Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rasaram - 60
Rasaram - 60
Rasaram - 60
Ebook538 pages3 hours

Rasaram - 60

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திரு.ராணிமைந்தன் அவர்கள் "ராசாராம்-60" என்னும் பெயரில் இந்நூலை எழுதியிருக்கிறார். நூலின் நாயகரான ராசாராம் அவர்களுக்கு அறுபதாண்டு நிறைவு பெறுவதால், திரு.சாவி போன்ற மெய்யன்பர்கள் அந்தப் பெரியவருக்கு மணிவிழா கொண்டாட முனைந்துள்ளனர். அந்த விழாவையொட்டித்தான் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

அரசியல் வாழ்வில் ஒன்றுக்கு மேற்பட்ட முகாம்களிலே அன்பர் ராசாராம் உலாவ நேர்ந்து பெற்ற அனுபவங்களை இந்நூல் விவரிக்கின்றது. சந்திக்க முடியாத துருவங்கள் போன்ற தலைவர்களைச் சந்தித்துப் பேசிய சம்பவங்களையும் இந்நூல் படம் பிடித்துக் காட்டுகிறது.

Languageதமிழ்
Release dateNov 2, 2021
ISBN6580143106893
Rasaram - 60

Read more from Ranimaindhan

Related to Rasaram - 60

Related ebooks

Reviews for Rasaram - 60

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rasaram - 60 - Ranimaindhan

    https://www.pustaka.co.in

    ராசாராம் - 60

    Rasaram – 60

    Author:

    ராணிமைந்தன்

    Ranimaindhan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ranimaindhan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கொல்லிமலைச் சாரலில்...

    2. முதல்வருக்கு வைத்த சிலை

    3. பெரியார் தந்த விருந்து

    4. இலங்கைக்கு ஒரு இனிய பயணம்

    5. பத்தர் கொள்கை பிரசார மாநாடு

    6. காமராஜரோடு நட்பு

    7. காமராஜ் நிறுத்திய கப்பல்

    8. கப்பல் பயணத்தில்...

    9. ரங்கூன் அனுபவங்கள்

    10. பாவேந்தரோடு பழகிய நாட்கள்

    11. தமிழ்த் தென்றல் திரு.வி.க.வுடன்...

    12. நெருங்கிய நண்பர் நெ.து.சு.

    13. ராஜாஜியோடு நெருக்கம்

    14. 1944ம் வருடம்

    15. 'தென்றல்' பிறந்தது

    16. மாநாடுகள் - மைல்கற்கள்

    17. பெரியாரின் கேடயமாக..

    18. மும்முனைப் போராட்டம்

    19. முதல் பொதுத் தேர்தல்

    20. டெல்லிக்கு முதல் பயணம்

    21. ஈ.வி.கே. சம்பத்தோடு இந்தியா முழுவதும்

    23. பெரியாரின் சந்தேகம்

    24. ஐயாவிடமிருந்து அண்ணா பாசறைக்கு

    25. அண்ணா வாங்கிய வீடு

    26. திருமணம்

    27. மாநகராட்சித் தேர்தல்

    28. தேர்தல் களத்தில் தி.மு.க

    29. தேர்தல் முடிவுகள்

    30. பாராளுமன்றத்தில் ராசாராம்

    31. காயிதே மில்லத்துடன் கனிந்த நட்பு

    32. ஒரு விஞ்ஞானியோடு நெருக்கம்

    33. நினைவில் நிற்கும் நேரு

    34. பாராளுமன்றத்திற்கு மீண்டும்

    35. நாடாளுமன்ற நண்பர்கள்

    36. ஒரு ஜனாதிபதி தேர்தலில்...

    37. சிறைவாசம்

    38. அண்ணாவுடன் அனுபவங்கள்-1

    39. அண்ணாவுடன் அனுபவங்கள்-2

    40. அண்ணாவுடன் அனுபவங்கள்- 3

    41. திருவிளக்கு

    43. அண்ணாவின் மறைவுக்குப் பின்...

    44. மத்தியிலிருந்து மாநிலத்திற்கு

    45. அமைச்சர் பொறுப்பில் அரும்பணிகள்

    46. விழா எடுப்பதில் விருப்பம்

    47. எமர்ஜென்ஸி

    48. ஜெ.பி.யோடு நட்பு

    49. ஜனதா கட்சி உதயம்

    50. ஒரு மாற்றத்தின் ஆரம்பம்

    51. மக்கள் தி.மு.க

    52. மனைவியின் பிரிவு-தந்தையின் மறைவு

    53. தமிழக அரசின் பிரதிநிதியாக தலைநகரில்

    54. வெளிநாட்டுப் பயணங்கள்

    55. சட்டமன்ற பேரவைத் தலைவராக...

    56. எம்.ஜி.ஆர் அவர்களுடன்...

    57. தொழிலமைச்சர் ராசாராம்

    58. பழக்கவழக்கங்கள்

    59. நல்லதொரு குடும்பம்

    60. பொது

    காணிக்கை

    திரு ராசாராம் அவர்களின் இல்லறத்தில் இனிமை சேர்த்து, அவரது பொது வாழ்வின் பல்வேறு சோதனைகளுக்கும் இன்முகத்தோடு ஈடு கொடுத்து, எதிர்பாராத விதத்தில் திடீரென இயற்கை எய்திவிட்ட திருமதி சாந்தகுமாரி ராசாராம் அவர்களுக்கு

    அணிந்துரை

    தமிழகத்தின் தற்போதைய தொழில் அமைச்சர் மாண்புமிகு க. ராசாராம் அவர்களை நன்கு அறிந்தவர்கள் - அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் - அவருடைய நட்பை தங்களுக்குக் கிடைத்த பெருஞ் செல்வமாகக் கருதுகிறார்கள். அவர்களில் நானும் ஒருவன்.

