Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Pookal
Kaadhal Pookal
Kaadhal Pookal
Ebook247 pages1 hour

Kaadhal Pookal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“காதல் மனித இனத்தின் தடுக்க முடியாத இசையாகும். காதல், பிரிதோர் இனத்திற்கும் இன்றியமையாத தேவையாகும். பருவம் கடந்தாலும் கடவாமல் நின்று, உருவம் மாறினாலும் மாறாமல் நின்று உள்ளத்து உணர்ச்சிகளுக்கெல்லாம் தலைமை வகுப்பது காதலாகும். காதல் வயப்பட்ட சிந்தனை உலகில் வேறு சில நிகழ்ச்சிகளும், உணர்ச்சிகளும் இருப்பதையே அறிய மறுக்கிறது. முழு இதயமும் அதற்கே உரிமையாகிவிடுகிறது...”
இப்படியெல்லாம் சொன்னவர் கவியரசு கண்ணதாசன்.
காதலுக்காகப் பொய் சொல்லாதவர்கள் யாரேனும் இருப்பார்களா என்பது சந்தேகமே! பெற்றவர்களிடமோ, கூடப் பிறந்தவர்களிடமோ - இவ்வளவு ஏன்? காதலிகளிடமோ, காதலர்களிடமோ சர்வ சாதாரணமாகப் பொய் சொல்லி விடுகிறார்கள் என்பது நடைமுறை வாழ்க்கையில் கண்டறிந்த உண்மை! காதலே பொய் என்று விரக்தியிலோ, அனுபவத்திலோ, சொல்பவர்களும் உண்டு!
இப்படி உலகையே ஆட்டி வைக்கும் ஆண்-பெண் உறவுக்கான காதலை மையக் கருவாகக் கொண்டு இன்றும் ஏராளமான சிறுகதைகளும், நாவல்களும் எழுதப்படுகின்றன. சினிமாக்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அவற்றுள், காதல் பற்றிய சிறுகதைகளை மட்டும் தொகுத்துள்ளேன். 1963லிருந்து எழுதி வருவதால் அந்த அந்த வருடங்களில் இருந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப உரையாடல்களும், பொருட்களின் விலைகளும், போக்குவரத்துச் சாதனங்கள் பற்றியும் தகவல்கள் இருப்பதைத் தவிர்க்க இயலாது. ஓ! அந்த வருடங்களில் இப்படியெல்லாம் இருந்திருக்கிறதா என்ற வரி மனதில் ஓடும்!
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580128505005
Kaadhal Pookal

Read more from Bhama Gopalan

Related to Kaadhal Pookal

Related ebooks

Reviews for Kaadhal Pookal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Pookal - Bhama Gopalan

    http://www.pustaka.co.in

    காதல் பூக்கள்

    Kaadhal Pookal

    Author:

    பாமா கோபாலன்

    Bhama Gopalan

    For more books

    http://pustaka.co.in/home/author/bhama-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    வாழ்த்துரை

    முற்றுப் பெறாத கவிதை!

    விளம்பரமே, வைபோகமே!

    டி.வி. வாழ்க!

    ஒரு காதலின் க்ளைமாக்ஸ்

    காதலனின் கடிதம்...

    எதற்கும் ஓர் ஆரம்பம்

    ஜடம்

    பேசிய சித்திரம்!

    அந்தரங்கமாக ஓர் இடம்

    குடம் குடமாய்க் காதல்!

    காதலின் நிறம் நீலம்!

    இ.பி.கோ.

    ராத்திரி தங்கிட்டுப் போகலாமே?

    லதாவின் சவால்

    பாண்ட் பாக்கெட்டில் ஒரு கடிதம்

    அழகுக்கு அப்பால்

    மூன்று ஆசைகள்

    வீசு தென்றல் நீ எனக்கு

    மிஸ் ஏ.சி.

    காதல் முதல் கடிதம் வரை!

    மோகினி என் காதலி!

    வஜ்ரவேலு செய்த காரியம்

    நாளைய நிகழ்ச்சிகள்

    கண்ணாடி வீடு

    ஊதற சங்கை ஊதியாச்சு.

    காதல் ‘பூ’ க்கள்

    டைரியில் சில பக்கங்கள்

    உறவின் வெளிச்சம்

    ஒரு வருட தண்டனை

    காட்டப்படாத கடிதங்கள்

    சர்ச்சைக்குரிய காதலியே!

