Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Varugiraal Unnai Thedi
Varugiraal Unnai Thedi
Varugiraal Unnai Thedi
Ebook162 pages59 minutes

Varugiraal Unnai Thedi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘வருகிறாள் உன்னைத் தேடி' இது எழுபதுகளில் நான் எழுதிய முதல் மேடை நாடகம். இருபதுக்கும் மேற்பட்ட மேடைகளில் நடிக்கப் பெற்ற முழுநீள நகைச்சுவை நாடகம். வானொலியில் வர்த்தக ஒலிபரப்பின் வண்ணச் சுடரில் தொடராக ஒலிபரப்பப்பட்டது. திரைப்பட நடிகர் மாஸ்டர் சேகர், இப்போது டப்பிங் குரல் வளத்தில் புகழ் மிகுந்து விளங்கும் நடிகை அனுராதா (கலைமாமணி கே.ஆர். இந்திராதேவியின் தங்கை) மற்றும் புகழ்வாய்ந்த நாடகக் கலைஞர்களுடன், என்னுடன் பணியாற்றிய வங்கி நண்பர்கள் நடிப்பார்கள். திரைப்பட இயக்குநர் திரு. மோகன் காந்திராமன் அவர்கள் நெறிப்படுத்த நடிகர் திரு. கல்யாண்ஜி, கலைமாமணி பி.ஏ. கிருஷ்ணன், 'நாடகப்பணி' அருணகிரி, திரு. சின்னராஜ் ஆகியோர் ஆலோசனைகள் வழங்க அந்நாளில் 'சக்கை போடு’ போட்ட நாடகம் இது.

எழுபதுகளில் என்பதால் விலைவாசிகள் மற்றும் சூழல்கள் அப்போதைக்குப் பொருந்துவதாக இருக்கும். நானும் இன்றைய சூழ்நிலைக்கேற்ப வசனங்களை மாற்றவில்லை. காரணம் இதுவும் ஒரு சுகமான கற்பனையாக இப்போது இனிக்கும் என்பதற்காகத்தான். கதை ஒன்றும் பிரமாதமான கதை இல்லை. திருமண ஆசையில் ஓர் இளைஞன். பெயர் கல்யாணராமன். புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கிற அவன் அலுவலகத் தேர்வுகளில் தேறி உத்யோக உயர்வு பெறட்டுமே என்றெண்ணும் பெற்றோர்கள் அவனுடைய திருமணத்தைத் தள்ளிப் போடுகிறார்கள். தள்ளிப் போடுவதற்கான காரணம் அவனுடைய ஜாதகத்தில் 30 வயதுவரை இருக்கிற கோளாறு தான் என்று பொய்யாகக் கூறித் தப்பிக்கிறார்கள்.

ஆனால் அலுவலகத்திலும், வெளியிலும் அவனைச் சுற்றியிருக்கும் சிலருக்கு ஒவ்வொரு வகையான திருமணப் பிரச்சினைகள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிரம்மச்சரிய வாழ்க்கையை அனுபவிக்க அவர்கள் அறிவுறுத்தினாலும் பெற்றோர் மனத்தில் தன்னுடைய திருமண அவசரத்தை உணர்த்த பல்வேறு உபாயங்களைக் கண்டுபிடிக்கிறான் கல்யாணராமன். ஒவ்வொரு முயற்சியும் பிள்ளையார் பிடிக்கக் குரங்காய்ப்போய் முடிகிறது.

சென்னையில் ஹோட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை என்று புலம்பினால், சமைத்துப்போடப் பாட்டியை அனுப்பி விடுகின்றனர் பெற்றோர். அடுத்து பிள்ளையின் நடவடிக்கை சரியில்லை ஒரு பெண்ணோடு சுற்றுகிறான் என்று மொட்டைக் கடிதம் போடுகிறான். விளைவு... காதலில் தோல்வியுற்று சித்த சுவாதீனமற்ற ஒரு பெண்ணின் காதலன் இவனென்பதாகச் சந்தர்ப்பச் சூழல்கள் கட்டிப் போட்டுவிடுகின்றன. இப்படிப் போகிற கதை சுபமாக முடியும்.

- ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்

Languageதமிழ்
Release dateApr 8, 2020
ISBN6580132005222
Varugiraal Unnai Thedi

Read more from Kalaimamani Ervadi S. Radhakrishnan

Related to Varugiraal Unnai Thedi

Related ebooks

Reviews for Varugiraal Unnai Thedi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Varugiraal Unnai Thedi - Kalaimamani Ervadi S. Radhakrishnan

    http://www.pustaka.co.in

    வருகிறாள் உன்னைத் தேடி

    Varugiraal Unnai Thedi

    Author:

    ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்

    Ervadi S. Rathakrishnan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ervadi-s-rathakrishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி - 1

    காட்சி - 2

    காட்சி - 3

    காட்சி - 4

    காட்சி - 5

    காட்சி - 6

    காட்சி - 7

    காட்சி - 8

    காட்சி - 9

    காட்சி - 10

    காட்சி - 11

    காட்சி - 12

    காட்சி - 13

    காட்சி – 14

    காட்சி - 15

    காட்சி - 16

    என்னுரை

    (மேடை நாடகம்)

    ‘வருகிறாள் உன்னைத் தேடி' இது எழுபதுகளில் நான் எழுதிய முதல் மேடை நாடகம். இருபதுக்கும் மேற்பட்ட மேடைகளில் நடிக்கப் பெற்ற முழுநீள நகைச்சுவை நாடகம். வானொலியில் வர்த்தக ஒலிபரப்பின் வண்ணச் சுடரில் தொடராக ஒலிபரப்பப்பட்டது. திரைப்பட நடிகர் மாஸ்டர் சேகர், இப்போது டப்பிங் குரல் வளத்தில் புகழ் மிகுந்து விளங்கும் நடிகை அனுராதா (கலைமாமணி கே.ஆர். இந்திராதேவியின் தங்கை) மற்றும் புகழ்வாய்ந்த நாடகக் கலைஞர்களுடன், என்னுடன் பணியாற்றிய வங்கி நண்பர்கள் நடிப்பார்கள். திரைப்பட இயக்குநர் திரு. மோகன் காந்திராமன் அவர்கள் நெறிப்படுத்த நடிகர் திரு. கல்யாண்ஜி, கலைமாமணி பி.ஏ. கிருஷ்ணன், 'நாடகப்பணி' அருணகிரி, திரு. சின்னராஜ் ஆகியோர் ஆலோசனைகள் வழங்க அந்நாளில் 'சக்கை போடு’ போட்ட நாடகம் இது.

    எழுபதுகளில் என்பதால் விலைவாசிகள் மற்றும் சூழல்கள் அப்போதைக்குப் பொருந்துவதாக இருக்கும். நானும் இன்றைய சூழ்நிலைக்கேற்ப வசனங்களை மாற்றவில்லை. காரணம் இதுவும் ஒரு சுகமான கற்பனையாக இப்போது இனிக்கும் என்பதற்காகத்தான். கதை ஒன்றும் பிரமாதமான கதை இல்லை. திருமண ஆசையில் ஓர் இளைஞன். பெயர் கல்யாணராமன். புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கிற அவன் அலுவலகத் தேர்வுகளில் தேறி உத்யோக உயர்வு பெறட்டுமே என்றெண்ணும் பெற்றோர்கள் அவனுடைய திருமணத்தைத் தள்ளிப் போடுகிறார்கள். தள்ளிப் போடுவதற்கான காரணம் அவனுடைய ஜாதகத்தில் 30 வயதுவரை இருக்கிற கோளாறு தான் என்று பொய்யாகக் கூறித் தப்பிக்கிறார்கள்.

    ஆனால் அலுவலகத்திலும், வெளியிலும் அவனைச் சுற்றியிருக்கும் சிலருக்கு ஒவ்வொரு வகையான திருமணப் பிரச்சினைகள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிரம்மச்சரிய வாழ்க்கையை அனுபவிக்க அவர்கள் அறிவுறுத்தினாலும் பெற்றோர் மனத்தில் தன்னுடைய திருமண அவசரத்தை உணர்த்த பல்வேறு உபாயங்களைக் கண்டுபிடிக்கிறான் கல்யாணராமன். ஒவ்வொரு முயற்சியும் பிள்ளையார் பிடிக்கக் குரங்காய்ப்போய் முடிகிறது.

    சென்னையில் ஹோட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை என்று புலம்பினால், சமைத்துப்போடப் பாட்டியை அனுப்பி விடுகின்றனர் பெற்றோர். அடுத்து பிள்ளையின் நடவடிக்கை சரியில்லை ஒரு பெண்ணோடு சுற்றுகிறான் என்று மொட்டைக் கடிதம் போடுகிறான். விளைவு... காதலில் தோல்வியுற்று சித்த சுவாதீனமற்ற ஒரு பெண்ணின் காதலன் இவனென்பதாகச் சந்தர்ப்பச் சூழல்கள் கட்டிப் போட்டுவிடுகின்றன. இப்படிப் போகிற கதை சுபமாக முடியும்.

