Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Dinamani Pathirigai Kathaiyum En Kathaiyum
Dinamani Pathirigai Kathaiyum En Kathaiyum
Dinamani Pathirigai Kathaiyum En Kathaiyum
Ebook156 pages1 hour

Dinamani Pathirigai Kathaiyum En Kathaiyum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தினமணிப் பத்திரிக்கையின் மதுரைப் பதிப்பின் பொறுப்பு ஆசிரியராக விளங்கிய எனது தந்தை வெ. சந்தானத்துக்கும், பல சாமியார்களுக்கு தன் கையால் உணவு படைத்து ஆசிகள் பெற்ற தாயார் திருமதி. ராஜலட்சுமி அம்மையாருக்கும் நன்றி தெரிவிக்க அவர்களைப் பற்றியும், அவர்கள் மூலம் நான் பெற்ற அறிவையும் எழுத முயற்சித்துள்ளேன்.

இது தவிர 16 ஆண்டுக்காலம் தினமணியில் சீனியர் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் மதிப்புமிக்க தமிழ் பத்திரிக்கையாளர் ஏ.என். சிவராமன் மூலம் கற்றறிந்த விஷயங்களையும் எழுதியுள்ளேன். இவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டு விஷயங்களாவது பிறருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எல்லோரும் எல்லாவாற்றையும் படிக்காவிட்டாலும் பிடித்த தலைப்புகளைப் படிக்கலாம். ஏனெனில் இது தொடர்கதை அல்ல. எங்கும் துவங்கி எங்கும் முடிக்கலாம்.

Languageதமிழ்
Release dateMar 11, 2023
ISBN6580153509551
Dinamani Pathirigai Kathaiyum En Kathaiyum

Read more from London Swaminathan

Related to Dinamani Pathirigai Kathaiyum En Kathaiyum

Related ebooks

Reviews for Dinamani Pathirigai Kathaiyum En Kathaiyum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Dinamani Pathirigai Kathaiyum En Kathaiyum - London Swaminathan

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    தினமணி பத்திரிகை கதையும் என் கதையும்

    Dinamani Pathirigai Kathaiyum En Kathaiyum

    Author:

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. என் அப்பாவிடம் கற்றது!

    2. சத்ய சாய் பாபாவின் அழைப்பு

    3. என் அம்மாவிடம் கற்றது!

    4. கோயங்கா சாம்ராஜ்ய ரகசியங்கள்!

    5. தினமணி ரகசியம்: திருடனுக்கு தேள் கொட்டிய கதை!

    6. தினமணியில் லவ் லெட்டெர் நோட்டுப் புத்தகம்

    7. தினமணியும் முரசொலியும்!

    8. அரையர் சேவை - ஒரு சுவையான சம்பவம்

    9. உடையாளூர் அடித்த ஜோக் & சொல்லக்கூடாத 5 விஷயங்கள்!

    10. மார்கழித் திங்கள், மடி நிறையப் பொங்கல்!

    11. பாரதீய ஜனதா இல. கணேசன் ‘ஜோக்’குகள்

    12. திரைப்பட டைரக்டர் அம்ஷன்குமாருடன் சந்திப்பு

    13. மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி

    14. யாரிடமும் கற்கலாம்; எப்போதும் கற்கலாம்!!

    15. புனிதர் அண்ணாஜி

    16. காந்தி வந்தாராம், பூந்தி தந்தாராம், சாந்தி தின்னாளாம்…

    17. லண்டனில் தமிழ் வளர்ந்த கதை!

    18. லண்டனில் நாடி ஜோதிடம்

    19. விநாயக கவசத்தின் அபூர்வ சக்தி!

    20. நான் ஏன் வடலூருக்குச் சென்றேன்?

    21. லண்டனில் திருவள்ளுவர் சிலை நிறுவிய வரலாறு

    22. இந்தியத் தமிழும் இலங்கைத் தமிழும்

    23. நான் கண்ட சொர்க்கம்: BBC உணவு விடுதியில் வெஜிட்டேரியன் உணவு

    24. புது வீட்டுக்குக் குடி போகக் கூடாத மாதங்கள்

    25. வெஜிட்டேரியன் லண்டன் சாமிநாதன் பட்ட பாடு

    26. நானும் பி.பி.சி. தமிழோசையும்: பிக்மாலியன் நாடகம்

    27. ஜனவரி 2023 வரை லண்டன் சுவாமிநாதன் எழுதிய 94 நூல்கள்

    28. பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை!

