Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

காதல் சிறகுகள்
காதல் சிறகுகள்
காதல் சிறகுகள்
Ebook351 pages1 hour

காதல் சிறகுகள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அம்மா அழகேஸ்வரி ஆறு வருடத்திற்கு முன்பு நன்றாகத்தானே இருந்தாள். தனது இரு குழந்தைகளையும் காப்பாற்ற ஓடி ஓடி உழைத்தாள். மூத்தவன் அருண் நான்கு வயதாகவும், அபிநயா கைக்குழந்தையாகவும் இருக்கும்போதே கணவன் விபத்தொன்றில் இறந்தான். வாழவேண்டிய வயதில் விதவையாகி திக்குதிசை தெரியாமல் தவித்தாள். படிப்பும் அதிகம் இல்லை. கையில் ஒரு தொழிலும் இல்லை. இரு குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு. வாழ்வும் பிடிக்காமல் சாகவும் துணியாமல் இரண்டாங்கெட்ட நிலை. உறவென்றும் யாரும் இல்லை. உதவி செய்ய ஒருவரும் இல்லை. அவள் மீது பரிதாபப்பட்டு தெரிந்தவர் ஒருவர் சிபாரிசு செய்து ஒரு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை வாங்கித் தந்தார். அதை வைத்துக் கொண்டும், மாலையில் சிறிய வகுப்பு குழந்தைகளுக்கு தனிப்பாடம் எடுத்துக் கொண்டும் குழந்தைகளை வளர்த்தாள். படிக்க வைத்தாள்.
 ஆனால் - அவள் உடம்பை மறைத்தது கிழிந்த சேலைதான். அவள் வயிற்றில் நிறைந்திருந்தது பசிதான். அம்மா எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு குழந்தைகளை வளர்த்தாள். அவளுடைய இரண்டு விழிகளும் குழந்தை தான். உடல், பொருள், ஆவி அனைத்தும் அவர்கள்தான். அவர்களே உலகம் என்று எண்ணினாள். அதிலும் மூத்தவன் அருணைத்தான். பெரிய தூணாக நம்பியிருந்தாள். அவன் படித்து வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றுவாள் என மனக்கணக்குப் போட்டு வைத்திருந்தாள்.
 அவனும் - படித்தான். அவளுடைய உழைப்பை உறிஞ்சி கம்ப்யூட்டர் என்ஜினியரிங் படித்தான். வேலைக்குச் சென்றான். அவள் சேர்த்து வைத்திருந்த பணத்தையும், மகளுக்காக வாங்கி வைத்திருந்த ஒன்றிரண்டு நகைகளையும் அழித்து வேலை வாங்கினான்.ஆனால் - குடும்பத்தைத்தான் காப்பாற்றவில்லை.
 இதற்கிடையில்தான் அம்மாவிற்கு யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக தலைவலி வந்தது. தலைவலி என்றால் சாதாரண தலைவலி அல்ல. மிகவும் பயங்கரமான தலைவலி, உச்சந்தலையிலும் பின் மண்டையிலும் சுத்தியலால் அடிப்பதைப் போன்ற தலைவலி. அந்த சமயங்களில் கண்ணிரெண்டும் இருட்டிக் கொண்டு வந்தது. சில தினங்களில் பார்வையை மறைக்கத் தொடங்கியது. எவ்வளவோ வைத்தியம் செய்தும் புண்ணியமில்லை. ஒருநாள் திடீரென இரு கண்களுமே தெரியாமல் போய்விட்டது. அன்றிலிருந்து இப்படித்தான்-
 அம்மா ஒரு இருள் உலகத்திற்குள் உலவுகிறாள். யாரை தூணாய் நம்பினாளோ அவன் அடுத்த சில மாதங்களிலேயே தன்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் ஒருத்தியை மணந்து கொண்டு வந்தான். வந்தவனும் வீட்டில் தங்கவில்லை. வந்த வேகத்திலேயே தனிக் குடித்தனம் சென்று விட்டான்.
 வேலைக்குப் போகாத அபிநயா, கண் தெரியாத அழகேஸ்வரி என்ன செய்வாள்? குடும்பம் எப்படி ஓடும்? அம்மா மிகவும் ஒடிந்து விட்டாள். திணறிவிட்டாள். குடும்பத்தை தாங்க வேண்டிய தலைப்பிள்ளை இப்படி தறுதலைப் போல் ஓடிப் போய் விட்டான். அழுது அழுதே அம்மா பாதி செத்துவிட்டாள். கணவனை இழந்தபோதுகூட அவள் இந்த அளவிற்கு இடிந்து போய்விடவில்லை. அப்பொழுது குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் துக்கத்தை துடைத்தது. உடலில் இருந்த உழைக்கும் வெறி மனமாற்றத்தையும் வலிமையையும் தந்தது. உழைக்க வைத்தது. அதனாலேயே அந்த இடி ஜீரணிக்கப்பட்டது.
 ஆனால் இந்த இடி...?
 வயதாகிவிட்டது. கண் தெரியாமல் போய்விட்டதே என்ற அதிர்ச்சியே இன்னும் ஜீரணிக்கப்படாத நிலைமையில் துணையாய் இருக்க வேண்டியவன் இப்படி விட்டுவிட்டு ஓடிவிட்டான்.
 அபிநயாதான் குடும்பத்தை தூக்கி நிறுத்தினாள். "அம்மா... நான் இருக்கேம்மா. நான் இருக்கேன். அவன் போனா போகட்டும்மா. நான் இருக்கேன். நான் உன்னைக் காப்பாத்தறேம்மா" அம்மாவை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்அம்மா விக்கி விக்கி அழுதாள். "உன்னைக் காப்பாத்த வேண்டியவனே போய்ட்டானேன்னுதாம்மா நான் கலங்கறேன்."
 "ஐயோ... அம்மா. அவன் ஏம்மா என்னைக் காப்பாத்தணும். என்கிட்ட படிப்பு இருக்குமா! நீ போட்ட பிச்சை அது. என்னால வாழ முடியும்மா. உன்னையும் வாழ வைக்க முடியும். என் படிப்பு எனக்கு பாதுகாப்பையும் கொடுக்கும். பணத்தையும் கொடுக்கும். அவனைப் பத்தி கவலைப்படாதேம்மா."
 ஆறுதல் கூறினாள். ஆனால் அடிமனதில் இனம்புரியாத பயம் உண்டானது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223707165
காதல் சிறகுகள்

