Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நான் பேச நினைப்பதெல்லாம்...
நான் பேச நினைப்பதெல்லாம்...
நான் பேச நினைப்பதெல்லாம்...
Ebook135 pages48 minutes

நான் பேச நினைப்பதெல்லாம்...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாதவனை நினைத்தால் சமத்துவத்திற்கு ஆச்சரியமாகவும் சிரிப்பாகவும் இருந்தது. ‘வேடிக்கையான மனிதன்’ என்று நினைத்துக் கொண்டான்.
பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தபோதும் -
மாதவனுடைய கண்கள் பேருந்திற்காகக் காத்திருக்கும் பெண்களின் பக்கமே இருந்தது. பக்கத்தில் நண்பன் இருக்கிறானே என்றுகூட ஞாபகம் இல்லாதவனாய் ‘ஜொள்ளு’ விட்டுக் கொண்டிருந்தான்.
ஐந்து மணிக்கான பரபரப்பு கொஞ்சம் சோர்வு கலந்து இருந்தது. மாலை நேரக் கடைகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
சாலையோரம் போட்டு விற்கப்பட்டிருந்த பழைய புத்தகக் கடையை நோக்கி சென்றான் சமத்துவம். புத்தகங்களைப் புரட்டிப் புரட்டித் தேடினான்.
அவனைத் திரும்பிப் பார்த்த மாதவன் ‘இவனைத் திருத்தவே முடியாது’ என்று நினைத்துக் கொண்டான். இரண்டு கவிதைப் புத்தகங்களை வாங்கினான். ஆரம்பகால கவிஞர்களின் கவிதைப் புத்தகங்கள் அவை. அந்த புதுக்கவிஞர்களின் புத்தம் புது எழுத்துக்களை ஆவலுடன் பிரித்தான்.
“டேய்... பஸ் வருது வாடா...” திடீரென மாதவனின் குரல் வேகமாய் ஒலிக்க அவசரமாக புத்தகத்தை மூடிவிட்டு ஓடி வந்தான்.
பேருந்து குப்பை வண்டியைப் போல் மக்களை அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து நின்றது. படிகளில் திராட்சைக் கொத்தைப் போல் கூட்டம் தொங்கியது.
உள்ளே எத்தனை பேர் மூச்சுத்திணறி செத்துப் போவார்களோ என தோன்றும்படியான ஒரு தோற்றத்தில் வந்து நின்றது பேருந்து. ஓட்டுநர் மட்டுமே தாராளமாக அமர்ந்திருந்தார்.“ஏறுடா.” மாதவன் துரிதப்படுத்தினான்.
பேருந்து கிளம்பியது. வெளிக்காற்று உள்ளே நுழைய இடம் இல்லை. புழுக்கம் அதிகரிக்க வியர்வை நெடி மூக்கை நெருட மிகவும் தவித்தான் சமத்துவம். மாதவன், நெரிசலைப் பற்றியோ, வியர்வை நெடியைப் பற்றியோ துளியும் கவலைப்படாமல் ஒரு குழுவாய் நின்றிருந்த கல்லூரிப் பெண்களையே வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் விதவிதமான தங்களுடைய காதணிகள் ஊசலாட கொஞ்சம் கூட சோர்வின்றி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு அழகிய மாய உலகில் இருப்பதைப் போல் மாதவன் மயக்கமான ஒரு போதையில் நின்றான்.
“மச்சான்... பாருடா... என்ன அழகு? என்ன அழகு?”
“மீனாட்சியை விடவா?” என்ற சமத்துவத்தை முறைத்தான் மாதவன்.
“எங்கே யாரை ஞாபகப்படுத்தணுமின்னு உனக்கு விவஸ்தையே கிடையாதுடா. மூடைக் கெடுத்துட்டியேடா பாவி...” என காலை வைத்து மிதித்தான்.
அவன் காலை வைத்து மிதித்த அதே நேரம்தான் பேருந்தில் இருந்த அனைவரது காதில் விழுந்தது அந்த கணீரென்ற குரல்,
“டேய்... நில்லுடா...”
அனைவரும் குரல் வந்த இடத்தைத் திரும்பிப் பார்த்தனர். சமத்துவமும் பார்த்தான். அவனுக்குப் பின்னால் நாலைந்து ஆடவர்களுக்குப் பின்னால்...
அவள் ஒருவனின் சட்டையை தன் இரு கைகளாலும் இறுகப் பற்றியிருந்தாள.
ஒரு கணம் அனைவரும் அந்தக் காட்சியைப் பார்த்து திடுக்கிட்டனர். சமத்துவத்திற்கு தன்னையே அவள் அப்படிப் பிடித்திருப்பதைப் போல் தூக்கிவாரிப் போட்டது. மாதவன் வாயைப் பிளந்தபடி அந்தக் காட்சியைப் பார்த்தான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 14, 2024
நான் பேச நினைப்பதெல்லாம்...

