Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Adayaril Innoru Aalamaram
Adayaril Innoru Aalamaram
Adayaril Innoru Aalamaram
Ebook321 pages2 hours

Adayaril Innoru Aalamaram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு நல்ல வாய்ப்பு எப்படி, எப்போது, யார் மூலம் வந்து சேரும் என்று சொல்ல முடியாது. இந்த நூலை நான் எழுதக் கிடைத்த வாய்ப்பு அப்படி வந்து சேர்ந்த ஒன்றுதான். சென்ற ஆண்டு (2013) மத்தியில் என் இனிய நண்பரும், சென்னை கம்பன் கழகப் பொருளாளரும், 'புதுகைத் தென்றல்' மாதஇதழ் ஆசிரியருமான திரு. மு. தருமராசன் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'சென்னை அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டிற்கு அமெரிக்காவிலிருந்து பெரும் ஆதரவு தருகின்ற குழுவைச் சேர்ந்த ஒரு முக்கிய உறுப்பினர் என்னுடன் பேசினார். அந்த இன்ஸ்டிடியூட்டின் வரலாறு ஒரு நூலாக வெளியிடப்பட வேண்டுமென அக்குழு விரும்புகிறது. நான் உங்கள் பெயரையும், தொலைபேசி எண்ணையும் அவரிடம் கொடுத்திருக்கிறேன். அவர் உங்களோடு தொடர்பு கொள்வார்' என்று தகவல் சொன்னார்.

அவர் தொடர்பு கொண்டார். விவரம் சொன்னார். என் மனதிற்கு மிகவும் பிடித்திருந்த அந்தப் பணியை நான் உடனே ஏற்றுக் கொண்டேன்.

இந்தியா வந்தபோது அவரும், தருமராசனும், நானும் சந்தித்தோம். விவாதித்தோம்.

அடையாறு புற்றுநோய் மருத்துவ மனையின் தோற்றமும், வளர்ச்சியும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் சாந்தா ஆகிய மூவரோடும் பின்னிப் பிணைந்த ஒன்று. எனவே நூலில் அவர்களைப் பற்றியும் பதிவுகள் இருக்க வேண்டும் என்று நான் கருதினேன். நாங்கள் மூவரும் டாக்டர் சாந்தா அவர்களைச் சென்று சந்தித்தோம்.

டாக்டர் சாந்தா அவர்களின் அறையில் இருந்தபோது ஒரு தெய்வ சன்னதியில் இருப்பது போல உணர்ந்தேன். இந்த நூலுக்காகப் பலமுறை டாக்டர் சாந்தா அவர்களைச் சந்தித்து உரையாடினேன். என் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் அளித்தார்.

‘தனி மனிதர்களைப் பற்றி எழுத வேண்டாம். இன்ஸ்டிடியூட் பற்றி மட்டும் எழுதுங்கள்' என்றார்.

'உங்கள் மூவரின் வாழ்க்கையும், கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் வரலாறும் தனித்தனியானவை அல்ல. எனவே அதன் வரலாற்றினை எழுதும்போது உங்களின் வாழ்க்கையும் தாமே பதிவாகித்தான் தீரும். அதைத் தவிர்க்க முடியாது. நீங்கள் மறுப்பு சொல்லவும் கூடாது' என்று வாதாடினேன். தயக்கத்துடன்தான் ஒப்புக் கொண்டார்.

இன்ஸ்டிடியூட் பற்றி ஏற்கனவே அச்சில் வெளியாகியிருந்த பல குறிப்புகளைக் கொடுத்தார். சில புத்தகங்கள், கையேடுகள், செய்தித்தாள்களில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தந்தார்.

தன் செயலாளர் திருமதி பிரியா கணேஷ் அவர்களின் மூலம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவ நிபுணர்களில் சிலர், ஊழியர்களில் சிலர், தன்னார்வத் தொண்டர்களில் சிலர், பணி ஓய்வு பெற்றவர்களில் சிலர் என்று நான் சந்தித்துப் பேச ஒருங்கிணைத்துத் தந்தார். தேர்வுக்குத் தயாராகும் மாணவன் போல நான் அவர் தந்தவற்றைப் படித்துக் குறிப்பெடுத்தேன்.

