Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nayam Pada Urai
Nayam Pada Urai
Nayam Pada Urai
Ebook175 pages59 minutes

Nayam Pada Urai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘சவேரா ஓட்டல்’ சக்ரவர்த்தியின் வேண்டுகோளை ஏற்று அவரின் குடும்ப விழாவில் பங்கேற்கக் காரில் சென்னையில் இருந்து கிளம்பினேன். என்னுடன் கார்ட்டூனிஸ்ட் மதன், முதுபெரும் இதழாளர்களான ராவ், கிருஷ்ணன் பாலா ஆகியோரும் வந்திருந்தனர். வழியில் ஒரு பீடா கடை அருகே காரை நிறுத்துமாறு மதன் கேட்டுக் கொண்டார். காரை நிறுத்திய டிரைவரிடம், “பீடா கடையில் குட்கா பாக்கெட்டுகள் வாங்கி வாருங்கள்” என்று கேட்டுக் கொண்டார். அடுத்த சில நிமிடங்களில் அவரின் கைக்கு குட்கா வந்து சேர்ந்தது. அப்போது நான் மதனை நோக்கி, “நீங்கள் இப்போது சாப்பிடப் போவது வேண்டுமானால் குட்காவாக இருக்கலாம் ஆனால் அது உடம்புக்கு பேட்கா” என்றேன்.

இந்த கமண்ட் கேட்டதும் மதன் உட்பட அனைவரும் அனுபவித்து ரசித்துச் சிரித்தனர். அப்போது மதன் என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். “எப்போது பேசினாலும் ஏதேனும் ஒரு சிலேடைச் சுவையோடு துணுக்குகளை உதிர்த்துக் கொண்டே இருக்கிறீர்கள். இவற்றை நாங்கள் மட்டும் ரசித்தால் போதுமா? குறித்து வையுங்கள். பின் தொகுத்து எழுதுங்கள். வாசகர்களுக்கு அதுவே விருந்தாகி விடும் என்று மதன் என்னிடம் கேட்டுக் கொண்டார்.”

அவரின் வழிகாட்டுதலையடுத்து நான் அவ்வப்போது உதிர்க்கும் சிலேடைச் சுவைகளே நூல் வடிவம் பெற்றுள்ளன.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580149307619
Nayam Pada Urai

Read more from R. Nurullah

Related to Nayam Pada Urai

Related ebooks

Related categories

Reviews for Nayam Pada Urai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nayam Pada Urai - R. Nurullah

    https://www.pustaka.co.in

    நயம்பட உரை

    Nayam Pada Urai

    Author:

    ஆர். நூருல்லா

    R. Nurullah

    For more books

    http://www.pustaka.co.in/home/author/r-nurullah

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    ‘சவேரா ஓட்டல்’ சக்ரவர்த்தியின் வேண்டுகோளை ஏற்று அவரின் குடும்ப விழாவில் பங்கேற்கக் காரில் சென்னையில் இருந்து கிளம்பினேன். என்னுடன் கார்ட்டூனிஸ்ட் மதன், முதுபெரும் இதழாளர்களான ராவ், கிருஷ்ணன் பாலா ஆகியோரும் வந்திருந்தனர்.

    வழியில் ஒரு பீடா கடை அருகே காரை நிறுத்துமாறு மதன் கேட்டுக் கொண்டார். காரை நிறுத்திய டிரைவரிடம், பீடா கடையில் குட்கா பாக்கெட்டுகள் வாங்கி வாருங்கள் என்று கேட்டுக் கொண்டார். அடுத்த சில நிமிடங்களில் அவரின் கைக்கு குட்கா வந்து சேர்ந்தது. அப்போது நான் மதனை நோக்கி, நீங்கள் இப்போது சாப்பிடப் போவது வேண்டுமானால் குட்காவாக இருக்கலாம் ஆனால் அது உடம்புக்கு பேட்கா என்றேன்.

    இந்த கமண்ட் கேட்டதும் மதன் உட்பட அனைவரும் அனுபவித்து ரசித்துச் சிரித்தனர். அப்போது மதன் என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார்.

