Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thottathellam Penn
Thottathellam Penn
Thottathellam Penn
Ebook227 pages1 hour

Thottathellam Penn

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கலைகள் மீது அதிக ஆர்வம், பக்தியும் கொண்டவள் நர்மதா, ஜோதிடம் மற்றும் கடவுளின் மீது பக்தியுள்ள அனத்துவை நம்பி, நடனக் கலையை கற்க சிதம்பரம் சென்ற நர்மதாவுக்கு என்ன நிகழ்ந்தது. நர்மதாவையே தன் உயிராக நினைத்த செல்வத்தின் காதல் கைகூடியதா? நம்மை படைத்தவன் நமக்கு நல்லதையே செய்வான் என்ற எண்ணம் இருந்தால் எதையும் நம்பி நாம் ஏமாற வேண்டாம் என்பதை காண, தொட்டதெல்லாம் பெண் வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateDec 3, 2022
ISBN6580110009121
Thottathellam Penn

Read more from Anuradha Ramanan

Related to Thottathellam Penn

Related ebooks

Reviews for Thottathellam Penn

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thottathellam Penn - Anuradha Ramanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தொட்டதெல்லாம் பெண்

    Thottathellam Penn

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    முன்னுரை

    அன்பான வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம். நலம்; நலம்தானே...?

    சின்ன வயசில், மார்கழி மாசத்தில் வாசல் நிறையப் புள்ளிகளை வைத்துவிட்டு, விடிய விடியக் கோலம் போட்ட அனுபவம் எனக்கு உண்டு...

    ஒரு பக்கம் விடிய ஆரம்பித்துவிடும்... ‘பனியில ரொம்ப நேரம் நிக்காதே... உடம்புக்கு வந்தா நான்தான் உன்னோட மாரடிக்கணும்...’ இப்படி உள்ளேயிருந்து அர்ச்சனை வந்துகொண்டே இருக்கும். பக்கத்து வீட்டுப் பெண், ‘என் கோலத்துல இடிக்காதேபா’ இப்படி என்னமோ இந்தியா பாகிஸ்தான் எல்லை மாதிரி மண்ணால் அணைகட்டி விரட்டுவாள். இத்தனைக்கும் மத்தியில் ஒற்றைப் புள்ளி எதனோடும் சேராமல், ‘என்னை என்ன செய்யப் போகிறாய்?’ என்று ஏளனமாய்க் கேட்கும்....

    ‘தொட்டதெல்லாம் பெண்’ கூட இது மாதிரியானதொரு நிலவரம்தான்.

    மாலைமதியில் ஐம்பது வாரத்துக்குக் குறையாமல் கதை கேட்டிருந்தார்கள்... அந்த சமயத்தில் என் மனசு முழுக்க ஒரு பெண்ணின் அல்லல் மிகுந்த வாழ்க்கை ஆக்கிரமித்து இம்சித்துக் கொண்டிருந்தது.

    விஸ்தாரமாய் ஆரம்பித்து ஒவ்வொரு புள்ளியாய் சேர்த்து, வளைத்து...

    எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. அதாவது ‘கெடுதல் நினைப்பவரை கடவுள் தண்டிப்பார்’ என்கிற சின்னஞ்சிறு வயது நீதி போதனையை இன்றளவும் மறக்காத அளவுக்கு கடவுள் நம்பிக்கை... ஆனால் கடவுளிடம் பயம் கிடையாது. எப்பொழுது ஓரிடத்தில் பயம் விழுகிறதோ, அப்போதே அவ்விடத்தில் நமக்கு உண்மையான அன்பு இருப்பதில்லை. ஆதலால் கடவுளிடம் ஒரு நட்பும் பிரியமும்தான் இருக்க வேண்டும் என வாதிடுபவள் நான்... கடவுளுக்கும் எனக்கும் இடையே மீடியேட்டர்களையோ, ஏஜெண்டுகளையோ நான் அனுமதிப்பதில்லை...

