Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஒருவா் மனதில் ஒருவரடி!
ஒருவா் மனதில் ஒருவரடி!
ஒருவா் மனதில் ஒருவரடி!
Ebook176 pages44 minutes

ஒருவா் மனதில் ஒருவரடி!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இன்னும் சில நிமிடங்களில் இருட்டிக் கொண்டு விடும் என்று அறிவித்தது வானம்; கூடு நோக்கிப் பாடிய படி பறவைகள்.
 அந்த மண் சாலையில் காயத்ரியை இறக்கி விட்ட பேருந்து வேகம் குறையாமல் விரைந்தது. தன் கையில் பெரிய சூட்கேஸைப் பிடித்தபடி நடந்தாள் காயத்ரி. காற்றில் தூற்றிய வைக்கோலைப் போல் கூந்தல் பறந்தது. கூடவே ஏடாகூடமாகப் பறந்த துப்பட்டாவை இழுத்து நெஞ்சில் நிறுத்திக் கொண்டாள்.
 சிவப்பும் மஞ்சளுமாக அடிவானம்; சிரிப்பும் கும்மாளமுமாக வீடு திரும்பும் உழைப்பாளிகள். கற்றோரைக் கற்றோரே காமுறுவர் என்பதைப் போல் அழகு மிகுந்த ராஜகுமாரியான காயத்ரி அத்தனை இயற்கையழகையும் ரசித்து அதனுடன் ஐக்கியமாகி நடந்தாள். அதே நிமிடம் அவளுடைய நடையைத் தடம் புரள வைப்பதைப் போல் சர்ரென உரசியபடி ஒரு கார் வந்து நின்றது.
 காரை ஓட்டிக் கொண்டிருந்தவன் வெளியே தலையை நீட்டினான். திருவேங்கடம். கருகருவென்ற கேசம் கேசம் மட்டுமல்ல, தேகமும் அதே நிறம். ஆளும் கொஞ்சம் மோசம் என்றது பார்வை. நேசம் கலந்த பாசவார்த்தைகள் அவனிடமிருந்து வந்தன.
 "அட... காயத்ரி! ஊர் லேர்ந்து வர்றியா? நல்ல நேரத்துக்குத் தான் நான் வந்திருக்கேன். களத்து மேட்ல ஆளுங்களுக்கு சம்பளம் போடும் போதே மனசுக்குள்ள ஒரு பட்சி படபடன்னு சிறகு அடிச்சது. உன் நினைப்புத்தான் வந்தது. நினைச்ச மாதிரியே நீ வந்துட்டே... வா... கார்ல ஏறு..." 
 கோபமாக அவனை முறைத்தாள். முறைத்தபடியே உரைத்தாள்எனக்குக் கால் இருக்கு. நான் நடந்தே போய்க்கறேன்."
 "அப்போ கார் வச்சிருக்கறவனெல்லாம் கால் இல்லாதவனா?" அவன் சிரிக்க அவள் எரிக்கும் விதமாகப் பார்த்தாள்.
 "அதான் வரலைன்னு சொல்றேன்ல?" - விடுவிடுவென நடந்தாள். அவன் காரை நகர்த்தினான். பக்கத்திலேயே நிழல் தந்து கொண்டிருந்த புளிய மரத்தடியில் நிறுத்தி பூட்டிவிட்டு முன்னே செல்லும் அவளைப் பிடிக்க ஓட்டமும் நடையுமாக வந்தான்.
 திருவேங்கடத்திற்கு நெப்போலியனைப் போல் ஒரு உயரம். பிரகாஷ் ராஜைப் போல் ஒரு வில்லத்தனம்.
 அவளருகே வந்தவன் கார் சாவியை சுழற்றியபடி சொன்னான்.
