Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Christmas Thoothan
Oru Christmas Thoothan
Oru Christmas Thoothan
Ebook185 pages1 hour

Oru Christmas Thoothan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மிகவும் தற்செயலாகத்தான் இது நிகழ்ந்தது. வரப் போகும் கிறிஸ்மஸ்க்காக ஓய்வு நாள் பள்ளி ஆசிரியர்களுக்காக ஒரு சிறு நாடகம் ஒன்றை செய்து தரும்படி ஏழு வருஷங்களுக்கு முன்பு நண்பர் அருமைதாஸ் கேட்ட பொழுது மறுக்க முடியாத சூழ்நிலையில் ஒப்புக் கொண்டேன், தயக்கங்களுடன்.

இதற்கு காரணமிருந்தது. வழக்கமான நாடக பாணிகளில் அதாவது கிறிஸ்மஸ்க்கு என்று போடப்படுகிற நாடகங்களில் எனக்கு சம்மதமில்லை. ஆனால் அதுவரை நான் பார்த்த அளவிற்கு இருந்த கிறிஸ்மஸ் நாடகங்கள் எல்லாமே பெரும்பாலும் நிகழ்ந்த அம்மா பெரும் சரித்திர நிகழ்வின் மிக வெளிறலான பிரதிகளாக இருந்தன. அமைதியான ஒரு மரியாள். தாடியும் தடியுமாய் யோசேப்பு, பொம்மை குழந்தை யேசு, சரியாக இறக்கை அமைந்த அமையாத தேவதூதர்கள், வசனமின்றி வந்து போகிற மேய்ப்பர்கள். பட்டுப் புடவைகளை ராஜவஸ்திரமாக்கி வந்து நிற்கும் மூன்று ராஜாக்கள்... என்றுதான் இருக்கும். வருஷா வருஷம், இதே தான் ஆனால் நடிக்கிற ஆட்கள் மட்டும் மாறிக்கொண்டு, இதிலும் இந்த பாத்திரங்களுக்கான வசனம் மிகக்குறைவு, பேசப்படுகிற வசனங்களும் பைபிளில் வருகிற சில வசனங்களாய் மட்டுமே. அதுவும் தேவதூதன் மரியாளுக்கு சொல்வது. மேய்ப்பர்களுக்குச் சொல்வது, அகஸ்துராயனின் கட்டளையை அறிவிக்கிற தண்டோராக்காரனின் வார்த்தைகளாகவே இருந்தன.

எனவே இந்த வகையறாக்களிலிருந்து வேறுபட்டு நாடகம் அமைக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டேன்.

இதற்கு முன்பு ‘லாங்ஸ்டன் ஹீயுஸ்' என்கிற கறுப்பு அமெரிக்க எழுத்தாளரின் கதை ஒன்றை நாடகமாக்கியிருந்தோம். அப்பொழுது அந்த பெரும் வித்தியாசமான கருத்தும் பார்வையாளர்களிடத்தில் பெற்ற வரவேற்பும் இப்பொழுதும், கிறிஸ்மஸ்க்கும் மாறுபட்ட பாணியிலான நாடகங்களை செய்ய உத்வேகம் தந்தன.

எனவே நிஜ நாடகங்களில் பயன்படுத்துகிறதைப் போல. சில நவீன உத்திகளை இந்த நாடகங்களில் உபயோகிக்கத் தீர்மானித்திருந்தேன். 'மேடை'யில் மட்டுமே நாடகம், நடிப்பு என்றில்லாதபடிக்கு அரங்கத்துக்குள்ளும் நடிப்பை நீடிப்பது நடிப்பவர்கள், பார்வையாளர்களிடையே அமர்ந்திருப்பது. பார்வையாளர்கள் நடுவிலிருந்தே வருவது, பல நாடகங்களிலும், தெருக் கூத்து நாடகத்தில் வருவதைப் போல கட்டியங்காரன் போன்றதொரு பாத்திரத்தை சற்று மாற்றி நாடகத்தின் வர்ணணையாளராக அல்லது அறிவிப்பாளராக வைப்பது. மேடையில் எளிமையான இயல்பான பேச்சுத் தமிழில் பேசுவது போன்றவைகள் இவைகளில் சிலவாகும்