    அவர், அ,இ.அ.தி.மு.க.வைச் சார்ந்த அரசியல் தலைவர்களில் ஒருவர் என்றாலும், மாற்றுக் கட்சிகளிலும் அவரைப் பெரிதும் மதிக்கின்ற நண்பர்கள் உண்டு. பகை நட்பாகக் கொண்டொழுகும் பண்பினை வள்ளுவர் போதிக்கிறார். அவருடைய போதனையைத் தம்முடைய வாழ்க்கையிலே சாதனையாக்கி வருபவர் நண்பர் க. ராசாராம்.

    அவரை நான் பல ஆண்டுக் காலமாக அறிந்தவன் என்றாலும், தி. மு.க. ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித் துறையையும், தொழிலாளர் துறையையும் ஏற்று அமைச்சர் பொறுப்பில் இருந்தபோதுதான் அவரோடு தொடர்பு பெற்றேன். அதன் பின்னர், அ.இ.அ.தி.மு.க. சார்பிலே சட்டப் பேரவைத் தலைவர் பொறுப்பில் அவர் அமர்ந்திருந்தபோது அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பினைப் பெற்றேன். பல சந்தர்ப்பங்களிலே வடபுலத்தில் நடைபெறும் சபாநாயகர்கள் மாநாடுகளில் அவருடன் சேர்ந்து பங்கு கொள்ளும் வாய்ப்பைப் பெற்றேன். அப்போதெல்லாம் அவருடன் நெருங்கிப் பழகினேன்.

    பெருந்தலைவர் காமராசர் யாரையும் அதிகமாகப் புகழ்ந்துவிட மாட்டார். அப்படிப்பட்டவர் நண்பர் ராசாராம் அவர்களைப்பற்றி என்னிடம் பல சந்தர்ப்பங்களிலே புகழ்ந்து புகழ்ந்து பேசியிருக்கிறார். நண்பர் ராசாராம் அவர்களும், தலைவர் காமராசர் அவர்களும் டில்லி நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தபோது அவர்கள் அடிக்கடி சந்தித்துப் பழகியிருக்கிறார்கள். அப்போது நண்பர் ராசாராம் அவர்களின் ஒழுக்கம் மிகுந்த அரசியல் வாழ்வை காமராசர் அறிந்து கொள்ள முடிந்தது.

    திரு.ராணிமைந்தன் அவர்கள் ராசாராம்-60 என்னும் பெயரில் இந்நூலை எழுதியிருக்கிறார். நூலின் நாயகரான ராசாராம் அவர்களுக்கு அறுபதாண்டு நிறைவு பெறுவதால், திரு.சாவி போன்ற மெய்யன்பர்கள் அந்தப் பெரியவருக்கு மணிவிழா கொண்டாட முனைந்துள்ளனர். அந்த விழாவையொட்டித்தான் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

    திரு.ராணி மைந்தன், தமது நூலின் மூலம் நண்பர் ராசாராம் அவர்களை இன்றைய தலைமுறையினருக்கு மட்டுமல்லாமல், எதிர்காலத் தலைமுறையினருக்கும் நல்ல முறையில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். கற்பனை கலந்த வருணனையைப் புகுத்தி வரலாற்றைப் புராணமாக்கும் எழுத்தாளர்களும் உண்டு. ஆனால், இந்நூலாசிரியர் அந்தத் தவறைச் செய்யவில்லை. நூலின் தொடக்கம் முதல் இறுதி வரை தமிழ்நாட்டின் அரசியல் தலைவர் ஒருவருடைய வரலாற்றைத்தான் படிக்கிறோம் என்ற எண்ணம் நெஞ்சத்தில் பதியத்தக்க வகையிலே எழுதியிருக்கிறார். நண்பர் ராசாராம், முதறிஞர் ராஜாஜி - பெரியார் ஈ.வே.ரா. - பேரறிஞர் அண்ணா - பெருந்தலைவர் காமராசர் ஆகிய தமிழகத்தில் தோன்றிய அனைத்திந்திய புகழ்பெற்ற தலைவர்களுடனெல்லாம் நெருங்கிப் பழகியவர். அவர்களின் அடிச்சுவட்டில் நடைபோட்டு அரசியல் வாழ்வு நடத்தியவர். ஆகவே, அந்தத் தலைவர்களோடு நண்பர் ராசாராம் அவர்களுக்கு ஏற்பட்ட தொடர்புகளை எல்லாம் திரு. ராணி மைந்தன் சுவைபட விளக்கியுள்ளார். அந்த வகையிலே ஒரு தனி மனிதருடைய வரலாறாக மட்டுமல்லாமல், தமிழகத் தலைவர்கள் அனைவரையும் காட்டும் கண்ணாடி போல இந்நூலை ஆசிரியர் படைத்துள்ளார்.

    நண்பர் ராசாராம் பெரியாருடன் பழகிய காலத்து நிகழ்ச்சிகளை ஒளிவு மறைவின்றி விளக்கியிருக்கும் இடங்கள் படிப்பதற்குச் சுவை தருகின்றன.

    திரு.ராசாராம் தமிழகத் தலைவர்களோடு மட்டுமல்லாமல், பாரதப் பிரதமர்களோடும், குடியரசுத் தலைவர்களோடும் கூட நெருங்கிப் பழகிய அனுபவம் படைத்தவர். அந்தக் காலத்தில் அவர் பெற்ற அனுபவங்கள் சிலவும் இந்நூலை அழகுபடுத்துகின்றன. அரசியல்வாதிகளில் ஒவ்வொரு வருமே தமக்கெனத் தனித்த வரலாற்றைப் படைத்துவிட முடிவதில்லை. ஒரு சிலருக்கே அதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. நண்பர் ராசாராம் அவர்கள் இந்தியாவின் சரித்திர நாயகர்களோடெல்லாம் பழகியதால் தம்முடைய வாழ்க்கையையும் தனி ஒரு வரலாறாக்கி விட்டார்.

