Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

One More Exorcist
One More Exorcist
One More Exorcist
Ebook117 pages46 minutes

One More Exorcist

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எக்ஸார்சிஸ்ட் படம் பார்த்துவிட்டு வந்த ராமானுஜம், லக்ஷ்மி தம்பதியருக்கு பிறந்த ஆண் குழந்தை ராகவன் பிறந்தவுடனேயே பேச ஆரம்பிக்கிறான். அவனது இருபதாவது பிறந்த நாளிலிருந்து பல வினோத செயல்களைச் செய்கிறான். அவனைப் போலவே பெருந்தேவியை ராகவனுக்கு கல்யாணம் செய்கின்றனர். ஓங்கிய ராகவனின் கை இறங்கி பெருந்தேவியின் ஆட்சி துவங்குகிறது. பெருந்தேவிக்கு குழந்தை பிறந்தவுடன் இருவரின் அபூர்வ சக்திகளும் பிறந்த குழந்தையை அடைய One more exorcist. If one keeps firm Fol

Languageதமிழ்
Release dateJan 18, 2021
ISBN6580148907600
One More Exorcist

Read more from S.Ve. Shekher

Related to One More Exorcist

Related ebooks

Related categories

Reviews for One More Exorcist

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    One More Exorcist - S.Ve. Shekher

    https://www.pustaka.co.in

    நாடகப்பிரியா-வின் S.Ve. சேகர்-இன்

    ஒன்மோர் எக்ஸார்சிஸ்ட்

    Nadagapriya-Win S.Ve. Shekher-In

    One More Exorcist

    கதை, வசனம்

    கிரேஸி மோகன்

    நன்றி

    கே.கே. ராமன் & விசு

    ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், நாடகமாக்கம், ஸ்க்ரிப்ட் எடிட்டிங், டைரக்‌ஷன், தயாரிப்பு

    எஸ்.வி. சேகர்

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி - 1

    காட்சி - 2

    காட்சி - 2A

    காட்சி - 3

    காட்சி - 4

    காட்சி - 5

    காட்சி - 6

    காட்சி - 7

    காட்சி - 8

    காட்சி - 9

    காட்சி - 10

    காட்சி - 11

    காட்சி - 12

    காட்சி - 13

    காட்சி - 14

    தலைவி வாழ்த்த தரணி வாழ்த்தும்

    அந்தணன் பாரதி பாடிய புதுமைப் பெண் என்ற கவிதை வரிகளுக்கு வடிவங் கொடுத்து மகத்திலே பிறந்து ஜகத்தினை காத்திட புரட்சித் தலைவியாக அன்னை சக்தி அவதரித்திருக்கின்றாள். இயல் இசை நாடகம் என்ற முத்தமிழுக்கும் மொத்த இலக்கணமல்லவா காவிரி தந்த கலைச் செல்வி. மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அவர்கள் எஸ்.வி. சேகரின் 3000-வது நாடக வெற்றி விழாவிற்கு வருகை தந்து அதன் மூலம் தமிழ் நாடக உலகுக்கே மதிப்பை உயர்த்திவிட்டார்.

    ஒரு நாடகம் எழுதி ஒரு தடவைகூட போடவே முடியாத இந்த நாளில் 3000 நாடகங்களை நடத்திய எஸ்.வி. சேகர் பாராட்டப்பட வேண்டியவர். கவலையை மறந்து சிரிக்க வைப்பவரைப் பாராட்ட, கவலையை போக்கி கண்ணீரை துடைக்க வந்த காவல் தெய்வமே வருகை புரிவது நியாயமான பாராட்டு. திறமையை பெருமை பாராட்டுகிறது.

    என் போன்றவர்களை தனிப்பட்ட முறையில் மதிப்பிற்குரிய மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அவர்கட்கு தெரிய நியாயமில்லை. நாடகவுலகம் மீண்டும் சிறப்படையாதா, மறுமலர்ச்சி கிடைக்காதா என்று அணைந்த விளக்குகள், அதனால் அணைந்து போன அடுப்புகளின் நடுவில் நாடக உலக வருமானத்தை நம்பி வாழும் நலிவுற்ற குடும்பங்களுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள். இன்று நண்பர் எஸ்.வி. சேகர் மூலம் ஒரு நம்பிக்கை ஒளி தெரிகின்றது. ஆம். அவர் மாண்புமிகு தமிழக முதல்வரை அழைத்ததால் அவர்தம் கருணை நிறைந்த பார்வையும், அந்த புனிதப் பாதம் பட்டதால் நாடக உலகுக்கு அகலிகை சாப விமோசனம் போல் நல்லது நடக்கும் என நம்புகின்றோம்.

