Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Virinthathor Samrajyathil
Virinthathor Samrajyathil
Virinthathor Samrajyathil
Ebook155 pages1 hour

Virinthathor Samrajyathil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ்ச் சிறுகதைக்கு ஆழமும் அகலமுமிக்க நீண்ட வரலாறு ஒன்றுண்டு. சிறுகதை எத்தனை முறை எழுதப்பட்டாலும், படைப்பாளியிள் ஆற்றலுக்குச் சவால் விட்டு நிற்கும் கணங்கள் நிறைய உண்டு. படிக்கும் வாசகர்களாலும் மதிப்பிடும் திறனாய்வாளர்களாலும் மட்டுமின்றி பற்பல சந்தர்ப்பங்களில் சிறுகதைவாணர்களுக்கே இன்னும் திட்பநுட்பமுடன் கதையைப் படைத்திருக்கலாமே என்ற எண்ணம் ஏற்படும்.
‘சிறகற்ற பறவைகள்’ சிறுகதையில் வரும் சம்மனசு மிக்கேல் படைப்புக்களில் பாத்திரப் படைப்புத் திறனும் பண்பு வெளிப்பாடும் நன்கு வெளிப்பட்டுள்ளன.
‘மழைக்குப் பின்னும் பூக்கள்’ சிறுகதையிலும் கதையில் நேரடியாக இடம்பெறாது. உரையாடல் மூலம் மட்டும் வெளிப்படும் எஸ்தரின் கணவன் படைப்பு மிக அருமையாக வெளிப்பட்டு உள்ளது. கதையின் தலைப்பு முதல் உரையாடல், எடுத்துரைத்தல் என்று அனைத்து நிலைகளிலும் புனைகதை மொழி கவிதையின் முழு வீச்சுடனும் பொருள் ஆழத்துடனும் வெளிப்பட்டுள்ளது.
சிறுகதையின் கலை நுட்பங்களை அறிந்துகொண்டு நுணுக்கமும் செறிவுமிக்க கலை வடிவங்களாகக் கதைகளைக் கவிதை மொழியில் தரும் கார்த்திகா ராஜ்குமாரின் இந்த ‘விரித்ததோர் சாம்ராஜ்யத்தில்’ சிறுகதைத் தொகுப்பைத் தமிழ் வாசகர்களுக்கு அறிய செய்கின்றன.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580132206304
Virinthathor Samrajyathil

Read more from Karthika Rajkumar

Related to Virinthathor Samrajyathil

Related ebooks

Reviews for Virinthathor Samrajyathil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Virinthathor Samrajyathil - Karthika Rajkumar

    http://www.pustaka.co.in

    விரிந்ததோர் சாம்ராஜ்யத்தில்

    Virinthathor Samrajyathil

    Author:

    கார்த்திகா ராஜ்குமார்

    Karthika Rajkumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/karthika-rajkumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. சிறகற்ற பறவைகள்

    2. ஜ்வாலை

    3. இறுக்கம்

    4. ?!?

    5. லாக்-அவுட்

    6. மழைக்குப் பின்னும் பூக்கள்

    7. உயிர்த்தெழுதல்

    8. சலனம்

    9. பிணைப்பு

    10. விரிந்ததோர் சாம்ராஜ்யத்தில்

    11. புரிதல்

    12. பயணம்

    13. சக்தி

    முன்னுரை

    தமிழ்ச் சிறுகதைக்கு ஆழமும் அகலமுமிக்க நீண்ட வரலாறு ஒன்றுண்டு. சிறுகதை எத்தனை முறை எழுதப்பட்டாலும், படைப்பாளியிள் ஆற்றலுக்குச் சவால் விட்டு நிற்கும் கணங்கள் நிறைய உண்டு. படிக்கும் வாசகர்களாலும் மதிப்பிடும் திறனாய்வாளர்களாலும் மட்டுமின்றி பற்பல சந்தர்ப்பங்களில் சிறுகதைவாணர்களுக்கே இன்னும் திட்பநுட்பமுடன் கதையைப் படைத்திருக்கலாமே என்ற எண்ணம் ஏற்படும். அப்படிச் சிறுகதையைக் கலையாக்குவதில் என்ன நுட்பம் உள்ளது என்ற வினாவிற்குத் தமிழ்ச் சிறுகதைச் சாதனையாளர்களின் பல்வேறு கதைகள் உரை கல்லாக நிற்கின்றன. கதையின் சிறுவீச்சில் கதையின் விசுவரூபத்தைக் காட்டி விடும் பிரம்மாக்கள் நிறையப்பேர் இன்றும் நம்மிடையே உள்ளனர்.

