Eppavum Nee Raja
()
About this ebook
காட்பாடி கனகசுந்தரத்தின் ஒரே மகனான தம்பி ராஜா என்கிற தம்பி சென்னையில் தனது தந்தையின் காலனியில் வரும் வாடகை பணத்தைக் கொண்டுவாழ்ந்து கொண்டிருக்கிறான். ஒரு தரகரின் மூலமாக அண்ணாசாமியின் மகள் பாப்பாவை பெண் பார்க்கிறான். ஒரு தடவையாவது ஜெயிலுக்கு சென்று வந்தரைத்தான் திருமணம் செய்வேன் என ஒரு நிபந்தனையை பாப்பா கூற, வேலையில்லாமல் போலீஸ் வேடம் தரித்து உலா வரும் ஒரு நாடக நடிகன் மற்றும் கைதி எண்ணாயிரத்தின் மனைவி நளாயினி, மகன் கஜா மற்றும் மகள் பிக்பாக்கெட் பிரமிளா இவர்களை பயன்படுத்தி திருமணம் முடிக்கும் வேளையில் நிஜ அப்பா வர குழப்பமான சூழ்நிலை உருவாகிறது. இறுதியில் ராஜா அனைத்துப் பிரச்சனைகளையும் சமாளித்து பாப்பாவை திருமணம் புரிகிறான்.
Read more from S.Ve. Shekher
Naattu Nadappu Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsKaathula Poo Rating: 0 out of 5 stars0 ratingsNaattu Nadappu Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsMega Vasool Rating: 0 out of 5 stars0 ratingsAthirshtakaran Rating: 0 out of 5 stars0 ratingsS.Ve. Shekher Bathilgal Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsManaivigal Jakkirathai Rating: 0 out of 5 stars0 ratingsS. Ve. Shekher Bathilgal Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsOru Sontha Veedu Vadagai Veedagirathu Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Uthai Vaankiya Aboorva Sigamani Rating: 0 out of 5 stars0 ratingsPeriyappa Rating: 0 out of 5 stars0 ratingsPeriya Thambi Rating: 0 out of 5 stars0 ratingsIthu Aambalanga Samacharam Rating: 0 out of 5 stars0 ratingsChinna Maapley Periya Maapley Rating: 0 out of 5 stars0 ratingsEzhu Maathangal Ezhu Naadugal Rating: 0 out of 5 stars0 ratingsKuzhanthai Samy Rating: 0 out of 5 stars0 ratingsThirumbi Vantha Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsEllamey Thamash Thaan Rating: 0 out of 5 stars0 ratingsKaattula Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsSirippu Ungal Choice Rating: 0 out of 5 stars0 ratingsOne More Exorcist Rating: 0 out of 5 stars0 ratingsYaamirukka Bayam Yen? Rating: 0 out of 5 stars0 ratingsJust Jolly Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsKannamoochi Rating: 0 out of 5 stars0 ratingsThathu Pillai Rating: 0 out of 5 stars0 ratingsInimey Naanga Thaan Rating: 0 out of 5 stars0 ratingsEllarum Vaanga Rating: 0 out of 5 stars0 ratingsHalwa Rating: 0 out of 5 stars0 ratingsJust Jolly Part - 2 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Eppavum Nee Raja
Related ebooks
Inimey Naanga Thaan Rating: 0 out of 5 stars0 ratingsYaamirukka Bayam Yen? Rating: 0 out of 5 stars0 ratingsMahabharathathil Mangathaa Rating: 0 out of 5 stars0 ratingsKannamoochi Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Uthai Vaankiya Aboorva Sigamani Rating: 0 out of 5 stars0 ratingsKaattula Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsOru Sontha Veedu Vadagai Veedagirathu Rating: 0 out of 5 stars0 ratingsSirippu Ungal Choice Rating: 0 out of 5 stars0 ratingsOne More Exorcist Rating: 0 out of 5 stars0 ratingsChinna Maapley Periya