Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Avan, Aval, Avargal
Avan, Aval, Avargal
Avan, Aval, Avargal
Ebook224 pages1 hour

Avan, Aval, Avargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அந்நாளில் வரைந்த படங்கள் இன்றும் பத்திரமாகப் பெட்டிகளில், அல்லது வேறு பத்திரமான இடங்களில், நானும் என் Zoology record note-ல் வைத்திருக்கிறேன். அந்தப் படங்கள் உருவான நாட்களில் மகத்தான சந்தோஷம் தந்து, திருப்தியைத் தந்தவை. நீ நல்ல ஒரு artist ஆகப் போறடா என்று பாராட்டுக்களை நிறைய வாங்கித் தந்தவை. ஆனால் அவைகளை இன்றுபார்க்கிற பொழுது, அதன் அபத்தங்கள், குறைகள் மிகத் தெரிந்தாலும், இவைகள் எல்லாம் அவைகளை அலட்சியப்படுத்திவிடச் செய்யாமல், அந்நாள் நல்ல நினைவுகளின் சாட்சியங்ககளாகவே பத்திரப்படுத்தி வைக்கத் தோன்றி இருக்கின்றன. என்றாலுமே, அந்நாளில் வரையப் பெற்ற எல்லாப் படங்களுக்குமே இந்தத் தகுதி இல்லாமல், குறிப்பிட்ட சிலவைகளுக்கு மட்டுமே பத்திரப்படுத்தப்படுகிற தகுதி இருந்திருக்கிறது ஒரு வகையில் சொல்லப்போனால் இந்தக் காரியம், இத்தொகுப்பிலிருக்கிற என் சில பழைய குறு நாவல்களுக்கும் கூட ஓரளவிற்குப் பொருந்தும் என்று தோன்றுகிறது.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580132206411
Avan, Aval, Avargal

Read more from Karthika Rajkumar

Related to Avan, Aval, Avargal

Related ebooks

Reviews for Avan, Aval, Avargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Avan, Aval, Avargal - Karthika Rajkumar

    https://www.pustaka.co.in

    அவன், அவள், அவர்கள்

    Avan, Aval, Avargal

    Author:

    கார்த்திகா ராஜ்குமார்

    Karthika Rajkumar

    For more books
    https://www.pustaka.co.in/home/author/karthika-rajkumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. நான் அவள் மழை

    2. அப்பா

    3. உறவு

    4. அவன் அவள் அவர்கள்

    5. எதிர் கொள்ளல்: சில குறிப்புகள்

    6. அறியாதிருந்த முகங்கள்

    கடிதங்கள்

    அன்புள்ள கார்த்திகா,

    உங்கள் எதிர் கொள்ளல் சில குறிப்புகள் என்கிற கதையை அனுபவித்துப் படித்தேன்.

    கதையின் முகப்பில் கொடுக்கப்பட்டுள்ள சார்த்தரின் வார்த்தைகள் கதையின் கருவுக்கு மட்டும் காரண - காரியமாக அமைந்ததாக எனக்குப் படவில்லை. வேறு காரியங்களுக்கும்.

    தங்களது சமீபத்திய கதைகளில் (கதை நிகழ்ச்சிகளின் பரிமாணங்களைத் தாண்டி) வாழ்வியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் திமிறிக் கொண்டு வெளியேற முயற்சிக்கின்றன. இதற்கும் மேலாக, இந்தக் கருத்துக்களில் வாழ்க்கை பற்றிய உங்களது அடிப்படை நோக்கில் ஒருவகை Transition நிலையை நீங்கள் கடப்பதாக எனக்குப் படுகிறது.

    நிஜங்களின் தேடல், இவர்களைப் பொருத்தவரை புதிய பரிமாணங்களில், புது பிம்பங்களாக பரிணமிக்க வேண்டிய தனித்துவ நிர்பந்தங்களாகும். இந்தத் தேடல் கலைஞன்மீது சுமத்தப்பட்ட சமுதாய நிர்பந்தம் கூட.

