Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannodu Kanpathellam!
Kannodu Kanpathellam!
Kannodu Kanpathellam!
Ebook108 pages47 minutes

Kannodu Kanpathellam!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பணக்கார குடும்பத்தில் எதார்த்தமாக நுழையும் ஒரு நபர்.... அந்த நபரால் குடும்பத்தில் நிகழும் பலவிதமான குழப்பங்கள். குழப்பங்களை தீர்க்க உதவும் ஒரு விபத்து. முடிவு சுபம். காதலுக்கு வயது தடையில்லை என்பதை மிக நேர்த்தியாக இடம் பெற வைத்திருக்கிறார் எழுத்தாளர். காட்சி ஓட்டங்கள், கதை நகரும் விதம் என ஒரு இனிய அனுபவத்தைத் தந்திருக்கிறார்.

நவீன இலக்கிய பாணியில் அமைந்த கதை.... மகிழ்ச்சியான முடிவு. மனநிறைவுடன் திருப்தியாக கடக்கும் பக்கங்கள்.... கண்ணோடு காண்பதெல்லாம்........ "நிஜமும் அல்ல பிரமையும் அல்ல"..

Languageதமிழ்
Release dateFeb 24, 2024
ISBN6580174110769
Kannodu Kanpathellam!

Read more from Rajalakshmi

Related to Kannodu Kanpathellam!

Related ebooks

Reviews for Kannodu Kanpathellam!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannodu Kanpathellam! - Rajalakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கண்ணோடு காண்பதெல்லாம்!

    Kannodu Kanpathellam!

    Author:

    ரா. இராஜலட்சுமி

    Rajalakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajalakshmi

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் – 11

    அத்தியாயம் – 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 1

    போகன் வில்லா பூக்களும், பிச்சிப்பூக்களும் பூத்துக் குலுங்கி வீட்டு வாசலுக்கு அலங்கார வளைவாகவும் தோரணங்களாகவும் அமைந்திருந்த, பாரஸ் மணி என்று பெயர் பலகை பொருத்தப்பட்டிருந்த அழகான குட்டி பங்களாவின் போர்டிகோவுக்குள் அந்த பவள சிவப்பு நிற எம்.ஜி. ஹெக்டர் கார் வெண்ணை போல வழுக்கி கொண்டு வந்து நின்றது. காருக்குள் இருந்து, இடது பக்க கதவை திறந்து கொண்டு ஐந்தரை அடி உயரமும் ஒடிசலான உடல்வாகும், ஸ்டெப் கட் செய்யப்பட்ட பொன்னிற கூந்தலும், இளஞ்சிவப்பு நிறத்தில் உயர்தர காட்டன் குர்த்தா மற்றும் வெளிர் நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டில் இறங்குகிறாள் மேகலா என்கிற டாக்டர் மணிமேகலை... காரின் டிரைவர் சீட்டில் இருந்து, ஆறடி உயரத்தில், வெளிர் நீல நிற லினன் அரைக்கை சட்டையும், பழுப்பு வெள்ளை நிற டெனிம் பேண்டும், வலது கையில் ரோலக்ஸ் வாட்ச்சும் அணிந்த அவள் கணவன் பாரஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் பரசுரம், ரேபான் கூலிங் கிளாஸை கழட்டியபடி இறங்குகிறான்.

