Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sainthu Kolla Thol Vendum
Sainthu Kolla Thol Vendum
Sainthu Kolla Thol Vendum
Ebook149 pages40 minutes

Sainthu Kolla Thol Vendum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மென்மையான தென்றல் இந்தக் கதை. வல்லினம் எழுத்திலும் அதிகம் இல்லை. சம்பவங்களிலும் அதிகம் இல்லை.
எனவே மிருதுவான சலசலப்பில் செல்லும் தெளிவான நீரோடை போல் ஓடுகிறது கதை.
ராம்சங்கர் என்ற ஒரு உண்மை நபர் வாழ்க்கையில் இருப்பாரோ தெரியாது.
ஆனால் நம் ஒவ்வொரு மனத்திலும் ஒரு ராம்சங்கர் ஒளிந்து கொண்டிருக்கிறார்.
அந்த ராம்சங்கர் ஒரு வசுந்தராவை நாடும் ஏக்கம் நம் மனங்களில் எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.
வாழ்க்கையில் இம்மாதிரி அந்தரங்கத்து விருப்பங்கள் (ஆசை என்று போட விரும்பவில்லை) எல்லாம் எல்லோருக்கும் வெறும் சொப்பனங்களாகப் போய்விடும்.
வசுந்தரா என்பவளை சந்திக்கவும் முடியாது. அவளிடம் தனி உறவு கொள்ளவும் முடியாது.
ஆனால் கதையில் பாருங்கள்.
கற்பனை என்று தெரிந்தால் கூட வசுந்தரா மெள்ள மெள்ள ஆச்சரியமாக ஒரு நிஜ உரு போல ஆகிறாள்.
அவளும், அவள் கணவர் சிவராமனும் நடத்தும் வாழ்வை இதோ நம் கையால் தொட்டுவிடலாம் போல இருக்கிறது.
கதையும் முடியும்போது அவர்கள் நிஜங்களாகவே நம் மனதில் பதிந்துவிடும் பிரமை நன்கு விழுந்து விடுகிறது.
நாம் ஒரு சாளரத்தின் வழியே ராம்சங்கர், வசுந்தரா, சிவராமன் இவர்கள் வாழ்வை நேரில் பார்க்கும் அனுபவம் ஏற்படுகிறது.
இந்த ஆச்சரிய அனுபவத்திற்கு கதை மட்டும் அல்ல, ஆசிரியரின் நடையும், எடுத்துச் செல்லும் பாங்கும் மிக அருமையாக உதவுகின்றன.
கதை நம் மனங்களில் வெகுகாலம் ரீங்கரிக்கும்.
புஷ்பா தங்கதுரை
Languageதமிழ்
Release dateMay 13, 2020
ISBN6580133005372
Sainthu Kolla Thol Vendum

Read more from Sudhangan

Related to Sainthu Kolla Thol Vendum

Related ebooks

Reviews for Sainthu Kolla Thol Vendum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sainthu Kolla Thol Vendum - Sudhangan

    http://www.pustaka.co.in

    சாய்ந்து கொள்ள தோள் வேண்டும்

    Sainthu Kolla Thol Vendum

    Author:

    சுதாங்கன்

    Sudhangan

    For more books

    http://pustaka.co.in/home/author/sudhangan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    கவியரசு வைரமுத்து அவர்களின் முன்னுரை

    வாழ்க்கை ஒரு சமுத்திரம்.

    அலை - சுழல் - அழகு - அபாயம் அனைத்தும்கொண்டது அது.

    நேற்றைய நீள அகலங்களை மறுதலித்து இன்று புதிதாய் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே - வளர்ந்து கொண்டேயிருப்பது வாழ்க்கைச் சமுத்திரம்.

    இலக்கியங்களும் தத்துவங்களும் கலைகளும் அந்தச் சமுத்திரத்தை அடையாளம் காணவும் அடக்கி ஆளவும் கண்டு களிக்கவும் கரை கட்டவும் பிறந்தவை.

    மற்றெல்லாவற்றையும் விட கலை இலக்கியப் படைப்புதான் வாழ்வை அளக்கும் வசதியான கருவியாகப்படுகிறது.

    என் அருமை நண்பர் சுதாங்கன் அவர்கள் இந்தச் சிறிய ஆனால் வலிய படைப்பில் மனித மனச் சமுத்திரங்களின் ஆழத்தில் மூழ்கி மூழ்கி முத்துக் குளித்திருக்கிறார்.

    வாழ்வியலும் உளவியலும் முற்றிலுமாய் முரண்பட்டுப் போய்விடுகிற சமூக அமைப்பில் வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசியத்தை இலக்கியத்தில் கொண்டு வந்திருக்கிறார்.

    ‘சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்’ என்பது இந்தப் படைப்பில் ஒரு பாத்திரத்தின் குரலாக இல்லாமல் ஏறத்தாழ அனைத்துப் பாத்திரத்தின் குரலாகவும் ஒலிப்பது இதன் அபூர்வம்.

