Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Iniya Manathu Naadagam
Oru Iniya Manathu Naadagam
Oru Iniya Manathu Naadagam
Ebook86 pages36 minutes

Oru Iniya Manathu Naadagam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் ” பேசும் பலகைகள்” என்று வர்ணிக்கப்பட்ட “ஓயுஜா” போர்டுகள் மிகவும் பிரபலமானவை. இவை, ஆவிகளுடன் பேச வல்லவை என்று நம்பப்பட்டன. மதவாதிகள் இவற்றை சபிக்கப்பட்டவை என்றும், இவற்றை உபயோகித்தல் ஆவி உலகின் நியதியைக் கெடுத்து, ஆன்மாக்களை இவ்வுலகுக்கு அழைப்பது பயங்கரங்களை விளைவிக்கும் என்றும் கருதியதால் இப்பலகைகளின் உபயோகத்தை அங்கீகரிக்கவில்லை. இந்த அமானுஷ்ய நிகழ்வை அறிவியலாளர்களும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இருந்தாலும் ஒருசாரார், வாழ்வின் துக்கங்களை போக்க முன்னோர்களின் உதவியை நாடுவதில் தவறே இல்லை என்று நம்பினார்கள்.எது எப்படியோ, இந்தப் பலகை நம் கதாநாயகன் சபாவின் வாழ்வில் வந்து செய்த விஷயங்கள் மிக சுவாரஸ்யமானவை. படியுங்கள்..

Languageதமிழ்
Release dateApr 22, 2024
ISBN6580174111043
Oru Iniya Manathu Naadagam

Read more from Rajalakshmi

Related to Oru Iniya Manathu Naadagam

Related ebooks

Related categories

Reviews for Oru Iniya Manathu Naadagam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Iniya Manathu Naadagam - Rajalakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஒரு இனிய மனது நாடகம்

    Oru Iniya Manathu Naadagam

    Author:

    ரா. இராஜலட்சுமி

    Rajalakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajalakshmi

    பொருளடக்கம்

    காட்சி 1

    காட்சி 2

    காட்சி 3

    காட்சி 4

    காட்சி 5

    காட்சி 6

    காட்சி 7

    காட்சி 8

    காட்சி 9

    காட்சி 10

    காட்சி 11

    காட்சி 12

    அன்பு வாசக நட்புகளுக்கு,

    இது என்னுடைய மேடை நாடக எழுத்துப் பயணத்தின் முதல் படைப்பு என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பதிவு செய்கிறேன். இந்த நாடகம் - எதார்த்தம், நகைச்சுவை, உணர்வுப் பூர்வமான தருணங்கள் மற்றும் லேசான திகில் ஆகியவை கலந்து செய்த ஒரு கலவை.

    1880களில் அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் பேசும் பலகைகள் என்று வர்ணிக்கப்பட்ட ஓயுஜா போர்டுகள் மிகவும் பிரபலமாகின. இவை, ஆவிகளுடன் பேச வல்லவை என்று நம்பப்பட்டன. அப்போது முடிவடைந்திருந்த அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த பலரின் ஆன்மாக்களுடன், அவர்களுடைய உறவினர்கள் தொடர்புகொள்ள இந்தப் பலகைகளை உபயோகித்தனர். மதவாதிகள் இவற்றை சபிக்கப்பட்டவை என்றும், இவற்றை உபயோகித்தல் ஆவி உலகின் நியதியைக் கெடுத்து, ஆன்மாக்களை இவ்வுலகுக்கு அழைப்பது என்பதால் பயங்கரங்களை விளைவிக்கும் என்றும் கருதியதால் இப்பலகைகளின் உபயோகத்தை அங்கீகரிக்கவில்லை.

    பேசும் பலகைகள் பற்றிய அமானுஷ்ய தகவல்களை அறிவியலாளர்களும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இருந்தாலும் ஒருசாரார், வாழ்வின் துக்கங்களையும் துயர்களையும் சரி செய்ய, முன்னோர்களின் உதவியை நாடுவதில் தவறே இல்லை என்று நம்பினார்கள். எது எப்படியோ? இவை போன்ற விஷயங்கள் ஆங்காங்கு நடை பெறுவது நாம் அனைவரும் அறிந்ததுதானே!

    இது வெறும் கேளிக்கைகான முயற்சி மட்டுமே எந்த ஒரு குருட்டு நம்பிக்கையையும் ஆதரிக்கும் செய்கை அல்ல. இது முழுக்க முழுக்க ஆசிரியரின் கற்பனையே என்பதை இங்கு பதிவு செய்து, எனது புதிய படைப்பைத் தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

    ப்ரியமுடன்,

    இராஜலட்சுமி

    காட்சி 1

    இடம்: சபாவின் வீடு

    பாத்திரங்கள்: சபா, ஜனா, சபாவின் அம்மா காவேரி

    ***

    சபா சோபாவில் அமர்ந்து ஓடிடி யில் படம் பார்த் துக் கொண்டுஇருக்கிறான். அவன் அம்மா சமையல் அறையில். அப்போது அவன் நண்பன் ஜனா உள்ளே நுழைகிறான்.