    இந்த 'தேடலின் இறுக்கத்தில், அல்லது தத்தளிப்பில்' கலைஞனோ, இலக்கியவாதியோ உணர்ச்சிகளின் கொந்தளிப்புக்கும் intellectual perceptionக்கும் இடையில் போராட வேண்டிய ஒரு பணியை தனதாக்கிக் கொள்கிறான். இந்தப் போராட்டச் சுமை கலைஞன் தனது expression வெளிப்பாட்டிற்குத் தன்னை தயார்ப்படுத்திக் கொண்ட ஒரு உண்மை.

    சமீப காலங்களில் உங்கள் கதைகளில் கலைஞனுக்கே உரிய ‘தேடலை’ ஆரம்பித்துள்ளீர்கள். இது ஒரு சிறப்பான அம்சம்.

    உங்களின் ‘தேடும்’ போராட்டத்தில் முடிவில்லாத ஆத்ம சோகம் ஒன்று தொக்கி நின்று கொள்வதாக எனக்குப் படுகிறது. உண்மை என்னவென்றால் இந்த சோக நிலைகளின் (கதைகளில்) பிரதிபலிப்பே உங்கள் கதைகளைச் சிறப்பாக்கி வருகின்றன.

    ஒன்றைக் கவனித்துப் பாருங்கள். இந்த சோகத் தன்மையே கலைஞனுக்கு ஒருவித சந்தோஷம்தான். இச் 'சந்தோஷம்’ கலைஞனை ஒருவித ஆத்ம வலியாக இடைவிடாது நெருடிக் கொண்டிருக்கும். சோகமோ அல்லது சந்தோஷமோ - கலைஞனைப் பொறுத்தவரை தேடலின் பிரதிபலிப்புதானே. தேடலில் யாரோ வருவார், யாரோ போவார். வருவதும் போவதும் தெரியாது. ஆனால் கலைஞனைப் பொருத்தவரை தேடல் இடைவிடாது நடந்து கொண்டிருக்க வேண்டிய நிர்பந்தம்.

    கதையின் ஓர் இடத்தில் ...வர வர என் கண்கள் உணர்த்துகின்ற சில காட்சிகளின் நிஜங்களில் லேசாக சந்தேகம் வருகிறது எனக் கூறியுள்ளீர்கள். இது, நீங்கள் அறிந்திராமலேயே சொல்லிக்கொண்ட உங்களது வாக்குமூலம் எனத் தோன்றுகிறது. இந்த வார்த்தைகள் நீங்கள் உணர்ச்சியின் பிடியில் அகப்பட்டதால் சொல்லிக் கொண்ட உண்மைகளா?

    மறுபடி சொல்கிறேன். உங்கள் கதை எனக்குப் பிடித்திருக்கிறது, மிகவும்.

    கெராடா,

    நீலகிரி மாவட்டம்,

    அன்புடன்

    சந்திர ப்ரியா

    அன்புள்ள கார்த்திகா,

    வெகு நாட்களுக்குப் பின் ஏற்படும் ஒரு பழைய நண்பனின் சந்திப்பைப் போல், மனதில் நிற்கும் ஒரு கதையைப் பற்றிப் பேசுவதும் ஸ்வாரஸ்யமான விஷயம். நான்-அவள்-மழை ஒரு மழைக்கால நினைவாய், பசுமையாய்... மனதில் இயல்பாய் ஏற்படும் ஸ்நேகிதம், நல்ல ரசனைகள் பற்றிய விவாதங்கள், பரிமாற்றங்கள் எல்லாமே மிக மிக மென்மையாக சொல்லப்பட்டிருப்பது கதையின் வெற்றிக்கு முதல் காரணம்.

    எத்தனைப் பேருக்கு கிடைத்து விடுகிறது, உணர்ந்து புரிகிற நல்ல நட்பு? அவரவர் பிரச்னைகளை வென்று எழுந்து அடுத்தவர் நலனை நினைக்கும் பேறு எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது? இவை எல்லாமே இயல்பாய் கிடைக்கப் பெறுவது சுகமான ஒன்று.