    மணிவிழா காணும் ராசாராம் அவர்களுக்கு இந்த அணிந்துரையின் மூலமே எனது வாழ்த்துரையை வழங்குகிறேன். அவரை நம்பிக்கைக்குரிய நண்பராக நான் போற்றி வருகிறேன். அரசியல் வாழ்வில் ஒன்றுக்கு மேற்பட்ட முகாம்களிலே அன்பர் ராசாராம் உலாவ நேர்ந்து பெற்ற

    அனுபவங்களை இந்நூல் விவரிக்கின்றது. சந்திக்க முடியாத துருவங்கள் போன்ற தலைவர்களைச் சந்தித்துப் பேசிய சம்பவங்களையும் இந்நூல் படம் பிடித்துக் காட்டுகிறது.

    புரட்சித் தலைவர் மாண்புமிகு டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நம்பிக்கைக்குரிய நண்பராக நீண்டகாலம் அவரோடு தொடர்பு கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார். அமைச்சரவையிலும் மாண்புமிகு முதல்வரின் நம்பிக்கைக்குரிய சகாவாக இருந்து வருகிறார். இவர்கள் இருவருடைய நட்பு அ.இ.அ.தி.மு.க.வின் சொத்து என்று சொல்லலாம்...

    தமிழகத்தின் வரலாற்றுக் களஞ்சியத்திலே இந்நூல் நிலையான இடம் பெறும் என்பதில் ஐயமில்லை. மீண்டும் ஒரு முறை நூலாசிரியரைப் பாராட்டிவிட்டு, மணிவிழா நாயகர் அன்பர் க. ராசாராம் அவர்களுக்கு முத்து விழா கண்டுவிட்ட நான் வாழ்த்து தெரிவிக்கின்றேன்.

    -

    முன்னுரை

    கடற்கரைச் சாலையில் கொடி பறக்கும் காரில் திரு ராசாராம் அவர்கள் போய் வருவதை நான் பலமுறை பார்த்ததுண்டு, ஆனால் அவரோடு நெருங்கிப் பழகவும், அவரது வாழ்க்கையைப் பற்றி ஒரு புத்தகம் எழுதவும் எனக்கொரு வாய்ப்பு ஏற்படும் என்று கனவு கூடக் கண்டதில்லை.

    என் எழுத்து வாழ்க்கையின் எல்லாத் திருப்பு முனைகளுக்கும் ஆசிரியர் சாவி அவர்களே காரணமாக இருந்து வருகிறார். மாண்புமிகு ராசாராம் அவர்களோடு எனக்கு ஏற்பட்ட அறிமுகத்திற்கும் அவரே காரணம்.

    ஒருமுறை தமது ஜப்பான் பயணத்தின்போது சாவி அவர்கள் என்னையும் தம்முடன் அழைத்துச் சென்றிருந்தார். ஒருநாள் டோக்கியாவில் இந்தியத் தூதரகத்துக்கு நாங்கள் போயிருந்தோம். அங்கே திரு ராசாராம் அவர்களும் வந்திருந்தார். ஏற்கனவே மிக நெருங்கிய நண்பர்களான திரு சாவியும் ராசாராம் அவர்களும் வெளிநாட்டில் சந்தித்து வேடிக்கையாய்ப் பேசிக் கொண்டார்கள். அந்தத் தூதரக வரவேற்பறையில் தான் முதன் முதலாக என்னை அவருக்கு ஆசிரியர் அறிமுகம் செய்து வைத்தார். அப்புறம் அன்று இரவு உலகப் புகழ் பெற்ற 'கின்ஸா' தெருக்களில் நாங்கள் பேசிக் கொண்டே 'வாக்கிங்' போனோம். நாயர் சாப்பாட்டு விடுதியில் சாப்பிட்டோம். ராசாராம் என்கிற அரசியல்வாதி, பல பரிமாணங்களை உள்ளடக்கிய அற்புத மனிதர் என்பதற்கான அடையாளங்களை அப்போது நான் கண்டு கொண்டேன்..

    இப்போதைய அமைச்சர் ராசாராம் அப்போது தமிழக சட்டமன்றப் பேரவைத் தலைவராக இருந்தார். சென்னை திரும்பிய பின் பல்வேறு

    சந்தர்ப்பங்களில் 'சாவி' இதழுக்காக அவரைப் பேட்டி கண்டு எழுதுவதற்காக அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். டோக்கியோ சந்திப்பை நினைவு கூர்ந்து அவர் மகிழ்ச்சியோடு என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அன்று முதல் இன்று வரை, அமைச்சர் பதவியேற்ற பின்பும், அந்த அன்பு மாறாமல் அவர் என்னோடு பழகி வரும் முறையும், காட்டி வரும் பரிவும் சாதாரணமான தன்று என்பதை என் டயரி கூறும்.

    சென்ற ஆண்டு ஆகஸ்டு இருபத்தாறாம் தேதி - அவரது பிறந்த நாளன்று - எங்கள் பழக்கத்தின் அடிப்படையில் நான் அவர் இல்லத்துக்குச் சென்று வாழ்த்துத் தெரிவித்து விட்டு வெளியே வந்தபோது, 'அடுத்த ஆண்டு அறுபதைத் தாண்டப் போகிறார்' என்ற செய்தி கிடைத்தது.