    ‘நான் இறைவனுடன் பேச்சு வார்த்தையை நேரில் வைத்துக் கொள்கிறேன்... நடுவில் நீ யார்... என்னை விடவும் நீ எந்த விதத்தில் ஒசத்தி’ என்று கேட்பவள் நான்.

    இதனாலேயே பூசாரி, ஜோஸ்யர், மதகுரு, சன்னியாசி, குறி சொல்பவர் இவர்களிடமிருந்து எட்டியே நிற்பேன்...

    நீங்கள் அற்புதமான சக்தி உடையவராக இருக்கலாம். நான் சாதாரணப் பெண்ணாகவே இருந்துவிட்டுப் போகிறேன். என் எதிர்காலம் எப்படியிருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள சித்தமாக இருக்கிறேன்.

    இப்படி சொல்லி விலகி விடுவேன்...

    ஆனால் இக்கதையின் கதாநாயகியின் பெற்றோரும், இன்னும் சில பாத்திரங்களும் அநியாயத்துக்கு ஒரு சோதிடரை அம்பாள் உபாசகரை நம்பினார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில்... தங்களது வாழ்வையும், தாழ்வையும் இந்த மனிதரோடு முடிச்சுப்போட்டுக் கொள்கிறார்கள்.

    நர்மதா இப்பொழுதும் என் வீட்டுக்கு வந்து போய் கொண்டிருக்கிறாள். அனந்து, ருக்மணி, உமா இவர்கள் அனைவரும் இவளதுக் கதையில் உண்டு.

    செல்வம் மாதிரி நல்ல, முற்போக்கான இளைஞன்தான் கிடைக்கவில்லை.

    கிடைத்திருந்தால் அவளது வாழ்க்கைப் பாதையே மாறி இருக்கும்... நிஜ நர்மதா இன்று அனந்துவின் வட்டத்துக்குள் சிக்கிய புள்ளிமான்... கையில் ஒரு குட்டி மானும் உண்டு...

    இத்தனைக்கும் இவளுக்குத் திருமணமாகுமா என்று இவளது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு இவளதுப் பெற்றோர் அனந்து போன்ற ஜோதிடரைத் தேடிப்போனார்கள். அவ்வளவுதான்... இவள் வாழ்க்கையே இப்பொழுது கேள்விக்குறியாகி விட்டது...

    இதனால்தான் இந்த ஜோதிடர்களையோ, பூசாரிகளையோ ஒட்டு மொத்தமாகக் குற்றம் சொல்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம்.

    நமக்கு நாம் செய்கிற காரியங்களில் நம்பிக்கை இருந்தால்,

    யாரையும் நாம் அடுத்துக் கெடுக்கவில்லை என்பதை நம்மால் திட்டவட்டமாகக் கூற முடியுமானால்,

    உழைப்பதற்கு அஞ்சாமல் இருந்தால்,

    நம்மைப் படைத்தவன் நமக்கு நல்லதையேத் தருவான் என்கிற திட சித்தம் இருக்குமானால்,

    வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் இயற்கை... எது வந்தாலும் விவேகத்தோடு நடந்துகொள்ள முடியுமென்றால்,

    இந்த ஜோதிடம், யாகம், பலி இதெல்லாம் தேவையே இல்லை... மேலும் அந்த நாளில் ஜோதிடம் எப்படி மிகச் சிறந்தக் கலையாக இருந்ததோ அதில் எள்ளளவும் குறையாமல் இன்றைக்கும் பேசப்பட்டாலும் நடுவே பல புல்லுருவிகள், வேஷதாரிகள் புகுந்துவிட்டார்கள். ஆதிசங்கரரைப் போலவும், இராமானுஜரைப் போலவும் மகான்கள் வாழ்ந்த காலம் போய் இன்று இதுபோன்ற ஆன்மீகப் பதவிகளில் இருப்போர் சுயலாபம் கருதி எத்தனையோ விஷயங்களில் தலையிட்டு மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    பிரேமானந்தாக்களைப் போன்ற ஆன்மீக தாதாக்கள் வளருவதே - மக்களின் அறியாமையினால்தான்...