அவர் ஒருங்கிணைத்துத் தந்தவர்களைச் சந்தித்துப் பேட்டி கண்டேன். மருத்துவமனையை, அங்கு நூற்றுக் கணக்கில் தினமும் வந்து போகும் நோயாளிகளை, அவர்கள் அணுகப்படும் விதத்தையெல்லாம் நேரில் பார்த்து உள் வாங்கிக் கொண்டேன். எல்லாம் எழுத்தாக மாறியதன் விளைவுதான் உங்கள் கையில் இருக்கும் இந்த நூல்.

இந்த நூலை எழுதுவதற்கு என் பெயரைப் பரிந்துரை செய்த நண்பர் புதுகை தருமராசன் அவர்களுக்கு என் முதல் நன்றி.

இந்த நூலை எழுதும் அருமையான வாய்ப்பை எனக்கு அளித்ததுடன், அமெரிக்காவிலிருந்து அவ்வப்போது என்னுடன் தொடர்பு கொண்டு ‘புத்தக வேலை எந்த அளவில் இருக்கிறது' என்று விசாரித்துத் தெரிந்து கொள்வதில் பேரார்வம் காட்டிய கேன்சர் இன்ஸ்டிடியூட் (டபிள்யூ.ஐ.ஏ) ஃபௌண்டேஷன் (யு.எஸ்.ஏ) அமைப்பைச் சேர்ந்தவர்கள், டாக்டர் சாந்தா அவர்களுடன் என் சந்திப்புகளை ஒருங்கிணைத்துத் தந்தும், புகைப்படங்களைச் சேகரித்துக் கொடுத்தும் உதவிய பிரியா கணேஷ், எனக்கு பேட்டி தந்து ஒத்துழைத்த பெருமக்கள் என்று அத்தனை பேரும் என் நன்றிக்குரியவர்கள். அனைத்திற்கும் மேலாக டாக்டர் சாந்தா அம்மையார் அவர்கள் தந்த அற்புதமான ஒத்துழைப்பிற்கு என் இதயபூர்வமான நன்றியும், கைகூப்பும்.

பக்கங்களை நேர்த்தியாக 'டைப்-ஸெட்' செய்து தந்த இனிய நண்பர் செல்வின் அவர்களுக்கும், இந்த நூலை உருவாக்கவும் அழகுற அச்சிட்டு வெளியிடவும் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என்றும் என் நன்றி.

இந்த நூலைப் படித்து எனக்கோ, டாக்டர் சாந்தா அம்மையார் அவர்களுக்கோ, எழுத்து மூலம் கருத்துரைக்க இருக்கும் உங்களுக்கு நன்றி தெரிவிக்காமல் இருப்பேனா? அட்வான்ஸ் நன்றி.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580143106884
Adayaril Innoru Aalamaram

Read more from Ranimaindhan

Related to Adayaril Innoru Aalamaram

Related ebooks

Reviews for Adayaril Innoru Aalamaram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Adayaril Innoru Aalamaram - Ranimaindhan

    https://www.pustaka.co.in

    அடையாறில் இன்னோர் ஆலமரம்

    Adayaril Innoru Aalamaram

    Author:

    ராணிமைந்தன்

    Ranimaindhan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ranimaindhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. விதை விழுந்தது

    2. முத்துலட்சுமி என்கிற முத்து

    3. இல்வாழ்க்கை

    4. முத்துலட்சுமி ரெட்டியின் சாதனை முகங்கள்

    5. வட்ட மேசை மாநாடு, அமெரிக்கா, இலங்கை பயணங்கள்

    6. அவ்வை இல்லம்

    7. புற்றுநோய் மருத்துவமனை - ஓர் அவசியத் தேவை

    8. அன்னையும் மகனும்

    9. அரசாங்கக் கல் சுவர்

    10. சற்றுப் பயனுள்ள பயணம்

    11. இரண்டு ஏக்கர் நிலத்துண்டு

    12. ஆரம்ப நாட்கள்

    13. மகப்பேறு மருத்துவத்திலிருந்து புற்றுநோய் மருத்துவத்திற்கு...

    14. என்னென்ன சோதனைகள்!

    15. இரண்டாவது பத்தாண்டு

    16. மத்திய அரசின் உயர் மட்டக் குழுவில்...

