Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ithu Crazy Kudumbam
Ithu Crazy Kudumbam
Ithu Crazy Kudumbam
Ebook107 pages1 hour

Ithu Crazy Kudumbam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அந்த அன்பு சகோதரர் கிரேஸி மோகன் அவர்களுக்கு, என்னுடைய சிரந்தாழ்ந்த அஞ்சலிகளைச் செலுத்துமுகமாகவே அவருடைய பாணியில் இந்த நாடகத்தை எழுதியிருக்கிறேன். கிரேஸியும் கிரேஸி படைத்த மாதுவும் இவ்வுலகிற்கு அளித்திருக்கும் சிரிப்பு என்ற கொடை அனந்தம். அதற்கு என்னுடைய நன்றியின் சிறிய வெளிப்பாடே இந்நாடகம்.

Languageதமிழ்
Release dateOct 1, 2022
ISBN6580111409068
Ithu Crazy Kudumbam

Read more from Sairenu Shankar

Related to Ithu Crazy Kudumbam

Related ebooks

Related categories

Reviews for Ithu Crazy Kudumbam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ithu Crazy Kudumbam - Sairenu Shankar

    http://www.pustaka.co.in

    இது க்ரேஸி குடும்பம்

    Ithu Crazy Kudumbam

    Author :

    சாய்ரேணு

    Sairenu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sairenu-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அந்த கிரேஸி நாட்கள்!

    காட்சி – 1

    காட்சி – 2

    காட்சி – 3

    காட்சி – 4

    காட்சி – 5

    காட்சி – 6

    காட்சி – 7

    காட்சி – 8

    காட்சி – 9

    காட்சி – 10

    காட்சி – 11

    காட்சி – 12

    நன்றி

    முன்னுரை

    மோகன் ரங்காச்சாரியிலிருந்து கிரேஸி மோகன் வரையிலான பரிணாம வளர்ச்சியைப் பக்கத்திலிருந்து பார்த்தது மட்டுமின்றி அப்பயணத்தில் பங்குபெற்றவன் என்ற முறையில் சில கருத்துக்களைப் பகிர்கிறேன்.

    எழுத்துலகில் பிரவேசிக்கும் முன்பாகவே மோகன் இருக்குமிடத்தில் சிரிப்புக்குப் பஞ்சமிராது. சரளமாக, contextual ஆன humour மூலம் அலை அலையாகச் சிரிப்பை வெளிப்படுத்திச் சுற்றியுள்ளவர்களின் கவலை மறக்கச் செய்யும் இயல்பினன் அவன்.

    எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் lateral ஆகப் பார்த்து அங்கே நகைச்சுவையைக் காண வல்லவன். அவனை முறையாக நாடகங்கள் எழுதத் தூண்டிய பெருமை எனக்குண்டு. கல்லூரி நாட்களில் ஆரம்பித்த நகைச்சுவை நாடகப் பயணம் விநாயகா அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட், கிரேஸி கிரியேஷன்ஸ் என்று பிரம்மாண்ட வளர்ச்சியைக் கண்டு சரித்திரம் படைத்தது.

    கவிதை, இலக்கிய ஆர்வம் வளர்த்து, குறுகிய காலத்தில் மரபுக் கவிதைகளை, குறிப்பாக வெண்பாக்கள் இயற்றுவதில், தன் அசாத்தியத் திறமையைக் காட்டியவன்.

    ஓவியந்தீட்டுதல், அதிலும் குறிப்பாக கணிணி ஓவியங்களை வரைவதில் உயர்ந்த நிலையை எட்டியவன். மோகனின் நகைச்சுவையில் இரட்டை அர்த்தங்களோ, ஆபாசமான வசனங்களோ, எவரையும் புண்படுத்தும் வார்த்தைகளோ இருக்காது. ‘காம நெடியில்லாத காமெடி!’ கிரேஸியின் விடாத சிரிப்பு, யாரையும் சுடாத நெருப்பு.

    ஸ்ரீமதி சாய்ரேணு, கிரேஸியின் பரம ரசிகை. அவனுடைய எல்லா நாடகங்களின் வசனங்களையும் மனப்பாடமாகச் சொல்லக் கூடியவள்.

    கலைஞனுக்கும் ரசிகனுக்கும் இருக்கும் இணைப்பு கடவுளுக்கும் பக்தனுக்கும் உள்ளது போன்றது. ஒருவரைவிட்டு ஒருவர் இருக்க முடியாது.

    இன்று கலைஞனே கடவுளாகி விட்டான். அவன் நினைவில் ஆழ்ந்த ரசிகையோ, பக்தையாகி அவனுக்குத் தன் அஞ்சலியைச் செலுத்துகிறாள்!

    சு. ரவி

    அந்த கிரேஸி நாட்கள்!

    நெரித்துப் பிடிக்கும் நிலையிலும் வாழ்வில்

    சிரித்திட உண்டு சிறப்பே – சிரிநீ

    மறைந்திடும் துன்பம் மகிழ்வுதரும் கிரேஸி

    இறைவர்க்கும் கூட இனிது.

