Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naga Megalai
Naga Megalai
Naga Megalai
Ebook138 pages53 minutes

Naga Megalai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த அநீதியின் காரணமாக, இந்த மனையில் நாராயணிக் குட்டி என்ற பெண் யக்ஷியாக மாறுகிறாள். நாற்பது ஆண்டுகளுக்குப் பின் சென்னங்கோட்டு மனையில் புனர்ஜனிக்கிறது யக்ஷி. இவையெல்லாம் பழங்கதைகள் தானே? கற்பனை வரலாறுகள் அன்றோ? இந்த 2021ல் யக்ஷியாவது ஒன்றாவது? ஆனால் யக்ஷியின் அட்டகாசங்கள் சென்னங்கோட்டு மனையில் மறுபடி ஆரம்பித்துவிட்டது. அதை நிறுத்த வேண்டுமெனில் நாக மேகலையைக் கண்டுபிடித்தாக வேண்டும். வந்து சீக்கிரம் நாக மேகலையைக் கண்டுபிடித்துத் தொலையுங்கள், தர்மா, தன்யா, தர்ஷினி! யக்ஷி அதற்குள் மனையின் ஆண் வாரிசுகளைத் தீர்த்துவிடப் போகிறது! இருக்கட்டும், யக்ஷி தர்ஷினி உருவத்தில் வருகிறதா என்ன?

Languageதமிழ்
Release dateMay 30, 2023
ISBN6580111409852
Naga Megalai

Read more from Sairenu Shankar

Related to Naga Megalai

Related ebooks

Reviews for Naga Megalai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naga Megalai - Sairenu Shankar

    A picture containing text, font, logo, graphics Description automatically generated

    http://www.pustaka.co.in

    நாக மேகலை

    Naga Megalai

    Author :

    சாய்ரேணு சங்கர்

    Sairenu Shankar

    For more book

    https://www.pustaka.co.in/home/author/sairenu-shankar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    சென்னங்கோட்டு மனை.

    நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த அநீதியின் காரணமாக, இந்த மனையில் நாராயணிக் குட்டி என்ற பெண் யக்ஷியாக மாறுகிறாள்.

    நாற்பது ஆண்டுகளுக்குப் பின் சென்னங்கோட்டு மனையில் புனர்ஜனிக்கிறது யக்ஷி.

    இவையெல்லாம் பழங்கதைகள்தானே? கற்பனை வரலாறுகள் அன்றோ? இந்த 2021-ல் யக்ஷியாவது ஒன்றாவது?

    ஆனால் யக்ஷியின் அட்டகாசங்கள் சென்னங்கோட்டு மனையில் மறுபடி ஆரம்பித்துவிட்டது. அதை நிறுத்த வேண்டுமெனில் நாக மேகலையைக் கண்டுபிடித்தாக வேண்டும்.

    வந்து சீக்கிரம் நாக மேகலையைக் கண்டுபிடித்துத் தொலையுங்கள், தர்மா, தன்யா, தர்ஷினி! யக்ஷி அதற்குள் மனையின் ஆண் வாரிசுகளைத் தீர்த்துவிடப் போகிறது!

    இருக்கட்டும், யக்ஷி தர்ஷினி உருவத்தில் வருகிறதா என்ன?

    1

    15-12-2020...

    சேகரா! சேகரா! என்று யாரோ உரத்த குரலில் கூப்பிடுவது கேட்டுக் கனவுகளிலிருந்து விழித்தார் சேகரன்.

    ஆராணு? என்றவாறே எழுந்தார். நழுவிய வேட்டியை இறுக்கிக்கொண்டார்.

    சேகரா! அவ பின்னையும் வந்நுடா என்று வெளியிலிருந்து குரல் அலறியது.

    சே! என்று கோபத்துடன் அறைக் கதவைத் திறந்தார் சேகரன். வெளியே நின்றுகொண்டிருந்த மூதாட்டியைக் கண்டதும் எந்தா, வலியம்மே! உறங்கியில்லே? என்றார் அலுப்புடன்.

    சேகரா! அவ வந்துட்டாடா! மறுபடியும் வந்துட்டாடா! வந்து பாருடா! என்று மூதாட்டி மலையாளத்தில் அலறினாள்.

    நான் வருவதற்குள் அவ மறைஞ்சுடுவா! உங்க சொப்பனத்தில் வருகிறவளையெல்லாம் நான் எப்படிப் பார்க்கறது நல்ல தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டதால் கோபத்தில் உறுமிக்கொண்டே அவளைத் தொடர்ந்தார் சேகரன்.