    முன்னுரை

    காதல் மனித இனத்தின் தடுக்க முடியாத இசையாகும். காதல், பிரிதோர் இனத்திற்கும் இன்றியமையாத தேவையாகும். பருவம் கடந்தாலும் கடவாமல் நின்று, உருவம் மாறினாலும் மாறாமல் நின்று உள்ளத்து உணர்ச்சிகளுக்கெல்லாம் தலைமை வகுப்பது காதலாகும். காதல் வயப்பட்ட சிந்தனை உலகில் வேறு சில நிகழ்ச்சிகளும், உணர்ச்சிகளும் இருப்பதையே அறிய மறுக்கிறது. முழு இதயமும் அதற்கே உரிமையாகிவிடுகிறது...

    இப்படியெல்லாம் சொன்னவர் கவியரசு கண்ணதாசன்.

    காதலுக்காகப் பொய் சொல்லாதவர்கள் யாரேனும் இருப்பார்களா என்பது சந்தேகமே! பெற்றவர்களிடமோ, கூடப் பிறந்தவர்களிடமோ - இவ்வளவு ஏன்? காதலிகளிடமோ, காதலர்களிடமோ சர்வ சாதாரணமாகப் பொய் சொல்லி விடுகிறார்கள் என்பது நடைமுறை வாழ்க்கையில் கண்டறிந்த உண்மை! காதலே பொய் என்று விரக்தியிலோ, அனுபவத்திலோ, சொல்பவர்களும் உண்டு!

    இப்படி உலகையே ஆட்டி வைக்கும் ஆண்-பெண் உறவுக்கான காதலை மையக் கருவாகக் கொண்டு இன்றும் ஏராளமான சிறுகதைகளும், நாவல்களும் எழுதப்படுகின்றன. சினிமாக்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

    அவற்றுள், காதல் பற்றிய சிறுகதைகளை மட்டும் தொகுத்துள்ளேன். 1963லிருந்து எழுதி வருவதால் அந்த அந்த வருடங்களில் இருந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப உரையாடல்களும், பொருட்களின் விலைகளும், போக்குவரத்துச் சாதனங்கள் பற்றியும் தகவல்கள் இருப்பதைத் தவிர்க்க இயலாது. ஓ! அந்த வருடங்களில் இப்படியெல்லாம் இருந்திருக்கிறதா என்ற வரி மனதில் ஓடும்!

    பாமா கோபாலன்

    வாழ்த்துரை

    பெண் எழுத்தாளர்கள் இங்கே வெற்றிகரமாக முத்திரை பதித்ததுண்டு! ஆனால் கணவரும் எழுத்தாளராக இருக்க, மனைவியும் அதே துறையில் இருப்பது எனக்குத் தெரிந்து இவர்கள் இருவர் மட்டும்தான்!

    திருமதி வேதா கோபாலன் என் உடன் பிறவாத இனிய சகோதரி! எப்போதும் சிரித்த முகம்! சுறுசுறுப்பு! எல்லாத் துறைகளிலும் புகுந்து புறப்படும் ஆர்வம்! இனிய தோழமை! வார ராசிபலன் எழுதுகிறார்! அதில் பல சங்கதிகள் சரியாக இருக்கின்றன.

    கதைகளிலும் இயல்பான குடும்ப பிரச்னைகளிலும், சமூகப் பார்வையும், யதார்த்தமும், நம் பக்கத்து வீட்டில் நடப்பது போன்ற நெருக்கமான சம்பவங்களும் தூக்கலாக இருக்கும்!

    பெண் விடுதலை என்றெல்லாம் தேவையில்லாமல் சீர்திருத்த கொடியை தூக்க மாட்டார். ஆனால் பெண்களின் நியாயமான கோரிக்கைகளை மற்றவர்கள் மதிக்கும் வண்ணம் தன் எழுத்துக்களில் கொண்டு வருபவர்! சர்ச்சைக்குரிய பெண்மணி அல்ல! அது பெரிய ஆறுதல்! அன்புக்கு மட்டுமே உரியவர்!

    இவரது படைப்புகளுக்கு அணிந்துரை எழுதுவதை நான் பெருமையாக்க கருதுகிறேன்!

    இந்த தம்பதியரின் பல படைப்புகள் புத்தகங்களாக வெளிவர வேண்டும் என்பது என் ஆசை!