    ஜனா: ஹாய் டா, சபா! என்ன படம் டா?

    சபா: ஏய், ஜனா, வாடா.ஆமா, என்னடா, ஒரு வாரமா ஆள் அட்ரஸே காணோம்? ஃபோன் கூட எடுக்கல?

    (இடையில் உள்ளேயிருந்து காவேரியின் குரல்)

    காவேரி: யாரு? ஜனாவா, வாப்பா.

    சபா: ஆமாம்மா, அவன் தான், சேர்த் து காபி கொண்டு வா! (சற்று தணிந்த குரலில்) எப்படியும் டூ பை த்ரீ தான் பண்ணுவா… கொஞ்சம் தண்டனை குறையும்.

    ஜனா: போடா, அம்மா காபிக்கு என்ன குறைச்சல்? உனக்கு வேண்டான்னா நானே குடிச்சிர்றேன்.

    சபா: அதை விடுடா? என்னாச் சு ஒரு வாரமா? அதைச் சொல்லு.

    ஜனா: அது பெரிய கதைடா...

    சபா: சொல்லு சொல்லு, என்ன கதை?

    ஜனா: சொன்னா நீ ஏதாச்சும் கலாய்ப்படா! விடு...

    சபா: அப்படி என்னடா விஷயம்? போஸ்டாபிஸ் கிளார்க்லிருந்து டக்குனு போஸ்ட் மாஸ்டர் ஆயிட்டியா?

    ஜனா: பத்தியா! இதுக்குத்தான் உன்ட சொல்றதில்லை...

    (காபி கோப்பைகளுடன் காவேரி வருகிறாள்.)

    காவேரி: என்கிட் ட சொல் லு ஜனா... அவன் கிடக்கான்... நானே, உன்னை ரெண்டு நாளா காணவே இல்லையேன்னு இவன் கிட்டக் கேட்டுட்டே இருந் தேன்.

    ஜனா: அம்மா, உங்க கிட்ட சொல் லாம இருப்பேனா? எங்க தாத் தா போன வருஷம் காலமானார் இல்லயா?

    சபா: அதுக்கு இப்ப ஒருவாரம் உக்காந்து ஃபீல் பண்ணியா?

    காவேரி: எலேய்,, நீ சும்மாரு, எதுல கிண்டல் பண்றதுன்னு இல்லயா உனக்கு? நீ சொல்லு ஜனா...

    ஜனா: தாத்தா, தன்னோட பூர்விக கிராமம் பத்தியும், அங்க அவரோட குலதெய்வம் பத்தியும் எப்போவோ எங்க அம்மாகிட்ட சொன்னாராம். அதை எங்க அம்மா மறந்து போயிட்டாங்க. ஆனா இந்த ஒரு வருஷமா வீட்டில மாறி மாறி பிரச்சனைகள், ஒருத்தர் மாத்தி ஒருத்தருக்கு உடம்பு சரி இல்லை. அதனால குடும்ப ஜோசியர் கிட்ட கேட்டோம். அவர் குல தெய்வ குத்தம் இருக்கு அந்த கோவிலுக்கு போய் விளக்கு போட்டு பொங்கல் வைத்து வேண்டிக் கொள் அதுதான் ஒரே வழி என்று சொல்லிவிட்டார். எங்க அப்பா சைட்ல எந்த சொந்தமும், தாத்தா பாட்டி தவிர எங்களுக்கு அதிகம் தெரியாது. அந்தக் காலத்திலேயே எல்லாம் விட்டு போச்சு. ஒரே ஒரு அத்தை - அவளும் குலதெய்வம் பத்தி ஒன்றும் தெரியாது என்று சொல்லிட்டா. அப்பதான் மாந்திரீகம் செய்து ஆன்மாவோடு பேசற ஒரு மந்திரவாதி பத்தி எங்க ஜோசியர் சொல்லி அவரைப் போய் பார்த்தோம்.

    சபா: ஆமாண்டா, ‘கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்கு ரெண்டு கொடுமை தலையை விரிச்சு அடிச்சான்’ என்கிற மாதிரி, ஒரு மூடநம்பிக்கை இன்னும் ஒன்றை ரெக்கமெண்ட் பண்ணுதா? விளங்கிடும்.

    ஜனா: டேய் மச்சான், எல்லாத்தையும் நீ ரொம்ப லொள்ளு பண்றடா.

    சபா: பின்ன

    Enjoying the preview?
    Page 1 of 1