Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thamasha Varigal Part 2
Thamasha Varigal Part 2
Thamasha Varigal Part 2
Ebook215 pages1 hour

Thamasha Varigal Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சென்னையின் வட்டார ஏடுகளில் மிகப் பிரபலமான 'அண்ணாநகர் டைம்ஸ்' இதழின் ஆசிரியர் திரு. கே.எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் என்னை வாரம் வாரம் அப்பத்திரிகையில் தமிழில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதப் பணித்த காரணத்தினால், 'அண்ணா நகர் டைம்ஸ்' மற்றும் அதன் சகோதர இதழ்களான 'மாம்பலம் டைம்ஸ்,' 'அசோக்நகர் - கே.கே. நகர் டைம்ஸ்,' 'கீழ்ப்பாக்கம் - புரசை டைம்ஸ்'களில் என்னுடைய படைப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் அச்சிட்டு வாரம் வாரம் விநியோகிக்கப்படும் இவ்விதழ்களில் இதுவரை வெளிவந்த முப்பத்தி ஆறு கட்டுரைகளின் தொகுப்பே உங்கள் கரங்களில் இப்போது தவழ்கிறது.

ஒவ்வொரு வார இறுதியிலும் ஆவலோடு எதிர் பார்க்கப்பட்டு லட்சக்கணக்கான வாசகர்களால் படிக்கப்படும் இப்பத்திரிகைகளில் எழுதுவதை நான் மிகப் பெரும் பாக்கியமாகக் கருதி, அதற்கு வாய்ப்பளித்த உன்னத ரசிகரும், நிர்வாகத் திறமையில் ஜொலிக்கும் பண்பாளருமான திரு. ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓயாத பணிகளுக்கிடையே என்னுடைய நிர்ப்பந்தங்களால் சிறிதும் சலிப்படையாமல் ஒவ்வொரு வாரமும் உயிரோட்டமுள்ள, அற்புதமான கேலிச் சித்திரங்களைத் தன் மந்திரத் தூரிகையால் வரைந்து, வாசகர்களின் கவனத்தைக் கட்டுரை மீது ஒரு பளிச்சிடும் நியான் விளக்கு போலச் சுண்டி இழுக்கச் செய்து வரும் திரு. 'நடனம்' அவர்களுக்கு என் நன்றிகள்.

'சிரிப்பே மருந்து' என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் தான் எழுப்பும் சிரிப்பலைகளால் உடல் மற்றும் மன உபாதைகளை வெற்றிகரமாக விரட்டியடிக்கும் 'நகைச்சுவை வைத்திய ரத்தினம்’ திரு. பாக்கியம் ராமசாமி அவர்கள், நகைச்சுவை எழுத்தாளர்களைப் பாராட்டி கெளரவிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர். தன் எழுத்தால் மட்டுமன்றி நகைச்சுவை ததும்பும் பேச்சாலும் கேட்பவர்களை விலாப்புடைக்கச் சிரிக்க வைத்துவிடும் அவர் இத்தொகுப்பிற்கு மனமுவந்து எழுதித் தந்த முன்னுரைக்கு என் நன்றிகள்.

கட்டுரைகளை 'வரிகள்' விடாமல் படித்த கையோடு என்னுடன் தவறாமல் தொலைபேசி மூலமாகவோ அல்லது சந்திக்கும்போது நேர்முகமாகவோ என் எழுத்தை நெஞ்சாரப் பாராட்டி ஒரு அன்யோன்யத்துடன் ஆதரித்து வரும் வாசக நண்பர்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.

தமாஷா 'வரிகள்' படிப்பவர்களின் மனச்சுமைகளை ஓரளவாவது இறக்கி - அதை லேசாக்க உதவுகின்றன என்று வாசகர்கள் கருதினால் அதற்கு என்னை ஊக்குவிக்கும் திரு. ராமகிருஷ்ணன் அவர்களும், எழுதப் பயிற்சியை அளித்த என் மானசீக ஆசான்களான பி.ஜி. உட்ஹவுஸ், தேவன், கல்கி மற்றும் தி. ஜானகிராமன் அவர்களும், தொடர்ந்து எழுத அருள் புரியும் எல்லாம் வல்ல இறைவனுமே காரணம் என்று நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.

