Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Varam
Kaadhal Varam
Kaadhal Varam
Ebook164 pages1 hour

Kaadhal Varam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண் மாவட்ட ஆட்சியாளராக கம்பீரமாப் பதவி ஏற்கும் ஜானகி.
அவளுக்கு ஏகப்பட்ட பொறுப்புக்கள். அவள் கையெழுத்துக்குக் காத்திருக்கும் காகிதங்கள் கோப்புக்கள் நேர்வழி நடக்கும் இவளின் கடமை…
இவளின் பிரத்தியேக சமையல் காரனாக ராமு பையா....நார்த்தில் இவள் பணியாற்றியபோது கிடைத்தவன் இவளுடனேயே இருக்கிறான்.
இவர்கள் இருவருக்குமே ஒரு கடந்த காலம் இருப்பது மற்றவர்களுக்குத் தெரியாது.
இவள் மாற்றலாகி சென்னை வந்த போது தான் பிரச்சனை வந்தது.
எஸ் பி அவினாஷ் இவளைச் சந்திக்க வரும்போதெல்லாம் ராமு மிஸ்ஸிங் அவினாஷின் சகோரன் பூஷன் ஒரு பத்திரிகையாளன்.பெண்கள் சிறப்பிதழ் ஒன்றுக்காக ஜானகியை சந்திக்க விரும்புகிறான். ஆனால் லேசில் அபாயிண்ட்மெண்ட் கிடைக்காத காரணத்தால் தன் சகோதரனை அணுகி ஜானகியை சந்திக்கிறான்.
ஏனோ அவன் மனம் ஜானகியை விரும்புகிறது அதுமட்டுமல்ல அவளிடம்
ஏதோ ஒரு ரகசியம் இருப்பதாக அவன் பத்திரிகைகார உள்ளம் கூறுகிறது.
பேட்டி எடுக்கிறேன் என்கிற சாக்கில் அவளை அடிக்கடி சந்திக்கிறான்.பூஷனின் பேச்சு அவன் அடிக்கும் “ ஜோக்” இவை ஜானகிக்கும் பிடித்துப் போக சந்திப்பு அடிக்கடி நிகழுகிறது.
ஒரு நெகிழ்ச்சியான நேரத்தில் ஜானகி தன் கடந்தகாலம் பற்றிக் கூற.. பூஷன் திகைக்கிறான் .ஜானகிக்காக வருந்துகிறான்.
விஷால் என்கிற ஜானகியின் பழையக் கல்லூரித் தோழன் அவளிடம் ஒரு உதவியை எதிர்பார்க்க ஜானகி அதை மறுக்க விஷால் குறுக்கு வழியில் முயற்சிக்கிறான்.
ஜானகிக்கு மாற்றல் ஆர்டர் வருகிறது. ராமு காணாமல் போகிறான். பூஷனைத் தேடி ஜானகி போக அவனும் ஊரில் இல்லை.
அவள் கிளம்பும் நேரத்தில் ஒரு விதவைப் பெண் ஒரு பெண் குழந்தையுடன் அவளைத் தேடி வருகிறாள் தனக்கு விதவைக்கான பென்ஷன் வாங்க வழி செய்ய வேண்டி அழுகிறாள்…
அவள் காட்டிய புகை படத்தை பார்த்த ஜானகி திகைக்கிறாள்.
அந்தப் படத்தில் இருப்பது யார்?
பூஷனை ஜானகி சந்தித்தாளா?
ராமு பையா திரும்பி வந்தானா?
பூஷனின் மானசீகக் காதல் என்னவானது?
ஜானகியின் கடந்தகால மர்மம் என்ன? எல்லாமே சுவாரசிய சம்பவங்கள் .....படித்தாலே இனிக்கும்
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580100805169
Kaadhal Varam

Read more from Vimala Ramani

Related to Kaadhal Varam

Related ebooks

Reviews for Kaadhal Varam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Varam - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    காதல் வரம்

    Kaadhal Varam

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    1

    ராமு பைய்யா! ஜானகியின் குரல் கம்பீரமாக ஒலித்தது.

    ஆயா மேம்சாப் என்றபடியே ராமு அவசரம் அவசரமாகச் சமையல் அறையிலிருந்து நகரும் டிரேயைத் தள்ளிக் கொண்டு ஹாலுக்கு வந்தான்.

