Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pookkalai Parippathu Varuntha Thakkathu
Pookkalai Parippathu Varuntha Thakkathu
Pookkalai Parippathu Varuntha Thakkathu
Ebook183 pages1 hour

Pookkalai Parippathu Varuntha Thakkathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இவருடைய கதைகளை ஒரு மலைப் பிரதேசத்து தாவரத்தையும், நெடிய மரத்தையும், பனிப்புகையையும், சமவெளிகளில் அறிய இயலாத குளுமையுடன் மலர்ந்திருக்கிற புதிய வண்ணங்களுடைய பூக்களையும் அணுகுவது போன்றே அணுக வேண்டும். அதுவும் தாவர இயலாளனைப் போல அல்ல. ஒரு உல்லாசப் பயணம் போகிற, ஒவ்வொரு ஸ்டேஷனையும் டயரியில் குறித்துக் கொள்கிற, வியப்புக்குரிய புதிய புதிய எல்லைகளுள் பிரவேசித்து அதிலே பிரமிப்புண்டு கரைந்து, கரையற்ற மகிழ்வின் பிரவாகத்தில் இழுத்துச் செல்லப்படுகிற பையனின் மனதுடனேயே அணுக வேண்டும்.

கார்த்திகா அவர் பிறந்து வளர்ந்த மலையகத்தினூடே நடந்து சென்று கொண்டே இருக்கிறார். அப்படிச் செல்கிற போக்கில் வந்தடைகிற அனுபவங்களை, 'கல்யாணச் சந்தடியில் பாலுக்கு அலையும் பூனைக் குட்டியென' அடையாளங் கண்டு பரிவுடன் எடுத்து அதன் புசுபுசுத்த ரோமங்களின் மேல் தட்டிக் கொடுக்கிறார். இவர் சாட்சியாக நிற்கும் எந்த அனுபவங்களையும் கேள்விகளுக்கோ விசாரிப்புக்கோ உட்படுத்தாமல் அவரின் இடது வலது பக்கங்களில் நீரோடையென விரைந்தோட விட்டுக் கொண்டு நிற்கிறார். அவருடைய வசிப்பிடமோ மலை. மலையிலிருந்து விளையாட்டாகச் சரிவதும் ஏறுவதும் ஆன எழுத்துக்கள் வசீகரமாக இருக்கின்றன. யாரையும் சந்தேகிக்காத, உற்றுப் பார்த்து தன்னை ஜாக்கிரதைப்படுத்திக் கொள்ளாத, சதா குதூகலித்துக் கொண்டிருக்கிற, இடையில் குறுக்கே கையைக் காட்டி நிறுத்தி, 'இங்கே வா. உன் பெயர் என்ன' என்று விளையாட்டாக மிரட்டினால் கண்கலங்கி விடுகிற பூங்காக் குழந்தைகள் போன்றவை இவருடைய கதைகள்.

அனுபவங்களின் லகரி அல்லது உசுப்பல்கள் அல்லது தொந்தரவுகள் நம்மை ஒரு யாத்திரைக்கு தயார்ப்படுத்துகின்றன. சரி என நாம் புறப்பட்டு எழுத்தில் நாலு எட்டு எடுத்து வைப்பதற்குள் அனுபவம் தூண்டின யாத்திரையும் நாம் சென்று கொண்டிருக்கிற திசையும் ஒன்றில்லையோ என்ற திகைப்பு வந்து விடுகிறது. இது வெவ்வேறான விகிதங்களில் எல்லாக் கலைஞனுக்கும் நிகழ்கிறது. நிர்ணயித்த இடமும், சென்றடைந்த இடமும் ஒன்றாக வாய்க்கப் பெறுகிற சாத்தியம் மிகச் சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. எனினும் ஒவ்வொருவரும் தத்தம் வரிகளின் மேல் துவங்கும் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறோம். கார்த்திகாவும் அப்படிப் போகிறார். அவருடைய பாத்திரங்கள் போகின்றன.