    எப்போது பேசினாலும் ஏதேனும் ஒரு சிலேடைச் சுவையோடு துணுக்குகளை உதிர்த்துக் கொண்டே இருக்கிறீர்கள். இவற்றை நாங்கள் மட்டும் ரசித்தால் போதுமா? குறித்து வையுங்கள். பின் தொகுத்து எழுதுங்கள். வாசகர்களுக்கு அதுவே விருந்தாகி விடும் என்று மதன் என்னிடம் கேட்டுக் கொண்டார்.

    அவரின் வழிகாட்டுதலையடுத்து நான் அவ்வப்போது உதிர்க்கும் சிலேடைச் சுவைகளே நூல் வடிவம் பெற்றுள்ளன.

    இந்நூல் அச்சாகி வெளிவரும் போது ‘குட்கா’வுக்குத் தமிழக அரசு தடை விதித்து இருப்பது மகிழ்ச்சிக்குரியது.

    ஆர். நூருல்லா

    044 -245 12345

    96555 78786.

    பொருளடக்கம்

    தொட்டுக்க கோந்து

    தா... வரம்

    தொலைபேசி

    மடச் சாம்பிராணி

    ஆர்க்கியாலஜி ஆர்கேயாலஜி

    சோம்பல் நீக்கும் சோம்பு

    வேலையும் மூளையும்

    ‘ராம்’தான் பாதுகாப்பு

    நா... பேனா

    ஆ... காரம்

    பட்டதாரியா...? பட்டா தாரியா...?

    விடுதலை விளக்கம்

    ரிஷிகேஷா...? ரிஷியின் கேஷா...?

    பிரியாணி

    நோட்டு நோட்டம்

    அன்னா ஹசாரே

    கனிவு

    ஆரம்பம்

    சிரஞ்சீவி

    காலாட்சேபம்

    கொஞ்ச வா

    போலீஸ்

    அரிவாள்

    மணக்கும் மல்லிகை

    மேடையில் முழங்கு

    சாதிக்கப் பிறந்தவர்

    விண்ணப்பம்

    தர்மா மீட்டர்

    நிர்பந்தம்

    மிஸ்டேக்

    காலண்டர்

    கண் - நஹீ

    நாயண்ணே!

    குமரி அனந்தன் சூடு

    பட்டை பேனா

    நினைத்ததை முடித்த எம்ஜிஆர்

    அவசர உதவிக்கு

    வெற்றிப் படிகள்

    கதர்

    நீதிபதி மோகன்

    ராயல் டீ

    சரஸ்வதிக்குத் தொண்டு லட்சுமிக்குப் பரிசு

    சிரிக்கும் தோசை

    கொற்றவரைக்காய் - சேனைக்காய்

    கருத்த பேனா

    கால் பண்ணி

    கம்யூனிஸ்டு அலுவலகத்தில் சிவப்புப் பழம்

    கரன்ட் தாப்பர்

    ஆர். நூருல்லா, எம்.ஏ., எம்.பில்., பி.எல்.

    தொட்டுக்க கோந்து

    சேலம் மாநகரில் நான் சி.எஸ்.ஐ. உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலமது. ‘மாலை முரசு’ நாளிதழில் ‘தமாஷ்’ பகுதியை நான் விரும்பிப் படித்து வந்தேன். எனக்கும் அதில் எழுத வேண்டும் என்று ஆசை.

    ஒரு நாள் ஒரு அஞ்சல் அட்டையில் ‘தமாஷ்’ எழுதி அனுப்பினேன். அது பிரசுரம் ஆயிற்று. என் பெயரை நான் முதன் முதலில் செய்தித்தாள் அச்சில் கண்டது அப்போது தான். அதற்காக எனக்குச் சன்மானமாக ஒரு ரூபாய் மணி ஆர்டர் மூலம் வந்து சேர்ந்தது. அத்துடன் சன்மானம் பற்றிய குறிப்பையும் ‘மாலை முரசு’ இதழாளர்கள் அனுப்பி வைத்திருந்தனர். நான் இதழியலுக்குள் நுழையத் தூண்டுதலாக இருந்தது இந்த தமாஷ்தான். அது... இதோ...