Read more from ஆர்.சுமதி

Related to நான் பேச நினைப்பதெல்லாம்...

Related ebooks

Reviews for நான் பேச நினைப்பதெல்லாம்...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நான் பேச நினைப்பதெல்லாம்... - ஆர்.சுமதி

    1

    "டேய்... சமத்துவம், என்ன வீட்டுக்குப் போக மனசு வரலையா?" என்றபடியே சமத்துவத்தின் எதிரே வந்து அமர்ந்தான் மாதவன்.

    அதுவரை அலுவலக கோப்பு ஒன்றில் தன் முழு கவனத்தையும் பதித்திருந்த சமத்துவம் நிமிர்ந்தான்.

    ரஜினியைப் போல் ஒல்லியான தேக அமைப்பு. மாநிறம். சுறுசுறுப்பைக் காட்டும் விழிகள். கவர்ச்சிகரமான முகம். அழகாய் கத்தரித்த மீசை. மொத்தத்தில் திருத்தமான முகம்.

    மாதவனைப் பார்த்துச் சிரித்தான். மாதவன் அப்படியே சமத்துவத்திற்கு எதிர்பதமாக இருந்தான். பூசணிக்காய் சைஸ். உட்கார்ந்தால் யோசித்து எழுந்திரிக்குமளவிற்கு சோம்பேறி. ஆனால் ஐந்துமணி ஆகிவிட்டால் சுறுசுறுப்பு எங்கிருந்தோ வந்து அவனிடம் ஒட்டிக் கொள்ளும். பரபரப்பான். சமத்துவம் கைக்கடிகாரத்தை திருப்பிப் பார்த்தான். ஐந்தே கால்.

    அஞ்சே கால்தான் ஆகுது. அஞ்சரைக்குப் போகலாம் என்றான்.

    டேய்... என்னடா இது? ஆபீஸ்ல உன்னையும் என்னையும் தவிர வேறு யாரும் இல்லை. எல்லாரும் போயாச்சு.

    போகட்டுமேடா. அவங்களெல்லாம் குடும்பத்தினர்கள். வீட்ல பொண்டாட்டி புள்ளைங்க காத்திருப்பாங்கன்னு ஓடறாங்க. நமக்கு என்ன வீட்ல பொண்டாட்டியா காத்திருக்கா? மணி எப்ப அஞ்சாகும் எழுந்து ஓடலாம்னு மனசு தவிக்க. மெதுவாப் போறது.

    அடப் போடா... கல்யாணம் ஆனவனுங்க டான்னு அஞ்சு மணிக்கெல்லாம் அலுவலகம் விட்டதும் ஓடறதுக்குக் காரணம் ஆசையோட பொண்டாட்டியைப் பார்க்கன்னு நினைக்கிறியா? ஆசை இல்லைடா. பயம். அஞ்சு நிமிஷம் லேட்டாப் போனா எவகூட சுத்திட்டு வர்றேன்னு பேயாட்டம் ஆடுவாளுக. அதுக்கு பயந்துக்கிட்டுத்தான் இப்படி ஓடறது. தெரிஞ்சுக்க.

    ஓகோ கன்னத்தில் கையைத் தாங்கி மாதவனை ஆச்சரியமாகப் பார்த்தான் சமத்துவம்.

    மச்சான்... இன்னும் கொஞ்ச நாள் போனா என் நிலமையும் அதுதான். என் எதிர்காலமும் அப்படித்தான் அமையப் போகுது.

    அடிசக்கை... கல்யாணமா?

    ஆமா.

    வெரிகுட். பொண்ணு யாரு?

    ஒரு பேய்...

    பேயா? அப்ப கல்யாணம் ஆவியுலகத்திலா?

