Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vidiyum, Velicham Varum
Vidiyum, Velicham Varum
Vidiyum, Velicham Varum
Ebook127 pages49 minutes

Vidiyum, Velicham Varum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திட்டம் போட்டு வாரத்திற்கு, மாதத்திற்கு, இத்தனை பக்கம் என்று எழத முடியாத எழுத்தாளன் நான். எனவே தான் 42 ஆண்டுகளில் 15 புத்தகம் மட்டுமே. ஏதாவது ஒரு பேச்சு, ஒரு நிகழ்ச்சி, ஒரு அனுபவம் நம்மை பாடாய்படுத்தி, மனதை பிசையும் போது, கதையாய், நாவலாய் வடிவம் பெறுகிறது. நெருங்கிய உறவினர் வீட்டு கல்யாண சம்பவம் கதையாய் நான் எழுத, கல்கி வார இதழ், நல்ல படத்துடன் முதல் கதையாக வெளியிட உறவினர் கோர்ட்டுக்கு போவேன் என்று கடிதம் எழுத, வக்கீல் பையன் நான் என்று நானும் என்கிற அனுபவம் கிடைத்தது. அதுபோன்ற பல வித்யாச சிறுகதைகள் இந்த தொகுப்பில்.

Languageதமிழ்
Release dateSep 4, 2023
ISBN6580169110142
Vidiyum, Velicham Varum

Related to Vidiyum, Velicham Varum

Related ebooks

Reviews for Vidiyum, Velicham Varum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vidiyum, Velicham Varum - Na. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    விடியும், வெளிச்சம் வரும்

    (சிறுகதைகள்)

    Vidiyum, Velicham Varum

    (Sirukathaigal)

    Author:

    நா. நாகராஜன்

    Na. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/na-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கதைகளின் கதை

    நேற்றைய தேவதை

    பாவ புண்ணியம்

    அரண்மனை ரகசியம்

    சிறுகதை கடிதத்துடன்

    ஹிட்லர் வம்சம்

    பார்வைகள் மாறும்

    வளர் பிறை கனவுகள்

    இறந்த காலம்

    ஒன்றும் இல்லாத நேரம்

    காசு உள்ளவன்

    இன்னொரு தேவதை

    விடியும் வெளிச்சம் வரும்

    தேன் கிண்ணம்

    கலாச்சாரம்

    கதைகளின் கதை

    நேற்றுதான் நடந்தது போல் இருக்கிறது, திரு. இனியவன் இலக்கிய வீதி மதுராந்தகம் 1980-ல் நடத்திய சிறுகதை போட்டியில், என் சிறுகதை, சில ஆதாரங்கள் முதல் பரிசு பெற்றது. கதையை தேர்வு செய்தவர், எழுத்து சித்தர் திரு. பாலகுமாரன் அவர்கள்.

    நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்டது என் எழுத்து, பணியிலும் வயதிலும்.

    நண்பன் ரகோத்தமனுடன் நெல்லை ஆரம்ப சுகாதார அலுவலக கிரவுண்டிலும், அவன் வீட்டு திண்ணையிலும் உட்கார்ந்து இரவு பதினோரு மணி வரை இலக்கியம், சினிமா, கிரிக்கெட் பற்றி பேசியதும் பிறகு அவன் சென்னை தனியார் கம்பெனியிலும் நான் தூத்துக்குடி துறைமுக கீழ் நிலை குமஸ்தவாக தேர்வு பெற்றதும் குடும்பம் நிம்மதி பெருமூச்சு விட்டதும், தனி கதை.

    திரு. ல. ரகோத்தமன் அவர்களின் சிறுகதை அதே சில ஆதாரங்கள் தொகுப்பில் இரண்டாம் பரிசு பெற்றது. எனக்கு அவன் வித்யாசமான சிந்தனை, கதை சொல்லும் விதம் பிடிக்கும். திரு. மௌனி மாதிரி குறைந்த அளவில் சிறுகதை எழுதி இருந்தாலும் அவன் அதில் தன்னை நிரூபித்து காட்டினான்.

