Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manathul Manitham
Manathul Manitham
Manathul Manitham
Ebook328 pages1 hour

Manathul Manitham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பொதுவாக மனிதம் என்றால் எதைப் பற்றிச் சொல்வது? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கும். உதாரணத்திற்கு ஒருவர் மற்றவர்களுக்கு உதவி செய்வதை மனிதம் என்று சொல்லக்கூடும். அல்லது தனக்கு உதவி கிடைத்ததையோ அல்லது தகுதி வாய்ந்த ஒருவருக்கு உதவி செய்யப்படுவதையோ நாம் மனிதம் என்று எடுத்துக் கொள்ளலாமா...

Languageதமிழ்
Release dateSep 28, 2021
ISBN6580132207074
Manathul Manitham

Read more from Karthika Rajkumar

Related to Manathul Manitham

Related ebooks

Reviews for Manathul Manitham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manathul Manitham - Karthika Rajkumar

    https://www.pustaka.co.in

    மனதுள் மனிதம்

    (கண் விழித்த தருணங்கள்)

    Manathul Manitham

    (Kann Vizhitha Tharunangal)

    Author:

    கார்த்திகா ராஜ்குமார்

    திருச்சி சையது

    Karthika Rajkumar
    For more books

    https://www.pustaka.co.in/home/author/karthika-rajkumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சமர்ப்பணம்

    ஏழ்மையில் இருந்த நூற்றுக்கணக்கான பிள்ளைகளின் கல்வி உதவிகளுக்கு வித்திட்ட சிமிர்னாவின் நிறுவனர் திருமதி. மார்க்கிரேட் ஸ்டெவ்வான்சன் அவர்களுக்கும்,

    நேற்றும் இன்றும் நாளையும் ஆதரவளிக்கும் எங்கள் ஆதரவாளர்களுக்கும்

    இந்த நூல் சமர்ப்பணம்.

    உள்ளே…

    அணிந்துரை: மாலன்

    கனிந்துரை: கார்த்திகா ராஜ்குமார்

    இனிந்துரை: பெ. கருணாகரன்

    1. சுபா

    2. செல்லம்மாள் நரசிம்மன்

    3. ரவிபிரகாஷ்

    4. மலிக்கா

    5. ஆசிப் மீரான்

    6. எழில்முதல்வன்

    7. இந்துமதி

    8. மு. முருகேஷ்

    9. கமலி ஆனந்த்

    10. ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

    11. ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்

    12. எம்.எம். சாகுல் ஹமீது

    13. பட்டுக்கோட்டை பிரபாகர்

    14. சரஸ்வதி காயத்ரி

    15. ரேவதி மணிபாலன்

    16. ஹமீதா பேகம்

    17. ஆர். மணிமாலா

    18. ராஜேஷ்குமார்

    19. ரேவதி சூர்யா

    20. ஜி.ஆர். சுரேந்தர்நாத்

    21. ஃபஜிலா ஆசாத்

    22. ஜெஸிலா பானு

    23. ஜெயஸ்ரீ ஆனந்த்

    24. ஜின்னாஹ் ஷரிபுத்தீன்

    25. ரஞ்சன்

    26. அமுதா பொற்கொடி

    27. நளினி சாஸ்திரி

    28. ஆழி. ஆர். சத்தியன்

    29. தென்றல்

    30. கே. சுந்தரம்

    31. பிரகந்த நாயகி

    32. சுமிதா ரமேஷ்

    33. செல்லம் ஜெரினா

    34. லேனா தமிழ்வாணன்

    35. ரோகிணி கிருஷ்ணா

    36. அமுதவன்

    37. செந்தில்குமார் அமிர்தலிங்கம்

    38. காரைக்குடி ஃபாத்திமா ஹமீத்

    39. சந்துரு மாணிக்கவாசகம்

    40. பூர்ணிமா ராம்

    41. விஜி முருகநாதன்

    42. செல்வன்ஜி

    43. கே. பாக்யராஜ்

    44. நாகா

    45. சக்தி. ஆர்.எஸ்.