    சிறுகதையின் வெளிப்பாட்டுத் திறனில், கவிதை ஆற்றலைக் கலந்து படைக்கும் படைப்பாளர்களுள் கார்த்திகா ராஜ்குமார் ஒருவர். அவருடைய சிறுகதைகளில் செறிவும் திட்பமும் கலந்து பல இடங்களில் கவிதையைப் படித்து அனுபவிக்கும் மன உணர்வை ஏற்படுத்துகிறார். கவிதை, சிறுகதை இரண்டிலும் சொற்செட்டும், தொனிப்பொருளைத் தரும் சொல் ஆட்சியும், வாசகனை உய்த்துணர வைக்கும் திட்டப் பாங்கும் பொது அம்சங்களாகும். குறுகிய எல்லைக்குள்-கவிதை, சிறுகதை வடிவிற்குள் படிப்பவனை உய்த்துணரச் செய்யும்-மானச நாடகமாக அனுபவிக்கச் செய்யும் கதைமாந்தர் வரைந்து காட்டலும் பண்பு வெளிப்பாடும் அமையும். இந்த நுட்பத்தை உணர்ந்து உள்வாங்கி செரித்து வெளியிடுகிறார் கார்த்திகா என்பதை இத்தொகுப்பில் உள்ள பல சிறுகதைகள் அழுத்தமாகவும், நுணுக்கமாகவும் காட்டுகின்றன.

    'சிறகற்ற பறவைகள்' சிறுகதையில் வரும் சம்மனசு மிக்கேல் படைப்புக்களில் பாத்திரப் படைப்புத் திறனும் பண்பு வெளிப்பாடும் நன்கு வெளிப்பட்டுள்ளன. கதையின் இறுதியில் வரும் இத்தனை தளர்ந்து போன மிக்கேலை அதுவரை அறியாதிருந்த சம்மனசு, அடிபட்டு விட்டவளைப் போலச் சரேலென நிமிர்ந்து பார்த்தாள். என்னும் வரியில்தான் இருவரையும் நுட்பமாகக் காட்டுகிறார். அருகிருந்தும் தன் கணவனின் எதிர்பார்ப்பு நிறைந்த ஆதங்கத்தை உணரத் தவறிய தன் நிலையை அவளும், நாவிற்கு ருசியாகச் சாப்பிட்டு நிமிர்ந்திருந்த மிக்கேலின் இன்றைய சரிவை நாமும் அழுத்தமாக வாங்கிக் கொள்கிறோம். கதை நெடுக வந்த சாப்பாடு பற்றிய சொற் கீற்றுகள் இப்போது படிப்பவனின் மனத்திரையில் ஓடி இந்த மையத்தைச் சுற்றி விசுவரூபம் எடுக்கச் செய்கின்றன. முடிவு வரியிலிருந்து தொடங்கி, மீண்டும் ஒரு முறை கதையை வாசிக்கத் தூண்டுகிறது இந்த அனுபவம்.

    சிறுகதை மிகவும் வரையறுத்த கட்டுப்பாடுடைய வடிவம். அந்தச் செறிவான கலை வடிவத்தில், நாவலைப் போல விரிவாக மாந்தர் படைப்பையும் பாத்திரப் பண்பு நலனையும் காட்டுவது இயலாத செயலாகும். வெறும் கோட்டு ஓவியங்களாக இங்கொன்றும் அங்கொன்றுமாகத் தீட்டி உய்த்துணர வைப்பதுதான் சிறுகதையில் இயலும். 'லாக் அவுட்'சிறு கதையில் கதவடைப்புச் சூழலில் தன் நண்பனான கிருஷ்ணன் உடன் பணிபுரியும் சக ஊழியர்களிலிருந்து மாறுபட்டு நிற்பதும் காவலர்களிடம் தான் அகப்பட்ட போதிலும் தன் நண்பனைக் காட்டிக் கொடுத்திடாத கிருஷ்ணனின் நேயமிக்க பண்பும் அழுத்தமாக வெளிப்பட்டுள்ளன. சங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி ஊழியர்களில் ஒரு பகுதியினர் சங்கத்தையும் பிற ஊழியர்களையும் புறக்கணித்துக் காட்டிக் கொடுத்து தாம் மட்டும் பணிக்குத் திரும்பிய செயல் இன்றைய வாழ்க்கை யதார்த்தமாகும். அதன் பின்னணியில் கிருஷ்ணனின் இந்தச் செயலும் அதன் பின்னுள்ள அவன் பண்பும் முழுவீச்சில் வெளிப்படுகின்றன. இக்கதையில் 'லாக்-அவுட்' என்ற கதைத் தலைப்பைத் தமிழில் 'கதவடைப்பு' என வைத்திருக்கலாம். சிறுகதை, நாவல், குறுநாவல், புதுக்கவிதை போன்ற படைப்பிலக்கியங்களில் படைப்பாளரின் எடுத்துரைத்தல் நடையில் தமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்தும் ஒரு கட்டுப்பாட்டை அவர்களே வைத்துக் கொள்வது நல்லது தமிழ்ச் சிறுகதைக்கு ஆங்கிலத்தில் தலைப்பு தருவது ஏற்புடையதாக இல்லை.