Maapley Rating: 0 out of 5 stars0 ratingsPeriyappa Rating: 0 out of 5 stars0 ratingsThathu Pillai Rating: 0 out of 5 stars0 ratingsIru Veedu Oru Vaasal Rating: 0 out of 5 stars0 ratingsEllamey Thamash Thaan Rating: 0 out of 5 stars0 ratingsOru Vinaadi Poru Rating: 0 out of 5 stars0 ratingsJust Jolly Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsManaivigal Jakkirathai Rating: 0 out of 5 stars0 ratingsEllam Income Mayam Rating: 0 out of 5 stars0 ratingsVilagiya Thirai Rating: 0 out of 5 stars0 ratingsCrazy Thieves In Palavakkam Rating: 0 out of 5 stars0 ratingsJust Jolly Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsKuzhanthai Samy Rating: 0 out of 5 stars0 ratingsVarugiraal Unnai Thedi Rating: 0 out of 5 stars0 ratingsSarithayanam Rating: 0 out of 5 stars0 ratingsIthu Aambalanga Samacharam Rating: 0 out of 5 stars0 ratingsSevvaralip Poo Rating: 0 out of 5 stars0 ratingsசெவ்வரளிப்பூ... Rating: 0 out of 5 stars0 ratingsSarida Saridi Rating: 0 out of 5 stars0 ratingsUdaiyatha Vennila! Rating: 0 out of 5 stars0 ratingsAviyal Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Eppavum Nee Raja
0 ratings0 reviews
Book preview
Eppavum Nee Raja - S.Ve. Shekher
https://www.pustaka.co.in
நாடகப்பிரியா-வின் S.Ve. சேகர்-இன்
எப்பவும் நீ ராஜா
Nadagapriya-Win S.Ve. Shekher-In
Eppavum Nee Raja
வசனம்
வெங்கட்
கதை, நாடகமாக்கம், இயக்கம், தயாரிப்பு
S.Ve. சேகர்
For more books
http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
காட்சி 1
காட்சி 2
காட்சி 3
காட்சி 4
காட்சி 5
காட்சி 6
காட்சி 7
காட்சி 8
காட்சி 9.
காட்சி 10
காட்சி 11
காட்சி 12
காட்சி 13
ஒரு மிகப் பெரிய சாதனை
நாடகத்தை தொடர்ந்து நடத்தி, அதுவும் 3500 நாடகங்களை நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார் திரு. எஸ்.வி. சேகர் என்று சொன்னால் அதைவிட பாராட்டுக்குரிய விஷயம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.
சினிமா எடுத்துவிடலாம், டி.வி. தொடர் தயாரித்து விடலாம். ஆனால், நாடகத்தைத் தொடர்ந்து நடத்துவது என்பது ரொம்ப கஷ்டம். இன்றைய தினம் இருக்கக்கூடிய நிலை அதுதான்.
அப்படிப்பட்ட சூழ்நிலையிலேகூட திரு. எஸ்.வி. சேகர் அவர்கள் நாடகக் கலைமீது இருக்கின்ற பற்றின் காரணமாக, காதலின் காரணமாக, அவருக்கு இருக்கின்ற பல்வேறு தொல்லைகளுக்கும், கஷ்டங்களுக்கும் இடையேகூட, இந்தக் கலை நசிந்துவிடாமல் காப்பாற்றுகின்ற ஒரு மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகிறார் என்று எண்ணிப் பார்க்கின்ற போது, உண்மையாகவே நான் பெருமைப்படுகிறேன். அதற்காக திரு. எஸ்.வி. சேகரை நான் பாராட்டுகின்றேன்.
அதுவும் - இந்த மாதிரி நாடகம் போடுவது ரொம்ப கஷ்டம்! தினமும் பேப்பர் படிக்க வேண்டும். அப்பப்ப வரும் நிகழ்ச்சிகளை பேசினால்தான் எடுபடும். அதை மிக அழகாக திரு. எஸ்.வி. சேகர் கையாண்டிருக்கிறார்.
திரு. எம்.ஆர். ராதா அவர்கள் நடத்திய நாடகங்களை நான் எண்ணிப்பார்க்கின்றேன். அன்றன்றைக்கு என்னவெல்லாம் செய்தி வருகிறதோ... அது, மேடை விமர்சனத்துக்கு வந்து விடும்! அப்படிப்பட்ட ஒரு ரகத்தில் சேர்ந்த நாடகம்தான் திரு. எஸ்.வி. சேகரின் இந்த தத்துப்பிள்ளை
அம்முறையில் நாடகக்கலைக்கு திரு. எஸ்.வி. சேகர் ஒரு சிறந்த சேவை செய்து கொண்டிருக்கின்றார் என்பதை எண்ணும்போது உண்மையாகவே நான் பெருமைப்படுகின்றேன்.