ஆனால், எல்லா நாடகங்களிலும் ஒரு செய்தி அழுத்தமாக சொல்லப்பட வேண்டும் - பார்வையாளர்களுக்கு. அது என்னவெனில் இறை மகனின் பிறப்பு என்கிறமா நிகழ்வின் அர்த்தத்தை உணர்த்த முயற்சிப்பது, அர்த்தப்படுத்தி, தம் இன்றைய வாழ்வின் போக்கோடு பார்க்கத் தூண்டுவது. கிறிஸ்மஸ் வெறும் ஒரு கொண்டாட்டமாக, சில அனுசரிப்பு வைபவமாகவும் மாறிவிட்ட நிலையில் கிறிஸ்மஸ் அதுவல்ல. அது அன்பின் பகிர்தலை அறிவிக்கிற செய்தி, நாமும் அப்படியானதொரு பிரதிபலிப்பை உலகிற்கு காட்டியாக வேண்டிய அவசியத்தை உலகிற்கு உணர்த்துகிற செய்தியாக அது அமைய வேண்டும். இந்த உணர்தலுக்கு நம்மைப் புதுப்பித்துக் கொள்கிற காரியமாக மாற்றிக் கொண்டாக வேண்டிய அவசியத்தை சொல்கிற தருணமாக கிறிஸ்மஸ் அமைய வேண்டும் என்பது தான் அந்த செய்தி.

அநேகமாக இத்தொகுப்பில் உள்ள எல்லா நாடகங்களுமே இந்த செய்தியைதான் சொல்கின்றன. வெவ்வேறு பாணியில், உத்தியில்.

இந்த தொகுப்பின் முதல் நாடகமான ஒரு கிறிஸ்மஸ் அலங்காரம், முன்பு ஒரு நாளில் அருட்திரு மரிய ஜோசப் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த ஒரு தருணத்தில் அவர் சொன்ன ஒரு 'போலந்து' கவிதையின் தாக்கத்தில் அதை அடிப்படையாகக் கொண்டு அமைத்ததாகும். ஆனால் முழு நாடகமும், 'மைமிங்' முறையில் அமைத்து, ஒரு வர்ணணையாளரின் வர்ணிப்புடன் மட்டும் நாடகம் நடந்து முடிந்த பொழுது கிடைத்த வரவேற்பில், புதுப் பாணி நாடகங்கள் எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்ளப்படுமா என்றிருந்த சந்தேகங்கள் விலகிப் போயின. Praise the Lord. இப்படி பல நாடகங்களை வித்யாசமாக எழுதத் தூண்டுகோலாக இருந்தது இந்த ஆரம்பம்.

இந்த நாடகங்கள் நடிக்கப்பட்ட பொழுது 'ஒரு கிறிஸ்மஸ் குடிலை’த் தவிர மற்றவைகளுக்கு fixed script என்றில்லாமல், அந்த சூழலுக்கு ஏற்றபடி வசனங்களை அமைத்திருந்தோம். இவைகள் தொகுக்கப்பட, உற்சாகமளித்து fixed script எழுத முனைப்பூட்டிய அன்புத் தம்பி 'வில்பா' ஜெபக்குமாருக்கும் எனது நன்றிகள். அவரின் தோழர் வில்சனுக்கும் கூட கிறிஸ்தவ இலக்கிய நூல்கள் வெளிவருவதில் இந்த வில்பாக்காரர்கள் காட்டுகிற ஆர்வம் பெரிதும் உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் மனதில் பூக்க வைக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த நாடகங்களை உருவாக்க, என் தேவன் தந்த கிருபைக்காக அவரை துதிக்கிறேன்.

- கார்த்திகா ராஜ்குமார்

Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580132205487
Oru Christmas Thoothan

Read more from Karthika Rajkumar

Related to Oru Christmas Thoothan

Related ebooks

Reviews for Oru Christmas Thoothan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Christmas Thoothan - Karthika Rajkumar

    http://www.pustaka.co.in

    ஒரு கிறிஸ்மஸ் தூதன்

    Oru Christmas Thoothan

    Author:

