Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வசந்தமுல்லை
வசந்தமுல்லை
வசந்தமுல்லை
Ebook97 pages33 minutes

வசந்தமுல்லை

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வசந்தமுல்லை தான் படுத்திருந்த அந்த அறையை ஒரு முறை தன் விழிகளால் பார்த்தாள்.
 உயர்ரகமான மெத்தையின் மேல் அவளுடைய மேனி ஒயிலாகப் படுத்திருந்தது. அந்த மெத்தையைத் தாங்கிய கட்டில் தேக்கு மரத்தால் அழகிய வேலைப்பாடுகளுடன் இருந்தது. கண்ணாடி போல் பளீரிடும் தரை. சுவர்களும் அப்படித்தான். அவளுக்கென்று அழகான அலமாரி. அலங்காரம் செய்து கொள்ள கண்ணாடியுடன் கூடிய மேசை. அவளுக்கென்று கலர் டி.வி. குளிர் சாதனப் பெட்டி. அறை முழுவதும் குளிர்காற்று பரவ செய்யப்பட்ட வசதி. ஒலிநாடா... விதவிதமான உடைகள்.
 அவள் அந்த அறையில் படுத்திருக்கும் கோலத்தைப் பார்த்தால் யாருமே அவளை ஒரு வேலைக்காரி என்று கூற முடியாது.
 வசந்தமுல்லை தனக்குள் நினைத்துக் கொண்டாள்.
 சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட அவளுடைய குடும்பம் இன்று சொந்த வீட்டில் சுகமாக வாழ்கிறது. அம்மா, அப்பா, அக்கா, தம்பிகளையெல்லாம் விட்டுப் பிரிந்து அவள் இங்கு வந்து ஆறு வருடமாகிறது. இந்த ஆறு வருடத்தில் எத்தனை மாற்றங்கள்?
 அப்பா இறந்து போனார். அவள் போகவில்லை. அப்பாவை விட பணம்தான் முக்கியமாகப்பட்டது. அதனால் போகவில்லை.
 இந்த ஆறு வருடங்களும் அவள் மனதில் உண்டாக்கிய மாற்றங்கள்தான் எத்தனை? பக்குவங்கள்தான் எத்தனை?
 அம்மாவை நினைத்தாள். அம்மா எழுதிய கடிதம் தலையணைக்கடியில் இருந்தது. அதை மறுபடியும் எடுத்தாள். வாசித்தாள். விழிகளில் நீர் கோர்த்துக் கொண்டது. விரல்களால் விலக்கினாள்அம்மாவின் கடிதத்திற்கு முத்தம் கொடுத்தாள். அந்தக் கடிதத்தை நெஞ்சில் வைத்துக் கொண்டாள். சுகமாய் கண்களை மூடிக் கொண்டாள். ஆறு வருடத்திற்கு முந்தைய அவளுடைய வாழ்க்கை கண்ணுக்குள் படமாய் விரிந்தது.
 தலைமையாசிரியை நீட்டிய மதிப்பெண் பட்டியலை கையில் வாங்கினாள் வசந்தமுல்லை. தலைமையாசிரியை பெரிய நோட்டு ஒன்றை நகர்த்தி வசந்தமுல்லையின் அப்பாவை கையெழுத்திடச் சொன்னாள். அவள் சுட்டிக் காட்டிய இடத்தில் கையெழுத்திட்டார் முத்து. வசந்தமுல்லையின் தந்தை.
 வசந்தமுல்லை மதிப்பெண்களைப் பார்த்தாள். அவளுடைய முகம் பூவாய் மலர்ந்தது. மகிழ்ச்சியில் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. எப்படியும் நிறைய மதிப்பெண்கள் வாங்கி விட வேண்டும் என்று கஷ்டப்பட்டு படித்ததன் பலன் இதோ மதிப்பெண்களாய் விளைந்திருக்கிறது அவள் கையில்.
 "மேடம்..."
 தலைமையாசிரியை அவளுடைய டி.சியையும் கையில் கொடுத்துவிட்டுச் சொன்னாள்.
 "மேல என்ன படிக்கப் போற வசந்தமுல்லை?"
 "காலேஜ்தான் சேரப் போறேன் மேடம். மாத்ஸ் எடுத்துப் படிக்கப் போறேன்."
 "வெரிகுட்... நீ நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருக்கே. நல்லா படி. படிச்சு ஒரு வேலைக்குப் போ." என்றவள் வசந்தமுல்லையின் தந்தையைப் பார்த்தாள்.
 "வசந்தமுல்லை கெட்டிக்காரி. அவளை நல்லா படிக்க வையுங்க. நல்லா வருவா" என்றார்.
 "சரிங்க மேடம்." பவ்யமாய் கைகட்டிச் சொன்னார் முத்து.
 "வசந்தமுல்லை... நான் போறேன். எனக்கு முக்கியமான வேலை இருக்கு. நீ வீட்டுக்குப் போ..." என்று கூறிவிட்டு அவளுடைய பதிலுக்குக் காத்திராமல் பள்ளிக்கூடம் அது என்ற நினைவுகூட இல்லாம வேட்டியை மடித்துக் கட்டி முட்டி தெரியும்படி போனார் அப்பா.அவரையே வெறித்துப் பார்த்தாள். அவ்வளவு அவசரமாக அவருக்கு இருக்கும் முக்கியமான வேலை என்னவென்று அவளுக்குத் தெரியாதா?
 திகைப்புடனும், வெறுப்புடனும் மரத்தடியில் நின்றிருந்த அவளை அவளுடைய தோழிகள் பார்த்தனர். அவளும் அவர்களைப் பார்த்தாள். அவர்களனைவரும் உற்சாகமாக இருந்தனர். தங்களுடைய மதிப்பெண்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 7, 2023
ISBN9798223564140
வசந்தமுல்லை