    நன்றி!

    நேசமுடன்

    தேவிபாலா

    முற்றுப் பெறாத கவிதை!

    கடற்கரையில் அமர்ந்து கொண்டு ‘வாழ்க்கை’ என்ற ஆங்கிலப் பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தாள் சத்யம். சற்று தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு அப்படித்தான் தெரியும்...

    ஆனால்- அவளோ

    அந்தப் பத்திரிகையைக் கேடயமாகக் கொண்டு உள்ளே வைத்திருந்த ஏதோ ஒரு ஃபோட்டோவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். விழிகள் நீரைப் பெருக்கவில்லை! அழுது அழுது வற்றிவிட்ட கேணி அது!

    புத்தகத்திலிருந்து பார்வையைத் திருப்பி நீலக் கடலைப் பார்த்தாள். உணர்ச்சிகளை எழுப்பும் கடல், சோக அலைகளைத்தான் எழுப்பிற்று அவள் உள்ளத்தில்.

    பத்திரிகையை மடித்து வைத்துவிட்டுக் கைகளைச் சற்றே மணலில் பதியவைத்து விண்னை நோக்கியவள் முகிலில் மறையும் சந்திரனைக் கண்டாள். ஏனோ அவள் உள்ளம் துள்ளியது, ஓ! ஐ ஆம் சாரி... என்று கூறிக்கொண்டே கீழே விழுந்துவிட்ட சிகரெட் பாக்கெட்டை லாகவமாக எடுத்துக்கொண்டான் சந்திரன்.

    விரலிடுக்கில் அடைபட்டுக்கிடந்த சிகரெட்டின் துளியிலிருந்து சாம்பல் அவள் முகத்தில் பட்டுவிட்டது. ‘சட்’ என்று கூறியவாறே அதைத் துடைத்தவள்... ஓ! மிஸ்டர், சந்திரனா? என்று வியப்புடன் கேட்டு விட்டாள்.

    ஆ! நீங்கள்... நீ சத்யம் இல்லையா? கேட்டுக் கொண்டே உரிமையுடன் உட்கார்ந்து கொண்டான் சந்திரன். சத்யம் மெதுவாக தன்னிடமிருந்த பத்திரிகையை இருவருக்குமிடையே வைத்துக்கொண்டாள்!

    இருவருக்குமிடையே ‘வாழ்க்கை’ இருந்தது! ஓ! லைஃபா? என்று சொல்லிக் கொண்டே அதை அவன் எடுக்கும் முன்னரே, அதன் மேல் தன் கையை வைத்து அழுத்திக் கொண்டாள் சத்யம்.

    மெதுவாகத் தன் விழிகளை ஓட்டி மிகவும் பழைய பத்திரிகை போலிருக்கிறதே? என்றான் சந்திரன்.

    பழமையை விரும்புபவள் நான் என்று ஏதோ பேச வேண்டும் என்பதற்காகப் பேசி வைத்தாள்!

    பேச்சை மாற்ற எண்ணி. நாம் கல்லூரியில் கடைசியாக நடித்த நாடகம் நினைவிருக்கிறதா சத்யம்? என்று கேட்டான் சந்திரன்.

    மறக்க முடியாத நிகழ்ச்சிகளுள் அதுவும் ஒன்று.

    இல்லை சத்யம். மறக்க முடியாத நிகழ்ச்சி அது ஒன்று தான்.

    கூட்டம் குறையவே ஒட்டிக் கொண்டிருந்த மணலைத் தட்டியவாறே எழுந்தனர் இருவரும்.

    சத்யம், உன் விலாசத்தை கொடுக்காமல் போகிறாயே... உன்னிடம் ‘முகவரி’ என்று தானே கேட்க வேண்டும். முன்பொரு தரம் விலாசத்திற்கு, விசாலம் என்று நான் கேட்க அது கேட்டு நீ சிரிக்க ஏக கலாட்டா... நினைவிருக்கிறதா?

    ‘ம்.... ம்’ என்று மௌனமாகவே தலையாட்டிவிட்டு, தன்னிடமிருந்த பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் ஒரு சிறு பகுதியைக் கிழித்து அதில் தன் முகவரியை எழுத நினைத்த போதுதான் தன்னிடம் பேனா இல்லை என்பது நினைவிற்கு வந்தது சத்யத்திற்கு.

