Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uravusangili
Uravusangili
Uravusangili
Ebook103 pages38 minutes

Uravusangili

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு இல்லத்தரசியின் பார்வையிலிருந்தும் சமூக அக்கறை கொண்ட சாதாரணப் பெண்ணின் சிந்தனையிலிருந்தும் உதித்த வாழ்வியல் சிறுகதைகள் இவை. இப்படியெல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும் என சிந்திக்க வைத்த கருக்கள். வெளிநாட்டுக்குத் தங்கள் பிள்ளைகளை தாரை வார்த்து பாசத்துக்கு ஏங்கும் பெற்றோரின் பிரதிநிதிகளாய் நமக்கு நாமில் கணவருடன் அமுதா எடுக்கும் முடிவு. அலைபேசியை மாற்றத்துக்கு வித்தாக்கலாம் என்றுணர்த்திய கிராமத்து இளம்பெண் செண்பகம். பிரசவ வலியின் வேதனை உணர்ந்த காதல் கணவனை முத்தமிட்ட பிரியா. கையறு நிலை என்றாலும் மானம் காத்த ஏழைப் பெண் கனகு. உயிரற்ற நிலையிலும் பரிதவிக்கும் தாய்(மை) மாலதி. பாலியல் கொடுமையை சந்தித்த சிறப்புப்பெண்ணான சினேகாவின் தாய் லதாவின் துணிவு. உடல்கள் கலப்பது மட்டுமே தாம்பத்யமல்ல என உணர்ந்து சுயம் காத்த புதுமைப் பெண் நித்யா. கணவன் உறவே ஆயுசு பந்தம் என மகனுக்கு உணர்த்திய சியாமளா. குடும்பக் கடமைகளை விட்டு ஓடிப்போன இல்லத்தரசி செல்வி. தண்டச்சிறுக்கி என கணவன் வசை பாடிய மாலாவின் அடையாளம். கொரானாக் காலத்தில் கதியற்று நின்றாலும் கலங்காமல் வாழ்வை மாற்றிய சரசு. நாத்தனார் கெடுபிடியில் சாந்தியின் மகிழ்ச்சி.

இப்படி கதைகளின் மாந்தர்கள் அனைவரும் பெண்களே என்றாலும் தனித்துவம் மிக்கவர்கள். மனதைக் கவரும் இவர்கள் நம் அக்கம் பக்கம் வசிப்பவர்களே. நீங்களும் அவர்களுடன் பயணிக்க வாருங்களேன்.

அன்புடன் சேலம் சுபா.

Languageதமிழ்
Release dateMay 20, 2023
ISBN6580166509867
Uravusangili

Related to Uravusangili

Related ebooks

Reviews for Uravusangili

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uravusangili - Salem Suba

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உறவுச்சங்கிலி

    (சிறுகதைகள் தொகுப்பு)

    Uravusangili

    (Sirukathaigal Thoguppu)

    Author:

    சேலம் சுபா

    Salem Suba
    For more books

    https://www.pustaka.co.in/home/author/salem-suba

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    அணிந்துரை

    அணிந்துரை

    பாராட்டுரை

    1. நமக்கு நாம்...

    2. இனி ஒரு விதி மாற்றுவோம்.

    3. உயிரின் வலி...

    4. கனகு

    5. சுயம்...

    6. மாலதி என்றொரு தாய்...

    7. வாச மலர்கள்

    8. ஆயுசு பந்தம்

    9. ஓடிப் போனவள்...

    10. தண்டச்சிறுக்கி

    11. மறுமலர்ச்சி

    12. உறவுச்சங்கிலி...

    அணிந்துரை

    நண்பர் சரவணக்குமாரின் பிரிண்ட் மேஜிக் அலுவலகம் சென்றிருந்தேன். அவருடைய அலுவலகத்திலிருந்த அறிவிப்பு பலகையில் சங்கிலி ஒன்றின் படம் வரையச் சொன்னார். எதற்கென்று தெரியாமலே நானும் வரைந்தேன். அந்தப்படத்தை வைத்து அவர் தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு ஒர் உரை நிகழ்த்தினார். ஒரு சங்கிலியின் உண்மையான பலம் என்பது அதன் பலவீனமான கண்ணி இதை ஒரு சொற்றொடராக பலமுறை கேட்டிருப்போம். அந்த சங்கிலியை நிறுவனத்திற்கும், அதன் கண்ணிகளை அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கும் பொருத்தி அவர் சொன்னது பளிச்சென்று மனதில் தைத்தது. சேலம் சுபாவின் சிறுகதைத் தொகுப்பான உறவுச்சங்கிலியை படித்தபோது சரவணனின் பேச்சுதான் நினைவுக்கு வந்தது. உறவுச்சங்கிலியின் கண்ணிகளாக குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்.

    சம்சார சாகரம், வீட்டுக்கு வீடு வாசப்படி, குடும்பம் ஒரு கதம்பம் போன்ற சொல்லாடல்கள் எல்லாம் குடும்ப உறுப்பினர்களின் பொறுப்பு, கடமை, அவர்களுக்குள்ளிருக்கும் முரண், சண்டை, சச்சரவுகள், பிரச்சனைகளை தலையில் போட்டுக் கொள்பவர்கள், அதிலிருந்து நழுவி தங்களைத் தற்காத்துக் கொள்பவர்கள் என பல பரிமாணங்களையும் உணர்த்துபவை, என்றாலும் குடும்பம் ஒன்றின் தேவை இன்றைக்கும் இருக்கவே செய்கிறது. குழந்தை வளர்ப்பு, முதியவர்கள், நோயாளிகளை பராமரிப்பது, சம்பாதிக்காதவர்களையும் காப்பாற்றுவது. பிள்ளைகளை சமூக ஒழுங்குடன் ஒத்திசைபவர்களாக உருவாக்குவதென சமூகத்திற்கு குடும்ப அமைப்பின் பங்களிப்பு காத்திரமானது.