 "கார்லயே என் கூட வரமாட்டேன்னு சொல்ற நீ வாழ்க்கை பூரா எப்படி வரப்போறேன்னு எனக்குத் தெரியலை."
 சடரரென ஒரு நிமிடம் நின்றாள். வெடுக்கென அவனைப் பார்த்தாள்.
 "என்ன உளர்றே?"
 "உளறல்தான். அம்மா கூட சொல்றாங்க. என்னடா தினமும் தூங்கும்போது உளறுறேன்னு. உன்னையே நினைச்சுக்கிட்டிருக்கறதால இப்படியெல்லாம் உளறுறேன்."
 "என்ன விளையாடுறியா?"
 "விளையாட்டுதான். காதல் விளையாட்டு." - அவன் ஸ்டைலாக மீசையை முறுக்கினான்.
 "காதலா? எப்பயிருந்து?" - அலட்சியமாக அவனைப் பார்த்து உதட்டை சுளித்தாள்.
 "நீயும் நானும் ஒண்ணா படிக்கிற காலத்திலேர்ந்து" - இதைக் கேட்டு பெரிதாக சிரித்தாள். சிரிப்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கையிலிருந்த சூட்கேஸைக் கீழே வைத்துவிட்டு சிரித்தாள். பிறகு சட்டென்று சிரிப்பை நிறுத்தி சொன்னாள்"நான் அஞ்சாங் கிளாஸ் படிக்கும் போது நீ அஞ்சு வருஷம் ஃபெயிலாகி அதே க்ளாஸ்ல இருந்தே. அதனால ஒண்ணா படிச்சோம். இதெல்லாம் ஒண்ணாப் படிச்சதா அர்த்தமா?"
 "அதெல்லாம் எனக்குத் தெரியாது. ரெண்டு பேரும் ஒண்ணா படிச்சோமா இல்லையா? நீ நல்லா படிச்சு பெரிய ஸ்கூலுக்குப் போய்ட்டே. நான் மக்கு ப்ளாஸ்திரின்னு நினைச்சுடாதே. வயல் வாய்க்கால், மாவு மில்லுன்னு எல்லாத்தையும் பார்க்க வேண்டியிருந்ததால படிக்க எனக்கு நேரம் இல்லாமப் போய்ட்டு. படிக்கிற வயசுல உன்மேல் உண்டான ஆசை மட்டும் அப்படியே இருக்கு. உனக்கு அதமாதிரி என் மேல எந்த ஆசையும் இல்லையா?"
 "கூடப்படிக்கிற பையனைக் காதலிக்கறதெல்லாம் சேரன் படத்துலதான் வரும். நிஜ வாழ்க்கையில இல்லை."
 "சேரன் படத்துல வருமோ... சோழன் படத்துல வருமோ... அதெல்லாம் எனக்குத் தெரியாது. அப்போ என்னை நீ காதலிக்கலைன்னா பரவாயில்லை. இப்போ நீ என்னைக் காதலிச்சுத்தான் ஆணும்."
 "அப்படியா? இவ்வளவு நாளா இந்தக் காதலை சொல்லாத நீ இப்போ திடீர்னு எதுக்கு சொல்றே?"
 "அப்படிக் கேளு. காரணம் இருக்கு. நீ ஒவ்வொரு லீவுக்கும் ஊருக்கு வரும் போது உன்கிட்ட என் காதலை சொல்லணும்னுதான் நினைப்பேன். ஆனா அப்படி சொன்னா அப்பறம் நீ படிக்காம என் கூட கனவிலயும் கற்பனையிலயும் ஆடிப்பாடிக்கிட்டு படிப்புல கோட்டை விட்டுடுவேன்னுதான் மனசை அடக்கி வச்சிருந்தேன். இப்போ படிப்பை முடிச்சுட்டு வந்துட்டேயில்லை. அதான் சொல்லிட்டேன்."

