Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Suttachu Suttachu
Suttachu Suttachu
Suttachu Suttachu
Ebook396 pages2 hours

Suttachu Suttachu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1967-ம் வருடம். மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்ததாக ஞாபகம். அம்மாவின் தந்தையான தாத்தா திரு.வி.எஸ்.நாராயணன், தினமணி நாளிதழின் உதவி ஆசிரியராக இருந்தார். வளர்ந்தது பெரும்பாலும் தாத்தா, பாட்டி வீட்டில்தான்.

அந்த வீட்டில் வசித்தபோதுதான் ஒருநாள் மாலை திடீர் பரபரப்பு. எதிரே இருந்த டீக்கடை அவசர அவசரமாக மூடப்படுகிறது. சாரிசாரியாக மீர்சாகிப்பேட்டை மார்க்கெட் நோக்கி மக்கள் ஓடுகிறார்கள்.

ஒருவர் ஓடிவந்து பாட்டியிடம், "ஐயரூட்டம்மா.. எம்.ஜி.ஆரை சுட்டுட்டாங்களாம். ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில சேத்துக்கறாங்களாம். கடையெல்லாம் மூடிட்டாங்க. உனக்கு ஏதாவது வேணும்னா சொல்லு, இப்பவே வாங்கியாந்து கொடுத்திடறேன்” என்றார்.

பரபரப்பின் காரணம் அப்போதுதான் புரிந்தது. எங்களுடைய திவ்ய ஸ்தலங்களில் ஒன்றான ராயப்பேட்டை மருத்துவமனை, இப்பொழுது எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கும் திவ்ய க்ஷேத்திரமாகியது. காரணம், அவர்களின் இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அங்கே சிகிச்சை பெற்றதுதான்.

கூட்டத்தை வேடிக்கை பார்க்கத் துடிக்கும் ஒரு சிறுவனின் துடிப்பு. வீட்டில் பேசப்படுகிற, எழுகிற அரசியல் சர்ச்சைகளின் பாதிப்பு. அவ்வப்போது அப்பாவோடும் மாமாக்களோடும் பக்கத்து ஷேக் தாவூத் தெருவில் நடக்கும் தி.மு.க. கூட்டங்களுக்குப் போய், விவரம் புரியாமலே அவர்களின் வசீகரப் பேச்சில் வியந்து போன வயது. எல்லாமாகச் சேர்த்து சின்ன வயதில், ஏழுகடல், ஏழுகிணறு தாண்டி ராட்சஸனின் உயிரைத் தாங்கி நிற்கும் கிளிக்கதையை கேட்கிற ஆர்வம் மாதிரி, ‘எம்.ஜி.ஆர். சுடப்பட்ட சம்பவத்தை’க் கேட்கிற ஆர்வம் என் பால உள்ளத்தில் விழுந்தது.

ராதா-வில்லன்; எம்.ஜி.ஆர்.-கதாநாயகன். கதாநாயகனை வில்லன் வீழ்த்தியதாக எந்த எம்.ஜி.ஆர். படத்தையும் பார்த்ததில்லை. “திரையில் கண்ட சர்வ வல்லமை படைத்த எம்.ஜி.ஆரை எப்படி வில்லன் ராதா சுட முடியும்?” சினிமா என்கிற நிழல் வேறு, நிஜம் வேறு என்பதைப் புரிந்துகொள்ள முடியாத ஒன்று.

அந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆர்., பரங்கிமலை சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பசுபதி என்கிற காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டார். எம்.ஜி.ஆர். ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர். கழுத்தில் கட்டுப் போடப்பட்டிருந்தது. சட்டை இல்லாத வெறும் உடம்புடன், எம்.ஜி.ஆர். கைகூப்பியபடி வாக்குக் கேட்கும் சுவரொட்டிகள், தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டன.

தி.மு.க. பதவியேற்ற பிறகு 1968-ல் இருந்து எம்.ஜி.ஆரை, ராதா கொலை செய்ய முயன்ற வழக்கு விசாரணைக்கு வந்து, பிறகு 1969 வருடவாக்கில் உயர்நீதிமன்றத்துக்கு வந்தது. அரசுத் தரப்பில் பிரபல வழக்கறிஞர் வி.பி.ராமன், பின்னாளில் நீதியரசராக ஓய்வுபெற்ற பி.ஆர்.கோகுல கிருஷ்ணனும், ராதாவுக்காக கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்ட என்.டி. வானமாமலையும் வாதாடினார்கள்.

வழக்கின் சூடு பறக்கும் நீதிமன்ற வாக்குவாதங்கள், வழக்கு நடக்கும்போதெல்லாம் தினமணி நாளிதழில் வெளிவரும். படிக்கவே படு சுவாரசியமாக இருக்கும். ராதா சிறை சென்றார். எம்.ஜி.ஆர். மீண்டும் நடிக்க வந்து, தனிக்கட்சி தொடங்கி முதலமைச்சராகி 1987 டிசம்பர் 24 அன்று இயற்கை எய்தினார் என்பதெல்லாம் அனைவரும் அறிந்த கதை. நான் 1992 அக்டோபர் 1- ம் தேதி தினமணியில் பொறுப்பாசிரியராகச் சேர்ந்தேன்.

தினமணி கதிருக்கு ஒரு பரபரப்பான தொடர் தேவைப்பட்டது. சின்ன வயதில் சிந்துபாத் கதை மாதிரி தினமணியில் படித்த எம்.ஜி.ஆர்.-ராதா வழக்கு விசாரணை நினைவுக்கு வந்தது.