- ஜே.எஸ். ராகவன்.

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127204447
Thamasha Varigal Part 2

Read more from J.S. Raghavan

Related to Thamasha Varigal Part 2

Related ebooks

Related categories

Reviews for Thamasha Varigal Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thamasha Varigal Part 2 - J.S. Raghavan

    http://www.pustaka.co.in

    தமாஷா வரிகள் பாகம் - 2

    Thamasha Varigal Part - 2

    Author:

    ஜே. எஸ். ராகவன்

    J.S. Raghavan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/js-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. மாம்பழம் டைம்ஸ்!

    2. திருநாவுக்கு அடியவர்

    3. 'பெயர்' பெற்ற ஆசிரியர்கள்

    4. அம்மன் அலங்காரம்

    5. ஆயில் ரேகை

    6. சாஸ்திரத்திற்கு சரித்திரம்

    7. 'பேனா' பெரியச்சாமி

    8. பள்ளிக்கூடம் ஒதுங்காத மழை

    9. மதிப்பு ‘குறைதல்' வரி!

    10. மிருக சகி

    11. 'கடை' ஏழு வள்ளல்கள்

    12. நான் பார்த்த சாரதிகள்

    13. டௌரி கல்யாணம் வில்லங்கமே!

    14. கனாக் கண்டேன் பாட்டி, நான்!

    15. ஈஸிச்சேர் கிரிக்கெட்!

    16. பீங்கான் கப் டிராஃபி

    17. தும்மினார் பிடிப்பதில்லை

    18. மூணாவது அம்பயர்

    19. ஒரு ‘கோப்பை’யிலே நம் குடியிருப்பு

    20. 'பந்து வராளி'

    21. ஸ்டம்பே சிவம்!

    22. செய்திகள் - சுவாசிப்பது சின்னசாமி

    23. ஜோஸ்யமும் ஹாஸ்யமும்

    24. அடைப்புக் குறிகளுடன் ஒரு மூக்கு

    25. ஒரு மூலக் கதை

    26. இரை வணக்கம்

    27. நிதானி - அவதானி

    28. கொடி காத்த குறும்பன்

    29. புகைப் போக்கி?

    30. டயட் சுப்பையா

    31. பிள்ளை யார்?

    32. 'பக்த' பரமசிவம்

    33. 'மாட்ரிமோனியல் தெரியும். மாற்றுமோனியல்னா?'

    34. 'அவசர' ராம்ஜி

    35. ஒரு தரம், ரெண்டு தரம், மூணு தரம்

    36. ஸ்கூலுக்குப் போன பெரிய ஆளு

    என்னுரை

    ஒவ்வொரு வாரமும் லட்சக்கணக்கான வாசகர்களால் படிக்கப்படும் இப்பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதுவதை நான் மிகப் பெரும் பாக்கியமாகக் கருதி, வாய்ப்பளிக்கும் உன்னத ரசிகரும், பண்பாளருமான ஆசிரியர். திரு கே.எஸ். ராமகிருஷ்ணனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஓயாத பணிகளுக்கிடையே சிறிதும் சலிப்பின்றி ஒவ்வொரு வாரமும் அற்புதமான கேலிச் சித்திரங்களை வரைந்து கட்டுரைகளை மிளிர வைக்கும் திரு 'நடனம்' அவர்களுக்கு என் நன்றிகள்.

    கட்டுரைகளைப் படித்த கையோடு என் எழுத்தைப் பாராட்டி, விமர்சித்து உற்சாகமூட்டும் வாசக நண்பர்களுக்கு என் நன்றிகள் உரித்தாகும்.

