Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Myna Unnai Kolvena?
Myna Unnai Kolvena?
Myna Unnai Kolvena?
Ebook95 pages35 minutes

Myna Unnai Kolvena?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உங்கள் கைகளில் குடியேறியிருக்கும் பாமா கோபாலனின் இந்தப் புதினம் பற்றி. மாத நாவல்கள், வார நாவல்களாகவும் வெளியாகி வாசகர்களுக்குப் பெரும் தீனி போட்ட காலத்தில், குமுதத்தின் மாலைமதியில் வெளியானது இந்நாவல்.

மாத நாவல்கள் எழுதுவது எழுத்தாளர்களுக்கு ஒரு சவால். இத்தனைப் பக்கங்கள் என்று தீர்மானமான பின், அந்த வரையறைக்குள் தங்கள் வித்தைகளைக் களம் இறக்க வேண்டும். சுவாரசியமான எழுத்தால் பக்கத்துக்குப் பக்கம் வாசகர்களின் ஆர்வத்தையும் பிடித்து வைத்துக் கொண்டு படித்து முடித்தபின் கதை திருப்தியாக இருந்தது என்ற விமர்சனத்தையும் வரவழைக்க வேண்டும். இதில் அநாயாசமாக வெற்றி பெற்றிருக்கிறார், பாமாகோபாலன்.

ஒவ்வொரு பாத்திரத்தையும் கச்சிதமாக வடிவமைத்தபின் கதை தானாக நீரோடைபோல் செல்கிறது. திடுக் திருப்பங்களுடன் நிறைவு பெறுகிறது. கடைசிவரை சஸ்பென்ஸை நிலைநிறுத்தி, கதையை சுவாரசியமாகக் கொண்டு போயிருக்கும் பாமா கோபாலனுக்குப் பாராட்டுகள்.

பாமா, ஜமாய்த்திருக்கிறீர்கள். தொடர்ந்து ஜமாயுங்கள்.

மிக்க அன்புடன்,

சுரேஷ் (சுபா)

Languageதமிழ்
Release dateFeb 26, 2020
ISBN6580128505039
Myna Unnai Kolvena?

Read more from Bhama Gopalan

Related to Myna Unnai Kolvena?

Related ebooks

Related categories

Reviews for Myna Unnai Kolvena?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Myna Unnai Kolvena? - Bhama Gopalan

    http://www.pustaka.co.in

    மைனா உன்னைக் கொல்வேனா?

    Myna Unnai Kolvena?

    Author:

    பாமா கோபாலன்

    Bhama Gopalan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bhama-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    முன்னுரை

    அன்புள்ள ஆசிரியருக்கு எனறு கடிதங்கள் எழுத ஆரம்பித்தபோது வயது 19. பிரசுரமான பிறகு உற்சாகத்தில் தகவல் துணுக்குள், ஜோக்ஸ், என்று படிப்படியாக வளர்ந்து, சின்னச் சின்ன கட்டுரைகளை வெளிநாட்டு ஆங்கில இதழ்களிலிருந்து மொழிபெயர்ப்பு செய்ததும் பத்திரிகைகளின் ஏகோபித்த ஆதரவுடன் - உற்சாகம் பொங்கியது. 

    பிறகு கதைகள் எழுத ஆரம்பித்து, குமுதத்தில் ஒரு பக்கக் கதைகளுக்கு முன்னுரிமை என்று நானாகப் புரிந்துகொண்டு எழுதித் தள்ளினேன்.

    1985 ஆம் ஆண்டு அமுதசுரபியில் ஃப்ரீலான்ஸராகப் பணியில் சேர்ந்தேன். ஒன்றரை ஆண்டுகள் அங்கு வேலை செய்தேன். பிறகு எதேச்சையாகக் குமுதத்துக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பியது இறை அருள் என்றே சொல்ல வேண்டும். அதன் விளைவாகக் குமுதத்திலேயே பணிபுரியுமாறு அழைப்பு வந்தது. 2002 வரை அங்கு பணிபுரிந்தது என் பொற்காலம்!

    பேட்டிகள், கட்டுரைகள், மாலைமதி நாவல், ஏராளமான சிறுகதைகள் என்று எழுதித் தள்ள முடிந்தது.

    அதற்கு முன்பே 1980 ஆம் ஆண்டு என் திருமணப் பத்திரிகையும் நான் எழுத்தாளரின் கணவனாகப் போகிறேன் என்ற தகவலும் குமுதம் பத்திரிகை மூலம் பிரபலமாயிற்று. மனைவியாக வாய்த்தவளின் மிகச் சிறந்த ஒத்துழைப்பு காரணமாக சிறப்பு நிருபராக ஆனேன்! பிறகு எடிட்டோரியல் கன்சல்டண்ட் என்னுமளவுக்கு உயர்ந்தேன். குமுதம் பக்தி ஸ்பெஷலில் பணியாற்றவும் முடிந்தது இறைவன் செயலே.