    கார் வரும் சத்தம் கேட்டதும் வீட்டுக்குள் இருந்து, புஸூ புஸூ என்று பொன் நிறக்கேசமும் பளிங்கு கண்களும், போஷாக்கான வளர்ப்பினால் ஏற்பட்ட கொழுகொழு உடம்புடன் அழகான கோல்டன் ரெட்ரீவர் வகை நாய் ஒன்று உள்ளே இருந்து வாலை சுழற்றி ஆட்டியபடி வெளியே ஓடி வருகிறது... காரில் இருந்து இறங்கிய மேகலாவை முன் கால்களால் இடுப்பை சுற்றி அணைத்துக் கொண்டு வாலை வேகமாக ஆட்டுகிறது... ஹலோ ஹார்லி... எப்படி இருக்க?... குட் பாய்... குட் பாய்... என்று கொஞ்சியபடி, அதன் தலையை அன்புடன் தடவி கொடுக்கிறாள்... அடுத்தபடியாக, மறுபுறம் இருந்து இறங்கிய பாரசிடம் ஓடுகிறது... அவனும், ஹார்லி... ஹனி... மிஸ்டு யூ... குட்பாய்… என்று கொஞ்சி, ஹார்லியை கையில் தூக்கி நெஞ்சோடு அணைத்தபடி, வீட்டுக்குள் நுழைகிறான்...

    கார் வந்து நின்ற போர்டிகோவில் ஐந்து படிகள் ஏறியதும் இருந்த விஸ்தீரணமான வராண்டாவின் இரு புறங்களிலும் வேலைப்பாடு மிகுந்து கலை வண்ணத்தோடு இரண்டு கதவுகள் தென்பட்டன. இடதுபுறம் இருந்த அறை கதவின் வாசலில் டாக்டர் மணிமேகலை MD., DGO என்றும், வலப்புறம் இருந்த கதவின் அருகில் பரசுராம் MBA, பாரஸ் Advertising Inc, என்றும் காப்பர் நிறத்தில் கருப்பு எழுத்துக்களில் மிக நவீனமான மற்றும் அழகான நேம் பிளேட்டுகள் மாட்டப்பட்டிருந்தன. பார்வைக்கே அவை இரண்டும் இரண்டு ஆபீஸ் அறைகள் என்று தெரிந்தது. வராண்டாவின் மையத்தில், மரவேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட பிரம்மாண்டமான தேக்கு மரக்கதவில் இருபுறம் இரண்டு யானைகள் நீண்ட தந்தங்களுடன் தூக்கிய துதிக்கையில் வேலைப்பாடு மிகுந்த மணிகளை உயர்த்திப் பிடித்தபடி அமைக்கப்பட்டிருந்தன. திறந்திருக்கும் கதவுகள் மூடப்படுமானால், இரு யானைகளும் அருகருகே மணிகளை பிடித்தபடி நிற்பது போல கலைநயத்தோடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கதவு திறந்து மூடும் போது அந்த மணிகளில் இருந்து மிக இனிமையான நாதம் வெளிப்படும்படி அமைக்கப்பட்டிருந்தது. தேக்கு மர கதவின் இடது புறம் மற்றொரு அழகான பெயர் பலகையில் தேவசேனா கலிவரதன், எழுத்தாளர்" என்று பொறிக்கப்பட்டிருக்கிறது.

    கையில் ஹார்லியுடன் ஹாலின் உள்ளே நுழைந்த பாரஸ், ஹாலில் போடப்பட்டிருந்த ஆடம்பர சோபாவின் மேல் ஹார்லியை இறக்கி விட்டபடி, தேவா, எங்க இருக்க? வி ஆர் ஹோம் என்று குரல் கொடுக்கும் போதே, இங்கதான் இருக்கேன் என்று ஒரு மென்மையான குரல் ஹாலோடு இணைக்கப்பட்டிருந்த, பெரிய படுக்கை அறையிலிருந்து வருகிறது. இரண்டு வினாடிகளுக்குள், அறையிலிருந்து அடர் ஊதா நிறத்தில் அரக்கு நிற பார்டரில் மஸ்டர்ட் நிறத்தில் மாங்காய் டிசைன் போட்ட காட்டன் புடவை, அதற்கு மேட்ச்சான, கழுத்து வரை மூடி இருந்த ஹை- நெக் ரவிக்கை, காதிலும் மூக்கிலும், கழுத்தில் அணிந்திருந்த மெல்லிய சங்கிலியிலும், இடது கை மோதிர விரலிலும் சிறு சிறு ஒற்றை கல் சாலிட்டர் வைரம் பதித்த அணிகலன்கள், துல்லியமாக நறுக்கப்பட்டிருந்த நீண்ட புருவங்களுக்கு நடுவில் சற்று பெரிய சைஸ் அரக்கு நிற ஸ்டிக்கர் போட்டு, அழுத்தி வாரி தலையின் பின்புறம் மையமாக போட்டிருந்த கொண்டை இவற்றோடு, பிரமிக்க வைக்கும் எளிமையான அழகுடன், எழுதிக் கொண்டிருந்து எழுந்து வந்ததால், கையில் வைத்திருந்த வின்டேஜ் தங்க நிற பார்க்கர் பேனாவை (அவள் அப்பா கலிவரதன் பரிசாக தந்தது) மூடியபடி, முகத்தில் சிறு முறுவலோடு வெளியே வருகிறாள் பாரஸின் தங்கை தேவசேனா.