Read more from R.Sumathi

Related to காதல் சிறகுகள்

Related ebooks

Related categories

Reviews for காதல் சிறகுகள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    காதல் சிறகுகள் - R.Sumathi

    காதல் சிறகுகள்

    முன்னுரை

    வெகு நாட்களுக்குப் பிறகு ஆனந்த கீதனிடமிருந்து அபிநயாவிற்கு கடிதம் வந்திருக்கிறது. தபால்காரன் தந்துவிட்டுப் போனபோது அது ஒரு சாதாரண கடிதம் போல்தான் இருந்தது. அனுப்புனர் முகவரியைப் பார்த்த போதுதான் இன்ப அதிர்ச்சி வந்து தாக்கியது. வெளிநாட்டு கவரினுள் ஆனந்த கீதனின் இதயமே இருப்பதாகத் தோன்றியது. ஆனந்தகீதனை பார்க்கின்ற போதெல்லாம் எந்தமாதிரியான உணர்வுகளுக்கு ஆட்படுவாளோ அதே உணர்வுகள் அவளை ஆக்ரமித்தது. எத்தனை வருடங்களுக்குப் பிறகு அந்த உணர்வுகளை அவள் அனுபவிக்கிறாள்?

    ஆனந்தகீதனை விட்டுப் பிரிந்ததிலிருந்து ஒரு உலோக பொம்மையாய், ஒரு காய்ந்துபோன மரமாய், உதிர்ந்துவிட்ட சருகாய் கிடந்தவளுக்கு முதன்முறையாய் உயிரும் உணர்வும் வந்ததைப் போலிருந்தது.