    அரசியலின் ஆரம்பப் பாடங்களைத் தந்தை பெரியாரிடம் கற்றுத் தெளிந்து அவரது அன்புக்குப் பாத்திரமாகி, பின்னர் அறிஞர் அண்ணாவின் பாசறையில் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டு, அதற்குப்பின் கலைஞர் கருணாநிதியின் அமைச்சர் அவையில் இடம் பெற்று, இப்போது நமது முதல்வர் எம். ஜி. ஆரின் நம்பிக்கைக்குரிய மூத்த அமைச்சர்களில் ஒருவராக விளங்கும் ராசாராமின் வாழ்க்கையின் அறுபது ஆண்டுகள், அர்த்தம் நிறைந்த ஆண்டுகள். எனவே, அந்த வாழ்க்கையின் நிகழ்ச்சிகளைத் தொகுத்து எழுதினால் அதில் தமிழக அரசியலின் முக்கிய கால கட்டங்கள் படம் பிடிக்கப் பட்டது போலப் 'பளிச்'சென்று புரியும்; ராசாராம் அவர்களுடைய வாழ்க்கை வரலாறும் தெரியும்; அவரது மணி விழாவுக்கு ஏற்ற பரிசாகவும் அது அமையும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

    இது பற்றி திரு சாவி அவர்களுடன் விவாதித்தேன். ரொம்ப சரி : உடனே அவரைப் பார்த்து எழுத ஆரம்பித்து விடுங்கள் என்று உற்சாகத்துடன் என்னை முடுக்கி விட்டார்.

    இந்த எண்ணத்தை ராசாராம் அவர்களிடம் வெளிப்படுத்தியபோது, உன் அன்புக்கு நன்றி. என் வாழ்க்கை ஒரு புத்தகமாகும் அளவுக்கு நான் பெரியவனாகி விடவில்லையென்றே நினைக்கிறேன். தயவு செய்து இது வேண்டாம் என்று கண்டிப்பாய் மறுத்து விட்டார். தொடர்ந்து பல நாட்கள் கேட்டும் இதே பதில்தான். அவர் மறுக்க மறுக்க எங்கள் பிடிவாதம் அதிகமானது. சாவி அவர்களும் நானும் ஒரு நாள் சேர்ந்து போய் புத்தகத்தின் அவசியத்தைச் சொல்லி வற்புறுத்தினோம். ஒரு வழியாக அம்மி நகர்வதற்கு ஆறு மாதங்களாயின.

    ஆரம்பம் முதல் அவரது வாழ்க்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக நினைவு கூரச் சொன்னேன். அவரைப் பற்றிய குறிப்புகளைச் சேகரிக்கத் தொடங்கினேன். அதிலிருந்து தினமும் அவர் வீட்டை முற்றுகையிட்டேன் காலை ஆறே முக்கால் மணிக்கு அவர் வீட்டு அழைப்பு மணியை அழுத்தும்

    முதல் ஆளாக நான் மாறினேன் . ஒரு அமைச்சரைத் தொந்தரவு படுத்தும் நேரம் அதுவல்ல என்றாலும், என் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு தமது சிரமத்தைப் பொருட்படுத்தாமல் தினம் காலையில் ஒருமணி நேரம் எனக்காக ஒதுக்கி அவர் தந்த ஒத்துழைப்புதான் இந்நூலின் ஆணிவேர். இது போதாதென்று, அமைதியாக ஏதேனும் ஒரு இடத்தில் அவர் கோப்புகளைப் பார்க்க உட்காரும்போது அங்கேயும் போய் அவரது நேரத்தைக் 'களவாடி'யிருக்கிறேன். ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைச் சோதித்துக் கொள்ள ஒருமுறை அவர் தனியார் மருத்துவமனை, ஒன்றில் அனுமதிக்கப்பட்டபோது அவர் வருமுன்னேயே அங்கே போய்க் காத்திருந்த என்னைப் பார்த்துச் சிரித்து விட்டு, இங்கேயும் வந்து விட்டாயா? சரி...சரி... அறைக்கு வா என்று அழைத்துப் போன அன்பு மறக்க முடியாதது.

    நான் எழுதியவற்றில் உண்மைகள் திரிக்கப்பட்டோ, சம்பவங்கள் மாறுபட்டோ, அல்லது சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் தவறாகவோ போய் விடாதிருக்க எனக்கு வழிகாட்டியாக இருந்தவர் 'விடுதலை' திரு சம்பந்தம் அவர்கள். ராசாராம் அவர்களின் வகுப்புத் தோழர். இன்றளவும் அவர்களது நட்பு, தி.க.,அ.தி.மு.க. என்ற கட்சிக் போடுகளைக் கடந்து கனிந்து நிற்பதை நான் கண்டு வருகிறேன். அச்சுக்குப் போகு முன்னால் இப்புத்தகத்தின் கையெழுத்துப் பிரதியை முழுவதும் படித்துப் பார்த்துத் தேவையான திருத்தங்களைச் செய்து உதவிய திரு.சம்பந்தம் - அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டவன். அவரையும் மீறி இப்புத்தகத்தில் எங்கேனும் தவறு நுழைந்திருந்தால் அதற்கு நானே பொறுப்பாவேன். தமது மற்ற வேலைகளுக்கிடையேயும் ஒவ்வொரு பக்கத்தையும் படித்துப் பார்த்து அச்சுப்பிழை திருத்தித் தந்து அன்போடு உதவிய நண்பர் திரு சி.ஆர். கண்ணனுக்கு என் இதயபூர்வமான நன்றி.

    மான்புமிகு ராசாராம் மணி விழா மலர்க் குழுவில் எனக்கு இடமும் தந்து, இந்நூல் எழுத வாய்ப்பும் அளித்த ஆசிரியர் திரு.சாவி அவர்களுக்கு என் வணக்கத்தையும், நன்றியையும் மீண்டும் தெரிவித்துக் கொண்டு, இந்த நூலை உங்கள் முன் பணிவோடு வைக்கிறேன்.

    ராணிமைந்தன்

    *

    -

    -

    -

    *

    -

    -

    1. கொல்லிமலைச் சாரலில்...

