Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vizhi Malar
Vizhi Malar
Vizhi Malar
Ebook150 pages53 minutes

Vizhi Malar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தாரிணியும் சுபாவும் சிநேகிதிகள்.சிறுவயது முதலே ஒன்றாகப் படித்து விளையாடி மகிழ்ந்தவர்கள். கல்லூரியிலும் இவர்களின் நட்புத் தொடர ஒரு நாள் சுபா தன் காதலன் சுரேந்திரனை தன் தோழிக்குஅறிமுகப்படுத்துகிறாள்.
சுரேந்திரனின் அழகு தாரிணியைப் பிரமிக்க வைக்க அவள் மனத்தில் பொறாமைத் தீ மெல்ல தலை தூக்குகிறது.
இந்த நேரத்தில் சுபா தன் காதலனின் காதலைப் பரிசோதிக்க விரும்பி தாரிணியை அவனுடன் பழகச் சொல்கிறாள்.வலியக் கிடைத்த ஜாக் பாட் .தாரிணி விரும்பி ஏற்க.....குழப்பங்கள் ஆரம்பமாகின்றன.
தாரிணிக்கு சுந்தரம் என்றொரு அத்தான் அழகற்றவன்.தாரிணி அவனை வெறுக்கிறாள்.ஆனால் தாரிணியை மனதார நேசிக்கிறான் சுந்தரம்.
சுரேந்திரனின் பார்வையற்ற தங்கை கலா சிறுவயதில் மின்னல் தாக்கியதால் இந்த அவலம் நேருகிறது. சுரேந்திரன் தன் தங்கை கலாவின் திருமணத்திற்குப் பின் தான் தன் திருமணம் என்பதில் உறுதியாக இருக்கிறான்.
தற்செயலாக சுந்தரம் கலாவைச் சந்திக்க நேருகிறது. அவளால் தன்னைப் பார்க்க முடியாது என்கிற தைரியத்தில் சுந்தரம் அவளை அடிக்கடி சந்திக்கிறான்.
கலாவிற்கு ஆபரேஷன் ஏற்பாடாகிறது. சுந்தரம் திகைக்கிறான். தன் அவலஷண முகம் பார்த்து காலா தன்னை வெறுத்துவிடுவாளோ என்ற பயம்.
இப்படி ஒவ்வொரு ஜோடிக்கும் ஒரு பிரச்சனை.
சுபா வைத்த பரீட்சையில் சுரேந்திரன் ஜெயித்தானா?
கலாவின் கண்பார்வை திரும்பியதா?
தாரிணியின் மானசீகக் காதல் என்னவானது?
காதல் என்பது சோதனைக் கூடமல்ல- உரசிப் பார்த்து உண்மையறிய முடியாது. அதற்கு பரீட்சை தேவையில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விடை கேட்கும் கேள்வித் தாள் அது.
இதை உணர்த்தும் நாவல் மலர் இது.
“விழி மலர்.” கடைசியில் உங்கள் விழிகளில் கண்ணீர் மலரை பூக்க வைக்கும் இந்த விழி மலர். படியுங்கள் கண்களைத் துடைத்துக் கொள்ளுங்கள்.
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580100805171
Vizhi Malar

Read more from Vimala Ramani

Related to Vizhi Malar

Related ebooks

Reviews for Vizhi Malar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vizhi Malar - Vimala Ramani

    http://www.pustaka.co.in

    விழி மலர்

    Vizhi Malar

    Author:

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    முன்னுரை

    அன்புள்ள வாசகர்களுக்கு-வணக்கம்!

    கசப்பது எதுவாயினும் கவிதையிலோ, கலையிலோ தோய்த்துத் தந்தால் அந்தக் கசப்பு தெரியாது என்பார்கள். அதேபோல்தான் வாழ்வின் சில கசக்கின்ற தத்துவங்களையும், திருப்புமுனைப் போராட்டங்களையும் கதை என்கிற தேனிலே தோய்த்துத் தரும்போது அந்தக் கசப்பு 'முரண்பாடுகள்' அவ்வளவாகத் தெரிவதில்லை. வாழ்வின் நைந்துபோன பகுதிகளைக்கூட பூவேலைகள் மூலம் மறைத்துக் காட்டி புதுமை செய்துவிட முடிகிறது எழுத்தாளனால். இதனால் தான் சிற்சில சமயங்களில் கற்பனையைத் தேடி ஓடவேண்டி இருக்கிறது; இதனால் தானோ என்னவோ எத்தனையோ 'இஸங்கள்' மலிந்து விட்ட இந்த நேரத்திலே கூட இன்னும் சிலர் பழைய கற்பனைத் தேரைவிட்டு இறங்க மறுக்காமல் இருக்கின்றனர் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து!