    கணவன்: ஏன்டி சாப்பாட்டுத்தட்டுல தொட்டுக்கறதுக்கு கோந்து வெச்சிருக்கே.

    மனைவி: வேறொன்றும் இல்லிங்க. நீங்க சாப்புடற சாப்பாடு ஒடம்புல ஒட்டவே மாட்டேங்குதேன்னு மாமியாரு வருத்தப்பட்டுக்கிட்டாங்க. அது தான் கோந்து வச்சிருக்கேன்.

    பள்ளிப் பருவம் முடிந்து கல்லூரிக் காலத்தில் இருந்தபோது நான் பல்வேறு பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டேன். அதேபோலக் கவிதைப் போட்டி, நடிப்புப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டி எனப் பலவற்றிலும் பங்கெடுத்தேன். வெற்றிகளையும் என்னால் குவிக்க முடிந்தது. இந்த வெற்றிப் பட்டியல் அவ்வப்போது சேலம் மாலை முரசு, தினத்தந்தி நாளிதழ்களில் வந்தன. அப்போதெல்லாம் நான் செய்தித்தாளைக் கையில் வைத்துக்கொண்டு குதித்துக் கொண்டாடிக் குதூகலித்திருக்கிறேன்.

    ‘சேலத்தில் நேரு யுவக் கேந்திரா’ என்ற அமைப்பு உருவானது. இளைஞர்களை ஒருங்கிணைக்கும் மத்திய அரசின் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேலாயுதம், என்னை மாவட்ட இளைஞர் பிரிவின் பொதுச் செயலாளர் ஆக்கினார். அப்போதும் மாலை முரசு, தினத்தந்தி நாளிதழ்களில் என் பெயர் அடிக்கடி வரலாயிற்று. இவ்விரு இதழ்களுக்குத்தான் சேலத்தில் அப்போது தனிப்பதிப்புகள் இருந்தன.

    தா... வரம்

    சேலம் ஃபேர்லேன்ட்ஸ் பகுதியில் பாலசுப்ரமணியத் திருக்கோயில் உள்ளது. அந்த கோயிலின் அறங்காவலராக இருந்த ரங்கசாமிக் கவுண்டர் என்னை உரை நிகழ்த்த அழைப்பு விடுத்தார். அவரின் வேண்டுகோளை ஏற்று நானும் சென்று உரை நிகழ்த்தினேன். கந்தபுராணத்தின் ஒரு பகுதியை நான் சுருக்கமாகச் சொல்வது என்று ஏற்பாடாகி இருந்தது.

    நான் என் உரையின் துவக்கத்திலேயே இப்படிப் பேசினேன்.

    தாவரம் படித்தவன் நான். இறைவனிடம் ‘தா வரம்’ என்று கேட்கும் இடத்தில் இந்த தாவரனுக்கும் உரை நிகழ்த்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்றேன். அப்போது ஒரு பெண்மணி என்னை உற்று நோக்கினார். நான் தான் கவனிக்கவில்லை. விழா முடிந்தபின்பு அந்தப் பெண்மணி என்னிடம் நலம் விசாரித்தார். உரையை மெச்சிப் பேசினார். அவர்தான் அந்தக் கோயில் அறங்காவலர் ரங்கசாமிக் கவுண்டரின் மகள் மகாலட்சுமி. அன்று அவர்கள் என் தமக்கையாய் மாறினார்கள். 42 ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்டன. சென்னையில் உயர்தகுதியோடு வாழும் அவர் இன்றும் என் தமக்கையாய் அன்பு செலுத்துகின்றார்.

    தா வரம் என்ற யாசிப்பு இடத்தில் இறைவன் எனக்குத் தந்த வரமாய் புதிய உறவு. இப்போதெல்லாம் நண்பர்களிடம் உரையாடும்போது நான் வேடிக்கையாகக் குறிப்பிடும் வாசகம் இதோ.