    இதமான சூழலோடு இணைந்து இருக்கும் இனிமையான இடம் கொல்லிமலை. மாவும் பலாவும் மண்டிக் கிடக்கும் மலையடிவாரம். சுற்றுப்புறங்களில் சுறுசுறுப்பான கிராமங்கள். ராசிபுரத்துக்கு ஆறாவது மைலில் பேளுக்குறிச்சி என்ற சின்ன ஊர்.

    பெருமாள் பிள்ளை என்றால் தெரியாதவர் இருக்க முடியாது. கம்பீரத்தோடு வாழ்ந்து வந்தார் அந்த நிலச்சுவான்தார். அவருக்கு மூன்று மகன்கள்; ஒரு மகள். கஸ்தூரி பிள்ளை, அப்பாவு பிள்ளை, பொன்னுசாமி பிள்ளை மூன்றும் பிள்ளைகள். பாக்கியம் என்பது பெண்ணின் பெயர்.

    கஸ்தூரி பிள்ளைக்கு இயற்கையிலேயே கல்வி மீது ஆர்வம் இருந்தது. லண்டன் மிஷினரி ஸ்கூலில் நிலச்சுவான்தார் குடும்பம் என்பதற்கான எல்லா அடையாளங்களுடனும், வசதிகளோடும் பள்ளிக் கல்வியைத் தொடங்கினார் கஸ்தூரி பிள்ளை. குதிரை வண்டியில் பள்ளிக்கூடம் போவது என்பது அன்றைய காலகட்டத்தில் பல பிள்ளைகளின் கனவோடு மட்டுமே நின்று போயிருந்தது. கஸ்தூரி பிள்ளையோ தினசரி குதிரை பூட்டிய வண்டியிலே தான் பள்ளி போவார்; வீடு திரும்புவர்.

    பாட்டனார் இறந்து போனதும் குடும்பம் பாதிக்கப்பட்டது. வலுவோடு விளங்கிய ஒரு பெரிய குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக நலிய ஆரம்பித்தது. பிள்ளைகளின் படிப்பைக்கூடத் தொடர முடியுமா என்ற அளவுக்கு நிலைமை மாறியதும் பாட்டியம்மாள் தான் குடும்பத்தைத் தாங்கும் பொறுப்பை மேற்கொண்டார்.

    கஸ்தூரி பிள்ளையின் படிப்புக்காக, குடும்ப நண்பர் என்று கருதப்பட்டு வந்த கிருஷ்ணம் பிள்ளை என்பவரிடம் கடன் வாங்கினார். அவ்வப்போது பாட்டியிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு பணத்தைக் கடனாகக் கொடுத்து வந்தார் கிருஷ்ணம் பிள்ளை. ஆனால் பாட்டியம்மாள் போட்ட கையெழுத்தையெல்லாம் அவரது நிலத்தை அபகரித்துத் தனதாக்கிக் கொள்ளவே கிருஷ்ணம் பிள்ளை பயன்படுத்திக் கொண்டார். தான் ஏமாற்றப்பட்டது தெரிந்ததும் குழந்தையம்மாளின் வயிறு எரிந்தது. தன் வேதனையையும் ஏமாற்றத்தையும் கிருஷ்ணம் பிள்ளையிடம் நேரிடையாகவே கோபத்தோடு தெரிவித்துவிட்டு வந்தார். அந்த வயதான அம்மையாரின் நல்ல உள்ளத்தை நோகடித்ததன் விளைவாகவோ, அல்லது தப்புகளே செய்ததன் காரணமாகவோ பின்னாளில் அந்தப் பாட்டியின் கோபம் சாபமாகச் செயல்பட்டு கிருஷ்ணம் பிள்ளையின் குடும்பம் முழுவதும் சீரழிந்து போய்விட்டது.

    கஸ்தூரி பிள்ளை அந்தக்கால எஸ்.எஸ்.எல். ஆங்கிலத்தின் மீது அளவு கடந்த மோகம். சரளமாக ஆங்கிலம் பேசவும் பெரிய துரைமார்கள் போன்று பழகவும் அவரால் எளிதாக முடிந்தது.

    அந்தக் காலத்தில் 'ஜஸ்டிஸ்' பத்திரிகையில் வெளிவந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்துவிட்டு தபால் தந்தி துறையில் வேலைக்கு விண்ணப்பித்தார் கஸ்தூரி பிள்ளை. வேலை எளிதாகக் கிடைத்தது.

    1914-ல் பெரியாரோடு அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. ஈ.வி.கே. சம்பத்தின் அண்ணா லண்டனுக்குப் படிக்கப் போனார். படிப்பு முடிந்து திரும்பியபோது அவருக்குத் தன்னோடு உரையாடவும், மேற்கத்தியச் சாயலில் பழகவும் ஒரு நண்பர் தேவைப்பட்டார். கஸ்தூரி பிள்ளையின் ஆங்கில அறிவையும், ஆர்வத்தையும் பற்றிக் கேள்விப்பட்ட பெரியார், அவரையே சம்பத்தின் அண்ணாவுக்கு உதவியாய் இருக்க ஏற்பாடு செய்தார். ஆரம்பத்தில் இப்படி ஏற்பட்ட பழக்கம், போகப்போக இறுகி இனிய நட்பாக வளர்ந்தது.

