Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Panama? Pasama?
Panama? Pasama?
Panama? Pasama?
Ebook142 pages52 minutes

Panama? Pasama?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பணமா, பாசமா - காதல் கதைகளோடு வித்தியாசமான கதைகளை எழுதுவதற்கு அனுமதித்த என் பேனா, இம்முறை இந்த கதையை எழுதப் போகிறேன் என்று சொன்னதற்கு தயங்கியது. இக்கதையின் வீரியம் மன பாரத்தை சுமக்கும் எத்தனையோ உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்கும், அதோடு நடுத்தர வயதை கடந்து கொண்டிருக்கும் பலருக்கும் எச்சரிக்கை உணர்வை உணர்த்தும் என்று சொல்லி என் பேனாவிடம் அனுமதி பெற்றேன். இதயமுள்ள எவரையும் "நாளை நம் நிலை என்ன?" என்று இக்கதை யோசிக்க வைத்தால், அதுவே என் படைப்பின் நோக்கம் நிறைவேறிவிடும்.இக்கதையின் முடிவு உங்களை ஒரு நிமிடமாவது, கண்கலங்க வைத்தால் அது என் பேனாவிற்கு கிடைக்கும் ஆத்ம திருப்தியாக இருக்கும். உங்கள் விமர்சனங்களை எதிர் நோக்கி.

- காஞ்சி. பாலச்சந்திரன்.

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580128604641
Panama? Pasama?

Read more from Kanchi Balachandran

Related to Panama? Pasama?

Related ebooks

Reviews for Panama? Pasama?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Panama? Pasama? - Kanchi Balachandran

    http://www.pustaka.co.in

    பணமா? பாசமா?

    Panama? Pasama?

    Author:

    காஞ்சி பாலச்சந்திரன்

    Kanchi Balachandran

    For more books

    http://pustaka.co.in/home/author/kanchi-balachandran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    என்னுரை

    பணமா! பாசமா என்ற முழு நாவல் மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

    காதல் கதைகளோடு வித்தியாசமான கதைகளை எழுதுவதற்கு அனுமதித்த என் பேனா இம்முறை இந்த கதையை எழுதப் போகிறேன் என்று சொன்னதற்கு தயங்கியது. இக் கதைகளின் வீரியம் மன பாரத்தை சுமக்கும் எத்தனையோ உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்கும்.

    இதயமுள்ள எவரையும் நாளை நம் நிலை என்ன என்ற இந்த கதை யோசிக்க வைக்கும்.

    இந்த கதை குடும்ப சூழ்நிலைகளைச் சுற்றியே பின்னப்பட்டிருக்கின்றன.

    இக்கதை முடிவு உங்களை ஒரு நிமிடமாவது யோசிக்க கண் கலங்க வைத்தால் அது என் பேனாவிற்கு கிடைக்கும் ஆத்ம திருப்தியாக இருக்கும்.

    என்றும் அன்புடன்

    காஞ்சி பாலச்சந்திரன்

    அணிந்துரை

    எண்ணமும் எழுத்தும் கவிதை கட்டுரை நாடகம் நாவல், குறு நாவல் சிறுகதை என்ற பல்வேறு வடிவம் கொள்ளும்.

    எதை எப்படிச் சொன்னால் அழகாக இருக்கும் எந்த வடிவத்தில் எதைச் சொன்னால் அற்புதமாக இருக்கும் என்று தீர்மானித்துக் கொள்வது தான் கவிதை

    கவிஞனையும், கட்டுரை உரைநடையானையும் நாடகம், நாடகாசிரியரையும் நாவல் நாவலாசிரியரையும் சிறுகதைகள் நண்பர் காஞ்சி பாலச்சந்திரனை போன்ற எழுத்தாளர்களை உருவாக்குகின்றன, உயர்த்துகின்றன.

    இந்நூலுள்ள நாவல் நடுத்தர மக்களின் உணர்வுக்கு வாழ்க்கை சூழலும் சம்பவங்களும் சரியாக சித்திரிக்கப்பட்டுள்ளன. குடும்பம் குடும்ப உறுப்பினர்களைச் சுற்றியே சம்பவங்கள் என்பதால் அதீதான கற்பனைக்க வழியில்லை.