    சுதாங்கன் அவர்களின் துணிச்சலை நான் போற்றுகிறேன்.

    அவர் எல்லாத் துறைகளிலும் துணிச்சல் கொண்டவர் என்பதை நான் அறிவேன் என்ற போதிலும் இந்த நாவலுக்கான கருவைத் தேர்ந்து கொண்ட துணிச்சலை மீண்டும் பாராட்டுகிறேன்.

    வீட்டுத் தோட்டத்தில் பூப்பறித்துக் கொள்வதுமாதிரி எழுதுகிறவனையோ வாசகனையோ வலி செய்யாத எத்தனையோ ‘சைவ’ உள்ளடக்கங்கள் இருக்க ஆபத்தான ஓர் ‘அசைவ’ உள்ளடக்கத்தைச் சுதாங்கன் அவர்கள் துணிச்சலாகத் தொட்டிருக்கிறார்.

    ராம்சங்கர் - வசுந்தரா - சிவராமன் என்ற மூன்று பாத்திரங்களும் வாழ்ந்த பாத்திரங்களாகவும் சமூகத்தில் வாழும் குறியீடுகளாகவும் தோன்றுகின்றன.

    தகப்பன்தான் ஒரு மகனுக்கு முதல் தோழனாக முதல் ஆசானாக திகழவேண்டும்.

    இது ஒன்றும் லட்சியவாதமில்லை ; யதார்த்தவாதம்.

    ராம்சங்கரின் தந்தையை அப்படி வார்த்திருக்கிறார் சுதாங்கன் அவர்கள்.

    தகப்பனைக் கண்ணனாய் மகனை அர்ச்சுனனாய் ஆக்கி ஒரு பகவத்கீதை போதிக்கிறார் படைப்பாளர்:

    இதப்பாரு ராமு.... மார்க்குகள் வேணும்தான். அதற்காக மார்க் வாங்காதவங்களெல்லாம் முட்டாளில்லை. பல்கலைக்கழகங்கள் கற்றுக் கொடுக்காததை பல படைப்பாளிகள் கத்துக் கொடுப்பாங்க. மார்க் வாங்க முயற்சி பண்ணு. வாங்க முடியலைன்னா சோர்ந்து போயிடாதே. இவ்வளவு சொல்றியே, நீ ஏன் முன்னேறலைன்னு கேக்கலாம். நான் இனிமேல் என்னைத் திருத்திக்க முடியாது. ‘புத்திசாலிகள் அடுத்தவர் அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்வார்கள். முட்டாள்கள் தாங்களே அனுபவித்துத் தெரிந்து கொள்வார்கள்’ னு ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. நீ புத்திசாலியா இரு. என் அனுபவத்திலிருந்து நீ பாடம் படிக்கணும்

    - இப்படி நெறிப்படுத்துகிற தந்தை இருந்தால் ஒவ்வொரு மகனுக்கும் சுதாங்கன் பாஷையில் சொல்வதானால் அவர்தான் ‘ஹீரோ.’

    வசுந்தரா மீது ராம்சங்கருக்கு இருக்கும் மது மயக்கத்தை எல்லை தாண்டாமல் கையாண்டதும் கடைசி வரைக்கும் அதைக் கொச்சைப்படுத்தாமல் கட்டிக் காத்ததும் இளமையின் நாகரிகம் என்பதை விட இலக்கிய நாகரிகம் என்பேன்.

    அந்த மயக்கத்தைப் பாலியல் சார்ந்ததாகத் தடம் மாற்றிவிடாமல் - இந்த வயசில் அது ஓர் ஈர்ப்பு அது மனசைப் போட்டுக் குழப்பும். ஆனால் அதுதான் தூண்டுகோல்.அவங்க எதிர நாம சாதித்துக் காட்டணுங்கிற வெறி இருக்கணும் என்று சிதைக்கிற சக்தியை வார்க்கிற சக்தியாக மாற்றும் ரசவாதம் ஒரு பழுத்த படைப்பாளிக்கே கைவரும்.

    அது சுதாங்கன் அவர்களுக்கு வந்திருக்கிறது.

    சிவராமன் பாத்திரத்தை அவர் வனைந்திருக்கிற விதம் ஒரு நேர்த்தியான படைப்பாளியின் இலக்கிய நுட்பத்திற்குச் சான்று.

    சிவராமனின் மரணத்தின்போது வசுந்தராவின் கண்ணீர் இரண்டாம் கண்ணீராகவும் வாசகனின் கண்ணீர் முதல் கண்ணீராகவும் மாறிவிடுவதே இந்தப் படைப்பின் நேர்த்திக்குக் கிடைத்த வெற்றி.

    சுதாங்கன் அவர்களின் பரந்த படிப்பும் வாழ்வியல் அனுபவமும் மனிதர்களின் உள்மனது தேடியலையும் கூர்மையான பார்வையும் அழுத்தமான அறிவும் அழகிய நகைச்சுவையும் இந்தப் படைப்பை உன்னதமாக வார்ப்பதற்குப் பெரிதும் பயன்பட்டிருக்கின்றன.

