Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paarthathu... Padithathu... Rasithathu...
Paarthathu... Padithathu... Rasithathu...
Paarthathu... Padithathu... Rasithathu...
Ebook754 pages4 hours

Paarthathu... Padithathu... Rasithathu...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நான் சிவாஜியின் தீவிர ரசிகன். அவருடைய படங்களை முதல்நாள் பார்த்து, அதுவும் சில படங்களை போலீஸ்காரர்களிடம் அடி வாங்கி பார்த்த அனுபவமும் எனக்கு என் பள்ளி நாட்களில் உண்டு.

பிறகு நான் பத்திரிகையாளனான பிறகு நடிகர் திலகத்தோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

இந்த நேரத்தில்தான் என் தலையில் ஒரு பெரிய பளுவைத் தூக்கி வைத்தார் நெல்லை தினமலரின் நிர்வாக இயக்குனர் நாகராஜன். ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து பார்த்தது! ரசித்தது! படித்தது! தலைப்பில் நீங்கள் எழுத வேண்டுமென்றார். உடனே ஒப்புக் கொள்ள மனம் ஒப்பவில்லை. ஒருமுறை எனக்கு என் பத்திரிகை ஆசிரியர்கள் என் கண்முன்னே வந்தார்கள்.

கடவுளை நினைத்துக் கொண்டு நல்ல காரியத்தை துவங்குவதைப் போல அவர்களை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்தத் தொடரை ஒப்புக்கொண்டேன்.

2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கினேன். 2016 நவம்பர் வரை வந்ததின் தொகுப்புதான் இது. நூறு வாரங்கள் எழுதியதன் தொகுப்பு, இப்போது அடுத்த நூறும் தயாராக காத்திருக்கிறது. பாகம் - 2 விரைவில் வரும்.

ஒவ்வொரு வாரமும் பார்த்தது! படித்தது! ரசித்தது! என்று மூன்று விஷயங்களை எழுத வேண்டும். ஆனால் அந்த வரையறைப்படி சில கட்டுரைகள் இருக்காது. இந்த மூன்று தலைப்புக்களில் அந்த வாரம் எது முக்கியத்துவம் பெறுகிறதோ அது மட்டுமே இருக்கும். உதாரணமாக, நான் சிங்கப்பூர் அரசின் விருந்தாளியாக அங்கே போயிருந்தேன். அங்கே எனக்கு பல விஷயங்கள் கிடைத்தது. அதனால் சிங்கப்பூரைப் பற்றி சுமார் பத்து வாரங்கள் எழுதியிருப்பேன்.

இந்தப் புத்தகத்தை படிக்கும்போது வாசகர்களுக்கு, இதில் சினிமாவின் தாக்கம் அதிகம் இருக்கிறதே என்று தோன்றலாம்.

உதாரணம் ஒருவாரக் கேள்வி பதில். ஒரு கேள்வி டால்ஸ்டாயைப் பற்றி இருக்கும். அடுத்த கேள்வியில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி மோதலைப் பற்றி இருக்கும். இன்னொன்றில் அன்றைய பிரபலம் சில்க் ஸ்மிதா முக்கிய பங்கு வகிப்பார்.

கீதையையும் சொல்வார், சிலப்பதிகாரத்தையும் விளக்குவார். ஆனால் கேள்வி பதில்களில் சினிமா கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அது போல்தான் இந்தத் தொகுப்பும். காரட்டைக் காட்டி குதிரையை இழுப்பது போல் சினிமாவைக் காட்டி நான் பல விஷயங்களைச் சொல்ல முயன்றிருப்பதை பார்க்க முடியும்.

- சுதாங்கன்

Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580133005499
Paarthathu... Padithathu... Rasithathu...

Read more from Sudhangan

Related to Paarthathu... Padithathu... Rasithathu...

Related ebooks

Reviews for Paarthathu... Padithathu... Rasithathu...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paarthathu... Padithathu... Rasithathu... - Sudhangan

    http://www.pustaka.co.in

    பார்த்தது… படித்தது… ரசித்தது…

    Paarthathu... Padithathu... Rasithathu...

    Author:

    சுதாங்கன்

    Sudhangan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sudhangan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    அத்தியாயம் 54

    அத்தியாயம் 55

    அத்தியாயம் 56

    அத்தியாயம் 57

    அத்தியாயம் 58

    அத்தியாயம் 59

    அத்தியாயம் 60

    அத்தியாயம் 61

    அத்தியாயம் 62

    அத்தியாயம் 63

    அத்தியாயம் 64

    அத்தியாயம் 65

    அத்தியாயம் 66

    அத்தியாயம் 67

    அத்தியாயம் 68

    அத்தியாயம் 69

    அத்தியாயம் 70

    அத்தியாயம் 71

    அத்தியாயம் 72

    அத்தியாயம் 73

    அத்தியாயம் 74

    அத்தியாயம் 75

    அத்தியாயம் 76

    அத்தியாயம் 77

    அத்தியாயம் 78

    அத்தியாயம் 79

    அத்தியாயம் 80

    அத்தியாயம் 81

    அத்தியாயம் 82

    அத்தியாயம் 83

    அத்தியாயம் 84

    அத்தியாயம் 85

    அத்தியாயம் 86

    அத்தியாயம் 87

    அத்தியாயம் 88

    அத்தியாயம் 89

    அத்தியாயம் 90

    அத்தியாயம் 91

    அத்தியாயம் 92

    அத்தியாயம் 93

    அத்தியாயம் 94

    அத்தியாயம் 95

    அத்தியாயம் 96

    அத்தியாயம் 97

    அத்தியாயம் 98

    அத்தியாயம் 99

    அத்தியாயம் 100

    என்னுரை

    பார்த்தது! ரசித்தது! படித்தது! இந்த தலைப்பில் நெல்லை தினமலரில் நான் எழுத வேண்டுமென்று அதன் நிர்வாக இயக்குனர் திரு நாகராஜன் கேட்டுக் கொண்டார்.