    இயந்திரத்தனமான வாழ்க்கையில் மழையை ரசிக்கவோ, நல்ல கதை, கவிதை பற்றி விவாதிக்கவோ நேரத்தைக் காணாமல் எப்போதோ தொலைந்து விட்ட என்னால் நிச்சயம் இந்தக் கதையை மறக்க முடியாது. ரஞ்சனியின் முடிவு லேசாக நெருடத்தான் செய்கிறது. என்றாலும், இறுதி ஊர்வலத்தில் அழ முடியாமல் பின் வரும் மழை நாளில் அவளை நினைத்து அழும் ராஜாவுக்காக இந்தக் கதை நினைவில் இருக்கும்.

    மென்மையாக மனதை வருடும் உங்கள் எழுத்து நடை பொறாமைப்பட வைக்கிறது. வேறு யார் இதை எழுதியிருந்தாலும் காயப்படுத்தியிருப்பார்களோ என்ற அச்சம் தோன்றுகிறது. கனமான எத்தனையோ விஷயங்களை அழுத்தம் திருத்தமாக சொல்லப் பலர் இருக்கலாம். ஆனால், இதமாக நெஞ்சைத் தொட உங்களைத் தவிர யாரும் இல்லை. இதுவே உங்கள் பலமாக நின்று உங்களிடமிருந்து மேலும் பல நல்ல படைப்புகளை வரவழைக்கட்டும்.

    சென்னை - 78

    அன்புள்ள

    நிமாஷ்அனீசா

    ராஜ்,

    நலமா? பற்களை உதற வைக்கும் உன் உதகை நலமா?

    உன்னுடைய 'அவன் - அவள் - அவர்கள்' கதையை மறுபடி படிக்கையில் ஒரு ஆச்சரியம் ஏற்பட்டது.

    பிரதேச மொழி, வழக்கம் இவற்றைப் படைப்புக்களில் கொண்டு வரலாம். சாத்தியம். படித்திருக்கிறோம். பிரதேச சீதோஷ்ண நிலையைப் படைப்பில் தருவது என்பது எப்படி உன்னால் முடிகிறது?

    ஒவ்வொரு வரிகளும் எவ்வளவு இதமாய் இருக்கின்றன.

    பூமத்திய ரேகை போல... பொதுவாய் உன் கதைகளின் ஆதார அம்சத்தில் ஒரு சோக ரேகை ஓடுவது வழக்கம் - சோகம் கலவாத வாழ்க்கையே இல்லை என்கிற உண்மையைப் பரப்புவதாய். இதிலும் அந்த ரேகை உண்டு.

    அலங்காரம் செய்யாத மனித மனங்களை எக்ஸ்ரேயாக ஊடுருவிப் பார்த்து அடையாளம் காட்டும் முயற்சியும் உனது பெரும்பாலான படைப்புகளில் நான் காண்கிறேன். இதிலும்,

    சம்பவங்களின் சூழ்நிலைக்கு வாசகர்களைச் சுண்டு விரல் பிடித்து அழைத்துச் செல்வது நல்ல எழுத்து. அதைவிட... பாத்திரங்களின் மன நிலையைப் பெயர்த்தெடுத்து படிக்கிற வாசகனுக்கும் தருவதென்றால்... அது உன்னத எழுத்து- உன்னுடையதைப் போல,

    கதையில் ஒரு லட்சிய நோக்கம் இருக்கிறது. அதற்காக மைக்கைப் பிடித்து இதனால் சகல வாசகர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்... என்கிற நீதி போதனை கிடையாது.

    விதவைக்கா? மறுவாழ்வா? என்கிற தயக்கம் உன்னிடம் இல்லை. சென்டிமெண்ட், புடலங்காய் என்று உன் விதவைப் பாத்திரமும் தயங்காமல் இயல்பாய் நடந்து கொள்கிறாள்.

    என்ன சொல்ல வேண்டுமோ, அதைச் சொல்கிறாய்.

    எப்படிச் சொல்ல வேண்டுமா, அப்படிச் சொல்கிறாய்.

