Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sathya Kodugal
Sathya Kodugal
Sathya Kodugal
Ebook172 pages1 hour

Sathya Kodugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By K.G.Jawahar
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466671
Sathya Kodugal

Read more from K.G.Jawahar

Related to Sathya Kodugal

Related ebooks

Related categories

Reviews for Sathya Kodugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sathya Kodugal - K.G.Jawahar

    13

    1

    அந்த இரண்டு பறவைகளும் ‘கீச் கீச்’ சென்று கத்திக்கொண்டு, அலகுகளால் ஒன்றையொன்று கோதிக்கொண்டு மரக்கிளையில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தன. அந்த சமயம் ஒரு கட்டெறும்பு வேகமாக அதன் காலடியில் வர, பட்டென்று கொத்திச் சாப்பிட்டுவிட்டது ஒரு பறவை.

    நிச்சயம் அதுதான் ஆண்’ என்றான் வரதன். அவன் மடியில் ரமா.

    ‘எப்படிச் சொல்றீங்க’ என்றாள் ரமா. அவளுக்கு வியப்பு. வரதன் எப்பவுமே இப்படித்தான். பட்டென்று சொல்வான் கரெக்டாக இருக்கும்.

    ‘அந்த எறும்பைப் பார்த்ததுமே, தன் பெட்டைக்கு ஏதாவது ஆகிவிடக் கூடாதேன்று பயந்து, வெறிவந்து சட்டென்று கொத்தி சாப்பிடும் பறவை- ஆணாகத்தானே இருக்க வேண்டும்?’

    ‘ஏன், பெண்ணாக இருக்கக்கூடாதா? அவளுக்கு அவன் மீது அக்கறை இருக்காதா?’ மடக்கிவிட்டோம் என்ற நினைப்பில் கேட்டாள்.

    ‘ஏய்... ஏய்... எழுந்திரு...’ படார்ரென்று அவளைத் தள்ளிவிட்டான் வரதன்.

    உருண்டு எகிறி விழுந்தாள் ரமா

    ‘என்னாச்சுங்க... என்னாச்சு.’

    ‘அதோபார்...’ என்ற வரதன் ஓடிச்சென்று ஒரு கல்லை எடுத்துவந்து நச்சென்று அதை அடித்தான்.

    தேள்!

    ‘ஆ... தேள்... வரதன்... எப்படிப் பார்த்தீங்க, நல்ல வேளை... என்னைக் கொட்டியிருந்தா...’ மிரட்சியாய் அவள் பதறினாள்.

    ‘பயப்படாதே. அதான் நான் அதைக் கொன்னுட்டேனே’ என்றான் வரதன்.

    ரமா தலைக் குனிந்துக்கொண்டாள். சற்று முன், ‘ஏன் அந்த எறும்பைக் கொத்திய பறவை பெண்ணாக இருக்கக்கூடாது என்று’ கேட்டதற்காக வெட்கினாள்.

    ஆண் எப்பவுமே ஒரு அரண் என்பது சரிதானோ? பெண் என்பவள் அவனைச் சார்ந்து இருப்பவள் தானோ? மனதாலும், உடலாலும் அவனுக்குப் பின்னால் தானோ அவன்?

    சமுதாயம் மாறிவிட்டாலும், ஆண், பெண் பாகுபாடுகள் குறைந்துவிட்டாலும் எல்லா இடத்தும், எல்லா துறையிலும் பெண் புகுந்தாலும், அடிப்படையில் அவள் ஆணுக்குக் கீழேதானா?

    ‘என்ன ரமா யோசிக்கிறே?’

    "நீங்க புத்திசாலி வரதன். அந்தப் பறவை ஆண் பறவையென்று அதன் செயலை வைத்தே கண்டுபிடித்து விட்டீர்கள்...’

    ‘புகழாதே...’

    "இல்லை உண்மை. நானும் முதலில் அது ஏன் பெண்ணாக இருக்கக்கூடாது என்று நினைத்தேன். இப்ப அதற்கும் நீங்களே முடிவு சொல்லிவிட்டீர்கள், இந்தத் தேள்! நான் இதைக் கவனிக்கவேயில்லை. நீங்கள் தான் சட்டென்று கவனித்து அதைக் கொன்று என்னைக் காப்பாற்றி விட்டீர்கள். உங்கள் புலன்கள் அத்தனையும் விழித்திருக்கின்றன...’