    ஹாலில் சுத்தமாகப் பளிச்சென்று துடைத்து வைக்கப் பட்டிருக்கும் மார்டன் பர்னிச்சர்களுக்கு நடுவே, புத்தம் புது மலர்களாய் ராமு பைய்யா பார்த்துப் பார்த்துத் தோட்டத்திலிருந்து பறித்து ப்ளவர் வாஷில் வைத்திருந்த வண்ண வண்ண ரோஜாப் பூக்கள். டிஸ்டெம்பர் அடிக்கப்பட்ட அழகான சுவர்களின் அலங்காரங்களை வரிசையாகப் படங்கள் மாட்டி அசிங்கப்படுத்தாமல் ஓரிரு இயற்கைக் காட்சிகளும் ஆதிவாசிப் பெண் ஒருத்தியின் அங்க எழிலையும் இளமையையும் அசிங்கப்படுத்தாமல் வரையப்பட்ட ஓவியம் ஒன்றையும் தவிர, பெரிய பெரிய வால் பேப்பர்களில் த்ரீடைமன்ஷனில் தளதளப்பாக அரேபியக் குதிரைகள் ஓடிக்கொண்டிருந்தன.

    அதோ, எளிய கார்டன் புடவையில், அதே கலர் ரவிக்கையில் கோல்ட் பிரேம் கண்ணாடிக் கண்களின் வழியே பார்த்தபடி 'ஹிந்து' பத்திரிகை புரட்டிக் கொண்டிருக்கிறாளே, அவள்தான் ஜானகி. பாப் தலையும், ஸ்லீவ்லெஸ்ஸும் கூட இவளுக்கு அழகாகத் தான் இருக்கின்றன.

    நெருங்கிய நண்பர்களால் 'ஜானு' என்றழைக்கப்படும் ஜானகி, ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணிவிட்டு, சப் கலெக்டராக இருந்து இப்போது கலெக்டராகப் பதவி உயர்வு பெற்று இந்தக் கோவைக்கு வந்திருப்பவள். ரொம்பக் கண்டிப்பு, கறார் என்று பெயர் வாங்கினவள். வயது முப்பத்திரண்டுதான் இருக்கும்.

    ஆனால் அவளுள் முன்னூறு ஆண்டு கால அனுபவ முத்திரைகள் இருந்தன. ஆரம்பத்திலிருந்து இந்த 'ராமு பைய்யா' தான் இவளுக்குச் சகலமும். இவளுக்கு அரசாங்கம் அளித்திருக்கும் ஆர்டர்லி, கூர்க்கா, வாட்ச்மேன், ப்ரைவேட் செக்ரட்டரி, போலீஸ் பந்தோபஸ்து இத்தனையும் மீறி இவளுடன் இணைந்தவன் இந்த ராமு பைய்யா. இவள் வடக்கே இருந்தபோது மூன்று வருடங்களுக்கு முன்னால் இவளிடம் வேலை கேட்டு வந்தவன்.

    'தென்னிந்திய சமையல் எல்லாம் நல்லா சமைப்பேன்மா. சோத்துக்கு இல்லாம கஷ்டப்படறேன். இங்கே எல்லாரும் சப்பாத்தி பண்ணத் தெரியுமா, சப்ஜி பண்ணத் தெரியுமான்னு கேக்கறாங்க. ஹோட்டலுக்குப் போனா கேட்டரிங் படிச்சிருக்கியாங்கறாங்க. உங்களுக்குச் சமையலுக்கு ஆள் வேணும்னு வெளியிலே பேசிட்டாங்க. ஒரு மாசம் வேலையிலே வைச்சுப் பாருங்க. பிடிக்கலையானா நானே விலகிடறேன். சப்கலெக்டர் வீட்டிலே வந்து திருடமாட்டேன். போலீஸ் என்னை விடாது. என் மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு. உங்களுக்கும் வரணும் இல்லையா? அதனால்தான் சொல்றேன். என்னைப் பிடிச்சிருந்தா...'

    அவளுக்குப் பிடித்துவிட்டது. ராமு பைய்யாவை மட்டுமல்ல, அவன் சமையலையும். ராமுக்கு அப்போது முப்பது முப்பத்தைந்து வயதிருக்கலாம்.