உடனே தினமணி நூலகம் ஓடினேன். 1967, 68, 69-ம் வருட தினமணி இதழ்களில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் மூழ்கினேன். வழக்கின் தீர்ப்பு நகல்களை மிகுந்த சிரமப்பட்டுப் பெற்றேன்.

இதை எப்படிச் சொல்வது என்று யோசித்தபோதுதான், ஓர் உண்மைச் சம்பவத் தொடரில் ஒரு கற்பனை நிருபர் பாத்திரத்தை நுழைத்தேன். பரபரப்பானதொரு தொடர் கிடைத்தது. பதிவு செய்யப்பட்ட வழக்கு நகல்களை மட்டுமே எடுத்துக் கையாண்டேன்.

வழக்கில் சம்பந்தப்பட்ட எம்.ஜி.ஆர்.- எம்.ஆர்.ராதா இருவரும் உயிருடன் இல்லை. சம்பவ தினத்தன்று ராதாவுடன், எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் சென்ற தயாரிப்பாளர் வாசு (பெற்றால் தான் பிள்ளையா தயாரிப்பாளர்) உயிருடன் இல்லை. ‘வழக்கு பற்றி தனக்குத் தெரியும்’ என்று சொல்பவர்களின் பேச்சு எத்தனை ஆதாரபூர்வமாக இருக்கும் என்ற சந்தேகம் இருந்தது. அதனால் கோர்ட், எஃப்.ஐ.ஆர்., வாதப் பிரதிவாதங்கள், கீழ்-மேல் கோர்ட் தீர்ப்புகளை மட்டுமே வைத்து எழுதினேன்.

ஒரு வரலாற்றுச் சம்பவத்தைப் பதிவு செய்த திருப்தி எனக்கு. நிறைவான பதிவுதானா என்பதை, படிக்கும் நீங்களும் காலமும்தான் சொல்ல வேண்டும்.

அன்புடன்,
சுதாங்கன்

Languageதமிழ்
Release dateJun 30, 2020
ISBN6580133005540
Suttachu Suttachu

Read more from Sudhangan

Related to Suttachu Suttachu

Related ebooks

Reviews for Suttachu Suttachu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Suttachu Suttachu - Sudhangan

    http://www.pustaka.co.in

    சுட்டாச்சு சுட்டாச்சு

    Suttachu Suttachu

    Author:

    சுதாங்கன்

    Sudhangan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sudhangan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    எம்.ஜி.ஆர் கொலை முயற்சி வழக்கு

    என்னுரை

    1967-ம் வருடம். மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்ததாக ஞாபகம். அம்மாவின் தந்தையான தாத்தா திரு.வி.எஸ்.நாராயணன், தினமணி நாளிதழின் உதவி ஆசிரியராக இருந்தார். எல்லாப் பத்திரிகைகளும் வீட்டுக்கு வரும் என்றாலும், தினமணியும் இந்தியன் எக்ஸ்பிரஸும் ஓசியில் தாத்தா வீட்டுக்குக் கண்டிப்பாக வரும். வளர்ந்தது பெரும்பாலும் தாத்தா, பாட்டி வீட்டில்தான்.

    அப்போது தாத்தா வீடு ஜாம் பஜார் காவல் நிலையம் எதிரிலுள்ள ஜானி ஜான்கான் தெருவில் இருந்தது. தெருவின் தெற்கே போனால் மீர்சாகிப்பேட்டை மார்க்கெட். அதையொட்டிச் செல்லும் சாலைதான் டாக்டர் பெசன்ட் சாலை. மேற்கு நோக்கிப் போனால் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு நடந்தே போய்விடலாம்.

    கோஷா மருத்துவமனையும், ராயப்பேட்டை பொது மருத்துவமனையும், சென்னை பொது மருத்துவமனையும் எங்கள் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்தவை.

    நானும் என் மூத்த சகோதரனும் பிறந்தது இந்த கோஷா மருத்துவமனையில். பிறந்த முதல் வாரமே இந்தக் குழந்தை இன்னும் சில நாள்களில் இறந்துவிடும் என்று மருத்துவர்களால் கணிக்கப்பட்டு, அந்தப் பெண் குழந்தை ஒரு மருத்துவ அதிசயமாக வளர்ந்து, இரு ஆண்பிள்ளைகளைப் பெற்றாள். அந்த இரு பிள்ளைகள்தான் நானும் என் மூத்த சகோதரனும். அன்றைய மருத்துவத்துக்கே சவாலாக விளங்கிய என் அம்மா, வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்தது ராயப்பேட்டை பொது மருத்துவமனையிலும் சென்னை பொது மருத்துவமனையிலும்தான். அதனால் இந்த இரு ஸ்தலங்களும் எங்களுக்கு அம்மாவை எப்போதும் தரிசிக்கும் திவ்ய ஸ்தலங்களாக மாறியது.

    10, டவுனிங் தெரு மாதிரி, எங்கள் குடும்பத்தின் ‘டவுனிங் தெரு’ அன்றைய எண் 57, ஜானி ஜான்கான் தெருதான். பெரும்பகுதி இஸ்லாமியர்கள், மற்றபடி கிறிஸ்துவர்கள், ஆங்கிலோ-இந்தியக் குடும்பங்கள்தான். அந்தத் தெருவில் சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக வசித்த ஒரே அந்தணக் கூட்டுக் குடும்பம் எங்களுடையதுதான்.

    வீட்டுக்கு எதிரே, காம்பவுண்ட் வைத்த ஒரு கூட்டத்தின் மாடியில், பத்திரிகைத் தந்தை அமரர் சி.பா.ஆதித்தனார், தம்முடைய ‘நாம் தமிழர்’ இயக்க அலுவலகத்தை வைத்திருந்தார்.