இந்த வாழ்க்கையை பூப்போலவும் அன்புமயமாகவும், தயையும் பரிவும் நிரம்பிய வெவ்வேறு அடையாளங்களுடன் காட்டுகிற பொழுது அவரை கேள்வி கேட்கத் தோன்றவில்லை. இந்த வாழ்வின் மீது, இப்போது அவர் கொண்டிருக்கிற நிலைகளுக்கு எதிரான கேள்விகள் அவருக்கே எழும் போது, மனம் திறந்து விசாரித்துச் சரியான பதில்களை ஒப்புக் கொள்வதில் அவர் தயக்கம் காட்டமாட்டார் என்கிற அளவுக்கு மிகுந்த ஒப்புதலுடனும், திறந்த மனத்துடனும் இருப்பதை இந்தக் கதைகளில் பெரும்பான்மை உணர்த்துகின்றன. முக்கியமாக-'பூக்களைப் பறிப்பது வருந்தத்தக்கது' வாழ்க்கை நம்மை ஒரு சமயம் எவாஞ்சலின் டீச்சராகவும், பிறிதொரு சமயம் எபியாகவும் வைத்து வரும் நிலைத்த சத்தியமாக இருக்கிறது. இந்த சத்தியத்தின் திடத்தினையும், மென்மையினையும் அற்புதமாக ஒரு அமைதியுடன் சொல்லி இருக்கிறார். எழுத்தில் இந்த அமைதி கூடுகிற தருணம் அவருக்கு இதில் வாய்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 'இடைவெளி' 'மனது', 'நனையத் தோன்றுகிறவர்கள்' - ஆகிய எழுத்துக்கள் அது போன்ற விசாரிப்பின் அடையாளங்களுடன் இருக்கின்றன.

இந்த அடையாளங்கள் பெருகித் தீவிரமடையும் போது உணர்வு மயமான அடிப்படைப் பரவசங்கள் பின் வாங்கி சப்தம் அனைத்தும் அடங்கிய நிசியில் புதரில் மறைவாய்ப் பூத்த பூப்போல வாசம் எழுப்பிக் காலத்தின் நாசியைக் கவ்வுகிற மலர்ச்சி நிரம்பிய வரிகள் விகசிக்கும். அதெல்லாம் ஒருபுறம் இருக்க...

சகல திசைகளிலிருந்தும் எறியப்படுகிற முட்பந்துகளால் எற்றுண்டு நசுங்குகிறதாகவும் ஒரு காலை உருவும் யத்தனிப்பில் இன்னொரு கால் முன்னைவிடவும் மீள முடியாதபடி சிக்கிக் கொள்கிற ராட்சசச் சிலந்தி வலையாகவும், தத்துவங்களின் சூறைக் காற்றில் சூட்சுமக் கயிறுகள் அறுந்து எங்கோ போய் விழுந்து கிடக்கிற சீரழிவுகளின் பள்ளத்தாக்காகவும் எல்லாம் இந்த வாழ்வு மிகச் சிக்கலான அடைமொழிகளுடன் வர்ணிக்கப்படும்போது, மிகவும் எளிதாகப் பூக்களின் அண்மைக்கு இப்படிச் சில சிறுகதைகள் அழைப்பது, ஒப்புக் கொள்ளக்கூடிய இன்னொரு பக்க நிஜமாக இருக்கிறது. அப்படி அழைக்கிறவராக ராஜ்குமார் இருக்கிறார்.

அவருக்கு வாழ்த்துக்கள்

- வண்ணதாசன்

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580132206103
Pookkalai Parippathu Varuntha Thakkathu

Read more from Karthika Rajkumar

Related to Pookkalai Parippathu Varuntha Thakkathu

Related ebooks

Reviews for Pookkalai Parippathu Varuntha Thakkathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pookkalai Parippathu Varuntha Thakkathu - Karthika Rajkumar

    http://www.pustaka.co.in

    பூக்களைப் பறிப்பது வருந்தத்தக்கது

    Pookkalai Parippathu Varuntha Thakkathu

    Author:

    கார்த்திகா ராஜ்குமார்

    Karthika Rajkumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/karthika-rajkumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    மனது

    அன்புமிக்க அதிகாரிக்கு...

    பூக்களைப் பறிப்பது வருந்தத்தக்கது

    ஆறுதல்

    நாளை பொழுது விடியும்

    மறுபடியும் ஒரு மறுபடியும்

    புற்களின் நடுவே பூக்கள்

    இடைவெளி

    ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!