    என் துடிப்பான நண்பனே, இலக்கியத்தில் சாதிக்கப் புறப்பட்டிருக்கும் இளம் தென்றலே... உன் காலடியில் இருக்கும் சிவப்புக் கம்பளத்தின் மேல் தொடர்ந்து நட, வரவேற்பாளர்கள் மிக அருகில் காத்திருக்கிறார்கள்.

    பட்டுக்கோட்டை

    பிரியங்களுடன்

    பிரபாகர்

    சமர்ப்பணம்

    தன் இன்மையில்

    தன் இருப்பை இன்றும்

    உணர்த்துகிற

    அன்புமிக்க அப்பாவிற்கு

    1. நான் அவள் மழை

    பொசுபொசுவென்று.... ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாய் மழை இப்படிப் பெய்யும் பொழுதெல்லாம் ரஞ்சனியின் நினைவுகளால் என் மனம் நிறைந்து போய் விட, வெறும் உடம்போடு என் அறை வாசலில் வந்து நின்று கொள்வேன். அவள் சொன்னவைகளை நினைத்துக் கொண்டு, இந்த மெல்லிய மழைச் சாரல்களை ஸ்பரிசிக்கும் பொழுதெல்லாம் ஏற்படும் சிலிர்ப்புகள், ரஞ்சனியின் நினைப்புகளோடு ஆழமாய் மனதில் இறங்கிக் கொண்டு, உடல் லேசாக நடுங்கித் தணிந்து போகும். ஒரு விதமான இனிமைகள் என்னுள் பிரவாகமாய்ப் பொங்கி... என் மனம் என்னுள் அழகாய் மலர்ந்து கொள்ளும்....

    இப்பொழுது...?!

    ரஞ்சனி - ரொம்பவும் வித்தியாசமான பெண். அழகான, கம்பீரமான ஒரு சாமந்திப் பூவைப் போல், எளிமையாக முகத்தில் தெரியும் ஒரு களங்கமற்ற தன்மையோடு, அசாத்தியமான தன்னம்பிக்கை, தைரியத்தோடு..., ‘ஃப்ரண்ட்ஸ்’ படத்தில் வரும் அந்தப் பதினாலு வயதுக் கதாநாயகியைப் போன்ற சாயலில் இருந்தாள் அவள். மிகச் சாதாரணமாய் என் வாழ்க்கையில் பிரவேசித்தவள், ஒரு வித்தியாசமான சிநேகிதியாக மாறி.... பின் என் காதலியாகி.... ஆனால் அதற்கு முன், எனக்குப் பலப்பல விஷயங்களை உணர்த்திய ஒருத்தியாக இருந்து, என்னுடைய பல நாட்களை இப்படித் தன்னுடைய 'தனி’த்துவத்தில் ஆக்கிரமித்துக் கொண்டவள் தான் ரஞ்சனி.

    ஒரு புழுக்கமான புதன் கிழமை மாலையில் தான் ரஞ்சனி எனக்கு அறிமுகமானாள். என்னுடைய கவிதை ஒன்று 'தீபத்’தில் பிரசுரமாகியிருந்தது. அது மிகவும் நன்றாக இருந்ததென்று... அவளின் கிளாஸ் மேட்டான என் தங்கையிடம் தற்செயலாகச் சொல்ல, என் தங்கை, அதை எழுதியது என் அண்ணாதான் என்று பிரஸ்தாபித்துக் கொள்ள, துணிச்சலுடன் என்னைப் பார்த்துப் பாராட்ட வந்தாள்.

    அவளைப் பார்த்தவுடன்... அவளின் அந்த 'இன்னோசன்ஸ்' முகமும், அந்த ஒரு விதமான எளிமையான அழகும், என்னுள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தினாலும், அவளைப் பற்றி எதுவுமே அதிகமாய்த் தெரியாத அந்த நிலையில் அவள் நிதானமாய், மென்மையாய் உதிர்த்த பாராட்டுகளுக்கு நன்றிகளை மட்டுமே சொன்னேன்... அதுவும்கூட... அவள் புறப்படும் பொழுதுதான்.

