Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirumbi Vantha Manaivi
Thirumbi Vantha Manaivi
Thirumbi Vantha Manaivi
Ebook135 pages51 minutes

Thirumbi Vantha Manaivi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வசதியான வாழ்க்கை என்று பொய் சொல்லி பூமாவை மணக்கிறான் சுந்தரம். உண்மை தெரிந்த பூமா அதிர்ச்சியில் இறக்கிறாள். மறுமணம் செய்து கொண்ட சுந்தரம் பத்து வருடங்களுக்கு பிறகு பெரிய பணக்காரனாகிறான். அவன் மனைவி கர்ப்பமாகின்றாள். அந்த வசதியான வாழ்க்கையை அடைய விடாமல் தடுக்க திரும்பி வருகிறாள் முதல் மனைவி பூமா, ஆவியாக, அதன் விளைவு, அனைவராலும் பைத்தியக்கார நிலைக்குத்தள்ளப்பட்ட சுந்தரம் தற்கொலைக்கு முயல அவனை காப்பாற்றி அவனுக்கே மகளாக பிறக்கின்றாள்.

Languageதமிழ்
Release dateNov 29, 2021
ISBN6580148907555
Thirumbi Vantha Manaivi

Read more from S.Ve. Shekher

Related to Thirumbi Vantha Manaivi

Related ebooks

Related categories

Reviews for Thirumbi Vantha Manaivi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirumbi Vantha Manaivi - S.Ve. Shekher

    https://www.pustaka.co.in

    நாடகப்பிரியா-வின் S.Ve. சேகர்-இன்

    திரும்பி வந்த மனைவி

    Nadagapriya-Win S.Ve. Shekher-In

    Thirumbi Vantha Manaivi

    கதை, வசனம், டைரக்ஷன்

    கே.கே. ராமன் & சாரதி

    தயாரிப்பு

    S.Ve. சேகர், சுந்தா

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி - 1

    காட்சி - 2

    காட்சி 3

    காட்சி - 4

    காட்சி - 5

    காட்சி - 6

    காட்சி - 7

    காட்சி - 8

    காட்சி - 8A

    காட்சி - 9

    காட்சி - 10

    காட்சி - 11

    காட்சி - 12

    காட்சி - 13

    காட்சி - 14

    காட்சி - 15

    காட்சி - 16

    காட்சி - 17

    காட்சி - 18

    காட்சி - 19

    நின்று... நின்று... செல்லும்... பாஸஞ்சர்...

    1978-ஆம் ஆண்டு அப்பொழுது நான் ‘பரிட்சைக்கு நேரமாச்சா’ டிராமா ஓய்.ஜி. மகேந்திரனுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு அவர்கள் குழுவில் நடித்துக் கொண்டிருந்தேன். நாடகத்திற்கு வந்த எஸ்.வி. சேகர், நடுவில் எனக்கு ஒரு டிராமா எழுதித் தரக் கூடாதா? என்று கேட்டான். அப்பொழுது நான் விளையாட்டாக ‘மகாபாரதத்தில் மங்காத்தா’ நாடகத்தின் சுருக்கத்தை சொன்னேன். அது அவனுக்குப் பிடித்துப் போயிற்று. உடனே பர்சிலிருந்து 101 ரூபாயை எடுத்துக் கொடுத்து இதை உடனடியாக எழுதிக் கொடு என்று கூறினான். நானும் எழுதினேன். அரங்கேற்றமாகி எனக்கு நாடக உலகில் ஒரு பெரிய புகழை தேடித் தந்தது.

    அரை மணி டிராமா, ரேடியோ டிராமா, டி.வி. டிராமா என்றிருந்த என்னை 2 மணி நேர முழு நாடக ஆசிரியனாக ஆக்கியது ஒய்.ஜி. மகேந்திரன். ஆனால் என்னை ஊர் உலகு அறிய, சந்து பொந்துகளில் ஜி.கே. ஜி.கே என்று என்னை தெரிய வைத்தவன் எஸ்.வி. சேகர்... ஆஹா... எவ்வளவு அட்வர்டைஸ்மெண்ட், எத்தனை பத்திரிகையாளர்களிடம் அறிமுகம், எவ்வளவு மேடைகளில் மாலை, பொன்னாடை மரியாதைகள், மறக்க முடியுமா!

    1981-இல் ‘காதுல பூ’ நாடகப் பிரியாவுக்காக எழுதினேன். அதுவும் பிரமாதமாக ஓடி, என்னை ஒரு நாடக கதாசிரியனின் நட்சத்திர தகுதியை வாங்கிக்கொடுத்தது. பிறகு 6 வருஷ பிரிவுக்குப் பிறகு ‘எல்லாமே தமாஷ்தான்’, ‘எல்லாரும் வாங்க’, டி.வி. தொடர் ‘தேவை ஒரு மாப்பிள்ளை’ ‘தினந்தோறும் தீபாவளி’ டி.வி. அரை மணி நேர நாடகம் இப்படி எங்கள் நட்பு மறுபடியும் தொடக்கம். பிரிவு, நட்பு, இது எங்களிடையே வழக்கம் ஆகிவிட்டது.

    என் வீட்டில் இருக்கும் பல அத்தியாவசிய பொருட்கள் நாடகப்பிரியாவின் அன்பளிப்புதான். ஜில் என்று தண்ணீர் சாப்பிட நினைத்து, பிரிட்ஜை திறந்தால் நாடகப்பிரியாவின் முத்திரை பிரிட்ஜின் மேல் தோன்றும், காற்று வாங்க மின் விசிறியை போட்டால் நாடகப்பிரியா தலை மேல் சுற்றும். தோசை சாப்பிட ஆசை கொண்டு அரிசியை கிரைண்டரில் போட்டால், நாடகப்பிரியா சுழலும். சட்னி அரைக்க மிக்ஸியை இயக்கினால் நாடகப்பிரியா சுழன்று சட்னி கொடுக்கும். இப்படி எத்தனை பரிசுப் பொருட்கள்... எல்லாமே நாடகப்பிரியா 100, 200வது நாடக விழாவில் பரிசாக கொடுத்தது... இதற்கு மேலே வெளிநாட்டு பயணங்கள், எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்வான்.