    நான் நெல்லை தினமலருக்கு அறிமுகமானதே தற்செயலானதுதான். அதன் நிருபர் குட்டி கண்ணன்தான் என்னை முதலில் அணுகினார். அவர் வந்த விஷயம் நான் சிவாஜி கணேசனைப் பற்றி ஒரு தொடர் எழுத வேண்டுமென்பதுதான்.

    நான் சிவாஜியின் தீவிர ரசிகன். அவருடைய படங்களை முதல்நாள் பார்த்து, அதுவும் சில படங்களை போலீஸ்காரர்களிடம் அடி வாங்கி பார்த்த அனுபவமும் எனக்கு என் பள்ளி நாட்களில் உண்டு.

    பிறகு நான் பத்திரிகையாளனான பிறகு நடிகர் திலகத்தோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

    அதனால் அந்த உற்சாகத்தில் 'செலுலாய்ட் சோழன்' என்ற தலைப்பில் சிவாஜி பற்றி தொடர் எழுத ஒப்புக்கொண்டேன்.

    அடிப்படையில் நான் பெரிதாக கற்றறிந்த அறிவு ஜீவி அல்ல. ஆனால் ஒரு பத்திரிகையாளன் எப்படி இருக்க வேண்டும்? அவன் ஒரு நல்ல பத்திரிகையாளனாக தன்னை எப்படி தயார் செய்து கொள்ள வேண்டும்? என்பதை நான் பணிபுரிந்த பத்திரிகையின் ஆசிரியர்கள்தான் எனக்கு போதிக்காமல் கற்றுத் தந்தார்கள்.

    அடிப்படையில் சின்ன வயதிலிருந்தே நான் பிறந்து, வளர்ந்தது பத்திரிகைச் சூழலில்!

    என் கொள்ளுத் தாத்தா பி.ஸ்ரீ. அதாவது அம்மாவின் தாத்தா - அவர் 1930களிலேயே ஆனந்த விகடன் ஆசிரியர் இலாக்காவில் சேர்ந்து ஆனந்த விகடனில் 'சித்திர ராமாயணம்', 'கம்ப சித்திரம்', ‘சிவநேசச் செல்வர்கள்' போன்ற பக்தி இலக்கிய தொடர்கள் எழுதியவர். 1965-இல் தனது ராமானுஜர் புத்தகத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

    அவருடைய மகன் - அதாவது என் அம்மாவின் அப்பா - வி.எஸ். நாராயணன், தினமணி நாளிதழில் ஏ.என்.சிவராமன் ஆசிரியராக இருந்த காலத்தில் அந்த நாளிதழில் 28ஆண்டுகள் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.

    என் தந்தையார் எஸ். பிச்சுமணி. இவர் தினமணியின் தீவிர வாசகர். மேலும் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத்தில் இருந்தவர். வீட்டில் அலசப்படும் பொதுநல, அரசியல், இலக்கிய சர்ச்சைகள்தான் என் காதில் அடிப்படையில் விழுந்தது.

    இந்த பாதிப்பினாலோ என்னவோ பத்திரிகையாளனாக வேண்டும் என்கிற தணியாத தாகம் என்னுள் எழுந்தது. என்னை தமிழ்ப் பத்திரிகைக்கு அடையாளம் கண்டவர் மாலன்.

    அவர் எழுத்துக்களின் ரசிகனாகி பிறகு அவரது மாணாக்கனானேன். அதற்கு பிறகு நான் பகுதி நேரமாக - ப்ரீலான்சராக பணிபுரிய கிடைத்த இடம் குமுதம். அதன் ஆசிரியர் எஸ்.ஏ.பி. ஒரு ஜீனியஸ். பன்முக வித்தகர். ஆழ்ந்த படிப்பாளி.

    அவரது அரசு பதில்களை படித்தாலே பல புத்தகங்களை படிப்பதற்கு சமம். அவரது தீவிர ரசிகன் நான். அவருடைய எழுதும் பாங்கு, அவர் படிக்கும் புத்தகங்கள், அவர் ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்கும் பார்வை எல்லாமே என்னை பாதித்தது.

    அதற்குப் பிறகு 'எழுத்து இயந்திரம்' என்று அறியப்பட்ட அன்றைய குமுதத்தின் இணையாசிரியர் ரா.கி. ரங்கராஜன், ஜா.ரா. சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி), புனிதன் இவர்களைப் பார்த்து அறிந்து கொண்டது.

    பிறகு 1982-ஆம் வருடம் ஆனந்த விகடனில் சேர்ந்த போது, எனக்கு கிடைத்த நல்லாசான்கள் ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியன், இணையாசிரியர் மதன், என்னை ஊக்குவித்த துணை ஆசிரியர் ராவ் - இவர்களின் ஊக்கத்தினால் வளர்ந்தவன் நான்.

