Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadavul Thantha Irumalargal
Kadavul Thantha Irumalargal
Kadavul Thantha Irumalargal
Ebook157 pages55 minutes

Kadavul Thantha Irumalargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த நாவலில் ஒரு மருத்துவரின் அலட்சியப் போக்கால் ஒரு காதல் ஜோடியின் வாழ்க்கையே தடம் புரண்டு விடுகிறது."பணம்" மருத்துவ துறையில் எப்படி விளையாடுகிறது, காதல் ஜோடியில் அந்த பெண்ணின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிறது. சுப்ரியா,சூரியபானு இருவருமே இந்த நாவலில் நாயகிகள். அவர்கள் எடுத்த முடிவு உங்களை வியப்பில் ஆழ்த்தும்.

"அபிஷேக்கிற்கு எற்பட்ட முடிவு, இது போன்ற நாவலோடு முடியட்டும். நிஜ வாழ்க்கையில் யாருக்கும் இந்த முடிவு எற்படக்கூடாது. இது உங்கள் விருப்பம் மட்டுமின்றி, என் விருப்பமும் அது தான். வழக்கமான என் நாவல்களில் எற்படும் விறுவிறுப்பு இதிலுமுண்டு. அதற்கு நான் உத்திரவாதம் தருகிறேன். படியுங்கள்,விமர்சனங்களை எதிர் நோக்கி...

- காஞ்சி. பாலச்சந்திரன்
kanchi.balachandran@gmail.com

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580128604643
Kadavul Thantha Irumalargal

Read more from Kanchi Balachandran

Related to Kadavul Thantha Irumalargal

Related ebooks

Reviews for Kadavul Thantha Irumalargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadavul Thantha Irumalargal - Kanchi Balachandran

    http://www.pustaka.co.in

    கடவுள் தந்த இருமலர்கள்

    Kadavul Thantha Irumalargal

    Author:

    காஞ்சி. பாலச்சந்திரன்

    Kanchi Balachandran

    For more books

    http://pustaka.co.in/home/author/kanchi-balachandran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    என்னைப் பற்றி!...

    கண்மணியை நேசிக்கும் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்.

    இந்த நாவலில் ஒரு டாக்டரின் அலட்சியப் போக்கால் ஒரு காதல் ஜோடியின் வாழ்க்கையே தடம் புரண்டு விடுகின்றது. ஆக அவரை மணக்கவிருந்த பெண்ணின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிறது.

    சுப்ரியா சூரியபானு இருவருமே இந்த நாவலின் நாயகிகள் அவர்கள் எடுத்த முடிவு உங்களை வியப்பில் ஆழ்த்தும்.

    அபிஷேக்கிற்கு ஏற்பட்ட முடிவு இதுபோன்ற நாவலோடு போகட்டும். நிஜ வாழ்க்கையில் யாருக்கும் ஏற்படக் கூடாது. இது உங்கள் விருப்பம் மட்டுமின்றி, என் விருப்பமும் அதுதான்.

    படியுங்கள்! வழக்கமான விமர்சனங்களை எழுதுங்கள். காத்திருக்கின்றேன்.

    நன்றி! வணக்கம்.

    காஞ்சி. பாலச்சந்திரன்

    1

    120 ஏக்கர் நிலப்பரப்பை விழுங்கி பிரமாண்டமாக எழுந்து நிற்கும் அந்த மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் எல்லாவற்றையும் உள்ளடக்கி நிறுவப்பட்டிருந்தது. வெளியிலிருந்து பார்ப்பதற்கு உள்ளே என்ன நடக்கின்றது என்று தெரியாத அளவுக்கு பெரிய மெயின் கேட்டுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    செக்யூரிட்டிகளுக்கு உத்தரவு வந்தால் மட்டுமே அந்த கதவுகள் திறக்கும். உள்ளே சுமார் 2 கிலோ மீட்டர் வரை வாகனங்கள் செல்ல பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. பாதைகளின் இரு பக்கங்களிலும் புல்வெளிகள் பச்சை பசேலென்று செடிகள் மரங்கள் பசுமையாக குவிந்து எல்லாமே அந்த இடத்திற்கு ரம்மியமான சூழ்நிலையை உருவாக்கியிருந்தது. வழியிலே ஒரு சின்ன கோயில் இதையெல்லாம் கடந்துச் சென்றால் பல அடுக்கு மாடிக் கட்டிடங்கள் மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தனித்தனி விடுதிகள், சிற்றுண்டி, உணவு கூடங்கள், நூலகம், நீச்சல் குளம் எல்லாம் அந்த நிலப்பரப்பில் அடங்கியிருந்தன. அந்த மருத்துவக்கல்லூரிக்கு சற்றே தள்ளி மருத்துவமனை இயங்கிக் கொண்டிருந்தது. புற நோயாளிகளுக்கு தனி வார்டு, உள் நோயாளிகளுக்கு படுக்கைகள், அறுவை சிகிச்சைக்கான அரங்கம் என பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