    அவள் நிறைய என் கவிதைகளைப் பற்றிக் கேட்டுவிட்டுப் புறப்பட்ட சமயத்தில் மழை ‘துளி'க்க ஆரம்பித்தது.

    மழை பெய்யும் போல இருக்கு. நீங்க அப்புறமா போகலாமே...... என்றதும், அவள் ஒரு மென் சிரிப்பை உதிர்த்து விட்டுச் சொன்னாள்.

    இப்படிப் பெய்யற மழையும், இந்த மாதிரியான மழைச் சாரல்ல நனையறதும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்! என்றபடி தூற ஆரம்பித்த மழையை ஆர்வமாய் ரசித்துக் கொண்டு, இறங்கிப் போனாள். 'என்ன பெண் இவள்... இப்படி....' பெரிதாய் வியந்து போனேன்.

    அடுத்த வாரத்தில் ஒரு நாள், அக்ரி யுனிவர்ஸிட்டி பில்டிங்ஸில் இருக்கும் என் நண்பர் ஒருவரைப் பார்த்து விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்த பொழுது, ஹலோ ராஜ்... என்ற குரலைக் கேட்டதும் திரும்பிப் பார்த்தேன். இனிமையான அதிர்ச்சி.

    ரஞ்சனிதான்! கையில் சில புத்தகங்களுடன் தனியாக…!

    எங்கே ரஞ்சனி... இந்தப் பக்கமா வந்திருக்கீங்க? என்றேன்.

    நான் அடிக்கடி இந்தப் பக்கம் வருவேனே... இங்கே இந்த கார்டனுக்கு வந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்திட்டு இருப்பேன்; சில சமயங்கள்ல படிப்பேன்.

    அது சரி, தனியாவா வந்திருக்கீங்க?

    ஆமாம், தனியா வர்றது தான் எனக்குப் பிடிக்கும்.

    அப்ப ‘போர'டிக்காதா?

    அதெப்படி 'போர்' அடிக்குங்க, ராஜ்...? இதென்ன பாலைவனமாவா இருக்கு? அருமையான மரங்கள்; வித்தியாசமான செடிகள். எத்தனை தடவை, ஏன் தினத்துக்கும் பார்த்தாலே கூட... அலுப்போ சலிப்போ தட்டாதே. இயற்கையை ரசிக்கிறதுன்னா எப்பவுமே போரடிக்காதே!

    ஏன் ரஞ்சனி, யாராவது உங்ககூட வந்துட்டாத்தான் உங்களுக்குப் போரடிக்குமோ?

    ஊஹும். அப்பவும் எனக்குப் போரடிக்காது. கூட வர்றவங்களுக்குத்தான். அதனாலேதான் நான் பெரும்பாலும் தனியாவே வருவேன்.

    அட, இவளுக்கு இப்படி ஒரு ரசனையா! இயற்கையை ரசித்துக் கொண்டு, ஒரு கவிஞனின் மனப்பான்மையோடு... அதுவும் புடவையை, சினிமாவை ரசித்து, ஆராய்ந்து, லயித்துக் கொண்டிருக்கும் இன்றைய கல்லூரி மாணவிகளில்! என் மதிப்புகளில் அந்தக் கணத்திலேயே உயர்ந்து போனாள், ரஞ்சனி.

    எனக்கும் இப்படி வர்றது போரடிக்காது, ரஞ்சனி! என்றதும், அவள் கண்களை உயர்த்தி என்னைப் பார்த்தாள் - 'அட நீங்களும் என் மாதிரியா' என்பது போல. நான் புன்னகைத்து விட்டு, என் பேனாவைக் காட்ட அவளும் புரிந்து கொண்டாள்.

    நடக்க ஆரம்பித்தோம்.

    எங்களின் நட்பு, மிக மிக இனிமையாய், வித்தியாசமாய், ஒரு வகையில் மற்றவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத முதிர்ச்சியோடு... யாருமே சொன்னால் நம்பக் கூடாத வகையில் வளர்ந்து கொண்டிருந்தது.