    17. நிலம் கிடைத்தது

    18. சின்னச் சின்ன வெற்றிகள்

    19. வருமான வரி அதிகாரிகள் நடத்திய விதம்

    20. மண்டல மையம்

    21. இந்தியாவின் முதல் லீனியர் ஆக்ஸிலரேட்டர்

    22. கூண்டோடு வெளியேற்றம்

    23. இருநாடு உறவு தந்த பரிசு

    24.  கல்விச் சேவை

    25. ஆராய்ச்சிதான் அச்சாணி

    26. புகையிலையோடு ஒரு போர்

    27. மீண்டு வந்தோரின் நினைவலைகள்

    28. ஆவணக் காப்பகம்

    29. தன்னார்வத் தொண்டர்களின் தன்னலமற்ற சேவை

    30. அகத்தின் அழகைக் காட்டும் முகங்கள்

    31. இன்னும் சில முகங்கள்

    32. அமெரிக்காவில் ஓர் உதவிக் கரம்

    33. அரை நூற்றாண்டு

    34. அறுபதாம் ஆண்டில் இன்று...

    அடையாறில் இன்னோர் ஆலமரம்

    சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின்

    தோற்றம் - வளர்ச்சி உள்ளிட்ட வரலாறு

    ராணிமைந்தன்

    அணிந்துரை

    திசை நோக்கித் தொழுகின்றேன்
    - சுகி.சிவம் -

    உலக வரலாறு என்பதே ஒரு சில தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை வரலாறுதான் என்றொரு வாசகம் நான் படித்ததுண்டு.

    அதுபோல புற்றுநோய்க்கு எதிரான அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் என்கிற புனித நிறுவனத்தின் வரலாறு என்பது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் சாந்தா என்கிற மும்மூர்த்திகளின் தியாக வரலாறுதான்.

    எத்தனை எத்தனை போராட்டங்கள்... எத்தனை எத்தனை தடைகள்... எல்லாவற்றையும் ஜெயித்த அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் வெற்றிப் புன்னகைதான் இந்தப் புத்தகம்.

    சொந்தத் துக்கங்களின் தாக்குதலால் உலகத் துக்கங்களை வெல்லப் புறப்படும் நல்லவர்கள் பட்டியலில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் இடம் பெறுகிறார்.தமது தங்கைக்கு நேர்ந்த மரணம் புற்றுநோயின் பரிசளிப்பு என்று கண்டதும் சமூகத்தில் எவருக்கு இந்த நோய் வந்தாலும் மருத்துவம் செய்ய தனி மருத்துவமனை தேவை என்று இதற்கான விதையிட்டார் அவர்.

    முதல் மருத்துவ மாணவி, முதல் பெண் மருத்துவர், முதல் சட்டமன்றப் பெண் உறுப்பினர் என்று பலப்பல 'முதல்'களின் சொந்தக்காரரான முத்துலட்சுமி ரெட்டியின் முழுமுதல் இந்த மருத்துவமனை.

    பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த வழி மருத்துவம் என்கிற நவீன கால சித்தாந்தம் தலை எடுக்குமுன் மருத்துவம் கடவுளின் மறுபணி என்ற மகத்துவம் நிறைந்த மாமனிதர்களின் ஆயுட்கால அறம் இந்த அடையாறு மருத்துவமனை.

    சபிக்கப்பட்ட, தீர்க்கப்பட முடியாத நோயாகக் கருதப்பட்ட புற்றுநோயை எதிர்க்கும் போர்ப்பணி இதன் இலட்சிய முழக்கம்.

    ஒரு காலத்தில் வந்த பல திரைப்படங்களிலும் கதாநாயகனுக்கோ கதாநாயகிக்கோ முடிவுகட்ட பயன்படுத்தப்பட்ட பயங்கர நோய் இந்தக் கேன்சர்தான்.

    இதனை மாற்றியமைக்கப் புகுந்த மருத்துவப் போராளிகள் மூவர் சந்தித்த சோதனைகள் புற்றுநோயைவிட வளமிக்கவை. புற்றுநோயை எதிர்த்து அவர்கள் போராடியதோடு புரையோடிப்போன அதிகார வியாதிகளோடு போராடியது அதிக வேதனை தருவது.

    ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் இந்தச் சீதை அக்னிப் பரிட்சைக்குள்ளாக வேண்டி இருந்தது.

    பெருந்தலைவர் காமராசர், பாரத ரத்னா சி.எஸ். பாபு இராஜேந்திர பிரஸாத், பண்டித ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் ஆதரவுக் கரம் நீட்டினாலும், கை நீட்டும் அதிகார வர்க்கத்தின் நசுக்குதலும் இவர்களுக்குப் பழகிப் போன விஷயம்.

