Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அந்த நெஞ்சம் என்னிடம்...
அந்த நெஞ்சம் என்னிடம்...
அந்த நெஞ்சம் என்னிடம்...
Ebook152 pages55 minutes

அந்த நெஞ்சம் என்னிடம்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மறுநாள் ஆறு மணிக்கெல்லாம் ரீட்டாவின் இல்லம் களைக்கட்டத் தொடங்கி விட்டது.
 ரீட்டாவின் தோழிகள் அரட்டையும் சிரிப்புமாக வீட்டை கலகலக்க வைத்தனர். ஒரு சாதாரணப் பிறந்த நாள் விழா கல்யாண நிகழ்ச்சியைப் போல் காணப்பட்டது. ஆளாளுக்கு ரீட்டாவின் அழகையும் அலங்காரத்தையும் புகழ்ந்தனர்.
 ரீட்டா பொதுவாகவே நனை உடைகளையே விரும்பி அணிவாள். பிறந்த நாளன்று உடுத்துவதற்கும் அவள் மிகவும் அழகான சுடிதார் ஒன்றையே வாங்கியிருந்தாள். அழகான வேலைப்பாடுகள் கொண்ட அந்த சுடிதார் இளம்பச்சை நிறத்தில் அழகாக இருந்தது.
 அதைத் தேர்ந்தெடுத்தவர்கள் அவளுடைய தோழிகளே. இரண்டு நாட்களுக்கு முன்பு தோழிகளுடன் சென்று அதை வாங்கி வந்திருந்தாள். ஆனால் இன்றைக்கு அவள் அதை உடுத்தவில்லை.
 ஏனோ புடவை கட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது. முதன் முதலாக லாரன்ஸின் பார்வையில் படும் போது புடவையில் இருந்தால் மதிப்பாக இருக்கும் என நினைத்தாள்.
 அதனால் புதிதாக வாங்கிய புடவை ஒன்று பிரிக்கப் படாமலேயே இருக்க அதைக் கட்டிக் கொண்டாள். அம்மாகூட "ஏன்டி.. பிறந்த நாளுக்காக எடுத்த டிரஸ்ஸை போட்டுக்கலையா?'' என்றாள்.
 இருக்கட்டும்மா! புடவையே கட்டிக்கறேன் இதுவும் பிதுசுதானே...'' என்றாள். அம்மாவிற்கும் அவள் புடவை கட்டியிருந்தது பிடித்திருந்தது. லாரன்ஸ் வீட்டிற்கு வரும் போது அவள் புடவையில் காட்சியளிப்பதே நன்றாயிருக்கும் என நினைத்தாள்.
 மகளுடைய அலங்காரம் இன்னும் மனதிற்கு திருப்தியும் சந்தோஷமும் கொடுத்ததுசிவப்பு பார்டர் போட்ட வெண்ணிறப்பட்டு, அதற்கு பொருத்தமாக அணிகலன்கள் அத்தனையும் வெண்மை நிறத்தில், கூந்தலை விரித்து விட்டு காதோரம் வெள்ளை ரோஜா வானம் விட்டு வந்த தேவதையாக தோழிகளும் அவளைப் பாராட்டினர்.
 ''ரீட்டா... நாம எடுத்த டிரஸைவிட இந்த புடவை ரொம்ப அழகாயிருக்குடி! தேவதை மாதிரி...''
 ஆளாளுக்கு அவளைப் புகழ லாரன்ஸின் மனமும் இதைப் போலவே மயங்க வேண்டும் என நினைத்தாள்.
 நிமிடத்திற்கு நிமிடம் கண்கள் வாசலிலேயே அலை பாய்ந்தன. அவன் வருவானா? கண்டிப்பாக வருவான் என அப்பா சொன்னாரே இன்னும் சொல்லப்போனால் விருந்தில் பல ஐட்டங்களை அப்பா அவனுக்காகவே சேர்ந்திருக்காரே!
 வராமல் வேறு ஏதாவது வேலை இருந்து 'ஸாரி' என போன் பண்ணி சொல்லிவிட்டால்..?
 நினைக்கவே நெஞ்சம் பதறியது.
 அப்பாவும் அவனுக்காகத்தான் வாசலுக்கும் உள்ளுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.
 ''ரீட்டா! எல்லாரும் வந்தாச்சே! அப்பறம் யாருக்காக வாசலையே பார்த்துக்கிட்டிருக்கே. வேற யாருக்காவது வெயிட் பண்றியா? கேக் வெட்டிடலாமே..'' தோழிகள் அவசரப்படுத்த,
 "வந்து... அப்பா பிரேயருக்கு ஏற்பாடு பண்ணியிருக்கார். சர்ச்லேருந்து பாதர் வருவார். பிரேயர் முடிஞ்சதும் ஆரம்பிக்கலாம்.''
 அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசலில் அந்தக் கார் வந்து நின்றது.
 அதிலிருந்து பாதர் முதலில் இறங்க அடுத்து லாரன்ஸ் இறங்கி உள்ளே வந்தான்.
 அப்பா வாசலுக்கு ஓடி பரபரப்புடன் வரவேற்றார்.
 உள்ளே நுழைந்த லாரன்ஸைப் பார்த்த ரீட்டாவிற்கு மூச்சடைத்ததைப் போலிருந்தது.
 அவனுடைய தோற்றம் அவளுக்குள் அநேக அதிர்வுகளை உண்டு பண்ணியது. லாரன்ஸ், நல்ல உயரத்தில் சற்றே சதைப்பிடிப்புடன் மாநிறத்தில் இருந்தான். சுருள் சுருளான கேசம்அப்பாவைப் பார்த்து பற்கள் தெரிய சிரித்து கை குலுக்கிய போது அந்த சிரிப்பு கவர்ச்சியாக... அழகாக பளிச்சென்ற பல் வரிசையோடு அவளுடைய மனதைக் கட்டிப் போட்டது.
 "ஏய்... யாருடி இந்த ஹீரோ?"
 தோழிகள் காதோரம் கிசுகிசுத்தது சுத்தமாக காதில் விழவில்லை. அவன் அப்பாவுடன் பேசுவது தெளிவாகக் காதில் கேட்டது.
 ''ஏய்... யாருன்னு கேட்குறோம்ல...'' இன்னொருத்தி கிள்ளவே சுயநினைவிற்கு வந்தாள்.
 "ம்... இவர்தான் எங்க அப்பாவோட மானேஜர்."
 "என்னது மேனேஜரா? இவ்வளவு சின்ன வயசானவர் உங்க அப்பா மாதிரி வயசானவருக்கு அதிகாரியா? பர்த்டே பார்ட்டிக்கு இவரையுமா கூப்பிட்டிருக்கீங்க?''
 ''பர்த்டே பார்ட்டிக்கு இல்லை அவர் வந்திருக்கிறது. பிரேயருக்கு."
 "கிறிஸ்டியனா?"
 ''ஆமாம்."