    அன்றிலிருந்து இன்றுவரை ராமு பைய்யா தன் கடமைகளில் தவறியதில்லை. ஜானகியின் நேரம் அறிந்து, சுவை அறிந்து, குணம் அறிந்து அவளுக்குத் தேவையானதைப் பண்ணிப் போடுவதில் நிபுணனாக இருந்தான். நாளடைவில் சமையலுக்கு மட்டும் இருந்த ராமுபைய்யா ஜானகியின் ஒவ்வொரு பர்சனல் தேவையையும் கவனிக்கக் கூடிய அவளுடைய ஸ்பெஷல் ப்ரைவேட் செக்ரட்டரி ஆகிவிட்டான்.

    'அம்மா, இன்னிக்கு லேடீஸ் கிளப்பிலே இருந்து நாலைஞ்சு பேர் உங்களைப் பார்க்க வந்தாங்க. ஏதோ பங்ஷனுக்குத் தலைமை தாங்கணுமாம்?' 'அம்மா, கோனியம்மன் கோவில் கல்யாண உற்சவத்துக்கு பஸ்ட் டே பங்ஷனுக்கு நீங்க ப்ரசைட் பண்ணணுமாம். தக்கார் பங்கஜாக்ஷி சுப்பய்யண்ணன் வந்து சொல்லிட்டுப் போனாங்க.' 'தியேட்டர்ஸ் ஓனர்ஸ் அசோஸியேஷன்லே ஏதோ ஒரு பிரசினையாம். உங்களைப் பார்க்க ராயல் தியேட்டர் ஓனர் சுந்தர வேல், அப்புறம் அன்னூர் பாலு எல்லாருமே வந்துட்டுப் போனாங்க...' இப்படி கலெக்டரின் பி.எ பைலுடன் வருவதற்குள் ராமுவே எல்லாவற்றையும் சொல்லிவிடுவான்.

    அம்மா, ப்ரேக்பாஸ்ட் ரெடி. ராமு ஜானகியிடம் டிராலியை நகர்த்தினான்.

    ஜானகி கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டுப் பேப்பரை மடித்துவிட்டு நிமிர்ந்தாள்.

    கலெக்டர் அம்மான்னா கலெக்டர் அம்மா இவங்கதான்! அந்தப் பதவிக்கு ஏற்றவங்க. என்ன ஒரு கம்பீரம், என்ன ஒரு தீர்க்கம், என்ன ஒரு அறிவு! இருகோடுகளில் வருகிற சௌகார் ஜானகி அந்த வேடத்திற்குப் பெருமை தந்த மாதிரி, இந்த ஜானகியும் இந்தப் பதவிக்குப் பெருமை தந்திருக்கிறாள்! ராமு பைய்யா சுடச் சுடக் கொண்டு வந்து வைத்த வெண்பொங்கலை, சட்டினியுடன் சேர்த்து ஸ்பூனால் விழுங்கிய ஜானகி நிமிர்ந்து பார்த்தாள்.

    என்ன ராமு பைய்யா அப்படிப் பாக்கறே? சிரித்தாள்.

    ராமு பைய்யா திணறினான். ஒண்ணுமில்லை...

    அவள் காலியாக்கித் தந்த கிண்ணங்களையும், கப் அண்ட் ஸாஸர்களையும் எடுத்தபடி அவன் திரும்பினபோது,

    இன்னிக்கு நான் பொள்ளாச்சி போறேன் ராமு. வர லேட்டாகும். லஞ்ச் வீட்டுக்கு வந்து சாப்பிட முடியாது. 'ஹாட் கேஸிலே' போட்டு ஆபீஸுக்கு ரெண்டு மணிக்கு நீயே எடுத்துட்டு வந்துடு. ஓகே?

    சரிம்மா, என்றான் ராமு. அவனுக்குத் தெரியும். ராமு பைய்யா பரிமாறினால் தான் ஜானகி சரியாகச் சாப்பிடுவாள். ஹாட் கேஸில் போட்டு யாரிடமாவது அனுப்பினால் சரியாகச் சாப்பிட மாட்டாள். இவனேதான் எடுத்துப்போக வேண்டும்.

    ராமு பைய்யா கிச்சனுக்குள் நுழைந்தான்.

    போன் அடித்தது.

    அந்தப் பெண் கலெக்டரின் பணி தொடர்ந்தது.

    2

    உம்... உம்... அப்புறம்? என்றாள் ஜானகி கண்களை மூடியபடி.