    நான் கல்லூரியில் பாட்டனி படித்தேன். ஆனால் பாட்டு, அணி எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

    நான் படித்ததோ... தாவரம் பின்னர் இறைவனிடம் தா... வரம் என்று கேட்டேன். இறைவனும் எனக்கு, இங்கும் அங்குமாகச் செய்திக்காகத் தாவர நிருபர் வேலையைத் தந்துவிட்டான்.

    நான் சென்னைக்கு மாற்றலாகித் ‘தினமலர்’ செய்தியாளனாகப் பணியாற்றி வந்தபோது என் அக்கையார் மகாலட்சுமிக்குத் திருமணப் பேச்சு நடந்தது. மணமகனைப் பற்றிய தகவல்களைத் திரட்டும் பணி அடியேனிடம் ஒப்படைக்கப்பட்டது. நானும் களத்தில் இறங்கினேன்.

    அந்த வரன் பெயர் அம்பா ஷங்கர். மோனோடைப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளராக அவர் பணியாற்றி வந்தார். சென்னை அண்ணாசாலையில் டி.வி.எஸ். நிறுவனத்தையொட்டி இருக்கும் ஸ்மித் சந்தில் தான் அவரின் அலுவலகம் இருந்தது. பத்திரிகை நிறுவனங்களுக்கு அச்சு இயந்திரங்களை விற்பனை செய்யும் ஜெர்மன் நாட்டு நிறுவனத்தின் கிளை அது. எனவே தினமலர் நிறுவனமும் இவருடன் தொழில் சார்ந்த தொடர்பு கொண்டு இருந்தது. என் ஆசிரியரின் பணிப்பின் படி ஏற்கெனவே அம்பாஷங்கரிடம் நான் பேட்டி எடுத்துச் செய்தியை ‘தினமலர்’ நாளிதழில் எழுதி இருக்கிறேன்.

    எனவே தயக்கமே இன்றி அவரைத் தொடர்பு கொண்டேன். ‘பேச வேண்டுமே’ என்று அழைத்தேன். அவரும் ஒப்பினார். ஒரு நாள் பகல் 3 மணிக்கு பாம்குரோவ் ஓட்டலில் சந்திப்பது என்று ஏற்பாடு ஆனது அப்படியே சந்தித்தேன்.

    அவருக்குப் புகைப்பிடித்தல் மது அருந்தும் வழக்கம் போன்ற எவையேனும் உள்ளனவா என பேச்சுவாக்கில் தூண்டில் போட்டுப் பிடித்தேன். ஆனால் எதற்கு இப்படியெல்லாம் பேசுகிறேன் என்பது அவருக்குத் தெரியவே தெரியாது. அவரோ நட்புச் சார்ந்த உரையாடல் என்றே பேசிக்கொண்டு இருந்தார்.

    டிபன் சாப்பிட்டோம். பின் அவரே என்னைத் தன் காரில் அழைத்து வந்து என் அலுவலகத்தில் விட்டு விட்டுச் சென்றார். தன் நிறுவனத்தின் ஒரு டைரியையும் எனக்குப் பரிசளித்தார். அதில் வாசகம் எழுதிக் கை எழுத்துப் போட்டுக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டேன். அவரும் அப்படியே செய்தார்.

    சுமார் ஒன்றரை மணி நேர உரையாடலில் நான் திரட்டியத் தகவல்களை வரிசைப்படுத்தினேன். கடிதமாக்கி அதை மகாலட்சுமிக்கு அனுப்பி வைத்தேன். ஒரு வழியாக நிச்சயதார்த்த தேதி உறுதி செய்யப்பட்டது. எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது ரயிலுக்குப் போக பணம் போதவில்லை. லாரி பிடித்து சேலம் சென்றேன். நிச்சயதார்த்த நிகழ்ச்சியின் போது அம்பாஷங்கர் என்னைக்

    Enjoying the preview?
    Page 1 of 1