    மனம் காதலால் விம்மியது. மெல்ல கடிதத்தைப் பிரித்தாள். உள்ளிருந்து நான்காய் மடிக்கப்பட்ட காகிதத்தை உருவினாள். ஆனந்த கீதனின் மணிமணியான அழகான எழுத்துக்களை பார்த்ததுமே உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது.

    ‘அன்புள்ள அபிநயாவிற்கு ஆனந்தகீதன் எழுதிக் கொண்டது.’

    ஒரு வரியைப் படித்ததுமே உடல் குளிர் காய்ச்சல் வந்ததைப் போல் தூக்கிப் போட்டது. கண்களில் கண்ணீர் பெருகி அடுத்த வரியை படிக்கவிடாமல் தடுத்துவிட்டது. சில கணங்கள் அந்த ஒரு வரியை ஜீரணிப்பதைப் போல் அமைதியாக இருந்தாள். பின் சேலை தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். அடுத்த வரியை வாசித்தாள்.

    ‘நானும், என் மனைவி, குழந்தைகளும் நலம். நீயும் அம்மாவும் நலமாக இருக்கிறீர்களா? எனக்கு உன்னை மறக்கும் சக்தி இல்லை என்பதை இந்தக் கடிதமே உணர்த்தியிருக்கும். இப்பொழுதும் உன்மேல் எனக்கு கோபம்தான். வறட்டு பிடிவாதத்தால் நீ வாழ்க்கையை இழந்துவிட்டாய் என்று எனக்குத் தோன்றுகிறது. என்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் நீ வாழ்த்து அனுப்புவாய். நான் பதிலுக்கு உனக்கு நன்றியோ கடிதமோ எழுதுவதில்லை. காரணம் உன் மேல் எனக்கிருக்கும் நீங்காத கோபமே. என் மனைவிக்கு நான் எந்தவிதத்திலும் குறை வைக்கவில்லை. ஆனால் உன்னை உயிருக்கு உயிராய் காதலித்துவிட்டு என்னால் அவளுடன் ஆத்மார்த்தமாய் ஒட்ட முடியவில்லை. உன்னைப் பிரிந்து சரியாய் ஐந்து வருடம் ஆகிறது. நீயும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என என் மனம் நினைக்கிறது. நான் உனக்கு துரோகம் பண்ணிவிட்டதைப் போல் தோன்றுகிறது. நான் குடும்பத்துடன் இந்தியா வருகிறேன். இந்த வாரத்தின் கடைசியில் வருகிறேன். நான் வருவது உன்னைப் பார்க்கத்தான். ஆனால் என் அண்ணன் மகள் திருமணத்திற்கு வருவதாக காரணம் கூறியிருக்கிறேன். இதை சாக்காய் வைத்து உன்னைப் பார்க்கவே விரும்பி வருகிறேன். மற்றவை நேரில் பேசலாம்.

    அன்புடன்,

    ஆனந்தகீதன்.

    அபிநயாவின் இதயம் விம்மியது. கண்களை இறுக மூடிக் கொண்டாள். உதட்டை அழுந்த கடித்துக் கொண்டாள். கண்களில் பெருகிய நீர் கன்னத்தின் வழியோடி மார்பில் விழுந்து சிதறியது.

    ‘ஆனந்த்...’

    துடிக்கும் இதயம் உதடாய் மாறி உச்சரித்துப் பார்த்தது.

    உன்னைக் காணப் போகும் அந்த நிமிடங்கள்தான் என் உயிரை திருப்பித் தரும் நிமிடங்கள். உன் முக தரிசனத்தை காணப்போகும் தருணங்கள்தான் என் உயிரை நான் அடையாளம் காணும் தருணங்கள்.

