Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mann Meethil Vinn Meengal
Mann Meethil Vinn Meengal
Mann Meethil Vinn Meengal
Ebook114 pages39 minutes

Mann Meethil Vinn Meengal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ன் இதய வானில் நட்சத்திரங்களாய் மின்னி, நடமாடி, பேசின சரித்திர நாயகர்கள், நாயகிகளை மீண்டும் இம்மண்ணிற்கு கொண்டு வந்தால் எப்படி இருக்கும் என யோசித்ததின் விளைவு தான் இந்த மண்மீதில் விண் மீன்கள். இதில் சுவை கூட்டவே ஆங்காங்கே எனது கற்பனையும், கவிநயமும் பூச் சிதறல்களாய் சிதறி இருக்கும். மற்றபடி யாவும் நடந்த சம்பவங்கள். இந்நூலில் இடம் பெற்றிருக்கும் நிகழ்வுகள் யாவும் முற்றுப்புள்ளியில் முடிந்த சரித்திரங்களாய் இருந்தாலும் நம்மைக் கொண்டு தொடர்புள்ளியில் பயணிக்கும் சரித்திரங்கள்.

இந்நூலின் மையக் கருத்து இறைவன் அன்புள்ளவர், மன்னிக்கிறவர், இரக்கமுள்ளவர், பாதுகாக்கிறவர், கருணையின் பெருங்கடல், நமது தகப்பன் என்பதே ஆகும்.

Languageதமிழ்
Release dateSep 6, 2021
ISBN6580146507298
Mann Meethil Vinn Meengal

Read more from Kavimugil Suresh

Related to Mann Meethil Vinn Meengal

Related ebooks

Reviews for Mann Meethil Vinn Meengal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mann Meethil Vinn Meengal - Kavimugil Suresh

    https://www.pustaka.co.in

    மண் மீதில் விண் மீன்கள்

    Mann Meethil Vinn Meengal

    Author:

    கவிமுகில் சுரேஷ்

    Kavimugil Suresh

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavimugil-suresh

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    என் வணக்கத்திற்குறிய பெற்றோர்களான சரோஜா - சித்தராஜ் அவர்களுக்கு சமர்ப்பணம்!!

    வாழ்த்துரை

    எழுத்துலகை அலங்கரித்து கொண்டிருக்கும் என் தோழர், பள்ளிப் பருவ பால்ய நண்பன் கவிமுகில் சி. சுரேஷ் வடித்துள்ள மண் மீதில் விண் மீன்கள் வெளிச்சத்தோடு மிளிர்கிறது நம் கையில்.

    விண் மீன்களென அவர் தன்னுடைய இதயப் பார்வையில் வேதாகமத்தின் பாத்திரங்களை ஊடுருவி, உள்ளே உற்றுப் பார்த்து, நன்மைகளை கன்மலை தேனாக வெட்டி எடுத்து நாம் ருசிக்க, ரசிக்க அறைகூவல் விடுக்கிறார். ஆதாம் முதல் சிம்சோன் வரை ஓட விடுகிறார். வாசிப்பு தடங்கள் தடயங்களாக நம்மை செதுக்குகிறது.

    நன்மை செய்ய சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் எழுத்தாளர்களும் ஒருவகை அந்தவரிசையில் கவிமுகில் சி. சுரேஷ் தன் எழுத்து ஊசிக்கொண்டு குத்தாமல் தைக்க முயல்கிறார்.

    மனித குலம் மாண்போடும் பண்போடும் தேனுடைய அன்பை அனுபவிக்க இவரின் சிந்தனைத் தெறிப்புகள் இன்னும் தெறிக்கட்டும் மண் மீதில் விண் மீன்கள். ஒளிரட்டும் ஒளி வெள்ளம் பரவட்டும்.

    இவண்

    கே. இராம்

    ஓசூர்.

    அலைபேசி: 9942053049

    மின்னஞ்சல்: ramkbilly@yahoo.in

    என்னுரை

    அன்பின் உள்ளங்களுக்கு,

    முதலாவது என் மனப்பூர்வமான நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனெனில் வாசகர்களான நீங்கள் தான் என் எழுத்துக்களை வாசித்து, நேசித்து என்னையும் ஓர் எழுத்தாளனாக அங்கீகரித்து, நிலைநிறுத்தி வைத்திருக்கிறீர்கள். நீங்கள் இல்லாமல் நான் இல்லை.

    என் எழுத்துக்களுக்கு மகுடம் சூட்டும் பெரியோர்கள் நீங்கள் தான். ஆகவே தான் உங்களுக்கு என் முதல் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்தேன். அடுத்ததாக என் இதய வானில் நட்சத்திரங்களாய் மின்னி, நடமாடி, பேசின சரித்திர நாயகர்கள், நாயகிகளை மீண்டும் இம்மண்ணிற்கு கொண்டு வந்தால் எப்படி இருக்கும் என யோசித்ததின் விளைவுதான் இந்த மண் மீதில் விண் மீன்கள். இதில் சுவை கூட்டவே ஆங்காங்கே எனது கற்பனையும், கவிநயமும் பூச்சிதறல்களாய் சிதறி இருக்கும். மற்றபடியாவும் நடந்த சம்பவங்கள். இந்நூலில் இடம் பெற்றிருக்கும் நிகழ்வுகள் யாவும் முற்றுப்புள்ளியில் முடிந்த சரித்திரங்களாய் இருந்தாலும் நம்மைக்கொண்டு தொடர்புள்ளியில் பயணிக்கும் சரித்திரங்கள்.

