Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nilavu Thediya Vaanam
Nilavu Thediya Vaanam
Nilavu Thediya Vaanam
Ebook158 pages1 hour

Nilavu Thediya Vaanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சினிமா இயக்குனர் ஆக வேண்டும் என வெறி கொண்டவன் வடிவேல். அவன் முடிவில் இயக்குனர் ஆனானா? பால்யகால சிநேகிதனான சலீம் சிறந்த நடிகனாக வேண்டும் என கனவு கண்டு கொண்டிருந்தான். அவன் கனவு என்ன ஆயிற்று? இன்னொரு சினேகிதன் சுரேந்தர் எப்படி மரித்தான்? இந்தக்கதையின் நிலவு எனும் கதாநாயகி தேடிய வானம் கிடைத்ததா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் படிக்கும் கதையிலே இருக்கிறது.

Languageதமிழ்
Release dateJul 24, 2021
ISBN6580146507297
Nilavu Thediya Vaanam

Read more from Kavimugil Suresh

Related to Nilavu Thediya Vaanam

Related ebooks

Reviews for Nilavu Thediya Vaanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nilavu Thediya Vaanam - Kavimugil Suresh

    http://www.pustaka.co.in

    நிலவு தேடிய வானம்

    Nilavu Thediya Vaanam

    Author:

    கவிமுகில் சுரேஷ்

    Kavimugil Suresh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavimugil-suresh

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 1

    பெல்ரம்பட்டி.

    அன்றும் கிராமம் இன்றும் கிராமம் என்று சொன்னாலும் நகரத்தில் கிடைக்கும் எல்லா வசதி வாய்ப்புகளும் இங்கேயே கிடைக்கும்.

    ஊர் பதினைந்து வருடங்களுக்கு முன்பு இருந்ததைப் போல் அல்ல முற்றிலும் மாறியிருந்தது.

    இத்தனை வருடங்கள் கழிந்து தன் சொந்த கிராமத்தில் காலடி எடுத்து வைத்தான் வடிவேல்.

    இதற்கு முன்பு அவன் எங்கே போயிருந்தான் என்ன செய்து கொண்டிருந்தான் என்பதை எல்லாம் போகப் போக தெரிந்து கொள்ளலாம்.

    அந்த ஊருக்கு மூன்று பஸ்கள் மாறிமாறி வரும் அதுவும் சரியான நேரத்திற்கு வராது அப்படியே வந்தாலும் கூட்டம் நெருக்கித் தள்ளும்.

    அதுவும் மழைக்காலத்தில் ஆத்துக் கொட்டாய் எனும் பெரிய ஆறு ஓடும் கிராமத்தை தாண்டித்தான் வரவேண்டும் ஆத்துக்கொட்டாயிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம்.

    அதைக் கடந்துதான் வரவேண்டும் மழைக்காலத்தில் பாலத்தை மூழ்கடித்து காட்டாறாய் தண்ணீர் ஓடும்.

    அதில் நீந்த தெரியாதவன் விழுந்தால் தப்பிப்பது கடினம் மூன்று ஆட்கள் ஆழம் இருக்கும் தண்ணீரின் வேகத்தை யாராலும் கட்டுப்படுத்த இயலாது.

    அந்த ஆற்றின் கரையோரங்களில் தென்னந்தோப்புகள் எப்போதும் பசுமையாய் சிரிக்கும் சிறு செடிகளில் மலர்கள் புதுப்பொலிவோடு எப்போதும் காணப்படும்.

    வண்டுகளின் ரீங்கார பாடல்கள் ஒலிக்கும் இயற்கை வளம் அது மழைக்காலத்தில் பஸ் ஆத்துக்கொட்டாயோடு நின்றுவிடும் வந்த ரோட்டிலே மீண்டும் பஸ் திரும்பிவிடும்.

    ஆற்றை கடக்க வேண்டும் அச்சமயங்களில் படகுகளுக்கு நல்ல வருமானம் ஆற்றை கடந்து மறு ரோட்டை அடைய, ஒரு தலைக்கு இவ்வளவு என பணம் வசூலிப்பார்கள்.

    கூடவே கொண்டு செல்லும் பொருட்கள், மூட்டை, முடிச்சுகள் அவைகளுக்கும் கூடுதல் பணம் வசூலிக்கப்படும்.

    படகு மக்களை ஆற்றின் மறுபக்கம் இருக்கும் ரோட்டிற்கு கொண்டுபோய் சேர்க்கும் அங்கிருந்து நான்கு கிலோமீட்டர் நடந்தே செல்ல வேண்டும்.

    பெரியவர்கள் பழக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு பிரச்சினை இல்லை வடிவேலாகிய சின்ன பையனுக்குதான் பிரச்சனை.