    அந்த வீட்டில் வசித்தபோதுதான் ஒருநாள் மாலை திடீர் பரபரப்பு. எதிரே இருந்த டீக்கடை அவசர அவசரமாக மூடப்படுகிறது. சாரிசாரியாக மீர்சாகிப்பேட்டை மார்க்கெட் நோக்கி மக்கள் ஓடுகிறார்கள்.

    வீட்டு வாசல் கதவை ஒட்டி மாடிக்குப் போகும் படிக்கட்டுகள். அங்கே அமர்ந்தபடி ஒன்றும் புரியாமல் வேடிக்கை பார்க்கிறேன். பாட்டிக்கு அந்தப் பகுதியில் செல்வாக்கு உண்டு. ரிக்ஷா ஓட்டுநர்கள் செல்வம், லெஃப்ட் கிருஷ்ணன் (அவருக்கு இடது கைப்பழக்கம்), முருகன் போன்றவர்கள் அவசர, ஆத்திரம் என்றால் பாட்டியிடம் வந்துதான் செலவுக்காகத் தலையைச் சொறிவார்கள்.

    பாட்டி மார்க்கெட் போக ரிக்ஷா ஓட்டுவதில் இருந்து, வார விடுமுறைகளில் வீட்டு ஒட்டடையடிக்கிற வரை எல்லாப் பணிகளையும் செய்வார்கள். அன்று முழுவதும் அவர்களுக்குப் பாட்டி கையால்தான் சாப்பாடு.

    அந்த விசுவாச ஊழியர்களில் ஒருவர் ஓடிவந்து பாட்டியிடம், ஐயரூட்டம்மா (பாட்டியை அப்படித்தான் அழைப்பார்கள்) எம்.ஜி.ஆரை சுட்டுட்டாங்களாம். ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில சேத்துக்கறாங்களாம். கடையெல்லாம் மூடிட்டாங்க. உனக்கு ஏதாவது வேணும்னா சொல்லு, இப்பவே வாங்கியாந்து கொடுத்திடறேன் என்றார்.

    பரபரப்பின் காரணம் அப்போதுதான் புரிந்தது. எங்களுடைய திவ்ய ஸ்தலங்களில் ஒன்றான ராயப்பேட்டை மருத்துவமனை, இப்பொழுது எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கும் திவ்ய க்ஷேத்திரமாகியது. காரணம், அவர்களின் இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அங்கே சிகிச்சை பெற்றதுதான்.

    அப்போது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய தேர்தல் நேரம். எல்லாத் தலைவர்களும் எங்கள் தெரு வழியே பிரசாரம் செய்துகொண்டு போவார்கள். தாத்தாவின் பத்திரிகைத் தொழிலும், அப்பாவின் அரசியல் ஈடுபாடும் கொண்ட சூழல் எனக்கு.

    எம்.ஜி.ஆர். சுடப்பட்ட சம்பவத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்புதான், அவர் திறந்த ப்பில், (வெள்ளைக் குல்லா இல்லாத எம்.ஜி.ஆர்.) வெள்ளை ஜிப்பா, கழுத்தில் கருப்பு, சிவப்புத் துண்டு சகிதமாக எங்கள் தெரு வழியாக, தி.மு.க.வுக்கு வாக்குச் சேகரிக்க வந்தார்.

    எங்கள் தெரு இருந்தது, ஆயிரம் விளக்கு தொகுதியில். அந்தத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் கே.ஏ.மதியழகன். அவருக்காகத்தான் எம்.ஜி.ஆர். வாக்கு கேட்டு வந்தார். அடுத்த சில நாள்களில் ஓர் இரவு நேரத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களும் வந்தது இன்றைக்கும் நினைவில் நிற்கிறது.

    கூட்டத்தை வேடிக்கை பார்க்கத் துடிக்கும் ஒரு சிறுவனின் துடிப்பு. வீட்டில் பேசப்படுகிற, எழுகிற அரசியல் சர்ச்சைகளின் பாதிப்பு. மவுண்ட் ரோட் சினிமா கொட்டகைகளுக்கு நடந்தே போகிற சவுகரியத்தால் ஏற்பட்ட சினிமா மோகம். அவ்வப்போது அப்பாவோடும் மாமாக்களோடும் பக்கத்து ஷேக் தாவூத் தெருவில் நடக்கும் தி.மு.க. கூட்டங்களுக்குப் போய், விவரம் புரியாமலே அவர்களின் வசீகரப் பேச்சில் வியந்து போன வயது. எல்லாமாகச் சேர்த்து சின்ன வயதில், ஏழுகடல், ஏழுகிணறு தாண்டி ராட்சஸனின் உயிரைத் தாங்கி நிற்கும் கிளிக்கதையை கேட்கிற ஆர்வம் மாதிரி, ‘எம்.ஜி.ஆர். சுடப்பட்ட சம்பவத்தை’க் கேட்கிற ஆர்வம் என் பால உள்ளத்தில் விழுந்தது.

    அப்பாவும் தாத்தாவும் நன்றாகக் கதை சொல்வார்கள். அடுத்தடுத்து பத்திரிகைகளின் பரபரப்புச் செய்திகள். அப்பாவும் தாத்தாவும் அதை விவரித்த முறைகள். எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா துப்பாக்கிச் சண்டை சம்பவம் மனத்தில் ஆழமாகப் பதிந்தது.

