Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

India Sandhitha Vindhai Thalaivargal
India Sandhitha Vindhai Thalaivargal
India Sandhitha Vindhai Thalaivargal
Ebook210 pages1 hour

India Sandhitha Vindhai Thalaivargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அரசியல் தலைவர்களோடு அன்றாடம் பழகிய தினமலர் தலைமை நிருபரின் நேரடி அனுபவங்களின் தொகுப்பு இந்த நூல். இவை முழுக்க முழுக்கப் புதியனவாகவும், புல்லரிப்பைத் தரக்கூடிய நல்லுணர்வுத் திரட்டாகவும் இருக்கும். இந்திய அரசியல் சந்தையில் எத்தனையோ ருசிகர நிகழ்வுகள் இருட்டுக்குள் மறைந்து கிடக்கின்றன. அவற்றின்மீது வெளிச்சம் பாய்ச்சும் முயற்சியின் ஒரு கட்டம் இந்த நூல்.

Languageதமிழ்
Release dateJul 30, 2022
ISBN6580149308522
India Sandhitha Vindhai Thalaivargal

Read more from R. Nurullah

Related to India Sandhitha Vindhai Thalaivargal

Related ebooks

Reviews for India Sandhitha Vindhai Thalaivargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    India Sandhitha Vindhai Thalaivargal - R. Nurullah

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இந்தியா சந்தித்த விந்தைத் தலைவர்கள்

    (நிருபரின் நினைவு அலைகள்)

    India Sandhitha Vindhai Thalaivargal

    (Nirubarin Ninaivu Alaigal)

    Author:

    ஆர். நூருல்லா

    R. Nurullah

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-nurullah

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கருணாநிதியின் பூனை அரசியல்

    மைனா மகாத்மியம்

    தினத்தந்தியின் தனித்துவம்

    பி.எச். பாண்டியனின் எதிர்பாராப் புதிர்க்கோஷம்

    பாரதியார் பற்றி கண்ணதாசன்

    பாலிவுட் பாட்டரசன் முஹம்மத் ரஃபி மறைந்தார்

    தமிழர் வளர வழிகள் – ஊடகங்கள்

    ஞானியின் தீம்தரிகிட

    முறுவல் பூத்த முதல் குடிமகன்

    வேளாண் களத்தில் வென்று அரசியல் அரங்கில் சரிந்த நாராயணசாமி நாயுடு

    ஆயிரம் பிறை கண்ட சிரஞ்சீவி சிவகுமார்

    நடிகர் சிவகுமாரின் இளமை ரகசியம்

    காமராசர் கொண்டுவந்த கல்பாக்கம் அணுமின் திட்டம்

    தாங்கிப் பிடித்த குஜராத், தாக்கி இடித்த டில்லி ஜெயலலிதா சந்தித்த ஏற்ற இறக்கம்

    மோடியால் முடங்கிப்போன அத்வானி

    அரசியலில் அரிசியியல்

    மூப்பனாரைச் சீண்டிய நாஞ்சில் மனோகரன்

    கீழடியின் தொன்மை

    கலெக்டரின் கருணை

    வைகுண்டராஜன் (விவி மினரல்ஸ்)

    காவல்துறையில் தொல்லியல் நிபுணர்

    ராஜீவ் கொலை வழக்கு - கபில் சிபலின் சாகசம்

    ‘தி இந்து’ நாளிதழின் மாலினி பார்த்தசாரதி

    பாக்யராஜ் மீது எம்ஜிஆர் பாசம்

    செலவை குறைத்த டிப்ஸ்

    தூக்குக்கயிறு இங்கே! கபாலி எங்கே?