    அம்மா என்னால முடியல என்பான் வடிவேல் அவனின் பிஞ்சு கால்கள் வலிக்கும் தாமரை பொற்பாதம் புண்ணாக சிவந்திருக்கும் அவன் வார்த்தைகளை கேட்டு வருந்தி இருக்கிறாள்.

    காரணம் ரோட்டை கற்களும் முட்களும் சொந்தம் கொண்டாடும் பொழுது எப்படி அவனால் நடக்க முடியும்.

    ஒரு தடவை அவன் அம்மாவுடன் நடக்கும்போது காலில் செருப்பில்லை விவசாய முட்கள் குத்தி இரத்தம் பீறிட அவள் துடித்துப் போனதுண்டு.

    மஞ்சள் பையில் வைத்திருந்த பழைய புடவையில் இருந்து கொஞ்சம் கிழித்து அவனின் வலது காலில் வழியும் ரத்தத்தை துடைத்து கட்டு போட்டாள்.

    பிறகு ஒரு வழியாக ரத்தம் நின்று போக அவன் கால் வலி மறக்க மஞ்சள் பையில் வாங்கி வைத்திருந்த அதிரசத்தை வடிவேலுக்கு கொடுத்து அவன் வலியை மறக்கச் செய்திருக்கிறாள்.

    நடக்கமுடியாத அவனை அந்த வழியில் சைக்கிளில் வந்த அழகேசன் அண்ணனிடம் நிலைமையை சொல்லி சைக்கிளின் பின் கேரியரில் பத்திரமாய் வடிவேலுவை உட்கார வைத்து பின் சக்கரத்தில் கால் வைக்காத என அவனை முன்னாடி அனுப்பி வைத்துவிட்டு கஷ்டப்பட்டு நடந்து சென்றிருக்கிறாள். அதையெல்லாம் வடிவேல் தன் மனதிற்குள் அசைப்போட்டான்.

    இன்று எப்படி இருக்கிறாளோ அம்மாவை பார்க்க துடித்தான் வடிவேல் இதுவரை அம்மாவை மறந்து திரிந்து கிடந்தவன், அம்மாவிற்கு உடம்புக்கு முடியலேன்னு கேள்விப்பட்ட உடனே எப்படியோ அடித்து பிடித்துக்கொண்டு அந்த கிராமத்திற்கு கால் வைத்தான் அப்படியே சிலிர்த்து போனான்.

    இது என் சொந்த மண் நான் ஓடி ஆடி விளையாடிய பூமி என் பாலிய காலத்து சிநேகிதர்களோடு பேசி சிரித்து மகிழ்ந்த அவனால் அந்த கிராமத்திலே தொடர்ந்து இருக்க முடியவில்லை.

    காரணம் அவனுக்கு இங்கு விவசாய நிலம் கிடையாது வேறு தொழில் செய்வதற்கான விருப்பமும் அவனுக்கு இருந்ததில்லை.

    அவனுக்கு சினிமா கனவுகள் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுதிலிருந்தே மனதுக்குள் உருவாகியிருந்தது இன்னும் அந்த கனவுகள் மனதுக்குள் தொடர்கதையாகவே இருக்கிறது.

    இப்பொழுது அவன் நடக்க ஆரம்பித்தான். அம்மாவை பார்க்க என் வீடு எங்கே என தேடினான்.

    அவன் பார்த்த பழைய மனிதர்கள் இன்னும் பழைமையாகிப் போயிருந்தார்கள். சிலருக்கு இவனை அடையாளம் தெரியவில்லை கண்களின் அருகே கைகளை குவித்து யார் என இவனை கேள்விக் குறியோடு பார்த்தார்கள்.

    அவனுக்கும் அவர்களை சரியாக அடையாளம் தெரியவில்லை என் சினேகிதர்கள் எங்கே தேடினான். விசாரித்ததில் எல்லோரும் வெளி மாவட்டங்களில் வாத்தியாராக, போலீஸ்காரர்களாக இப்படி பல உத்தியோகங்களில் திருமணமாகி குழந்தைகளோடு இருக்கிறார்கள் என விபரம் அறிந்துகொள்ள முடிந்தது.

    அவனுக்கோ வயதாகிக்கொண்டே இருக்கிறது திருமணத்தைக் குறித்து அவன் சிந்திக்காமலே இருந்து விட்டான்.

    காரணம் சினிமாதான் அவனின் முதல் காதலி அதைக்குறித்து உங்களோடு அவன் பேச இருக்கிறான்.

    அவனுடைய அம்மாவைப் பார்த்துவிட்டு எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வான் அவன் வீடு எனக்கே அடையாளம் தெரியவில்லை.

    ஏனெனில் அவன் வீட்டருகே இருந்த அநேக ஓட்டு வீடுகளும், கூரை வீடுகளும் அடுக்கு மாடி வீடுகளாய் கம்பீரமாய் நின்றிருந்தன.