    சந்திரன் தன் பேனாவைத் தர அவள் எழுதிக்கொடுத்த சீட்டை மடித்துப்போட்டுக் கொண்டான். வாழ்க்கையே கிழித்துக் கொடுத்திருக்கிறாய் போலிருக்கிறது.

    ‘சுருக்’ என்றது அவளுக்கு. விஷமமாகச் சிரித்தவாறே அவள் கையிலிருந்த பத்திரிகையைச் சுட்டிக் காட்டினான் அவளும் புன்னகைத்துப் பெருமூச்சு விட்டாள்.

    ***

    கதவு தட்டப்படும் ஒலி கேட்டு, கட்டிலிலிருந்து எழுந்து தள்ளாடிக்கொண்டு வந்து மெதுவாகத் தாளை நீக்கினாள் சத்யத்தின் தாய். ‘என்றுமில்லாமல் இன்று மட்டும் கதவு தட்டும்போது ஏன் இந்தப் படபடப்பு?’ என்று எண்ணமிட்ட அம்மூதாட்டி ‘ம்... அவள் வாழ்க்கை அப்படி’ என்று மனதில் நினைத்தவாறே வாம்மா... சத்யம் என்றாள் உள்ளே நுழைந்தவுடன் மிதியடிகளைக் கழற்றிவிட்டுத் தன் தாயைப் பரிவுடன் அணைத்துக் கொண்டு கட்டிலை நோக்கிச் சென்றாள் சத்யம்.

    தன் தாயைப் படுக்கையில் மெதுவாகப் படுக்க வைத்து விட்டு, தன் வேலைகளை முடித்துக்கொண்டு படுக்கச் சென்றாள்.

    அவளுக்குத் தூக்கமே வரவில்லை ஏதோ நினைத்தவளாக மாலையில், தான் எடுத்துச் சென்ற பத்திரிகையை எடுத்துப் பிரித்தவளுக்கு தூக்கிவாரிப் போட்டது. ஃபோட்டோ - அவள் தனியாக அதில் வைத்திருந்தது... அதில் இல்லை. தேடிப் பார்த்தவளுக்கு ஏமாற்றமே பதிலாகக் கிடைத்தது.

    அப்பத்திரிகையை மூடி வைத்தவள். கடைசிப் பக்கத்தில் சிறிது கிழிந்திருப்பதைக் கண்டாள். தன் கணவனின் ஃபோட்டோ கடற்கரையில் விழுந்துவிட்டது. தன்னிடம் இருந்த ஒரே ஞாபகச் சின்னம். அதுவும் போய்விட்டது. மனதில் நிம்மதி ஏற்பட்டதுபோலிருந்தது அவளுக்கு! பொய்த் தோற்றமோ?

    ‘முகவரி’ எழுதிக் கொடுத்தது நினைவிற்கு வந்தது. அதுமட்டுமா வந்தது? ஜோசப் சொன்ன சொற்களும்தான் நினைவிற்கு வந்தன.

    தாய் சொல்லியும் கேளாமல் தன் காதலனான ஜோசப் தான் தனக்குச் சகலமும் என்றெண்ணி அவனுடன் தேனிலவிற்காகப் பெங்களூர் சென்றிருந்தபோது ஒரு நாள் மாலையில்

    சத்தியம்... நீ மட்டும் இந்தப் பரந்த நெற்றியில் பொட்டு இட்டுக் கொள்ளாமலிருந்தால்...

    சட்டென்று அவனுடைய வாயைப் பொத்தினாள்.

    மெதுவாக அவள் கையை விலக்கியவாறே, இந்த அழகான பரந்த நெற்றியில் சுவையான கவிதை எழுதி வைக்கலாம் போலிருக்கிறது. நீ இட்டுக்கொள்ளும் பொட்டு, ஏதாவது ஒரு வரிக்கு முற்றுப் புள்ளியாகி விட்டால்... கூடாது... முற்றுப் பெறாத கவிதை நீ!

    சத்தியம் எரிந்துகொண்டிருந்த விளக்கை அணைத்து விட்டாள். நினைவை அணைத்துவிட்டதாக நினைத்தாளோ என்னவோ?

    ‘முகவரி’ என்று செயல்படும் போதெல்லாம் இந்நிகழ்ச்சி நினைவிற்கு வராமல் போனதேயில்லை.