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 3, 2024
ISBN9798224401420
அந்த நெஞ்சம் என்னிடம்...

Read more from R.Sumathi

Related to அந்த நெஞ்சம் என்னிடம்...

Related ebooks

Reviews for அந்த நெஞ்சம் என்னிடம்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அந்த நெஞ்சம் என்னிடம்... - R.Sumathi

    1

    ‘‘நாளைக்கு நம்ம ரீட்டாவோட பிறந்த நாள் விழாவுக்கு புதுசா ஒரு விருந்தாளியைக் கூப்பிடப் போறேன்." என்றவாறே சோபாவில் அமர்ந்தார் டேவிட்.

    அவர் அப்பொழுதுதான் அலுவலகத்திலிருந்து வந்திருந்தார்.

    ‘‘யார் அந்த முக்கியமான விருந்தாளி? உங்க புதிய சிநேகிதன் யாராவது திடீர்னு கிடைச்சாங்களா?’’ என்றவாறு கையில் காப்பியுடன் வந்தாள் ஆரோக்கியமேரி.

    இல்லை நான் அடிக்கடி அவரைப் பத்தி பேசிக்கிட்டிருப்பேன். யாருன்னு கண்டுபிடி பார்க்கலாம்

    ‘‘யாரு? தெரியலையே! யாராவது அரசியல் வாதியா? நம்ம தொகுதி எம்.எல்.ஏ.வா? அவரைப் பத்தித் தான் அடிக்கடி பேசிக்கிட்டிருப்பீங்க. ஓட்டுக் கேட்க வந்ததோட சரி. அப்புறம் இந்தத் தொகுதியை எட்டிக்கூட பார்க்கலை அந்த ஆளு."

    ஆரோக்கியமேரி சிரித்தாள்.

