Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sivasamiyin Sabatham Part - 2
Sivasamiyin Sabatham Part - 2
Sivasamiyin Sabatham Part - 2
Ebook189 pages1 hour

Sivasamiyin Sabatham Part - 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிவசாமி எனும் ஜீவ்ஸ்

இரட்டை நாயனங்கள் பிணைந்து, பிரிந்து, ஒருங்கிணைந்து கம்பீரமாக வாசிக்கும் வாசிப்பே தனி.

இரண்டு முக்கியப் பாத்திரங்களைக் கொண்டு புனையப்பட்ட நகைச்சுவை எழுத்தோவியங்களும் அவ்வாறே.

நகைச்சுவை எனும் தீஞ்சுவையை வாரி வழங்கிய இரு இமயங்களில் பி.ஜி. உட்ஹவுஸ் ஒருவர்.

மற்றொருவர் தேவன்.

ஆங்கிலத்தில் சொற்சிலம்பங்கள் பல ஆடி தன் 94 வயதுவரை வாசக விசிறிகளை காலம் காலமாக சிரிக்க வைக்க எழுதிக் குவித்தவர் உட்ஹவுஸ். கதாபாத்திரங்களில் அவர் படைத்த ஜீவ்ஸும், பெர்ட்டி ஊஸ்டரும், ஷெர்லாக் ஹோம்ஸ், டாக்டர் வாட்ஸனைப் போல நிஜமாகவே உயிர் வாழ்ந்தவர்களா என்ற பிரமிப்பை உண்டாக்கக்கூடிய அளவில் உயர்ந்து, ரசிகர்களை இன்றும் மகிழ்விக்கின்றனர்.

உட்ஹவுஸின் நகைச்சுவையை தமிழில் மொழி பெயர்க்க முயற்சி செய்வது தொன்னையில் ஷாம்பெயினை ஊற்றி வழங்குவதற்கு ஒப்பாகும்.

லண்டன் சூழ்நிலையில் வலம்வரும் கதாபாத்திரமான பெர்ட்டி ஊஸ்டர் கட்டை பிரம்மசாரி.

அவருடைய பட்லர், காரியதரிசி, ஆலோசகர், ஆபத்பாந்தவராக பரிமளிக்கும் ஜீவ்ஸ் வெகுளியான தன் பணக்கார எஜமானனுக்கு உறுதுணையாக இருந்து எவ்வாறு பல சந்தர்ப்பங்களில் அவரைத் தன் இழுப்புக்கு இழுக்கிறார் என்பதை உட்ஹவுஸ் தன் வார்த்தை ஜாலங்களுடன் நடைச் சித்திரங்களாக்கி தெவிட்டாத நகைச்சுவை விருந்துகள் பல படைத்துள்ளார்.

ஜீவ்ஸும், ஊஸ்டரும் நம் நாட்டில் பிறந்திருந்தால் எவ்வாறு இருக்கும் என்ற கனவின் அடிப்படையில் தமிழ்ப்படுத்தப்பட்ட கதாபாத்திரங்களான சிவசாமியும் பஞ்சாமியும் வைத்து புனையப்பட்ட இந்த நூல் என்னுடைய அறிமுக முயற்சி. பொன் வைக்க வேண்டிய இடத்தில் நான் வைத்தது ஒரு பூவாகக்கூட அல்லாமல் ஒரு மொட்டாகவாவது அமைந்தது என்று, உட்ஹவுஸைப் பாராயணம் செய்தவர்கள், செய்பவர்கள் இம்முயற்சியைப் பரிசீலனை செய்துவிட்டுக் கருதினால் ஜீவ்ஸ் பாணியில் தன்னடகத்துடன் சிரம் தாழ்த்தி 'தாங்க் யூ ஸார்’ என்று நன்றி தெரிவிப்பேன்.

- ஜே.எஸ். ராகவன்

Languageதமிழ்
Release dateJul 21, 2019
ISBN6580127204374
Sivasamiyin Sabatham Part - 2

Read more from J.S. Raghavan

Related to Sivasamiyin Sabatham Part - 2

Related ebooks

Related categories

Reviews for Sivasamiyin Sabatham Part - 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sivasamiyin Sabatham Part - 2 - J.S. Raghavan

    http://www.pustaka.co.in

    சிவசாமியின் சபதம்

    பாகம் - 2

    Sivasamiyin Sabatham

    Part - 2

    Author:

    ஜே. எஸ். ராகவன்

    J.S. Raghavan

    For more books

    http://pustaka.co.in/home/author/js-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. நதி மூலம் தீனி மூலம்

    2. திருமதி சகுனாம்பாள்

    3. கொல்கத்தா ஜாபேன்?