    இதுவரை வெளிவந்த 72 கட்டுரைகளும், நிதி அமைச்சர் விதிக்கும் கசப்பான வரிகளைப் போல் அச்சுறுத்தாமல், படிப்பவர்களின் மன இறுக்கங்களை ஓரளவு தளர்த்தி சிரிக்க வைப்பதில் வெற்றி பெற்றன என்று கருதப்பட்டால், அதற்கு என்னை ஊக்குவிக்கும் திரு. ராமகிருஷ்ணன் அவர்களும், பேனா கையில் கனக்காமல் எழுத பயிற்சி அளிக்கும் என் மானசீக ஆசான்களான பி.ஜி. உட்ஹவுஸ், தேவன், கல்கி, மற்றும் தி. ஜானகிராமன் அவர்களும், வாரா வாரம் என்னுடைய கற்பனைக் குதிரையை லாயத்திலேயே முடங்கி இருக்காமல் வானத்தில் பறக்க அருள் புரியும் எல்லாம் வல்ல இறைவனுமே காரணம் என்று நான் கருதுகிறேன்.

    ஜே.எஸ். ராகவன்.

    *****

    1. மாம்பழம் டைம்ஸ்!

    மல்கோவா, அல்போன்ஸா, பங்கனபள்ளி, சிந்தூரா, கிளிமூக்கு, நீலம், சேலம் என்று விதவிதமாக மாம்பழங்கள் கிடைப்பது போல அக்கனிகளை விரும்பிப் புசிக்கும் மாந்தர்களின் அணுகுமுறையும் அவர்தம் குணாதிசயங்களைப் பொறுத்து வேறுபடுகிறது என்ற முன்னுரையுடன் தொடங்கி அவ்வகையான அணுகுமுறைகளைப் பற்றிய சிறு துண்டங்களை (அதாவது குறிப்புகளை) இங்கே சமர்ப்பிக்கிறேன்.

    (எச்சரிக்கை: மருத்துவர்களால் 'மாம்பழம் சாப்பிடக் கூடாது' என்று கடுமையாக எச்சரிக்கப் பட்டவர்கள் அந்த அபாக்கியத்தைப் பெறாத மாம்பழதாசர்களின் வயிற்று வலிக்குப் பாத்திரமாகாது இருக்க வேண்டி இக்கட்டுரையை மேலே படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்).

    வல்லினம்: முழுசான, புஷ்டியான ஒரு மாம்பழத்தைப் பார்த்த உடனேயே இவ்வெறியர்கள் 'காய்ந்த மாடு கம்பில் விழுந்தது போல' என்ற பழமொழிக்கு ஒப்ப அப்பழத்தின் மேல் பாய்ந்து, இடம், பொருள், ஏவல் என்று பாராமல் அதனைப் புசிக்க ஆரம்பித்து விடுவார்கள். கத்தி, அரிவாள்மணை போன்ற கருவிகளை அறவே புறக்கணித்து, பழத்தின் மீது தெருப்புழுதி, வைக்கோல் துண்டுகள், கிருமிகள் போன்றவை படர்ந்திருக்குமே என்ற எண்ணம் கிஞ்சித்துமின்றி, அருகில் கூடைகூடையாக ஓசியில் வந்த பழங்கள் கும்மென்று வாசனையைப் பரப்பிக்கொண்டு இருந்தாலும் கையில் உள்ளதை யாரோ வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு விடுவார்களோ என்ற லோபியின் அச்சத்துடன் பழத்தின் வடகிழக்கு மூலையில் முதற்கண்ணாக வெடுக்கென்று ஒரு பெரிய்ய கடி கடித்து விடுவார்கள்.

    பழம் காயாக இருந்தாலும் சரி, பழமாக இருந்தாலும் சரி, இனிப்பாயிருந்தாலும் சரி, புளிப்பாயிருந்தாலும் சரி, நாராக இருந்தாலும் சரி, சீராக இருந்தாலும் சரி, அவசர அவசரமாக அடுத்த கடிகளுக்குத் தாவுவார்கள். பழத்தின் 'கிண்'ணென்ற பருத்த தன்மை ஓரளவு தளர்ந்த பின், ஸ்லீப்பரில் தூங்கி எழுந்த ரயில் பயணி ஏர்-பில்லோவை அழுத்தி அழுத்திக் காற்றை வெளிக்கொண்டு வர முயற்சிப்பது போல், அப் பழத்தை அமுக்கி அமுக்கி தன்னுடைய மாம்பழப் பசியை ஒரு வித 'வில்லன்' தனத்துடன் தீர்த்துக்கொண்ட பின் மிஞ்சிய கொட்டையை வெறுப்புடன் தூர எறிந்து விட்டு அடுத்த பழத்துக்குத் தாவுவர். இவரது சட்டை, வேட்டி, கை, வாய், மூக்கு, தாடை, முடி போன்றவை மேல் படர்ந்த பொன் மஞ்சள் நிற மாம்பழச்சாறு அவர் மேல் ஈக்களை கோஷ்டியாகப் படையெடுக்க வைத்தாலும் அவரது சிந்தனை மேற்கூறிய ஈக்களைப் போலவே விடாது மாம்பழங்களைச் சுற்றி சுற்றிப் பறந்திருக்கும்.