    முன்னுரை

    மஹாத்மா காந்தி போன்றோர் சுயசரிதையை (THE STORY OF MY EXPERIMENT WITH TRUTH) எழுதினார்கள். பெரியோர் சென்ற வழியை உலகம் பின்பற்றும் என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவும் சொல்கிறார். அப்பேற்பட்டவர்கள் இமயமலை போன்று புகழுடையோர். பரமஹம்ச யோகானந்தா போன்ற யோகிகளும் சுயசரிதையை (AN AUTOBIOGRAPHY OF A YOGI) எழுதியுள்ளனர். அவற்றின் மூலம் பலரும் ஆன்மீக எழுச்சி பெறுகின்றனர். உ.வே. சாமிநாத அய்யர் போன்றோர் எழுதிய ‘என் சுயசரிதை’ மூலம் பலரும் தமிழ் ஆர்வம் பெறுவார்கள். இப்படிப்பட்ட அறிஞர்கள் எழுதியது போல நானும் செய்ய முயற்சிப்பது ராமாயணம் எழுதுவதற்கு முன்னர் கம்பன் சொன்னதை நினைவுபடுத்துகிறது. ஒரு பூனை பாற்கடலை நக்கிக்குடிப்பது போல நான் ராமகாதையை எழுத முயற்சிக்கிறேன் என்றான் கம்பன். காளிதாசனோ இதைவிட அழகான இரண்டு உவமைகளை சொன்னான். ஒரு மனிதன் பெரிய சமுத்திரத்தை சிறு படகு மூலம் கடக்க முயற்சி செய்வது போலவும் ஒரு குள்ளன், உயர்ந்த மரத்தின் மேலேயுள்ள பழத்தைப் பறிக்க எட்டியெட்டிக் குதித்து ஏமாந்து நகைப்பை உண்டாக்குவது போலவும் நானும் ரகுவம்ச சரிதத்தை எழுத முயற்சிக்கிறேன் என்று சொல்லி துவங்கினான். அவர்கள் இருவரும் மாபெரும் வெற்றி அடைந்ததற்குக் காரணம் அவர்கள் எழுதியது மகத்தான ரகுவம்ச கதைகள். நானோ அது போல கவியும் புனையவில்லை. ராமன் போன்ற புகழுடைய புண்ணியர் பற்றியும் எழுதவில்லை.

    ஆயினும் இதை எழுத இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று தினமணிப் பத்திரிக்கையின் மதுரைப் பதிப்பின் பொறுப்பு ஆசிரியராக விளங்கிய எனது தந்தை வெ. சந்தானத்துக்கும், பல சாமியார்களுக்கு தன் கையால் உணவு படைத்து ஆசிகள் பெற்ற தாயார் திருமதி ராஜலட்சுமி அம்மையாருக்கும் நன்றி தெரிவிக்க அவர்களைப் பற்றியும், அவர்கள் மூலம் நான் பெற்ற அறிவையும் எழுத முயற்சித்துள்ளேன்.

    இது தவிர 16 ஆண்டுக்காலம் தினமணியில் சீனியர் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் மதிப்புமிக்க தமிழ் பத்திரிக்கையாளர் ஏ.என். சிவராமன் மூலம் கற்றறிந்த விஷயங்களையும் எழுதியுள்ளேன். இவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டு விஷயங்களாவது பிறருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எல்லோரும் எல்லாவற்றையும் படிக்காவிட்டாலும் பிடித்த தலைப்புகளைப் படிக்கலாம். ஏனெனில் இது தொடர்கதை அல்ல. எங்கும் துவங்கி எங்கும் முடிக்கலாம்.

    என்னுடைய 90 புஸ்தகங்களுக்கும் மேல், இன்னும் எழுதுவதை எல்லாம் வெளியிட்டுவரும், Pustaka.co.in புஸ்தக.கோ. அமைப்புக்கும் அதன் உரிமையாளர் ராஜேஷ் தேவதாசுக்கும் நன்றி கூறி முடிக்கிறேன்.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    பிப்ரவரி 2023

    1. என் அப்பாவிடம் கற்றது!

    கட்டுரை எண்: 1274; தேதி: 8 செப்டம்பர் 2014

    மதுரையில் பிரம்ம ஞான சபை என்ற கட்டிடம் உள்ளது. அங்கே அரிய புத்தகங்களைக் கொண்ட லைப்ரரி (Theosophical Society Library) உண்டு. அதைக் கண்ணும் கருத்துமாகக் காத்துவந்தார் கல்யாணம் என்பவர். எவ்வளவு கண்ணும் கருத்தும் என்றால், யாரையும் புத்தகத்தைத் தொடவே அனுமதிக்க மாட்டார்!!! ஆனல் என் அப்பா வேங்கடராமன் சந்தானம் (V. Santanam) மட்டும் விதிவிலக்கு!!