    அன்பைத் தேடி அலைகின்ற பேதையாம் பெண்மையின் கதைகளில் அன்பு இருக்கும். அன்பின் ஆழம் கண்டிப்பாக இருக்கும். அன்பு என்பது உதட்டிலிருந்து பிறப்பதல்ல; உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து பிறப்பது என்கிறார்கள் பெரியவர்கள். இப்படிப்பட்ட ஓர் உன்னதமான அன்பினைப் பற்றி விளக்கம் கூற நினைக்கும் போது கற்பனையும் கொஞ்சம் 'அதீத’மாக இருப்பது தான் பொருந்தும் என நினைக்கிறேன். இந்தப் பொருத்தத்திற்கு முதலில் தயார்ப்படுத்திக் கொண்டு கதையிலே நுழையுங்கள்.

    'முல்லைக்குத் தேர் தந்த பாரி', கான மயிலுக்குக்குக் கலிங்கம் கொடுத்த பேகன்'- இவர்களின் செய்கையில் கூடத் தெறிப்பது அன்பின் ‘அதீதம்'தான்! அன்பினுக்கு முழு விளக்கம் காணும்போது கற்பனையின் அதீதம் முள்ளாக உறுத்தாது என நம்புகிறேன்.

    மீண்டும் வணக்கம்; நன்றி.

    அன்புள்ள,

    விமலா ரமணி.

    1

    காலை கண் விழித்தது.

    இரவு முழுவதும் பௌர்ணமிச் சந்திரன் சொன்ன கதைகளை விழித்திருந்து கேட்ட ஆகாயத்தின் கண்கள் சிவந்து கிடந்தன. கண் சிமிட்டி இவர்களைப் பரிகசித்த ஆகாயப் பூக்களின் மினுமினுப்பு இப்போதில்லை.

    இரவிலே வானத்திற்கும் பூமிக்கும் இடையே ஏதோ ஒரு துன்பக் கதையின் தொடர்பு இருந்திருக்க வேண்டும். பூமியின் பரந்த மார்பிலே விரிந்திருக்கும் மலர்களில் பனித் துளிகள்! தென்றலின் சுகந்தமான அரவணைப்பிலே சிரித்த மலர்களில் பதிந்திருப்பது...?

    சோக முத்திரைகளா? அல்லது....

    ஆனந்தக் கண்ணீர்த் துளிகளா?

    தன்னில் நிறைவு பெறுவது இன்பமல்ல, தன் நிறைவைப் பிறரிலும் காண்பதுதான் முழுமையோ?

    கதை சொன்ன சந்திரன் காட்சிகளில் லயித்தவாறு மங்கலாய் மூலையில் வீழ்ந்து கிடந்தான் சோர்வாக.

    கதிரவன் சிரித்தபடி வண்ண முகம் காட்டினான்.

    இரவுக்குப் பின் பகலும், பகலுக்குப் பின் இரவும் எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையோ; அதே அளவுக்கு உண்மை, மனிதன் வாழ்வில் இன்ப துன்பம் என்னும் இரு உணர்வுகளும் சம பங்கில் பரவி இருக்கின்றன என்பதும்!

    மறுபடியும் இரவு வரும்; நிலவு வரும்.

    ஆனால், ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாக இயங்குகிறது என்று சொல்ல முடியுமோ?

    நதியின் ஆரம்பத்திலே இருக்கும் நளினம், குழைவு போகப் போக எத்தகைய தீவிரம் எய்துகிறது!

    பட்சி ஜாலங்களின் வரவேற்பொலி; நெடிய தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டதின் எதிரொலியாக வாசலிலே கூவும் பல 'ஓலங்கள்'. இரவிலே தன் ஆடை ஆபரணங்களைக் களைந்தெரிந்துவிட்டு அமங்கலமாக உறங்கிய வையகம் புத்துணர்வோடு சிங்காரித்து சிரித்து மகிழும் சோபை, ஏன். அதோ ஆலயத்தில் உலகின் விழிப்பாய் ஒலிக்கும் மணியோசை-எல்லாமே பகலவன் வரவிற்குக் 'கட்டியம்' கூறுகின்றனவோ? தாரிணி இன்னும் தன் கற்பனையில்தான் மூழ்கிக் கிடந்தாள். வாழ்வைவிடக் கற்பனை இனிக்கத்தான் இனிக்கிறது. அவள் இதயம் முழுவதும் ஒரு சுகந்தமான மணம் நிரம்பி வழிந்தது.

    இன்னும் அவள் படுக்கையைவிட்டு எழுந்திருக்க மனமில்லாமல் முடங்கிக் கிடந்தாள்.

    தன்னுள் தான் முடங்கிக் கிடப்பதுகூட ஒரு இதமான அரவணைப்புத்தான்.... இதோ... இதோ... இப்படிப் போர்வைக்குள் முடங்கிக் கிடப்பதைப் போல்!

    நேற்றைய தினம் 'லேடீஸ் கிளப்'பில் நடந்த சம்பவம் மனதில் எழுந்தது.

    தாரிணியும், ஸுபாவும் சினேகிதிகள் என்று பொதுப்படையாகக் கூறிவிட்டால் அந்த நட்பின் இலக்கணத்திற்கு வரையறை வகுத்ததாக ஆகாது.