    பிறகு வெளிச்சம் வரும்

    காதல்

    இரண்டாவது ஸ்திதி

    சிதறல்

    நனையத் தோன்றுகிறவர்கள்

    முன்னுரை

    கார்த்திகா ராஜ்குமாரும் அவருடைய கதைகளும் வேறு வேறல்ல. அவர் எப்படியோ அப்படியே அவருடைய கதைகளும் என்பது ஒரு பெரிய கண்டு பிடிப்பும் அல்ல.

    இவருடைய கதைகளை ஒரு மலைப் பிரதேசத்து தாவரத்தையும், நெடிய மரத்தையும், பனிப்புகையையும், சமவெளிகளில் அறிய இயலாத குளுமையுடன் மலர்ந்திருக்கிற புதிய வண்ணங்களுடைய பூக்களையும் அணுகுவது போன்றே அணுக வேண்டும். அதுவும் தாவர இயலாளனைப் போல அல்ல. ஒரு உல்லாசப் பயணம் போகிற, ஒவ்வொரு ஸ்டேஷனையும் டயரியில் குறித்துக் கொள்கிற, வியப்புக்குரிய புதிய புதிய எல்லைகளுள் பிரவேசித்து அதிலே பிரமிப்புண்டு கரைந்து, கரையற்ற மகிழ்வின் பிரவாகத்தில் இழுத்துச் செல்லப்படுகிற பையனின் மனதுடனேயே அணுக வேண்டும்.

    கார்த்திகா அவர் பிறந்து வளர்ந்த மலையகத்தினூடே நடந்து சென்று கொண்டே இருக்கிறார். அப்படிச் செல்கிற போக்கில் வந்தடைகிற அனுபவங்களை, 'கல்யாணச் சந்தடியில் பாலுக்கு அலையும் பூனைக் குட்டியென' அடையாளங் கண்டு பரிவுடன் எடுத்து அதன் புசுபுசுத்த ரோமங்களின் மேல் தட்டிக் கொடுக்கிறார். இவர் சாட்சியாக நிற்கும் எந்த அனுபவங்களையும் கேள்விகளுக்கோ விசாரிப்புக்கோ உட்படுத்தாமல் அவரின் இடது வலது பக்கங்களில் நீரோடையென விரைந்தோட விட்டுக் கொண்டு நிற்கிறார். அவருடைய வசிப்பிடமோ மலை. மலையிலிருந்து விளையாட்டாகச் சரிவதும் ஏறுவதும் ஆன எழுத்துக்கள் வசீகரமாக இருக்கின்றன. யாரையும் சந்தேகிக்காத, உற்றுப் பார்த்து தன்னை ஜாக்கிரதைப்படுத்திக் கொள்ளாத, சதா குதூகலித்துக் கொண்டிருக்கிற, இடையில் குறுக்கே கையைக் காட்டி நிறுத்தி, 'இங்கே வா. உன் பெயர் என்ன' என்று விளையாட்டாக மிரட்டினால் கண்கலங்கி விடுகிற பூங்காக் குழந்தைகள் போன்றவை இவருடைய கதைகள்.

    மதம் சார்ந்த இவரது நம்பிக்கைகள், ஜெபங்களையும் விசுவாசத்தையும் சார்ந்து கிளைவிடுகிற இவரது வாழ்வின் நோக்குகள், இவரது புறவுலகத்தில் சதா எதிர் நின்று திரும்பத் திரும்ப பதிகிற வானுயர்ந்த மரங்கள், கொள்ளைப் பூக்கள், நகரும் மேகங்கள், மஞ்சு இறங்கல்கள் இவற்றைப் பின்புலமாகக் கொண்டு இவர் தினம் தினம் சந்திக்கிற அன்றாட மனிதர்கள், அந்த மனிதர்களின் வரையறைக்குட்பட்ட அனுமதிப் பிரதேசங்களில் இவர் போய் நின்று உறவு கொள்ள விரிகிற உலகத்தின் புல்லாந்தரிசில் உதிரும் பூக்கள் தான் இவரின் வெவ்வேறு கதைகள். எடைக்கற்களுடனும், தரக் கட்டுப்பாட்டு முத்திரைகளுடனும் அணுகுவதற்கு அவசியமற்ற எளிய, சுவையான விக்கிப் பழங்களைப் போன்றவை அவை.