    ‘ஏன் ரமா... பெண்களுக்கு புலன்கள் இல்லையா?’

    ‘இருக்கிறது வரதன். ஆனால் அதற்கு ஒரு தாலாட்டு வந்துவிட்டால் மயங்கித்தான் போகிறது! உண்மையில் எந்தச் சூழலிலும் பெண்களின் புலன் திறந்திருக்குமா?’

    ‘நிச்சயம் ரமா. யானைக்கு தன் பலம் தெரியாது என்பார்கள். தெரிந்து விட்டால் இந்த உலகத்தில் எவனும் அதை அடக்க முடியாதாம். அதுமாதிரிதான் பெண்கள். அவர்கள் மகாசக்தி. அந்த சக்தியை அவர்களே அறியலதான்.’

    ரமா மௌனமாக இருந்தாள்.

    வரதனே தொடர்ந்தான். ‘ரமா, நீ ஒரு பெண். உன்னுள் இருக்கும் சக்தி இன்னும் உனக்கே தெரியாது. காலம் வரும்போது அதற்கும் வாய்ப்பு வரும்...’

    ‘எனக்கு எந்த எக்ஸ்ட்ரா சக்தியும் வேண்டாம் வரதன், நான் எப்பவும் இப்படியே, உங்க நிழல்லயே, தங்களுக்கு பணிவிடை செய்துவிட்டு, குடும்பத்தை நடத்திவிட்டு சந்தோஷமா இருக்கிறேன். அது போதும்...’

    ‘நல்லாத்தான் ரமா இருக்கிறது. நீ நினைக்கிறதும் பேசறதும். ஆனா - வாழ்க்கை அத்தனை ஈஸியா போயிரும்னு நினைச்கியா?’

    வரதன் இப்படித்தான் எதையுமே தீவிரமாகச் சிந்திப்பான், அதிகபட்சம் நேர்மறையில் சிந்திப்பான். அப்போதுதான் ஏமாற்றம் வந்தாலும் மனது அதிர்ச்சியடையாது என்பான்.

    ‘எதிர்ப்பார்ப்புகள்தான் ஏமாற்றத்தைச் பிரசவிக்கின்றன’ என்று அடிக்கடி சொல்வான்.

    ‘வரதன்... இனிமே இந்த தோப்புல நாம் சந்திக்க வேண்டாம்.’

    ‘ஏன் ரமா...’

    ‘பயமா இருக்கு...’

    ‘எதுக்குப் பயம்?’

    ‘தேள், பாம்பு... ச்சே...’

    ‘அதெல்லாம் என்ன செய்யும்?’

    ‘விஷம்.’

    ‘கடிச்சா மேக்ஸிமம் உயிர் போகும். அவ்வளவுதானே?’

    ‘வரதன், ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க!’

    ‘நெருப்புன்னு சொன்னா வாய் வெந்திடுமா என்ன? எதையுமே அதிகபட்சமா யோசிச்சிடு... பயம் போயிடும்...’

    ‘எனக்கு உயிர் மேல ரொம்ப ஆசை வரதன்...’

    ‘அப்படியா?’

    ‘ஆமாம் உங்களக் கல்யாணம் பண்ணிகிட்டு, இன்னொரு உயிரை உங்களால உருவாக்கி, வளர்த்து, விருட்சமாய் தழைக்கிற வரைக்கும் எனக்கு உயிர் வேணும் வரதன்...’

    ‘அசடு. அது நிச்சயம் முடிவான விஷயம். அதுக்கு ஏன் இப்படிக் கலங்கறே.’

    ‘எனக்கென்னவோ கொஞ்ச நானா மனசு கலங்கிகிட்டே இருக்கு. கெட்ட கனவு வருது.’ -

    ‘நல்லா சாமி கும்பிட்டுட்டுப் படுத்துக்கோ...’