    ஆம். எஸ்.வி. சேகர் பழகுவதற்கு இனிய உபயோகமுள்ள நண்பன், தாபங்கள் நிறைய உண்டு. குறைகளை பெரிதாக நினைக்காமல் பார்த்தால் நல்ல நம்பகமான நண்பன். கதாசிரியர்களுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுக்கத் தெரிந்த நாடக டைரக்டர். கதாசிரியர்களின் தேவை அறிந்து உதவும் ஒரு நல்ல தாராள மனம் கொண்ட தயாரிப்பாளன். கதைக்கு தேவையானதை மட்டும் வெட்டி ஒட்டும் காகித எடிட்டர். ஜோக்குகளை பரிமளிக்கச் செய்யும், மேடைகளில் எல்லோரையும் நடிக்க வைத்து பார்க்கும், ஒரு நல்ல டைரக்டர். தன் சம்பந்தப்பட்ட எல்லோர் குடும்பத்திலும் நடக்கும் நல்லது, பொல்லாததுகளுக்கு நேரில் வரும் ஒரு கர்வமில்லாத பணக்காரன். இப்படி சேகருக்கு ஆயிரம் முகங்கள் உண்டு. எல்லா நேரத்திலும் எல்லா முகங்களும் சிரிக்க வேண்டும் என்று நாம் பேராசை படலாமா!

    நான் எழுதிய இரண்டு படங்களுக்கு அவன்தான் கதாநாயகன். இப்படி எங்கள் நட்பும் நின்று நின்று சென்று கொண்டிருக்கும் பாஸஞ்சர் வண்டி போல் தொடர்கிறது... வாழ்க அவன் நலம். வளர்க எங்கள் நட்பு.

    - ஜி.கே.

    சமர்ப்பணம்

    என்னுடைய முதல் படம் வறுமையின் நிறம் சிவப்பு. படம் வெளிவந்த பிறகு அதைப் பார்த்துவிட்டு என்னை அழைத்தால் மட்டுமே அடுத்த படம் ஒப்புக்கொள்வது என்ற முடிவில் இருந்தேன். அப்போதும் என் நண்பராக இருந்த டைரக்டர் இராமநாராயணன் அவர்கள் போன் செய்து படம் பார்த்தேன் நல்லா பண்ணியிருக்கீங்க (அப்படியா?) என்னோட அடுத்த சொந்தப் படம் சுமை. அதுல நீங்க நடிக்கணும்னு கூப்டார். திரையுலக அஸ்திவாரம் போட்டவர் டைரக்டர் கே. பாலச்சந்தர் என்றால் அதன்மேல் ஒரு பெரிய கட்டிடம் எழும்பக் காரணமாயிருந்தவர் என் இனிய நண்பர் டைரக்டர் இராமநாராயணன் அவர்கள். சுமார் 19 படங்கள் என்னை வைத்து இயக்கியுள்ளார். இன்று உலக அளவில் சுமார் 23 ஆண்டுகளில் 110 படங்கள் இயக்கியுள்ள ஒரே இயக்குனர் திரு. இராமநாராயணன். கோபப்படத் தெரியாதவர். துஷ்டனைக் கண்டால் தூர விலகு கொள்கையை கடைப்பிடிப்பவர். தன்னை நம்பி முதல்போடும் தயாரிப்பாளர் ஒரு ரூபாய்கூட நஷ்டமடையக்கூடாது என நினைப்பவர். சிறு முதலீட்டுப் படங்களின் வழிகாட்டி. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    திரைப்படத்துறைக்கு வந்த உடனே தனக்கும் சமுதாயத்திற்கும் உள்ள உறவு விலகிவிட்டாற்போல பலர் நடந்துகொள்வார்கள். ஆனால் தெரிந்தவர்களோ, தெரியாதவர்களோ தன் துறையை சேர்ந்தவர் வீட்டு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்பவர் திரு. எஸ்.பி. முத்துராமன் அவர்கள். நான் வளர்ந்த இடத்திற்கு இன்றும் விசுவாசமாக இருப்பவர். சூப்பர் ஸ்டாரை வைத்து சுமார் 20 படங்களுக்கு மேல் இயக்கியவர். பலரை உயர்த்தியவர். எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் அனைவரையும் பாராட்டிவிட்டு ஒரு திருக்குறளை சொல்லி முடிப்பவர். எந்த வெற்றியையும் தலைக்குள் ஏற்றிக் கொள்ளாதவர்.

    எவ்வளவு புகழும், பொருளும் வந்தாலும் நிதானமிழக்காதவர்கள் என்று குறிப்பிட்டுக் காட்டும் அளவிற்கு புகை, மது போன்ற எந்த தீய பழக்கம் இல்லாமல் இன்றும் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் இனிய நண்பர் இயக்குநர் இராமநாராயணன் அவர்களுக்கும், இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் அவர்களுக்கும் இந்த புத்தகத்தை காணிக்கையாக்குகின்றேன்.

    காட்சி - 1

    இடம்: ராஜன்: வீடு

    பாத்திரங்கள்: ராஜன், கல்யாணி, ரங்கன், தண்டபாணி, சாஸ்திரி, ஜகன்

    நேரம்: காலை

    அமைப்பு: (Well furnished decorated hall with phone, Radio, Wall

    Enjoying the preview?
    Page 1 of 1