    46. சதா செந்தில்

    47. மர்யம் சலாவுதீன்

    48. ராமமூர்த்தி பொன்னுசாமி

    49. ராசி. அழகப்பன்

    50. ராமகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்

    51. நளினி சந்திரசேகர்

    52. திலகா

    அணிந்துரை

    "என்ன கிருஷ்ணன் ராத்திரி தூங்கலையா?" கிருஷ்ணனின் கண்கள் தர்பூசணிக் கீற்றுப் போல் ரத்தச் சிவப்பில் இருந்தது. கிருஷ்ணன், கௌரவமாகச் சொன்னால், புன்னகைத்தார். உண்மையைச் சொல்வதானால், இளித்தார். அதற்கு ஆம் என்று அர்த்தம்.

    கிருஷ்ணன் எங்களிடம் வேலைக்கு வந்தபோது, அவருக்குத் திருமணமாகி இருந்தது. வேலை ஒன்றும் பெரிய கவர்னர் வேலை இல்லை. இரண்டு நாளைக்கொருமுறை ஜன்னல்களைத் துடைப்பது, அவ்வப்போது ஒட்டடை அடிப்பது, பழைய பேப்பர்களைக் கட்டி வைப்பது, கூரியர் அலுவலகம் போய் கடிதங்கள் அனுப்புவது, காய்கறி மளிகை வாங்கி வருவது இப்படி எடுபிடி வேலைகள். வீட்டைச் சுற்றியிருந்த உள்ளங்கை இடத்தில் நின்று கொண்டிருந்த செம்பருத்தி, இட்லிப்பூ, பப்பாளி, துளசி, கருவேப்பிலை இவற்றைப் பராமரிப்பதும் அவர்தான். அவ்வப்போது 'கைச் செலவுக்கு’ கேட்டு வாங்கிக் கொள்வது இல்லாமல் சம்பளம் பத்தாயிரம் ரூபாய்.

    இரண்டு குழந்தைகள். ஓர் ஆண், ஒரு பெண். இரண்டுபேரும் இன்று பட்டதாரிகள். அவர்கள் பட்ட வகுப்பில் இருக்கும் போது, பணத்தேவை அதிகரித்தது. அண்டை அசலில் இருக்கும் மேல்மாடி அல்லது நிலத்தடித் தண்ணீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்வது, கார்களைத் துடைப்பது என்று கூடுதலாகக் கொஞ்சம் பணம் ஈட்டினார்.

    திடீரென்று கிருஷ்ணன் இரவுநேரக் காவலாளி வேலைக்குப் போக ஆரம்பித்தார்.

    பகல் வேலையோடு கூடுதலாக எடுத்துக் கொண்ட வேலை. என்னப்பா திடீர்னு நைட் வாட்ச்மேன் வேலை? என்றேன். அவர் சொன்ன காரணம் என்னை திகைக்க வைத்தது.

    அது:

    ஆறு மாதப் பெண்குழந்தை ஒன்றைத் தத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்.

    ஏற்கெனவே இரண்டு குழந்தைகள். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் படித்து முடித்து விடுவார்கள். பின்னர் அவர்கள் சம்பாதிக்கவும் தொடங்கிவிடுவார்கள். குடும்ப வருமானம் பெருகும். இவர் இளைப்பாறக் கொஞ்சம் அவகாசம் கிடைக்கும் என்று நான் எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில், அவர் ஒரு குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதன்பொருட்டு கூடுதலாக உழைக்கவிருக்கிறார்.

    உனக்குத்தான் இரண்டு பிள்ளைங்க இருக்காங்களே?

    இருக்காங்க. ஆனா, இந்தக் குழந்தைக்கு அம்மா இல்லை சார்

    என்னாச்சு?.

    போன வாரம் இறந்துட்டாங்க

    சொந்தக்காரங்களா?

    இல்லை சார்

    நண்பர்களா?

    இல்லை சார்

    ஒங்க ஜாதியா?

    இல்லை சார். அவங்க எஸ்சி

    பின்னே?

    இரண்டு தெருக்கு அப்பால இருக்காங்க. போன வாரம் காய்ச்சலாக் கிடந்தாங்க. ஒத்தாசைக்கு ஆள் இல்லனு சொன்னாங்க. நாங்க எல்லாம் சேர்ந்து ஆஸ்பத்ரிக்கு இட்டுக்கினு போனோம். காப்பாத்த முடியலை. பாவமா இருந்திச்சு. சரினு நான் குழந்தையை வளர்க்கப் பொறுப்பெடுத்துக்கிட்டேன்

    என்னவோ செம்பருத்திக்கு இன்னிக்கு வேப்பம் புண்ணாக்கு வைத்தேன் என்பது போல அலட்டிக்கொள்ளாமல் சொன்னார்.

