Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mahabharathathil Mangathaa
Mahabharathathil Mangathaa
Mahabharathathil Mangathaa
Ebook112 pages40 minutes

Mahabharathathil Mangathaa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விஞ்ஞானி ராம்னாத் கண்டுபிடித்த 'Time Capsules' மாத்திரையை விழுங்கி தயாரிப்பாளர் தர்மராஜன் எழுத்தாளர் ஏகலைவன், ஹீரோயின் சம்பாதேவி மூவரும் மாயமாக மறைகின்றனர். கட்ட பொம்மனின் ஆட்சி காலத்திற்கு வரும் அவர்கள் நடக்கப் போவதை முன்கூட்டியே சொல்வதால் அவனது ராஜகுருவாகி சரித்திரத்தையே மாற்றி எழுத முயல எட்டப்பன் இவர்களை காட்டிக் கொடுக்க கட்டபொம்மன் மூவருக்கும் தூக்குத்தண்டனை வழங்குகிறான்.

மீண்டும் மாத்திரையை விழுங்கி ஷாஜகானை சந்திக்கும் மூவரும் தாஜ்மகாலில் உள்ள சமாதியை இடித்து விடும்படி கூற ஷாஜகான் அவர்களை எண்ணெய் கொப்பரையில் போடச்சொல்கிறான், மீண்டும் மாத்திரையை விழுங்கி சகுனியையும், துரியோதனனையும் மங்காத்தா எனும் சீட்டாட்டத்தில் தோற்கடித்து அவர்களை அடிமையாக்க, கடவுள் கிருஷ்ணனின் ஆணைப்படி காணாக பிரும்மாஸ்திரத்தை விடுகிறான், மாற்று மருந்து கிடைத்த ஏகலைவன், தர்மராஜன் அதை அதிகமாக விழுங்க 4994ம் வருடத்திற்கு சென்று பின் திரும்பி வருகிறார்கள். இது ஒரு சமூகே. பரான, இதிகாச, விஞ்ஞான நகைச்சுவை நாடகம்

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580148907547
Mahabharathathil Mangathaa

Read more from S.Ve. Shekher

Related to Mahabharathathil Mangathaa

Related ebooks

Related categories

Reviews for Mahabharathathil Mangathaa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mahabharathathil Mangathaa - S.Ve. Shekher

    https://www.pustaka.co.in

    நாடகப்பிரியா-வின் S.Ve. சேகர்-இன்

    மகாபாரதத்தில் மங்காத்தா

    Nadagapriya-Win S.Ve. Shekher-In

    Mahabharathathil Mangathaa

    கதை, வசனம்

    ஜி.கே

    நாடகமாக்கம், ஸ்பெஷல் எஃபக்ட்ஸ், ஸ்க்ரிப்ட் எடிட்டிங், டைரக்ஷன், தயாரிப்பு

    S.Ve. சேகர்

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காட்சி - 1

    காட்சி - 2

    காட்சி - 3

    காட்சி 4

    காட்சி - 5

    காட்சி - 6

    காட்சி - 7

    காட்சி - 8

    காட்சி - 9

    காட்சி - 10

    காட்சி - 11

    காட்சி - 12

    காட்சி - 13

    காட்சி - 14

    Siரிக்க Vaiக்கும் சேகர்

    சமீபத்தில் ஒரு வார இதழில் இருந்து என்னைத் தொடர்புகொண்டார்கள். 'பிரபல எழுத்தாளர்களிடமிருந்து ஒரு மாறுதலுக்காக நகைச்சுவை துணுக்கு வாங்கி வெளியிட உள்ளோம். நீங்கள் இரண்டு ஜோக்குகள் ரெடி செய்துவையுங்கள் நாளைக்கு போன் செய்கிறோம்' என்றார்கள்.

    'சரி' என்று உடனே சம்மதம் தெரிவித்துவிட்டேன். பிறகு காகிதத்தை எடுத்து வைத்துக்கொண்டு, நகைச்சுவை துணுக்கு எழுத முயன்ற போதுதான் அவஸ்தை புரிந்தது... ஆக ஒரு நகைச்சுவை துணுக்கு உருவாக்க எனக்கு அரை மணி நேரமும், ஒரு டிஸ்கஷனும் தேவைப்பட்டது. எதற்குச் சொல்கிறேன் என்றால் சிரிப்பது சுலபம். சிரிக்க வைப்பது ரொம்ப சிரமம்.

    அதை கலை என்று தாராளமாய்ச் சொல்லலாம். இந்த சிரிக்க வைக்கிற கலையை மெக்கானிக்கலாக செய்ய முடியாது. ஈடுபாடு வேண்டும். கற்பனை திறமை வேண்டும். பிரசன்ஸ் ஆஃப் மைண்ட் வேண்டும். ஒலி நயம் புரிந்திருக்க வேண்டும். தொனி சூட்சுமம் தெரிய வேண்டும். இதையெல்லாம்விட 'எது சிரிக்க வைக்கும்?' என்கிற அனுபவ அறிவு வேண்டும்.

    இத்தனையும் முழுமையாகக் கொண்டவர் எஸ்.வி. சேகர்.

    எஸ்.வி. சேகர் மேல் எனக்கு ஒரு தனி ஆர்வம் முதன்முறையாக ஏற்பட்டது, 'கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' நாடகத்தை குமுதம் பத்திரிகையில் தொடராகப் படித்தபோது. திரையில் அவரை ரசித்தது, 'வறுமையின் நிறம் சிகப்பில்', முகத்தில் இருக்கும் அப்பாவித்தனமே அவர் எது பேசினாலும் சிரிக்க வைக்கும். மேடையில் நான் பார்த்த, முதல் நாடகம் 'வால் பையன் பாண்டிச்சேரியில். அப்போதுதான் அவருடன் அறிமுகமும்கூட.

