Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naattu Nadappu Part 2
Naattu Nadappu Part 2
Naattu Nadappu Part 2
Ebook116 pages43 minutes

Naattu Nadappu Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எந்த ஒரு விஷயத்தையும் மேற்பார்வை மூலம் ஒரு முடிவுக்கு கொண்டு வரமுடியாது. அதை ஆழ்ந்து அனுபவித்தால் தான் அதன் உண்மை நிலை தெரியவரும் இதேபோல் நாட்டு நடப்பிலும் சில உண்மை நிலையை ஆராய்வோம் நகைச்சுவை உணர்வுடன்…

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580148907594
Naattu Nadappu Part 2

Read more from S.Ve. Shekher

Related to Naattu Nadappu Part 2

Related ebooks

Related categories

Reviews for Naattu Nadappu Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naattu Nadappu Part 2 - S.Ve. Shekher

    https://www.pustaka.co.in

    நாடகப்பிரியா-வின் S.Ve. சேகர்-இன்

    நாட்டு நடப்பு பாகம் 2

    Nadagapriya-Win S.Ve. Shekher-In

    Naattu Nadappu Part 2

    எழுத்து

    ராதா

    எண்ணம், இயக்கம்

    S.Ve. சேகர்

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காதலை நியாயப்படுத்துதல்

    வாடகை வீடு

    சந்தேகம்

    நியூஸ் பேப்பரில் எஸ்.வி

    கிரிக்கெட்

    பியூட்டி பார்லர்

    பட்டாசு கடை

    வக்கீல் ஆலோசனை கேட்டு வருவது

    மெகா சீரியல் டிஸ்கஷன்

    வாஸ்து சாஸ்த்திரம்

    ஃபைனான்ஸ்

    மேடைப் பேச்சு

    மிருகவதை

    கன்ஸல்டேஷன்

    கரெண்ட் கட்

    தண்ணீர் பஞ்சம்

    டாக்டர் ஆலோசனை

    நாய் குழப்பம்

    ஈவ் டீசிங்

    போலீசுக்கு ஐடியா

    மெகா சீரியல்

    சின்ன வீடு

    ஆட்டோக்காரன்

    மேடையில் கலாட்டா

    யுனானி

    நான் ஏற்றிய விளக்கு ஜோதியாக பிரகாசிக்க கண்டு...

    1970-74 முதல் நான் சந்தித்த எஸ்.வி. சேகருக்கு பல கோணங்கள், நாடகங்களுக்கு ஒலிப்பதிவு செய்யப்பட்ட கோவில் மணி, ரயில் ஸ்டேஷன், விமானம் புறப்படுதல் - ஸ்பெஷல் எஃபக்ட் சப்ளை, குமுதத்திற்கு ஒரு போட்டோ எடுக்கணுமாம் சாய்ந்தரத்துக்குள்ளே யாரு போட்டோ கிராபர்? நான்தான், சிலோன் ரேடியோவிற்கு ஹார்லிக்ஸ் விளம்பரத்திற்கு ஒரு சீரியல் வேணும் யார் தயாரிக்கிறீங்க. நான்தான். இப்படி எத்தனையோ! சிரித்த முகம் நாடக கலைஞர்களுக்கு பழக்கப்பட்ட முகம்.

    1973-இல் ஒரு நாள் சேகர் இதர சில நண்பர்களுடன் வந்தார். நாங்க ஒரு ட்ரூப் ஆரம்பிக்க போறோம். நீங்க முதல் நாடகத்தை எழுதி இயக்கணும். அதற்கு முன்தான் திரு. வி. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு நாடகம் எழுதி கொடுத்திருந்தேன். உணர்ச்சிவசப்பட்ட இளைஞர்கள் ஏதோ மனக்கசப்பில் பேசுகிறார்கள் என்று நினைத்து ஊறப்போட்டேன். பின்னர் எட்டு மாதங்களுக்குப் பிறகும் அதே வேகத்தை பார்த்த பின்னரே ஒப்புக்கொண்டேன். அந்த முதல் நாடகம்தான் அவனொரு தனிமரம்... என் நண்பரும் என் எழுத்தின் மேல் அபார மோகம் கொண்ட திரு. நாகேஷ் நான் எகரிப்ட் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் தினமும் என் அறைக்கு வருவார். கதையில் மிகவும் கவர்ந்து போனார். ‘அவரையே நடிக்க வைக்கலாம், முதன் முதல் புது குழு ஆரம்பிக்கிறீர்கள் நாடக புக்கிங் பிரச்சினை வரக்கூடாது’ என்றேன். தங்களுடைய தனித்தன்மை போய்விடப் போகிறதே என்று முதலில் பயந்தாலும் பின்னர் ஒப்புக் கொண்டனர். நாடகம் சீரியஸ் நாடகம். பண்பட்ட ஒரு குழு, பல நாட்டு நடப்பு ஆண்டுகள் நாடகம் போட்ட குழு சாதித்ததை முதல் நாடகத்தில் சாதித்தார்கள்.