    கார்த்திகா ராஜ்குமார்

    Karthika Rajkumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author//karthika-rajkumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    சிலர் புகழ் மிக்கவர்களாகவே பிறக்கிறார்கள். சிலர் 'புகழ்' பெறுகிறார்கள் - தங்கள் சாதனைகளால். சிலர் மேல் 'புகழ்' திணிக்கப்படுகிறது. இப்படியெல்லாம் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதில் நான் எந்த வகையிலுமே சேர்ந்தவனில்லை என்று தான் சொல்ல வேண்டும். உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். பின் எந்த தகுதியில் இப்படி ஒரு புத்தகத்திற்கு. அதுவும் ஒரு நாடகத் தொகுப்பிற்கு முன்னுரை எழுத வந்திருக்கிறேன் என்று. ஆனால் ஒரு காரியம் - நாடகங்கள் எனக்கு மிகப் பிடித்தமானவை. என் சிறு வயது நாட்களில் நாடகங்களிலும் நடித்திருக்கிறேன்.

    இதற்கு நான் என் ஓய்வு நாள் பள்ளி ஆசிரியர்களுக்கு தான் நன்றிகளைச் சொல்ல வேண்டும், அந்த வாய்ப்புகளுக்காக பழைய ஏற்பாடில் 'தானியேல்' பற்றின நாடகம்தான் என் முதல் நாடகம். இது நடந்தது 35 வருடங்களுக்கு முன்பு. அதிலிருந்து சரி எப்பொழுது நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் நான் தவற விடுவதே இல்லை. உயர் நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுது சில ஆங்கில நாடகங்களில் நடித்திருக்கிறேன். கல்லூரி நாட்களிலும் கூட நாடகம், நடனம் என்றிருந்ததுண்டு.

    பிறகு நான் ஒரு போதகராக பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த பொழுது 'செமினரி’யிலும் கூட நடிக்க வாய்ப்பு வரும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. அங்கு நடிக்க மட்டுமில்லை. நாடக மேடை நிர்வாகத்தையும் கூட கவனித்துக் கொள்ள நேர்ந்தது.

    ஒரு போதகராய் இருக்கிற இந்த நாட்களிலுமே கூட நாடகங்களின் மூலம் மக்களிடம் தொடர்பு கொள்கிற பெரும் விருப்பம் எனக்குள் கனன்று கொண்டிருந்ததுண்டு. ஆனால் எதுவும் அப்படியாக நடக்கவில்லை. ஒரு வேளை நல்ல கிறிஸ்தவ தமிழ் நாடகங்கள், குறிப்பாக நாடகங்கள் போட அமைகிற வாய்ப்பு கிறிஸ்மஸ் காலங்களில் எனக்கு கிடைக்கவே இல்லை. இருந்தாலும் மனதுள் அந்த ஏக்கமும் எதிர்பார்ப்புமிருந்தது. பின் 1980-ல் கோவையில் ஒரு ஆலயத்தில் நான் போதகராக பணிபுரிந்த பொழுது, ஒரு நல்ல ஆங்கில நாடகமும், உற்சாகமான ஆர்வமிக்க இளைஞர்களும் கிடைக்க, ஆலயத்திற்குள்ளாகவே நாடகத்தைப் போட்டோம். ஆராதனையோடு மல்கியா' பற்றின நாடகம். வழக்கம் போல் பலருக்கு ஆலயத்திற்குள் இப்படி நிகழ்த்தினது பிடிக்கவில்லை என்றாலும், சிலர் எங்களை உற்சாகப் படுத்தினார்கள்.

    அதன் பின் 9 வருடங்கள் கழித்து, உதகை வெஸ்லி சபையின் போதகராக வந்த பொழுது ராஜ்குமாரை சந்தித்தேன். எங்கள் முதல் சந்திப்பே ஒரு வினோதமான ஒத்திசைவு என்றுதான் சொல்ல வேண்டும். வித்தியாசமாக, எதையாகிலும் செய்ய வேண்டுமென்கிற, தணியாத தாகத்துடனிருந்த எனக்கு, புதுமையாக யோசிக்கிற, அதை அழகாய்ச் சொல்கிற ராஜ்குமாரைப் பிடித்துப் போயிற்று. ஓய்வு நாள் பள்ளி பொறுப்பாளராகிய அருமைதாஸ் மூலம் தான் கிறிஸ்மஸ் நாடகம் ஒன்றை செய்ய சொல்லிக் கேட்டுக் கொண்டேன்.