    அவைகளுக்கு நடுவில் பரிதாபமாய் ஒடுங்கிப் போன கூரை வீடு அவனின் வீடு இதுதான் நீ சொன்ன வீடு என வழிகாட்டி வந்தவர் விட்டு சென்றார்.

    அம்மா உடன் அண்ணன் நின்று கொண்டிருந்தான் அழகான அம்மா ஒடுங்கிப்போய் முகப் பொலிவு இழந்து முகத்தாடை துருத்திருக்க கண்களால் மட்டுமே என்னை துலாவினாள்.

    அவளின் மனம் எப்படிப்பா இருக்க என கண்களில் மூலமாய் நலம் விசாரித்தது. அவளின் கண்ணீர் துளிகளில் நேசத்தை வாசித்தான்.

    அவனாலும் அவன் மனதை அடக்க முடியவில்லை. அவனின் இளவயதில் அவனின் அம்மா காட்டிய பாசத்தால் உள்ளத்தில் பாசம் பீறிட்டது.

    வாய்விட்டு ‘ஓ’வென கதறி அழ வேண்டும் போல் தோணிற்று ஆனால் முடியவில்லை அருகே அவனின் அண்ணி அவளுடைய இரு பெண் பிள்ளைகள் நின்றிருந்தார்கள்.

    அவன் அம்மாவை சென்னைக்கு கூட்டிப்போய் எப்படியெல்லாம் வைத்துக்கொள்ள வேண்டும் என அவனுக்குள் வைத்திருந்த மனக்கனவுகள் மலராமல் போயிற்று வருந்தினான்.

    அம்மாவின் தோய்ந்துப்போன திராணியற்ற கரத்தைப் பிடித்துக் கொண்டு குனிந்து அம்மாவின் முகத்தை பார்த்து எப்படிமா இருக்கீங்க என்றான்.

    அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை கண்ணா நீ எப்படிப்பா இருக்க அழுதாள் கூட மேலும் பேச அவளுக்கு தெம்பில்லை அவளின் கண்களை துடைத்தான்.

    எத்தனை தடவை என்னை தேற்றி ஆற்றி இருக்கிறாள் அவளுக்கு என்னால் ஒரு உபகாரமும் இல்லை என்னடா வாழ்க்கை இது சலித்துக் கொண்டான்.

    சிலருக்கு மட்டும்தான் கனவுகள் பலிக்கிறது எனக்கு வாழ்க்கை முழுவதும் தோல்விகளே பாதி வாழ்க்கை முடிந்து போயிற்று. திருமணம் ஆகவில்லை. அம்மாவை நிம்மதியாய் வைத்துக்கொள்ள வாய்ப்பும் வசதியும் இல்லாமல் போயிற்று.

    வருங்காலத்துல நீ பெரிய சினிமா டைரக்டரா வருவடா நண்பர்கள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு சொல்லினார்கள், அவர்கள் எல்லாம் லைஃப்ல செட்டில் ஆயிட்டாங்க இவன் மட்டும் இன்னும் அதே கனவோடு பயணிக்கிறான்.

    அவன் அம்மாவின் எதிர்பார்ப்பும் தன் மகன் சென்னையில் பெரிய ஆளா வருவான் அவனிடமே தன் கடைசி நாட்கள் இருக்கும் என அவள் எதிர்பார்த்து எல்லாம் நிறைவேறாமல் போயிற்று.

    அவனின் அம்மா சாப்பிட்டியாப்பா என்றாள்.

    சாப்பிட்டேன் நீ என்றான்.

    அண்ணன் பேசினான் அம்மாவால சரியா சாப்பிட முடியறதில்ல பாரு ஒரே நேரத்துல சுகர், அல்சர், மலேரியா காய்ச்சல் அதனால நீராகாரம், ஜூஸ் கொடுக்கிறோம் என்றான்.

    அதற்கு வடிவேல் தலையாட்டினான். பிறகு தன் அண்ணியை பார்த்து நீங்க எப்படி இருக்கீங்க அண்ணி என்றான்.

    சித்தப்பா எப்படி இருக்கீங்க அண்ணனின் இரு பெண் பிள்ளைகளும் நலம் விசாரித்தார்கள்.

    அவனால் என்ன பதில் சொல்ல இயலும் தலையை மட்டும் ஆட்டினான்.

    வடிவேலுவின் அம்மா அந்த வீட்டில் தனியாகத்தான் வசித்து வந்தாள். அவனின் அண்ணன் குடும்பம் ஓசூரில் வசித்து வருகிறது.

    அங்கு பிரபலமான டூவீலர்

    Enjoying the preview?
    Page 1 of 1