    ‘சாமி கும்பிட்டுட்டு, திருநீறு பூசிகிட்டுத்தான் படுக்கிறேன். அப்படியும் கனவு. பயங்கரக் கனவு. நேற்று கூட இராத்திரி ஒரு கனவு. அதிலே ஒரு முகம் தெரியாத ஆசாமி, என் கழுத்தை நெறிக்கிறான். என் விழி பிதுங்குகிறது. திடீரென்று அந்த ஆசாமியின் முகம் லேசாகத் தெரிகிறது. எங்கேயோ பார்த்த முகம். அவன் என் கழுத்தை மேலும் இறுக்க... நான் திணறி... விலுக்கென்று முழித்துக்கொண்டு பதறுகிறேன். மேல் எல்லாம் வியர்வை. நூறு கிலோமீட்டர் வேகத்துல ஓடின மாதிரி மூச்சிரைப்பு... பயமாயிருக்கு வரதன். அடிக்கடி இப்படி ஒரு கனவு...’

    சிரித்தான் வரதன், ‘ரமா இதுக்கெல்லாம் போட்டு மனசை குழப்பிக்காதே. நம்ம உடம்புல இருக்கிற கழிவுகள் வெளியேறுகிற மாதிரி, மனதுல இருக்கிற கழிவுகள் கனவு மூலம் வெளியாகுதுன்னு, தசாவதானி ராமையா பிள்ளையோட ‘நினைவாற்றல் கலைன்னு ஒரு புத்தகத்திலே படிச்சேன். அவர் சொன்னது அத்தனையும் சத்தியம் ராமா. இதெல்லாம் மன அழுக்கின் வெளிப்பாடுகள்தான். நீ பயப்படாதே...’

    ‘வரதன் நீங்க எதையுமே ஈஸியா எடுத்துக்கிறீங்க. அது நல்லதா கெட்டதான்னு எனக்குத் தெரியல.’

    ‘ரமா... சீரியஸா எடுத்துக்க வேண்டியது சீரியசா எழுத்துக்கணும். சாதாரண விஷயத்தை சாதாரணமா எடுத்துக்கணும். ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆற அமர தலைக்கு நல்லெண்ணெய் வெச்சு நிதானமா குளிக்கப் போறோம். அப்ப பார்த்து தம்பியோ, தங்கையோ. ‘அண்ணா உங்களப் பார்க்கிறதுக்கு ஒரு ஃபிரண்ட் வந்துகிட்டு இருக்கார்’ என்று சொன்னா ‘சரி வந்தா உட்காரச் சொல். நான் குளிச்சிட்டு வந்துடறேன்னு சொல்லிட்டு போகலாம். ஆனா அதேசமயம் ‘அண்ணா உங்கள பார்க்க பிரைம் மினிஸ்டர் வந்துகிட்டு இருக்கிறார். திடீர்னு ஒரு வீட்டுக்கு ஸர்ப்ரைஸா போகணும்னு நினைச்சு இங்கு வந்து விட்டு இருக்கிறாராம்’ என்று சொன்னா என்ன செய்வோம், எண்ணெய்க் குளியலா முக்கியம்? எல்லாவற்றையும் கடாசிவிட்டு வீட்டை ஒழுங்குபடுத்தி, நல்ல டிரஸ் உடுத்தி, அவர வரவேற்க ஆயத்தமாபோமில்லையா? அது மாதிரித்தான் ஈஸியா எடுத்துக்கிறதை ஈஸியா எடுத்துக்கணும். முக்கியத்துவமா கருதுறத உடனே செய்யணும். தடம் மாறினா, தொலைஞ்சுது... என்ன போரடிச்சுட்டேனா?’

    ‘உங்கள மாதிரி திங்க் பண்ண முடியல, ஆனாலும் எல்லாவற்றையும் பிளான் போட்ட மாதிரியே நடந்துட முடியுமா? எத்தனை இடர்ப்பாடுகளோ? என் பயம் எல்லாம் நம்ம பிளான்படியே நம்ம கல்யாணம் நடக்ணும்.

    ‘போச்சுடா சாமி... மறுபடியும் தொடங்கிட்டியா. ரமா கண்டதையும் நினைச்சுக் குழப்பிக்காதே. ஆமா அப்பாவுக்கு இப்ப எப்படி இருக்கு?’