    பணம் வேணுமா?

    வேணாம் சார். இப்பத்தான் இரண்டு சம்பளம் வருதே!

    அது சரி. பெண் குழந்தைனா பதினெட்டு இருபது வருஷமாவது காப்பாத்தணுமேப்பா!

    "காப்பாத்துவேன் சார். உடம்புல தெம்பு இருக்கு சார் கடவுள் இருக்கார் சார்'

    கடவுள் இருக்கிறார். இது போன்ற மனிதர்கள் வடிவில்.

    உலகம் கிருஷ்ணன் போன்ற மனிதர்களால் ஆனது. சாதாரணமானவர்கள் என்று நாம் நினைக்கும் அசாதாரணமானவர்களால் ஆனது. இரக்கமுள்ளவர்கள், உழைப்பில் பெருமை கொள்ளும் தன்மானம் கொண்டவர்கள், அடுத்தவர் காசுக்கு ஆசைப்படாத நாணயஸ்தர்கள், ஜாதி மதங்களைத் தாண்டி மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும் ஞானவான்கள் இவர்களால் நிரம்பியது. அயோக்கியர்கள், காமுகர்கள், பொய்யர்கள், இச்சகம் பேசும் இழிபிறவிகள், திருடர்கள், ஏமாற்றுபவர்கள் இவர்களின் எண்ணிக்கை குறைவு. அது குறைவாக இருப்பதால்தான் நாம் தெருவில் நடமாடமுடிகிறது. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடிகிறது. வெளியூருக்கும் வெளிநாட்டுக்கும் போய் வரமுடிகிறது.

    இது நமக்கும் தெரியும். ஆனால், இன்று எங்கும் அவநம்பிக்கைப் பரவிக்கிடக்கிறது. மனிதரை மனிதர் சந்தேகிக்கப் பயிற்றுவிக்கப்படுகிறோம். ஜெயந்தஸ்ரீ எழுதியிருப்பதைப் போல யாராவது புன்னகைத்தால் கூட, 'அடுத்து உதவி கேட்டு வந்து நிற்பாரோ?' என்று சந்தேகிக்கிறோம். நூறு ரூபாய் நோட்டுக்குச் சில்லறை கேட்டால் கூட நம்மை ஏற இறங்கப் பார்க்கிறார்கள். புதிய நோட்டாக இருந்தால் உயர்த்தி வெளிச்சத்தில் வைத்துப் பார்க்கிறார்கள். பழைய நோட்டாக இருந்தால் புரட்டிப் புரட்டிப் பார்க்கிறார்கள். 98 மார்க் வாங்கிய பக்கத்து சீட் பையனை 96 மார்க் வாங்கிய பையன் ஜென்ம விரோதியாகப் பார்க்கப் பயிற்றுவிக்கப்பட்டு ஒரு தலைமுறை வளர்கிறது. இதில் ஊடகம், பள்ளிக்கூடம், பெற்றோர், அரசியல் என்று எல்லாவற்றிற்கும் பங்குண்டு.

    இந்தப் புகைத் திரையைப் போக்குவது எப்படி? புதிய தலைமுறை

    சகாக்களிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன் (கருணாகரனுக்கு நன்கு தெரியும்). தண்ணீர் சேர்ந்திருக்கும் பாலில் பாலின் அளவை அதிகரிக்க வேண்டுமானால், ஒன்று அதில் இன்னும் கொஞ்சம் நல்ல பாலைச் சேர்க்க வேண்டும். அல்லது அதை அடுப்பில் வைக்கவேண்டும். நாம் பால் சேர்ப்போம். கடுமை காட்டும் இயல்பு நமக்கில்லை. நம்பிக்கை ஊட்டும் திறம் நமக்குண்டு. 'பாசிட்டிவ் திங்கிங்கை வளர்ப்போம். சோர்வூட்டும் விஷயங்களைத் தவிர்ப்போம். அரசியல்வாதிகளைப் பற்றி எழுதமாட்டோம். வாழ்வில் போராடி ஜெயித்தவர்களைப் பற்றிப் பேசுவோம். சினிமாநட்சத்திரங்களை அல்ல, நம்மிடையே தரையில் வாழும் நட்சத்திரங்களைப் பற்றி பேசுவோம்