    மணியன் எனும் சாப்பாட்டு ராமன்

    கார்ட்டூனிஸ்ட் மதனின் சீர்திருத்தம்

    பெரியாரை மதித்த பரமாச்சாரியார்

    ராஜாஜி வீட்டில் நேரு

    தஞ்சை இடைத்தேர்தல்: இந்திராகாந்தி போட்டியிட எம்ஜிஆர் தடை

    எம்ஜிஆருடன் மோதிய நாஞ்சில் மனோகரன்

    எம்ஜிஆருக்கு எதிராக விசாரணை கமிஷன்

    நாடி வந்தோர்க்கு நலம் தந்த நாஞ்சிலார்

    கட்சியை உடைத்த பச்சை

    அரசியலில் பஞ்ச் டயலாக்

    உலகம் சுற்றும் வாலிபன்

    தூக்குக் கயிறு பார்சல்

    அமிதாப் பச்சன்

    ஒரே படத்தில் உச்சம் தொட்ட டிம்பிள் கபாடியா

    கிரீடத்தைச் சூட்டி... கழுத்தை வெட்டி... என்னிடம் பேசிய கலைஞர் கருணாநிதி

    லல்லுவின் பல்லு

    செம்மலையின் விமானம்

    இந்திராகாந்தியைத் தோற்கடித்த ராஜ்நாராயண்

    கில்ஜி போர்வையில் ஐ.ஏ.எஸ்.

    உன்னால் முடியும் தம்பி உதயமூர்த்தி

    சுனாமி எனும் ஆழிப்பேரலை

    முகமது ரபியின் ஷம்மி குழைவு

    இந்திப்பட காமெடியின் ஜானிவாக்கர்

    ராஜேந்திரகுமார் - பாலிவுட் பிரின்ஸ்

    நடமாடும் நகைக்கடை ஆதிகேசவன்

    ஆஷா பாரேக் – ரேகா - தனித்த வாழ்க்கை இனித்திடுமா?

    கருணாநிதியின் பூனை அரசியல்

    கலைஞர் கருணாநிதிக்குச் செல்லப் பிராணிகளை வளர்ப்பது என்றால் மிகவும் பிரியம். அவர் தன் இல்லத்தில் ஒரு நாய் வளர்த்து வந்தார். அதனுடன் கொஞ்சும்போது தனது பரபரப்பான சூழலில் சற்று இதமாகக் கண்டார். எனவே அந்த பழக்கத்தை அவர் வழக்கப்படுத்திக் கொண்டார்.

    கலைஞருடன் காலை நடைப்பயிற்சியில் உடன் சென்று கொண்டு இருந்தவர் நாகநாதன். இவர் சென்னை பல்கலைக்கழகப் பொருளியல் துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் இருந்தவர். கடந்த 2006-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்குக் காரணமாக இருந்ததே நாகநாதன் தயாரித்த திமுகவின் தேர்தல் அறிக்கைதான். எனவேதான் அவரையே மந்திரி சபையில் சேர்த்துக் கொண்டு நிதி அமைச்சராக்கலாம் என்று கலைஞர் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அந்த பொதுத் தேர்தலின்போது நாகநாதன் திமுக சார்பில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். எனவே அவர் அமைச்சர் பதவியை ஏற்கும் வாய்ப்பு நழுவிப் போயிற்று. மேலவை இருந்திருப்பின் கலைஞர் அவரை எம்.எல்.சி.யாக்கி அமைச்சராக நியமனம் செய்திருப்பார். ஆனால் எம்.ஜி.ஆர் தனது ஆட்சிக் காலத்தில் மேலவையைக் கலைத்துவிட்டார்.

    இத்தகு சிறப்பு கொண்ட டாக்டர். நாகநாதன் தனது வீட்டில் ஒரு பூனையை வளர்த்து வந்தார். அந்த பூனை ஒருமுறை 5 குட்டிகளைப் பெற்றெடுத்தது. அவற்றை கலைஞர் ஒருமுறை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது அந்தப் பூனைக் குட்டிகளின் சுறுசுறுப்பான விளையாட்டுகளைக் கலைஞர் வெகுவாக ரசித்தார். பின்னர் அவர் அந்த ஐந்து பூனைக்குட்டிகளில் ஒன்றை நாகநாதனிடம் இருந்து கேட்டுப் பெற்றார். அதனைத் தான் இல்லத்தில் வைத்து வளர்த்து வந்தார்.

    இந்த பூனையைப் பற்றி இங்கு விவரித்ததின் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு. கடந்த 1975-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அவசர நிலைச் சட்டம் 1977-ம் ஆண்டு திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. அவசர நிலைக் காலத்தில் மிசா சட்டத்தினால் திமுக தலைவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு சிறையில் வாடினார்.