    4. மம்தா மங்களம்

    5. உசிலி சுப்ரமணிய அய்யர்

    6. கிறுக்கலாஞ்சலோ

    7. பைபாஸ் பத்மநாபன்

    8. கோர்ட்டில் பஞ்சாமி

    9. ஷெர்லாக் சாம்பு

    சிவசாமியின் சபதம்

    பாகம் 2

    'கொல்கத்தான்னு எப்படிடா பெயர் வந்தது?'

    'நிறைய கதைகள் இருக்கு அண்ணா. அதிலே ஒண்ணு, அங்கே காலடி வெச்ச பிரிட்டிஷ்காரங்க, 'இந்த ஊர் பேர் என்ன'ன்னு கேட்டாங்களாம். அங்கிருந்த ஆள்கள், இந்த இடத்திலே புல்லை எப்ப வெட்டினீங்கன்னுதான் கேக்கறாங்கன்னு தப்பா புரிஞ்சிண்டு, 'கொல் கடா' அதாவது நேத்திக்கு வெட்டினதுன்னு பதில் சொல்ல, மாட்சிமை தாங்கிய துரைமார்கள் அதுக்கு கொல்கடான்னு பேர் வெச்சுட்டாங்களாம்.'

    'நம்மூர் ஹாமில்டன் பிரிட்ஜ்கூட விபரீதமா பெயர் மாறி பார்பர்ஸ் பிரிட்ஜா மாறின கதை மாதிரி இருக்குடா. கொல் கட்டாங்கிற சவுண்டிலே வேற ஏதாவது பெயரைக் கேட்டிருக்கியாடா?'

    'கேட்டிருக்கேன் அண்ணா. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைஞ்ச இடத்துக்குக்கூட கொல் கொதான்னு பெயர் அண்ணா.'

    'அப்படியா? அப்புறம்?'

    'கிராமங்களிலே புடலங்காய் நீளமா வளரக் கல்லைக் கட்டித் தொங்கவிடுவாங்க. அந்த மாதிரி கல்லைக் கட்டாமலே நீளமா விளைஞ்ச புடலங்காயைக் கல்-கட்டா புடலங்காய்னு தோட்டக்காரங்க கித்தாய்ப்பா சொல்றதுண்டு அண்ணா.'

    1. நதி மூலம் தீனி மூலம்

    வெல்லப்பாகு + தேங்காய் + ஏலக்காய் கலவையின் மங்களகரமான கூட்டணி வாசனை, மேகங்களிலிருந்து நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சூரியனின் கதிர்களைப்போல, வீடு பூராவும் கிஜுகிஜு என்று பரவ ஆரம்பித்தது.

    கொட்டைப் பாக்கு அளவு கிளறின மாவை எடுத்த சிவசாமி, கலைமாமணி பட்டம் பெறப் பரிந்துரைக்க வேண்டிய கைவினைக் கலைஞரைப்போல, விறுவிறுவென்று லாகவமாகச் சுழற்றிச் சுழற்றி ஒரு வெள்ளைச் சொப்பை உருவாக்கிப் பித்தளை தாம்பாளத்தில் உட்கார வைத்து அழகு பார்த்தான். ஒரு குட்டிப்பாப்பா ஆவலுடன் பாலுக்காக வாய் திறந்தது போல, சொப்பு மலர்ந்து இருந்தது.

    பர்கன்டி நிற சோபாவில் கெத்தாகச் சாய்ந்து கொண்டிருந்த டாக்டர் பஞ்சாமி, ஸீ-த்ரூ ஆடைகள் அணிந்த அந்தப்புர அரேபிய அழகிகள் கை கால்களைச் செல்லமாகப் பிடித்து விட, ஹூக்கா பிடிக்கும் சுல்தானின் ரேஞ்சில் கண் இமைகளை இன்ப லாகிரியுடன் மூடி, வாசனையை உள்ளுக்கும் வெளியேயும் மாறி மாறி இழுத்து, மூக்குக்கு முதல் மரியாதை செய்தார். பின்னர் சமையல் அறையை நோக்கித் தூக்கலான குரல் கொடுத்தார்.

    'சிவசாமி, என்னடா பண்ணிண்டு இருக்கே? வாசனை ஆளை ஆகாசத்துக்கே தூக்கறதே?'

    '....................'

    ‘டேய் சிவசாமி உன்னைத்தான்... என்ன பண்ணின்டு இருக்கே?'

    '....................'