    நோயாளி துயர் நீக்கும் ஒவ்வொரு கருவி உள்ளே வரும் போதும் அத்தனை சுலபத்தில் வந்துவிடவில்லை. மருத்துவர்களை மனம் கலங்க விட்டுத்தான் உள்ளே நுழைந்திருக்கிறது.

    ஜெர்மன் ஜனநாயகக் குடியரசின் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு, கனடா நாட்டு அணுசக்தித் துறை, ரெபலா லட்சுமி நாகரெட்டி போன்றோரின் கொடையுள்ளம், ஈர இதயம் கொடுத்த அன்புக் கொடைகள் இந்த ஆலமரத்தின் வேருக்கு விட்ட நீராகி மணம் வீசுகிறது.

    ஆபத்து நேர்ந்த போதெல்லாம் ஆளுநர் பட்வாரி போன்ற ஆபத்பாந்தவர்களையும் ஆண்டவனே அனுப்பி இருக்கிறார்.

    ஒரு தொடர் நாவல் படிக்கும் விறுவிறுப்பில் இதன் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ராணிமைந்தன் படம் பிடிக்கிறார். எடுத்தால் படித்து முடித்து விட்டுத்தான் புத்தகத்தைக் கீழே வைக்க முடியும்.

    பல இடங்களில் என் கண்கள் பனித்தன. இதையும் நான் பதிவு செய்தே ஆக வேண்டும்.

    அடிமேல் அடிவைத்து மருத்துவமனை நடக்கத் தொடங்கிய போது, அடிமேல் அடிவைத்து சோதனைகளும் வந்திருக்கின்றன.

    அலட்சியம், ஆணவம் என்று சிலர் ஆட்டிப்படைத்த போதும் இலட்சியம், தியாகம் என்று சிலர் கட்டிக்காத்து விட்டனர். இது அர்ப்பணிப்பின் வெற்றி.

    இந்திய அணுசக்தித் துறையின் டாக்டர் பாபா, ஸிம்ஸன் அதிபர் போன்றவர்கள் உற்றுழி உதவி மருத்துவமனைக்கு வைத்தியம் பார்த்திருக்கிறார்கள்.

    நோயிலிருந்து மட்டுமல்ல நோயாளியின் சகல துயரிலிருந்தும் மீட்டெடுக்க நிர்வாகம் நடத்திய முயற்சிகளை வரலாறு வணங்க வேண்டும்.

    பரிசோதனைக்கு வரும் நோயாளிகள் ரயில் கட்டணச் சலுகை பெற எத்தனை முயற்சிகள்... ரயில்வேயின் விசித்திர உத்தரவு. கடவுளே... படிக்கப் படிக்க வியப்பு விரிகிறது.

    பொதுவாக ஆலமரம் ஆரம்பத்தில் வேரையும் பிற்காலத்தில் விழுதுகளையும் நம்பி வாழும் விசித்திர விருட்சம்.

    ஆனால் இது வித்தியாசமான விருட்சம். விழுதுகள் விரிந்தாலும் காலத்திற்குக் காலம் வேரையும் புதுப்பித்துப் பலப்படுத்தி நிற்கிறது.

    இப்போது இந்த விருட்சத்தின் வேர்... பூமியில் புதைந்து மறைத்துக் கொள்ளும் ஆணிவேர் டாக்டர் சாந்தா. பட்டங்கள், விருதுகள், பாராட்டுகள் எதனாலும் பாதிக்கப்படாத கம்பீரமான கர்மயோகி பெண் ரிஷி டாக்டர் சாந்தா.

    ஒரு மகப்பேறு மருத்துவராக வாழ்வைத் தொடங்கி ஒரு மருத்துவ மனையையே தம் மகளாகத் தத்தெடுத்துக் கொண்ட மகத்தான தாய் டாக்டர் சாந்தா. சர்ஜிகல் அஸிஸ்டென்டாக, நர்சாக, நிர்வாகியாக, இந்த மருத்துவ மனையில் இவர் பார்க்காத வேலையே இல்லை என்று ராணிமைந்தன் வர்ணிக்கும் இடத்தில் நான் ஸ்தம்பித்துப் போனேன்.

    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, டாக்டர் கிருஷ்ணமூர்த்தி கனவுகளை நனவாக்கும் இலட்சியப் பெண்மணிக்கு உலக நல்லவர்கள் சார்பில் உரக்க ஒரு வணக்கம் சொல்கிறேன். அவர் தம் பட்டங்கள், வெற்றிகள் முழுவதையும் தம் குழுவுக்கே சமர்ப்பணம் செய்கிறார்.