    'மழைக்குப் பின்னும் பூக்கள்' சிறுகதையிலும் கதையில் நேரடியாக இடம்பெறாது. உரையாடல் மூலம் மட்டும் வெளிப்படும் எஸ்தரின் கணவன் படைப்பு மிக அருமையாக வெளிப்பட்டு உள்ளது. கதையின் தலைப்பு முதல் உரையாடல், எடுத்துரைத்தல் என்று அனைத்து நிலைகளிலும் புனைகதை மொழி கவிதையின் முழு வீச்சுடனும் பொருள் ஆழத்துடனும் வெளிப்பட்டுள்ளது. 'தன்னைப் போலவே திடுமென மாறிக் கொண்டிருந்த வானத்தைப் பார்த்தான். மரங்களினூடே கசிந்த கதிர்கள் காணாமல் போயிருக்க, எங்கிருந்தோ வந்த மேகங்கள் கறுத்து வானத்தில் நிறைய திரள ஆரம்பித்திருந்தன. எஸ்தருக்கான பதிலே தன்னிடமில்லை போலிருந்தது. திடுமென அங்கொன்றும் இங்கொன்றுமாக மழைத்துளிகள் ஆரம்பித்தன. (ப.50)என்ற வரிகளில், கவிதை மொழியை முழுவீச்சில் பார்க்கிறோம். வானம், மேகம், கருமை, மழை என்ற இயற்கை வருணனை, ஜென்னின் உணர்வையும் மனநிலையையும் புலப்படுத்தி அதன் வழியே கதைக் கருவையும் குறிப்பாக வெளிப்படுத்தி நிற்கின்றன. இது சங்கக் கவிதை தொட்டுத் தமிழில் தன்னுணர்சிசிப் (lyric) பாடல் மரபில்-கவிதையாக்கத்தில்-இடம்பெறும் பின்புல வருணனை வழியே மாந்தரின் மன உணர்வையும் கவிதை பின் அடிக்கருத்தான கருவையும் வெளியிடும் திறன் ஆகும். சிறுகதை என்னும் இலக்கிய வடிவம் ஐரோப்பியர் தொடர்பால் நம் மொழிக்கு வந்தது என்றாலும் அந்த இலக்கிய வகையை நம்முடைய இலக்கிய, சமூக, பண்பாட்டு மரபுகளுக்கு ஏற்றதாக உருமாற்றும் ரசவாதத்தை நம் படைப்பாளர்கள் செய்து வருகின்றனர் என்பதற்குக் கார்த்திகா ராஜ்குமாரின் இக்கதை நல்ல சான்று ஆகும்.

    'உயிர்த்தெழுதல்'சிறுகதையிலும் இது போலவே சொற்களினூடே மாந்தர் பண்பு நலனும் கதைக் கருவும் அழுத்தமாக வெளிப்படுகின்றன. பின்புல வருணணை அழகாக இழைந்து வருகிறது. மன உணர்வுகளை நுட்பமாகச் சொற்களில் இவரால் கொண்டு வர முடிகிறது என்பதை இக்கதையிலும் காண்கிறோம். சிறுகதையின் கலை நுட்பங்களை அறிந்துகொண்டு நுணுக்கமும் செறிவுமிக்க கலை வடிவங்களாகக் கதைகளைக் கவிதை மொழியில் தரும் கார்த்திகா ராஜ்குமாரின் இந்த'விரித்ததோர் சாம்ராஜ்யத்தில்'சிறுகதைத் தொகுப்பைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகஞ் செய்வதில் நான் பெருமிதம் அடைகிறேன். இத்தகு நல்ல சிறுகதைகளை அவர் அடிக்கடி எழுத வேண்டுமென வாழ்த்துகிறேன்.