    ‘நீ எப்படி என்னைக் காண வருவாய்? பழைய ஆனந்தகீதனாக அதே குறும்பு பேச்சுடனும் நகைச்சுவையுடனும் பேசுவாயா? சிரிக்க சிரிக்க பேசும் அந்த இயல்பு இன்னும் உன்னிடம் இருக்குமா?’

    மனம் என்னென்னவோ பிதற்றியது. தன் படுக்கையறைக்குள் நுழைந்தாள். படுக்கையில் சரிந்தாள். தலையணைக்கடியில் இருந்த பெரிய டைரியை எடுத்தாள்.

    ‘ஆனந்த்... நம் காதல் கதையை நான் அப்படியே எழுதி வைத்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை என் வாழ்க்கையின் சொத்து இதுதான். என் மனம் உன்னை நினைக்கின்றபோதெல்லாம் நம் கதையை வாசிப்பேன். உன்னுடன் இருப்பதைப் போலவே ஒரு உணர்வு எனக்குள் வரும். அதனால் நான் உன்னை பிரிந்திருப்பதாக ஒரு எண்ணமே எனக்குள் எழாது...’

    மனதிற்குள் ஆனந்தனோடு பேசிக் கொண்டவள் அந்த டைரியை பிரித்தாள்.

    பெரிய எழுத்தில் ‘காதல் சிறகுகள்’ என எழுதியதை விரல்களால் தடவினாள்.

    அடுத்த பக்கத்தைப் புரட்டினாள்.

    ஆம்...! அபிநயா தன் காதல் சிறகுகளை விரித்து வானவீதியில் பறக்கிறாள். தன் காதல் கதையை முதல் அத்தியாயத்திலிருந்து படிக்கிறாள். அவள் இதை ஆயிரம் முறை படித்திருப்பாள்.

    அவளுடன் சேர்ந்து நாமும் ஒரே ஒருமுறை ‘காதல் சிறகுகளை’ வாசிப்போம்.

    1

    அபிநயாவிற்கு விழிப்பு வந்தபோது மணி விடியற்காலை மூன்று. பக்கத்தில் இருந்த அலாரத்தினால் தெரிந்து கொண்டாள். கண்களில் தூக்க கலக்கம் இருந்தது. ஆனால் மேற்கொண்டு உறக்கம் வரவில்லை.

    இன்னும் இரண்டு மணி நேரம் தூங்கலாம்தான். ஆனால் உறக்கம் வரவில்லையே. இப்பொழுதெல்லாம் இப்படித்தான். அதிகாலையில் சீக்கிரமே விழிப்பு வந்து விடுகிறது. அதற்கு பிறகு புரண்டு புரண்டு படுத்தாலும் உறக்கம் வருவதில்லை.

    அதிகாலை உறக்கம் என்பது அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்க வேண்டும். ஆனால் அவளைப் பொறுத்தவரை தான் இழந்து விட்டதாய் கருதும் இன்பங்களில் இதுவும் ஒன்று. என்றைக்குமே அவள் அப்படி உறங்க முடியாது. அதிலும் அம்மாவிற்கு இப்படி ஆனதிலிருந்து எல்லா சுதந்திரமும் போய்விட்டது. இளம் வயதிலேயே எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய வேண்டியதாகிப் போனது. ஒருவித பெரிய மனுஷித்தனம் வந்துவிட்டது. வயதுக்கு மீறிய எண்ணங்கள். வயதுக்கு மீறிய முதிர்ச்சி.

    அம்மாவை திரும்பிப் பார்த்தாள். அம்மா அழகேஸ்வரி ஒருக்களித்து படுத்திருந்தாள் அருகில். இரவின் கருமை மாறாத அறையில் இரவு விளக்கின் மெல்லிய பச்சை வண்ண ஒளியில் அம்மாவின் அழகு முகம் முதிர்ச்சியடைந்த ஒரு நிலவாகத் தெரிந்தது.

    அம்மாவின் முகத்தையே உற்றுப் பார்த்தாள்.