    நான் பத்திரிகை துறைக்கு வந்து ஏறத்தாழ 37 ஆண்டுகள் ஆகிறது. ஜுனியர் விகடனின் முதல் நிருபர். பின்னர் பொறுப்பாசிரியர். பிறகு தினமணியின் பொறுப்பாசிரியர். பின்னர் தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் துவக்க ஆசிரியர் என்று அனுபவங்கள் நீண்டு கொண்டே போனது.

    ஆனால் பல்வேறு விஷயங்களை பார்க்கும் பார்வை எனக்கிருக்கிறதா என்பதில் என் குறித்து எனக்கு எப்போதுமே சந்தேகம் உண்டு.

    இந்த நேரத்தில்தான் என் தலையில் ஒரு பெரிய பளுவைத் தூக்கி வைத்தார் நெல்லை தினமலரின் நிர்வாக இயக்குனர் நாகராஜன். ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து பார்த்தது! ரசித்தது! படித்தது! தலைப்பில் நீங்கள் எழுத வேண்டுமென்றார். உடனே ஒப்புக் கொள்ள மனம் ஒப்பவில்லை. ஒருமுறை எனக்கு என் பத்திரிகை ஆசிரியர்கள் என் கண்முன்னே வந்தார்கள்.

    கடவுளை நினைத்துக் கொண்டு நல்ல காரியத்தை துவங்குவதைப் போல அவர்களை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்தத் தொடரை ஒப்புக்கொண்டேன்.

    என்னுடைய சீடன் என்று அந்த ஆசிரியர்கள் என்னை பெருமிதமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமே என்கிற பயத்தோடுதான் 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கினேன். 2016 நவம்பர் வரை வந்ததின் தொகுப்புதான் இது. நூறு வாரங்கள் எழுதியதன் தொகுப்பு, இப்போது அடுத்த நூறும் தயாராக காத்திருக்கிறது. பாகம் - 2 விரைவில் வரும்.

    இப்போது இந்தத் தொகுப்பை படிக்கும்போது, எனக்கே சற்று பிரமிப்பாக இருக்கிறது. நானா இதையெல்லாம் எழுதினேன் என்று என் குறித்து எனக்கு ஒரு பிரமிப்பு. அதற்கு காரணம் நான் பத்திரிகைப் பாசறையில் பயின்ற பாடங்கள். அதன் ஆசிரியர்கள்.

    ஒவ்வொரு வாரமும் பார்த்தது! படித்தது! ரசித்தது! என்று மூன்று விஷயங்களை எழுத வேண்டும். ஆனால் அந்த வரையறைப்படி சில கட்டுரைகள் இருக்காது. இந்த மூன்று தலைப்புக்களில் அந்த வாரம் எது முக்கியத்துவம் பெறுகிறதோ அது மட்டுமே இருக்கும். உதாரணமாக, நான் சிங்கப்பூர் அரசின் விருந்தாளியாக அங்கே போயிருந்தேன். அங்கே எனக்கு பல விஷயங்கள் கிடைத்தது. அதனால் சிங்கப்பூரைப் பற்றி சுமார் பத்து வாரங்கள் எழுதியிருப்பேன்.

    இந்தப் புத்தகத்தை படிக்கும்போது வாசகர்களுக்கு, இதில் சினிமாவின் தாக்கம் அதிகம் இருக்கிறதே என்று தோன்றலாம். அதற்குக்கூட எனக்கு வழிகாட்டியர் குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.தான். உதாரணம் அவருடைய ஒருவாரக் கேள்வி பதில். ஒரு கேள்வி டால்ஸ்டாயைப் பற்றி இருக்கும். அடுத்த கேள்வியில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி மோதலைப் பற்றி இருக்கும். இன்னொன்றில் அன்றைய பிரபலம் சில்க் ஸ்மிதா முக்கிய பங்கு வகிப்பார்.

    கீதையையும் சொல்வார், சிலப்பதிகாரத்தையும் விளக்குவார். ஆனால் அவர் கேள்வி பதில்களில் சினிமா கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அது போல்தான் இந்தத் தொகுப்பும். காரட்டைக் காட்டி குதிரையை இழுப்பது போல் சினிமாவைக் காட்டி நான் பல விஷயங்களைச் சொல்ல முயன்றிருப்பதை பார்க்க முடியும்.

    சுதாங்கன்

    சென்னை

    18.9.18

    *****

    1

    பார்த்தது

    நல்ல விஷயங்களை சில மனிதர்களை பார்க்கும்போது பிடிக்கும்! அவர்கள் குணாதிசயங்கள், அவர்களுடைய ஆழ்ந்த அறிவு, அவர்களின் சமூகப் பொறுப்பு, கடமையுணர்ச்சி எல்லாமே என்னைக் கவரும்! அப்படிப்பட்ட மனிதர்களைப் பார்த்துப் பழகி, அவர்களுக்குத் தெரியாமல் அவர்களிடமிருந்து 'திருடி'க் கொண்ட விஷயங்கள் ஏராளம்!

    அந்த மனிதரை எனக்கு ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தெரியும்! நான் அவரைச் சந்திக்க வெகுநாட்கள் அவர் என்னை அனுமதிக்கவேயில்லை! பிறகு ஒரு மோதலில்தான் எங்கள் 'காதல்' மலர்ந்தது. அப்போது தமிழகத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆட்சி!