    அன்றாடம் நம் கண்ணெதிரே நடக்கிற காட்சிகளின் கோர்வையாகவே இக்கதைகள் காணப்படுகின்றன. இன்னும் சொல்லப் போனால் நம் வீட்டில் நிகழ்வனவாகவும் நாமே பாத்தரங்களாகவும் நம்மை உணரச் செய்கிற எதார்த்தம் இக்கதைகளில் சிறப்பாகும்.

    பணமா! பாசமா! நாவல்கள் படிக்கும் போது என் நெஞ்சமே கனத்தது. அணிந்துரையில் நான் இதை முழுவதும் குறிப்பிட மனசில்லை. ஏன் என்றால் நீங்கள் வாசிக்கும் போது மட்டுமே அதன் அருமையை உணர முடியும். -

    படிக்க எளிதாக புரிந்துக் கொள்ள இலகுவாக நம் மனத்தில் இடம் பிடிக்கிற நல்ல தொகுதி. இத்தொகுதியில் பாலச்சந்திரன் அமோக வெற்றி பெற்றிருக்கிறார். வெற்றி பெறும் வித்தகத்தை விரல்களில் வைத்திருக்கிற இந்த வரைந்த எழுத்தாளரை வானளவு வாழ்த்தகிறேன்.

    இவர் இன்னும் நிறையவே எழுதவும் புகழில் இமயம் தொடவும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    என்றும் அன்புடன்

    எம்.கே.சுப்பிரமணியம், எழுத்தாளர்.

    1

    அழகான, அமைதியான முதியோர் இல்லம் இனம் உறவுகள் இழந்து நிற்பவர்களுக்கு ஆதரவாக, முதியோர் இல்லங்கள் துவங்கப்படுகின்றன.

    அங்கே உறவுகள் பூக்கிறது.

    பரந்து விரிந்துக் கிடந்த இந்த இல்லத்தைப் பார்க்கும்போது இலவசமாக செயல்படுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

    கோயம்புத்தூர் அவினாசி ரோடில் உள்ளடக்கிய அந்த இடம் மிகவும் ரம்மியமாகவே இருந்தது.

    இயற்கையானச் சூழலில் நல்ல காற்றோட்டமாகவும் அமைந்திருந்தது.

    நடைப்ப யிற்சி செல்வதற்கான தனி பாதை வயதான இளைஞர்கள் விளையாட டென்னீஸ் கோர்ட், நூலகம், மருத்துவ வசதி, என சகல வசதிகளையும் உள்ளடக்கியிருந்தது.

    இருவர் தங்கும் அறை மூன்று அல்லது நான்கு பேர் தங்கும் அறை, பொதுவான அறை என அவரவர் செலுத்தும் தொகைக்கு ஏற்ப அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

    ஜாதிகள் இல்லையடி பாப்பா, பாரதியார் எப்போதோ எழுதிய பாட்டு அது இங்கே கனகச்சிதமாகப் பொருந்தும்.

    உறவுகள் சொந்தங்கள் வாரிசுகள் எல்லா பந்தங்களும் ஒதுக்கி அல்லது ஒதுங்கி வந்து இங்கே தங்கியிருப்பவர்களுக்கு இங்கே இருப்பவர்கள் தான் சொந்தம் பந்தம்.

    சில வயதான தம்பதிங்களைப் பார்க்கும்போது ரொம்ப வசதிப் படைத்தவர்கள் போல் காணப்பட்டார்கள். அவர்கள் வாரிசுகள் வெளிநாட்டு வாசமாகத்தான் இருக்க வேண்டும். இவர்களும் உயர் பதவியிலிருந்து ஓய்வுப் பெற்றவர்களாக இருக்க வேண்டும். என்னயிருந்து என்ன பலன்! கொண்டு வந்து தள்ளி விட்டார்கள் அவர்களுக்கான மாதக்கட்டணம் நெட்பேக்கிங் வசதியில் இல்லத்திற்கு வந்து சேர்கிறது.

    இந்த இல்லத்திலிருந்து வாரம் ஒரு முறை கோயில்களைச் சுற்றிக் காண்பித்து கூட்டி வருவார்கள். இந்த ஒரே வசதிக்காகக் கந்தசஷ்டி மாமி கோகிலா இங்கு வந்துச் சேர்ந்தாள். அதோடு இங்கு இருப்பவர்களுக்கு ஆளுக்கொடு கந்தசஷ்டிப் புத்தகத்தை வாங்கிக் கொடுத்து விட்டாள். கந்தசஷ்டிப் படித்தால் பூச்சிகள் நெருங்காது, நோய் வராதுன்னு சொல்லி சொல்லியோ எல்லோர்க்கும் ஒரு சிறப்பை உண்டாக்கி விட்டாள்.