    ‘அம்மா... இந்த ஐம்பது வயதிற்குள் நீ அனுபவித்த துயரங்கள்தான் எத்தனை? இளம் வயதில் கணவனை இழந்து தனிமரமாய் நின்றாலும் எவ்வளவு கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தாய்? காலம் முழுவதும் கஷ்டப்பட்ட உன்னை கடைசி காலத்தில் மகிழ்ச்சியாக இருக்க விடவில்லையே விதி. உன் நல்ல உள்ளத்திற்கு இப்படி ஒரு நிலை வேண்டுமா?’

    குபீரென நெஞ்சடைத்தது. கண்களில் உறக்கம் தொலைந்து கண்ணீர் கசிந்தது.

    படுக்கையிலிருந்து கீழே இறங்கிய அபிநயாவிற்கு வயது இருபத்தி இரண்டு. ஒரு கதையின் கதாநாயகிக்குரிய அத்தனை அழகும் இருந்தது. கலைந்து கிடந்த கூந்தலும் கசங்கிய மலரும் ஒரு தனி சோபையை தந்தது. கூந்தலில் இருந்த காய்ந்த பூச்சரத்தை உருவினாள். சன்னலைத் திறந்து அதன் வழியே எறிந்தாள்.

    படுக்கையறையைவிட்டு வெளியே வந்தாள். தன்னுடைய படிக்கும் அறைக்குள் நுழைந்தாள்.

    அந்த அறை மிகவும் சின்னதாக இருந்தது. ஒரு மர அலமாரி. அது நிறைய புத்தகங்கள். பக்கவாட்டில் ஜன்னலை ஒட்டி நாற்காலியும் மேசையும், மேசை மீது விளக்கு. விளக்கை எரிய விட்டாள். கையில் கிடைத்த புத்தகத்தை எடுத்தாள். வாலி எழுதிய ராமாயணம், புராணகால கதைகள் ஒன்றும் புதிதல்ல படித்து தெரிந்து கொள்ள.

    படித்த பக்கத்தில் முனை மடக்கி மூடிவிட்டு எழுந்தாள். அசதியில் அழகாக அபிநயா சோம்பல் முறித்ததை எந்த அவதாரப் புருஷன் பார்த்திருந்தாலும் அவளழகில் ஒருகணம் ஆடிப் போயிருப்பான்.

    படிக்கும் அறையைவிட்டு வெளியே வந்தாள். கடிகாரத்தைப் பார்த்தாள்.

    மணி சரியாக ஐந்து.

    ‘இவ்வளவு நேரமாகவா படித்திருக்கிறேன். நேரம் போனதே தெரியவில்லையே...’

    காலத்தை மறக்க வைக்கும் சக்தி நல்ல கவிததைகளுக்குத்தான் உண்டு.

    இதுவரையில் கவிதையில் திளைத்திருந்த மனம் சட்டென கடமைக்கு ஓடியது. பரபரத்தது. தூக்க கலக்கம், மேனியை துளைக்கும் குளிர், கவிதையில் கட்டுண்ட ரசனை எல்லாவற்றையும் மீறி சுறுசுறுப்பு வந்து ஒட்டிக் கொண்டதில் பம்பரம் போலானாள். குளிரை பொருட்படுத்தாது சில்லென்ற நீரில் நீராடினாள். வாசல் தெளித்து மின்னல் போல் பளிச்சென ஒரு கோலமிட்டாள்.

    அடுக்களையை ஒழித்துப் போட்டு பாத்திரங்களைக் கழுவினாள். அதற்குள் பால்காரன் வந்துவிட பால் வாங்கினாள். பாலை அடுப்பில் ஏற்றி காய்ச்சும்பொழுது அம்மா எழும் சத்தம் கேட்டது. அவசரமாக சமையலறையிலிருந்து அவள் வருவதற்குள் அம்மா தடுமாறி தடுமாறி படுக்கை அறையைவிட்டு வெளியே வந்தாள்.

    காற்றில் இரு கைகளையும் துழாவியபடியே வந்த தன் கண் தெரியாத அம்மாவை ஆதரவாய் பிடித்துக் கொண்டபோது...