    அப்போது ஆளுங்கட்சியினர் எம்.ஜி.ஆரை போலவே இன்னொருவரிடமும் பயம் கொண்டிருந்தார்கள். அவர்தான் அன்றைய உளவுத்துறையின் டி.ஜி.பி. மோகன்தாஸ்! ஆட்சியை நடத்தவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் எம்.ஜி.ஆர். இவரை பெரிதும் நம்பியிருந்தார்! அவருடைய உளவுச் செய்திகள் அத்தனைத் துல்லியமாக இருப்பதாக அன்றைய முதல்வர் நம்பினார்!

    இதற்கு மோகன்தாஸ் மட்டுமே காரணமல்ல! அவருடன் இருந்த ஒரு திறமையான படை! அப்போது 1983-ஆம் வருட இறுதி! நான் 'ஜுனியர் விகடன்' நிருபர்! அப்போது ஜு.வி.யில் மிஸ்டர் கழுகு பகுதி மிகப் பிரபலம்! அதில் என் பங்களிப்பும் உண்டு! அதற்குச் செய்திகள் சேகரிக்க உளவு வேலை நிறையத் தெரிய வேண்டும்! அதனாலயே உளவுத்துறை மீது எனக்கு அதிக ஆர்வம் உண்டு!

    அப்போது மோகன்தாஸ் அவர்களின் வலது கரமாக இருந்தார் அந்த டிஐஜி! அவர் பெயர் தெரியும்! உருவம் தெரியாது! ஒரு செய்தியை ஆசிரியரிடம் கொடுத்தபோது, அந்த உளவுத்துறை தொடர்பானதாக இருந்ததால், இந்த டிஐஜியின் புகைப்படம் கொண்டு வந்தால், இதை பிரசுரிப்பேன்! கூட படம் கொண்டு வந்தால் விசேஷ பணப்பரிசும் உண்டு என்றார் ஆசிரியர்! கொண்டு வந்தேன்! செய்தியும் அந்த டிஐஜியின் படமும் பிரசுரமானது! ஒரு நாகரீகமான அற்புதமான ஆங்கில மொழியின் கோபத்தோடு, என்னை மெலிதாக போனில் கடிந்து கொண்டார்!

    'ஒரு உளவுத்துறை அதிகாரியின் முகம் வெளியே தெரியக் கூடாது! நீங்கள் செய்வது ஆரோக்யமான பத்திரிகை தர்மம் அல்ல' இதுதான் அவர் கோபத்தின் உச்சக்கட்ட வார்த்தைகள்! இதையே அவரை நெருங்கக் கிடைத்த சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டேன்!

    சந்திப்பார்! ஆனால் அவர் பணியிலிருந்தவரையில் ஒரு வார்த்தை வெளியே விடமாட்டார்! 1993 அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி கருணாநிதி, வை.கோ. மீது உறுதி செய்யப்படாத ஒரு உளவுத்துறை செய்தியை வைத்து அவர் மீது கொலைப்பழி சுமத்தினார்! அப்போது தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி! அப்படியானால் தி.மு.க. தலைவருக்கு உளவுத்துறை செய்தி எப்படி கிடைத்தது! நான் சொன்ன இந்த டி.ஐ.ஜி. அப்போது அதிமுக அரசின் உளவுத்துறை ஐஜி! அதற்குப்பிறகு அவர் என்னுடைய நலம் விரும்பினார்! அவருடைய ஆங்கில மொழி அழகும், அவருடைய பணியில் அவர் செய்த சில காரியங்களால் எனக்கு அவர்பால் ஒரு பெரும் ஈர்ப்பு வந்தது!

    சில பழைய தகவல்களை திரட்டிக் கொண்டிருந்தேன்! அன்றைய காவல் துறையின் சில கண்ணியங்களை பற்றி கேள்விப்பட்டேன்! அந்தத் தகவலை உறுதி, செய்ய அவரை அவரது இல்லத்தில் போய்ப் பார்த்தேன்!

    அதே அன்பு! அதே கம்பீரம், கண்ணியம்! நான் கேட்ட விஷயத்தை ஓய்வு பெற்ற இத்தனை ஆண்டுகள் கழித்தும், அதைச் சொன்னால் அது தற்பெருமையாகிவிடுமோ! என்று நேரடியாகச் சொல்லாமல் தகவலை உறுதி செய்தார்! தகவல் இதுதான்! 1976-ஆம் ஆண்டு இந்தியாவில் எமர்ஜென்சி சட்டம் அமலில் இருந்தது. 'திமுகவில் உள்ள பல முன்னணி தலைவர்களை சிறையலடைத்துக் கொண்டிருந்தார்கள்.

    திமுகவுக்கு விசுவாசமாக இருந்த பல போலீஸ் அதிகாரிகள் அப்போது தாங்கள் அந்த 'பக்க ஆள்' இல்லை என்பதை காட்டவே இன்னும் அதிகமாக திமுகவினரை கைது செய்து கொண்டிருந்த நேரம்! அப்போது உளவுத்துறை ஐஜி மோகன்தாஸ்! எம்.ஜி.ஆர் விசுவாசி என்கிற பெயரே அவருடைய குழுவிற்கு உண்டு! மாநில சுயாட்சி எண்ணம் திமுகவினரிடம் அப்படியே இருக்கிறது! பிரிவினை பேசுகிறார்கள் என்று உள்ளூர் அதிகாரிகள் புகார் கொடுத்து பலரை கைது செய்து கொண்டிருந்தார்கள்! மதுரையில் அப்போது ஒரு மின்சார வாரிய அதிகாரிகள் மாநாடு! அவர்கள் சட்டையில் அந்த மாநாட்டிற்கு அடையாளமாக ஒரு பேட்ஜ்! மேடையில் இருந்த ஒருவர் அந்த பேட்ஜின் பின்புறம் விளையாட்டாக சுரண்டிப் பார்க்க! அதில் ஒரு தாள் அதில் மாநில சுயாட்சி அடைந்தே தீருவோம்!' என்றிருந்தது.