    இப்படி வந்ததுதான் ‘ஒரு கிறிஸ்மஸ் அலங்காரம்’ நாடகம். சர்ச்சிற்குள் இது நிகழ்த்தப்பட்ட பொழுது, அனைவருக்கும் ஒரு இனிய அதிர்ச்சிதான். இப்படி நாடகமிருக்கும் என்று எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. பிரச்னைகள் மிகுந்த பண்டிகைக் காலத்தில் எத்தனை பொருத்தமாக இந்த நாடகம். வர்ணணையின் பின்னணியில் நடித்தவர்களின் நடிப்பு, இன்னுமே என் நினைவில் பசுமையாக இருக்கிறது. பார்வையாளர்கள் ஒன்றிபோய் அநேக இடங்களில் மனம் விட்டு சிரித்து ரசித்தாலும் நாடக இறுதியில் சொல்லப்பட்ட ‘செய்தி' அனைவரின் சிந்தனையையும் பாதித்தது. நாடகம் எழுப்பின கேள்வி பார்த்தவர்களின் மனதை குடைந்திருக்கும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் சிலர், பாரம்பரிய நாடக பாணிகளில் ஊறிய சிலர் இப்படியான நாடகங்கள் பற்றி புருவமுயர்த்தினார்கள் தாம். ஆனால் நாடகம் வித்தியாசமாய் இருக்க விரும்பின நாங்கள் அதை பொருட்படுத்தவில்லை.

    அடுத்த வருடத்திலிருந்து நாடகங்களின் தரம் தொடர்ந்து உயர்ந்து கொண்டுதான் வந்தது. நாங்கள் ஒருவரை ஒருவர் இன்னும் நன்றாக புரிந்து கொண்டோம். ராஜ்குமார் தொடர்ந்து எங்களுக்கு நாடகங்களை எழுதி, தயாரித்து, இயக்கியும் வந்தார். அந்த வருட நாடகம் - ஒரு கிறிஸ்மஸ் குடில் - பற்றினது. கொண்டாட்டங்களை விட கொடுப்பது எத்தனை அருமையானது என்பதை குழந்தைகளை வைத்தே வெகு நேர்த்தியாக சொல்லப்பட்டது. என் மகளும் கூட இதில் நடித்தாள் என்று நினைக்கிறேன்.

    'ஒரு கிறிஸ்மஸ் கொண்டாட்டம்’ - இன்னொரு விஷயத்தை அழகாய்ச் சொன்னது. மேசியாவைத் தவிர வேறு எல்லாவற்றுக்குமே இடம் கொடுக்கிற சூழல் தானே இன்றைக்குப் பெரும்பாலும். அவருக்காக நடைபெறுவதாக சொல்லுகிற கொண்டாட்டங்களில் அவருக்கே இடமளிப்பதில்லை என்கிற உண்மை வெளிப்படுவது எத்தனை ஒரு முரண்பாடு.

    1993 தான் நான் ஆலய போதகர் பணியில் ஈடுபட்டிருந்த கடைசி வருஷம். ஒரு வினோதம் என்னவெனில் நாடகமென்று நான் கடைசியாக (அதாவது இன்று வரை) நடித்ததும் இந்த வருஷம்தான். 'ஒரு கிறிஸ்மஸ் நாடகமும்' பழமையும். புதுமையும் கலந்த ஒரு நாடகம்.

    முதல் கிறிஸ்மஸின் போது இருந்த சந்தோஷம். இன்றைய நாட்களில் எங்கே போனது என்பதை யோசிக்க வைக்கிறது இந்நாடகம். பார்வையாளர்களை நாம் சந்தோஷம் என்று நினைக்கிறதின் பொய்த் தன்மையைப் பற்றி யோசிக்க வைக்கிறது என்றும் சொல்லலாம். நம்முடைய சந்தோஷம் அனைத்தும் 'ஆனால்' என்று வராமல் ‘இருந்தாலுமே' என்று ஆரம்பிக்க வேண்டுமென்றும், சூழ்நிலைகள் நம்மை ஆள்வதல்ல, 'மேசியா’வே நம் சந்தோஷத்தின் காரணமாய் இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது.