Read more from R.Sumathi

Related to வசந்தமுல்லை

Related ebooks

Related categories

Reviews for வசந்தமுல்லை

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வசந்தமுல்லை - R.Sumathi

    1

    "அம்மா... லட்டர்ஸ்..."

    வாட்ச்மேன் வைத்துவிட்டுப் போன கடிதங்களைப் பார்த்தாள் பீவி. தன் கனத்த உடம்பை சோபாவில் பாதி புதைத்ததைப் போல் அமர்ந்திருந்தாள். உறிஞ்சிக் கொண்டிருந்த காபி கோப்பையை எதிரே இருந்த குட்டை மேசை மீது வைத்தாள்.

    பீவியின் உடல் முழுவதும் ஒரு மரக்கால் நிறைய அளந்து போட்டதைப் போல நகைகள் இருந்தன. கைகளில் அடுக்கப்பட்ட வளையல்கள் பளீரிட்டன. உயர்ரகமான ஒரு புடவையை உடல் முழுவதும் சுற்றியதில் இன்னும் குண்டாகத் தெரிந்தாள். முந்தானையை தலையைச் சுற்றிப் போட்டிருந்தாள்.

    கணவரின் நண்பர்களிடமிருந்து சில கடிதங்கள் வந்திருந்தன அவளுடைய கணவரின் பெயரில். வசந்தமுல்லைக்கு வந்த கடிதத்தைப் பார்த்தாள். அதை இப்படியும், அப்படியும் புரட்டிப் பார்த்தவள்,

    வசந்தமுல்லை... வசந்தமுல்லை... என்று குரல் கொடுத்தாள். அவளுடைய குரலுக்கு உள்ளிருந்து வெளிப்பட்டாள் வசந்தமுல்லை. ஈரக்கைகளைத் துணியால் துடைத்தவாறே வந்தாள்.

    வசந்தமுல்லைக்கு இருபத்தியெட்டு வயது. முகத்தில் களையழகு மிளிர்ந்தாலும் ஒருவித கவலை தெரிவதைப் போலிருந்தது. பூசியதைப் போல் வெளிர்மஞ்சள் நிற தேகம். அடர்த்தியான கூந்தல்.

    இளமையான அவளுடைய அழகு பளிச்சென கண்களைக் கவர்ந்தது. காதில் ஒற்றைக் கல் வைத்த தோடு. அதையும் காதோரம் சுருண்டிருந்த முடிக்கற்றை மறைத்திருந்தது. கழுத்தில் மெல்லிய தங்கச் சங்கிலி மின்னல் கோடாய் விளையாடியது. உடலைத் தழுவிக் கொண்டு தென்றல் போல் விளையாடும் ஒரு மெல்லிய சேலை. நெற்றியில் சிரிக்கும் திலகம்.

    கூப்பிட்டீங்களாம்மா என்றபடியே பீவியின் அருகில் வந்தாள்.

    ஆமாம் வசந்தமுல்லை. உங்கம்மாக்கிட்டேயிருந்து கடிதம் வந்திருக்கு.

    வசந்தமுல்லைக்கு மகிழ்ச்சி குப்பென பரவியது. அவளுடைய அழகான முகம் அவசரமான ஒரு ஜொலிப்பை உண்டாக்கியது. இருளில் வழிகாட்டும் தீபம் போன்ற அவளுடைய விழிகள் பிரகாசமாயின. இமைகள் விரிந்து ஆச்சரியத்தையும், ஆனந்தத்தையும் ஒன்றாய் காட்டின.

    கடிதத்தை மிகப் பெரிய பரிசுப் பொருளொன்றை வாங்குவதைப் போல் மகிழ்ச்சியுடன் வாங்கினாள் வசந்தமுல்லை. முன்புறமும், பின்புறமும் திருப்பித் திருப்பிப் பார்த்தாள்.