    ‘உன் வாழ்க்கையே கிழித்துக்கொடுக்கிறாற் போலிருக்கிறது’ என்று சந்திரன் கூறிய வார்த்தகள் அவள் செவியில் ஒலித்துக் கொண்டே இருந்தன.

    தற்செயலாகப்பட்டு, உறவாடிய விரல்களை இதழ்மேல் வைத்தவாறு சிரித்தபடியே உறங்கிவிட்டாள் அவள்!

    ***

    தான் தங்கி இருந்த அறைக்கு வந்தவுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டான் சந்திரன். அவள் கொடுத்த முகவரியைப் பார்த்துப் பார்த்துப் பரவசமடைந்தான். பேனாவைப் பெறும்போது அவளுடைய விரல்கள் தந்த உணர்வை... தற்செயலாகப் பட்டதோ, அல் லது வேண்டுமென்று தான் செய்தாளோ!

    அவளைப் பற்றி எண்ணியவாறே படுக்கையில் சாய்ந்து கொண்டான் சந்திரன்.

    அவன் கண்ணெதிரே கல்லூரி நாடக நிகழ்ச்சி தோன்றியது.

    ‘இருந்து சாதிக்க முடியாததை இறந்து சாதிக்க முடியும்’ இப்படித்தான் ஆரம்பமாகிறது நாடகம்! வசனத்திற்கே கைதட்டல் பெற்றான் சந்திரன்.

    ‘எப்படி’ என்று ரசிகர்கள் வினாக் குறிப்புடன் அமர்ந்திருக்க. அம்பிகாபதி- அமராவதி. ரோமியோ ஜூலியட். லைலா-மஜ்னு - காட்சிகள் அரங்கில் தோன்றி மறைந்தன.

    ஆமாம், சந்திரனும், சத்யவதியும்தான் அப்பாத்திரங்களை ஏற்று நடித்தனர்- அல்ல- உண்மையிலே அந்தப் பாத்திரமாக மாறிவிட்டனர்- இப்படித்தான் நினைத்தனர் ரசிகர்கள்! ஏன் -சந்திரனும் சத்யவதியும் கூட அப்படித்தான் நினைத்தனர்.

    காதல் தான் உயர்ந்தது! அம்பிகாபதியின் காதலும், ரோமியோவின் அன்பும், மஜ்னுவின் நேசமும் தெய்வீகக் காதல் என்கின்றனர். தாங்கள் அமரர்களாகித் தங்கள் காதலை தெய்வீகமாக்கினர் அவர்கள் இருந்து சாதிக்க முடியாததை இறந்துதான் சாதித்தனர் சந்திரனின் இறுதி வார்த்தைகள் திரைக்கு பின்னின்று ஒலித்தாலும், பார்த்தவர்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன.

    சட்டென்று விழித்துக் கொண்ட சந்திரன், தனக்குள் சிரித்தவனாய், கீழே விழுந்துவிட்ட - சத்யம் கொடுத்த - காகித்தை எடுத்து வைத்துக் கொண்டான். மிக இறுக்கமாகப் பற்றிக் கொண்டான். அவளையே பிடித்துவைத்து கொள்வது போல!

    எண்ணமே செயலென்றாலும், செயல் எண்ணத்தைத் தானே வெளிப்படுத்துகிறது!

    நாட்கள் செல்லச் செல்ல நட்பு இறுகியது. சந்திப்புக்கள் அதிகமாயின. முன்னாள் கல்லூரிப் பழக்கம் அவர்களுக்குத் தெம்பு அளித்தது.

    கல்லூரி முடிந்தவுடனே ஊருக்குச் சென்றுவிட்டீர்களே? உங்களுக்காக உங்க அத்தை பெண் நீலா கூட காத்திருப்பதாகச் சொன்னீர்களே!

    குளிர்சாதன அறையில் அமர்ந்து குளிர்ந்த பானம் அருந்திக் கொண்டிருந்த சந்திரனுக்கு வியர்த்துவிட்டது. நல்லவேளையாக அவள் பார்க்குமுன் துடைத்துக் கொண்டான்.

    ஊருக்குச் சென்றேனே தவிர வேறு ஒன்றும் விசேஷம் நடைபெறவில்லை...

    ஏன் இப்படித் திணறுகிறது?

    ஒன்றுமில்லை... இந்த திராட்சைதான் இப்படி... என்றவாறே அதை உமிழ்ந்தான்.