    ஒரு நாள் பரணையில் எதையோ தேடப்போக இந்த 'ஸ்கிரிப்ட்' கிடைத்தது. சென்னை காவல்துறை அங்கீகரித்த எழுத்துறு இது. வானொலிக்காக, மேடையில் பேசப்பட்ட சில அசைவ நகைச்சுவைகளை அகற்றிவிட்டு புடம்போட்டு எடுக்கப்பட்ட கதை வசனங்கள். மேடையில் விதவிதமாக நடிப்போம். நினைத்தபடியெல்லாம் முடிப்போம். நேரத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப முடிவுகளை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொள்வோம். ஒவ்வொரு முறையும் புதுப்புது செய்திகள், சுவைகள் என்பதாக அவ்வளவு சுவாரஸ்யமாக நாடகமிருக்கும்.

    எழுதும்போது பிரம்மச்சாரியாக இருந்த நான் என்னையே கூட கதாநாயகனாக எண்ணிக் கொள்வேன். ஆனால் நிஜவாழ்வில் அப்போது (அப்போதென்ன இப்போதும்தான்) காதலியோ, காதலிகளோ கிடையாது. எனவே கற்பனைகளுக்கு குறைச்சலிருக்காது. என்னுடைய அலுவலகச்சூழல் வேறு இதமானது. கலகலப்பான நண்பர்கள் சேர்ந்து கொண்டால் நகைச்சுவைக்கு ஏது பஞ்சம்?

    மீண்டும் இந்த நாடகத்தைப் படித்துப் பார்த்தேன். நூலாக வெளியிடத் தோன்றியது. என் வானொலி நண்பரும், தயாரிப்பு நிர்வாகியுமான 'வானொலி அண்ணா' திரு. என். சி. ஞான பிரசாகம் அவர்களிடம் கேட்டேன். அவர் கொடுத்த உற்சாகம் மட்டுமல்ல அதிகமாக இப்போது நாடக நூல்கள் வருவதில்லை என்ற குறையைத் தீர்க்கும் வாய்ப்பு எல்லாமுமாகச் சேர்ந்து கொண்டு நூலாகிறது.

    எனக்கு நாடகங்கள் - குறிப்பாக வானொலி நாடகங்கள்தான் அதிகமாய்ப் புகழீட்டித் தந்தன. வானொலி நாடகக் கலையறிந்த பத்து பேரைச் சலித்தெடுத்தால் நானும் உண்டென்கிற பெருமையை வானொலி வித்தகர்கள் அமரர் சுகி. சுப்பிரமணியம், திருவாளர்கள் கலைமாமணி பட்டுக்கோட்டை குமாரவேல், எம். கே. மூர்த்தி, புனிதவதி இளங்கோவன், கலைமாமணி தஞ்சைவாணன், விஜய திருவேங்கடம், துறைவன், ஏ. நடராசன், டி.வி.ஆர். சாரி, எ.ஏ. ஹக்கீம், கோ. செல்வம் போன்றோர் அளித்த பயிற்சியும், உற்சாகமுமே காரணம். அவர்களுக்கெல்லாம் நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

    அச்சேறுகிற காரணத்தால் கவனமாக சில சர்ச்சைக்குரிய நகைச்சுவைகளை களைந்தெறிந்துவிட்டு பாடநூலைப் போலப் பொறுப்புணர்வோடு தந்திருக்கிறேன். ஆனால் மேடையேற்றும்போது புகுந்து விளையாடலாம். விளையாட அவ்வளவு வாய்ப்புகள் (Scope) உள்ள நாடகமிது. அவகாசமிருந்தால் மீண்டும் மேடையேற்றுவோம். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலக மனமகிழ் மன்றங்களிலும் இந்நாடகத்தை நடித்து மகிழலாம். நூலில் இப்படிப் படித்தும் மகிழலாம்.

    என்றும் அன்புடன்

    ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்

    *****

    அணிந்துரை

    ‘வானொலி அண்ணா' என்.சி. ஞானபிரகாசம் M.A., B.Ed., D.J.,

    நிகழ்ச்சி தயாரிப்பாளர் (ஓய்வு)

    வானொலி நிலையம், சென்னை

    "உங்களை அதிகமாகச் சிந்திக்க வைக்கும் புத்தகங்களே... உங்களுக்குப் பயன்படப்போகும் புத்தகங்கள் ஆகும்" என்றார் அறிஞர் பார்க்கர்.

