Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kutty Ilavarasi
Kutty Ilavarasi
Kutty Ilavarasi
Ebook82 pages11 minutes

Kutty Ilavarasi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இயல்பிலேயே கவிதைக்காரரான கார்த்திகா ராஜ்குமார் கொஞ்ச நாட்களாக அதிகம் எழுதுவதில்லை. அந்தச் சுவரை உடைத்த பெருமை புது வரவு ஜாராவையே சேரும். புது வெள்ளமாக பொங்கிப் பிரவாகமெடுக்க வைத்துவிட்டவள் இந்தக் குட்டி தேவதையான குட்டி இளவரசி.
முகநூலில் தனக்குப் பேத்தி பிறந்திருப்பதை அறிவித்துவிட்டு ஆரம்பித்த இவரின் கவிதைப் பொழிவைத் தொடர்ந்து... அதை ஒரு புத்தகமாக வெளியிட யோசனை சொன்னதோடு இச்சையுடன் புத்தக ஆக்கத்தின் பொறுப்புகளையும் ஏற்றேன்.
இந்தப் புத்தகம் ஒரு அபூர்வப் பொக்கிஷம். குறிப்பாக ஜாராவுக்கு. ஜாரா வளர்ந்து தமிழ் கற்று இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது அவளின் உணர்வுகள் எப்படியெல்லாம் துள்ளும், துடிக்கும், மிதக்கும், பறக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறேன்.
ரசனைக்காரத் தாத்தாவின் ரசனைமிக்க கவிதைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்!
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580132206102
Kutty Ilavarasi

Read more from Karthika Rajkumar

Related to Kutty Ilavarasi

Related ebooks

Reviews for Kutty Ilavarasi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kutty Ilavarasi - Karthika Rajkumar

    http://www.pustaka.co.in

    குட்டி இளவரசி

    நானும் நீங்களும்

    Kutty Ilavarasi

    Nanum Neengalum

    Author:

    கார்த்திகா ராஜ்குமார்

    Karthika Rajkumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/karthika-rajkumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    குட்டி இளவரசி

    நானும் நீங்களும்

    முகம் பார்த்திராமலே

    குட்டி இளவரசியை,

    எங்களை,

    அன்பு மழையில்

    நனைத்துக் கொண்டிருக்கும்

    என் பிரிய சகோதரிகள்

    காரைக்குடி பாத்திமாவிற்கும்,

    சேலம் மஞ்சுளாவிற்கும்.

    குட்டி இளவரசி பிறந்த கதை

    அழகான, அசையாத, தெள்ளத் தெளிவான, அடித்தளத்தையே பார்க்க முடிகிற ஒரு சிறிய குளத்தில் நழுவின மீன், அந்தக் குளத்தை எல்லா விதங்களிலும் தன் அசைவுகளினால் மாற்றிக் கொண்டிருப்பதை உங்கள் மனக்கண்களால் பார்க்க முடிகிற அல்லது கற்பனை செய்ய முடிகிற பாக்யவான்களா நீங்கள்?

    உள்ளே நீரலைகளின் அசைவில் மிக மெல்லிதாக ஆடும் நீள் நீர்த்தாவரங்கள், நகர்ந்து நகர்ந்து போகும் உள்ளிருக்கும் சில சிதில்கள், கீழிருந்து கிளம்பும் குளத்து அடிப்பரப்பின் மென் துகள்கள், அங்கங்கே எழும்பி அடங்குதல் போல எல்லாப் பக்கமும் உயிர்ப்பின் புது அசைவுகள் அந்தக் குளத்தையே புதியதொரு நிலைக்கு மாற்றி விடுவதைப் போல, இன்னும் இதை விடவும் பல மடங்கு ஒரு குழந்தையின் பிறப்பு இருக்கும் என்பதைச் சென்ற வருடம் எனக்கு உணர்த்தியது.

    ஒரு குழந்தையின் பிறப்பு என்பது சந்தோஷமான, ஆசீர்வாதமான நிகழ்வு என்று மட்டும்தான் என் மனதில் ஒரு நினைப்பு இருந்தது. ஆனால் அந்த நிகழ்வு எப்படி அதைச் சுற்றிலும் சில பல ஆச்சர்யமான, அசத்தலான மாற்றங்களை விதைக்கிறது என்பதை அனுபவங்களாக அறிய வரும்போது பிரமிப்பு பூக்கிறது.

    இதிலும் குறிப்பாக நமக்குக் குழந்தைகள் பிறந்த பொழுது நம் இளமைக் காலங்களில் அந்தச் சூழலில் வாய்த்த அனுபவங்களைவிட நமது

    Enjoying the preview?
    Page 1 of 1