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223853305
ஒருவா் மனதில் ஒருவரடி!

Read more from R.Sumathi

Related to ஒருவா் மனதில் ஒருவரடி!

Related ebooks

Related categories

Reviews for ஒருவா் மனதில் ஒருவரடி!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஒருவா் மனதில் ஒருவரடி! - R.Sumathi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    கல்லூரியின் கடைசி வருட படிப்பு முடிந்து கடைசி தேர்வும் முடிந்துவிட்டது. அனைவரும் ஹாஸ்டலைக் காலி செய்து கொண்டிருந்தனர்.

    பிரிவுத்துயரம் மனதை அழுத்தினாலும் வீட்டிற்கு செல்லப்போகின்றோம் என்ற உற்சாகம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கவே செய்தது- காயத்ரியைத் தவிர.

    ஜன்னலோரம் நின்றபடி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். தன் உடமைகளை அடுக்கி பேகில் திணித்துக் கொண்டிருந்த சுகுணா திரும்பி காயத்ரியைப் பார்த்தாள். அருகே வந்தாள்.

    காயத்ரி... என்ன... ஊருக்குப் போக மனசில்லையா?

    காயத்ரி திரும்பினாள். சிரித்தபடி பெருமூச்சு விட்டாள்.

    ப்ச்! ஊருக்குப் போகவே பிடிக்கலை. ஏன்டா கல்லூரிப் படிப்பு முடிஞ்சதுன்னு இருக்கு.

    உனக்குத்தான் இந்த காலேஜ் மேல எவ்வளவு பிடிப்பு! காலேஜை விட்டுப் பிரிய உனக்கு மனசே இல்லை இல்லையா?

    அதெல்லாம் ஒண்ணுமில்லை. அடுத்த வருஷம் எம்.எஸ்.ஸி - யை இதே காலேஜ்லதானே தொடரப் போறேன்.

    அப்பறமென்ன? ஊர்ல போய் இந்த லீவை ஜாலியா அனுபவிக்க வேண்டியதுதானே?

    பிரபு இல்லாத இடத்துல என்னத்தை அனுபவிக்க முடியும்? - சலிப்புடன் காயத்ரி சொல்லவும் சுகுணா இடுப்பில் இரு கைகளையும் பதித்து ஓ... நீ அப்படி வர்றியா? பிரபுவைப் பார்க்காம உன்னால ஒரு நாள் கூட இருக்க முடியாதா? என்று கேட்டாள்.

    ரொம்ப கஷ்டம்! - தோள்களைக் குலுக்கி உதட்டைப் பிதுக்கினாள் காயத்ரி.

    அதுக்குத்தான் இந்த மாதிரி காதல் கத்தரிக்காய்னு எதிலேயும் மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னப்பார். சுதந்திரப் பறவை. - சுகுணா பெருமையாக தோள்களைக் குலுக்கிக் கொண்டாள்.

    இப்படி சொன்னவங்க எத்தனையோ பேரைப் பார்த்திருக்கேன். கடைசியிலே, ‘விழாமலே இருக்க முடியுமா? விழுந்து விட்டேன் காதல் வலையிலே’ன்னு பாட ஆரம்பிச்சுடுவாங்க.

    விழுந்துட்டா அப்பறம் உன்னை மாதிரிதான் புலம்ணும். பிரபு உன் ஊர்க்காரன் தானே? அப்பறம் ஏன் புலம்பறே?

    ஊர்க்காரன் மட்டுமில்லை. எங்க வீட்டுக்கு ரெண்டு தெரு தள்ளிதான் அவன் வீடு. ஆனா நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கறது எங்க ஊர்ல யாருக்கும் தெரியாது.

    அடிப்பாவி...! அப்படின்னா உங்க ஆட்டம் பாட்டமெல்லாம் இங்க சிட்டியிலதானா? ‘ஆத்தங்கரை மரமே அரசமர நிழலே’ன்னு கிராமத்துல ஆடிப்பாட மாட்டீங்களா?

    ஆடிப்பாடறதா? போடி! அது என்ன சென்னைன்று நினைச்சியா? பீச் - பார்க்கு - ஹோட்டல்னு சுத்த? கிராமம்; கட்டுப் பெட்டியான கிராமம். அங்கெல்லாம் நினைச்ச மாதிரி சுத்த முடியாது. காதலிக்க ஏற்ற இடம் சென்னைதான்!

    ஆமா! இங்கதான் யார், யார்கூட சேர்ந்து எக்கேடு கெட்டாலும் கேட்க ஆளில்லை. பேசாம ஒண்ணு பண்ணு. இந்த லீவுல சென்னையிலேயே ஏதாவது கம்யூட்டர் கோர்ஸ் பண்ணு. ஊருக்குப் போக வேண்டாம். பிரபுகூட ஜாலியா சுத்தலாம்.

    நல்ல ஐடியாதான். ஆனா எங்க வீட்ல ஒத்துக்கணுமே! லீவு விட்டதும் உடனே வீட்டுக்கு வரணும்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க.

    அப்போ இன்னைக்கே கிளம்பு.

    இன்னைக்கு முடியாது. இன்னைக்கு சாயந்தரம் பிரபுவை நான் சந்திச்சே ஆகணும். இல்லாட்டி என் தலை வெடிச்சிடும். நாளைக்குத்தான் நான் என் மூட்டை முடிச்சையெல்லாம் கட்டணும்.

    நாளைக்குக் கண்டிப்பா கிளம்பிடு. இன்னைக்கே முக்கால்வாசிப்பேர் கிளம்பிப் போய்ட்டாங்க. மத்தவங்களும் அநேகமா நாளைக்குக் கிளம்பிடுவாங்க. நீ மட்டும் தனியாயிருக்காதே.