    மெல்லினம்: ரசனையில் மூர்க்கத்தனத்தை வெறுக்கும் இக்குண சீலர்கள் முழுப்பழத்தை வல்லினம் வில்லன்கள் போல அப்படியே புசிக்காமல் வண்டு துளைத்த பழமோ என்று நன்கு ஆராய்ந்து தம் கைகளாலேயே நன்றாக நறுக்கிக் கொட்டை, கதுப்புகள் என்று பாகுபாடு செய்து கொள்வார்கள். தான் பெற்ற இன்பம் தன் நாயகியும் பெறுக என்ற நினைப்பில், தமக்குக் கிடைத்த பழம் மிகவும் ருசியாக அமைந்தால் தம் மனைவிக்கு அஃது கிட்டாமலே போய் விடக் கூடாதே என்ற பகிர்ந்துண்ணும் எண்ணத்துடன் இரண்டு கதுப்புகளையும் தமக்காகத் தக்க வைத்துக் கொண்டு நடுப்பகுதியை மனைவிக்காக அளித்து விடுவதால் மனைவியால் எப்போதும் பழம் விடப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகிறார். நறுக்கி வைக்கப்பட்ட இரண்டு கதுப்புக்களை சுவாரஸ்யத்துடன் கடித்துத் தோலியுடன் தின்றுவிட்டு வயிற்றுக்குள் மறைந்த அப்பழத்தின் நினைவு வண்டாக வட்டமிட தன் விரல்களை நாவினால் நெடு நேரம் சப்த ஜாலங்களுடன் நக்கிச் சுவைத்து தொடர்ந்து மகிழ்ச்சிக் கடலில் அமிழ்ந்து கிடப்பார்.

    நளினம்: மா, பலா, வாழை போன்ற முக்கனிகளில் முடி சூடிய ராணியான மாம்பழத்தை நளினமாக சுவைக்கும் இந்த ராஜா 'எதைச் சாப்பிட வேண்டும்' என்ற கோட்பாட்டிற்கு 'எப்படி சாப்பிட வேண்டும்' என்ற பரிமாணத்தையும் அளித்து தன் நாவிற்குக் கடிவாளம் போடுவதே ரசனையின் உச்சத்திற்கு அழைத்துச் செல்வதற்குத்தான்.

    இவர் தமக்குப் பிடித்தமான மாம்பழங்களை அட்சய திருதியை கும்பலில் அவசர அவசரமாக அரைப் பவுன் வாங்கும் சராசரி குடும்பஸ்தரைப் போலன்றி ஆற அமர, சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல தராதரம் பார்த்துத் தேர்ந்தெடுத்து வீட்டில் சேர்த்த பின் அதைக் கையால் தீண்ட மாட்டார். இவர்தம் ரசனையைப் புரிந்து கொண்ட இல்லத்து வளைக்கரம் கணவர் தேர்ந்தெடுத்த பழத்தை செவ்வனே கழுவி, தோலைக் கருத்துடன் சீவி, அவர்தம் வாய் கொள்ளும் அளவில் சீரான துண்டுகளாக நறுக்கி அவைகளை ஒரு வெள்ளிக் கிண்ணியில் சேகரித்து குளிர்சாதனப் பெட்டியில் சிறிது நேரம் வைத்து விடுவார். பின்னர் கணவரின் குறிப்பறிந்து ராமாயண சபரியின் பக்தி முறையில் தேர்ந்தெடுக்கப் பட்ட சில சலவைக்கல் - மழ மழ சிவப்புத் துண்டுகளை அழகிய தட்டில் குவித்துக் கணவன் அருகே வைத்து விடுவார். உயர்ந்த ரக திராட்சை ரஸத்தை ஒவ்வொரு ஸிப்பாகப் பருகுவது போல இந்த ரசிகர் ஒவ்வொரு துண்டையும் விரல்களால் தொடாது ஸ்பூனாலோ அல்லது முள்கரண்டியாலோ நாசுக்காக எடுத்துத் துண்டு துண்டாக அணு அணுவாக உண்டு மகிழ்வார். இவர்தம் விரல்களிலோ, உதடுகளிலோ, உடைகளிலோ மாம்பழம் உண்டதற்கான தடயங்கள் சிறிதும் இரா!