    விவகாரம் சி.ஐ.டி பிரிவினர் காதுகளில் எட்ட அந்த மாநாடு நடத்திய அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படும் நிலை! விசாரித்தது மோகன்தாஸின் படை! தலைமை வகித்தது நம் ஹீரோவான டிஐஜி! ஒரே உத்தரவில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது!

    எப்படி இந்த டிஐஜி உண்மையைக் கண்டுபிடித்தார்! மாநாட்டுக்காரர்கள் அவசரமாக பேட்ஜ் கேட்க, வேறு ஒரு மாநாட்டிற்காக தயார் செய்திருந்த பேட்ஜின் மேல் இந்த மாநாட்டு முத்திரை பதித்து கொடுத்து விட்டார் அவ்வளவுதான்!

    இந்த டிஐஜி எழுதிக் கொடுத்த 12 அம்ச கடிதமே இந்த உத்தரவு ரத்தாக காரணமாக இருந்தது! நடுநிலை அவர்களிடம் இருந்தது! அந்த டிஐஜிதான் பின்னால் தமிழக டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்ற ஏ.எக்ஸ், அலெக்ஸாண்டர்! அவரை பார்ப்பது என்றாலே எனக்குள் ஒரு உற்சாகமிருக்கும்! அவர் மீது எனக்கு ஒரே வருத்தம்! அதை அவரிடமும் சொல்லிவிட்டேன்! அவர் அனுபவங்களை அவர் ஒரு புத்தமாக எழுத வேண்டுமென்பது தான்! தன் பணியின் பெரும்பாலான காலங்கள் உளவுத்துறையிலேயே கழித்தவர் அவர்! பல சுவாரஸ்யமான தகவல்கள் அவரிடம் உண்டு!

    படித்தது

    வாங்கும் புத்தகங்களை உடனே படிப்பது ஒரு வகை!

    மறுபடியும், மறுபடியும் படிக்கலாம் என்கிற மாதிரி புத்தகங்கள் இன்னொரு வகை!

    முதல் வகை உடனே எழுதினால் அந்தப் புத்தகம் எழுதியவருக்கு உடனே விளம்பரமாக இருக்கும்!

    இரண்டாவது வகை புத்தகங்களை பற்றி பேசினால் அடுத்த தலைமுறைக்குப் பயனுள்ளதாக இருக்கும்!

    அப்படி ஒரு புத்தகம் தான்!

    அப்படி என்னை ஈர்த்த புத்தங்கள் ஏராளம்!

    அடுத்த தலைமுறைக்கானது இந்த புத்தகம்!

    ராமசந்திர குஹா எழுதிய 'இந்திய வரலாறு; காந்திக்குப் பிறகு' ஆங்கிலத்தில் INDIA AFTER GANDHI.

    1988 வாக்கில் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நிறுவப்பட்ட தருணம். அதே ஆண்டில் கேம்பிரிட்ஜில் ஒரு தொடர் சொற்பொழிவு ஆற்றினார். பின்னர் அது 'இந்தியா' என்ற எளிய தலைப்பில் புத்தகமானது. அந்த மனிதர் சர்ஜான் ஸ்ட்ராச்சி. அவர் பல ஆண்டுகள் இந்தியத் துணைக் கண்டத்தில் வாழ்ந்தவர்.

    இந்தியாவில் உள்ள வேறுபாடுகளைவிட, ஐரோப்பாவில் இருந்த வேறுபாடுகள் மிகக்குறைவு என்று இவர் கருதினார். இந்தியாவில் இனமொழி, வேறுபாடுகள் அதிகம்! ஐரோப்பாவைப் போலின்றி அந்த ‘நாடு'கள் தேசங்கள் அல்ல; அவற்றுக்குத் தனியாக குறிப்பிடும்படியான ஒரு அரசியல் அல்லது சமூக அடையாளங்கள் கிடையாது. இந்தியா என்கிற ஒரு நாடு இப்போது இல்லை; ஒரு போதும் இருந்ததில்லை இதுதான் இவரது ஆணித்தரமான கருத்து.

    கூடவே இந்தியாவின் ஒரு பகுதிகளில் ஒருவித தேசிய உணர்வு என்பது ஏற்படலாம். ஆனால் அது இந்தியா முழுவதும் அமையுமாறு பரவ சாத்தியமே இல்லை என்பதில் உறுதியாக இருந்தார் ஸ்ட்ராச்சி. இவருடைய ஆய்வே வரலாற்று முடிவுகளாக அறிவிக்கப்பட்டது.

    ஸ்ட்ராச்சியின் இந்தக் கருத்துகளை இந்தியாவில் சிலர் வன்மையாகக் கண்டித்தனர். அவர்கள் 'இந்திய தேசிய காங்கிரஸ்' என்கிற ஒரு அமைப்பை நிறுவியிருந்தனர். இந்தக் கருத்தே தான் இந்திய தேசிய காங்கிரஸ் என்கிற ஒரு அமைப்பு உருவாகக் காரணமாக இருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றக் காரணமானவர்களில் காலனியவாதி ஏ.ஓ. ஹ்யூம் என்ற ஸ்காட்லாந்துக்காரரும் ஒருவர்.