    அதைத்தான் இங்கு கார்த்திகாவும் சையதும் செய்திருக்கிறார்கள். மனிதர்களுக்குள் இருக்கும் மனிதர்களை மற்ற மனிதர்களுக்கு அடையாளம் காட்டுவதன் மூலம் மனிதர்களிடையே நம்பிக்கையை விதைக்க முற்பட்டிருக்கிறார்கள்.

    இது மகத்தான பணி. எப்படி என்றால் சுற்றிலும் அவநம்பிக்கை இருள் பரவிவரும் நேரத்தில் அவர்கள் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கிறார்கள். ஒரு மெழுகுவர்த்தியிலிருந்து இன்னும் பல மெழுகுவர்த்திகளை ஏற்ற முடியும் என்பதால் எந்த மெழுகுவர்த்தியும் சிறிய மெழுகுவர்த்தி அல்ல.

    இதில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் பற்றி விரிவாக கார்த்திகா பேசியிருக்கிறார். கருணாகரன் பேசியிருக்கிறார். அதனால் நான் தனியாகப் பாராட்ட வேண்டிய தேவை எழவில்லை.

    ஆனால் இதற்குப் பங்களித்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்கிறேன். பாலுக்கு மேலும் பால் சேர்த்தமைக்காக. இந்த நூலுக்குப் பங்களித்தமைக்காக மட்டுமல்ல, அதன் நோக்கத்தைப் பகிர்ந்து கொண்டமைக்காக.

    நூறு பூக்கள் மலரட்டும் என்றார் மாவோ, நூறு மெழுகுவர்த்திகள்

    ஏற்றப்படட்டும் என்று என் ஆசையைச் சொல்கிறேன். உலகம் ஒளி பெறட்டும்.

    'பாரதி'

    சென்னை-600 041

    அன்புடன்

    மாலன்

    maalan@gmail.com

    கனிந்துரை

    உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்த ‘மனதுள் மனிதம்!’ நூல் முகிழ்த்த கதை அல்லது உருவான கதையை சொல்ல வேண்டுமென்றால், அது ஒரு சுவாரஸ்யமான சிறுகதையின் ஆரம்பம் மாதிரி இருக்கும்.

    சிமிர்னா தொண்டு நிறுவனத்தில் படிக்கின்ற ஏழைக் குழந்தைகளுக்காக, துபாயில் பணிபுரிகின்ற என் நண்பர் திருச்சி சையது, பலவகையில் உதவி செய்து கொண்டிருக்கையில்… ஒரு தடவை என்னிடம் தனது ஒரு புத்தகத்தின் முழு விற்பனைத் தொகையை அப்படியே சிமிர்னா தொண்டு நிறுவன குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காகக் கொடுக்க ஆசைப்படுவதாகச் சொன்னார்.

    அந்தப் புத்தகத்தை எப்படி உருவாக்கலாம் என்று பலவிதமான சிந்தனைகள், விவாதங்களுக்குப் பின்பு கடைசியாக உருவம் கிடைத்தது. அது என்னவென்றால், சிமிர்னாவுக்காக வெளியிடப்படுகின்ற புத்தகம் ஏன் மனித அன்பினை, மனித மாண்பினை மென்மையாக வெளிப்படுத்தக்கூடிய புத்தகமாக இருக்கக்கூடாது?

    அப்படி அமைகிற புத்தகம் எந்த அடிப்படையில அமைய வேண்டும் என்று நாங்கள் இருவருமே கலந்து ஆலோசித்தோம்.

    Chicken Soup for the Soul என்ற ஓர் அழகான ஆங்கிலப் புத்தகத்தை நீங்கள் படித்திருக்கலாம். அதாவது, ஒரு குறிப்பிட்ட தலைப்பில் 30 எழுத்தாளர்களின் வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டிருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் சுற்றி அது தொடர்பான எழுத்தாளர்கள் அது தொடர்பான அனுபவத்தில் சொன்னவைகள் தொகுக்கப்பட்ட ஒரு வெற்றிகரமான சீரியல் என்று சொல்ல முடியும். அது சுயமுன்னேற்றமும் தூண்டுதலும் தரக்கூடிய பயனுள்ள புத்தகம்.