    சேகரின் கைராசி மீது எனக்கு அலாதி நம்பிக்கை. கள்ளங்கபடமற்ற சுபாவம். எளிதில் எவரையும் பேச்சால் கவரும் ரசவாத வித்தை தெரிந்த உதவும் கரங்கள். பொதுவாக அவர் சம்பந்தப்பட்ட நாடகம். சினிமா கதைகளை என்னிடம் டிஸ்கஸ் செய்து அபிப்ராயம் கேட்பார். அதன்மூலம் நெருக்கமான சேகர், வசூல் ராசி உடையவர். முதல் படம் டைரக்ட் செய்யும் டைரக்டர்களுக்கு எஸ்.வி. சேகர் காம்பினேஷன் கிடைத்தால் 100 நாள் படம் நிச்சயம். டைரக்டர் விசுவின் முதல் படம் - ‘மணல் கயிறு’, டைரக்டர் பாசில் - ‘பூவே பூச்சூடவா’, டைரக்டர் ராமநாராயணன் படம் - ‘சுமை’, டைரக்டர் வெங்கட் ‘தாம்பத்யம் ஒரு சங்கீதம்’, டி.பி. கஜேந்திரன் ‘வீடு, மனைவி, மக்கள்’.

    இந்த வரிசையில் சேகரை ஹீரோவாக நடிக்க வைத்து கவுண்டமணி முக்கிய வேடத்தில் நடித்த டைரக்டர் விஜயசிங்கத்தின் முதல் படம் ‘பணம் பத்தும் செய்யும்’, சபாக்கள் முடங்கி சுருங்கிய நேரத்தில் தற்போது ‘பெரிய தம்பி’ நாடகம் மூலம் கேட் கலெக்‌ஷனில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்திருக்கிறார்.

    சேகர் நாடகக்குழு நடத்தும் பாணி தனி பாணி. அவர் குழுவைச்சேர்ந்த நடிக நண்பர்கள் இல்லத்துக்குத் தேவையான பொருள்கள் ஒவ்வொரு 100வது நாடகத்திலும் கிடைத்து விடும். பீரோ, டி.வி., ரிப்ரிஜிரேட்டர், மிக்ஸி, கிரைண்டர் இப்படி தருவார். நான் விளையாட்டாக சேகரிடம் சொல்வதுண்டு. இரு பெண்களைப் பெற்ற நான் உங்களுக்கு இரண்டு நாடகம் எழுதியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்குமென்று. எஸ்.வி. சேகர் அடுத்தவர் மனம் நோக பேசமாட்டார். அடுத்தவரை பாராட்ட தயங்க மாட்டார். பகையின்றி பழகுவார். இதுதான் எஸ்.வி. சேகரின் தனிப்பண்பு.

    இந்த நற்பண்பின் விளைவுதான் இந்த வெற்றி. அதாவது 3000-வது நாடக விழா நடத்தி அதில் கலந்து கொண்டு சேகரை பெருமைப்படுத்தி பாராட்ட மாண்புமிகு தமிழக முதல்வர், புரட்சித்தலைவி அவர்கள் வருகை புரிவது எஸ்.வி. சேகரின் நல்ல இதயத்துக்கு நாடகத்தாய் தரும் பரிசு.

    தலைவி வாழ்த்த தரணி வாழ்த்தும். தலைவி பாராட்ட தாய்க்குலமே பாராட்டும்.

    இது ஊரறிந்த உண்மை, அந்த தரணி புகழ் பாராட்டுக்கள். எனது நண்பர் எஸ்.வி. வெங்கட்ராமனின் மகன் எஸ்.வி. சேகரை சேரட்டும். வாழ்த்தும் வணக்கமும்.

    - அன்புடன் வியட்நாம் வீடு சுந்தரம்

    3000-வது நாடக விழா மலரிலிருந்து

    சமர்ப்பணம்

    பொதுவாக ஒரே துறையில் இருக்கும் இருவர்கள் நண்பர்களாக இருப்பது அரிது. அதுவும் போட்டி, பொறாமை இல்லாமல் இருப்பதை அதைவிடவும் அரிதான விஷயம். மதிப்பும் மரியாதையும் அன்பும் ஒருமித்த கருத்தும் உடையவர்களாக இருந்துவிட்டால் அது மிகவும் அதிசயம். அப்படிப்பட்ட அதிசயத்துக்குச் சொந்தமானவன் என் நண்பன் ராஜா. பொது வாழ்க்கையில் டி.வி. நியூஸ் வரதராஜன் என்பார்கள். ஊருக்கே டி.வி.யில நியூஸ் படிச்சாலும் யாரைப் பத்தியும் தப்பா பேசத் தெரியாதவர். கடவுள் பக்தி மிக்கவர். அவருடைய முதல் நாடகத்தில் நான் டி.வி.யில் தோன்றி நடித்தேன். மேடை நாடகத்தின் இடையில் அந்தத் தொலைக்காட்சிப் பகுதி மேடையில் திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நாடகம் ஜோடிப் பொருத்தம். அன்று ஆரம்பித்த எங்களின் நட்பு இன்று பாசம் மிகுந்த ஒரு குடும்ப நட்பாக மாறி உள்ளது. சில சமயம் நான் நினைத்துப் பார்ப்பதுண்டு. இந்த வரதராஜன் நம்பளை புகழற அளவுக்கு நாம அப்படி என்ன பண்ணிட்டோம் போலித்தனம் இல்லாமல், புறம் பேசாமல், வாய்ப்புக்களுக்கு காக்கா பிடிக்காமல் கடவுளுடைய அருளையும், பெற்றவர்கள் ஆசியையும், மனைவி உஷாவின் உதவியையும், தன் திறமையையும் மட்டுமே நம்பி இன்று தமிழகத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1