    கிறிஸ்மஸ் சமயங்களில் இருக்க வேண்டிய ஒரு தீவிரமான யோசிப்பை. சிந்தனையை, 'ஒரு கிறிஸ்மஸ் தூதன்' தருகிறது. உணர்ச்சிகரமான நடிப்பிற்கும் வெவ்வேறு விதமான மன நிலைகளின் சித்தரிப்புகளுக்கும், நம்முடைய 'கமிட்மெண்ட்' எதில், எப்படியானது என்பது பற்றிய மறுபரிசீலனைக்கும் இதில் இடமுண்டு. 'மேசியா' இன்றைக்கும், நம் வாழ்வை மாற்ற வல்லவர்தான், அந்த மாற்றத்திற்கான ஒரு வாய்ப்பு கிறிஸ்மஸ் நாட்களில் உண்டு என்கிறது இந்நாடகம். ஏனெனில் கிறிஸ்மஸ் பகிர்தலின் காலமல்லவா.

    'ஒரு கிறிஸ்மஸ் அறிக்கை’ - முற்றிலும் மாறுபட்ட, ஆனால் முதல் கிறிஸ்மஸில் பங்கு பெற்ற அனைத்து பாத்திரங்களுமே பங்கு கொள்ளும் நாடகம். இதே பாத்திரங்கள் வருகிற கிறிஸ்மஸ் நாடகங்களை வருஷந்தோறும் நாம் பார்த்து வருகிறோம். என்றாலும் இதில் அந்தப் பாத்திரங்கள் பேசுகின்றன. தன்னிலை விளக்கத்துடன். நாம் கேட்டிராதவைகளையும் கூட நாடகமே புதியதொரு உத்தியில் அமைத்திருக்கிறது. தீவிர பயிற்சியுடன் இந்நாடகம் நிகழ்த்தப்படுமெனில் கிறிஸ்மஸ் நாடக அளவில் புதிய எல்லைகளைத் தொடலாம் என்று நினைக்கிறேன். பாத்திரங்களின் சுய விளக்கங்கள் பார்வையாளர்களின் சிந்தனைகளை நிச்சயம் பாதிக்கக் கூடும். இந்நாடகத்தின் வானொலி வடிவத்தில் 'யோசேப்பு' பாத்திரத்தில் நானும் நடித்தேன். ஆகா அது ஒரு நல்ல அனுபவம். வானொலி வடிவமே நல்ல விதமாக அமைந்து வரவேற்பைப் பெற்றது எனில், மேடை வழி அனுபவமும். பாதிப்பும் இன்னும் சிறப்பாக அமைவது நிச்சயமல்லவா.

    ம்ஹும், இப்படி வித்தியாசமான நல்ல கிறிஸ்மஸ் நாடகங்களை நாங்கள் நடத்தின நாட்கள் போய்விட்டன தான். நல்ல நாடகங்களுக்கான அநேகரின் ஏக்க பெரு மூச்சுகளுக்கு ஆண்டவர் இந்த நாடகங்களின் மூலம் பதில் தந்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் தமது நோக்கத்தை தமது பிள்ளைகள் மூலமாக நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார். அவர் தாமே தொடப்படாத, ஆனால் ‘கிறிஸ்துவன்' என்று பெயரளவில் தங்களை அழைத்துக் கொள்கிற அநேகரை தம் வயப்படுத்த ஆட்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

    நாடகங்கள் வாழ்க்கையை மாற்றக் கூடும். ராஜ்குமாரின் எழுத்துக்களின் மூலம் அப்படி நிகழ வேண்டுமென்று வாழ்த்துகிறேன். மக்கள் மனங்களைத் தொட விரும்புகிற மனதுடன் முயற்சிக்கிற அவருடைய பிள்ளைகளுக்காக அவரைத் துதிக்கிறேன். ஆண்டவர் தாமே அவரின் எழுத்துக்களை ஆசீர்வதிப்பாராக, மென்மேலும் இது போன்ற நாடகங்களை எழுத கிருபை செய்வாராக.

    வாழ்த்துக்களுடன்

    பி. ஜெரோம்

    Rev. B.Jerome

    Secretary-Promotion,

    Public relation, Personal

    'SCRIPTURE UNION'

    S. INDIA

    *****

    என்னுரை

    மிகவும் தற்செயலாகத்தான் இது நிகழ்ந்தது. வரப் போகும் கிறிஸ்மஸ்க்காக ஓய்வு நாள் பள்ளி ஆசிரியர்களுக்காக ஒரு சிறு நாடகம் ஒன்றை செய்து தரும்படி ஏழு வருஷங்களுக்கு முன்பு நண்பர் அருமைதாஸ் கேட்ட பொழுது மறுக்க முடியாத சூழ்நிலையில் ஒப்புக் கொண்டேன், தயக்கங்களுடன்.