    ஆ... வாசல் நிறைய புள்ளி வைப்பதுபோல இக்கதையையும் பெரிய அளவில் ஆரம்பித்துவிட்டேன். பத்திரிகைக்காரர்கள் விஷயம்தான் தெரியுமே. திடீரென வாரம் இருமுறை வந்த மாலைமதி வாரம் ஒன்றாகி விட கதையையும் சுருக்க வேண்டியதாகி விட்டது.

    அப்படியும் இக்கதையைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் இதற்காக சிரமம் எடுத்துக்கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் வரைந்த ஓவியர் ஷியாமையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

    இப்படிக்கு

    அன்புடன்

    அனுராதா ரமணன்

    1

    எத்தனை வருஷமாச்சு... என்னை ஞாபகம் வச்சிருப்பாளா...

    செல்வத்தின் மனசு அலைபாய்ந்தது... அம்மாவுக்குத் தெரியாமலேயே வாசலுக்கும், புழக்கடைக்குமாய் காலையிலிருந்து குறைந்தது நூறு முறையாவது நடந்திருப்பான்.

    எதிர் வீட்டு வாசலில், பெரிசாய் புள்ளிக்கோலம்கூட நர்மதாவின் வரவுக்காக வெள்ளித் தாம்பாளம்போல பிரகாசித்தது.

    இவன் வாசற்பக்கம் போகும் போதெல்லாம் எதிர் வீட்டிலும் இன்னொரு ஜீவன் வாசலுக்கும் உள்ளுக்குமாய் நடை போடுவதை செல்வம் கவனிக்காமலில்லை.

    அவன் நர்மதாவின் அத்தை யதுகிரியின் ஒரே புதல்வன் ராஜாராமன்தான். நர்மதா பிறவி எடுத்திருப்பதே தன்னை மணப்பதற்காகத்தான் என்பதை, நண்பர்களிடையே அடிக்கடி சொல்லிக் கொள்பவன். அதுவும், செல்வத்தைப் பார்த்தால் இன்னும் கொஞ்சம் இரைந்து, அவன் காதில் விழும்படியாகச் சொல்லுவான்...

    அதில் அவனுக்கு அலாதி திருப்தி...

    ஊருல ஒவ்வொருத்தனுக்கும் நினைப்புடா... அந்த நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குது... எங்க அப்பா இருந்தாரே... செத்துப் போறச்சே இந்த திருச்சிராப்பள்ளியில அஞ்சு மெத்தை வீடுங்களும், சீரங்கத்துல மாந்தோப்பும், திருவானைக்காவிலே வாழையும் தென்னையுமா அம்பது ஏக்கர் நிலமும், சொந்தமா பத்து பஸ்ஸும், நாலு லாரியும் வச்சுட்டுத்தான் போனார். இன்னிவரைக்கும் எங்க மாமா, தன்னோட அளவிட முடியாத சொத்துக்களோட இதையும் பொறுப்பாப் பார்த்து, விள்ளாம விரியாம என் கையில் ஒப்படைச்சிருக்கார்னா... யாருக்காக... தன்னோடப் பொண்ணு இத்தனையையும் கட்டி ஆளப் போறாங்கறதனாலத்தானே...

    ஏண்டா டேய், நீயோ பிளஸ் டூகூடப் பாஸ் பண்ணலே... உங்க நர்மதா டிகிரி வாங்கிட்டு வரப்போறா... எப்படிடா உன்னைக் கட்டிப்பா...

    இப்படி எவனாவது ஒரு அப்பாவி கேட்டுத் தொலைப்பான்.