    எனவே திமுகவினர் அக்காலத்தில் பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் மீது கடும் கோபத்தில் இருந்தனர். இந்த நிலையில் 1977-ல் மக்களவைப் பொதுத் தேர்தல் நடந்தது. இந்திராகாந்தி தலைமையிலாக காங்கிரஸ் கட்சி நாடெங்கும் படுதோல்வி அடைந்தது. தமிழகத்தில் மட்டும்தான் தேரியது. அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஒருங்கிணைத்து, ஜனதா கட்சியை உருவாக்கினார். ஜன சங்கம் கட்சிகூட இதில் சங்கமித்தது. ஜனதா உடைந்த பின்னர்தான் அக்கட்சியின் தலைவர்கள் பாரதீய ஜனதா கட்சியைத் தொடங்கினர்.

    1977-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனதா கட்சி மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. யார் பிரதமர் என்ற போட்டியில் மொரார்ஜி தேசாய், ஜகஜீவன் ராம், சரண் சிங் போன்ற தலைவர்கள் முட்டி மோதிக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலையிட்டு மொரார்ஜி தேசாயைப் பிரதமராக்கினார்.

    இந்த கால கட்டத்தில்தான் இந்திராகாந்தி தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். சென்னையிலும், மதுரையிலும் இந்திராகாந்தியின் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த நிலையில் இந்திரா சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கும் பின் அவர் கார் மூலம் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மாநகரின் மையப் பகுதியை நோக்கி வந்து கொண்டு இருந்தார். காலையில் அவர் இத்தகைய பயணம் நிகழ்த்திய போது கிண்டியில் ஹால்டா என்ற தொழில் நிறுவனத்தையொட்டி திமுகவினர் கூட்டமாக கூடி நின்றிருந்தனர். ஏற்கனவே இந்த போராட்டம் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு திட்டமிட்டு நடந்தது. எனவே ‘தினமலர்’ நிருபராக நானும் ஹால்டா நிறுவனம் அருகே நின்று கொண்டேன். என்னுடன் இந்து ஆங்கில நாளிதழின் செய்தியாளர் ஆர். பார்த்தசாரதியும் இருந்தார்.

    இதற்கிடையே காலையில் இருந்தே சென்னை மாநகரெங்கும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சைதாபேட்டையில் ஒரு ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது. அந்த ரயிலின் கருகிய கோலத்தைச் சுற்றி பார்த்த பின்னர்தான் நானும், ஆர். பார்த்தசாரதியும் ஹால்டா அருகே வந்தோம்.

    தற்போது அங்கு ஹால்டா நிறுவனம் இல்லை. ஆனால் அதற்கு எதிரில் செல்லம்மாள் மகளிர் கல்லூரி இன்றும் இருக்கிறது. இந்த இடத்தில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டு இந்திராகாந்தியின் காரை மறிக்கக்கூடும் என்ற தகவல் போலீசுக்குக் கிடைத்திருந்தது. எனவே அப்போதைய தென் சென்னை காவல்துறை துணை ஆணையராக இருந்த தேவாரம் அங்கு போலீஸ் படையுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டு இருந்தார். அவரின் இடுப்பில் கைத்துப்பாக்கி துடித்துக்கொண்டு இருந்தது.

    இந்திராகாந்தி வரும் நேரம் நெருங்கியதும் திமுகவினர் வீராவேசத்துடன் போர்க்குரல் எழுப்பி, சாலையின் மையப் பகுதிக்கு வந்தனர். அவர்களை அப்புறப்படுத்த காவல்துறையினர் முயன்றனர். எனவே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அங்கு கலவரக்காட்சிகள் அரங்கேறின.

    அப்போது தேவாரம் கடும் கூச்சலுடன் அந்த பகுதியை நெருங்கினார். தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தைக் கலைத்தனர். கூட்டத்தாரும் கல்வீச்சு நடத்தி போலீசாரை நோக்கி எதிர்த் தாக்குதல் நடத்தினர். நிலைமை எல்லை மீறிப் போவதாகத் தெரிந்தது. நிலவரம் கலவரமாகிப் போனதும் தேவாரம் திடீர் என்று தன் கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டார்.