    ராதா-வில்லன்; எம்.ஜி.ஆர்.-கதாநாயகன். கதாநாயகனை வில்லன் வீழ்த்தியதாக எந்த எம்.ஜி.ஆர். படத்தையும் பார்த்ததில்லை. திரையில் கண்ட சர்வ வல்லமை படைத்த எம்.ஜி.ஆரை எப்படி வில்லன் ராதா சுட முடியும்? சினிமா என்கிற நிழல் வேறு, நிஜம் வேறு என்பதைப் புரிந்துகொள்ள முடியாத ஒன்று.

    அந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆர்., பரங்கிமலை சட்டமன்றத் தொகுதியில் (இப்போது ஆலந்தூர் தொகுதி) தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பசுபதி என்கிற காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டார். எம்.ஜி.ஆர். ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர். கழுத்தில் கட்டுப் போடப்பட்டிருந்தது. சட்டை இல்லாத வெறும் உடம்புடன், எம்.ஜி.ஆர். கைகூப்பியபடி வாக்குக் கேட்கும் சுவரொட்டிகள், தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டன.

    தி.மு.க. - சுதந்தரா - முஸ்லிம் லீக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. சுதந்தரம் பெற்றுத் தந்த கட்சி என்று சொல்லிக் கொண்டது காங்கிரஸ். இந்தத் தேர்தலுக்குப் பிறகு அவர்களால் இன்றுவரை எழ முடியவில்லை. இரு திராவிடக் கட்சிகளின் பல்லக்குத் தூக்கிகளாகவே மாறிப்போனார்கள்.

    தி.மு.க. பதவியேற்ற பிறகு 1968-ல் இருந்து எம்.ஜி.ஆரை, ராதா கொலை செய்ய முயன்ற வழக்கு விசாரணைக்கு வந்து, பிறகு 1969 வருடவாக்கில் உயர்நீதிமன்றத்துக்கு வந்தது. அரசுத் தரப்பில் பிரபல வழக்கறிஞர் வி.பி.ராமன், பின்னாளில் நீதியரசராக ஓய்வுபெற்ற பி.ஆர்.கோகுல கிருஷ்ணனும், ராதாவுக்காக கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்ட என்.டி. வானமாமலையும் வாதாடினார்கள்.

    வழக்கின் சூடு பறக்கும் நீதிமன்ற வாக்குவாதங்கள், வழக்கு நடக்கும்போதெல்லாம் தினமணி நாளிதழில் வெளிவரும். படிக்கவே படு சுவாரசியமாக இருக்கும். ராதா சிறை சென்றார். எம்.ஜி.ஆர். மீண்டும் நடிக்க வந்து, தனிக்கட்சி தொடங்கி முதலமைச்சராகி 1987 டிசம்பர் 24 அன்று இயற்கை எய்தினார் என்பதெல்லாம் அனைவரும் அறிந்த கதை.

    நான் 1992 அக்டோபர் 1- ம் தேதி தினமணியில் பொறுப்பாசிரியராகச் சேர்ந்தேன்.

    தினமணி கதிருக்கு ஒரு பரபரப்பான தொடர் தேவைப்பட்டது. சின்ன வயதில் சிந்துபாத் கதை மாதிரி தினமணியில் படித்த எம்.ஜி.ஆர்.-ராதா வழக்கு விசாரணை நினைவுக்கு வந்தது.

    உடனே தினமணி நூலகம் ஓடினேன். 1967, 68, 69-ம் வருட தினமணி இதழ்களில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் மூழ்கினேன். வழக்கின் தீர்ப்பு நகல்களை மிகுந்த சிரமப்பட்டுப் பெற்றேன்.

    இதை எப்படிச் சொல்வது என்று யோசித்தபோதுதான், ஓர் உண்மைச் சம்பவத் தொடரில் ஒரு கற்பனை நிருபர் பாத்திரத்தை நுழைத்தேன். பரபரப்பானதொரு தொடர் கிடைத்தது. பதிவு செய்யப்பட்ட வழக்கு நகல்களை மட்டுமே எடுத்துக் கையாண்டேன்.

    வழக்கில் சம்பந்தப்பட்ட எம்.ஜி.ஆர்.- எம்.ஆர்.ராதா இருவரும் உயிருடன் இல்லை. சம்பவ தினத்தன்று ராதாவுடன், எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் சென்ற தயாரிப்பாளர் வாசு (பெற்றால் தான் பிள்ளையா தயாரிப்பாளர்) உயிருடன் இல்லை. ‘வழக்கு பற்றி தனக்குத் தெரியும்’ என்று சொல்பவர்களின் பேச்சு எத்தனை ஆதாரபூர்வமாக இருக்கும் என்ற சந்தேகம் இருந்தது. அதனால் கோர்ட், எஃப்.ஐ.ஆர்., வாதப் பிரதிவாதங்கள், கீழ்-மேல் கோர்ட் தீர்ப்புகளை மட்டுமே வைத்து எழுதினேன்.

    எம்.ஆர்.ராதா இறக்கும் முன்பு கல்கண்டு பத்திரிகையில் தன் வாழ்க்கைத் தொடரைத் தொடங்கினார். அது முழுமை பெறாமலேயே முடிவுற்றது. அந்தத் தொடரை பிரதி எடுத்துத் தந்து உதவினார் லேனா தமிழ்வாணன். அது மட்டுமே கொஞ்சம் கூடுதல் தகவல்கள் தந்தது. தொடராக வந்தபோது, பரபரப்பு, கூடுதல் விற்பனை, விறுவிறுப்பாக இருந்தது என்று அன்றும் வாசகர்கள் சொன்னார்கள்.