    'வால் பையன்' பார்த்துவிட்டு, என் மனம் திறந்த பாராட்டுக்களை விரிவாக கடிதம் எழுதியிருந்தேன். பிறகு கோலங்கள் தொலைக்காட்சித் தொடர்! அதன்பிறகு எஸ்.வி. சேகரின் பழைய நாடகங்களில் வீடியோவில் வந்தவற்றை எல்லாம் எடுத்துவந்து பார்த்தேன்.

    சென்னைக்கு நான் வந்தபிறகு, ஒரே டென்ஷனாக உணரும் சமயங்களில் செய்தித்தாளைப்புரட்டி இன்றைக்கு எஸ்.வி. சேகர் நாடகம் இருக்கிறதா என்று பார்ப்பேன். இருந்தால் குடும்பத்துடன் புறப்பட்டுவிடுவேன். அந்த இரண்டு மணி நேரமும் ரசித்துச் சிரிப்பேன்... ஏற்கனவே பார்த்த நாடகங்களாக இருந்தாலும் போரடிப்பதில்லை. என் இரண்டு மகள்களும் எஸ்.வி. சேகரின் ரசிகைகள்.

    எஸ்.வி. சேகரின் நோக்கத்தில் எந்தக் குளறுபடியும் இல்லை. நாடகம் மூலமாக மகத்தான செய்திகள் சொல்லி சமூகத்தில் மறுமலர்ச்சி உண்டுபண்ணுவதற்காக நாடகங்கள் போடுவதாக என்றைக்கும் அவர் சொல்லிக்கொண்டதில்லை. பொழுதுபோக்கு என்பது வாழ்க்கையில் அவசியமான ஒன்று. நம் மனதை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவக்கூடியது. எஸ்.வி. சேகரின் நாடகங்கள் சுவாரசியமாக பொழுதுபோக்க உதவுகின்றன. அவரின் நோக்கமும் அதுதான்.

    JOKING IS NOT AN EASY JOKE

    எஸ்.வி. சேகர் அதில் பாண்டித்யம் பெற்றிருக்கிறார். ரசிகர்களின் அமோக ஆதரவு அவருக்கு இருக்கிறது. அவர் தொடர்ந்து அருமையான, விலா நோகச் சிரிக்க வைக்கிற நாடகங்களை வழங்க வேண்டும் என ஒரு ரசிகனாக நான் கேட்டுக்கொள்கிறேன்.

    நாடகப்பிரியா மேன்மேலும் புகழ்பெற்று, புதிய சாதனைகளைச் செய்ய வேண்டும் என உளமார வாழ்த்துக் கூறுகிறேன்.

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    (3000வது நாடக விழா மலரிலிருந்து)

    சமர்ப்பணம்

    நம்முடைய தினசரி சந்திக்கும் பல நண்பர்களை திடீர்னு பார்க்கமுடியாம போயிடும். மாசத்துக்கு ஒரு நாள் திடீர்னு வந்துட்டு கால்ல கஞ்சியை கொட்டிகிட்ட மாதிரி பறப்பாங்க. ஏண்டா இப்படி மாறிட்டேன்னு கேக்காமலேயே நாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம், அவனுக்குக் கல்யாணமாயிடுச்சு. டான்சும், பாட்டும் கத்துகிட்ட பெண்களில் பலர் கல்யாணம் ஆன உடனேயே அதை மறந்துடறாங்களே அதுபோல ஊர்சுத்திகிட்டு ஜாலியா இருந்த பல ஆம்பளைங்க டக்குனு வீ(கூ)ட்டுப்புழுக்களாயிடுவாங்க. குழந்தை பிறந்ததுன்னா கேக்கவே வேண்டாம். பிரசவ வலியிலேயிருந்து மறுபடியும் LKG, UKG படிக்கிற அனைத்து பொறுப்புக்களும் வந்துசேர்ந்திடும்.

    ஐஞ்சு பத்து வருஷத்துல ஆளே மாறிடுவாங்க. டி.வி.யில கார்ட்டூன்தான் பார்க்க முடியும். அப்படியே குடும்ப குத்துவிளக்கா மாறிடுவாங்க. அவங்க குழந்தைகளும் அதைப்புரிஞ்சுக்கிட்டு அப்பாவை இன்னும் ஓட்டுவாங்க.

    ஆனால் என் மகள் அனுராதா சேகரோ, அஷ்வின் சேகரோ இன்றும் அப்பா, அம்மா மனம் கோணக்கூடாது என்று நடப்பவர்கள். வாழ்க்கையில், நல்ல குணம், பண்பு இவற்றிற்கு பிறகுதான் படிப்பு என்று நான் சொல்வதை இன்றும் கடைப்பிடிப்பவர்கள். 'ஒன்மோர் எக்சார்சிஸ்ட்' நாடகம் போட்டுக்கொண்டிருந்தபோது (1-6-80) பிறந்ததால் மிகவும் தைரியமான பெண் அனு. சங்கீத ஞானமும் மிகச்சிறப்பான குரல்வளமும் கொண்டவள். என் தொலைக்காட்சித் மேடை நாடகங்களில் அனுவின் பாடல்களை கேட்டிருப்பீர்கள். கிருஷ்ணா கிருஷ்ணா படத்தின்

    Enjoying the preview?
    Page 1 of 1