    கலெக்டரின் பி.எ. வரிசையாக அவளுடைய அன்றைய நிகழ்ச்சிகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

    காலை எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிவரை பொது மக்கள் சந்திப்பு. இதில் ஆதிவாசிகள் சிலர் ஒரு பெட்டிஷனுடன் காத்திருக்கிறார்கள். தியேட்டர்கள் லைசன்ஸ் புதுப்பிப்பது பற்றிய ஒரு பிரசினைக்குத் தியேட்டர் அஸோஸியேஷன்ஸ் மெம்பர்கள் கூட்டாகச் சந்திக்க வந்திருக்கிறார்கள். புறம்போக்கு நிலம் ஒன்றில் குடிசை போட்டுக்கொண்டு நகர மறுக்கும் சிலரை விரட்டியடிக்கக் கார்ப்பரேஷன் மனுவுடன் காத்திருக்கிறது. மாலை மந்திரி வருகிறார். அவருடன் நாலு மணிக்கு ஒரு டீ பார்ட்டி சந்திப்பு. கோவையை அழகுப்படுத்த மூலை மூலையாய்ப் பெரிய பெரிய வீதிகளில் வைத்திருக்கும் பெட்டிக் கடைகளை அப்புறப்படுத்துவது சம்பந்தமாகப் பேச ஸ்பெஷல் ஆபீஸர் மாலை ஆறு மணி சுமாருக்கு எங்கேஜ்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணி இருக்கிறார். மாலை ஆறு மணிக்குப் பெண்கள் நல சங்கக் கூட்டத்தின் ஆண்டு விழாவில் குத்துவிளக்கு ஏற்றியபின், சீப் கெஸ்டாகச் சிறப்புரை. அதன் பின் நிகழ்ச்சிகளைக் கொஞ்சம் பார்த்துவிட்டு இரவு எட்டு மணிக்குக் கலெக்டர் பங்களாவில் ஒரு ஸ்பெஷல் மீட்டிங். வரப் போகிற தேர்தலில் எடுக்கப்பட வேண்டிய சில பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய முக்கியமான மீட்டிங்...

    ஓகே, என்றாள் ஜானகி.

    ஒரு பெரிய பைலை எடுத்தார் பி.எ.

    இதென்ன?

    விதவைகளுக்கு அரசாங்கம் வழங்கும் பென்ஷன் ஃபைல். இதில் சில பேப்பர்கள் உங்கள் கையெழுத்துக்காகக் காத்திருக்கின்றன.

    அவைகளை மேலோட்டமாகப் பார்த்தவள், முதல்லே இந்த பைல்லே இருக்கிற அத்தனை பெட்டிஷனுக்கும் போட்டோக்களோட ஒரு 'ப்ரீப்' தயார் பண்ணி என் பார்வைக்கு அனுப்பி வையுங்க. அதுலே அந்த அந்த விண்ணப்பதாரர்களோட லைஃப் ஹிஸ்டரி சுருக்கமா இருக்கட்டும்...

    எஸ் மேடம். பி.எ போய்விட்டார்.

    'போன்' அலறியது.

    கேம்ப் ஆபீஸிலிருந்து கனெக்ஷன் தரப்பட, ஜானகி பேசினாள். யெஸ்... ஜானகி ஹியர்...

    போனில் கேட்ட குரல் சற்றுத் தயங்கியது. நான்... பேசறேன். பெரிசா ஒண்ணுமில்லை. ஒரு பார்ட்டி பத்திரிகை ஆரம்பிக்கணுமாம்...

    ஜானகி சிரித்தாள். உம்... ஆரம்பிக்கட்டுமே. ஏன்?

    வந்து...

    ஏன், ஏதாவது அரசாங்கத்தைத் திட்டற பத்திரிகையா?

    நோ நோ... பார்ட்டி வேண்டியவங்க. உங்க ரெகமண்டேஷனோட சீக்கிரமா ஆரம்பிக்கணுமாம்.

    ஜானகி சிரிப்பு மாறாமலே சொன்னாள். இதுலே என்னோட ரெகமண்டேஷன் என்ன இருக்கு? ரெஜிஸ்டிரார் ஆபீஸ்லே டிக்ளரேஷன் எழுதிக் கொடுத்துட்டுப் போக வேண்டியது தானே? டில்லியிலே இருந்து அப்ரூவ் ஆயிட்டா நோ ப்ராப்ளம்.

    அதிலே... நீங்க கொஞ்சம்...

    "நான் கொஞ்சம் ப்ரஷர் கொடுக்கணுமா? என்னோட

    Enjoying the preview?
    Page 1 of 1