    இந்த மருத்துவமனை பாப்பம்மாள் டிரஸ்ட்டின் கீழ் இயங்கி வந்தது. இந்த டிரஸ்ட்டில் கோலப்பெருமாள் மற்றும் அவரது குடும்பத்தினர் உறுப்பினர்களாயிருந்தார்கள்.

    வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. எல்லாமே இவர்கள்வசம். டிரஸ்ட் பொறுப்புகள் இருந்ததால் அவர்கள் வைத்ததுதான் சட்டம், அவர்கள் கேட்கும் தொகை கொடுத்தால் தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை, மொத்தத்தில் அது கம்பீரமாக தனி ராஜாங்கமாக காட்சியளித்தது.

    கோலப்பெருமாள் இக்கல்லூரியின் பொறுப்பிலிருந்தாலும் மருத்துவத் துறையில் அனுபவப்பட்டவரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் மருத்துவர்களோ கிடையாது.

    இப்போதெல்லாம் எந்த துறையில் நிபுணராக இருக்கிறார்களோ அவர்களால் எல்லாம் கல்லூரி ஆரம்பிக்க முடியாது. பொறியாளராக இருந்தால் பொறியியல் கல்லூரி, மருத்துவராக இருந்தால் மருத்துவக் கல்லூரி, ஆசிரியராக இருந்தால் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி இவர்களை கொண்டு ஆரம்பித்தால் அந்தந்தக் கல்லூரிகள் வளப்படும். அவர்கள் அந்தந்தத் துறைகளில் நிபுணர்களாகயிருந்தாலும் அவர்கள் கோடிக் கணக்கில் முதலீடு செய்ய முடியாது. இவர்களிடம் படிப்புண்டு, பணமில்லை. கோலப்பெருமாள் குடும்பத்தினருக்கு படிப்பில்லை பணமுண்டு. இரண்டாவது வர்க்கம் தான் ஜெயிக்குது. அவர்கள் வசம்தான் இன்றைய கல்லூரிகள் எல்லாம். கல்வி மருத்துவ வல்லுனர்கள் எல்லாம் பணத்தாசைப் பிடித்த இந்த மனிதர்களிடம் வயிற்றுப் பிழைப்புக்கு பணி செய்ய வேண்டியுள்ளது. ஏதோ வீதிக்கு வீதி நிதி நிறுவனம் ஆரம்பித்தது போல் தற்போது இந்த கல்லூரிகளும் பெருகிவிட்டன.

    கோலப்பெருமாளின் பழைய கதையை கிளறக்கூடாது. தற்போது அவர் மருத்துவக்கல்லூரி சேர்மன். வெளிமாநில மாணவர்கள் எல்லாம் கோணிப்பைகளில் பணத்தைக் கட்டி கொண்டு வந்து இவரிடம் கொட்டி மெடிக்கல் சீட்டு வாங்கி வந்தனர். மெடிக்கல் சீட் பல லட்சங்களுக்கு ஏலம் போனது.

    கோலப்பெருமாள் இன்று தங்க முலாம் பூசப்பட்ட பிரேம் கண்ணாடி, வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி உடம்பிலே பார்வை படுமிடமெல்லாம் தங்க ஆபரணங்கள், அதோடு சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கார். அவர் வருவதற்கு முன்னர் அவர் சென்ற பிறகும் வீசும் சந்தன வாசம். எல்லாமே அவரை ஒரு மருத்துவ தாளாளராகக் காட்டியது.

    ஆரம்பத்தில் மலேரியா கொசு ஒழிப்பு அலுவலகத்தில் சாதாரண ஊழியராக இருந்த கோலப்பெருமாள், பிறகு சாராயம், லாட்டரிச் சீட்டு, வெளிநாட்டுப் பொருட்கள், தங்க பிஸ்கட் கடத்தி வந்து வியாபாரம் என்று தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். பின்னர் பாவங்களையெல்லாம் கை கழுவிவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலில் வளர்ச்சி அபரீதமான வளர்ச்சி, எல்லாம் சேர்ந்து இன்று மருத்துக்கல்லூரியின் நிறுவனராகிவிட்டார்.