    அதில் ஒரு மகன் பாத்திரம். விரக்திபூண்ட அந்த பாத்திரத்தில் நடிப்பவர் அவ்வப்போது ஆபீஸ் ஷிப்ட் வந்து கஷ்டப்பட, ஒரு நாள் சேகர் நடிக்க முன் வர, நான் YGP நாடகங்களில் நடித்து வந்த சமயம், நேரே செல்ல முடியவில்லை... இந்த ஆளு காமடி பண்ற ஆளு. அது நெருப்பை கக்கற பாத்திரம். பண்ணிட்டேன் சார்... வெற்றி... நான் சீரியசா பேசறப்ப யாரும் சிரிக்கலை அதே தமாஷ் பேச்சுடன் சேகர். சிறப்பாக நடித்ததாக ட்ரூப் மெம்பர்களும் சொன்னவுடன் எனக்கு நிம்மதி. நிம்மதி.

    பின்னர் தானே முன் நின்று குழுவை நடத்தி தானே நடித்து தனக்கும் குழுவுக்கும் உயர்ந்த இடத்தை சேர்த்த விஷயம் சொல்ல வேண்டியதில்லை. இன்று நடிகர்களில் சேகருக்கும், குழுக்களில் நாடகப்பிரியாவுக்கும் நாடக சரித்திரத்தில் ஒரு தனிப்பெயர் உண்டு. இந்த உண்மையை சாதனையாக தன் நாடக வசூல்களின் மூலம் செய்வதர் சேகர்... காமெடி நாடகங்களுக்கு கவுரவம் சேர்த்த வெகு சிலருள் முக்கியமானவர் சேகர். எல்லாவற்றையும்விட, எளிமையானவர். பிரியமுள்ள சேகர் நீங்கள் 18 (வருடங்கள்) படிகள் ஏறி உயர்ந்த நிலைக்குப் போனாலும், அதே 1973-இல் சந்தித்த சேகரைத்தான் பார்க்கிறேன். அதே எளிமை, அதே வெகுளித்தனம். சாதனை உங்களை மாற்றவில்லை. அது போதும்.

    வானம் கைக்கெட்டும் தூரத்தில்தான். நான் ஏற்றிய விளக்கு ஜோதியாக பிரகாசிக்கக் கண்டு பூரிக்கிறேன். வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்.

    - மௌலி

    3000-வது நாடக விழா மலரிலிருந்து

    சமர்ப்பணம்

    நான் நடிக்க வந்ததே ஒரு விபத்து என்று சொல்வேன். ஒரு முறை இயக்குநர் திரு. ராமநாராயணனின் சுமை படத்திற்காக விஜயசாந்தியுடன் ஜோடியாக நடிக்க மேட்டூர் அணைக்கு செல்லும்போது சத்தியமங்கலம் என்ற ஊரில் நடந்த விபத்து (எங்களை காப்பாற்றிய ராஜா ராமனுக்கு நன்றி) என்னுடைய நண்பரான (கோபு) பாபுவை நாடக கதாசிரியனாக நான் ஆக்கக் காரணமாக அமைந்தது. இசையமைப்பாளராக இருந்தவர். கதை வசனகர்த்தா ஆனது, எங்களின் காட்டுல மழை மூலமாக. பின் 1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி, வால் பையன் மூலமாக அவரின் திறமை வெளிப்பட்டது. இன்றும் பேசப்படும் முதல் தொலைக்காட்சித் தொடர் வண்ணக் கோலங்களுக்கும் அவருக்கு எழுத வாய்ப்பளித்தவர் என் தந்தை எஸ்.வி. வெங்கடராமன்.

    நாகேஷ் ஒரு படத்தில் சொன்னார் நண்பனோட மரணத்தை பொறுத்துக்கலாம்; ஆனா நட்போட மரணத்தை பொறுக்க முடியாது என்று அதையும் பொறுத்துக் கொண்டு அவரவர் வழியில் சென்று கொண்டிருந்தாலும் நாடகப் பிரியாவின் நாடக எண்ணிக்கைகளுக்கு கணிசமான பங்களித்தவர் என் பழைய நண்பர் (கோபு) பாபு.

    ஒரு நண்பனை எப்போதும் அவனுடைய அத்தனை குணங்களோடும் நண்பனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். இரண்டு பேர் சேரும்போது விவாதிக்கும் போது வியாபாரம் செய்யும்போது கருத்து வேறுபாடு ஏற்படுவது சகஜம்தான். ஆனால் அதையும் மீறி நண்பர்களாக தொடருவார்களேயானால் அது மிகவும் சிறப்பான ஒன்றாகும். சுமார் 25 வருடங்களாக எனக்கு பி.எஸ். ராஜாவைப் பழக்கம். குடும்ப

    Enjoying the preview?
    Page 1 of 1