Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Halwa
Halwa
Halwa
Ebook85 pages32 minutes

Halwa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இரண்டு வயதில் காணாமற்போன தன் ஒரே மகள் குல்ஃபியை, 18 வருடங்கள் கழித்து தேடுகிறார் தந்தை சீர்காழி தொலைந்த பெண்ணைக் கண்டுபிடிக்க சி.ஐ.டி. கணேஷ் நியமிக்கப்படுகிறார்

நான்தான் குல்ஃபி என்று மூன்று பெண்கள் அந்த வீட்டிற்குள் நுழைகின்றனர். கணேஷாம் பாதிக்கப்பட்ட சி.ஐ.டி மதுரை பெண் வேஷத்தில் வீட்டிற்குள் நுழைகிறான். அதனால் ஏற்படும் சிக்கல்களுக்கும், குழப்பங்களுக்கும் இடையே உண்மையான வாரிசு கண்டுபிடிக்கப்படுகிறாள்

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580148907545
Halwa

Read more from S.Ve. Shekher

Related to Halwa

Related ebooks

Related categories

Reviews for Halwa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Halwa - S.Ve. Shekher

    https://www.pustaka.co.in

    நாடகப்பிரியா-வின் S.Ve. சேகர்-இன்

    அல்வா

    Nadagapriya-Win S.Ve. Shekher-In

    Halwa

    வசனம்

    வெங்கட்

    கதை, டைரக்ஷன், தயாரிப்பு

    S.Ve. சேகர்

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சமர்ப்பணம்

    ஜி. கிருஷ்ணமூர்த்தி என்ற ஜி.கே. இன்று தமிழ் நாடக உலகில் மிகவும் பிரபலமான பெயர். அதுவும் மங்காத்தா ஜி.கே என்றால் அனைவருக்கும் தெரிந்த, புகழ் பெற்ற பெயர். மகாபாரதத்தில் மங்காத்தா, காதுல பூ, எல்லாரும் வாங்க போன்ற நாடகங்களை நாடகப்பிரியாவிற்காகவும், தேவை ஒரு மாப்பிள்ளை தொடரை தொலைக்காட்சிக்காகவும் எழுதித் தந்தவர். பல திரைப்படங்களில் நடித்தவர், பல கதை இலாகாவில் வேலை பார்த்தவர், நல்ல வசனகர்த்தா.

    சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். சுமார் 20 வருடங்கள் தொடர்ந்து அஷோக் லேலண்ட் கம்பெனியில் இரவு ஷிப்ட் பார்த்தவர். பகலில் நாடக, திரைப்பட பணிகள். சிறந்த உழைப்பாளி. வாங்கிய பணத்தைவிட அதிகமாக உழைத்தவர். நல்ல நாடக நடிகர். டி.எஸ். பாலையா முதல் இன்றுவரை பல கலைஞர்களுடன் நாடகம் நடித்தவர். நல்ல டைமிங் சென்ஸ் உடையவர். மிமிக்ரி செய்யத் தெரிந்தவர். இன்று அவருடைய மகன் திரு. ஜி.கே. கோபிநாத் என்னால் அறிமுகமானவர். தமிழ் உலகத் தொலைக்காட்சியில் முதல்முதலாக ஆறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் அருக்காணி தொடரின் வசனகர்த்தா. நாடகப்பிரியாவின் பல நாடகங்களில் ஜி.கே. நடித்துள்ளார். அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவான மணிவிழா கொண்டாடினாலும் இன்றளவும் இளமையாக வலம் வரும் ஜி.கே. மற்றும் குடும்பத்தினர் மேலும் பல ஆயிரம் பிறை காண ஆண்டவனை வேண்டுகின்றேன். தமிழில் மிகவும் பிசியாக இருக்கக்கூடிய ஜி.கே. கோபிநாத் அவர்களின் தந்தையுமான ஜி.கே.விற்கு இந்த நாடகத்தை அர்ப்பணித்து காணிக்கையாக்குகின்றேன்.

    பொருளடக்கம்

    காட்சி 1

    காட்சி 2

    காட்சி 3

    காட்சி 4

    காட்சி 5

    காட்சி 6

    காட்சி 7

    காட்சி 8

    காட்சி 9

    காட்சி 10

    காட்சி 11

    காட்சி 12

    காட்சி 13

    காட்சி 1

    சீர்காழி வீடு

    ஜோசியர்: ஆண்டவா எல்லாரையும் நல்லபடியா வைப்பா! சீர்காழி சார்! சீர்காழி சார்!

    சீர்காழி: யாரு... ஜோசியர் கீழாம்பூரா?

    ஜோசியர்: சாமி சரணம், மலைக்கு போறீங்களா?

    சீர்காழி: துக்கத்துல இருக்கேன்யா. என்ன இந்த பக்கம் காத்து அடிக்குது?

    ஜோசியர்: இன்னிக்கு வடக்கே சூலம். அதான் தெற்கே உங்க வீடு இருக்கிற பக்கமா வந்தேன்!.. அப்படியே இன்னிக்கு ஜனவரி 26 ஆச்சே? அதான் உங்களைப்பார்த்து அனுதாபம் தெரிவிச்சிட்டுப் போகலான்னு வந்தேன்...

    சீர்காழி: கீழாம்பூர்... இந்த காலெண்டர்ல ஜனவரி 26 ஏன் வருது!

    ஜோசியர்: ப்ரிண்ட் பண்றாங்க வருது!

    சீர்காழி: ஜனவரி 26 இந்தியாவைப் பொருத்த வரைக்கும் சுபிட்சமான நாள்! இண்டிபென்டன்ஸ் டே!

    சிதம்பரம்: இண்டிபென்டன்ஸ் டே இல்லடா! குடியரசு நாள்!

    சீர்காழி: அப்பா குடியரசு தினம்தான். இங்கிலிஷ்ல இண்டிபென்டன்ஸ் டே!

    ஜோசியர்: இண்டிபென்டன்ஸ் டே - ன்றது வேற எதுவும் இல்லை... அது ஒரு இங்கிலீஷ் படம்! குடியரசு தினத்துக்குத்தான் Republic Day.

    சிதம்பரம்: என் பிள்ளை சீர்காழி ஜனவரி 26 ஆனா, சோகத்தில மூழ்கிடுறான். ஏன் தெரியுமா?

    ஜோசியர்: தெரியாம என்ன? அன்னிக்குத்தானே இவரோட 2 வயசு குழந்தை குல்பீ தொலைஞ்சு போனா!

    சிதம்பரம்: குல்பீன்னு ஏண்டா குழந்தைக்கு பேர் வச்ச? வேற பேரே கிடைக்கலியா?

    சீர்காழி: கல்கின்னு பேர் வைக்கலாம், குல்பீன்னு வைக்கக் கூடாதா?

    ஜோசியர்: அவர் குழந்தை... குல்பின்னும் வைப்பார். குலோப்ஜாமுன்னும் வைப்பார்! எனக்கு கூட 2 குழந்தைகள்... மூத்தவன் பேர் 'சோன்பப்படி'... சின்னவள் பேரு 'நக்காதம்மா'

    சிதம்பரம்: அதென்ன பேரு நக்காதம்மா!

    ஜோசியர்: நக்மான்னு ஏற்கெனவே பேர் இருக்கு இல்லையா? For a change நக்காதம்மா!

    சீர்காழி: ஜோசியரே 18 வருஷத்துக்கு முன்னாடி எக்ஸிபிஷன்ல தொலைஞ்சு போன என் ஒரே பெண்வாரிசு

    Enjoying the preview?
    Page 1 of 1