    அவளுடைய இதயம் வேதனையில் சறுக்கிக் கொண்டே சென்று கொண்டிருந்தது.

    2

    அம்மா அழகேஸ்வரி ஆறு வருடத்திற்கு முன்பு நன்றாகத்தானே இருந்தாள். தனது இரு குழந்தைகளையும் காப்பாற்ற ஓடி ஓடி உழைத்தாள். மூத்தவன் அருண் நான்கு வயதாகவும், அபிநயா கைக்குழந்தையாகவும் இருக்கும்போதே கணவன் விபத்தொன்றில் இறந்தான். வாழவேண்டிய வயதில் விதவையாகி திக்குதிசை தெரியாமல் தவித்தாள். படிப்பும் அதிகம் இல்லை. கையில் ஒரு தொழிலும் இல்லை. இரு குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு. வாழ்வும் பிடிக்காமல் சாகவும் துணியாமல் இரண்டாங்கெட்ட நிலை. உறவென்றும் யாரும் இல்லை. உதவி செய்ய ஒருவரும் இல்லை. அவள் மீது பரிதாபப்பட்டு தெரிந்தவர் ஒருவர் சிபாரிசு செய்து ஒரு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை வாங்கித் தந்தார். அதை வைத்துக் கொண்டும், மாலையில் சிறிய வகுப்பு குழந்தைகளுக்கு தனிப்பாடம் எடுத்துக் கொண்டும் குழந்தைகளை வளர்த்தாள். படிக்க வைத்தாள்.

    ஆனால் - அவள் உடம்பை மறைத்தது கிழிந்த சேலைதான். அவள் வயிற்றில் நிறைந்திருந்தது பசிதான். அம்மா எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு குழந்தைகளை வளர்த்தாள். அவளுடைய இரண்டு விழிகளும் குழந்தை தான். உடல், பொருள், ஆவி அனைத்தும் அவர்கள்தான். அவர்களே உலகம் என்று எண்ணினாள். அதிலும் மூத்தவன் அருணைத்தான். பெரிய தூணாக நம்பியிருந்தாள். அவன் படித்து வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றுவாள் என மனக்கணக்குப் போட்டு வைத்திருந்தாள்.

    அவனும் - படித்தான். அவளுடைய உழைப்பை உறிஞ்சி கம்ப்யூட்டர் என்ஜினியரிங் படித்தான். வேலைக்குச் சென்றான். அவள் சேர்த்து வைத்திருந்த பணத்தையும், மகளுக்காக வாங்கி வைத்திருந்த ஒன்றிரண்டு நகைகளையும் அழித்து வேலை வாங்கினான்.

    ஆனால் - குடும்பத்தைத்தான் காப்பாற்றவில்லை.

    இதற்கிடையில்தான் அம்மாவிற்கு யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக தலைவலி வந்தது. தலைவலி என்றால் சாதாரண தலைவலி அல்ல. மிகவும் பயங்கரமான தலைவலி, உச்சந்தலையிலும் பின் மண்டையிலும் சுத்தியலால் அடிப்பதைப் போன்ற தலைவலி. அந்த சமயங்களில் கண்ணிரெண்டும் இருட்டிக் கொண்டு வந்தது. சில தினங்களில் பார்வையை மறைக்கத் தொடங்கியது. எவ்வளவோ வைத்தியம் செய்தும் புண்ணியமில்லை. ஒருநாள் திடீரென இரு கண்களுமே தெரியாமல் போய்விட்டது. அன்றிலிருந்து இப்படித்தான்-

    அம்மா ஒரு இருள் உலகத்திற்குள் உலவுகிறாள். யாரை தூணாய் நம்பினாளோ அவன் அடுத்த சில மாதங்களிலேயே தன்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் ஒருத்தியை மணந்து கொண்டு வந்தான். வந்தவனும் வீட்டில் தங்கவில்லை. வந்த வேகத்திலேயே தனிக் குடித்தனம் சென்று விட்டான்.