    நாங்கள் போய் மாமா, இந்தப் புத்தகம் இருக்கிறதா? என்றால் இருக்கிறது ஆனால் வெளியே கொண்டு போகக் கூடாது என்பார். அத்தோடு நில்லாமல் பார், உங்கள் அப்பா படிக்காத புத்தகம் இந்த லைப்ரரியில் எதுவுமே இல்லை என்று என் அப்பா அந்தப் புத்தகங்களில் போட்ட Pink colour proof reading pencil பிங்க் கலர் பென்சில் மார்க்குகளைக் காண்பிப்பார். இது பத்திரிகையாளர்கள் ப்ரூப் திருத்த பயன்படுத்தும் பென்சில்! மற்றவர்களைப் புத்தகத்தையே தொடவிட மாட்டாதவர் என் தந்தை கலர் பென்சில் கோடு போட்டாலும் பொறுத்துக் கொண்டது எனக்கும் என் சகோதரர்களுக்கும் வியப்பை உண்டாக்கும். எங்கள் தந்தையிடம் சொல்லிச் சொல்லி சிரிப்போம். அவரோ தன்னைப் பற்றி எந்தக் காலத்திலும் ஒன்றுமே சொன்னதில்லை. வெற்றிலையை வாயில் போட்டுக் கொண்டு ஒரு புன் சிரிப்பு சிரிப்பார்.

    பிரம்ம ஞான சபையில் அவருக்கு அவ்வளவு உரிமை கொடுத்த காரணம் எங்களுக்குப் புரியும். என் தந்தை சம்பந்தப்படாத ஆன்மீக விஷயம் மதுரையில் எதுவுமே இல்லை! தமிழ் நாட்டின் ஆன்மீகத் தலைநகரம் மதுரை என்பதால் எல்லா மதத் தலைவர்களும் மதுரைக்கு வந்துதான் ஆக வேண்டும். அவர்களுக்கு அந்தக் காலத்தில் ஆன்மீகச் செய்தி வெளியிட்டு ஆதரவு கொடுத்தவர் என் தந்தை ஒருவரே என்றால் அது மிகை இல்லை.

    ஆங்கிலத்தில் வெளியாகும் இந்து நாளேடு மட்டும் கடைசி பக்கத்தில் 4 அங்குலத்துக்கு ஆன்மீகச் செய்தி வெளியிட்ட காலம் அது. மற்ற பத்திரிக்கைகள் எல்லாம் ஆன்மிகச் செய்திகளைக் கிண்டல் செய்த காலம் அது. மதுரை தினமணி, கொள்ளிடம் ஆற்றின் கரை வரை எட்டு ஜில்லாக்களை கவர் செய்ததால் தமிழ் நாட்டின் முக்கால் வாசி பகுதிக்கு எட்டிவிடும். அந்தக் காலத்தில் சென்னை தினமணி ஆர்க்காடு செங்கல்பட்டு, சென்னை, புதுவை மட்டுமே சென்றது.

    என் தந்தை (V. Santanam, News Editor, Dinamani, Madurai) புத்தகப் பிரியர். இசைப் பிரியர். மதுரை எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியையும் வகித்தார்... சத்குரு சங்கீத சமாஜம் (பிற்காலத்தில் இசைக் கல்லூரியாக மாறியது), ராகப்ரியா போன்ற பல அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளையும் வகித்தார்.

    வீட்டில் மூன்று நான்கு காத்ரேஜ் (ஸ்டீல்) பீரோக்களை வாங்கிவைத்து அதில் 6000 புத்தகங்களைச் சேர்த்துவைத்தார். அதுதான் அவர்கள், எங்களுக்கு விட்டுச் சென்ற சொத்து. பணமோ, வீடோ, வாசலோ, நிலபுலன்களோ வாங்கவில்லை.

    வீட்டிற்கு வருபவர்கள் முதல் அறையிலேயே காட்ரேஜ் (Godrej) பீரோக்கள் இருப்பதைக் கண்டு வியப்பர். அதை என் தந்தை திறக்கும் போது ‘கொல்’ என்று சிரித்துவிடுவர்.

    என்ன சார் இது! புத்தகங்களை வைக்கவா இப்படி மூன்று நான்கு காத்ரேஜ் பீரோக்கள்? என்பார்கள். வழக்கம்போல் அவர் பேசமாட்டார், வெறும் புன்சிரிப்புதான் பதில்.

    தினமணிப் பத்திரிக்கையில் புத்தக மதிப்புரை (Book Review) எழுதுவதற்காக பலர் எழுதிய புத்தகங்களைக் கொண்டுவருவர். எல்லா பத்திரிக்கைகளிலும் ஒரு விதி உண்டு. அதாவது இரண்டு புத்தகங்களை (Two Copies) மதிப்புரைக்கு அனுப்ப வேண்டும். ஒன்று அந்த புத்தக மதிப்புரை எழுதுபவர் வைத்துக் கொள்வார். மற்றொன்று அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். இதை அறிந்தவர்கள் முதலில் இரண்டு பிரதிகளைக் கொடுத்துவிட்டு சார், இது உங்களுக்கு என்று வேறு ஒரு பிரதி கொடுப்பர். உடனே என் தந்தை அதற்குப் பணம் கொடுப்பார். அவர்கள் பதறிப்போய் "சார், உங்களிடம் விற்க

    Enjoying the preview?
    Page 1 of 1