Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

S.Ve. Shekher Bathilgal Part 2
S.Ve. Shekher Bathilgal Part 2
S.Ve. Shekher Bathilgal Part 2
Ebook79 pages28 minutes

S.Ve. Shekher Bathilgal Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இலக்கிய சுவைகளில் மிகவும் நுட்பமானது நகைச்சுவை. இச்சுவையை உணர்ந்து போற்ற தனி ஆற்றல் வேண்டும். அப்படிப்பட்ட ஆற்றல் நம் நகைச்சுவை நடிகர் எஸ்.வி. சேகருக்கு உண்டு. இவர் பொதுவான கேள்விகளுக்கு தன் நகைச்சுவை மூலம் மிகவும் எதார்த்தமாக கூறிய பல பதில்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி உள்ளதா? இல்லையா? எஸ். வி. சேகரின் பதில்கள் சிரிப்புடன்...

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580148907593
S.Ve. Shekher Bathilgal Part 2

Read more from S.Ve. Shekher

Related to S.Ve. Shekher Bathilgal Part 2

Related ebooks

Related categories

Reviews for S.Ve. Shekher Bathilgal Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    S.Ve. Shekher Bathilgal Part 2 - S.Ve. Shekher

    https://www.pustaka.co.in

    எஸ்.வி. சேகர் பதில்கள் பாகம் 2

    S.Ve. Shekher Bathilgal Part 2

    Author:

    S.Ve. சேகர்

    S.Ve. Shekher
    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சேகர் VS சேகர்

    நாடகம் பற்றி எஸ்.வி. சேகருக்கும், எனக்கும் தீர்மானமான அபிப்பிராயங்கள் உண்டு. இவை அடிப்படையில் ஒன்றுக்கொன்று வேறுபட்டாலும் அவர் நாடகங்களைப் பார்க்கும் போது என் கவலையை மறக்கின்றேன். அவர் என்மீதும் என் நாடகங்கள் மீதும் (அவற்றை அவர் படித்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை) அளவற்ற மரியாதை வைத்திருக்கிறார்.

    நாடகங்கள், பார்க்க வருகின்ற மக்களை மகிழ்விக்கத்தான் என்பது சேகருடைய உறுதியான அபிப்ராயம்.

    அமெரிக்காவில் பாப் ஹோப்புக்கும் இடமிருக்கிறது. ஓநீலுக்கும் இடமிருக்கிறது. இருவருக்குமே தேசிய அந்தஸ்து கொடுத்திருக்கிறார்கள் அமெரிக்கா மக்கள். வாஷிங்டனிலிருக்கும் லைப்ரரி காங்கிரசுக்குப் போய்ப் பார்த்தால் இது புரியும். நம் நாட்டில்தான், சீரியஸ் விஷயங்களும், நகைச்சுவையும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்ற கொச்சையான கருத்து நிலவி வருகிறது. ஒன்றுக்கொன்று வேறுபாடானவையே தவிர, முரண்பட்டவை அல்ல.

    நான் சேகருடைய சில நாடகங்களை பார்த்திருக்கிறேன். வாய்விட்டும் சிரித்திருக்கின்றேன். "A Conneticut Yankee in the King –Arthurs Court (Mark Twain) ரசிக்கின்றவர்கள், நிச்சயமாக மகாபாரதத்தில் மங்காத்தாவை ரசிக்காமல் இருக்க முடியாது. பெரும்பான்மையான அரசியல்வாதிகள், அன்றாடம் அவர்கள் செய்கைகளினால், மக்களுக்கு நகைச்சுவை விருந்து அளித்து வரும்போது, அவர்களைக் காட்டிலும் அதிக அளவுக்கு ஹாஸ்ய அறுசுவை உணவு வழங்க வேண்டுமென்றால் இது சேகருக்குப் பெரிய சவால்தான். இந்தச் சவாலை வெற்றிகரமாக சேகர் எதிர்கொண்டு வருகிறார் என்பதற்கு என் பாராட்டுக்கள். தத்துப் பிள்ளையும், பெரியப்பா"வும், இதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள் உண்மை, கற்பனையைக் காட்டிலும் விநோதமானதா அல்லது கற்பனை உண்மையைக் காட்டிலும் விநோதமானதா என்பது பற்றி ஒரு பட்டிமன்றமே நடத்திவிடலாமென்று தோன்றுகிறது.

    புரியாமல் ஒன்றைப் பார்த்து புத்திசாலி என்ற பட்டம் பெறுவதைக் காட்டிலும் மனமார்ந்து வாய்விட்டுச் சிரிப்பதே மேல் என்று எல்லாரும் சேகர் நாடகங்களுக்கு வருகின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

    நல்ல இசையைக் கேட்டு உருகாதவன் கொலை செய்ய அஞ்ச மாட்டான் என்று கூறிய ஷேக்ஸ்பியர், நல்ல நகைச்சுவையைக் கேட்டு ரசிக்காதவர்களையும் அவ்வாறு சித்தரித்திருக்கலாமென்று தோன்றுகிறது.

    எஸ்.வி. சேகர் யாருடனும் போட்டியாக இல்லை. அவர்தான் அவருக்குப் போட்டி.

    - இந்திரா பார்த்தசாரதி

    சமர்ப்பணம்

    ராம லக்ஷ்மணன் பரத சத்ருக்குணன் போல அப்படீன்னா எனக்கு ஞாபகம் வருவது ராஜாமணி, விசு, கிஷ்மு, நரசிம்மன் சகோதரர்கள். விசுவின் விஷ்வ சாந்தி குழுவினருக்கு ஆரம்பம் முதலே பல நாடகங்களுக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்து கொடுத்துள்ளேன். அப்போது எங்களது ரெகார்டிங் நேரம் இரவு 10 முதல் காலை 5 மணி வரை. இப்படி ஆரம்பித்த எங்கள் நட்பு இன்று விசு என்னை தன்னுடைய ஒரு இளைய சகோதரனாக நினைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இதுவரை விசுவுடன் சுமார் 19 படங்கள் நடித்துள்ளேன். ஓரிரண்டு தவிர அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. விசுவைப் பொறுத்தவரை அன்புக்கு மட்டுமே கட்டுப்பட்டவன். எதையும் முறையோடு, நேர்மையோடு செய்பவன். உண்மைக்கும் நியாயத்துக்கும் போராடத் தயங்காதவன். ஆனால் உணர்ச்சிமயமானவன். எங்களுடைய ஒன் மோர் எக்சார்சிஸ்ட் நாடகத்தின் அரங்கேற்றத்திற்கு முன் தினம் ரிகர்சலைப் பார்த்துவிட்டு, கடைசி 8 காட்சிகளை இரவு 10 மணிக்கு மேல் காலை 4 மணிக்குள் எழுதிக் கொடுத்து எங்கள் குழுவின் அந்தஸ்தை உயர்த்தியவன்.

    நாங்கள் 1974-ல்

    Enjoying the preview?
    Page 1 of 1