    இந்தப் புத்தகத்துக்காக ‘கம்போஸ்’ செய்த நண்பர்கள் கதிரவனும் மனோஜும், இன்றும் சுவாரசியமாக இருப்பதாகச் சொன்னார்கள்.

    ஒரு வரலாற்றுச் சம்பவத்தைப் பதிவு செய்த திருப்தி எனக்கு. நிறைவான பதிவுதானா என்பதை, படிக்கும் நீங்களும் காலமும்தான் சொல்ல வேண்டும்.

    சென்னை -35.

    6.12.2004

    அன்புடன்,

    சுதாங்கன்

    உள்ளே

    1. அத்தியாயம்

    2. அத்தியாயம்

    3. அத்தியாயம்

    4. அத்தியாயம்

    5. அத்தியாயம்

    6. அத்தியாயம்

    7. அத்தியாயம்

    8. அத்தியாயம்

    9. அத்தியாயம்

    10. அத்தியாயம்

    11. அத்தியாயம்

    12. அத்தியாயம்

    13. அத்தியாயம்

    14. அத்தியாயம்

    15. அத்தியாயம்

    16. அத்தியாயம்

    17. அத்தியாயம்

    18. அத்தியாயம்

    19. அத்தியாயம்

    20. அத்தியாயம்

    21. அத்தியாயம்

    22. அத்தியாயம்

    23. அத்தியாயம்

    24. அத்தியாயம்

    25. அத்தியாயம்

    26. அத்தியாயம்

    27. அத்தியாயம்

    28. அத்தியாயம்

    29. அத்தியாயம்

    பின்னிணைப்பு

    (தீர்ப்புக்குப் பின்)

    1. அத்தியாயம்

    நந்தாவுக்கு வேலை பிடித்திருந்தது. சம்பளம் குறைவுதான். நூற்றி ஐம்பது ரூபாய் சம்பளத்தை மூன்று தவணையாகக் கொடுக்கிற நாளிதழின் நிருபர் அவன். புதிதாகத் தொடங்கப்பட்ட நாளிதழ். இப்போதுதான் மார்க்கெட்டில் அவனுடைய செய்தித்தாள் தின ஒளியின் பெயர் சூடுபிடித்துக் கொண்டு இருந்தது. பத்திரிகையின் பெயர் அத்தனை பிரபலமில்லைதான். ஆனாலும் தேர்தல் நேரம் நிருபர்களுக்கெல்லாம் ஏகமரியாதை. எல்லாக் கட்சிக்காரர்களிடமும் ராஜமரியாதை. நந்தாவுக்குப் பெருமிதமாக இருந்தது. சேர்ந்த கொஞ்ச நாளிலேயே சர்வகட்சித் தலைவர்களுக்கும் அவன் அறிமுகம். தொழிலுக்குப் புதியவன் என்றாலும்கூட அரசியல்வாதிகள் அவனை மதித்தது அவனுக்குப் பெருமையாக இருந்தது.

    அரசியல், சினிமா, கிரைம், கார்ப்பரேஷன், மருத்துவமனை என்று சகல செய்திகளுக்கும் அவன் ஒருவன்தான். பெரும்பாலும் போனிலேயே செய்தி வாங்கி விடுவான். பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம்தான். அரசியல் அலை எந்தக் கட்சிப் பக்கம் வீசுகிறது என்பதைக் கண்டுகொள்ளும் அனுபவம் அவனுக்கில்லை. ஆனாலும் தி.மு.க. கூட்டங்களுக்கு அலை அலையாகக் கூடுகிற கூட்டம் மட்டும் ஒரு பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அவன் உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருந்தது.

    நந்தாவுக்குக் கட்சி சார்பில்லை என்றாலும்கூட அண்ணா, கருணாநிதியின் பேச்சுகள் அவனை வெகுவாகக் கவர்ந்தன. அவனுடைய பத்திரிகை முதலாளியும் அவனைப் பெரும்பாலும் தி.மு.க. கூட்டங்களுக்கே அதிகம் போகச் சொன்னார். சம்பளம் சரியாகக் கொடுக்காவிட்டாலும், வேலை வாங்குவதில் படு கில்லாடி அவனுடைய முதலாளி சபேசன். தெற்கத்திக்காரர். ‘நந்தகுமார்’ என்கிற அவன் பெயரை ‘நந்தா’வாக ஆக்கியதும் அவர்தான்.

    நந்தா, பேப்பர் நிறைய வித்தா, சம்பளமும் கரெக்டா வரும்பா என்று சம்பள பாக்கிக்கு ஆறுதல் சொல்வார் சபேசன். சபேசன் வீடு ராயப்பேட்டையில் இருந்தது. பத்திரிகை ஆபீஸும், அவர் வீட்டுக்கு மிகப் பக்கத்தில்தான். நந்தாவுக்கு மீர்சாகிப் பேட்டையில் வீடு. காலையில் ஏழு மணிக்கு எழுந்து தயாராகி விடுவான். தமிழகத்தின் தலையெழுத்தைத் தீர்மானிப்பதில் தனக்கும் பெரும் பங்கிருப்பதாக அவனுக்குள் ஒரு பெருமை. முதல் வேலை முதலாளி வீட்டுக்குப் போவதுதான். நந்தா, காங்கிரஸ் செய்திக்கெல்லாம், ஏஜென்ஸி காப்பி எடுத்துக்கலாம். தி.மு.க. கூட்டத்துக்கே போ. அவங்க பேச்சை பேப்பர்ல போட்டாத்தாம்பா பார்க்கவும் நல்லா இருக்கு என்பார். அதனால் தினமும் அவனுக்கு தி.மு.க. வட்டாரத்தில்தான் அதிகம் வேலை.

    தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே 1967 பிப்ரவரி மாதப் பொதுத் தேர்தலை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம். அன்றைக்கு வியாழக்கிழமை. காலையிலேயே சென்னை நகரம் லேசான மேகமூட்டத்துடன்தான் இருந்தது. வழக்கம்போல் நந்தா குளித்துவிட்டு ஆபீஸுக்குக் கிளம்பினான்.

    இரண்டு நாள்களாகவே முதலாளியிடம் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறான் நந்தா. சார், எம்.ஜி.ஆர். அவருடைய பரங்கிமலை தொகுதியில் தேர்தல் பிரசாரம் ஆரம்பிச்சுட்டாராம். போன இடமெல்லாம் ஏகக்கூட்டம் சேருது. நாம் அவரைப் பற்றி எழுதினா அவருடைய ரசிகர்களெல்லாம் பேப்பர் வாங்க ஆரம்பிப்பாங்க... நந்தாவின் உற்சாகம், சபேசனுக்குப் பிடித்திருந்தது. ஆனாலும் அவரால் உடனடியாக அவனை அனுப்ப முடியவில்லை. தேர்தல் பிரசார வேலைக்கு அவனை அனுப்பி விட்டால் மற்ற செய்திகளைச் சேகரிக்க அலுவலகத்தில் வேறு நிருபர் கிடையாது.

    நந்தாவின் வேண்டுகோளை ஏற்று மூன்று நாள் கழித்து - ஜனவரி 12-ம் தேதி வியாழக்கிழமை-போக அனுமதித்தார். முதலாளியின் அனுமதி வாங்கி, எம்.ஜி.ஆர். குடியிருந்த மணப்பாக்கம் வீட்டுக்கு இவன் போய்ச் சேரும்போது, மணி காலை 9.00 ஆகி இருந்தது. எம்.ஜி.ஆரின் வீட்டில் தேர்தல் களை கட்டி இருந்தது. ஏராளமான கறுப்பு - சிவப்புக் கொடிகள், போஸ்டர்கள் அந்தப் பகுதி முழுவதும் நிரம்பி இருந்தன. எம்.ஜி.ஆர். வீட்டின் பச்சைநிற கேட்டைத் திறந்து நந்தா உள்ளே போனபோது அருகில் இருந்த செக்யூரிட்டிக் கூண்டில் இருந்து வெளிப்பட்டார் வாட்ச்மேன். ஏற்கெனவே இரண்டு, மூன்று முறை எம்.ஜி.ஆ ஆர். தோட்டத்துக்குப் போயிருக்கிறான் நந்தா. அதனால் வாட்ச்மேன் பப்பச்சனுக்கு இவன் பத்திரிகை நிருபர் என்பது தெரியும். மலையாளம் கலந்த தமிழில் பேசினார் பப்பச்சன். எந்தா, தம்பி, இத்தினி நேரம் தாமதிச்சி வருது. சார், காலைல எட்டு மணிக்கே கிளம்பிப் போயிச்சு. நிறைய நிருபருங்களும் போயிருக்காங்களே என்றார்.

    இன்னிக்கு எந்த ஏரியாவில் பிரசாரம் செய்கிறார் தெரியுமா?

    வேளச்சேரின்னு நினைக்கிறேன் என்றவர், உள்ளே போய் யாரையோ விசாரித்துவிட்டு வந்தார்.

    ஆமாம் தம்பி, வேளச்சேரி, நாராயணபுரம்தான் இன்னிக்கு புரோகிராம். நீ இங்கிருந்து எப்படிப் போவே? தம்பி நீ வேணும்னா கொஞ்சம் வெயிட் பண்ணு. ஏதாவது வண்டி, ஸாருக்கு ஜூஸ், பால்னு ஏதாவது எடுத்துக்கிட்டுப் போகும். அதுல போயிரு. பப்பச்சன் சொன்னதும் சரியாகத்தான் பட்டது. கொஞ்ச நேரம் தோட்டத்து வாசலிலேயே நின்று கொண்டிருந்தான் நந்தா. நிறைய பேர் வந்துகொண்டே இருந்தார்கள். எங்கோ தொலைதூரத்தில் இருந்தெல்லாம் வந்தவர்கள் எல்லோர் முகத்திலும் கோவில் வாசலுக்கு வந்ததைப் போல உற்சாகம். தெய்வம் இல்லையா? என்று கேட்டபடிதான் வந்தார்கள்.

    பொறுத்துப் பார்த்தான் நந்தா. எந்த வாகனமும் அங்கிருந்து நகருவதாக இல்லை. அவன் தனியாகப் போய் பிரசார இடத்தை அடைய முடியாது. நாளைக்குச் சீக்கிரமாக வந்து பிரசாரத்தில் சேர்ந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தான் நந்தா. பப்பச்சனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

    பஸ்ஸில் ஆபீஸ் திரும்பும்போதுதான் நந்தா அந்த போஸ்டரைப் பார்த்தான். மறுநாள் எம்.ஜி.ஆர். நடித்த தாய்க்குத் தலைமகன் படம் ரிலீஸ். அவன் முழு எம்.ஜி.ஆர் ரசிகனில்லை. ஆனாலும், எல்லாப் படங்களையும் முதல் நாள் பார்க்கிற ஆர்வம் உண்டு. இந்த வாரம் இரண்டு படம் ரிலீஸ். நாளைக்கு எம்.ஜி.ஆர். படம். அதற்கு அடுத்த நாள் சிவாஜி நடித்த கந்தன் கருணை ரிலீஸ் ஆகிறது. எப்படியும் ஞாயிற்றுக்கிழமைக்குள் படம் பார்த்துவிட வேண்டும். மனத்துக்குள் தீர்மானம் செய்துகொண்டான்.