    வெண்பற்கள் சிரிக்கச் செய்யும் நயத்தகு நகைச்சுவையாளர் மட்டுமின்றி, வெண்பாக்கள் சிறக்கத் தந்த வித்தகக் கவிஞருமான ஸ்ரீ கிரேஸி மோகன் அவர்களுக்கு என் சிரந்தாழ்ந்த அஞ்சலிகள்.

    பல ஆண்டுகளாகவே எங்கள் குடும்பத்தில், இன்னும் பல குடும்பங்களில் உள்ளதுபோல, நகைச்சுவை என்ற வார்த்தையின் பொருள் கிரேஸிதான். சிரிப்பு என்றாலே கிரேஸி. நகைச்சுவை என்றாலே கிரேஸி. ஷெல்லி சொன்னாரே, அந்த harmonious madness. சற்றே மிகையிட்ட மென்னகை. குழந்தை முதல் கோவிந்தன் வரை ரசிக்கும் நகையாரம், சுவை வாசகம்!

    நம்மை மறந்து சிரிக்கக் கற்றுத் தந்தவர் மட்டுமல்ல, நம்மை நினைத்துச் சிரிக்கவும் கற்றுத் தந்தவர் திரு கிரேஸி மோகன் அண்ணா. பெரும் யோகிகளும் மகான்களும் உபதேசித்த ஆன்மீகத் தத்துவங்களை வேடிக்கையாகப் போதித்துவிட்ட ஒரு வியப்பான வியக்தி அவர்.

    எங்கள் தலைமுறையைச் சேர்ந்த பல குழந்தைகளைப் போன்று என் குழந்தைப் பருவமும் கிரேஸி கிரியேஷன்ஸ் நாடகங்களைக் காஸெட்டில் கேட்டுத்தான் கழிந்தது. அந்த நாளில் எங்கள் வீட்டுக் குழந்தைகள் நான் உட்பட, கிரேஸி காஸெட்ஸ் ஒலிக்கவில்லையெனில் சாப்பிடக்கூட மாட்டோம்.

    Growing up with Crazy had this impact, We kept our childish innocence and joys intact.

    திரு கிரேஸி மோகனின் எழுத்தின் சக்தியைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், நம்முள் இருக்கும் குழந்தையைத் (inner child) தன் நகைச்சுவையால் தட்டியெழுப்பிவிடும் ஆற்றல் கொண்டவர். அந்தக் குழந்தையுள்ளம் தான் நம்முளே இறைவன் வாழுகின்ற ஆலயம். வருத்தம் தொடாத, யாரையும் வருத்த எண்ணாத வாய்விட்ட சிரிப்புத்தான் அந்த இறைவனுக்கு நாம் புரிகின்ற சிறந்த வழிபாடு.

    வீடியோ காஸெட்கள் காலம் வந்தது. ஒருநாள் வீடியோ டெக்கும் மேடை நாடக ரெகார்டிங் கொண்ட ஒரு வீடியோ காஸட்டும் ஹையர் பண்ணிக்கொண்டு வந்தார் என் அப்பா. மொஃபஸலில் வளர்ந்த எங்களுக்கு மேடை நாடகம் என்றால் என்ன என்றே தெரியாது. தினேஷ் கணேஷ் ஸீரியலில் காத்தாடி இராமமூர்த்தியும், டெல்லி கணேஷும் நடிக்கும் நாடகம் என்று சொன்னதால் பார்த்தோம். அது நடைபெற்றது சிங்கப்பூரில். நடிகர் திரு ஜெய்சங்கர் அவர்களும் அந்த நாடகத்தில் நடித்திருந்தார். கதை - வசனம், கிரேஸி மோகன் அண்ணா.

    Comedy of errors என்ற அந்த நாடகத்தை அதன்பின் எத்தனை தடவை பார்த்திருப்போம் என்று எண்ணிவிட முடியாது. அதற்காகவே என் அப்பா அலைந்து திரிந்து வீசீஆர் வாங்கினார். (அந்தக் காலத்தில் வீசீஆர் வாங்குவதென்றால் பேப்பர் பார்ப்பது என்று ஒன்று உண்டு. என்னமோ இன்கம்டாக்ஸ்காரர்கள் மாதிரிக் கண்ணில் விளக்கெண்ணெயை விட்டுக்கொண்டு பார்க்க வேண்டும். வரன்கூட அமைந்துவிடும், வீசீஆர் லேசில் அமையாது! என் அப்பாவுடன் பெண்பார்க்கப் பல இடங்களுக்குப் போனதெல்லாம் சுவாரசியமான ஞாபகங்கள்!)

    அந்த நாடகத்தின் உயிரோட்டமான வசனங்கள் இன்னும் பசுமையாக மனத்திலே இருக்கின்றன. எனக்கு மிகவும் பிடித்தமான வசனம்.

    ருக்மணி, நம்ம செட்டியாரைப் பார்த்தா லூசு மாதிரியா தெரியறது?

    சேச்சே, பார்த்தா அப்படித் தெரியல

    Enjoying the preview?
    Page 1 of 1