    அதெல்லாம் பேசப்படாது... அனந்து மாமா, எங்க ரெண்டு பேர் ஜாதகத்தையும் பார்த்துட்டு சொல்லி இருக்கார், இவனுக்குத்தான் நர்மதான்னு... என்னிக்காவது அனந்து போட்ட புள்ளி தப்பியிருக்கா?

    ராஜாராமனின் எல்லாப் பேச்சையும் புன்னகை ததும்பக் கேட்டுக் கொண்டிருக்கும் செல்வத்துக்கு அனந்துவைப் பற்றிய பேச்சு வந்தால் உடனே முகம் மாறிவிடும்.

    அனந்து ஒருத்தருடைய ஜாதகத்தைக் கணித்து பலன் சொன்னால் இதுவரையில் தப்பியதே இல்லை. செல்வத்தின் அப்பா - கிழங்கு மாதிரி இருந்தபோது புது வீடு கட்ட, கடைக்கால் எடுக்க நாள் பார்த்துத் தரும்படி அனந்துவிடம்தான் கேட்டார்.

    வர்ற வெள்ளிக்கிழமை, புனர்பூச நட்சத்திரம், பௌர்ணமி திதி... நாள் நல்லா இருக்கா அய்யா...

    எதுக்கு?

    புது வீட்டுக்குக் கடைக்கால் போட...

    இப்ப வேணாம்.... பௌர்ணமி போய் அமாவாசை வரட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்...

    இப்படி சொன்னது மட்டுமின்றி, செல்வத்தை தனியே அழைத்துப் போய் சொல்லியும் விட்டார்.

    செல்வா... கையில பத்தோ, பதினைஞ்சோ ரொக்கம் தயாரா வச்சுக்க; செலவு வர்றது...

    புரியல்லே...

    இன்னியிலேருந்து அஞ்சு நாள்... உங்கப்பாவுக்கு மாரகம் வந்தாச்சு!

    சார்!

    அதிர்ச்சி அடையாதே. ஆக வேண்டியதைப் பாரு... உங்கம்மா சமயம் பார்த்து, பொறந்த வீட்டுக்கு சீராடப் போயிடப் போறா. எதையாவது சொல்லி, அவளை நிறுத்தி வை...

    அந்த நான்கு நாட்கள்... செல்வத்துக்கு நரகம். யாரிடமும் சொல்ல முடியாத அவஸ்தை... நர்மதா இருந்திருந்தால் அவளது தோளில் முகம் புதைத்து அழுதிருப்பான்...

    அப்படி ஒரு தடவை அழுதுமிருக்கிறான். அப்போது அவளுக்கு வயது பதினாறு. அவனுக்கு பதினெட்டு, விஷயம் என்னவோ சாதாரணமானதுதான். ஆனால், அன்றைக்கு அந்த பிரச்சினை பூதாகாரமாய் தெரிந்தது...

    நீ உன் கண்ணாலப் பார்த்தியா...

    சத்தியமா என் ரெண்டு கண்ணாலேயும் பார்த்தேன். நர்மதா, எங்க அப்பா எங்க பெரியம்மாவோட... பாவம் அம்மா... புருஷன் செத்துப் போய், தனி மரமா நிக்கற அக்காவை, தன் வீட்டோடக் கூட்டி வந்து வச்சிட்டதோடப் பலன்... நான், எங்க அப்பாவை நேருக்கு நேரே நின்று, நாக்கைப் பிடுங்கிக்கற மாதிரி கேட்கப் போறேன்...

    என்னன்னு கேட்கப் போறே?

    இது நியாயமான்னு கேட்கப் போறேன். எங்க அம்மாவுக்கு துரோகம் செய்ய உனக்கு எப்படி மனசு வந்ததுன்னு கேட்கப் போறேன்...

    "இது உங்க அம்மாவுக்குத் தெரியாம இருந்தாத்தான் துரோகம் தெரிஞ்சிருந்தா?