    அந்தக் குழுவினர்க்கு ஒரு சாஷ்டாங்கமான நமஸ்காரம்!

    டாக்டர் சாந்தா தம் நல்லொழுக்கத்திற்கும் தன்னலமற்ற பணிகளுக்கும் மூலகாரணமாகத் தாம் படித்த பள்ளியின் முதல்வரான ஐரிஷ் பெண்மணியை நன்றியுடன் நினைவு கூர்கிறார்.

    இனி வருங்காலத்தில் நூற்றுக்கணக்கான மருத்துவ ஊழியர்கள் டாக்டர் சாந்தாவை அவ்வாறே நினைவு கூர்வார்கள்.

    ஐடியலிஸ்ட், பர்ஃபெக்ஷனிஸ்ட் என்று அறியப்படும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஒரு பீரோவின் தலை மீது தூசி இருக்கிறதா என்று தன் கைகளால் தட்டிப் பார்க்கும் தூய்மை விரும்பி...

    அவரைப் போன்று ஆயிரம் ஆயிரம் தூய்மை விரும்பிகள் மருத்துவரானால் பாரதப் பிரதமரின் தூய்மை இந்தியா சில நாட்களில் நடைமுறைக்கு வரும்.

    அறுவைச் சிகிச்சை, கீமோதெரபி, ரேடியேஷன் என்கிற சிகிச்சைகளையும் தாண்டி அன்பு எனப்படும் அமுதச் சிகிச்சை வழங்கும் ஆலயமாக இந்த மருத்துவமனை விளங்கும்போது நோயாளியின் வலி நிச்சயம் குறையும்.

    பேப்பர் வெயிட்டுக்குப் பணம் செலவா? ஒரு மணல் மூட்டையைச் சின்னதாகக் கட்டிப் போடு என்கிற டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் சிக்கனத்தைப் பணம் கறக்கும் மருத்துவமனைகள் பின்பற்றி, நோயை விடக் கொடுமையான சிகிச்சைச் செலவு என்கிற வேதனையிலிருந்து நோயாளிகளை மீட்க இந்தப் புத்தகம் உதவினால் நான் கடவுளுக்கு நன்றி சொல்வேன்.

    இந்தியாவை நேசித்த பண்டித ஜவஹர்லால் நேரு இந்த மையம் அடைந்துள்ள வளர்ச்சி அசாதாரணமானது. வியப்புக்குரியது. நான் கட்டட வளர்ச்சியையோ விரிவாக்கத்தையோ சொல்லவில்லை. செங்கல் கலவை குறித்த வளர்ச்சியல்ல அது. பணியின் தரத்தையே நான் குறிப்பிடுகிறேன் என்று பாராட்டிய பிறகு வேறென்ன சொல்லி பாராட்டுவது!

    திசை நோக்கித் தொழுகின்றேன்.

    வணக்கம்

    ஒரு நல்ல வாய்ப்பு எப்படி, எப்போது, யார் மூலம் வந்து சேரும் என்று சொல்ல முடியாது. இந்த நூலை நான் எழுதக் கிடைத்த வாய்ப்பு அப்படி வந்து சேர்ந்த ஒன்றுதான்.

    சென்ற ஆண்டு (2013) மத்தியில் என் இனிய நண்பரும், சென்னை கம்பன் கழகப் பொருளாளரும், 'புதுகைத் தென்றல்' மாதஇதழ் ஆசிரியருமான திரு. மு. தருமராசன் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'சென்னை அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டிற்கு அமெரிக்காவிலிருந்து பெரும் ஆதரவு தருகின்ற குழுவைச் சேர்ந்த ஒரு முக்கிய உறுப்பினர் என்னுடன் பேசினார். அந்த இன்ஸ்டிடியூட்டின் வரலாறு ஒரு நூலாக வெளியிடப்பட வேண்டுமென அக்குழு விரும்புகிறது. நான் உங்கள் பெயரையும், தொலைபேசி எண்ணையும் அவரிடம் கொடுத்திருக்கிறேன். அவர் உங்களோடு தொடர்பு கொள்வார்' என்று தகவல் சொன்னார்.

    அவர் தொடர்பு கொண்டார். விவரம் சொன்னார். என் மனதிற்கு மிகவும் பிடித்திருந்த அந்தப் பணியை நான் உடனே ஏற்றுக் கொண்டேன்.