    'கலைமாமணி' ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதிய 'வருகிறாள் உன்னைத் தேடி' - நூல் வாசிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. நன்றி!

    'மனிதநேயம் - மாண்புமிகு வாழ்க்கை - மண்ணில் எவர்க்கும் அஞ்சாமை' என்ற உயர்ந்த குறிக்கோள் உள்ளவர் நண்பர் ஏர்வாடியார். உண்மையில் எல்லோருக்கும் பயன்படப் போகும் நல்ல நாடக நூல்தான் வருகிறாள் உன்னைத் தேடி.

    எந்தக் கருத்தையும் எளிதில் மக்கள் மனதில் பரப்பப் பல வகைகள் உண்டு. இருப்பினும் சிறந்தது நாடகம் தான். வானொலி - தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் தரமான நாடகங்களை தவறாமல் தந்தவர் நண்பர் ஏர்வாடியார்.

    ‘ஜாதகம் சிலருக்கு சாதகம்' என்பர் ஆன்றோர். ஆனால் ஜாதகம் பலருக்கு பாதகம். அதுபோல இந்நூலின் கதாநாயகன் கல்யாணராமனின் ஜாதகத்தில், தோஷம் இருக்கிறது.

    அதனால் கல்யாணராமன் கல்யாணம் தள்ளிப் போகிறது; ஆனால் நாடகம் முழுவதும் நகைச்சுவையால் நாயகன் நம் மனதை அள்ளிப் போகிறார். படிக்க படிக்க இந்த நாடகம் உங்களை சிரிக்க வைக்கும்; சிந்திக்கவும் வைக்கும்.

    "ஜோசியம் எப்பவும் வாழ்க்கைக்கு ஒரு 'Outline' தானே தவிர, ஜோசியமே 'Out and out' வாழ்க்கையை நிச்சயப்படுத்த முடியாது"

    என்ற ஏர்வாடியாரின் வைர வரிகள் நாடக வெற்றிக்கு நல்ல சான்றாகும். ஆனால் நூலாசிரியருக்கு 'arranged marriage' மீது ஒரு ஆசை இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இல்லையெனில் இப்படி எழுதுவாரா?

    பழகி முடிச்சுக்கிற கல்யாணங்களைவிட பார்த்து முடிச்சு வைக்கிற கல்யாணங்களுக்குத் தான் பலமான அஸ்திவாரம்

    என்று எழுதியுள்ளார். ஆனால், கல்யாண தரகர் கதாபாத்திரம் சொல்வது போல.

    வாழ்க்கைன்னா பிரச்னைகள் இருந்து கொண்டு தான் இருக்கும். அதையே நினைச்சுகிட்டு மத்த சந்தோஷத்தை அனுபவிக்காம இருக்கக்கூடாது; தொடர்ந்து போய்கிட்டே இருக்கணும்

    இதுதான் ஏர்வாடியாரின் நல்ல கருத்தாகும்.

    என் கருத்து என்னவென்றால், நாம் இந்த உலகத்தில் பிறந்திருக்கிறோம். யாரையும் திருத்துவதற்காக நாம் பிறக்கவில்லை; திருப்தியாக இருந்துவிட்டு போகத்தான் வந்திருக்கிறோம். நாடக நூல் வெற்றி தரும்.

    மணிவிழா கண்ட நாயகன் வாழ்க! வளர்க!!

    வாழ்த்துகள்.

    என்றும் அன்புடன்,

    என்.சி. ஞானபிரகாசம்

    *****

    கல்யாண மொழிகள்...

    எத்தனை நாள் வேணும்னாலும் விரதத்திலே இருக்கலாம். ஆனா ஒரு நாள் கூட விரகத்திலே இருக்க முடியாது. விரகம் வந்திட்டாலே வாழ்க்கை நரகம் தான்.

    -கல்யாணராமன்

    முன்யோசனையோடு நடந்துகிட்டா விவாகரத்தே வராது... ரொம்ப முன்யோசனையோடு நடந்துகிட்டா கல்யாணமே நடக்காது.

    - வரதராஜன்

    "கல்யாணங்களாலே பிரச்சினைகள் உண்டாகறது உண்மைதான். அதுக்காக கல்யாணமே பண்ணிக்கக் கூடாதுன்னு சொல்றது பைத்தியக்காரத்தனம். விபத்துக்கள் நடக்குதுங்கிறதுக்காக பிரயாணங்கள் நடக்காமலா இருக்கு? விபத்துக்களைத் தவிர்க்க நினைக்கிறதுதான்

    Enjoying the preview?
    Page 1 of 1