    அனுபவங்களின் லகரி அல்லது உசுப்பல்கள் அல்லது தொந்தரவுகள் நம்மை ஒரு யாத்திரைக்கு தயார்ப்படுத்துகின்றன. சரி என நாம் புறப்பட்டு எழுத்தில் நாலு எட்டு எடுத்து வைப்பதற்குள் அனுபவம் தூண்டின யாத்திரையும் நாம் சென்று கொண்டிருக்கிற திசையும் ஒன்றில்லையோ என்ற திகைப்பு வந்து விடுகிறது. இது வெவ்வேறான விகிதங்களில் எல்லாக் கலைஞனுக்கும் நிகழ்கிறது. நிர்ணயித்த இடமும், சென்றடைந்த இடமும் ஒன்றாக வாய்க்கப் பெறுகிற சாத்தியம் மிகச் சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. எனினும் ஒவ்வொருவரும் தத்தம் வரிகளின் மேல் துவங்கும் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறோம். கார்த்திகாவும் அப்படிப் போகிறார். அவருடைய பாத்திரங்கள் போகின்றன.

    லீனி அக்காவிடம் சொல்லிக் கொண்டு யோனாக்கள் இண்டர்வியூ செல்கிறார்கள். எமிலியைப் பார்க்கப் போக வேண்டும் என்று அன்றாடப்பாடுகளுக்கு இடையே மறுபடியும் மறுபடியும் தீர்மானம் செய்கிறார்கள். இளிக்கிற பழைய முகங்களைக் கழற்றி வைத்து விட்டு அம்மாவை இதமாக முட்டிக் கொண்டே செல்லமான ஆட்டுக் குட்டிகள் போல பஸ் ஏறி இறங்கிக் கடைத் தெருக்களிலிருந்து வீடு திரும்புகிறார்கள். காஃப்காவின் கரப்பானாகிப் போன கிரிகர் சாம்சாவை ஒற்றை வரியில் உதிர்த்து சரியாக ஒன்றிணையாது சோதனைக் குழாயின் சிதறலுக்குள்ளாகி அடிப்படையிலே பதைப்புறுகின்றனர். லீனித் தங்கைகளின் பிரசவ வார்டுக்கு வெளியே 'எபி' அண்ணன்கள் மனம் பிசைந்து நிற்கிறார்கள். இன்னும் இது போன்ற மெல்லுலகத்தில் இருக்க ஆசீர்வதிக்கப்பட்ட 'ஜே'க்கள், 'ஜோ'க்கள் எல்ஸியைக் காணத் தவித்துப் புறப்பட்டுப் போகிற 'நிக்கி'கள், மார்க்ஸின் தோற்றம் - மறைவு ஆண்டுக் குறிப்புகளுடன் கவிதைகளை மேற்கோள் சொல்லி அன்புமிக்க அதிகாரிக்கு கடிதம் எழுதுகிறவர்கள் - இவர்கள் சென்றடைந்த அல்லது இன்னும் சென்று அடைய வேண்டிய இடத்தை சற்று விலகி நின்று நிதானித்தால் கார்த்திகாவே கூட சரியாக உறுதி செய்து கொள்ள முடியும். அதுதான் முக்கியமானதும் கூட.

    ஒன்று நிச்சயம். அவர் மனப்பூர்வமாகவும், மிகுந்த உண்மையுடனுமே அவருக்கும், அவருடைய வாழ்க்கைக்கும் உள்ள உறவையும், அவருக்கும் அவருடைய அனுபவங்களுக்கும் இடையிலான நெருக்கத்தையும் தம் எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார். தான் எழுதுகிற வரியின் ஒவ்வொரு அட்சரமும் தன் பேரில் கவனம் திருப்ப வேண்டும் என்றோ, தன் நடையின் வெவ்வேறு கதிகளால் இலக்கியத்தின் அடுத்தடுத்த நட்சத்திர அந்தஸ்துக்கு பிரயாசைப்படுகிறவராகவோ இவரைச் சொல்ல முடியாது என்பதால், தன் போக்கில் போகிற எழுத்துக்குரிய அடிப்படை அழகை இவர் அடைய முடிந்திருக்கிறது.