    இந்தியா வந்தபோது அவரும், தருமராசனும், நானும் சந்தித்தோம். விவாதித்தோம்.

    அடையாறு புற்றுநோய் மருத்துவ மனையின் தோற்றமும், வளர்ச்சியும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் சாந்தா ஆகிய மூவரோடும் பின்னிப் பிணைந்த ஒன்று. எனவே நூலில் அவர்களைப் பற்றியும் பதிவுகள் இருக்க வேண்டும் என்று நான் கருதினேன்.

    நாங்கள் மூவரும் டாக்டர் சாந்தா அவர்களைச் சென்று சந்தித்தோம்.

    டாக்டர் சாந்தா அவர்களின் அறையில் இருந்தபோது ஒரு தெய்வ சன்னதியில் இருப்பது போல உணர்ந்தேன்.

    இந்த நூலுக்காகப் பலமுறை டாக்டர் சாந்தா அவர்களைச் சந்தித்து உரையாடினேன். என் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் அளித்தார்.

    ‘தனி மனிதர்களைப் பற்றி எழுத வேண்டாம். இன்ஸ்டிடியூட் பற்றி மட்டும் எழுதுங்கள்' என்றார்.

    'உங்கள் மூவரின் வாழ்க்கையும், கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் வரலாறும் தனித்தனியானவை அல்ல. எனவே அதன் வரலாற்றினை எழுதும்போது உங்களின் வாழ்க்கையும் தாமே பதிவாகித்தான் தீரும். அதைத் தவிர்க்க முடியாது. நீங்கள் மறுப்பு சொல்லவும் கூடாது' என்று வாதாடினேன். தயக்கத்துடன்தான் ஒப்புக் கொண்டார்.

    இன்ஸ்டிடியூட் பற்றி ஏற்கனவே அச்சில் வெளியாகியிருந்த பல குறிப்புகளைக் கொடுத்தார். சில புத்தகங்கள், கையேடுகள், செய்தித்தாள்களில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தந்தார்.

    தன் செயலாளர் திருமதி பிரியா கணேஷ் அவர்களின் மூலம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவ நிபுணர்களில் சிலர், ஊழியர்களில் சிலர், தன்னார்வத் தொண்டர்களில் சிலர், பணி ஓய்வு பெற்றவர்களில் சிலர் என்று நான் சந்தித்துப் பேச ஒருங்கிணைத்துத் தந்தார்.

    தேர்வுக்குத் தயாராகும் மாணவன் போல நான் அவர் தந்தவற்றைப் படித்துக் குறிப்பெடுத்தேன்.

    அவர் ஒருங்கிணைத்துத் தந்தவர்களைச் சந்தித்துப் பேட்டி கண்டேன். மருத்துவமனையை, அங்கு நூற்றுக் கணக்கில் தினமும் வந்து போகும் நோயாளிகளை, அவர்கள் அணுகப்படும் விதத்தையெல்லாம் நேரில் பார்த்து உள் வாங்கிக் கொண்டேன்.

    எல்லாம் எழுத்தாக மாறியதன் விளைவுதான் உங்கள் கையில் இருக்கும் இந்த நூல்.

    இந்த நூலை எழுதுவதற்கு என் பெயரைப் பரிந்துரை செய்த நண்பர் புதுகை தருமராசன் அவர்களுக்கு என் முதல் நன்றி.

    இந்த நூலை எழுதும் அருமையான வாய்ப்பை எனக்கு அளித்ததுடன், அமெரிக்காவிலிருந்து அவ்வப்போது என்னுடன் தொடர்பு கொண்டு ‘புத்தக வேலை எந்த அளவில் இருக்கிறது' என்று விசாரித்துத் தெரிந்து கொள்வதில் பேரார்வம் காட்டிய கேன்சர் இன்ஸ்டிடியூட் (டபிள்யூ.ஐ.ஏ) ஃபௌண்டேஷன் (யு.எஸ்.ஏ) அமைப்பைச் சேர்ந்தவர்கள், டாக்டர் சாந்தா அவர்களுடன் என் சந்திப்புகளை ஒருங்கிணைத்துத் தந்தும், புகைப்படங்களைச் சேகரித்துக் கொடுத்தும் உதவிய பிரியா கணேஷ், எனக்கு பேட்டி தந்து ஒத்துழைத்த பெருமக்கள் என்று அத்தனை பேரும் என் நன்றிக்குரியவர்கள்.