    ஸ்ட்ராச்சியின் கருத்தை ஏற்றுக் கொண்டவர் பிரபல எழுத்தாளர் ரூட்யார்ட் கிப்ளிங். இவர் இந்தியாவில் சில காலம் வசித்தவர்!

    வின்ஸ்டன் சர்ச்சிலோ 'இந்தியா ஒரு நாடு என்கிற எண்ணமே வினோதமானது. சுயாட்சிக்கு இந்தியர்கள் தகுதியற்றவர்கள். அம்முயற்சியை உடைக்க பிரிட்டிஷ் தங்களது உறுதிமிக்க படைகளை ஏவ வேண்டும்.'

    இப்படி இந்திய சுதந்திரத்திற்கு எதிராகவும், அதற்குப் பிறகு இந்தியாவில் நடந்ததையும் சொல்லும் அருமையான பதிவு இது!

    ரசித்தது

    தற்செயலாகத்தான் பார்த்தேன். 1980களில் வந்த 'சிறை' படத்தை மறுபடியும்! எப்போது அந்தக் கதையையும், படத்தையும் பார்த்தாலும் ரசிக்கலாம்! ஆனந்த விகடன் பொன்விழா ஆண்டில் நடந்த சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற அனுராதா ரமணனின் சிறுகதை 'சிறை' அக்ரஹாரத்து குருக்கள் மனைவியை, ஊர் பணக்கார காலி அந்தோணி போதையில் கெடுத்துவிடுவான்! தெரிந்த கணவன் அவளை நிரந்தரமாக விட்டுப் போய்விடுவான்!

    தெருவில் கிடந்த அந்தப் பெண் அந்த அந்தோணி வீட்டுக்குள்ளேயே புகுந்துவிடுவாள்! அவள் நுழைந்த பிறகு அந்தோணி கண்ணியமாகிவிடுவான்! அவளை நெருங்கக்கூட மாட்டான்! ஆண்டுகள் ஓடும்! அந்தோணி இறந்து போவான்! ஒரு நாள் தவற்றுக்கு எனக்குச் சோறு போட்டவன் அவன்! ஆனால் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, வாழ்நாள் முழுவதும் துணையிருப்பேன் என்று சொன்ன கணவன் பலாத்காரம் செய்யப்பட்ட தன்னை நிரந்தரமாக விட்டுப் போய்விட்டான்!

    இப்போது அந்தோணி சாவுக்கு அந்த பாகீரதி கதறி அழுவாள்! கணவன் திரும்ப வருவான்! எனக்காகத் திரும்ப வருவா! எனக்காகத் திரும்பி வா! என்பான்.

    இப்பவும் உனக்காகவா! என்னை நிரந்தரமாக விட்டுப் போன உன் மனைவியாக இருப்பதைவிட ஒருநாள் தவறுக்காக வாழ்நாள் முழுவதும் என்னைக் கண்ணியமாக வைத்தவனுக்கு விதவையாக இருப்பதே மேல்! தாலியைக் கழட்டி எறிவாள்! இனி வருமா இந்த மாதிரி சிந்தனையுள்ள படங்கள்?

    *****

    2

    பார்த்தது

    நான் அடிக்கடி பள்ளிகள், கல்லூரிகளுக்கு நிகழ்ச்சிகளுக்குப் போவதுண்டு! பெரும்பாலும் அடுத்த தலைமுறையோடு பேச வேண்டும் என்கிற ஆவலிலேயே போவேன்!

    எனக்கு இன்றைய கல்வி முறை மீது ஏராளமான வருத்தங்கள் உண்டு!

    நாங்கள் படிக்கிற காலத்திலும் அரசு உதவி பெற்ற பல பள்ளிகளும், சில தனியார் பள்ளிகளும் உண்டு!

    தனியார் ஆதரவு பள்ளிகளில் படித்து வந்தவர்களை விட அரசு ஆதரவு பெற்ற பள்ளிகளிலிருந்து வந்தவர்கள் உயர்ந்த பதவிக்கு வந்திருக்கிறார்கள்!

    பிறகு தனியார் பள்ளிகள் அதிகமானது, பிறகு தனியார் கல்லூரிகள் அதிகமானது.

    கிராமப் பகுதிகளில் கூட இப்போது தனியார் பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகள் வந்துவிட்டன!

    இது ஒரு மகிழ்ச்சியான விஷயம்தான்!

    ஆனால் இந்தக் கிராமப்புறப் பள்ளிகளில் படித்து பின்னர் தனியார் கல்லூரிகளுக்குப் போகிற மாணவர்களின் மனநிலை என்ன?

    உள்ளுக்குள் ஒரு தாழ்வுணர்ச்சி மண்டிக் கிடக்கிறது!

    குறிப்பாக ஆங்கிலம் பேச முடியவில்லையே என்பது அவர்களின் அடிமனத்தில் ஒரு குற்ற உணர்ச்சியாகவே மண்டிக் கிடக்கிறது!

    இது ஒரு புறமிருக்க நகர்ப்புற பள்ளிகளில் நான் பார்த்தவை வித்யாசமானவை!

    சமீபத்தில் இரண்டு பள்ளிகளில் விழாக்களுக்கு நான் தலைமையேற்க போனபோது பார்த்தவை!

    முதலில் அந்த பிரபல பள்ளியில் ஆண்டு விழாவிற்கு என்னை அழைத்தார்கள்.

    சுமார் 1,200 மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பள்ளி அது!