    அலுவலக தோழர்கள் தயவில் செம்மலர், தாமரை மாத பத்திரிகையில் குடும்ப கதைகள் எழுதிய என்னை ரகுதான் கணையாழி, காலச்சுவடு என்று மடை மாற்றினான்.

    கணையாழி கதையை படித்துவிட்டு யதார்த்த எழுத்தாளர் திரு. அசோகமித்திரன் போஸ்ட் கார்டு போட்டதும், கல்கிக்கு நாலு சிறுகதைகள் அனுப்ப சொன்னதும், அந்த நாலும் கல்கியில் பிரசுரம் ஆனதும், பிறகு கல்கியில் 51 கதைகள், ஆனந்த விகடன், குமுதம், சாவி, தினமணி கதிரில் கதைகள் வந்ததும் தனி கதை. என் துறைமுக நண்பர்கள் என் புத்தகங்களை வாங்கி ஆதரித்ததும், நாலு நாவல், ஆறு சிறுகதை தொகுப்பு, இரண்டு நகைச்சுவை தொகுப்பு, ஒரு கட்டுரை தொகுப்பு, ஒரு புது கவிதை தொகுப்பு வெளியிட்டு உதவிய காவ்யா திரு. சண்முக சுந்தரம், கௌரா, திரு. ஜெய் கணேஷ், அமிர்தம் பதிப்பக செந்தலை நெப்போலியன் மற்றும் வெளியீட்டு விழாக்களுக்கு வந்த என் மகன் நாராயணன், மகள் ஸ்ரீவித்யா, செலவை சமாளித்து குடும்பம் திறம்பட நடத்த உதவும் மனைவி, புஸ்தகா புத்தகங்களை எனக்கு நேரில் வழங்கிய நெய்வேலி பாரதி குமார், சிறுகதை சக்ரவர்த்தி திரு. ரிஷபன், மற்றும் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இந்த சிறுகதை தொகுப்பை முறையுடன் நெட் புக் ஆகவும், அச்சடித்து அழகாய் வெளியிடும் புஸ்தகா நிறுவனத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. ஏற்கனவே என் நாவல் அய்யர் வளவு அமேசான் வெளியிடாக இ-புக் வடிவத்தில் வந்தது. சிறுகதை, என் வீட்டில் நான் இல்லை அமேசான் போட்டி கதையாக இ-புக் வடிவில் வந்தது. பிறகு என்றும் உள்ளவர்கள் சிறுகதை தொகுப்பும், எழுதாத பக்கங்கள் (குருநாவல், மற்றும் சிறுகதைகள்) ஈரோடு மின்கவி தயவில் அமேசான் மூலம் இ-புக் மற்றும் புத்தக வடிவம் பெற்றது.

    தாமரையில் வெளிவந்த என் சிறுகதை திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்ற கதையில் என் பெயர் பிரசுரம் ஆகவில்லை.

    துறைமுக கணக்கு அதிகாரி திரு. முத்துசாமி அவர்கள், தாமரைல ஒரு சிறுகதை படித்தேன். ஆசிரியர் பெயர் போடலை. அப்படியே உங்கள் நடை என்றார்.

    என்ன தலைப்பு? என்று நான் கேட்டதற்கு தலைப்பை சொன்னார். என் கதையேதான்.

    அடுத்த மாத தாமரையில் ஆசிரியர் பெயர் விடுபட்டதை சொல்லி இருந்தார்கள்.