    பெரும்பாலும், அநேகமாய் ஒவ்வொரு வாரமும், சனிக்கிழமை மாலைகளில், தவறாமல் இங்கேயே அக்ரி காலேஜ் வாசலில் தான் சந்திப்போம். ஒரு இதமான தோழமையோடு அவளுக்காகக் காத்திருப்பேன். பிறகு, அவள் வந்தவுடன், அங்கிருந்து நடக்க ஆரம்பித்து, அக்ரி காலேஜ் காம்பவுண்டில் இருக்கும், அந்த வழக்கமான கார்டனுக்குள் நுழைந்து ஒரு சுற்றுச் சுற்றி விட்டு, பின் 'லாலி' ரோடு வழியாக, அந்தச் சந்தடியில்லாத, இருபுறமும் மரங்கள் சூழ்ந்த சாலையில் நடந்து வந்து வெங்கிட்டபுரத்தை அடைவதற்குள் எப்படியும் ஏழு மணிக்கு மேலாகிவிடும்.

    பிறகு நான் சாயிபாபா காலனிக்கும், அவள் டி.வி.எஸ். நகருக்கும் பஸ் பிடித்துச் சென்று விடுவோம்.

    நாட்கள் செல்லச் செல்ல என் எண்ணங்களில், மதிப்பீடுகளில் ரஞ்சனி மிக மிக உயர்ந்து கொண்டே போனாள். மற்ற நாட்களில் அவளைப் பற்றி நினைத்துப் பார்க்கும் பொழுதெல்லாம், ‘என்ன மாதிரியான வினோதமான, அசாதாரணமான பெண் இவள்' என்று வியந்து போவேன். இயற்கையோடு இப்படி ஒன்றி, ரசித்துக் கொண்டு, சாதாரண உணர்வுகளின் பிடிகளில் சிக்காமலேயே... ரொம்பவும் விசித்திரமாய் எனக்குத் தெரிந்தாள் அவள்.

    ஒன்றிரண்டு முறை நான் அவளுடன் போவதைப் பார்த்து விட்டு, என் நண்பர்களில் சிலர் கிண்டல் செய்த பொழுதெல்லாம், அவர்களுக்கு எப்படி, எந்த விதத்தில் சொல்லி எங்கள் நட்பைப் புரிய வைப்பதென்று எனக்குப் புரியவில்லை. இது ஒரு மாறுபட்ட, ஆத்மார்த்தமான நட்பு என்று சொன்னாலும் அவர்களுக்குப் புரியுமென்று எனக்குத் தோன்றவில்லை.

    ரஞ்சனியைப் பற்றி நினைத்துக் கொண்டு, எங்கள் நட்பைப் பற்றி நினைத்துக் கொண்டு, பல மாலைப் பொழுதுகளில் பிரமித்துப் போயிருக்கிறேன். 'எப்படி இவளால் என்னுடன் இப்படி இயல்பாகப் பழகமுடிகிறது? ஒரு சாதாரணப் பெண்ணின் கூச்சம் இல்லாமல், பயம் இல்லாமல், தயக்கமில்லாமல், ஆரோக்கியமான மனநிலையோடு, ஏதோ நெருக்கமான 'தோழி' ஒருத்தியுடன் பழகுவதைப் போல் பழகிக் கொண்டு!’

    'இந்தச் சின்ன வயதில் எங்கிருந்து வந்தது இந்த மனப் பக்குவம்? நான் இவளைத் தொட்டு விடுவேன் என்றோ, இல்லை, தவறாக நடந்து கொண்டால் என்ன என்ற எண்ணங்களின் வாசனை துளியும் இல்லாமல் எப்படி இவ்வளவு நம்பிக்கையுடன் இருக்க முடிகிறது? இத்தனைக்கும், பல சமயங்களில், அவளுடன் தனியாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது, இன்னும் சில சமயங்களில் என் கை அவள் மேல் படும் பொழுது, புத்தகங்களைக் கொடுக்கும் பொழுது, என் விரல்கள் அவள் மேல் படும்பொழுது, எப்படி

    Enjoying the preview?
    Page 1 of 1