    இதற்கு காரணமிருந்தது. வழக்கமான நாடக பாணிகளில் அதாவது கிறிஸ்மஸ்க்கு என்று போடப்படுகிற நாடகங்களில் எனக்கு சம்மதமில்லை. மற்ற இடங்களில் எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனால் அதுவரை நான் பார்த்த அளவிற்கு இருந்த கிறிஸ்மஸ் நாடகங்கள் எல்லாமே பெரும்பாலும் நிகழ்ந்த அம்மா பெரும் சரித்திர நிகழ்வின் மிக வெளிறலான பிரதிகளாக இருந்தன. அமைதியான ஒரு மரியாள். தாடியும் தடியுமாய் யோசேப்பு, பொம்மை குழந்தை யேசு, சரியாக இறக்கை அமைந்த அமையாத தேவதூதர்கள், வசனமின்றி வந்து போகிற மேய்ப்பர்கள். பட்டுப் புடவைகளை ராஜவஸ்திரமாக்கி வந்து நிற்கும் மூன்று ராஜாக்கள்... என்றுதான் இருக்கும். வருஷா வருஷம், இதே தான் ஆனால் நடிக்கிற ஆட்கள் மட்டும் மாறிக்கொண்டு, இதிலும் இந்த பாத்திரங்களுக்கான வசனம் மிகக்குறைவு, பேசப்படுகிற வசனங்களும் பைபிளில் வருகிற சில வசனங்களாய் மட்டுமே. அதுவும் தேவதூதன் மரியாளுக்கு சொல்வது. மேய்ப்பர்களுக்குச் சொல்வது, அகஸ்துராயனின் கட்டளையை அறிவிக்கிற தண்டோராக்காரனின் வார்த்தைகளாகவே இருந்தன.

    இவைகள், இப்படியான நாடகங்கள் அதில் நடித்தவர்களுக்கு ஒரு சமயம் நல்ல மறக்க முடியாத நினைவுகளை கொடுத்திருக்கக் கூடும். ஆனால் பார்வையாளர்களுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தாமல், குறைந்தபட்சம் சிந்தனைகளில் கூட மாற்றங்களை நிகழ்த்தாமல் ‘அட! நம்ம ஜான் தான் யோசேப்பு!! நம்ம எட்வின் தான் பின்னாடி வர்ர மேய்ப்பன்' என்று மட்டும் பேசி விட்டு போய் விடுகிறவைகளாகவே இருந்தன.

    இன்னொரு ரகமும் கிறிஸ்மஸ் நாடகங்களில் உண்டு. நாடகத்தில் எவ்வித இயல்புமில்லாமல், கோர்வை இன்றி, திடீர் திருப்பம்: அதில் திடீர் தியாகம் செய்கிற அப்பா! அம்மா வேறு யாராவது. எதற்கென்றால் கிறிஸ்மஸ் ‘ஸ்பெஷல் தியாகம்' என்கிற முத்திரையுடன் வருகிற பாத்திரங்கள், கன குஷியுடன் மனப் பாடம் செய்த வசனங்களை கையை கட்டிக்கொண்டோ அல்லது உதறிக் கொண்டோ மைக் தேடி முழங்கி விட்டு போகிற (அல்லது மறந்து விட்டும்) வகையறாக்களாக இருந்தன.

    எனவே இந்த வகையறாக்களிலிருந்து வேறுபட்டு நாடகம் அமைக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டேன்.

    இதற்கு முன்பு ‘லாங்ஸ்டன் ஹீயுஸ்' என்கிற கறுப்பு அமெரிக்க எழுத்தாளரின் கதை ஒன்றை நாடகமாக்கியிருந்தோம். அப்பொழுது அந்த பெரும் வித்தியாசமான கருத்தும் பார்வையாளர்களிடத்தில் பெற்ற வரவேற்பும் இப்பொழுதும், கிறிஸ்மஸ்க்கும் மாறுபட்ட

    Enjoying the preview?
    Page 1 of 1