    அப்போதெல்லாம் ராணுவத்துக்கு ஆளெடுப்பது அடிக்கடி நடைபெறும். அந்தந்தப் பகுதியில் இருக்கும் சில பிரபல பிரமுகர்களும் ஆள் தேர்ந்தெடுக்கும் குழுவில் ராணுவ அதிகாரிகளோடு இடம் பெறுவதுண்டு. அந்த வகையில் சேலம் பகுதிக்கு பெரியாரும் ஒருவராக இருந்தார். கஸ்தூரி பிள்ளைக்கு ராணுவத்தின் மேல் ஒரு காதல். தேர்வுக் குழுவில் பெரியாரும் இருந்த காரணத்தால் எளிதாக ராணுவத்தில் அவருக்கு இடம் கிடைத்தது. தந்தி இலாகா வேலையை விட்டு மிலிடரியில் சேர்ந்தார் கஸ்தூரி பிள்ளை. அங்கேயும் தன் திறமையை ஆழமாகப் பதிய வைத்தார். பர்மா, எகிப்துப் போர் முனைகளுக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். எங்கு போனாலும் வெற்றி, நல்ல பெயர் இவற்றைச் சம்பாதிப்பதே அவருக்கு வழக்கமாகப் போய் விட்டது.

    ராணுவத்தில் அவரோடு மகாத்மா காந்தியின் இரண்டாவது மகன் (பின்னால் முஸ்லிமாக மதம் மாறியவர்), ராசாராம் என்றொரு வீரர், ஒரு ஜமீன்தாரின் மகன் ஆகிய மூவரும் மிகவும் நண்பர்களாக விளங்கினார்கள்.

    கஸ்தூரி பிள்ளைக்குத் திருமணமானது. விஜயாம்மாள் மனைவியானார். ராணுவ சேவை முடிந்ததும் ஊர் திரும்பி விட்ட கஸ்தூரி பிள்ளை தன் தம்பி அப்பாவு பிள்ளைக்கு ஏதேனும் தொழில் தொடங்கித் தர வேண்டுமென்று ஆசைப்பட்டார். அப்போதெல்லாம் பஸ், லாரி போன்ற வாகனங்களை யாரும் பார்த்ததில்லை. கஸ்தூரி பிள்ளைக்கு ராணுவத்தில் இவற்றையெல்லாம் பார்த்து அவற்றின் மேல் ஒரு அலாதி பிரியமே வளர்ந்திருந்தது. தம்பியை மெக்கானிக் ஆக்க விரும்பி ராமகிருஷ்ண மிஷனில் மெக்கானிக் பயிற்சி பெற அனுப்பி வைத்தார். ஒரு ஆண்டுக்கு சாப்பாடு, படிப்பு உட்பட மொத்தக் கட்டணத்தையும் அவரே கட்டினார். பயிற்சி முடிந்து அப்பாவு பிள்ளை திரும்பி வந்தபோது சேலம் ஜில்லாவின் முதல் மெக்கானிக் என்ற சிறப்பையும் பெற்றார். அங்கே முதல் மெக்கானிக் ஷாப்பும் அப்போதுதான் உருவானது.

    கஸ்தூரி பிள்ளைக்கு முதல் குழந்தை பிறந்தது. தனது ராணுவ வெற்றிகளின் நினைவாக அக்குழந்தைக்கு ஜெயசீலன் என்று பெயரிட்டு மகிழ்ந்தார்.

    1926-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ம் தேதி இரண்டாவது மகன் பிறந்தபோது, தன்னோடு ராணுவத்தில் பணியாற்றி தன் நெருங்கிய தோழராய் இருந்தவரின் நினைவாக ராசாராம் என்று பெயர் சூட்டினார்.

    இன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் மிக முக்கியமானவராகவும், தமிழக அரசின் தொழில் அமைச்சராகவும் புகழோடு விளங்கிக் கொண்டிருப்பவர் தான் அந்த ராசாராம்.

    2. முதல்வருக்கு வைத்த சிலை

    கஸ்தூரி பிள்ளையின் குடும்பம் தர்மபுரிக்குக் குடி வந்தது. 1928-ல் ‘கே. ரத்னா மோட்டார் சர்வீஸ்' என்ற பஸ் கம்பெனியை ஆரம்பித்து அதன் பொறுப்பாளராகத் தனது தம்பி அப்பாவு பிள்ளையை அமர்த்தினார்.

    ராசாராமுக்குப் பள்ளிக்கூடம் போகும் வயது வந்ததும் தர்மபுரியில் அப்போது பிரபலமாக இருந்த 'விட்டல்ராவ் வித்யாலயா' என்ற பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள். வெல்வெட் தொப்பியும், கோட்டும் அணிந்து பெரிய ஊர்வலத்தின் நடுநாயகமாகத் தன்னைப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் சென்ற படாடோபம் இன்னும் ராசாராமுக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. பரப்பி வைக்கப்பட்டிருந்த அரிசியில் தன் பிஞ்சு விரல்களால் 'அ' என்ற முதல் தமிழ் எழுத்தை அச்சிறுவன் எழுதி முடித்ததும் கடலையும், கற்கண்டும் வந்திருந்தவர்களுக்கு விநியோகிக்கப் பட்டன.

    அதென்னமோ ஆரம்பத்தில் பள்ளி வாழ்க்கை ராசாராமுக்கு பிடிக்கவும் இல்லை; பிடிபடவும் இல்லை. இரண்டு வருடங்கள் படித்தான். ஆசிரியர் அடித்தார் என்பதற்காக 'இனி அந்தப் பள்ளிக்கூடத்திற்குப் போகமாட்டேன்' என்று அடம் பிடித்தான். சரியென்று அங்கிருந்து அவனை மாற்றி தர்மபுரி எலிமெண்ட்டரி ஸ்கூலுக்கு அனுப்பினார்கள். நான்காவது வரை அங்கு படித்ததும் உயர் நிலைப் பள்ளிக்குப் போனான் ராசாராம்.