    என்னை அழைக்க வந்த ஆசிரியர், சார்! எங்கள் பள்ளியில் வெளிநாட்டில் வாழும் இந்தியாகள் (NRI), குழந்தைகளும், வெளிமாநிலத்தவர்களும் படிக்கிறார்கள்! அதனால் நீங்கள் ஆங்கிலத்தில் பேசவேண்டும்!

    தலையாட்டிவிட்டுப் போனேன்! ஆங்கிலத்திலேயே பேச ஆரம்பித்தேன்! பல மொழிகள் கொண்ட மாநிலம் இந்தியா! ஆனால் இன்றைய இந்தியப் பிரதமரோ இந்தியில்தான் பேசுகிறார்! என் பிரதமரின் பேச்சை புரிந்து கொள்ள என்னுடைய இந்த 57வது வயதில் நான் இந்தி கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்! நானே அப்படிச் செய்யும்போது மாணவர்களாகிய நீங்கள் ஏன் தமிழ் கற்றுக்கொள்ளக் கூடாது? அதனால் உங்கள் ஆசிரியரின் விருப்பத்திற்கு மாறாக நான் இப்போது தமிழில் பேசப் போகிறேன்! என்றபடி என் பாணியில் ‘கதிர் வெடித்துப் பிழம்பு விழ! கடல் கொதித்து சூடேற்ற!'

    முதுமைமிகு நிலப்பரப்பின் முதல் பிறப்பு தோன்றி விட,

    நதி வருமுன் மணல் தருமுன் எம்மை காத்த தமிழணங்கே

    உன்னை வணங்கி என் உரையைத் துவக்குகிறேன்!

    ஆரம்பித்த நொடியிலிருந்து, அதுவரையில் கேட்காத கரவொலி விண்ணைப் பிளந்தது! இன்னொரு பள்ளியிலும் இதே மாதிரிதான் அனுபவம்!

    அதாவது மாணவர்கள் தமிழ்ப் பேச்சை கேட்கத் துடிப்பாக இருக்கிறார்கள்! அந்த ஆர்வத்தை தடுப்பது யார்?

    அடுத்து நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் கல்வி ஸ்தாபனம் வைத்திருக்கிறார்!

    இதில் ஒவ்வொரு வருடமும் மிகவும் வறுமை நிலையிலிருக்கிற நன்றாகப் படிக்கிற 300 பிள்ளைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களின் படிப்புச் செலவை இந்த அமைப்பே ஏற்றுக் கொள்கிறது!

    இதில் பொறியியல் மாணவர்களிலிருந்து கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் வரை உண்டு!

    அவர்களுக்காக இரண்டு நாள் பயிற்சி முகாம் சென்னை சத்யபாமா கல்லூரியில் அகரம் பவுண்டேஷன் சார்பில் நடந்தது!

    பல ஊர்களிலிருந்து மாணவ, மாணவியர்களை வரவழைத்து, அவர்களுக்கு தங்குமிடம், உணவளித்து, இந்த இரண்டு நாள் பயிற்சி முகாமில் அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுகிறார்கள்!

    அதில் இம்முறை நானும் கலந்து கொண்டேன்!

    அருமையான மாணவர்கள்! அதைவிட முகாம் நடத்திய அகரம் பவுண்டேஷனின் ஏற்பாடு முறைகள்! அதை திறம்பட கொண்டு போன அந்த அமைப்பின் இயக்குனர் திருமதி ஜெயஸ்ரீ! அற்புதம்!

    ஒன்று மட்டும் இங்கே பார்க்கும்போது தெரிந்தது!

    மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டுதல் இல்லை! அவர்களை வெறும் மதிப்பெண் வாங்குகிற இயந்திரமாகவே பார்க்கிறோம்!

    அது மாற வேண்டும்! மாறும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு!

    படித்தது

    குமுதம் பத்திரிகை 1949-ஆம் வருடம் அமரர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை அவர்களால் துவங்கப்பட்டது!

    அதில் பல வருடங்கள் இணையாசிரியராக இருந்தவர் திரு ரா.கி.ரங்கராஜன்!

    இவரை ஒரு எழுத்து இயந்திரம் என்றே சொல்லலாம்!

    ஆயிரக்கணக்கான சிறுகதைகள், பலநூறு நாவல்கள், நூற்றுக்கணக்கான மொழிப்பெயர்ப்புகள் எழுதிக்கொண்டேயிருப்பார்!

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் மறைந்த அவரது எழுத்துகள் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனி ஆர்வமே உண்டு!

    அவருக்குப் பல புனைப்பெயர்களும் உண்டு! ரா.கி.ரங்கராஜன் சமூக நாவல்களுக்கு, கிருஷ்ணகுமார் ஆவியுலக கதைகளுக்கு, மோகினி, சரித்திர கதைகளுக்கு டி.துரைசாமி மர்மக் கதைகளுக்கு! வினோத் சினிமா செய்திகளுக்கு என்று பல பெயர்கள் உண்டு!

    எப்படிக் கதை எழுதுவது என்று அஞ்சல் வழிக்கல்வியே நடத்தியவர்!

    வாசகர்களை எப்படித் தன் பக்கங்களோடு கட்டிப்போடுவது என்பதை அவரிடம்தான் கற்க வேண்டும்!

    கண்ணதாசன் தன் சுயசரிதையை ‘தான்' என்று தன்னைச் சொல்லாமல் அவன் என்றே தன்னைக் குறிப்பிட்டு ‘வனவாசம்' எழுதினார்!