    நாமும் நமக்கு தெரிந்த தமிழ் எழுத்தாளர்களிடம் அது மாதிரி கட்டுரைகள் வாங்கிப் புத்தகமாக்கலாம். இது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்! என்று சையதிடம் நான் சொன்ன யோசனை அவருக்கும் பிடித்துப்போனது!

    அந்த எழுத்தாளர்கள் சொல்லக்கூடிய கருத்துக்கள் அவர்கள் வாழ்க்கையின் அனுபவங்களாக இருக்கலாம். அல்லது அவர்களது எண்ணங்களாக இருக்கலாம். அந்த எண்ணங்களில் எது ஆழமாக சொல்லப்பட வேண்டுமென்றால் மனித அன்பு, மனித நேயம், மனிதம் என்று தீர்மானித்தோம். இப்படித்தான் மனிதம் மலர்ந்தது.

    பொதுவாக மனிதம் என்றால் எதைப் பற்றிச் சொல்வது? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கும். உதாரணத்திற்கு ஒருவர் மற்றவர்களுக்கு உதவி செய்வதை மனிதம் என்று சொல்லக்கூடும். அல்லது தனக்கு உதவி கிடைத்ததையோ அல்லது தகுதி வாய்ந்த ஒருவருக்கு உதவி செய்யப்படுவதையோ நாம் மனிதம் என்று எடுத்துக் கொள்ளலாமா என்று அடுத்த கேள்வி வந்தபோது எங்களுக்கு ஒரு யோசனை வந்தது.

    அப்போது அழகான குறும்படம் ஒன்று வந்திருந்தது:

    அந்தக் குறும்படத்தில் வசதியான ஒரு வாலிபன் ஓர் ஓட்டலுக்குப் போவார். அங்கே சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, ஜன்னல் வழியாக தெருவில் பசியால் வாடுகின்ற ஒரு அம்மாவையும், அவரது 2 குழந்தைகளையும் பார்ப்பார். உடனே அவருக்கு மனம் இரங்கும். அவர்களை உள்ளே கூட்டிவந்து, உங்களுக்கு என்ன பிடிக்கும்? என்று கேட்டு, அவர்களுக்குப் பிடித்தமான உணவு வகைகளை வாங்கிக் கொடுப்பார். அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து மனத்திருப்தி அடைவார். பின்னர் அதற்குரிய பணம் கொடுப்பதற்காக கேஷ் கவுண்டருக்குப் போகும்போது, ஓட்டல் முதலாளி ரசீதில், மனிதத்திற்கு விலை நிர்ணயிக்க எங்களிடம் இயந்திரம் இல்லை என்று எழுதித் தருவார். அந்த வாலிபனுக்கு ஆச்சர்யமாய் இருக்கும். ஓட்டல் முதலாளியைப் பார்த்து அந்த வாலிபன் நெகிழ்ச்சியோடு புன்னகைப்பார். அந்த முதலாளியும் வாலிபனை உயர்வோடு பார்த்துச் சிரிப்பார்!

    இந்தக் குறும்படத்தை நாங்கள் இருவரும் பார்த்தவுடன் அந்த ஓட்டல் முதலாளியின் பார்வையில் சம்பவங்கள் தொகுக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று தீர்மானித்தோம். அந்தக் குறும்படத்தையே இந்த நூலுக்கு Concept ஆக வைத்தோம்.

    மேலும் அனுபவங்கள் உண்மையானதாக, உள்ளத்தைத் தொடுவதாக இருக்க வேண்டும். 2 அல்லது 3 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். அந்த அனுபவங்களில் எழுதுபவர் தன்னை பெருமைப்படுத்தாதபடி இருந்தால் நன்றாக இருக்கும். பணம், பணம் என்று ஓடித் திரிகின்ற இந்த இயந்திரமயமான வாழ்க்கையில் நாம் எதிர்பாராதவிதமாக சில அழகான நிகழ்வுகளைப் பார்த்து நெகிழ்ந்து போயிருப்போம். அந்த தருணத்தில்தான் நமக்குத் தெரியும், ‘நாம பெரிதாக நினைக்கின்ற காரியம் எல்லாம் முக்கியம் இல்லை. இந்த அன்பு, இந்த மனிதாபிமானம் இவைதான் நமது மனதுக்கு நிறைவளிப்பவை. அவற்றை நாம் எப்போதும் நினைத்துக்கொண்டே இருப்போம்.