    திரு. ஜெயகாந்தன், திரு. கி. ராஜ நாராயணன், திரு. வண்ணதாசன், திரு. சோ. தர்மன், திரு. அபிமானி, திரு. பூமணி, திரு. ஸ்ரீதர கணேசன், திரு. எட்வின் சாமுவேல், திரு. ஏ.ஏ ஹெச், கே. கோரி, திரு. எஸ். சங்கர நாராயணன், கவிஞர் உதயக் கண்ணன் (என் முதல் நாவல் பதிப்பாளர்), திரு. சுப வீர பாண்டியன், கனி முத்து பதிப்பகம் (என் முதல் சிறுகதை தொகுப்பு), போன்றோற்கு என் அன்பும் நன்றியும். யார் பெயராவது விடுபட்டு இருந்தால் மன்னிக்கவும். நாலு குறும்படம், இரண்டு பெறும்படம் தலையை காட்ட வைத்த நண்பர்களுக்கும் நன்றி. சில ஆண்டுகள் முன் எனது நாவல், தொடர்பு எல்லைக்கு வெளியே காவ்யா பிரசுர வெளியீட்டிற்கு முதல் பரிசு வழங்கிய தக்கலை அகில இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவைக்கும், எனது மூன்றாவது சிறுகதை தொகுப்பு, என்றும் உள்ளவர்கள் (காவ்யா வெளியீடு) பரிசுக்கு தேர்வு செய்த திருப்பூர் தமிழ் சங்கத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    இறுதியாக ஒரு வார்த்தை.

    அன்பே வெல்லும். நட்பே ஜெயம்.

    என் முதல் சிறுகதை தலைப்பு.

    என்றும் அன்புடன்,

    நா. நாகராஜன்.

    ப்ளாட் நம்பர் ஹெச் 2, பிளாட் நம்பர் 90,

    சக்திவேல் பிராபர்ட்டிஸ் பில்டிங்ஸ்,

    காளிதாஸன் தெரு, எம்.ஜி நகர் பகுதி இரண்டு,

    அன்னை அஞ்சுகம் நகர், ஊரப்பாக்கம்,

    சென்னை 603 211.

    கைபேசி 8778935252.

    நேற்றைய தேவதை

    சென்னை பேருந்து நிலையத்தில் நாளை முதல் தொடங்க இருந்த இருவார ஊரடங்கிற்காக சொந்த ஊர் செல்ல மக்கள் அலை மோதினர்.

    நாலாயிரம் பஸ்கள் விட்டாலும் தென் தமிழக மக்கள் முக்கால் வாசிப்பேர் பிழைக்கவோ, படிக்கவோ, சினிமா முயற்சிக்காகவோ கனவு பூமியாம் சென்னையில் கால் பதித்ததால், உயிர் பிழைக்க, பாதுகாப்பு நாடி அம்பைக்கோ, சாயர்புரத்திற்கோ பஸ்ஸூக்கு காத்திருந்தனர்.

    இரவு பதினொன்று தாண்டிய நேரம்.

    இன்று மட்டும் ஊரடங்கு விலக்கு.

    மக்கள் செய்வதறியாமல் தவித்தனர்.

    ஊரே ரசிக்கும் பட்டிமன்ற பேச்சாளன் நெல்லை நாதனுக்கு ஒன்றும் தோன்றவில்லை.

    இந்த சமயம் வந்திருக்க கூடாது. தனிக்கட்டைதானே என்ற தைரியம்.

    நேரம் செல்ல செல்ல கூட்டம் நம்பிக்கை இழந்தது.

    அந்த நேரத்தில் அந்த மதிய வயதுப் பெண்ணின் பேச்சை எல்லாரும் சூழ்ந்து நின்று கேட்டனர். ஒரு பதினாறு வயது பெண்ணும், கையில் ஒரு சிவப்பு ட்ராலி பேகும் வைத்திருந்த பெண் செல்லில் பயமின்றி நிலைமையை விளக்கிக் கொண்டு இருந்தாள்.

    யாருக்கும்மா ஃபோன்? கூட்டம் கேட்டது.

    முன்பக்க

    Enjoying the preview?
    Page 1 of 1