    ஆபீஸுக்குத் நந்தா திரும்பியபோது மணி 11.30 ஆகி இருந்தது. அன்றைக்கு அத்தனை பரபரப்பில்லை. வழக்கமான தேர்தல் பிரசாரம்தான். சூடான அறிக்கைகள்தான் வந்து கொண்டிருந்தன. போலீஸ் வட்டாரத்திலும் அத்தனை பரபரப்பில்லை. சபேசன் எங்கோ வெளியே போயிருந்தார். ஆபீஸ் கிளார்க்கிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான். லேசாகப் பசியெடுக்க ஆரம்பித்தது. பக்கத்து ஸ்டாலில் டீ குடித்துவிட்டு, ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் பஸ் நிலையம் வந்தான். அவன் வந்த நேரத்துக்கும், 21-ம் நம்பர் பஸ் வரவும் சரியாக இருந்தது. அவன் வீட்டுக்கு அந்த பஸ் போகாது. ஆனாலும், வெலிங்டன் தியேட்டர் போகும். அங்கு ரிலீஸாகிற எம்.ஜி.ஆர். படத்துக்கு டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். பத்திரிகையாளர் காட்சிக்கு ஏனோ அவன் பத்திரிகைக்கு அழைப்பு வருவதில்லை. தியேட்டருக்குப் போய், டிக்கெட் வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போனான்.

    சாப்பிட்டு முடிந்ததும் சற்று அலுப்பாக இருந்தது. லேசாகத் தலை சாய்த்தபோது, அலுப்பில் கண்கள் இறுக்க, ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கிப் போனான். கண் விழித்துப் பார்த்தபோது, வெளியே இருள ஆரம்பித்திருந்தது. பதறி அடித்துக்கொண்டு எழுந்து, முகம் கழுவி, வெளியே ஓடி வந்தான். எதிரே மளிகைக்கடை போனுக்கு ஓடினான். அந்தப் பதற்றத்தில் கூட்டம் கூட்டமாக மக்கள் நின்று பேசிக் கொண்டிருந்ததைக் கவனிக்கவில்லை. போன் செய்யப் போனபோது மளிகைக்கடை நாடார்தான் கேட்டார், தம்பி நீங்க நிருபர்தானே? உங்களுக்கு விஷயம் தெரியுமா? எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா சுட்டுட்டாராமே? ஊரெல்லாம் ஒரே பரபரப்பா இருக்கு என்றார். திகைத்துப் போனான் நந்தா.

    ஒரு நாள் மத்தியானம் தூங்கியதில் முக்கிய செய்தி தெரியாமல் போச்சே என்று தன்னையே நொந்து கொண்டான்.

    தெரியலீங்க, இப்ப கேட்டுச் சொல்றேன்.

    ஆபீஸுக்குப் போனைச் சுழற்றினான். சபேசன்தான் எடுத்தார்.

    நந்தா, எங்கே போனே, எம்.ஜி.ஆரை, ராதா சுட்டுட்டார். சீக்கிரம் ஆபீஸுக்கு வா.

    சார், எத்தனை மணிக்கு சார் நடந்தது?

    ஒரு அஞ்சு மணிக்குன்னாங்க. நீ வேணும்னா கண்ட்ரோல் ரூம்ல கேட்டுப் பாரேன்.

    சரி, சார்

    போனை கட் பண்ணிவிட்டு, கண்ட்ரோல் அறைக்கு போன் செய்தான்.

    தகவல் உறுதியானது.

    மாலை ஐந்து மணி சுமாருக்கு, எம்.ஜி.ஆரை அவரது மணப்பாக்கம் வீட்டில் சந்தித்தார் ராதா. அங்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. ராதா துப்பாக்கியை எடுத்து எம்.ஜி.ஆரின் கழுத்தில் சுட்டார். பிறகு தன் நெற்றியிலும் சுட்டுக் கொண்டார். இருவரையும் ஜி.ஹெச்சுக்குக் கொண்டு போயிருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்தது.

    மளிகைக்கடை நாடாரிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு வேகமாக மீர்சாகிப்பேட்டை மார்க்கெட் தாண்டி மெயின் ரோட்டுக்கு வந்தான்.

    கறுப்பு, சிவப்புக் கொடி, வேஷ்டி சகிதமாக வெறித்தனமாக ஒரு எம்.ஜி.ஆர். ரசிகர் கூட்டம் கடைகளை அடைக்கச் சொல்லி மிரட்டிக் கொண்டே சாலையின் குறுக்கே வந்து கொண்டிருந்தது. போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    அந்தப் பகுதி முழுவதிலும் பீதி பரவ ஆரம்பித்தது.

    2. அத்தியாயம்

    இருள் கவிய ஆரம்பித்திருந்த அந்த மாலை நேரம். நந்தா மீர்சாகிப்பேட்டை மார்க்கெட் தாண்டி, பெசன்ட் சாலைக்கு வந்தான்.