    ஆமா! இவ ஒருத்தி தொகுதிக்கே வராதவனை கூப்பிட்டுத்தான் விருந்து வைக்கப் போறேனா? ஒ குளு வேணா கொடுக்கிறேன். கண்டுபிடி என்றவாறே காபியை உறிஞ்சினார், டேவிட்.

    ‘‘சரி சொல்லுங்க கண்டுபிடிக்கிறேன்.’’

    "அந்த நபர் ஆபீஸ்ல வேலை பார்க்கிறார்.’’

    ‘‘க்கும் கழுதை கெட்டா குட்டிச்சுவர். அந்த ராமகிருஷன்ணனை விட்டா ஆபீஸ்ல உங்களுக்கு பிரண்ட் யாரு! அவர் தான் வாரம் ஒரு தடவை வந்து நம்ம வீட்ல டிபன் சாப்பாடுன்னு வகை வகையா சாப்பிட்டுப் போறாரே அவருக்கா இவ்வளவு பில்டப் போடறீங்க"

    தன் அறை ஜன்னல் வழியே இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த ரீட்டா மனதிற்குள் சிரித்தாள்

    அப்பா யாரைக் குறிப்பிடுகிறார் என்பது அவளுக்கு புரிந்துவிட்டது. லாரன்ஸைத் தான்.

    சமீபகாலமாக அவர் வாயைத் திறந்தாலே வரும் பெயர் லாரன்ஸ் தானே. அலுவலகம் விட்டு வந்தார் போதும் லாரன்ஸ் புராணம் பாட ஆரம்பித்து விடுவார்

    லாரன்ஸ் அவருடைய அலுவலகத்திற்கு புதிதாக வேலையில் சேர்ந்திருக்கும் மேனேஜர். எம்.ஏ. படித்த அறிவு ஜீவி.

    "ரொம்பத் திறமையான பையன். இவ்வளவு சின்ன வயசுல எவ்வளவு பொறுப்புணர்ச்சி தனக்கு கீழே வேளை பார்க்கறவங்களாயிருந்தாலும் வயசுல பெரியவங்கன்னா என்ன மரியாதை...? அட...டா..

    இன்னைக்கு ஒரு வார்த்தை சொன்னார் பார் லாரன்ஸ். சார்... நாங்களெல்லாம் பெரிய படிப்பால எடுத்த உடனேயே பெரிய போஸ்ட்டுக்கு வந்திடறோம். ஆனா... உங்களை மாதிரி படிப்படியா ஏறி உயரத்துக்கு வறவங்களோட அனுபவ அறிவுக்கு சத்தியமா ஈடாக முடியாது அப்படின்னார் பார். என்ன தன்னடக்கம் பதவி வரும்போது பணிவு வரணும்னு கண்ணதாசன் பாடுவாரே... அந்த வரிக்கு ஏத்தவர் இவர். பதவி இருக்குங்கறதுக்காக யார்கிட்டேயும் அதிகாரத்தைக் காட்டறதில்லை. எல்லார்கிட்டேயும் அன்பாப் பழகுறார்.

    இப்படி அடிக்கடி லாரன்ஸைப் பத்தி பேசிக் கொண்டேயிருப்பார். ஆனால் ஒரு உயர் அதிகாரியைப் போயா பிறந்த நாள் விழாவிற்கு அழைத்திருப்பார். அதுவும் மிக எளிமையாக நடக்கும் ஒரு பிறந்த நாள் விழாவிற்காக?

    அப்பா... நான் கண்டுபிடிச்சுட்டேன்? உங்க மேனேஜர் லாரன்ஸைத் தானே கூப்பிட்டிருக்கீங்க என சொல்ல வேண்டும் போல் ஒரு துடிப்பு அவளுக்குள் எழுந்தது.

    அப்பா தப்பாக நினைத்துவிட்டால்? யாரோ ஒரு விருந்தாளி என்றால் பெண்ணுடைய மனதில் ஏன் லாரன்ஸ் என தோன்ற வேண்டும் என்று அப்பா நினைத்தால்.

    ஆனால் அவளையும் மீறி அவளுடைய கால்கள் கூடத்திற்கு வந்தன. அப்பா அடிக்கடி லாரன்ஸைப் பத்தின புராணத்தை பாடும்போது அவளுக்குள்ளும் அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழும்.

    "அப்பா... அந்த கெஸ்ட் யாருன்னு எனக்குத் தெரியும்!’’ என்றபடி அப்பாவிற்கு எதிரேயிருந்த சோபாவில் கைகளை ஊன்றி நின்றாள்.

