Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aayiram Uthai Vaankiya Aboorva Sigamani
Aayiram Uthai Vaankiya Aboorva Sigamani
Aayiram Uthai Vaankiya Aboorva Sigamani
Ebook101 pages40 minutes

Aayiram Uthai Vaankiya Aboorva Sigamani

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வேலைக்குப் போகாமல் அடிக்கடி பெண்கள் வம்பில் மாட்டும் சிகாமணியை மதுரைக்கு வேலை விஷயமாக அனுப்புகிறார். அப்பா விஸ்வநாதன். அந்த வேலைக்கு போகாமல் ஊர் திரும்பும் சிகாமணி மதுரையில் காவேரி என்ற பெண்ணை ஏமாற்றி விட்டு வந்ததாக பழி சுமத்துகிறான் மயில்பாண்டியன் சிகாமணிக்கு அதிர்ஷ்ட தேவதையின் பார்வை கிட்டுகிறது. மயில்பாண்டி, சிகாமணி போலவே இருக்கும் எம்.எல்.ஏ. பட்டாபி மாதிரி அரசியலுக்கு நுழைந்து கலாட்டா செய்தால் நிறைய பணம் கொடுப்பதாகச் சொல்கிறான். வெற்றிகரமாக எம்.எல்.ஏ. வேடத்தில் வருகிறான் சிகாமணி. ஆனால் எதிர்பாராத விதமாக ஆட்சி கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி அமுலுக்கு வருகிறது. காவேரி, சிகாமணியை மணக்கிறாள்

Languageதமிழ்
Release dateNov 27, 2021
ISBN6580148907586
Aayiram Uthai Vaankiya Aboorva Sigamani

Read more from S.Ve. Shekher

Related to Aayiram Uthai Vaankiya Aboorva Sigamani

Related ebooks

Related categories

Reviews for Aayiram Uthai Vaankiya Aboorva Sigamani

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aayiram Uthai Vaankiya Aboorva Sigamani - S.Ve. Shekher

    https://www.pustaka.co.in

    நாடகப்பிரியா-வின் S.Ve. சேகர்-இன்

    ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி

    Nadagapriya-Win S.Ve. Shekher-In

    Aayiram Uthai Vaankiya Aboorva Sigamani

    கதை, வசனம்

    கோபு - பாபு

    நாடகமாக்கம், ஸ்க்ரிப்ட் எடிட்டிங், டைரக்ஷன், தயாரிப்பு

    S.Ve. சேகர்

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி - 1

    காட்சி - 2

    காட்சி - 3

    காட்சி - 4

    காட்சி - 5

    காட்சி - 6

    காட்சி - 7

    காட்சி - 8

    காட்சி - 9

    காட்சி - 10

    காட்சி - 11

    காட்சி - 11A

    காட்சி - 12

    காட்சி - 13

    எஸ்.வி. சேகருக்கு ஒரு பகிரங்க கடிதம்

    அன்புள்ள சேகர்,

    எல்லோரும் நாடகம் போடுகிறார்கள்! விழா நடத்துகிறார்கள் ஆனால் வ்யாருக்கு இந்தப் பெருமை கிடைத்திருக்கும்? நமது மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி தலைமையில்... ஒரு நாடக விழா!

    அதுவும் 3000 நாடகங்களை நீ நடத்திய பிறகு எடுக்கப்பட்ட விழா... எத்தனையோ தலைவர்களைப் பார்த்திருக்கிறோம். இந்தத் தலைவி இரும்புக்கரம் கொண்ட தலைவிதான்! அநியாயங்களுக்குத் தான் இரும்புக்கரமே தவிர... நியாயங்களுக்கு என்றுமே நேசக்கரம் நீட்டும் தலைவி... அது பொதுமக்களின் அல்லல்கள் ஆனாலும் சரி, கலைத்துறையைச் சார்ந்தோரின் அல்லல்கள் ஆனாலும் சரி அவர்கள் புரட்சித் தலைவி! ஆனால் நம்மைப் போன்ற கலை உலகத்தினருக்கு அவர் என்றும் கலைச்செல்வி...! எப்பொழுதும் அன்புக்கரம் நீட்டும் கலைச் செல்வி!

    அப்படிப்பட்ட பெருமை உடைத்தவர்கள் இன்று இந்த விழாவிற்குத் தலைமை தாங்குவது... எத்தனை நாடகக் குழுக்களுக்கு பொறாமையை உண்டு பண்ணியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். விழா முடிந்ததும் உனது தாயைவிட்டு திருஷ்டி சுற்றிப் போடச் சொல்! புரட்சித் தலைவி அவர்களோடு என்னையும் அந்த மேடையைப் பகிர்ந்து கொள்ள வைத்து எனக்கும் பெருமை தேடித் தந்திருக்கும் உனக்கு எனது இதயம் கனிந்த நன்றி. சேகர்! நீ எத்தனையோ சாதனைகளைக் கண்டுவிட்டாய்! அந்தச் சாதனைகளையெல்லாம் வரிசைப்படுத்த வேண்டிய அவசியமில்லை - பட்டியல் போட வேண்டிய தேவையில்லை!