    வேலைக்குப் போகாத அபிநயா, கண் தெரியாத அழகேஸ்வரி என்ன செய்வாள்? குடும்பம் எப்படி ஓடும்? அம்மா மிகவும் ஒடிந்து விட்டாள். திணறிவிட்டாள். குடும்பத்தை தாங்க வேண்டிய தலைப்பிள்ளை இப்படி தறுதலைப் போல் ஓடிப் போய் விட்டான். அழுது அழுதே அம்மா பாதி செத்துவிட்டாள். கணவனை இழந்தபோதுகூட அவள் இந்த அளவிற்கு இடிந்து போய்விடவில்லை. அப்பொழுது குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் துக்கத்தை துடைத்தது. உடலில் இருந்த உழைக்கும் வெறி மனமாற்றத்தையும் வலிமையையும் தந்தது. உழைக்க வைத்தது. அதனாலேயே அந்த இடி ஜீரணிக்கப்பட்டது.

    ஆனால் இந்த இடி...?

    வயதாகிவிட்டது. கண் தெரியாமல் போய்விட்டதே என்ற அதிர்ச்சியே இன்னும் ஜீரணிக்கப்படாத நிலைமையில் துணையாய் இருக்க வேண்டியவன் இப்படி விட்டுவிட்டு ஓடிவிட்டான்.

    அபிநயாதான் குடும்பத்தை தூக்கி நிறுத்தினாள். அம்மா... நான் இருக்கேம்மா. நான் இருக்கேன். அவன் போனா போகட்டும்மா. நான் இருக்கேன். நான் உன்னைக் காப்பாத்தறேம்மா அம்மாவை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

    அம்மா விக்கி விக்கி அழுதாள். உன்னைக் காப்பாத்த வேண்டியவனே போய்ட்டானேன்னுதாம்மா நான் கலங்கறேன்.

    ஐயோ... அம்மா. அவன் ஏம்மா என்னைக் காப்பாத்தணும். என்கிட்ட படிப்பு இருக்குமா! நீ போட்ட பிச்சை அது. என்னால வாழ முடியும்மா. உன்னையும் வாழ வைக்க முடியும். என் படிப்பு எனக்கு பாதுகாப்பையும் கொடுக்கும். பணத்தையும் கொடுக்கும். அவனைப் பத்தி கவலைப்படாதேம்மா.

    ஆறுதல் கூறினாள். ஆனால் அடிமனதில் இனம்புரியாத பயம் உண்டானது.

    அண்ணன் மீது கோபமும் ஆத்திரமும் போட்டிப் போட்டுக் கொண்டு வந்தது. ச்சை... அண்ணனா அவன். அரக்கன். கணவனை இழந்துவிட்டு கஷ்டப்பட்டு தன்னைப் படிக்க வைத்து ஆளாக்கிய தாயை கண் தெரியாத நிலையில் தவிக்க விட்டுவிட்டு ஓட மனம் எப்படி வந்தது. உடன்பிறந்த தங்கையைப் பற்றி துளிகூட எண்ணம் இல்லாமல் போக எப்படி துணிவு வந்தது?

    குடியிருந்த வயிற்றில் நெருப்பை அள்ளிக் கொட்டிவிட்டு போக மனம் வந்தவனுக்கு தன்னுடன் பிறந்தவனைப் பற்றியா கவலை இருக்கப் போகிறது?

    ‘போடா... போ. என்னால் முடியும்! என் தாயை என்னால் காப்பாற்ற முடியும். நீ போனால் என்ன? நானிருக்கிறேன் அவளுக்கு. மகனாகவும் மகளாகவும் நானிருப்பேன். உன் இடத்தில் இருந்து செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வேன்.’

    பெண்ணிற்கு மனதில் உறுதி வந்து விட்டால் மலையைகூட பெயர்த்துவிடுவார்கள்.

    Enjoying the preview?
    Page 1 of 1