    சிறு வயது முதலே பழகிய நட்பு-அன்பின் இறுக்கமாய், இதயத்தின் பிணைப்பாய், இன்பத்தின் முத்திரையாய்ப் பதிந்தது.

    ஸுபாவைக் காணவில்லை என்றால் தாரிணியைக் கண்டு பிடித்தால் போதும். அதேபோல்தான் இவளையும்.

    சிறுவயது முதல் ஏற்பட்ட இந்தப் பிணைப்பு நாளாக ஆக வலுத்தது. ஸுபாவிற்காக அவள் வீட்டிலே தரப்படும் எந்தப் பொருளுக்கும் ஒரு பிளவு இருக்கத்தான் இருக்கும். அதாவது அதில் ஒரு பகுதி தாரிணியை வந்தடையும். இதேபோல்தான் தாரிணியின் வீட்டுப் பொருள்களும்.

    பாதி ஜிலேபியை ஸுபாவிடம் தந்தால்கூட அதில் ஒரு பகுதியை தாரிணிக்குத் தர அவள் மறக்கமாட்டாள். தத்தம் வாழ்வையே இரு பகுதிகளாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பாதி அனுபவிக்கிறார்களோ என்று எண்ணும்படி அவர்கள் நட்புறவு இருந்தது.

    தாரிணியின் அம்மாகூட அடிக்கடி கேலி செய்வாள். என்னடி இப்படி இழைகிறீர்களே... நாளைக்கு ஒரே அகமுடயானைத்தான் கல்யாணம் செய்து கொள்வீர்களா? என்று. அப்போது அவள் சிறியவள். வாழ்வின் அகராதியைப் புரட்டிப் பார்த்து பதத்திற்கு பொருள் காணும் வயதல்ல அது.

    ஆமாம்... அப்படித்தான் செஞ்சுப்போம் போ, என்று தாயை எதிர்த்துச் சவால் விட்டிருக்கிறாள் எத்தனையோ முறை! இப்போது நினைக்கும்போது சிரிப்புத்தான் வந்தது தாரிணிக்கு. வாழ்க்கை என்ன ஜிலேபியா, லட்டா இரு பகுதியாகப் பங்கு போட்டுக் கொள்ள?

    அவரவர் வாழ்வு அவரவருக்கு.

    காயத்திற்கு மருந்து போடலாம்; ஆனால் அதற்காகதானே காயப்படுத்திக் கொண்டால் எப்படி?

    நேற்று ஸுபா 'லேடீஸ் கிளப்'பிற்கு தன் காதலன் சுரேந்திரனுடன் வந்திருந்தாளே!

    டீ நன்றாகப் பார்த்துக்கொள்... இவர்தான் என்னோட 'உட்பீ'. உன்னிடம் சொல்லாமல் காதலித்ததற்கு மன்னித்துக் கொள்-என்று ஸுபா அவள் காதில் கிசுகிசுத்தபோது தாரிணிக்கு வியப்போடு வெட்கமும் கலந்து வந்தது.

    என்ன ஸுபா, உன் 'பிரண்டின் ஸ்டட்' நன்றாய் இருக்கிறதென்பதற்காக அதை நாக்கால் சுவைக்க வேண்டுமா என்ன?-என்று சுரேந்திரன் வேடிக்கையாகக் குறிப்பிட்டபோது 'கொல்'லென்ற சிரிப்பு அங்கு பொங்கி வழிந்தது.

    கன்னம் சிவக்க, முகம் படபடக்க ஸுபா போலிக் கோபம் காட்டினாள்.

    லேடீஸ் கிளப்பில் ஆண் பிள்ளையாகிய நான் நுழைந்ததே தப்பு..... சீக்கிரம் உன் சினேகிதிகளிடம் சொல்லிக்கொண்டு வா. சினிமாவிற்கு நேரமாகிறது.

    அவன் அவசரப்படுத்தினான்.

    விஷ் யூ போத் எ நைஸ் டைம்- என்று சிரிப்பிற்கும் கேலிக்கும் இடையில் அந்தப் பெண்கள் குழாம் அவர்களை வழியனுப்பி வைத்தது.

    அவர்கள் போன பிறகு அவர்களைப் பற்றிய பேச்சுக்கள், விமர்சனங்கள்!

    டீ...தாரிணி இருக்கிறாள். ஸுபாவின் 'இன்டிமேட் பிரண்ட்.' ஸுபாவின் ‘பாய் பிரண்டை'ப் பற்றி நாம் ஏதாவது சொன்னால் அவள் உடனே கோள் சொல்லி விடுவாள்... ஜாக்கிரதை.

    முன் எச்சரிக்கைக்காக ஒருத்தியின் கவனக் ஈர்ப்பு.

    "எனக்கென்னவோ சுரேந்திரனைப் பார்த்தால் ஒரு தீவிர சித்தமுடையவர் என்று தோன்றவில்லை. அவர் ‘டிரஸ்'ஸும், பெண்கள் கூட்டத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1