    இந்த மருத்துவமனைக்கு டீனாக கோதண்டமூர்த்தி பொறுப்பேற்றார். அவர் சென்னை அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மருத்துவம் என்பது தன்னலமற்ற சேவை. அந்த மகத்தான சேவையை தன் வாழ்நாளில் செய்வதே பெரும் பாக்கியம் என்று கருதி அதிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஓய்வுக்கு பிறகு இந்த மருத்துவமனையில் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். என்னதான் தன்னலமற்ற சேவையாக மருத்துவத்தைக் கருதினாலும் இந்த மருத்துவமனையைப் பொறுத்தமட்டில் அவர் கைகள் கட்டப்பட்டிருந்தன.

    கோலப்பெருமாள் தன் அறையிலிருந்து அழைப்பு மணியை அழுத்தினார்.

    பியூன் உள்ளே அவர் முன்னால் நின்றான்.

    டீனை வரச்சொல்

    அடுத்த சில நிமிடங்களில் கோதண்டமூர்த்தி அவர் அறையில்,

    உட்காருங்க சார்!

    எதிரில் அமர்ந்தார்.

    சார் நம்ம கல்லூரிக்கு அடுத்த வாரம் டெல்லியிலிருந்து மெடிக்கல் போர்டு ஆய்வுக்கு வர்றாங்களாம். இப்போ நம்ம மருத்துவமனைக்கு நோயாளிகள் ரொம்ப குறைவாக வர்றாங்க. இதை நாம் உடனடியாக அதிகரிக்கணும், அப்போத்தான் மருத்துவமனை செயல்படுவதாக காண்பித்து நம்ம கல்லூரிக்கும் அட்மிஷன் ஆரம்பிக்க முடியும்!

    என்ன பண்ணணும் சார்?

    நீங்க ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக டாக்டர்களை வரச் சொல்லுங்க. இங்கே ஒரு மெடிக்கல் கேம்ப் நடத்திடலாம். இலவசமாய் நோயாளிகளுக்கு டிரீட்மென்ட் கொடுத்திடலாம். வர்ற டாக்டர்களுக்கும் பணத்தைக் கொடுத்திடலாம்.

    சார் நான் ஒரு ஆலோசனை கொடுக்கலாமா?

    சொல்லுங்க ஆய்வுக்கு வரும் போது மட்டும் நாம் இதை பின்பற்றாமல், நிரந்தரமாய் செய்தால் நல்லாயிருக்குமே

    என்னது! தினசரி இலவசமா? என்ன சார் சொல்றீங்க

    இல்லே! இல்லே! நான் அப்படிச் சொல்ல வரல. கட்டணம் செலுத்தி வைத்தியம் பார்க்கட்டும். அதை நான் தடுக்கல்லே! மருத்துவக்கல்லூரி விதிப்படி இலவசமாகவும் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கணும்.

    மிஸ்டர் கோதண்டமூர்த்தி! நீங்க அரசு ஆஸ்பத்திரியிலே வேலைப் பார்த்தீங்க! அதே நெனைப்பிலே இங்கேயும் சொல்றீங்க, இந்த கல்லூரிக்கட்டி அங்கீகாரம் வாங்க நான் எத்தனை கோடி செலவு செஞ்சிருக்கேன் தெரியுமா? என் நோக்கமே மருத்துவக்கல்லூரியில் மாணவர்களை அட்மிட் பண்ணி பெரும் தொகையை வசூல் செய்யணும். அப்போதான் நான் போட்ட முதல் எடுக்க முடியும். அதை விட்டு இலவசம் அது இதெல்லாம் சரிப்படாது! உங்க கொள்கை உங்களோடு இருக்கட்டும்

    வர்ற நோயாளிங்க வசதியில்லேன்னு குறைப்படுறாங்க

    என்ன வசதி வேணுமாம்! ஏ.சி. ரூம் போட்டு டி.வி. வசதி பண்ணி தரச் சொல்றாங்களா

    அதில்ல சார்! அடிப்படை மருத்துவ வசதி

    "என்ன சார் திரும்ப திரும்பச் சொன்னதையேச் சொல்றீங்க.

    Enjoying the preview?
    Page 1 of 1