    அனைத்திற்கும் மேலாக டாக்டர் சாந்தா அம்மையார் அவர்கள் தந்த அற்புதமான ஒத்துழைப்பிற்கு என் இதயபூர்வமான நன்றியும், கைகூப்பும்.

    பக்கங்களை நேர்த்தியாக 'டைப்-ஸெட்' செய்து தந்த இனிய நண்பர் செல்வின் அவர்களுக்கும், இந்த நூலை உருவாக்கவும் அழகுற அச்சிட்டு வெளியிடவும் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என்றும் என் நன்றி.

    இந்த நூலைப் படித்து எனக்கோ, டாக்டர் சாந்தா அம்மையார் அவர்களுக்கோ, எழுத்து மூலம் கருத்துரைக்க இருக்கும் உங்களுக்கு நன்றி தெரிவிக்காமல் இருப்பேனா? அட்வான்ஸ் நன்றி.

    Dr.V.SHANTA

    Chairman

    The Cancer Institute (WIA)

    Adyar

    Chennai - 600 020.

    044-24911526

    - ராணிமைந்தன்

    7, மணவாளன் தெரு,

    வெற்றிநகர் எக்ஸ்டன்ஷன்,

    சென்னை - 600 082

    தொலைபேசி: 26713643

    கைபேசி: 9381025834

    1. விதை விழுந்தது

    மார்ச் மாதத்தில் ஒரு நாள். 1923ஆம் ஆண்டு. சென்னை இராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் ஒரு சிறிய வீடு.

    அதில் மரக்கட்டில் ஒன்றில் வலியால் முனகியபடியே இளம் பெண் ஒருவர் படுத்துக் கொண்டிருக்கிறார். வலியின் வேதனையை முகம் பிரதிபலிக்கிறது. அடர்த்தியில்லாத முடிக் கற்றைகள் தலையில் அங்குமிங்கும்.

    வாழ்க்கையில் இறுதிக் கட்டத்திற்கு வந்தாயிற்று என்கிற உணர்வில் அந்தப் பெண் நம்பிக்கை இழந்து தளர்ந்து போயிருக்கிறார்.

    வலி அவ்வப்போது அதிகமாகும்போது துடிக்கிறார். அவர் உடலின் ஒவ்வோர் அங்க அசைவும் அந்த வலியின் தீவிரத்தைப் பிரதிபலிக்கின்றது.

    அந்த மரக்கட்டிலுக்கு வெகு அருகே நாற்காலி ஒன்றில் இன்னோர் இளம் பெண் அமர்ந்திருக்கிறார். ஒல்லியான உருவம்; மாநிற மேனி. அந்தக் காலத்துப் பெண்களின் உடை எப்படியிருக்குமோ அப்படி சாதாரண கொரநாடு சேலை, காலர் வைத்த ரவிக்கை - அதுவும் மணிக்கட்டு வரை நீளமாகத் தைக்கப்பட்ட ரவிக்கை - அணிந்து அமர்ந்திருக்கிறார்.

    அமர்ந்திருப்பவர் அக்கா, படுத்திருப்பவர் தங்கை என்று பார்ப்பவர்கள் யாரும் சத்தியம் செய்தால்கூட நம்பமாட்டார்கள். சகோதரிகளுக்குள் பொதுவாகக் காணப்படும் உருவ ஒற்றுமையை அந்தக் கொடிய நோய் அந்த அளவிற்கு உருக்குலைத்து விட்டிருக்கிறது.

    மூத்தவர் ஒரு டாக்டர். முத்துலட்சுமி. தங்கையின் பெயர் சுந்தரம்.

    தன் மூத்த சகோதரியைப் பார்த்து சுந்தரம், 'அக்கா...எனக்கு இன்னொரு டோஸ் மார்ஃபியா இன்ஜெக்ஷன் போடேன்... அது ஓவர்டோஸாகி விட்டாலும் பரவாயில்லை... அப்படியே கண்மூடிப் போய்ச் சேர்ந்து விடுகிறேன்... வலியில் நரக வேதனையை அனுபவிப்பதை விட நிரந்தர உறக்கம் எவ்வளவோ மேல்... ப்ளீஸ் அக்கா... ஊசி போடு' என்று கெஞ்சுகிறார்.