    அம்மாவின் கையெழுத்தைப் பார்த்ததுமே அவளுடைய கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

    அன்பு மகள் வசந்தமுல்லைக்கு,

    அம்மா பாசத்துடன் எழுதும் கடிதம். எப்படியிருக்கிறாய்? வசந்தமுல்லை... இங்கு அனைவரும் நலம். எனக்குத்தான் உடல்நிலை சரியில்லை. உடல் நிலையை விட மனநிலைதான் சரியில்லை. எல்லாம் உன்னை நினைத்துத்தான். நீ போட்ட பிச்சையினால் இங்கு உன் உடன் பிறந்தவர்களெல்லாம் இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கிறார்கள். அதைப் பார்க்கும் போது என் மனம் மகிழ்ச்சியாலும், பெருமையாலும் பூரிக்கிறது. ஒரு குடும்பத்திற்கு ஆண் பிள்ளை எப்படி இருப்பானோ அப்படி இருந்தாய். பெரியவன் வளையாபதிக்கு பெரிய கம்பெனி ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. அவன் எம்.பி.ஏ. படித்து இன்றைக்கு நல்ல நிலையில் இருக்க நீதான் காரணம். சின்னவனும் இந்த வருடம் பி.எஸ்ஸியை முடித்து விடுவான். பிறகு அவனும் ஒரு நல்ல வேலைக்குச் சென்று விடுவான். அவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. இப்பொழுது என் கவலையெல்லாம் உன்னைப் பற்றித் தான். நீ எப்பொழுது இந்தியா வருவாய், உன்னை எப்பொழுது பார்ப்போம் என்றிருக்கிறது. இங்கு உன் உடன் பிறந்தவர்கள் ராஜ வாழ்க்கை வாழ நீ மட்டும் வேலைக்காரியாய் கடல் கடந்து இருக்கிறாய். இதை நினைக்கும் போது என் மனம் மிகவும் வேதனையடைகிறது.

    வசந்தமுல்லை உனக்கும் இருபத்தெட்டு வயதாகி விட்டது. உன் தோழிகள் அனைவருக்கும் திருமணமாகி குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உனக்கு இன்னும் திருமணமாகவில்லை. எனக்கும் அந்த ஆசை இருக்காதா? உனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று. நீயும் குழந்தை குட்டிகளோடு வாழ வேண்டும் என்று இந்தத் தாயின் மனம் ஏங்காதா? இன்னும் எத்தனை வருடங்களுக்கு அங்கே இருக்கப் போகிறாய்? இந்த வருடம் வருகிறேன், அடுத்த வருடம் வருகிறேன் என்று நாட்களைக் கடத்துகிறாய். வசந்தமுல்லை இனியும் எதற்கு நீ அங்கே இருக்க வேண்டும். நாம் நல்ல நிலையில் இருக்கிறோம். நீ எப்படியாவது இன்னும் சில மாதங்களில் இங்கே வந்துவிடு. எனக்கும் உடல்நிலை சரியில்லை. பயமாக இருக்கிறது. உனக்கொரு திருமணம் செய்துவிட்டால் என் மனம் நிம்மதியடைந்து விடும். நீ இந்த அம்மாவின் பேச்சை இந்த முறை கேட்பாய் என நம்புகிறேன். தயவு செய்து வந்துவிடு. உன் எஜமானியம்மாவிடம் விஷயத்தைச் சொல். அவர்களையும், அவர்கள் குடும்பத்தையும் விசாரித்ததாகக் கூறு.

    இப்படிக்கு,

    உன் நல்ல பதிலை எதிர்பார்க்கும்

    அம்மா.

    கடிதத்தைப் படித்து முடித்ததும் கண்களில் துளிர்த்த கண்ணீர் கடிதத்தில் சிந்தியது.

    அம்மா என்ன எழுதியிருக்காங்க வசந்தமுல்லை? பீவி அக்கறையுடன் விசாரித்தாள்.

    நீங்களே படிங்கம்மா என்று அந்தக் கடிதத்தை அவளிடம் நீட்டினாள் வசந்தமுல்லை.

    வாங்கிய கடிதத்தை வாசித்தாள் பீவி. வாசித்த கடிதத்தைப் பற்றி யோசித்தாள் வசந்தமுல்லை.

    ‘அம்மா சில வருடங்களாகவே இப்படித்தான் வந்துவிடு, வந்துவிடு என்று கடிதங்கள் எழுதுகிறாள். இவளுக்கும் அம்மா, அக்கா, தம்பிகளையெல்லாம் பார்க்க வேண்டும். அவர்களுடன் இருக்க வேண்டும்

    Enjoying the preview?
    Page 1 of 1