    இந்த வாழ்க்கையை பூப்போலவும் அன்புமயமாகவும், தயையும் பரிவும் நிரம்பிய வெவ்வேறு அடையாளங்களுடன் காட்டுகிற பொழுது அவரை கேள்வி கேட்கத் தோன்றவில்லை. இந்த வாழ்வின் மீது, இப்போது அவர் கொண்டிருக்கிற நிலைகளுக்கு எதிரான கேள்விகள் அவருக்கே எழும் போது, மனம் திறந்து விசாரித்துச் சரியான பதில்களை ஒப்புக் கொள்வதில் அவர் தயக்கம் காட்டமாட்டார் என்கிற அளவுக்கு மிகுந்த ஒப்புதலுடனும், திறந்த மனத்துடனும் இருப்பதை இந்தக் கதைகளில் பெரும்பான்மை உணர்த்துகின்றன. முக்கியமாக-'பூக்களைப் பறிப்பது வருந்தத்தக்கது' வாழ்க்கை நம்மை ஒரு சமயம் எவாஞ்சலின் டீச்சராகவும், பிறிதொரு சமயம் எபியாகவும் வைத்து வரும் நிலைத்த சத்தியமாக இருக்கிறது. இந்த சத்தியத்தின் திடத்தினையும், மென்மையினையும் அற்புதமாக ஒரு அமைதியுடன் சொல்லி இருக்கிறார். எழுத்தில் இந்த அமைதி கூடுகிற தருணம் அவருக்கு இதில் வாய்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 'இடைவெளி' 'மனது', 'நனையத் தோன்றுகிறவர்கள்' - ஆகிய எழுத்துக்கள் அது போன்ற விசாரிப்பின் அடையாளங்களுடன் இருக்கின்றன.

    இந்த அடையாளங்கள் பெருகித் தீவிரமடையும் போது உணர்வு மயமான அடிப்படைப் பரவசங்கள் பின் வாங்கி சப்தம் அனைத்தும் அடங்கிய நிசியில் புதரில் மறைவாய்ப் பூத்த பூப்போல வாசம் எழுப்பிக் காலத்தின் நாசியைக் கவ்வுகிற மலர்ச்சி நிரம்பிய வரிகள் விகசிக்கும். அதெல்லாம் ஒருபுறம் இருக்க...

    சகல திசைகளிலிருந்தும் எறியப்படுகிற முட்பந்துகளால் எற்றுண்டு நசுங்குகிறதாகவும் ஒரு காலை உருவும் யத்தனிப்பில் இன்னொரு கால் முன்னைவிடவும் மீள முடியாதபடி சிக்கிக் கொள்கிற ராட்சசச் சிலந்தி வலையாகவும், தத்துவங்களின் சூறைக் காற்றில் சூட்சுமக் கயிறுகள் அறுந்து எங்கோ போய் விழுந்து கிடக்கிற சீரழிவுகளின் பள்ளத்தாக்காகவும் எல்லாம் இந்த வாழ்வு மிகச் சிக்கலான அடைமொழிகளுடன் வர்ணிக்கப்படும்போது, மிகவும் எளிதாகப் பூக்களின் அண்மைக்கு இப்படிச் சில சிறுகதைகள் அழைப்பது, ஒப்புக் கொள்ளக்கூடிய இன்னொரு பக்க நிஜமாக இருக்கிறது. அப்படி அழைக்கிறவராக ராஜ்குமார் இருக்கிறார்.

    அவருக்கு வாழ்த்துக்கள்

    கல்யாணி

    *****

    என்னுரை

    அன்பான மீரா சார்,

    எதையும் நான் சொல்லப் போவதில்லை. சொல்லவும் அவசியமில்லை என்று நினைக்கிறேன். ஆனால் பல நாட்களுக்கு முன்பு பிரியமான எழுத்தாள நண்பரிடமிருந்து எனக்கு வந்த ஒரு விமரிசனக் கடிதத்திலிருந்து சில வரிகளை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்ளத் தோணுகிறது இந்த சமயத்தில்.