    அதைக் கேட்டதும் முத்துலட்சுமி தன் தலையைத் திருப்பி தங்கை படும் வேதனையை சில வினாடிகள் புரிந்து கொண்டு, இருந்தாலும் மேலும் ஒரு மார்ஃபியா கொடுப்பது தவறு என்ற உறுதியோடு 'தரமாட்டேன்... இப்போது அரை மணி நேரத்திற்கு முன்புதானே கொடுத்தேன்? மறுபடியும் நான் இப்போதைக்குத் தரமாட்டேன்' என்று உறுதியான குரலில் தங்கையின் கோரிக்கையை மறுக்கிறார்.

    'வலி கொஞ்சம்கூடக் குறையாமல் நான் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறேன். நீ என்ன இப்போதுதான் கொடுத்தேன் என்று நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?'

    முத்துலட்சுமி பதிலேதும் சொல்லாமல் எழுந்திருக்கிறார். தங்கையை நெருங்கி அவருடைய பின்புறம் குதவாய்ப் பகுதியில் வடிந்து கொண்டிருக்கும் மலத் துளிகளையும், சிறுநீரையும் முகம் சுளிக்காமல் துடைத்துச் சுத்தம் செய்கிறார்.

    ‘அக்கா... இன்னும் எத்தனை காலத்திற்கு நான் இப்படி உனக்குச் சுமையாக இருக்கப் போகிறேனோ தெரியவில்லையே...'

    ‘சுந்தரம்... டோன்ட் பி ஸில்லி... நீ என்றைக்கும் எனக்கு சுமையே அல்ல... நான் உனக்குச் செய்யும் இந்தச் சேவையை எந்த நோயாளிக்கும் செய்வேன்... எனவே முட்டாள்தனமாகப் பேசாதே...'

    'ஆனாலும் அக்கா... என்னால் இதனைத் தாங்க முடியாது...'

    அன்று மாலை சுந்தரம் இறந்து போகிறார். அந்தக் கண் மூடலில் இரண்டாண்டு வேதனை முடிவிற்கு வருகிறது.

    சுந்தரத்தைக் கொள்ளை கொண்டது ரெக்டம் (Rectum) கேன்சர் எனப்படும் மலக்குடல்வாய் புற்று நோய் என்பது டாக்டர் முத்துலட்சுமிக்குத் தெரியும். ஆனாலும் அந்த நோய் பற்றிய பெரிய அளவிலான ஆராய்ச்சிகளோ, சிகிச்சை முறைகளோ அப்போது இந்தியாவில் மேற்கொள்ளப்படவில்லை என்பது உண்மை.

    ‘புற்று நோய் ஓர் உயிர்க்கொல்லி நோய். அது வந்தால் பிழைக்க மாட்டார்கள்' என்ற கருத்து மட்டும் மக்களிடையே உறுதியாகப் பரவியிருந்தது.

    தன் தங்கை சுந்தரம் இளம் வயதில் மரணம் அடைந்தது டாக்டர் முத்துலட்சுமியின் நெஞ்சில் முள்ளாய்த் தைத்தது. அதே சமயம் அந்த மரணம் அவர் நெஞ்சில் விதை ஒன்றையும் விதைத்தது.

    சென்னை மாநகரில் ‘கேன்சர் இன்ஸ்டிடியூட்' என்ற ஆலமரத்திற்கான விதை அது.

    மரத்தின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், முத்துலட்சுமி என்ற மகத்தான பெண்மணியின் வரலாற்றைத் தெரிந்து கொள்வது அவசியம்.

    2. முத்துலட்சுமி என்கிற முத்து

    தனி சமஸ்தானமாக புதுக்கோட்டை திகழ்ந்து வந்த காலம் அது. அங்கே நாராயணசாமி அவர்கள் சிறந்த கல்வியாளராகவும், ஊர் பெரிய மனிதராகவும் அடையாளம் காணப்பட்டு மதிக்கப்பட்டவர். ஆனால் அவருடைய திருமணம் பெரும் எதிர்ப்புகளையும், கொந்தளிப்பையும் தோற்றுவித்தது. காரணம் அது கலப்புத் திருமணம். மனைவியின் பெயர் சந்திரம்மாள். கலப்புத் திருமணம் என்பதே ஒரு கெட்ட வார்த்தையாகக் கருதப்பட்டு வந்த அந்த நாட்களில் தன் திருமணம் எதிர்ப்பைச்

    Enjoying the preview?
    Page 1 of 1