    வலியம்மையின் அறையை அடைந்தார்கள். ஜன்னல் வழியே பார்க்குமாறு கைகாட்டினாள். சேகரன் எட்டிப் பார்த்தார். அங்கே ஏதோ வெள்ளை ஒளி தெரிந்து அடுத்த விநாடி அதுவும் மறைந்தது. தோட்டத்திலிருந்த மின்சார விளக்குகளின் மங்கிய வெளிச்சமல்ல அவர் பார்த்தது. பளிரென்று மின்னல் வெட்டினாற்போல்... இங்கேயல்ல, அங்கே... மனைக்கருகில்...

    வலியம்மே! எங்கே இருக்கிறா அவ? எனக்கு ஒன்றும் தெரியலையே? ஏதோ வெளிச்சம்தான் தெரிந்தது என்றார் சேகரன் ஜன்னல் வழியே உற்றுப் பார்த்தவாறு.

    நல்லா பாரு, தெரியும் என்று பதில் வந்தது. அது வலியம்மையின் குரல் அல்ல என்பதைச் சேகரன் உணரவில்லை.

    எல்லாம் பார்த்தாச்சு. அங்கே ஒண்ணுமில்லை என்றவாறே திரும்பினார் சேகரன்.

    அங்கே இருக்கறதா சொன்னேனா, இங்கே இல்லை இருக்கு என்றது குரல்.

    சேகரன் விழித்தார். வலியம்மே! என்ன குரல் மாறியிருக்கு? என்பதற்குள் அறையில் மெல்லிய வெளிச்சம் படர்ந்தது. அதில் புகை போல் தெரிந்தாள் அவள்.

    நாராயணி குட்டி! என்று அலறினார் சேகரன். வலியம்மே! வலியம்மே! எங்கே போனீங்க! அவ வந்துட்டா! அவ வந்துட்டா! என்று கத்தினார். வலியம்மை வரவில்லை. ஏன், யாருமே வரவில்லை.

    மிதந்து மிதந்து அருகில் நெருங்கி வந்தாள் நாராயணி குட்டி.

    கையும் காலும் வலிப்பு வந்ததுபோல் வெட்டிக்கொள்ள, அங்கேயே மயங்கி விழுந்தார் சேகரன்.

    ***

    100 ஆண்டுகளுக்கு முன்னால்...

    எந்தா பணிக்கரே! சுகந்தன்னே? என்றவாறே உள்ளே நுழைந்த சுகுமாரன் நம்பூதிரியைக் கண்டதும் வெற்றிலைக் காவி உதடுகள் விரியச் சிரித்தார் பணிக்கர்.

    என்ன சுகம் திருமேனி? நீங்களெல்லாம் கவனிச்சாலல்லே எங்களுக்குச் சௌகரியம் எல்லாம் என்றார் பணிக்கர்.

    இருவரும் அமர்ந்தார்கள்.

    நான் விஷயத்துக்கு வந்துடறேன் பணிக்கரே என்றார் சுகுமாரன்.

    அதொண்ணும் தேவையில்லை. எல்லாம் கேள்விப்பட்டேன். நாராயணிக் குட்டி விஷயம்தானே?

    ஆமா பணிக்கரே! அவ தொல்லை தாங்க முடியலை. எப்பப் பார்த்தாலும் வந்து நின்னுடறா. வீட்டுக்கு, வேலைக்கு வரவங்களையெல்லாம் பயமுறுத்திடறா. அதனால் இப்போ ஒருத்தரும் வீட்டுக்கு வரதில்லை. எங்க யாரையும் அவ நெருங்க முடியாதபடி கொல்லங்கோடு நம்பூதிரி மந்திரிச்சுக் கொடுத்த கயிறுகளும் யந்திரமும் இருக்கறதால பயம் இல்லை. இருந்தாலும் இந்தத் தொல்லையை நிறுத்த ஏதாவது வழி பண்ணணும் என்றார் சுகுமாரன்.

    இந்தப் பணிக்கர் மாந்திரீகனில்லையே, வெறும் ஜோசியன்! என்னால் அவளை அடக்கல்லாம் முடியாது திருமேனி என்றார் பணிக்கர்.

    உமக்கு உம்முடைய பலம் தெரியாது, பணிக்கர்! ப்ரச்னத்தில் உருட்டும் சோழிகளை வைத்து இந்தப் பிரபஞ்சத்தில் எந்த ஆத்மாவோடும் பேசும் சக்தி உடையவராச்சே நீர்! அவளை ப்ரச்னத்தில் கண்டு பேசி அவளுக்கு என்ன வேண்டுமென்று கேளும்... ஏதாவது சாந்தி செய்யணும், பலி கொடுக்கணும்னா கொடுத்திடலாம். சாந்தமடையாத ஆத்மாக்கள் மனையைச் சுற்றி அலையறது நல்லதில்லையே... சுகுமாரன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவர் தம்பி சங்கரன் நம்பூதிரி வேகவேகமாக உள்ளே வந்தான்.