    ‘‘யாரு.... சொல்லு பார்ப்போம்."

    ‘‘வேற யாரு? அந்த புது மேனேஜர் லாரன்ஸாத்தான் இருக்கும். ஒபாமாவைப் பத்தி உலகம் பேசினதை விட இந்த லாரன்ஸைப் பத்தி நீங்க பேசினது தானே அதிகம் என்ன... நான் சொன்னது சரியா?’’

    "சரியா கண்டு பிடிச்சுட்டியே! அவரை ரொம்ப நாள் வீட்டுக்கு கூப்பிடணும்னு நினைச்சேன். கூப்பிட்டேன் அவரும் கொஞ்சம் கூட பந்தா இல்லாம வர்றேன்னுட்டார்.

    சரியான சாப்பாட்டு ராமன் போலிருக்கு கூப்பிட்ட உடனேயே வர்றேன்னிருக்கார். ரீட்டா பெரிதாக சிரித்தாள்.

    ‘‘ஏய்... நீ சும்மாயிருக்க மாட்டே? அவர். எனக்கே அதிகாரி அவர் வீட்டுக்கு வரும்போது நீ பாட்டுக்கு உன்கூடப் படிக்கிற பசங்கக்கிட்டே பேசற மாதிரி பேசி வைக்காதே" டேவிட் அதட்டினார்.

    என்னங்க... அவ ஏதோ இதான் கடைசி வருஷம் அதனால பிரண்ட்ஸ்களை கூப்பிட்டு இந்த வருஷம் பர்த்டேவை கொண்டாடப்போறேன்னு சொன்னா. சரி. ஆசைப்படறாளேன்னு நானும் சரின்னுட்டேன். நீங்க என்னமோ பைவ் ஸ்டார் ஹோட்டல்ல விழா நடத்தர மாதிரி மேனேஜரையெல்லாம் கூப்பிட்டு வச்சிருக்கிங்க.

    "அம்மா... என்னம்மா நீ? அடுத்த வருஷம் தான் இருக்க மாட்டேங்கற மாதிரி கடைசி வருஷம்ங்கறே?’ ரீட்டா சிணுங்க.

    அடச்சீ... அபசகுனமா பேசிக்கிட்டு. படிப்புக்கு கடைசி வருஷம்னு சொன்னேன்.

    "அப்பா... அம்மா சொல்றது சரிதான். சாதாரண பிறந்த நாள் விழாவுக்கு போய் அவரைக் கூப்பிட்டிருக்கீங்களே அவர் ஏதாவது நினைக்க மாட்டார்?’’

    "ஏதாவது நினைப்பார்னுதான் அவர்கிட்டே பிறந்த நாள் விழான்னு சொல்லலை.’’

    ‘‘பின்னே?’’

    "நாளைக்கு என் வீட்ல ப்ரேயர் வச்சிருக்கேன். வாங்கன்னு கூப்பிட்டேன். அவரும் ஒரு கிறிஸ்டியனாச்சே? மறுக்க முடியுமா? வர்றேன்னுட்டார்.’’

    அப்போ... நாளைக்கு நம்ம வீட்ல பிரேயரா?

    ஆமா!

    இந்த ஏற்பாடே அந்த லாரன்ஸ்க்காகவா?

    அப்படித்தான் வச்சுக்கயேன்...

    அப்படி அவரை வீட்டுக்கு கூப்பிடனும்னு என்ன வந்திருக்கு?

    எல்லாம் காரணத்தோடதான்.

    அப்பா... பிரமோஷனுக்காக மேனேஜரைக் காக்கா பிடிக்கிறீங்களா?

    ‘காக்காவும் பிடிக்கலை. குருவியும் பிடிக்கலை. நீ போய் என் டைரியை எடுத்துட்டு வா. சர்ச்சுக்கு போன் பண்ணி நாளைக்கு பாதரை வரச் சொல்லணும்.

    சிரித்தபடியே ரீட்டா டைரியை எடுக்க அப்பாவின் அறைக்குள் நுழைந்தாலும், அவளுடைய காது கூடத்திலேயே இருந்தது.

    டேவிட் மனைவியிடம் கிசுகிசுத்தார்.

    ‘‘மேரி... லாரன்ஸை நான் வீட்டுக்கு கூப்பிடறது ஒரு வகையில என்னோட பிரமோஷனுக்கு காக்கா பிடிக்கிற மாதிரிதான்னு வச்சுக்கயேன்."