    அய்யோ... நீ என்ன சொல்றே?

    இங்கே பாரு செல்வம்... நீ வளர்ந்திருக்கியே தவிர, புத்தியே இல்லே. உங்க பெரியம்மாவுக்கு என்ன வயசு?

    நாப்பதோ, என்னவோ?

    பெரியப்பா எப்ப செத்தார்?

    பெரியம்மாவுக்கு கல்யாணமான ஒரு வருஷத்துக்குள்ள.

    அப்புறம் ஏன் உங்க பெரியம்மாவுக்கு உங்க வீட்டுல வேற கல்யாணமே செஞ்சு வைக்கலே?

    வேற கல்யாணமா? எங்க தாத்தா, அரிவாளைத் தூக்கிட்டு வந்துடுவார், எங்க குடும்பமே கோர்ட்டு, வழக்குன்னு போனதே இல்லை. எடு அரிவாளை, இளநீரை சீவறாப்பல சீவித் தள்ளு. அப்புறம் போலீசோ, தூக்கோ எதுக்கும் அஞ்சமாட்டாங்க...

    அப்ப உங்க பெரியம்மா, தன்னோடப் பதினெட்டு வயசுலே இருந்து இத்தனை நாள் வரைக்கும் இருட்டுக்குள்ளேயே வாசம் பண்ணிட்டு போய் சேர வேண்டியதுதானா?

    இப்படி கேட்டா... புருஷனில்லாதப் பொம்பிளைங்க அப்படித்தானே இருந்தாகணும்? முடியலையின்னா, எனக்கு வேற கல்யாணம் செஞ்சு வையின்னு எங்க தாத்தாக்கிட்ட கேட்க வேண்டியதுதானே. எங்க அம்மாவோட வாழ்க்கையைதான் எடுத்துக்கணுமா?

    இந்தா, ஏன் சும்மா புலம்பறே? உங்க அம்மாவே கொடுத்திருக்கலாம் இல்லையா... நீயே சொல்லி இருக்கே. வருஷத்துல பத்து மாசம் எங்க பெரியம்மாவுக்கு என்னையும், எங்கம்மாவையும் விட்டுப்போக மனசு வராது. ரெண்டு மாசம் தாத்தா வீட்டுக்குப் போய் இருந்தா இருபது லெட்டர் போட்டுடுவாள்னு...

    .....

    எல்லாத்துக்கும் மேல ஒண்ணு. இது உங்கம்மாவுக்கும் உங்கப்பாவுக்கும் இடைப்பட்ட விஷயம். இதுல அனாவசியமா நீ மூக்கை நுழைக்காதே. அவங்களுக்கு நீ மகனாகப் பிறந்திருந்தாலும் இது பத்தி எல்லாம் கேட்டு, அவங்களை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்க உனக்கு உரிமை இல்லே...

    .....

    பதினைந்து வயசுப் பெண்ணுக்கு இவ்வளவு தெரியுமா என்று, அவன் அன்றைக்கு வியந்திருக்கிறான்.

    அவள் சொன்னது போலத்தான் நடந்திருக்க முடியும் என்பது அப்பாவின் இறப்புக்குப் பிறகு பெரியம்மா படுத்த படுக்கையானதும், அம்மா அவளதுத் தலையை எடுத்து, தனது மடியில் வைத்துக்கொண்டு, ‘நீ கொடுத்து வச்சவ... அவர் போனதும் நீயும் புறப்படத் தயாராயிட்டே... நான் எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்கேனே’ என்று அழுதபோது புரிந்தது...

    அப்பா படுக்கவில்லை கிடக்கவில்லை. கடையிலிருந்து வீட்டுக்கு உச்சி வெய்யிலில் வீடு திரும்பினார். மோர் கேட்டார். அப்போதுகூட அம்மா ஊஞ்சலில் ஒற்றை

    Enjoying the preview?
    Page 1 of 1