    இந்தக் கருத்தை மையமாய் வைத்து நானும், திருச்சி சையதும் எங்களுக்குத் தெரிந்த எழுத்தாளர்களுக்குக் கடிதம் எழுதி, சம்பவங்களை தொகுக்க ஆரம்பித்தோம். இது ஏறக்குறைய மூன்று வருடங்களாக நடந்த காரியம்.

    இந்தத் தொகுப்பை, ஒரு தாய் தன் குழந்தையை சுமந்ததைப்போல சுமந்தவர், நிச்சயமாக அது சையதுதான் என்று நான் சொல்வேன். எப்படி ஒரு தாயின் வயிற்றில் குழந்தை வளர்கிறபோது, அதன் வளர்ச்சியைப் பார்த்துப் பரவசப்பட்டு, மிகமிக அதிகமாக ரசித்து, அதன் சின்னச்சின்ன மாற்றங்களைக்கூட மிக அதிகமாக கவனித்து, சிலநேரங்களில் கவலைப்பட்டு, அதை ஒரு கனவுபோல பாவித்து, மகப்பேறு காலத்தை நகர்த்திய ஓர் இளம்தாயைப்போல அவர்தான் ஒவ்வொரு கட்டுரைகளையும் ரசிப்பார்! இந்த தொகுப்பை ஒரு கனவுத்தொகுப்பாக, இலட்சியத் தொகுப்பாகவே நினைத்துக் கொண்டிருந்தார்.

    வந்த எல்லா கட்டுரைகளுமே அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றியது என்று சொல்லலாம். ஒவ்வொரு கட்டுரையையும் முதல் ரசிகனாய் ஆசை ஆசையாய் படித்துவிட்டு, அதைப்பற்றி நெகிழ்ந்து, வியந்து ஒரு குழந்தையைப்போல் சையது சொல்லக்கூடிய விமர்சனங்கள் என்னை ஆச்சர்யப்பட வைக்கும்!

    இந்த தொகுப்பில 52 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றைப் படிக்கும்போது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ணங்கள் தோன்றக்கூடும். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், எல்லா சம்பவங்களிலும் முகம் தெரியாத ஏழை, எளியவர்கள்தான் நாயகர்களாக இருக்கிறார்கள்! இது ஆச்சர்யமான விஷயம்!

    சரஸ்வதி காயத்ரி எழுதிய கட்டுரையில் ஒரு மாணவன், ஜெஸிலா எழுதிய கட்டுரையில் ஒரு டிரைவர், ஹமீதா எழுதிய கட்டுரையில் வயது முதிர்ந்த பால்காரர்... இப்படி யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் சர்ப்ரைஸாக ஒருவர் இருப்பார்! அல்லது நெகிழவைக்கும் ஒரு சம்பவம் இருக்கும்!

    இந்தச் சம்பவங்கள் சொல்லப்பட்டதின் முழுமையான காரணத்தைப் பார்த்தீர்கள் என்றால் நமக்கு இன்னும் வாழ்க்கையில் மனிதத்தின் மேலேயும், மனிதாபிமானத்தின் மேலேயும் இருக்கின்ற ஒரு நம்பிக்கை!

    அவசரமயமாக வியாபாரமயமாக போய்கொண்டிருக்கின்ற உலகத்தில் இப்படியான சம்பவங்கள்… நம் மனதுக்கு ஒரு நம்பிக்கையின் ஊற்றாக, நம்பிக்கையின் கீற்றாக, நம்பிக்கையின் நாற்றாக இருக்கும் என்பது யதார்த்தமான உண்மை.

    அந்த வகையில் இந்தத் தொகுப்பைப் படித்து முடிக்கிற எல்லோருக்கும், சோர்ந்துபோய், களைத்துப்போய் வருகின்ற மாலை நேரத்தில் ஒரு தென்றல் காற்று வந்து தழுவிச் செல்லும் சுகமான அனுபவமாக இருக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1