    கிச்சு சரியான புத்தகப் பைத்தியம். இவர் ஆர்வத்தைப் பார்த்த நிர்வாகி நூலகப் பொறுப்பை ஒப்படைத்து விட்டார். நூலகத்திற்குத் தேவையான வார மலர்கள், மாத நாவல்கள், ஆன்மீக இதழ்கள் என அள்ளி கொண்டு வைத்து விடுவார்.

    கந்தசஷ்டி கோகிலா, புத்தகம் பிரியர் கிச்சு இருவருமே எல்லோர்க்கும் மன அமைதியை ஏற்படுத்தி விட்டார்கள். ஆரம்பத்தில் புத்தகம் படிக்க விரும்பாத சச்சு அத்தைக் கூட இன்று படிப்பதில் முதல் வரிசையை எட்டிவிட்டாள்,

    இந்த இல்ல நிர்வாகி மிகவும் கெட்டிக்காரர். இங்கே வந்து சேர்ந்ததும், அவரவர்கள் பார்த்த தொழில்களை அனுபவங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்.

    வங்கி அதிகாரியாகயிருந்து ஓய்வுப் பெற்ற சுப்பாராமன், இங்கே வந்துச் சேர்ந்த பிறகு இல்ல கணக்குகளைப் பார்ப்பது, வங்கி லேவாதேவிகள் என எல்லாவற்றையும் மேற் கொண்டார். அவரவர்கள் வேலைக்கு ஏற்ப, மாதக்கட்டணத்தில் சலுகையும் வழங்கப்பட்டது.

    அதோடு இந்த இல்லத்தில் தங்கியிருப்பவர்களின் மனநிலையைத் துல்லியமாக கணக்கிடப்பட்டது.

    மாதக்கட்டணம் வசூலித்தோம்! மூன்று வேளை உணவுக் கொடுத்தோம் அவரவர் அறைகளில் போய் முடங்கிக் கிடங்கள் என்ற உத்தரவை அமுல்படுத்தவில்லை.

    எந்த ஒரு மனிதனுக்கும் பணிக்காலம் முடிந்து ஒய்வுப் பெற்று விட்டால் அன்றைய தினமே மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்படுகிறான். போதாக் குறைக்கு குடும்பப் பிரச்சனை வேறு. தனிமை அவனை உபசரிக்கத் தொடங்கி விடுகிறது. வாரிசுகள் மதிப்பதில்லை அவன் சொல்லை காதுக் கொடுத்துக் கேட்கவும் ஆளில்லை. ஓரம் கட்டப்படும் அவர்கள் இங்கே வந்துச் சேர்ந்ததும் அவரது நாடி சோதிக்கப்படுகிறது. இதுதான் இந்த இல்லத்தின் தாரக மந்திரம்.

    காலை யோகா வகுப்பு காலை உணவுக்கு முன், பஜனை கோரஸாக எல்லோரும் சேர்ந்து பாடுதல், கை தட்டிப் பாடும் போது இயற்கையான உடற்பயிற்ச்சி! இதனால் தேவையற்ற சிந்தனைகள் கவலைகள் ஒதுக்கப்படுகின்றன. புதிய சிந்தனைகள், புத்துணர்ச்சி ஏற்படுகின்றன.

    மாதந்தோறும் பணம் அனுப்புதல் ஆண்டுக்கொரு முறை வந்து பார்த்துச் செல்லுதல் அதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைக்கும் வாரிசுகள்.

    நோய் வாய்ப்பட்டாலோ அல்லது இறந்தாலோ என்ன செலவானலும் நான் கொடுத்து விடுகிறேன்.! நீங்களே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று நிர்வாகியை கேட்கும் பாசக் குழந்தைகளும் உண்டு.

    குழந்தைகள் நன்றாகப் படிக்கனும் தாங்கள் பட்ட கஷ்டம் எக்காரணத்தை கொண்டும் அவர்களுக்கு வர்றக்கூடாது என்று

    Enjoying the preview?
    Page 1 of 1