    பிராயணம் எல்லாம் வசதியா இருந்ததா? சித்தி சித்தப்பா எப்படி இருக்காங்க? கேட்ட தேவசேனாவுக்கு ஒரு புன்னகையை தலை அசைப்புடன் வழங்குகிறான் பாரஸ். அவன் பின்னாலேயே உள்ளே நுழைந்த மேகலா, தேவ சேனாவிடம், ஹர்ஷிதா வீட்டில இருக்காளா? அவளோட பிளைட் நேத்து டைம்க்கு வந்துச்சா, அந்த கிராமத்துல நெட்வொர்க் ரொம்ப மோசமா இருந்துச்சு... அதனால தான் அவ கூட பேச கூட முடியல. கொஞ்சம் ஆயாசமான குரலில் கேட்கிறாள். ஆமாம், பிளைட் நேரத்துக்கு வந்துருச்சு... நேத்து பூரா ஹர்ஷி வீட்டில தான் இருந்தா... நாள் பூரா தூங்கி தூங்கி எந்திரிச்சா... இப்போதான் அவ ஃப்ரெண்ட் யுக்தா வீட்டுக்கு, பெசன்ட் நகர் வரை போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போய்ருக்கா, மத்தியான சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துருவா என்று பதிலளிக்கிறாள் தேவ சேனா. ஓகே மா... நாங்க ரெண்டு பேரும் குளிச்சிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரோம் சொல்லியபடி மாடிப்படி நோக்கி நடக்கிறான் பாரஸ்... மேகலாவும் அவனைத் தொடர்ந்து போகிறாள்.

    ஹாலின் இடது ஓரத்தில், மாடிக்கு செல்லும் அலங்கார மாடிப்படி, ஒருபுறம் சுவற்றோடு ஒட்டி அமைக்கப்பட்டு, மறு புறம் தங்க நிறத்தில் கைப்பிடி வைத்தும் அமைக்கப்பட்டிருக்கிறது. மாடிப்படி ஒட்டி இருந்த சுவற்றில் நிறைய வண்ண புகைப்படங்கள் அழகாக பிரேம் செய்யப்பட்டு நேர்த்தியாக மாட்டப்பட்டிருந்தன. பல குடும்ப புகைப்படங்களுக்கு இடையில் நான்கு ஐந்து போர்ட்ரெயிட் வகை புகைப்படங்களில், மேகலா மற்றும் தேவசேனா இருவரின் முகச் சாயல் கொண்டிருந்த ஒரு அழகிய யுவதியின் படம் மாட்டப்பட்டிருக்கிறது.

    அவர்கள் இருவரும் மாடியில் இருந்த தங்கள் அறைக்கு போவதற்குள், தேவசேனா தன் அலைபேசியில் அவர்கள் மகள் ஹர்ஷிதாவை தொடர்பு கொண்டு பேசுவதற்குள், நாம் சுருக்கமாக அந்த குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்வோம். கலிவரதன், அம்பிகா தம்பதிகளின் மகனும்

    Enjoying the preview?
    Page 1 of 1