3,500 என்ன? 35,000 நாடகங்களை நீங்கள் நடிக்க வேண்டும் என்று உங்களை நான் வாழ்த்துகின்றேன். இறையருளும் உங்களுக்கு துணையிருக்கும் என்று கூறிக்கொள்கின்றேன்.
- திரு. ஜி.கே. மூப்பனார்
3500 - ஆவது நாடக விழாவில்
சமர்ப்பணம்
என் தாய் தந்தை
அலமேலு வெங்கட்ராமன் எஸ்.வி. வெங்கட்ராமன்.
1950ல் தந்தை
எஸ்.வி.வி.(1948)
எஸ்.வி.எஸ்(1988)
ஒரு கதையை (?) வித்தியாசமாக சிந்தித்து அதற்கு வசனம் எழுதி ஒத்திகை பார்த்து மேடையில் நடத்தப்படும் நாடகம் வெற்றி பெற்றபின் அதே குழுவினர் மறுபடியும் வேறு ஒரு கதையை (?) சிந்திக்க ஆரம்பிப்பார்கள். இது வழக்கம். ஆனால் மேடையில் நடிக்கப்பட்ட நாடகம், தொலைக்காட்சியில் அரங்கேறி, பின்பு ஒலி நாடாவாக வந்து பெரிய விற்பனையாகி, சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் எழுத்து வடிவில் புத்தகமாக வெளிவருகிறது என்றால் அது கடவுளின் கருணையே தவிர வேறு எதுவும் இல்லை. எங்களின் நாடகப் பிரியா குழுவில் ரிகர்சல், நாடக தேதிகள், மேடை நிர்வாகம், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் என்று நடிப்பைத் தவிர மற்றவற்றை செய்து கொண்டிருந்த என்னை ஊக்கம் கொடுத்து நடிக்க வைத்த எங்கள் கலைஞர்கள் அனைவருக்கும் குறிப்பாக என்னுடன் இணைந்து செயல்பட்ட திரு. சுந்தா என்கிற சுந்தர்ராமனையும் என் நினைவு உள்ளவரை மறக்க முடியாது. அதேபோல் படிப்பைவிட ஒழுக்கம்தான் முக்கியம், நேர்மைதான் முக்கியம், வாக்கு தவறாமைதான் முக்கியம் என்று பல நல்ல குணங்களை என்னுள் விதைத்த என் தந்தை எஸ்.வி. வெங்கட்ராமன் எங்கள் குடும்பத்தில் ‘அண்ணா’ என்று அன்புடன் அழைக்கப்படும் என் தந்தை, இன்று நம்மிடையே இல்லை என்பதை என் மனசு ஏற்க மறுக்கின்றது.
நாகடத்தில் யாரும் நிரந்தரமில்லை
என்று எனக்கு போதித்தவர் அவர். எனக்கு மட்டுமல்ல திரு. மேஜர் சுந்தர்ராஜன், சோ, ஜெய்சங்கர், சச்சு, எஸ்.வி. ரமணன் போன்ற பல கலைஞர்களை இயக்கியவர்.
மேடையோ, சினிமாவோ, கலை சார்ந்த எந்தத் துறையாக இருந்தாலும், மது, மாது, மாமிசம், புகை போன்ற வழக்கங்கள் இல்லாமல் வாழ்ந்து காட்டியவர். என் சகோதரர்கள், சகோதரி இவர்களைவிட மூத்தவனாக இருந்தாலும் படிப்பில் சுமாராக இருந்ததை ஒரு தடவைகூட ஒப்பிட்டு பேசாமல் எனக்குள் இருந்த கலைத்திறமையை வெளிக்கொண்டு வந்து தன் கடைசி நேரம்வரை என்னைப்பற்றி பெருமைப்பட்டவர். என்னை பொறுமைப்பட வைத்தவர். எஸ். வி.