    படிப்பைப் பொறுத்தவரை ராசாராமை 'சூட்டிகை' என்று சொல்வதற்கில்லை. பள்ளிக்கூடம் போக மாட்டேன் என்று பலமுறை அடம் பிடித்ததுண்டு. ராசாராமின் மாமாவும் அதே வீட்டில் வசித்து வந்தார். எதிர் வீட்டிலிருந்த மாமாவின் நண்பர் ஒரு புகைப்படக் கலைஞர். ஒரு நாள் அவர் தன் காமிராவை வேறு எதற்கோ சரி செய்து கொண்டிருக்க, அன்று பார்த்து ராசாராம் ‘பள்ளிக்கூடம் போக மாட்டேன்' என்று ஏகமாய் ரகளை பண்ண, அந்தக் காட்சியை மாமாவின் நண்பர் காமிராவில் படம் எடுத்து விட்டார். (அந்தப் படத்தை ரொம்ப நாட்களுக்குத் தன் வீட்டில் ராசாராம் மாட்டி வைத்திருந்தார்.)

    இரண்டாவது, மூன்றாவது. நான்காவது ஃபாரங்களில் படித்த போது ராசாராமுக்குக் கணிதப் பாடம் கசந்தது. சுட்டுப்போட்டாலும் கணக்கு வரவில்லை. எப்படியோ வகுப்புகளையும், வருடாந்திரத் தேர்வுகளையும் அந்த மாணவன் சந்தித்துக் கொண்டு வந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

    படிப்புதான் இப்படியே தவிர விளையாட்டுகளின் மேல் விருப்பம் வளர்ந்து கொண்டு வந்தது. நல்ல நிலா வெளிச்சம் இருந்தால் ராசாராமுக்கும், அவன் நண்பர்களுக்கும் கொண்டாட்டம்தான். தினமும் இரவு சாப்பாடு முடிந்ததும் தெருவுக்கு ஓடி வந்து தண்ணீரைப் பட்டையாய்த் தெளித்து கோடு போட்டு ‘சடுகுடு...சடுகுடு' என்று முதல் குரல் கொடுப்பது ராசாராமாகத்தான் இருக்கும். அந்தக் குரலுக்காகவே காத்திருந்தது போல சில வினாடிகளில் சிநேகிதர் பட்டாளம் கூடிவிடும். அப்புறம் இரவு பத்து மணிக்கு மேல் அவரவரின் பெற்றோர் வந்து தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு இழுத்துக் கொண்டு போனால் தான் தெரு அமைதியாகும். சடுகுடு போலவே ஹாக்கி, கால்பந்து, வாலிபால், பேட்மின்டன் போன்ற விளையாட்டுகளும் ராசாராமின் கவனத்தை ஈர்த்தன; கைவந்த கலையுமாயின.

    தனது நான்காவது வயதிலேயே நீச்சல் கற்றுக் கொண்டவர் ராசாராம். தெருப் பையன்களுடன் சேர்ந்துகொண்டு வயல்வெளிக் கிணறுகளில் வாத்தியார் யாருமின்றித் தாமாகவே நீச்சல் பயின்றவர். முப்பது அடி உயரமுள்ள மரங்களின் மீது ஏறி அங்கிருந்து ‘தொப்' பென்று கிணற்றுக்குள் குதிக்கும் அளவுக்குத் தயாரானார். கண்கள் சிவக்கும் வரை கிணற்று நீருக்குள் குடியிருப்பது ராசாராமுக்கு வழக்கமாகிவிட்டது. மகனின் இந்த சாகசங்களையெல்லாம் மகிழ்ச்சியோடு ரசித்தார் - அப்பா. ஊக்கமும் அளித்தார். இதெல்லாம் ஆண்பிள்ளைகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர் அவர். எனவே ராசாராமின் விளையாட்டு ஆர்வத்தை அவரே உரம் போட்டு வளர்த்தார் எனலாம். அது மட்டுமல்ல. ஐந்தாம் படிவம் படிக்கும் போதே ராசாராம் குதிரையேற்றமும் பழகிக் கொண்டார்.

    முதல் ஃபாரம் படிக்கும் போது குப்பி வீரண்ணாவின் கன்னட நாடகக் கம்பெனி - தர்மபுரியில் முகாமிட்டது. அந்தக் காலத்தில் பிரபல நடிகையான அசுவத்தம்மா அந்த நாடகத்தில்தான் முதன் முதலில் நடித்தார். தர்மபுரி ராஜா தியேட்டரில் அவருடைய 'சதாரம்' நாடகம் நடந்தது. குப்பி வீரண்ணா அப்போதெல்லாம் மிகப் பிரபலமான காமெடி நடிகர். காட்சி ஜோடனையெல்லாம் குப்பி வீரண்ணாவின் நாடகங்களில் மிக அற்புதமாக அமைந்திருக்கும். நடிகர்களெல்லாம் வெல்வெட் ஆடைகளைத்தான் அணிவார்கள். ஜிலு ஜிலுவென்று அவர்கள் மேடையில் மின்னும் போதெல்லாம் ராசாராமின் கண்கள் ஆச்சரியத்தால் விரியும். அவர் தன் வாழ்வில் பார்த்த முதல் நாடகம் 'சதாரம்' தான். அது மட்டுமல்லாமல் அந்த நாடகக் குழுவுக்கான வசதிகளை ராசாராமின் சித்தப்பாதான் செய்து கொடுத்தார். அப்புறம் பல நாடகக் குழுக்களுக்கு அப்படிச் செய்து கொடுப்பது சித்தப்பாவுக்கு வாடிக்கையாகி விட்டது. தவறாமல் நாடகம் பார்ப்பது என்பது ராசாராமின் வாடிக்கையாகி விட்டது.

    நவாப் ராஜமாணிக்கத்தின் மதுரை தேவி பால வினோத சங்கீத சபா தர்மபுரிக்கு வந்தது. ராசாராமின் சித்தப்பாதான் அவர்களுக்கு வீடு அமர்த்திக் கொடுத்தார். கூடவே அவரது சொந்த பஸ் கம்பெனியின் பஸ் ஒன்றில் நாடகக் கலைஞர்களை அழைத்துக் கொண்டு நாடகம் போடும் அக்கம் பக்கத்து இடங்களுக்கு இலவசமாய் அழைத்துக் கொண்டும் போனார்.