    கிண்டலா? நானே வயிற்றெரிச்சலோட இருக்கேன்.

    சரி... பொண்ணு யாரு?

    அதான் சொன்னேன்ல... பேய்ன்னு. என் அத்தை பொண்ணு. மீனாட்சி. ராட்சசி...

    இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டான் சமத்துவம்.

    அத்தை பொண்ணா? மாதவன் எனக்கு கூட ஒரு ஆசை. நமக்கு முறைப்பொண்ணு ஒருத்தி இருந்தா அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன். சொந்தத்துல கல்யாணம் பண்ணிக்கறதுல இருக்கற மகிழ்ச்சி வேற எதிலேயும் இல்லைடா. எங்கிருந்தோ வர்ற ஒருத்தியைவிட நம்ம உறவுக்காரின்னா நம்மை ரொம்ப நேசிப்பா. ரொம்ப ஆசை வைப்பா... ம்... எனக்கு அந்தக் குடுப்பினை இல்லை.

    இதைக் கேட்டு சத்தம் போட்டுச் சிரித்தான் மாதவன்.

    அடப் போடா... முட்டாள். சொந்தத்துல கல்யாணமே பண்ணிக்கக்கூடாது. முறைப் பொண்ணைக் கட்டிக்கிட்டா மொத்தடிதான் படணும். வெளியில பொண்ணு கட்டினா வர்றவ நமக்கு பயப்படுவா. பணிவா இருப்பா. ஆனா... முறைப்பொண்ணைக் கட்டிக்கிட்டா அவள் கொஞ்சம் கூட பயப்படமாட்டா. அவள் சொல்றபடிதான் நாம ஆடணும். அதுமட்டுமில்லே முறைப்பொண்ணைக் கட்டிக்கிட்டா அப்பன் வீட்ல போய் அதை வாங்கிட்டு வா... இதை வாங்கிட்டுவான்னு சொல்ல முடியாது. இவள் நம்ம வீட்ல இருக்கறதை எடுத்துட்டு போய் அங்க குடுத்துட்டு வருவா. கேட்டா உன் அத்தைக்குதானே கொடுத்தேம்பா. அதிலும் இந்த மீனாட்சி இருக்காளே... ரவுடி ராக்கம்மா. என்னை பொம்மையா ஆக்கிடுவா. சின்னப் புள்ளையிலிருந்தே அவளைப் பார்த்தா எனக்கு பயம். அவளுக்கு சரிசமமா மார்க் வாங்கணும். ஒரு மார்க் குறைஞ்சாக் கூட என்னை மக்குன்னு வாய்கூசாம சொல்லுவா. பிசாசு. சொந்தக்காரின்னா நம்மோட பலவீனம் எல்லாமும் தெரியும். அதனால நம்மை ஆட்டி வைப்பா.

    சமத்துவம் வாய்விட்டுச் சிரித்தான்.

    அதான்... கல்யாணம் ஆகும் வரையாவது ஜாலியா இருக்கலாம்னு பார்க்கிறேன்.

    சரி... சரி... கொஞ்சம் பொறு. இந்த பைலை மட்டும் பார்த்துடறேன். அஞ்சரைக்குப் போவோம்.

    போடா... நீயும் உன் வேலையும். அஞ்சே காலுக்குப் போனாதான் வழக்கமா போற பஸ்ஸைப் பிடிக்க முடியும். கிளம்புடா என அவன் கையிலிருந்த கோப்பினைப் பறித்து மேசையின் மீது வைத்தான்.

    எழுந்திரிடா கையைப் பிடித்து இழுத்தான்.

    விட்றா... வர்றேன் என எழுந்தான் சமத்துவம். அந்த பஸ்ஸைவிட்டா வேற பஸ்ஸே இல்லையா? அடுத்தடுத்து எத்தனை பஸ் இருக்கு. ஏன் இப்படிப் பறக்கிறே... இன்னிக்கு கொஞ்சம் வெளியில வேலை இருக்கு. முடிச்சிட்டு போவோம்.

    என்ன வேலை? கோபமாய் கேட்டான் மாதவன்.

    வைரமுத்து எழுதின புதுக்கவிதைத் தொகுப்பு வெளி வந்திருக்கு. வாங்கிட்டு போகணும்.