    இந்நூலின் மையக் கருத்து இறைவன் அன்புள்ளவர், மன்னிக்கிறவர், இரக்கமுள்ளவர், பாதுகாக்கிறவர், கருணையின் பெருங்கடல், நமது தகப்பன் என்பதே ஆகும்.

    வார்த்தைகளை சரிபார்த்து திருத்தம் செய்து கொடுத்த என் நேசத்திற்குறிய அருமை மனைவி பா. சலோமி சங்கீதா அவர்களுக்கும், இந்நூல் சிறப்பாய் வெளிவர என்னை உற்சாகப்படுத்திய அக்கா மாலா ஜேம்ஸ் அவர்களுக்கும், என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    என்றும் அன்புடன்

    கவிமுகில். சி. சுரேஷ்,

    அலைபேசி: 8680812337

    மின்னஞ்சல்: sureshtamilwriter@gmail.com

    மதிப்புரை

    மண் மீதில் விண் மீன்கள். இப்படி ஒரு புத்தகம் வெளிவராதா என நெடு நாட்களாக நெஞ்சில் கிடந்து வதைத்த ஏக்கத்தை உடைத்தெறிந்திருக்கிறார் கவிமுகில் சி. சுரேஷ். புத்தம் புதிய தம் சிந்தனைகளை மக்களை கவரும் விதத்தில் எழுதுவதில் தனி முத்திரை பதிப்பதில் வல்லவர் என்றார் அது மிகையல்ல. அதில் இந்தப் புத்தகம் சற்றும் சளைத்ததல்ல. விவிலியத்தில் உள்ள ஒவ்வொரு சரித்திர நாயகர்களையும் தனக்கே உரிய பாணியில் மக்களுக்கு அறியப்படுத்தியிருக்கிறார். அதிலும் அந்த சரித்திர நாயகர்கள் தங்களைத் தாங்களே அறிமுகப்படுத்திக்கொள்வது போலவும், இறுதியில் கடிதத்தின் வடிவத்தில் நிறைவு செய்திருப்பதும், நம் முன்னோர்கள் நமக்கே எழுதியது போல உணரவைத்து நெஞ்சில் பசுமரத்தாணியாக நினைவுகளை நிற்க வைத்திருக்கிறார். வித்தியாசமான, இயல்பான எழுத்து நடைகளையே பாமர மக்களும், வாசகர்களும் நேசிக்கிறார்கள் என்பதை உணர்ந்து நாடிப் பிடித்துப்பார்த்து எழுதியிருக்கிறார்.

    சாதி, மத, இன பேதமில்லாமல் அனைவரும் ரசித்துப் படிக்கும் படியாக கருத்துக்களை பதிவு செய்திருப்பது மிகச் சிறப்பு. முதல் பக்கம் இறுதி பக்கம் வரையில் சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் விறுவிறுவென நம்மை இழுத்துச் செல்கிறார். ஒவ்வொரு கதை நாயகரையும் நாம் அறிந்துகொள்ளும் போது மனம் முழுவதும் ஆச்சர்யத்தால் நிரம்பி வழிகிறது. அடுத்த கதாநாயகர் குறித்த அறிய ஆவலை தூண்டும் விதத்தில் தன் பேனாவை முடுக்கிவிட்டுள்ளார். அவரின் ஒவ்வொரு கட்டுரையும், நம் மனதில் உள்ள பல்வேறு கேட்கப்படாத சந்தேகங்களை வெகு சுலபமாக தீர்த்து வைப்பது மிகவும் அற்புதமானது. சரித்திர நிகழ்வுகளை எழுதுவதில் முற்றிலும் புதிய கோணத்தை அறிமுகப்படுத்தியதற்காக கவிமுகில் சி. சுரேஷ் அவர்களுக்கு வாசகர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மென் மேலும் சுரேஷ் அவர்கள் பல்வேறு படைப்புகளை மக்கள் நலனுக்காக படைக்க வேண்டும் என அவரை உளமார வாழ்த்துகிறது. வாழ்க வளமுடன்!

    அன்புடன்

    அ.தீ. இரமேஷ்கார்த்திக்

    இனிமையான சில நினைவுகள் தங்கள் பார்வைக்கு
    C:\Users\asus\Downloads\abc.JPG

    கலாம் விருது - 2018 அப்துல் கலாம் அவர்களின் பேரன் திரு. ஷேக் சலீம் அவர்களின் கரங்களால் விருது பெறுதல்

    C:\Users\asus\Downloads\bca.JPG

    பாரதியின் இல்லத்தில் கவி பொழிந்த

    Enjoying the preview?
    Page 1 of 1