    "ச்சே! வெட்கமாயில்லை?’’

    ‘‘என்ன பிரமோஷன்னு கேளுடி."

    என்ன பிரமோஷன்?

    நான் மாமனார்ங்கற பிரமோஷனை அடையணும் தான் டைரி தேடிக் கொண்டிருந்த ரீட்டாவுக்கு திக்கென்றானது இன்னும் காதை கூர்மையாக்கினாள்.

    புரியலை எனக்கு அம்மா புருவம் நெரித்தாள்.

    ‘‘உனக்குத்தான் உடனே எதுவும் புரியாதே லாரன்ஸை நம்ம வீட்டு மருமகனாக்கணும்னு எனக்கு ஆசைடி."

    மேரி கண்களை வியப்பால் விரித்தாள்.

    தேடிய டைரி கையில் கிடைக்க அதை நெஞ்சில் வைத்து அழுத்தி தன் படபடப்பைக் குறைத்துக் கொள்ள முயன்றாள் ரீட்டா.

    ‘‘என்ன சொல்றீங்க நீங்க?"

    ஆமா மேரி. லாரன்ஸை நம்ம ரீட்டாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டா நாம நிம்மதியா இருக்கலாம்.

    ‘‘அந்தப் பையன் பெரிய படிப்பு படிச்சிருக்கு. பெரிய உத்யோகம். எவ்வளவு எதிர்பார்ப்பாங்களோ.’’

    ‘‘எதிர்பார்க்கட்டுமே! எனக்கும் ஒரு பொண்ணு தானே! செய்துட்டுப் போறோம்."

    பையன் நல்ல குணம் சரி! அம்மா அப்பா எப்படியோ?

    "பையனுக்கு அம்மா அப்பா யாரும் இல்லை. சின்ன வயசுலேயே செத்துட்டாங்களாம். அம்மாவழி சித்திக்கிட்டே வளர்ந்த வராம்.’’

    ‘‘சரிதான். ஆனா.. நீங்க நாளைக்கு அந்தப் பையன் வந்த உடனேயே என் பொண்ணைக் கட்டிக்கறியான்னு கேட்டுடாதீங்க. இதுக்காகத்தான் வீட்டுக்கு கூப்பிட்டிருக்கார் போலிருக்குன்னு தப்பா நினைக்கப் போறார்."

    "என்னை என்ன நாகரீகம் இல்லாதவன்னு நினைக்கிறியா? எடுத்த எடுப்பிலேயே இதையெல்லாம் யாராவது பேசுவாங்களா? முதல்ல லாரன்ஸ் நம்ம குடும்பத்தோட பழக்கமாகட்டும். அப்புறம் நம்ம பாதர் மூலமா பேசுவோம். நம்ம ரீட்டாவுக்கு என்ன குறைச்சல்? பிடிக்காமப் போகுமா?’’

    டேவிட் சொல்ல சொல்ல ரீட்டாவின் மனம் சிறகு விரித்துப் படபடத்தது.

    ‘‘இதையெல்லாம் ரீட்டாக்கிட்டே சொல்லிக்கிட்டிருக்காதே, சரியா?"

    "ம்.’’

    ரீட்டா சில நிமிடங்கள் தாமதித்தே டைரியோடு அப்பாவிடம் வந்தாள். டைரியைக் கொடுத்து விட்டு அப்பா கேட்டதற்கெல்லாம் சுய நினைவே இல்லாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

    மனம் லாரன்ஸையே நினைத்துக் கொண்டிருந்தது.

    "லாரன்ஸ், எப்படி இருப்பாய் நீ? கருப்பா, சிவப்பா? மாநிறமா? நடுத்தரமான உயரமா? இல்லை சராசரி உயரத்திற்கும் அப்பாற்பட்டவனா?’ அனிச்சையாக மேரி மாதாவின் முன் வந்து நின்றாள்.

    சிலுவை குறி இட்டுக் கொண்டாள்.

    "தாயே... லாரன்ஸ் என்ற பெயரே எனக்குள் இத்தனை சிலிர்ப்பை ஏற்படுத்துகிறதே! அவனை நாளைக்கு பார்க்கின்ற போது அவன் மனதிலும் இதே சிலிர்ப்பு உண்டாக அருள்புரி

    Enjoying the preview?
    Page 1 of 1