    ‘மற்றவர்கள் எல்லோரும் யுகம் யுகமாக இந்த வாழ்வின் முகடுகளிலிருந்து எரிந்து பொங்கி வழிகிற தீயின் பிழம்புகளை சத்தமாகச் சொல்லிக் கொண்டிருக்கட்டும். தத்துவச் சுருக்காங் கண்ணிகளில் அனைத்துப் பேனாக்களையும் ஒற்றை முடிச்சிட்டு, உலகளாவிய கோஷம் ஒன்றை எழுதும் கூர்முனை ஒன்றை ராவி ராவி தயார்படுத்திக் கொண்டிருக்கட்டும். அல்லது இந்த இரண்டிற்கும் வெளியில் சிதறுண்டு எளிய நிஜமாகக் கிடக்கும் வாழ்வின் சிதறல்களை சிக்கல் எடுப்பதன் அவசியம் பற்றி போதித்துக் கொண்டே மொழியின் உச்சாணிக் கொப்புகளில் ஏறி உட்கார்ந்து கொண்டு சகலமும் அற்பம் எனச் சொல்லட்டும்.

    நாம் இப்படியே இருப்போம். இப்படியே சொல்வோம். இதைவிட புதிய பொறுப்புகளை வாழ்க்கை நமக்குத் தருமெனில் அதையும் நிர்வகிப்போம். வாழ்க்கையும் எழுத்தும் சந்தித்து சிநேகிக்கிற தளமாகவே நாம் எழுதுகிற முதற்புள்ளி இருக்கட்டும்'.

    முன்னுரை தந்த நேசத்திற்குரிய கல்யாணிக்கு என் வந்தனங்களும் நன்றிகளும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் தொகுப்பு சாத்தியமாக கிருபை செய்த என் தேவனை நன்றிகளோடு துதிக்கிறேன்.

    21 அக்டோபர் 1988

    உதகை 643 005

    அன்புடன்

    கார்த்திகா ராஜ் குமார்

    *****

    சமர்ப்பணம்

    அந்நாட்களில் எண்ணற்ற கதைகள் சொன்ன அக்காவுக்கும், அண்ணனுக்கும் என்னிடம் கதை கேட்ட பாப்புவுக்கும்.

    *****

    மனது

    பாப்பு தான் சொன்னாள், கண்ணனிடம் போய்க் கேட்கும்படி.

    மதிய வெய்யிலில் ஆளற்றுப் போயிருந்த தெருவை ஜன்னலில் வழிவெறித்தபடி நின்றிருந்தான் ஜெயசீலன். சோர்வும், களைப்பும் முகத்தில் வியர்வையுடன் கசகசத்திருந்தது. பால் போட்டிராத காப்பியை அவனிடம் நீட்டியபடி, கண்ணனிடம் கேட்கிற விதம் பற்றிக்கூட சொல்ல ஆரம்பித்தாள் பாப்பு. மோர் வகையறாக்கள் அவனுக்குப் பிடிக்காது. அதனால் தான் காப்பி. இன்னமும் வேறு எதுவும் சாப்பிடவில்லை. பால் போட்ட காப்பி வீட்டில் குடித்துக் கூட நாட்களாகி விட்டன. சிக்கன நடவடிக்கையாகப் பால் வாங்குவதில்லை. தினம் ஒரே வேளைதான் ஏதோ சாப்பிட முடிகிற பொழுது... வேறு என்ன செய்ய...?

    மழை பொய்த்து வந்த பவர்கட் ஜெயசீலன் வேலை செய்யும் பவுண்டரியை அதிகமாய் பாதித்து, அதில் சமீபத்தில் தான் சேர்ந்திருந்த அவனையும் கோரமாகப் பாதித்திருந்தது. நாள் முழுக்க வேறு வேறு இடங்களில் தின ஜீவியத்திற்காய் அலைச்சல்கள் தான். போன வாரத்தில் வேலை கிடைக்காத அலுப்பும் பசியுமாய் ஜெயசீலன் பஸ் ஸ்டாப்பிங்கில் நின்றிருந்த பொழுது அவனை உரசுகிற மாதிரி ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது. அதன்மேல் இருந்தவன் இறங்கி, இவன் கைகளை இறுகப் பிடித்துக் கொள்ள, ஜெயசீலனுக்கு அவன் யாரென்று தெரியவில்லை. திகைத்து, முழிக்க அவன் படீரென்று ஜெயசீலனின் முதுகில் அடித்து...

    என்னடா முழிக்கிறே? பாவி தெரியல என்னை? கண்ணன்டா என்றதும், உடனே இவன்

    Enjoying the preview?
    Page 1 of 1