்கு புதுப்புது நூல்களை அரங்கேற்றிய வண்ணம் உள்ளன. கதை சொல்லும் தன்முனைக் கவிதைகள், தன்முனை உரைப்பா நூலில் இடம்பெற்ற ஒரு கவிதையை இங்கே குறிப்பிடுவதில் மகிழ்வு.

    யானையின் வலிமை

    எறும்பின் பொறாமையா?

    எறும்பின் சுறுசுறுப்புக்கு

    யானை ஈடாகுமா?

    பொறாமை கொள்வதைவிட நமது வலிமையை அறிந்து பெருமை கொள்வதே சிறப்பு. செயலாற்றல் நமது வலிமையின் வெளிப்பாடு என்றும் இந்தக் கவிதையின் உள்ளீடு கூறுகிறது.

    கவிஞர். சிவகாமசுந்தரி நாகமணி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். தன்முனைக் கவிதை இலக்கியப் பக்கங்களில் தாங்கள் நல்லதொரு இடம் பெற்றமைக்கு இனிய வாழ்த்துகள். வாழிய நலம் பல்லாண்டு.

    அன்பன்,

    கவிச்சுடர்.கா.ந. கல்யாணசுந்தரம்,

    நிறுவுநர்,

    தன்முனைக் கவிதைகள் குழுமம்,

    உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம்,

    சென்னை.

    வாழ்த்துரை

    கவிஞர் கவிநிலா மோகன்,

    தஞ்சாவூர்.

    காலம் கடந்தும் நின்று பேசட்டும்

    கவிஞர் முனைவர். சிவகாமசுந்தரி நாகமணி அவர்கள் ஹைக்கூ, தன்முனைக் கவிதைகளை சிறப்பாக எழுதும் படைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார். ஆசிரிய அறத்தொண்டோடு கவிதைப் பணியையும் கலந்து திறமையாக செயல்படுத்தும் அற்புதக் கவிஞர்.

    சிறுவயதிலிருந்தே தமிழ் ஆர்வமும்

    Enjoying the preview?
    Page 1 of 1