    'என்னடா, சிவசாமி? பதிலையே காணோம்? வாயிலே என்ன கொழுக்கட்டையா?'

    'இல்லேண்ணா. கையிலேதான் கொழுக்கட்டை. வாயிலே புண்ணு. அதான் சட்னு பேச முடியலே.'

    'வாயிலே புண்ணா? பேச முடியலையா? காமாட்சிக்கு மாத்திரம் வாயிலே புண்ணு வந்து பேசமுடியாம இருந்தா, தன்னாலே ஏன் பேச முடியலைங்கிறதை நான் கேக்கிறேனா இல்லையான்னு கிஞ்சித்தும் கவலைப்படாமல் புள்ளி, அரைப் புள்ளி, முக்கால் புள்ளி விடாம முக்கால் மணி நேரம் அரற்றித் தீத்து இருப்பா. நீயும் இருக்கியே? அது சரி, என்னடா திடீர்னு கொழுக்கட்டை?'

    'பிள்ளையாருக்கு 108 கொழுக்கட்டை நைவேத்யம் பண்றதா வேண்டிண்டு இருக்கேன். பூரணம் கிளறியாச்சு.'

    'பூரணமா? என்ன பூரணம்?'

    'தேங்காய்ப் பூரணம். எள்ளுப் பூரணம் உளுத்தம் பூரணம் எல்லாமே ரெடி.'

    'டேய், சிவசாமி, பூரணத்தைப் பத்தி வேதத்திலேகூட ஏதோ சொல்லி இருக்கில்லே?'

    'ஆமாண்ணா... சுக்ல யஜூர் வேதம். வாஜஸனேய சம்ஹிதை. ஈஸாவாஸ்ய உபநிஷதத்திலே பேசப்பட்டிருக்கு.'

    'கரெக்ட்டா சொன்னேன் பாத்தியா? என்னன்னு பேசப்பட்டு இருக்குடா?'

    'பூரணத்தில் இருந்து பூரணம் பிரிந்தது. எஞ்சியதும் ‘பூரணமே'ன்னு.’

    'பூரணமா எனக்குப் புரியலே.'

    'பிரும்மத்திலேந்து இந்தப் பிரபஞ்சம் பிறந்திருந்தாலும் பிரும்மம் முழுசா பிரும்மமாகத்தான் இருக்கும்னு அர்த்தம் பண்ணிக்கணும்.'

    'நல்லவேளை எனக்கு ஒரே தலை. பிரும்மா மாதிரி நாலு தலை இல்லே. இருந்திருந்தா நாலு தலையும் கோஷ்டியா, பம்பரங்களா கிர்ருனு பூ மாதிரி சுத்தி இருக்கும். பிரும்மத்தையும் பூரணத்தையும் விடு. எதுக்குக் கொழுக்கட்டை? அதைப் புரியும்படியாச் சொல்லு.'

    'அரை மனசோட உங்ககிட்டேந்து சில நாள் பிரிஞ்சு போனாலும் என்னைத் திரும்பி வரவழைச்சுட்டாரே விக்னேஸ்வரர். அதுக்காக வேண்டுதல், அன்பளிப்பு, நன்றிக்கடன். தேங்க்ஸ் கிவ்விங்.'

    'பூரணத்திலேந்து பூரணம் பிரியாத்தினாலேயா...'

    'அண்ணா...!'

    'டேய் சிவசாமி, நாளைக்கு மணத்தக்காளிக் கீரையை சுண்டலா பண்ணிடு.'

    'கீரையா? அண்ணா, கீரை உங்களுக்குப் பிடிக்காதே.'

    'ஆமாண்டா. காமாட்சிதான் கீரையோட கீர்த்தியை கீரைவாணி ராகத்திலே மெட்டமைச்சுப் பாடாத குறையா பாடித் தீத்துடுவா.'

    'கீரைவாணின்னு ராகம் இல்லேண்ணா. கீரவாணின்னுதான் இருக்கு. கீரவாணிங்கிறது எல்லா ஸ்வரங்களும் கமகத்தோட பாடப்படற சர்வகாலிகாராகம். 'நீ அருள் புரிய வேண்டும்'னு... பாபநாசம் சிவன் பாடல் அந்த ராகத்திலே...'

    'சிவசாமி, நில்லுடா. கீரை உனக்குத்தான்டா. வாய்ப்புண்ணுன்னியே, அதுக்கு மணத்தக்காளிக்கீரை நல்லதாம். இன்னிக்கு வாக் போனபோது அதை வாங்கிண்டு வந்து, பாபநாசம் சிவன் வேண்டிண்டா மாதிரி உனக்கு அருள் புரியலாம்னு பாத்தேன். கீரை நன்னாயில்லே. கீரையைவிட அதை விக்கறவதான் தளதளன்னு இருந்தா.'