    இவருடைய திருப்தி அடைந்த கம்பீரமான முகமே இவர் தரமான மாம்பழத்தை நளினமாக சுவைத்துச் சாப்பிட்டவர் என்று பறைசாற்றி விடுமேயாதலால், பிறர் கொள்ளிக் கண் படாதிருக்க, அக்கம்பீரத்தைக் குறைக்கும் முயற்சியாக அக்கனியை உண்ட கையோடு கொஞ்சம் காய்ச்சிய பசும் பாலையும் பருகிவிட்டு, தன் உள்ளம் மாம்பழம் போலக் கனிந்து இருப்பதோடு அல்லாமல் பால் போல வெளுத்து இருக்கும் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதுபோல பழமாகக் காட்சி அளிப்பார்.

    *****

    2. திருநாவுக்கு அடியவர்

    வெரிகுட்! ப்ளட் ப்ரெஷர், கொலஸ்ட்ரால் எல்லாம் கன்ட்ரோலிலே இருக்கே. மருந்துகளை ஒழுங்கா சாப்பிடறீங்க போலிருக்கே!

    எஸ் டாக்டர்

    டயட்?

    துளிக்கூட ஃபாலோ பண்ண முடியலே, டாக்டர்.

    ஐய்யய்யோ! அப்ப என்ன சாப்பிடறீங்க?

    விவரமா சொல்றேன். விடியற்காலை அஞ்சு மணிக்குக் கள்ளிச்சொட்டா கும்பகோணம் டிகிரி காப்பி, திக்கா இறக்கின முதல் டிகாஷனிலே, காய்ச்சின எருமைப் பாலைக் கலந்து தாராளமா சர்க்கரை போட்டுக் குடிச்சுடறது

    என்னது சர்க்கரை போட்டா? தினமுமா?

    ஆமாம். அப்புறம் ஏழு மணிக்கு செகன்ட் டோஸ். மொறமொறன்னு டோஸ்ட் பண்ணின பிரெட் ஸ்லைஸில் தாராளமா பழனி பஞ்சாமிர்தம் தடவி காப்பியோட ஒரு அடி அடிக்கிறது, பிரம்மானந்தமா இருக்கும்.

    என்னது?

    பஞ்சாமிர்தம் கிடைக்கலேன்னா பலாப்பழ ஜாம். ஒன்பது மணிக்கு பிரெக்ஃபாஸ்ட். நல்ல பசு நெய்விட்டுக் கிளறிய வெண்பொங்கல். அதோட சூடா ரெண்டு உளுந்து வடை. பக்க வாத்தியமா தேங்காய் கெட்டிச் சட்னி. கும்பகோணம் கொத்சு. மறந்துட்டேனே! இலையிலே முதலில் ஸ்வீட் போடணும்கிற சாஸ்திரத்திற்காக கோதுமை அல்வா, காசி அல்வா, காரட் அல்வா எது கிடைக்கிறதோ அது! அப்புறம் இந்த ஐட்டங்களெல்லாம் வயத்துக்குள்ளே வழுக்கிண்டு இறங்க சர்க்கரை போட்ட காப்பியோ, மசாலா டீயோ

    என்ன சார் இதெல்லாம்?

    "வெய்ட் டாக்டர். லஞ்ச் இரண்டு மணிக்குத்தான். ஆனால் பன்னிரெண்டு மணிக்கு 'நமநம’ன்னு பசி எடுக்கும். அப்போ இரண்டு கைமுறுக்கு - தேங்காய்

    Enjoying the preview?
    Page 1 of 1