    அண்ணா! இன்று கிருஷ்ணன் கோயில் பூஜைக்காகச் சின்ன அண்ணா சேது போய்க் கொண்டிருக்கையில், பலத்த காற்றடிச்சு பூஜை சாமான்கள் எல்லாம் கொட்டிப் போச்சு... கோவிலை நெருங்கவும் முடியலை. எனக்குப் பயமா இருக்கண்ணா என்றான் பதட்டமாக.

    பார்த்தீங்களா பணிக்கர்! இது அவ வேலைதான் என்றார் சுகுமாரன் நம்பூதிரி.

    ம்! இதுக்கு ஒரு வழி பண்ணிடலாம். இந்த ஆவிங்களோட ஆட்டத்தையெல்லாம் நம்மால் அடக்க முடியாதா என்ன? ஆண் பிள்ளைகள் இல்லையா நாம? இந்தக் குட்டியால் நம்மை என்ன பண்ணிட முடியும்? கவலைப்படாம இல்லத்துக்குப் போங்க. நான் குளிச்சுப் பூஜை பண்ணிட்டு அங்கே வரேன் பணிக்கர் சொன்னதைக் கேட்டு நிம்மதியானார்கள் நம்பூதிரிகள்.

    சுகுமாரா - கிளம்பியவரை நிறுத்திய பணிக்கர் அங்கே வந்ததும் நான் மறுபடி ஸ்நானம் பண்ணணும். அதுக்கு ஏற்பாடுகள் எல்லாம் பண்ணி வெச்சுக்கோ என்றார்.

    கட்டாயம், பணிக்கர் என்று சொல்லி வெளியேறினார்கள் சுகுமாரனும் சங்கரனும்.

    ***

    05-01-2021...

    வாங்க, வாங்க! தர்மராஜ யுதிஷ்டிரரே! பீமார்ஜுனர்களைக் கூடவே கூட்டி வந்துட்டாப்ல இருக்கு என்று வேடிக்கையாகக் கூறியவாறே வரவேற்றான் பாலகோபாலன்.

    விட்டுட்டுக் கிளம்பணும்னுதான் பார்த்தேன், எங்கே முடியறது? ஸயாமீஸ் ட்வின்ஸ் மாதிரி கூடவே ஒட்டிக்கிட்டுக் கிளம்பிட்டாங்க என்று சிரித்தான் தர்மா.

    மூணுபேர் இருக்கோமே! ஸயாமீஸ் த்ரின்ஸ்னு சொல்லு என்றாள் தன்யா.

    டிபிகல் க்ரேஸி மோகன் வர்ட்ப்ளே! நீ பார்த்திருக்கியோ, விடாது சிரிப்பு ஸீரியல்? ஆவிங்களை வெச்சுக்கிட்டு என்ன காமெடி எழுதியிருக்கார் தெரியுமா? மேதாவிய்யா அந்த மனுஷன் என்றான் தர்மா.

    பாலகோபாலனுக்கு உடல் ஒருமுறை தூக்கிவாரிப் போட்டது. இவன் தற்செயலாகப் பேசுகிறானா, தெரிந்துகொண்டு ஆழம் பார்க்கிறானா என்று தர்மாவை உற்றுப் பார்த்தான். பிறகு தன்னைச் சமாளித்துக்கொண்டு சரி, வாங்க உள்ளே போகலாம் என்றான்.

    மலையாளிகளைப் போல யாருமே அழகாக வீடுகட்ட முடியாது. ரசிகனுங்க நீங்க எல்லோரும் என்றான் தர்மா வீட்டுக்குள் வந்ததும். மரத்தை இழைச்சு அருமையா கட்டியிருக்கீங்க.

    தாங்க் யூ. க்ரெடிட் கோஸ் டு மை அச்சன். ஆனா அவர்தான்... வா, அவரைக் காட்டறேன் என்றவாறே அற்புதமாக அலங்கரிக்கப்பட்டிருந்த ஹாலுக்கு அருகிலிருந்த ஒரு அறைக்கு அழைத்துப் போனான் பாலகோபாலன்.

    அங்கே ஒரு படுக்கையில் உயரமாகத் தலையணைகளிடப்பட்டு, பரிதாபமாகச் சாய்ந்திருந்தார் ஒரு பெரியவர். நமக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தாம்.

    இவர்தான் என் அச்சன். பெயர் சேகரன். தர்மாவுக்கு இவரை நன்றாகத் தெரியும்.

    Enjoying the preview?
    Page 1 of 1