Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ini Nitham Yutham Part - 2
Ini Nitham Yutham Part - 2
Ini Nitham Yutham Part - 2
Ebook81 pages43 minutes

Ini Nitham Yutham Part - 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அழகான பதுமையான அனுபமா அபிஷேக் உடன் சேர்ந்து பணத்திற்காக செய்த காரியம் என்ன? வறுமையில் வாடும் இளங்கோவை சூழ்ச்சி வலையில் சிக்க வைத்தது யார்? பெரும் கோடீஸ்வரனான ரத்ணபூபதி செய்த முட்டாள்தனத்தால் அவருக்கு நேர்ந்ததை பரத்துடன் சேர்ந்து நாமும் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ப்போம் வாருங்கள். இனி நித்தம் யுத்தம்...

Languageதமிழ்
Release dateJul 9, 2022
ISBN6580100908677
Ini Nitham Yutham Part - 2

Read more from Pattukottai Prabakar

Related to Ini Nitham Yutham Part - 2

Related ebooks

Reviews for Ini Nitham Yutham Part - 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ini Nitham Yutham Part - 2 - Pattukottai Prabakar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இனி நித்தம் யுத்தம் பாகம் – 2

    Ini Nitham Yutham Part – 2

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அன்புள்ள உங்களுக்கு...

    வணக்கம்,

    நண்பர்கள் சுபாவுடன் தஞ்சை போனபோது சிவகங்கை பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். நாம் ஏன் இணைந்து ஒரு பப்ளிகேஷன்ஸ் துவங்கக் கூடாது என்று கேட்டேன். அவர்களுக்கும் யோசனை பிடித்தது.

    முதலில் மாத நாவல்களில் துவங்கி பிறகு வார இதழ் துவங்குவதாக திட்டம் வகுத்தோம். உதயமானது உங்கள் ஜூனியர் மாத இதழ். ஒரு இதழில் நானும் மறு இதழில் அவர்களும் என்று மாறிமாறி நாவல்கள் எழுதினோம். அதன் அடுத்தக் கட்டமாக இரண்டாவதாக துவங்கியது உல்லாச ஊஞ்சல் என்னும் மாத இதழ் என் நாவல்கள் மட்டும், தவிர பல்சுவைப் பகுதிகள். எதிர்கால வார இதழ் அனுபவத்திற்கு முன்னோட்டமாக இந்தப் பல்சுவைப் பகுதிகளில் வித்தியாசமான பகுதிகளும், போட்டிகளும், வாசகர்களின் பங்களிப்பும் அமைத்தோம்.

    அட்டைப் படங்களை செட் போட்டு மாடல்களை வைத்து புகைப்படம் எடுத்தோம். (எடுத்தவர் எங்கள் நண்பரும் இன்றைய ஏஸ் இயக்குனருமான கே.வி. ஆனந்த்) வருடம் ஒருமுறை வாசகர்களில் தேர்வு செய்யப்பட்டக் குழு ஒரு இதழைத் தயாரித்தது. மாதாமாதம் மாவட்டத் தலைநகரங்கள் சென்று வாசகர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தினோம். புதிய புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்தோம். இன்றைய பல பிரபல பிரமுகர்கள் முன்னாட்களில் எங்கள் இதழ்களில்தான் தங்கள் படைப்புப் பயணத்தைத் துவங்கினார்கள் என்பதில் எங்களுக்குப் பெருமை.

    10 வருடங்களில் 120 இதழ்கள்! பிறகு விஜய் மல்லையா நிறுவனங்களின் பங்குகள் போல மாத நாவல்களின் கவர்ச்சியும் ஆதிக்கமும் இறங்கத் துவங்கியது. டெலிவிஷன் என்கிற விஞ்ஞான அசுரனுக்கு முதலில் தீனியானது மாத நாவல்கள்தான். ஆனால் அந்த பத்தாண்டுகளில் பெற்ற அனுபவங்கள் விலை மதிப்பில்லாதவை.

    துப்பறியும் நாவல்கள் எழுதுவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். மூளைக்குள் கட்டங்கள் அமைத்து கற்பனையில் காய்களை நகர்த்தி விளையாடும் சதுரங்கம் போன்ற சுவாரசிய சவால். ரசித்து ரசித்து எழுதியவை, ரசித்து ரசித்து படிக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கில் எழுதி விட்டுத் திரும்பிப் பார்த்தால் ஒரே ரத்த வாடையும், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுகளும், போலீஸ் சைரன்களும் கனவிலும் துரத்தின. பிறகு துப்பறிவதை கொஞ்சம் சைடில் வைத்துவிட்டு காதலிக்கவும், கிச்சுகிச்சு மூட்டவும் துவங்கினேன். ரொமான்சும், நகைச்சுவையும், சமூகமும் எளிதாய் வந்தன. அவையும் வரவேற்பைப் பெற்றன. இப்படி ஆல் ரவுண்டாவதற்கு பேனா பிடித்ததிலிருந்து சுமார் பத்து வருடங்கள் பிடித்தது. ஆனாலும் இப்போதும் என்னை க்ரைம் கதை எழுத்தாளனாக மட்டும் சிலர் அடையாளப்படுத்தும்போது கொஞ்சம் மனம் கோணிக்கொள்ளும்.

    இனி நித்தம் யுத்தம் கதை இரண்டு பாகங்களாக எங்கள் சொந்த இதழான உல்லாச ஊஞ்சல் இதழ்களில் எழுதப்பட்ட ஒரு த்ரில்லர். கதையைச் சுருக்கமாக இங்கே சொன்னாலும் கூட சுவாரசியம் போய்விடும் என்பதால் கதையைப் பற்றி இதற்கு மேல் சொல்வதாக இல்லை.

    இந்தப் புத்தகத்திற்கு அட்டை வடிவமைத்த என அன்பு மகள் ஸ்வர்ண ரம்யாவுக்கு என் சந்தோஷ கைகுலுக்கலுடன் கூடிய நன்றியும்...

    பிரியங்களுடன்,

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    1

    அடையாறு போலீஸ் ஸ்டேஷன். கிரைம்ஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் லாக்கப் அறையில் உதடு கிழிந்து பரிதாபப் பார்வை பார்த்துக்

    Enjoying the preview?
    Page 1 of 1