    'அண்ணா...'

    'தமாஷுக்குச் சொன்னேன்டா. காமாட்சிகிட்டே இப்படி எல்லாம் ஜாலியாப் பேச முடியுமா? சீரியஸா எடுத்துண்டு, கல்லு மாதிரி இருக்கிற கூரைப் புடைவைக்காரி கிட்டேயே கண்டாங்கிச் சேலைக்காரியைப் பத்திப் பேசறேளே... என்ன நெஞ்சழுத்தம் உங்களுக்குன்னு நாலஞ்சு சரணத்தோட முகாரியிலே விஸ்தாரமா அழ ஆரம்பிச்சுடுவா. பொம்மனாட்டிகளைப் பத்தி உனக்குத் தெரியாது.'

    'ஆனானப்பட்ட ஞானிகளாலேயும் கவிகளாலேயும் புரிஞ்சுக்க முடியலேண்ணா.’

    'பெண்களையும் சமுத்திரத்தையும் சம்பந்தப்படுத்தி அவா நிறையப் பேசி இருக்கா இல்லே?'

    'துளசிதாசர் ராமசரிதாமானஸிலே பெண்களின் மனத்தை ஆழ் கடலோட ஒப்பிட்டு இருக்கார் அண்ணா. 'பெண்கள் பாற்கடல் மாதிரி. இரண்டிலேயும் அமிர்தமும் இருக்கும். ஆலகால விஷமும் இருக்கும்’னு யாஷஸ்திலகாவிலே சோமதேவா கருத்துத் தெரிவிச்சிருக்கார் அண்ணா.'

    'பாத்தியா! ஆனா எல்லாப் பெண்களுக்கும் சமுத்திரத்திலே இருக்கிற மீன்கள் மாதிரி கண்கள் கிடையாது. முத்துப் போன்ற பற்களும் கிடையாது இல்லையா? வலை வீசித் தேடினா ஓரிரண்டு பேர் அபூர்வமா சிக்குவா. சிவசாமி, நான் தூங்கிண்டு இருக்கும்போது ஃபோன் அடிச்ச மாதிரி இருந்ததே. யாருடா அது?'

    ‘மைசூர்லேர்ந்து அண்ணா.'

    'மைசூர்லேர்ந்தா? யாருடா?'

    'யாரோ தேசிகாச்சாராம். உங்க பழைய ஃபிரெண்டாம். வெள்ளிக்கிழமை மெட்ராஸ் வராராம். நம் வீட்டிலே தங்க வசதிப்படுமா?'ன்னு கேட்டார்.’

    'அட தேசிக்காச்சாரா? சிவசாமி, ஃபோன் பண்ணி வரச்சொல்லிடுடா.'

    வெள்ளிக்கிழமை காலை தேசிகாச்சார் ஒரு ஸ்டீல் டிரங்க்பெட்டி, பாம்பாட்டி மாதிரி ஒரு பிரம்புக் கூடை, வாக்கிங் ஸ்டிக் சகிதம் பட்டணப் பிரவேசம் செய்யும் ராஜகுருவின் மிடுக்கோடு பஞ்சாமி வீட்டுக்குள் நுழைந்தார். அவரிடமிருந்து கிளம்பிய மரிக்கொழுந்து ஃபிளவர்டஸ்ட் வாசனை, முந்திரிக் கொட்டையாக முண்டியடித்துக் கொண்டு, அவருக்கு முன் வீட்டுக்குள் நுழைந்தது.

    ஆறடி வெடவெட ராம்லீலா ராவண உயரம். சந்தன நிறம். பிராஸோ போட்டு, விடாம தேய்த்த மாதிரி பளபளக்கும் மண்டை. தங்க நாற்கரச் சாலை போடும் அளவுக்குத் தேவையான அகன்ற நெற்றி. அழித்துச் செய்தால், மூன்று பசக் மூக்கு ஜப்பானிய ஆடவர்களுக்கு உறுப்பு தானம் செய்யப் போதுமான அளவு தாராள மூக்கு. விரிந்து படர்ந்த சிவந்த போகியின் உதடுகள். கூர்மையான கண்கள். மென்னியைப் பிடிக்கும் சந்தனக்கலர் சில்க் ஜிப்பா. தும்பைப் பூவை டினோபாலில் முக்கி எடுத்துப் பின்னர் பிளீச் செய்தது போன்ற வெள்ளை வழுவழு மில்வேட்டி. சிக்கென்ற பஞ்சகச்சக்கட்டு, மூடிய பாத்ரூமில் பித்தளை அண்டாவால் முகத்தை மூடிக்குரலை எழுப்பினது போல கனத்த குரல். பெரிய வீணையை மடியில் சாய்த்துக் கொண்டு, ராகத்துக்குப் பின் தானத்துக்குத் தாவுமுன், கனத்த கண் இமைகளை மூடி நிதானிக்கும் வைணிகரின் ஆழ்ந்த முக பாவம்.