    கவிதைத் தொகுப்பு என்னடா... நான் கவிதைத் தோப்பையே - உனக்குக் காட்டறேன் நான் சொல்ற பஸ்ஸுக்கு வா...

    கவிதைத் தோப்பா? புரியலியே...

    புரிஞ்சா நீயேன் இப்படி இருக்கே? மச்சான்... அந்த பஸ்ஸுல மட்டும் போனா நீ கவிஞனாயிடுவே. அப்புறம் வைரமுத்து மாதிரி நீ ஒரு தங்க முத்தாயிடுவே.

    ஏன்... பஸ்ல பார்வதிதேவியா வரப்போறா? எனக்கு ஞானப்பால் வழங்கி என்னைக் கவிஞனாக்கப் போறாளா?

    பார்வதிதேவி வரமாட்டா. ஆனா நிறைய தேவிங்க வருவாங்க. பார்வையிலேயே காமத்துப்பாலைத் தருவாங்க. நீ கவிஞனாகலாம்.

    ச்சை! அசிங்கமாப் பேசாதடா.

    சரி... சரி வா... என இருவரும் பேசியபடியே சாலையில் நடந்தனர் கூட்டத்தோடு கூட்டமாய்.

    2

    மாதவனை நினைத்தால் சமத்துவத்திற்கு ஆச்சரியமாகவும் சிரிப்பாகவும் இருந்தது. ‘வேடிக்கையான மனிதன்’ என்று நினைத்துக் கொண்டான்.

    பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தபோதும் -

    மாதவனுடைய கண்கள் பேருந்திற்காகக் காத்திருக்கும் பெண்களின் பக்கமே இருந்தது. பக்கத்தில் நண்பன் இருக்கிறானே என்றுகூட ஞாபகம் இல்லாதவனாய் ‘ஜொள்ளு’ விட்டுக் கொண்டிருந்தான்.

    ஐந்து மணிக்கான பரபரப்பு கொஞ்சம் சோர்வு கலந்து இருந்தது. மாலை நேரக் கடைகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

    சாலையோரம் போட்டு விற்கப்பட்டிருந்த பழைய புத்தகக் கடையை நோக்கி சென்றான் சமத்துவம். புத்தகங்களைப் புரட்டிப் புரட்டித் தேடினான்.

    அவனைத் திரும்பிப் பார்த்த மாதவன் ‘இவனைத் திருத்தவே முடியாது’ என்று நினைத்துக் கொண்டான். இரண்டு கவிதைப் புத்தகங்களை வாங்கினான். ஆரம்பகால கவிஞர்களின் கவிதைப் புத்தகங்கள் அவை. அந்த புதுக்கவிஞர்களின் புத்தம் புது எழுத்துக்களை ஆவலுடன் பிரித்தான்.

    டேய்... பஸ் வருது வாடா... திடீரென மாதவனின் குரல் வேகமாய் ஒலிக்க அவசரமாக புத்தகத்தை மூடிவிட்டு ஓடி வந்தான்.

    பேருந்து குப்பை வண்டியைப் போல் மக்களை அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து நின்றது. படிகளில் திராட்சைக் கொத்தைப் போல் கூட்டம் தொங்கியது.

    உள்ளே எத்தனை பேர் மூச்சுத்திணறி செத்துப் போவார்களோ என தோன்றும்படியான ஒரு தோற்றத்தில் வந்து நின்றது பேருந்து. ஓட்டுநர் மட்டுமே தாராளமாக அமர்ந்திருந்தார்.

    ஏறுடா. மாதவன் துரிதப்படுத்தினான்.

    பேருந்து கிளம்பியது. வெளிக்காற்று உள்ளே நுழைய இடம் இல்லை. புழுக்கம் அதிகரிக்க வியர்வை நெடி மூக்கை நெருட மிகவும் தவித்தான் சமத்துவம். மாதவன், நெரிசலைப் பற்றியோ, வியர்வை நெடியைப் பற்றியோ துளியும் கவலைப்படாமல் ஒரு குழுவாய் நின்றிருந்த கல்லூரிப் பெண்களையே வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் விதவிதமான தங்களுடைய காதணிகள் ஊசலாட கொஞ்சம் கூட சோர்வின்றி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு அழகிய மாய உலகில் இருப்பதைப் போல் மாதவன் மயக்கமான ஒரு போதையில் நின்றான்.

    Enjoying the preview?
    Page 1 of 1