    என் அருகே நின்றிருந்த தீனன் எனும் இளைஞர் துப்பாக்கிக் குண்டு துளைத்த நிலையில் சுருண்டு விழுந்தார். மற்றொருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இரவைத் தொடர்ந்து கூட்டம் சிதறி ஓடியது. அப்போதே தேவாரம் எங்களை அருகில் அழைத்தார், துப்பாக்கிச் சூடு நடத்துவதைத் தவிர வேறு வழி இல்லை. 1977-ல் குண்டடிபட்ட அந்த தலித் மனிதரின் பெயர் கிருஷ்ணன். தீவிர திமுக அனுதாபி. 2022-ம் ஆண்டுதான் அவர் இறந்து போனார். கலவரத்தை அடக்க துப்பாக்கியை ஏந்திவிட்டேன். இதில் ஒருவன் இதோ ஸ்பாட்டிலேயே இறந்து விட்டான். மற்றொருவனின் தொடையில் குண்டு பாய்ந்துவிட்டது. அவனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளோம் என்று மிகச் சாதாரணமாகப் பேட்டி அளித்தார்.

    அப்போது கலைஞரைக் கைதுசெய்து விட்டதாகவும் தகவல் வெளியானது. கலைஞர் கைதான போது அருகில் ராமதாஸ் எனும் நிருபர் இருந்தார். அவர் திமுக தரப்புச் செய்திகளில் தீவிர ஆர்வம் காட்டி வந்தவர். எனவே அவரைக் கலைஞர் அருகில் அழைத்து, நான் கைதாகி இருக்கிறேன். சிறைக்குக் கொண்டு செல்லப் போகிறார்கள். வேறு எந்த பிரச்னையும் எனக்கு இல்லை, வீட்டுக்குப் போன்செய்து நான் பத்திரமாகவே இருப்பதாக சொல்லி விடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

    இந்த செய்தியைச் சொல்ல பொதுத் தொலைபேசியை ராமதாஸ் அணுகியபோது செய்திகளைப் பரிமாறிக்கொள்ள நானும் அங்கு இருந்தேன். அப்போது ராமதாஸ் போன் மூலமாக கலைஞரின் வீட்டுக்கு இந்த தகவல்களைச் சொன்னபோது அதை நானும் செவிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எனவே இந்த தகவலையும் சேர்த்து தினமலர் நாளிதழுக்கு செய்தி அனுப்பி வைத்தேன். அந்த காலத்தில் தினமலர் பதிப்பு சென்னைக்கு வரவில்லை. இந்த சம்பவம் நடந்தது 1977-ல். தினமலர் சென்னை பதிப்பு தொடங்கியது 1979-ம் ஆண்டுதான். திருச்சி பதிப்புக்குத்தான் நான் செய்தி அனுப்பிக் கொண்டு இருந்தேன்.

    அதன்படி இந்த செய்தியையும் நான் சென்னை - வாலாஜா சாலையில் நாயுடு மேன்ஷன் கட்டிடத்தின் 2-ம் தளத்தில் இருந்த தினமலர் கிளை அலுவலகத்தில் இருந்து டெலிபிரிண்டர் வாயிலாக திருச்சி தினமலர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தேன். அந்த செய்தி முதல் பக்கத்தில் பெரிய அளவில் பிரசுரம் ஆயிற்று. அதில் ராமதாஸ் சொன்ன தொலைபேசித் தகவலுக்கு முக்கியத்துவம் அளித்து, செய்தி வெளியாகி இருந்தது. இந்த தகவல் வேறு எந்த பத்திரிகையிலும் வெளிவரவில்லை. எனவே எனக்கு இந்த செய்தி நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

    அந்த காலத்தில் தினமலருக்கான சென்னை புகைப்படங்களை சுபா சுந்தரம்தான் எடுத்துக் கொடுத்துக் கொண்டு இருந்தார். அந்த வகையில் இப்படங்களையும் அவர்தான் கொடுத்தார். அவற்றை நான் விமானம் மூலமாக திருச்சிக்கு அனுப்பி வைத்தேன்.

    சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட கருணாநிதி அங்கு இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டிருக்கும் பூனைகளை ரசித்தும் பொழுதைப் போக்கிக்கொண்டு இருந்தார். சிறைகளில் பூனைகளின் புழக்கமே கேளிக்கைக்கு விருந்தாகி இருந்தது.

    இப்படித்தான் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1