    கணவன் மனைவி இருவரும் சம்பாதித்தாலும் ஆண் குடும்பத் தலைவனாக இருக்கிறான். குடும்பத்தை காப்பாற்ற வக்கில்லாதவனாக இருந்தாலும், குடிகாரனாக இருந்தாலும் அதிகாரம் செய்பவனாக இருக்கிறான். குடும்பத்தை தள்ளாடாது திறமையாக நிர்வகிக்கும் பெண்ணின் உழைப்பு இரண்டாம் பட்சமாகவே பார்க்கப்படுகிறது. இப்படி குடும்பத்திற்குள் எழும் பிரச்சனைகள் அவற்றுக்கான தீர்வுகள், என்பதாக இந்தத் தொகுப்பு அமைந்துள்ளது.

    பனிரெண்டு சிறுகதைகள். முதியோர் பிரச்சனை, திருநங்கை, திருநம்பியர், சிறப்புக் குழந்தைகள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, பெண்ணின் சுயம், மாமியார்-மருமகள், அண்ணி-நாத்தி, கணவன்-மனைவி, அப்பா-பிள்ளை, அம்மா-பெண் இந்த உறவுகளிடையேயான காதல், பாசம், கோபதாபம், அன்பு போன்ற உணர்வுகளின் கொந்தளிப்பின் எதிரொலி, இணைய ஊடகங்களின் வீச்சு... தண்டச்சிறுக்கி என கணவனால் வசைபாடப்படுபவள் வாட்சப் குழு வாயிலாக தீ நுண்மிக் காலத்தில் உதவி தேவைப்படுபவர், உதவ தயாராக இருப்பவர் இரு தரப்பையும் இணைப்பவளாக இருக்கிறாள்.

    கொரோனா தொற்றின்போது வீடடங்கி இருக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. பொருளாதார வலுவுள்ளவர்களுக்கு உறவுகளுடன் கூடி மகிழ வாய்ப்பாக அமைந்தது. (அப்போது பெண்களுக்கு அதிகரித்த வீட்டுவேலை, அவர்கள் மீதான வன்முறை தனி) அன்றாடங்காய்ச்சிகளுக்கோ வேலையில்லை, என்றாலும் வயிறு இருந்ததால் வெளியில் வரவேண்டி இருந்தது. துணிந்து வந்தனர். பசிவந்திட பத்தும் பறந்துபோகும் என்பார்கள். பதினொன்றாக உயிர் பயம் மறந்து மாற்று வேலை தேடிக்கொண்டனர். காய்கறி, பழங்கள் விற்பவர்களாக இப்படி வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு தேவைப்படுவதை விற்பனை செய்பவர்களானார்கள். இந்தத் தொகுப்பில் வீட்டுவேலை செய்யும் சரசு அந்த வேலை போனதும் மாஸ்க் தைப்பவளாகிறாள். எத்தகைய நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து மீண்டுவந்து வாழ்க்கையைத் தொடர்வது எல்லா உயிரினங்களின் அடிப்படை இயல்பு. அதை தீ நுண்மிக் காலத்தில் கண்கூடாக பார்த்தோம்.

    தாய் என்கிற பிம்பத்தின்மீது தரப்படும் அழுத்தம் எத்தனை வலுவானது என்பதை அறிவோம். அவளுக்கென தனிப்பட்ட ஆசைகளோ, எண்ணங்களோ அற்று இற்று விழும்வரை பிள்ளைகளுக்காக, கணவனுக்காக, குடும்பத்திற்காக ஓய்வற்று உழைக்க வேண்டும் என்பது எழுதப்படாதவிதி அல்லது பலராலும் எழுதப்படும், சொல்லப்படும் விதி. இதிலும் ஒரு தாய் செத்தபிறகும் தன் குழந்தை ஆதரவற்று போகுமே என அருவமாக அலைமோதுகிறாள்.

    பிரச்சனைகள் அவற்றுக்கான எளிதான தீர்வு என்பதாக அமைந்துள்ளன. சுபாவின் கதைகள் அனைத்தும் சுபமாக முடிகின்றன. அது கதாசிரியரின் ஆசை.

    பரபரப்பான பத்திரிக்கையாளர் எழுத்தாளராக களமிறங்கியிருக்கிறார்... சுபாவிற்கு வாழ்த்துகள்.

    சக்தி அருளானந்தம் சேலம்.

    கவிஞர் ஓவியர்.

    அணிந்துரை

    சங்கச் செய்யுள்களின் மரபில் வளர்ந்தது தமிழிலக்கியம்.

    பிறகு பாசுரங்களில் முகிழ்த்து தன்னை புதுப்பித்துக் கொண்டது.

    தேவாரமும், திவ்யபிரபந்தங்களும் தமிழின் மொழியாளுமையை உலகிற்கு உணர்த்திற்று.

    வ.வே.சு. அய்யரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ தமிழின் முதல் சிறுகதையானது.

    அதன் தொடர்ச்சியாக தமிழின் புனைகதை இலக்கியம் பரந்துப்பட்டு விரிவாக பயணித்து, இன்று பெரும் விஸ்தாரமாகியுள்ளது.

    ஆண் எழுத்தாளர்களுக்கு இணையாக பெண் எழுத்தாளர்களும் சிறுகதையில் மகா சாதனையை எட்டியுள்ளனர்.

    லட்சுமி, சிவசங்கரி, ராஜம்கிருஷ்ணன்

    Enjoying the preview?
    Page 1 of 1