    ஆதரவு தந்து ஒத்துழைப்பு நல்கிய ஆசிரியர் குழுவுக்கும், சக நிருபர்களுக்கும், புகைப்படக் கலைஞர்களுக்கும் என் இதயபூர்வமான நன்றிகள்.

    அல்லயன்ஸ் கம்பெனி தரும் உற்சாக டானிக் என்றென்றும் மறக்க இயலாத ஒன்று. நிறுவனம் இன்னொரு நூற்றாண்டு காண திருப்பதி பெருமாளையும் கற்பகாம்பாளையும் பிரார்த்திக்கிறேன்!

    நன்றியுடன்

    பாமா கோபாலன்

    ***

    வாழ்த்துரை

    என்னையும் பாலாவையும் பார்ப்பவர்கள் நெஜமாகவே ரெண்டு பேருக்குமே எழுதத் தெரியுமா? என்று ஆச்சர்யத்துடன் கேட்பார்கள். எழுதத் தெரிந்த இரண்டு பேர் எப்படி ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க முடியும் என்பதே பலரது சந்தேகம். எங்களை விடுங்கள், தங்கள் எழுத்தில் தனித்தனி நடையழகுடன் கணவனும், மனைவியும் வெற்றிகரமான எழுத்தாளர்களாக இருக்க முடியும் என்று அசத்திக்கொண்டிருக்கும் வேதா கோபாலனையும், பாமா கோபாலனையும் பார்த்து பிரமியுங்கள்.

    அந்த தம்பதியுடன் எழுத்தாளர்களாக அறிமுகம் துவங்கி, நண்பர்களாக அடர்த்தியாகி, இன்றுவரை ஆரோக்கியமாக வளர்கிறது எங்கள் உறவு.

    சிறியவர், பெரியவர், முதியவர், புதியவர் என்று எந்தப் பாரபட்சமும் இன்றி, யாரையும், எதற்கும் பாராட்டும் அவர்களுடைய பெரிய இதயங்களைக் கண்டு நாங்கள் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம்.

    இங்கே பதிய வந்தது அதைப் பற்றி அல்ல. உங்கள் கைகளில் குடியேறியிருக்கும் பாமா கோபாலனின் இந்தப் புதினம் பற்றி. மாத நாவல்கள், வார நாவல்களாகவும் வெளியாகி வாசகர்களுக்குப் பெரும் தீனி போட்ட காலத்தில், குமுதத்தின் மாலைமதியில் வெளியானது இந்நாவல்.

    மாத நாவல்கள் எழுதுவது எழுத்தாளர்களுக்கு ஒரு சவால். இத்தனைப் பக்கங்கள் என்று தீர்மானமான பின், அந்த வரையறைக்குள் தங்கள் வித்தைகளைக் களம் இறக்க வேண்டும். சுவாரசியமான எழுத்தால் பக்கத்துக்குப் பக்கம் வாசகர்களின் ஆர்வத்தையும் பிடித்து வைத்துக் கொண்டு படித்து முடித்தபின் கதை திருப்தியாக இருந்தது என்ற விமர்சனத்தையும் வரவழைக்க வேண்டும். இதில் அநாயாசமாக வெற்றி பெற்றிருக்கிறார், பாமாகோபாலன்.

    ஒவ்வொரு பாத்திரத்தையும் கச்சிதமாக வடிவமைத்தபின் கதை தானாக நீரோடைபோல் செல்கிறது. திடுக் திருப்பங்களுடன் நிறைவு பெறுகிறது. கடைசிவரை சஸ்பென்ஸை நிலைநிறுத்தி, கதையை சுவாரசியமாகக் கொண்டு போயிருக்கும் பாமா கோபாலனுக்குப் பாராட்டுகள்.

    பாமா, ஜமாய்த்திருக்கிறீர்கள். தொடர்ந்து ஜமாயுங்கள்.

    மிக்க அன்புடன்,

    சுரேஷ் (சுபா)

    அடையார்

    ***

    1

    சென்னை நகரில் புகழ்பெற்ற இடங்கள் மற்றும் நபர்கள் என்று பட்டியல் போடத் தெரியுமா? -

    சென்ட்ரல் ஸ்டேஷன் - ரிசர்வேஷன் கவுண்டர் ஸ்டேஷனின் உள்ளே நிர்வாக அமைப்புகள் - போர்ட்டர்களின் கும்பல்- -

    எல்.ஐ.சி. கட்டடம்- அரசாங்கப் பொது மருத்துவனை முக்கியமாக மார்ச்சுவரி எனப்படும் பிணவறைப் பகுதி -

    எழும்பூர் ரயில் நிலையம், அடையார் பார்க் ஷெராட்டன் ஹோட்டல், சோழா ஹோட்டல், மியூசிக் அகாடமி, மியூசியம், ஏர்போர்ட்

    ஏன்

    Enjoying the preview?
    Page 1 of 1