    உன்னுடைய நாடகங்களின் மூலம் எத்தனை நல்ல காரியங்களுக்கு நீ நிதி உதவி செய்திருக்கிறாய்! உன்னிடம் எனக்கு ரொம்பவும் பிடித்தது என்ன தெரியுமா! உனது அந்த சிரித்த முகம்! அனாயாசமாக ஹாஸ்யத்தை அள்ளி வீசும் அந்த சுபாவமான தன்மை. பயமில்லாமல் நெஞ்சில் பட்டபடி உனது கருத்துக்களை வெளியிடும் அந்த நேர்மை அந்த Conviction உனது நிர்வாகத் திறமை! பொதுவாகவே நல்ல கலைஞர்கள் நிர்வாகத் திறமை படைத்தவர்களாக இருப்பார்கள். நமது முதல்வரும் அப்படித்தானே!

    உனது தன்னம்பிக்கை! நீ பொதுத் தேர்தலில் சுயேச்சையாக மைலாப்பூர் தொகுதியில் நிற்க நினைத்தபோது என்னிடம் வந்து சொன்னாய். நான்கூட கேட்டேன்! தேர்தலில் நின்று ஒரு தனிமனிதனாக உன்னால் ஜெயிக்க முடியும் என்று நினைக்கிறாயா என்று கேட்டேன்! எனக்கு இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. என்மீது நம்பிக்கை இருக்கிறது... வெற்றி தோல்வியைப் பற்றி எனக்குக் கவலையில்லை நீ சொன்னாய், அதே தொகுதியில் ஒரு பழுத்த அரசியல்வாதி சுயேச்சையாக நின்று வாங்கிய ஓட்டுக்களைவிட 300 ஓட்டுக்கள் நீ அதிகம் வாங்கிய போது... So Sekar is Right என்று எனக்குத் தோன்றியது.

    உனது நாடகப்பிரியாவின் Logoவாக ஒரு சின்னம் வைத்திருக்கிறாயே... ஒரு சிரிக்கும் மனிதமுகம் அது மட்டுமல்ல - If god be with us who can be against us என்கிற உங்கள் வாக்கியம் ஆக சிரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிற ஒரு குழுவாக உனது குழுவை ஆக்கிக் கொண்டு, நீ கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தையும் சரி... உலகத் தமிழர்களையும் சரி சிரிக்க வைத்துக் கொண்டு நீ செயல்படுகின்ற உனது Convictionம் சரி... எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த விஷயங்கள்!

    திரையுலகத்திற்கு ‘வறுமையின் நிறம் சிவப்பு’ மூலம் நான் உன்னை அறிமுகப்படுத்தினேன் என்று சொல்வதைவிட உன்னை அடையாளம் காட்டக்கூடிய பேறு எனக்குக் கிடைக்கிறது என்று நான் சொல்வதில் பெருமை அடைகிறேன் என்று சொன்னால்....Sure - I am not trying to be humble.

    உன்னைத் தெரிவதற்கு முன்பே உன் தந்தை எஸ்.வி. வெங்கட்ராமன் அவர்களை எனக்குத் தெரியும்... TRIPLICANE FINE ARTS CLUB போடுகின்ற நாடகங்களில் அவர் நடித்துவந்த காலம் முதற்கொண்டே இன்னும் சொன்னால் உனது தந்தை பெண்வேஷம் போட்டு நடித்தபோதெல்லாம் நான் அவரைக் காதலித்தேன் என்பதுகூட உண்மை. அப்படிப் பெயர்பெற்ற எஸ்.வி. வெங்கட்ராமனின்... மகன்... நீ என்று உன்னைப் பற்றிச் சொல்லப்பட்டது அந்தக் காலம்.... ஆனால் இன்று... எஸ்.வி. சேகரின் தந்தை என்று உனது தந்தை அழைக்கப்படுகின்ற நாட்களையும் இன்று காணும்போது அந்தத் தந்தையும் வள்ளுவரின் வாக்குப்படி இன்று பெருமிதத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதை நான் காண்கிறேன்.

    - அன்பன் கே. பாலசந்தர்

    (3000வது நாடக விழா மலரிலிருந்து)

    sv

    சமர்ப்பணம்

    புதிதாக ஒரு நாடகக் குழு ஆரம்பித்தால், பரவாயில்லையே, இந்த

    Enjoying the preview?
    Page 1 of 1