    ‘முடியலதான். இன்னும் இருமல் நிக்கல. ஆனா என்ன பண்றது? என் கல்யாணத்துக்கும், தங்கைக்கும் பணம் சேர்ப்பாரா. இல்லை மருந்துக்குத்தான் செலவழிப்பாரா? உழைத்து உழைத்து ஓடாய்ப் போனார்.’

    ‘என் கேஸ விட்று ரமா. நான் ஒரு பைசா வாங்காம தாலிகட்டப்போறேன், நிச்சயம். ஆனா என்னை மாதிரியே உன் தங்கைக்கு வரவனும் நினைப்பான்ங்கிறது நிச்சயமில்லை. உன் தங்கை கல்யாணத்துக்குப் பணம் சேர்த்தா போதும்.’

    ரமா விம்மினான், வரதனின் பெருந்தன்மையை நினைத்து. இத்தனைக்கும் வரதன் மிகச் சாதாரணமானவன். ஒரு சின்ன வேலை கார்ப்பரேஷன் ஆபிஸில். ஒரே தம்பி அப்பா கிடையாது. அம்மா உண்டு. தான் உண்டு. தன் வேலை உண்டு என்று நினைப்பவன் வரதன், கிம்பளம், அது இதெல்லாம் கிடையாது, இவனையொத்த ஊழியர்கள் லஞ்சம், அது இது என்று வாங்கி, ஏகத் தடபுடலாய், வீட்டில் டி.வி. டெக், மிக்ஸி, ஃபிரிட்ஜ், டூவீலர் என்று ஆரம்பரமாய் இருக்கும்போது, வா தன் மட்டும் இன்னும் அந்த ஓட்டு வீட்டிலேயே ‘கிறிச் கிறிச்’ கென்று கத்தும் சைக்கிளில் ஆபிஸிற்கு போய் வந்துக் கொண்டிருக்கிறான்.

    ஒரு முறை அவன் சொன்னான்: ‘ரமா முதல்ல உன் தங்கை கல்யாணத்தை வைச்சிக்கிட்டா என்ன? பிரமோஷனுக்குப் அப்புறமா நம்ம கல்யாணம்...’

    ‘அது நல்லாயிருக்காதே வரதன்.’

    ‘எது நல்லாயிருக்காது? இது நமக்குள்ளே ஒரு சின்ன அட்ஜஸ்மெண்ட், அவ்வளவுதானே? இப்ப உள்ள பிரச்சனை உன் தங்கை கல்யாணத்துக்குப் பணம். அதை நான் தரேன். அம்மாவின் ஆப்ரேஷனுக்காகச் சேர்த்து வைத்த பணம். கடவுள் புண்ணியத்துல ஆப்பரேஷன் தேவையில்லன்னு சொல்லிட்டார் டாக்டர். அந்தப் பணம் பாங்குலதான் கிடக்குது...’

    நொந்து போனாள் ரமா. ஆனால் அப்பா அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அவர் - பிடிக்கலைங்கரார். வறட்டுப் பிடிவாதம் என்பதே சரி. வயதைச் சாக்காக வைத்துக்கொண்டு, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சாதிக்கும் குணம். அடக்கி ஆளும் குணம். குனிய குனிய குட்டும் குணம். அப்படி குட்டுப்பட்டு கட்டுப்பட்டு தான் ஜோதியாய் ஒளிர்ந்துக் கொண்டிருந்த அம்மா. குடத்திலிட்ட விளக்காய் குன்றிப் போனாள்.

    ‘பிச்சை போடறானா அவன்?’ என்றார் கடுப்பாய்.

    ‘அப்பா அப்படியெல்லாம் பேசாதீங்கப்பா. அவர் நல்லவர்.’

    ‘வந்துட்டா வக்காலத்துக்கு, ஏதோ வறுமையைச் சமாளிக்க ஒரு டெம்பரரி உத்யோகத்துல உன்ன வேலைக்கு அனுப்பிச்சா அந்த வரதனோட அடிக்கடி சுத்தறியாமே? யாரவன்?’

    சீறினார் அப்பா, ரமா மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. பேசினால் குமுறும் எரிமலையை உள்ளங்கையால் மூடிய மாதிரி ஆகிவிடும். இனியும் பேகினால் வரதனே கை

    Enjoying the preview?
    Page 1 of 1