    'நமஸ்காரா' என்றார் தேசிகாச்சார் முறம் போன்ற அகலமான இரண்டு கைகளையும் மார்புக்கு நேராகச் சாய்த்துக் குவித்து.

    'பன்றி, ஸ்வாமி, பன்றி' என்றார் டாக்டர் பஞ்சாமி.

    'ஏனு டாக்டர் ஸ்வாமி, கன்னடா கொத்தாயித்தா?'

    'தேசிகாச்சார், என்னோட ஒக்காபுலரி அவ்வளவுதான். தொடர்ந்து மக்கள் தொலைக்காட்சியா தமிழிலேயே பேசிடலாம். உங்களுக்குத்தான் கர்நாடகாலேந்து வர காவேரி மாதிரி இல்லாம, தமிழ் தங்கு தடை இல்லாம தாராளமா வருமே.'

    தேசிகாச்சார் தன்னுடைய உதடுகளை இடது காதிலிருந்து வலது காதுவரை U டேர்ன் சிக்னல்போல வளைத்துப் புன்னகை பூத்தார்.

    'அண்ணா, டிபன் ரெடி' என்றான் சிவசாமி.

    அரை நிமிடத்துக்கு மூன்றுமுறை என்ற காலப் பிரமாணத்தில் ஓணானாகத் தலையை ஆட்டிக் கொண்டு, பஞ்சாமிக்கு வலப்பக்கமாக உட்கார்ந்த தேசிகாச்சாரின் கிளிப்பச்சை வாழை இலையில் சிவசாமி, ஆவி பறக்கும் இட்லிகளைப் பரிமாறி சாம்பார், சட்னியை ஊற்றினான்.

    'உம்ம பேரு என்ன?'

    'சிவசாமின்னு சொல்லுவா.'

    'ம்? நீரும் சிவசாமின்னுதானே சொல்லுவீர்?'

    'பின்னே? அவனும் அதையேதான் சொல்லுவான். மாத்தி முனுசாமி, மன்னார்சாமி, அர்விந்த்சாமின்னா சொல்லப் போறான்?'

    'ம்? இட்லியை நீர்தானே பண்ணினீர்?'

    'ஆமாம், ஸார். ஏதோ தெரிஞ்சவரையில் பண்ணி இருக்கேன்.'

    'ம்? இந்த இட்லி எவ்வளவு பழசுன்னு உமக்குத் தெரியுமா?'

    'பழசாவது? கிழசாவது?' என்றார் பஞ்சாமி இட்லியை விடச் சூடாகி. 'ஆவி வரதே ஸ்வாமி. சூடா இப்போதான் எடுத்த முதல் ஈடு.'

    ப்ச் கொட்டிக் கொண்டே தேசிகாச்சார் ஒரு மைக்ரோ மினி அமில எரிச்சலுடன் தலையை பலமாக ஆட்டினார். 'இந்த இட்லி நம் நாட்டிலே எவ்வளவு காலமா இருக்குன்னு கேட்டேன்.'

    'தெரியாது, ஸார்' என்றான் சிவசாமி, 'சொன்னா தெரிஞ்சுக்கிறேன்.'

    'ம். இட்லிக்குக் கன்னடத்திலே இட்டலிகேன்னு பேரு தெரியுமா? சிவகோத்யாசார்யாங்கிறவர் 920 - வது வருஷம் எழுதின வட்டாராதனாலே இட்லியைப் பற்றிய தகவல்களை விண்டு விண்டு வெச்சிருக்கார். பின்னாடி வந்த சவுந்தர்யாகூட கி.பி. 1025 வருஷத்திலே அதனோட ரெஸிபியைக் கொடுத்திருக்கார் தெரியுமா? ஏழாவது நூற்றாண்டு வரைக்கும் இந்தியாவில் இட்லிப் பானை ஸீனுக்கு வரலேன்னு சீன யாத்ரிகர் யுவாங் சுவாங் எழுதி

    Enjoying the preview?
    Page 1 of 1