    சு.வேங்கடராமன்

    மதுரை

    15-12-'93

    1. சிறகற்ற பறவைகள்

    மாற்றங்கள் எதில் தான் இல்லை? எல்லாமே ஏதோ ஒரு வகையில், விதத்தில் மாறிக் கொண்டிருக்கிறதுதான். அதுவும், மெட்ராஸ் போன ஜெபி மாயமாய் மறைந்து விட்ட பிறகு, சமீபகாலமாக வீட்டில் சகலமும் புதுத்திசையில் மாற ஆரம்பித்துவிட்டது. வீட்டில் எவருக்குமே கிடைக்காமல் போன கவர்ன்மெண்ட் உத்தியோகம் சம்மனசுக்குக் கிடைத்த போது அது புதுக் காரியமாகவே இருந்தது. நாற்பது வயதுகளைக் கடந்து விட்ட பிறகு இப்படித் தானும் காலையிலேயே வேலைக்குக் கிளம்புவதென்பது தனக்கு அலுப்பூட்டுகிறதா அல்லது பிடித்திருக்கிறதாவெனத் தீர்மானமாக அவளுக்கே தெரியவில்லை. வொர்க்ஷாப் வேலைக்குப் போகிற மகன் அந்தணிக்கு எல்லாம் செய்த கையோடு, புடவைக் கடைகளில் வேலை செய்யப் புறப்படுகிற மகள்கள் வயலட், அடைக்கலத்துடன் தானும் புறப்பட்டு, ஹைஸ்கூல் சத்துணவுக்கூடத்தில் பத்து மணிக்கு முன்பே இருந்தாக வேண்டும்.

    இந்தப் புது வேலையால், தான் முன்பு செய்து கொண்டிருந்த செட்டியார் வீட்டு வேலையை விட்டு விட்டாள். அவர்களுக்கு, ஏழு வருடங்களாக வேலை செய்து வந்த சம்மனசை விட்டு விடுவதில் விருப்பமில்லைதான், சம்பளத்தைக் கூட்டுவதாக, இன்னும் ஏதேதோ கொடுப்பதாகச் சொன்னாள் செட்டியாரம்மா. சிரிப்பு மாறாமல் பணிவாக மறுத்துவிட்டாள் சம்மனசு, இந்தச் சத்துணவுக்கூட வேலையும் அதிகச் சிரமமில்லை. மதியம் சூடாகக் கிடைக்கிற சோறு... இது தவிர லீவு நாட்கள் வேறு. முதலில் முணுமுணுத்த வயலட்டும் அடைக்கலமும் கூடப் பின் அடங்கிப் போனார்கள். அந்தணி மட்டும்,ஏம்மா, தினத்துக்கும் அடுப்பே கதின்னு இருக்கணும்னா எப்படி?என்று ஆட்சேபித்த போதுஇல்லடா அந்தணி, செட்டியாரம்மா வீட்டு வேலைகளை விட இது சுளுவுதான். மத்தியானம்வரைக்குந்தான் எல்லாம். முடிச்சுட்டு வந்தா அக்கடானு கெடக்கலாம். போய் வந்தா வீட்லயும் சூடா சாப்பாடு. கையிலயும் நாலு காசு நிக்கும். உனக்கும் பாரம் குறையும். இந்தப் புள்ளைங்களைக் கரை ஏத்தறத்துக்கும் பிறகு உதவுமே. என்றாள் சம்மனசு. அப்புறம், அந்தணி ஏதும் சொல்லவில்லை.

    சம்மனசு வாய் விட்டுச் சொல்லாத ஒரு காரணமும் உண்டு. அவள் புருஷன் மிக்கேல். ஓயாத குடி முன்பாகவே தந்து விட்ட முதுமையில், லேசாக நடுங்குகிற கைகளுடன் வெண்முடி முளைத்திருக்கிற கன்னங்களைத் தடவிக்கொண்டு, கையில் பீடியுடன், அந்தநாள் நினைவுப் புலம்பல்களுடன் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் மிக்கேல். தன்

    Enjoying the preview?
    Page 1 of 1