    "காதல் புரிதல் ஒரு சுகம்.

    காதல் தெரிதல் ஒரு சுகம்.

    காதல் மறைத்தல் ஒரு சுகம்.

    பதில்களில்லா கேள்விகள் சுகம்.

    நிஜங்களில்லா கனவுகள் சுகம்.

    காமமில்லா தீண்டல்கள் சுகம்.

    காயங்களில்லா ஊடல்கள் சுகம்.

    ஏன்... எதுதான் சுகமில்லை?"

    ஆம் எதுதான் சுகமில்லை?

    சுதாங்கனின் இந்தப் படைப்பை இரண்டாம் முறை வாசித்து வசியமாவது உட்பட!

    பின்குறிப்பு : நண்பர் சுதாங்கன் ‘பத்திரிகையாளர்’ என்ற முகத்தை விட ‘படைப்பாளர்’ என்ற முகத்தையே இன்னும் இன்னும் வளர்த்தெடுக்க வேண்டும்.

    அவரால் முடியும்.

    வாழ்த்துகிறேன்.

    அன்போடு...

    வைரமுத்து

    பழ. கருப்பையா அவர்களின் முன்னுரை

    சுதாங்கனை உரையாளர் (பாஷ்யகர்த்தா) பி.ஸ்ரீ.யின் மகன் வயிற்றுப் பேரனாகவும் பெருமைக்குரிய கால்வழியினராகவும் அறிவேன்.

    பின்னர் நாளிதழ் ஆசிரியராகவும் தாளிகை ஆசிரியராகவும் தொலைக்காட்சியாளராகவும் நான் அறிந்தேன். இந்தப் புதினம் அவருடைய இன்னொரு பரிமாணத்தை என்னை அறியச் செய்தது. அவர் படைப்பிலக்கியக்காரரும் ஆவார் என்பதே அது.

    கூரறிவுடையவர்; தேர்ந்த அரசியல் நோக்காளர்; மைதானத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட பந்தயக் குதிரை நிலைகொள்ளாமல், கால் பாவாமல் நிற்பதுபோல, எதிலும் பரபரவென்று இருப்பார்; காலம் ஓடுவதற்கு முன் கடுகி ஓடி எதுஎதையெல்லாமோ சாதித்து முடித்துவிட வேண்டும் என்னும் ஆழ்மன உந்துதலே அவருடைய பரபரப்புக்குக் காரணம்!

    இந்தப் புதினம் அளவில் சிறியது; ஆனால் ஆழமான உணர்வுகளை உள்ளடக்கியது.

    ‘கார்’ (car) எவ்வளவு தொலைவும் ஓடலாம்; ஆனால் தேர் அளந்துதான் ஓடும்; ஆண்டுக்கொரு முறைதான் ஓடும். ஓடுவதற்கு முன்னும் ஓடி முடிந்தபின்னும் தேரோட்டம் பேசப்படும்.

    பேசப்படுகிற ஒரு புதினத்தைப் படைத்திருக்கிறார் சுதாங்கன்.

    ஒரு இளையோனும் ஒரு இளையோளும் ஒருவரை நோக்கி ஒருவர் ஈர்க்கப்படுவதையும், அந்த ஈர்ப்பு எதிர்ப்புக்குள்ளாவதையும், அதற்குக் காரணமாகச் சாதியோ, மதமோ, பணமோ குறுக்கிடுவதையும், அவற்றை மீறி இணைய அவ்விளையோர் போராடுவதையும் போராட்டம் வெற்றியிலோ சாவிலோ முடிவதையும், எதில் முடிந்தாலும் அவர்கள் இணைப்பைத் தடுக்கின்ற ஆற்றல் அவர்கள் இருவருமல்லாத மூன்றாவது சக்திக்குக் கிடையாது என்பதையும் கருவாகக் கொண்டு படைக்கப்பட்ட காதல் இலக்கியங்கள் ஏராளம்; ஏராளம்! அவை அனைத்தும் சொல்லும் திறப்பாட்டிலுள்ள வேறுபாட்டால் வெற்றியும் பெறுவன!

    சுதாங்கனின் புதினமும் ஒரு காதல் கதைதான். காதலுக்கேயுரிய தவிப்பு, ஏக்கம், பிரிவு, தூக்கமின்மை ஆகியவற்றிற்கு இருவருமே ஆளாகின்றனர்.

    ஆனால் ஒரு வேற்றுமை; காதல் எப்போது வெளிப்படுகிறதோ அப்போது கதை முடிந்துவிடுகிறது.

    உனக்குத் தலை நரைச்சுத்தான் போயிருக்கு. கொட்டவேயில்லை என்று நீண்ட காலம் கழித்துக் காதலியைச் சந்திக்கும் காதலன் சொல்கிறான்.

    "நம்ம

    Enjoying the preview?
    Page 1 of 1