    எம்.ஜி.ஆரைச் சுட்டுட்டாங்க, சுட்டுட்டாங்க என்று அலறியபடியே ஓர் இளைஞர் கூட்டம், ராயப்பேட்டையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. அதில் சிலர், கடையை மூடுங்கடா என்று கடைக்காரர்களைப் பார்த்து சத்தம் போட்டுக் கொண்டே ஓடினார்கள். பதற்றத்துடன் கடைகள் மூடப்பட்டன. நந்தா மெயின் ரோட்டுக்கு வரவும் 24-ம் நம்பர் பஸ் வரவும் சரியாக இருந்தது. விஷயம் பரவ ஆரம்பித்தால் பஸ் போக்குவரத்து நின்றுவிடும். முதலில் தன் பத்திரிகை ஆபீஸுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தான் நந்தா. பஸ்ஸில் ஏறி, ராயப்பேட்டை சிக்னல் அருகே இறங்கிக் கொண்டான். நேராக இடதுபுறம் திரும்பி ராயப்பேட்டை காவல் நிலையம் இருந்த திசையை நோக்கி வேகமாக ஓடினான். அதற்கு அருகில்தான் அவனுடைய தின ஒளி பத்திரிகை அலுவலகம். ஆபீஸ் போகும் முன்பு காவல் நிலையம் போனால் ஏதாவது தகவல் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் ஸ்டேஷனுக்குள் நுழைந்தான். ஸ்டேஷனில் ஒரு பரபரப்பு தெரிந்தது.

    ஸ்டேஷனில் அவனுக்கு எல்லோருமே நன்கு பழக்கமானவர்கள்தான். அவன் உள்ளே நுழைந்தபோது ஹெட் கான்ஸ்டபிள் ராமமூர்த்தி தொலைபேசியில் ஒருவிதப் பதற்றத்துடன் பேசிக் கொண்டிருந்தார். போனை வைத்துவிட்டு நந்தாவைப் பார்த்ததும் வாப்பா என்றபடி அவன் காதருகே வந்து, விஷயம் தெரியுமில்ல? என்று கேட்டார்.

    தெரியும் சார், கேள்விப்பட்டேன். என்ன சார் ஆச்சு?

    ஏதோ பட விஷயமா எம்.ஜி.ஆர்.கிட்ட பேசப் போனாராம் ராதா. அதில் ஏதோ பிரச்னை. துப்பாக்கியை எடுத்துச் சுட்டுட்டாராம் ராதா.

    உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே?

    அப்படித்தாம்பா நினைக்கிறேன்.

    எந்த ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்காங்க?, நந்தா கேட்டான்.

    ஜி.ஹெச்சுக்குத்தான் போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

    ஹெட் கான்ஸ்டபிள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, போன் அடித்தது. பதற்றத்துடன் போனில் பேசிவிட்டு உடனே நந்தாவிடம், ராயப்பேட்டைக்குத்தான் கொண்டு வராங்களாம், ஓடு ஓடு என்றார்.

    நந்தா அவசரமாக வெளியே ஓடி எதிர்த் தெருவில் இருந்த தன் அலுவலகத்தை நோக்கி விரைந்தான். சபேசன் அவனுக்காக வெளியே காத்துக் கொண்டிருந்தார்.

    என்ன நந்தா? சபேசன் குரலிலும் பதற்றம்.

    சார், ராயப்பேட்டை ஹாஸ்பிடலுக்குத்தான் கொண்டு வராங்களாம். நான் அங்கப் போயிட்டு உங்களுக்கு உடனே போன்ல தகவல் கொடுக்கிறேன். பெருமாள் வந்தான்னாக்க அவனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வையுங்க. நான் ராத்திரி எம்.ஜி.ஆர். தோட்டத்துக்குப் போய் என்ன நடந்ததுன்னு விசாரிச்சுட்டு உங்களுக்குப் போன்ல தகவல் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்தான். சபேசன் அவனைக் கையைப் பிடித்து நிறுத்தினார். தன் சட்டைப் பையில் இருந்து நூறு ரூபாயை எடுத்து அவன் கையில் கொடுத்தார். செலவுக்கு வச்சுக்க என்றார்.

    பணத்தை வாங்கி அவசரமாகப் பையில் திணித்துக்கொண்டு பஸ் ஸ்டாண்டை நோக்கி ஓடினான். கால்களைவிட யோசனை வேகமாகப் பறந்தது. இதுபோன்ற சமயங்களில் எப்படியெல்லாம் ஆபீஸுக்குச் செய்தி கொடுப்பது என்பதில் அவனுக்கு அத்தனை அனுபவம் இல்லை. இருந்தாலும் சமாளித்துவிடலாம் என்கிற தெம்பு மட்டும் மனத்தில் இருந்தது. பெருமாள் அவ்வப்போது அவன் பத்திரிகைக்குச் செய்தி கொடுத்து பணம் வாங்கிப் போகும் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர். மருத்துவமனையில் நடப்பதை எல்லாப் பத்திரிகைகளும் செய்தியாக்கி விடும். ஆனால், சம்பவம் எப்படி நடந்தது? எம்.ஆர். ராதா எத்தனை மணிக்கு எம்.ஜி.ஆர். வீட்டுக்குப் போனார்? உண்மையில் அங்கு நடந்தது என்ன? என்ற விவரங்களை மற்ற பத்திரிகைகளைக் காட்டிலும் தான் அதிகம் கொடுக்க வேண்டும் என்பதை மட்டும் அவனது உள்மனது உணர்த்திக் கொண்டே இருந்தது.

    அவன் மருத்துவமனையை நோக்கி விரைந்தபொழுது தெரு முழுவதும் கூட்டம். கடைகள் மூடப்பட்டிருந்தன. அங்கிருந்து இரண்டு நிமிட நடையில் மருத்துவமனைக்கு வந்து விட்டான். அப்போது மணி மாலை 6.00-ஐத் தாண்டி இருந்தது. மருத்துவமனை வாசல்

    Enjoying the preview?
    Page 1 of 1