    சரி சரி... நீ கிளம்பு. சும்மா பாட்டி மாதிரி தொண தொணக்காதே. அடுத்த வருஷம் எம்.எஸ்.ஸி க்ளாஸ்ல பார்க்கலாம்.

    என்னது... எம்.எஸ்.ஸியா? வேற வேலை இல்லை? இந்த வருஷத்தை முடிக்கவே படாதபாடு பட்டேன். ரிசல்ட் எப்படி வரும்னே தெரியலை. பாஸ் பண்ணினாத்தானே எம்.எஸ்.ஸி கனவு? படிப்பு... பரீட்சை... இந்த தலைவலி போதும். கல்யாணம் பண்ணிக்கிட்டு அழகா குடும்பம் நடத்தப்போறேன்.

    அடிப்பாவி! - காயத்ரி சிரிக்க, சுகுணா தன் துணிமணிகளை அடுக்குவதில் முனைந்தாள்.

    சொல்லி முடியாத கவிதையைப் போல்

    துள்ளி வரும் அலைகள்!

    தன் மடியில்-

    பள்ளி கொள்ளவரும் அலைகளை

    தள்ளி வைக்கும் கரை-ஆனால்

    அது கொண்டு வந்த சிப்பிகளை மட்டும்

    அள்ளிக் கொள்ளும் தந்திர குணம்.

    அதை -

    எள்ளி நகையாடும் அலையின் அடுத்த துள்ளல்.

    அள்ளி முடியாத அழகியின் கூந்தலைப் போல் நெளிவு.

    நல்லி பட்டைப் போல் ஒரு பாரம்பரிய ஜொலிப்பு.

    வில்லியாய் மாறி அது விளையாடியதை மறந்து

    பிள்ளையாய் அதன் மடியில் மனிதர்கள்! ஆடினர். ஓடினர். காற்று வாங்கினர். கதை பேசினர். உழைத்தனர். பிழைத்தனர். கடற்கரை பரபரப்பாயிருந்தது. மாலைநேரக் களிப்பில் மறைந்து போனது வேலை நேர அலுப்பு. சோலை யோர பூக்களை சொரிந்து விட்டுப் போனதைப் போல் மழலைகள் மணல் வீடு கட்டிக் கொண்டிருந்தனர். பாலைப் போல் பொங்கிய நீரில் காலை நனைத்திருந்தனர் காதலர்கள். அவர்களில் ஒருவராக காயத்ரியும் - பிரபுவும்.

    காலை நனைத்தபடி கை கோர்த்த நிலையில் சிறிது நேரம் அலையோடு நடந்துவிட்டுக் கரையேறினர்.

    உயர்த்தியிருந்த உடையை இறக்கி விட்டுக் கொண்டு ஓரிடம் பார்த்து அமர்ந்தனர்.

    காயத்ரி அவனுடைய முகத்தை ஏக்கமாகப் பார்த்தாள். அவள் தொடங்கிய உரையாடலில் ஆதங்கம் அடங்கியிருந்தது.

    பிரபு, நாளைக்கு நான் ஊருக்குப் போறேன்.

    பிரபு ‘ம்...’ என்றபடி அமைதியாக மணலைக் கிளறிக் கொண்டிருந்தான்.

    என்ன... நான் ஊருக்குப் போறேன்னு சொல்றேன். அமைதியாயிருக்கே? உனக்கு வருத்தமே இல்லையா?

    பிரபு சிரித்தான். வருத்தமா? நீ என்ன பரலோகத்துக்கா போறே - வருத்தப்பட்டு ‘போகுதே... போகுதே என் பைங்கிளி... வானிலே’ன்னு பாட? ஊருக்குத்தானே போறே?

    ஒரு மாசம் நீ என்னைப் பார்க்க முடியாதே. இப்படி பார்க், பீச்சுன்னு சுத்த முடியாதே.

    அதனாலென்ன? நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாறேன்.

    எங்க பரலோகத்துக்கா?

    அதுக்குள்ள எதுக்கு அங்க போகணும்? இன்னும் ஒரு கல்யாணம் கூட பண்ணிக்கலை.

    அடப்பாவி... அப்ப பல கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா வெல்லாம் இருக்கா?

    ஏன் இருக்கக் கூடாது?

    Enjoying the preview?
    Page 1 of 1