    தன்னை எங்கே திருப்பிக் கேட்டுவிடுவானோ என்ற ஐயம் பினனர்தான் எழுந்தது அவளுக்கு! பெண் புத்தி பின்புத்திதானே!

    ஹோட்டலைவிட்டு இருவரும் வெளியே வந்தனர். அப்போது ஒரு பெண் அவர்களைக் கடந்து சென்றாள். அவளை ஒரு கணம் பார்த்தான்.

    இப்போதெல்லாம் நெற்றியில் ஒன்றும் இல்லாமல் இருப்பது நாகரிகமாக இருக்க, இப்பெண் இவ்வளவு பெரிய பொட்டு இட்டிருப்பது என்னவோ போலில்லை?...

    சுருக்கெனப் பட்டாலும் பின்னர் சமாளித்துக் கொண்டு, அது அவரவர்கள் விருப்பம்! என்று கூறிக் கொண்டே இருந்தவள் தனக்கு முன் செல்லும் ‘டெர்லின்’ சட்டை அணிந்தவரை பார்த்துவிட்டு ஒரு கணம் திகைத்தாள். பின்னர் அவருடன் செல்லும் பெண்மணியைப் பார்த்தாள். முகம் சுருங்கியது.

    என்ன சத்தியம்... யாரது? உனக்கு அது யார் என்று தெரியுமா?

    ம்... ம் தெரியும். எங்க ஆபீஸில் வேலை செய்யும் காஷியர். சொந்த மனைவியை இழந்து மூன்று மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் இப்படியா?

    சரேலென நின்றான் சந்திரன்! தெரிந்து சொன்னாளா? தற்செயலாகத்தான் சொன்னாளா?

    குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தது.

    ஏன் நின்றுவிட்டீர்கள்?

    ஒன்றுமில்லை. ஹோட்டல் பணம் கொடுத்துவிட்டு மீதிச் சில்லறையை வாங்கினேனா அல்லது மறந்துவிட்டேனா என்ற சந்தேகம் வந்துவிட்டது... அவ்வளவுதான்...

    இப்படித்தான் சமாளிக்க முடிந்தது அவனால்.

    டாக்ஸியிலேறி தியேட்டரை அடைந்தனர் இருவரும். படம் ஓடிக்கொண்டிருக்கையிலே, திரைக்கதையும் நிகழ்ச்சிகளும் இருவரையும் பெரும் பாடுபடுத்திவிட்டன.

    ஆனால் இருவரும் சமாளித்துக் கொண்டிருந்தனர்.

    இருட்டிலிருந்து வெளிச்சத்தைப் பார்க்க முடிந்தது. அவர்களால்; தங்கள் உணர்ச்சிகளையும் மறைத்துக் கொள்ள முடிந்தது.

    வெளியே வரும்போது ‘ஏன்’தான் இப்படத்திற்குச் சென்றோம் என்று இருவருக்கும் தோன்றிவிட்டது. ஆனால் ஒன்றும் சொல்லவேயில்லை.

    அவர்களுக்குத் தெரியுமா, தங்கள் கடந்த கால வாழ்க்கையினைக் கோடி காட்டுவது போல அமையும் என்று? கதாநாயகியும் நாயகனும் அவசரப்பட்டு, மணமாவதற்கு முன்னரே உணர்ச்சி வசப்பட்டு ‘குழப்பம்’ விளைவிக்கா திருந்தால் அவள் சாகாமல் இருந்திருப்பாளோ என்னவோ? சத்தியம்தான் பேசினாள். ஆமாம்... உள்ளச் சேர்க்கைதான் உயர்ந்தது என்று ஏன் தான் இவர்களுக்குப் புரியவில்லையோ?

    தன் மனமும் சந்திரன் மனமும் இதிலும் ஒற்றுமையாய் இருப்பது கண்டு மனமகிழ்ந்தாள் சத்யவதி. தன்னுடன் இவ்வளவு நாட்கள் பழகியும் மறந்தும் கூட உடலால் தீண்டாத சந்திரனின் பண்பு அவளை மெய்மறக்கச்செய்தது. சந்திரனிடம் களங்கம் உண்டு. ஆனால் ‘இந்தச் சந்திரனிடம் களங்கம் இல்லை’ நினைத்தாள்

    Enjoying the preview?
    Page 1 of 1