    அந்தச் சமயங்களிலெல்லாம் நாடகக் குழுவோடு பஸ்ஸில் போய் வர ராசாராம் தவறியதில்லை. நவாப் ராஜமாணிக்கம் மட்டுமன்றி, எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள், 'புலிக்குட்டி' கோவிந்தன், டி.கே.எஸ். சகோதரர்கள், எம்.ஆர். ராதா, எஸ்.எஸ். ராஜேந்திரன், கே.ஆர். ராமசாமி, டி.வி. நாராயணசாமி இப்படி அப்போதைய நாடக நட்சத்திரங்கள் அத்தனை பேரையும் மேடைகளில் கண்டுகளிப்பது ஒரு இன்றியமையாத பொழுது போக்காகவே ஆகிவிட்டது.

    ஞாயிற்றுக் கிழமைகளில் காலையில் கிளம்பி விட்டால் மலையேற்றம்தான். ஊருக்கு மூன்றாவது மைலில் ஒரு சிறிய மலை இருந்தது. நண்பர்கள் 'ஜமா’வாகச் சேர்ந்து அவரவர்கள் கையில் உப்புமாவைக் கட்டி எடுத்துக் கொண்டு மலையின் இந்தப் பக்கமாக ஏறி அந்தப் பக்கமாக இறங்கி மலையைச் சுற்றிக் கொண்டு மறுபடியும் கிளம்பிய இடத்துக்கே வந்து சேருவார்கள். மாதத்துக்கு இரண்டு தடவையாவது இந்த 'வீர' விளையாட்டைச் செய்ய ராசாராம் குழு தவறியதில்லை.

    எஸ்.எஸ்.எல்.ஸி. படித்து முடித்ததும் மேற்கொண்டு படிக்க ஆசைப்பட்டாலும், வேண்டாம் என்கிற மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டது. சேலம் முனிசிபல் கல்லூரியின் முதல்வராக ராமசாமி கவுண்டர் அப்போது இருந்தார். அவரிடம் ராசாராமுக்கு நிறையச் செல்வாக்கு இருந்தது. அதைப் பயன்படுத்தி ஏராளமான மாணவர்களுக்கு ராசாராம் அக்கல்லூரியில் இடம் வாங்கித் தர முடிந்தது. முதல்வர் ஒரு நாள் ராசாராமைக் கேட்டார்.

    எல்லோருக்கும் ஸீட் வாங்கிக் கொடுக்கிறாயே, நீ விண்ணப்பம் போட்டிருக்கிறாயா?

    இல்லை என்பதுதான் ராசாராமின் பதிலாக இருந்தது.

    முதல்வரின் கண்டிப்பான கட்டளையின் பேரில் ராசாராமின் விண்ணப்பமும் கல்லூரிக்குப் போயிற்று.

    பி.ஏ. வில் சேர்ந்தாயிற்று.

    ராமசாமி கவுண்டரைப் பற்றிய நினைவுகளை ராசாராமின் நெஞ்சம் நன்றிப் பெருக்குடன் சுமந்து கொண்டிருக்கிறது. ராமசாமி அவர்கள் ஒரு கணித மேதையாக மட்டுமில்லாமல் தமிழில் மிகுந்த புலமை பெற்றவராகவும் திகழ்ந்தார். வட மொழியிலும் பெரும் புலமை அவருக்குண்டு. ஆங்கில உடை தரித்து மிடுக்காக இருந்தாலும், நெற்றியில் திருமண் தரிக்காமல் வெளியே வரமாட்டார்.

    அவரும் திருநெல்வேலி இந்துக் கல்லூரி முதல்வர் அலெக்ஸாண்டர் ஞானமுத்து என்ற அவருடைய நண்பரும், மாணவர்கள் - அதிலும் குறிப்பாக பார்ப்பனரல்லாத சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் - பட்டப்படிப்பு படித்துத் தேற வேண்டும் என்பதில் அளவில்லாத அக்கறை கொண்டிருந்தார்கள் .

    சேலம் நகரம் அப்போதைய காலகட்டத்தில் பெரும்பாலும் நெசவாளர்களைக் கொண்டதாகவே விளங்கியது. தெலுங்கு தேவாங்கர், கன்னட தேவாங்கர், செங்குந்த முதலியார், சௌராஷ்டிரர்கள் ஆகிய நான்கு வகை சாதிக்காரர்களும் நெசவுத் தொழிலை நம்பியே வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். அவர்களில் யாருக்கும் தங்கள் பிள்ளைகள் கல்லூரிப் படிப்புப் படிக்க வேண்டும் என்ற ஆசையோ, ஆர்வமோ இயற்கையிலேயே இல்லாமல் இருந்தது. ராமசாமி கவுண்டர் வீடு வீடாகப் போய் பெற்றோர்களைச் சந்தித்து ‘பிள்ளைகளைப் படிக்க வையுங்கள்' என்று ஓயாமல் தூண்டிக் கொண்டிருந்தார். சேலம் நகரில் மாணவர்களைக் கல்லூரியின்பால் இழுத்த பெருமை ராமசாமி கவுண்டருக்கு என்றும் உண்டு. அவரது பெருமுயற்சியால்தான் இன்ட்டர்மீடியட் வரை மட்டுமே இருந்த சேலம் கல்லூரியில் பட்டப் படிப்புக்கும் வகை செய்யப்பட்டது.

    அப்போது சேலம் நகராட்சித் தலைவராக இருந்தவர் சொர்ணாம்பிகை பஸ் உரிமையாளர் ரத்தினசாமி பிள்ளை அவர்கள். அவர் பள்ளி சென்று படித்தவர்

    Enjoying the preview?
    Page 1 of 1