    அதே போல் ஏறக்குறைய சுயசரிதை மாதிரியான ஒரு புத்தகம் ரா.கி.ரங்கராஜன் எழுதிய 'அவன்' கங்கை புத்தக நிலைய வெளியீடு அது!

    இந்தப் புத்தகத்தை தமிழ் அறிஞர்களைப் பற்றி தெரிந்து கொள்ள தேவைப்படும் ஒரு கையடக்க அகராதி என்றே சொல்லலாம்!

    இத்தனைக்கு ரா.கி.ரங்கராஜன் கூட ஆங்கிலமொழிக்கு பயந்து கல்லூரியை விட்டே ஓடி வந்தவர்!

    ஆனால் இன்றைய தமிழ் மொழிபெயர்ப்பு எழுத்தாளர்களில் அவருக்கு நிகர் அவரே.

    'அவன்' புத்தகம் அத்தகை சுவாரஸ்யமானது!

    அதில் ஒரு அத்தியாயத்தில் தலைப்பு தமிழிலிருந்து ஆங்கிலமா! ஐயோ!

    மர்மங்களையும், ரகசியங்களையும் திரில்களையும் தேடிக் காடு மலை வனாந்திரங்களுக்குப் போகவேண்டுமென்பதில்லை. அன்றாட வாழ்க்கையிலேயே கிடைக்கும். இதற்கு உதாரணம் ஒருநாள் கவிஞர் கண்ணதாசனின் முதலாளியான தீனாவுடன் செய்த டாக்ஸி பயணமே உதாரணம்!

    'வாங்கய்யா வெளியே போகலாம்' என்று தீனா கூப்பிட்டதும் எல்லோரும் அவருடன் டாக்ஸியில் ஏறிக்கொண்டார்கள்! எங்கே போகிறோம், எதற்காக போகிறோம் யாருக்கும் தெரியாது!

    டாக்ஸி சென்னை மௌபரீஸ் சாலையில் கிளம்பி ராயப்பேட்டை சாலையில் புகுந்து, போலீஸ் ஸ்டேஷன், ஆஸ்பத்திரி, ஒடியன் தியேட்டர், எல்பின்ஸ்டைன் தியேட்டர் வழியாக அண்ணாசாலை பி.ஆர். அண்ட் சன்ஸ் கடியாரக் கடையில் நின்றது.

    காரில் கண்ணதாசனும் இருந்தார்! காரை விட்டு எல்லோரும் இறங்கினோம்.

    தீனா மீட்டரைப் பார்த்தார், இரண்டு ரூபாய் ஆகியிருந்தது. சட்டைப் பையில் கையை விட்டு இரண்டு ரூபாயை எடுத்தார். டிரைவரிடம் கொடுத்தார். 'நல்லவேளை சரியாக இருந்தது' என்றார் சந்தோஷத்துடன், 'வாங்க போகலாம்' என்றார் கண்ணதாசனிடமும் மற்ற நண்பர்களிடமும்.

    'எங்கே' கேட்டார் கண்ணதாசன்.

    'ஆபீசுக்குத்தான், வெறெங்கே' என்றார் தீனா!

    அங்கிருந்துதான் வரோம்? எதுக்கு இங்கே வந்து இப்ப ஏன்? அவன் விழித்தான்!

    'டாக்ஸி' என்றார் கண்ணதாசன்!

    'டாக்ஸியா? காசு ஏது? வாங்க ஜாலியாய் நடந்தே திரும்பிப் போகலாம்' என்றார் தீனா. தலையலடித்துக் கொண்டார் கண்ணதாசன்! மர்மங்களுக்கும் ரகசியங்களுக்கு வெளியிலா தேட வேண்டும்!

    ரசித்தது

    எனக்குக் குரல்கள் மீது அதீத ஈர்ப்பு உண்டு!

    அதில் முக்கியமானவர் வாணி ஜெயராம்!

    அவர் 1970களில் இந்தியில் பாடிய போலுரே பப்பி பாடலிலிருந்து அந்தக் குரல் என்னை ஈர்த்து வந்திருக்கிறது!

    பிறகு அவர் தமிழ்த் திரைக்கு 'தீர்க்க சுமங்கலி' படத்தின் மூலமாக அறிமுகமானார்! அதில் 'மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ' குரல் தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவியது!

    அவருடைய பல பாடல்கள் அப்படியே நம்மை பிழிந்தெடுக்கும்!

    வருடங்கள் கடக்கும்போது குரல் வளம் மங்கும்!

    ஆனால் வாணியின் குரலில் தான் என்ன விந்தை!

    ஆண்டுகள் போகும் போது, அவர் குரல் இளமையாகிக் கொண்டேயிருக்கிறது!

    சமீபத்தில் அவர் குரல் கேட்டு நான் நெக்குருகி போனது 'ராமானுஜன்' படத்தில்!

    அது மாதிரி படங்கள் வியாபார ரீதியாக பெரும் வெற்றியடையாது!

    ஆனாலும் அது போன்ற படங்கள்தான் நமது படைப்பாற்றல் பெருமையை பறைசாற்றும்! இந்தப் படத்திற்கு இசை ரமேஷ் வினாயகம்! சிறுவன் ராமானுஜன் பாடுவது மாதிரியான பாடல்! குரல் வாணி ஜெயராம்! பாடல்: வாலி!

    வாலி என்கிற இந்த ஸ்ரீரங்கத்து வாசிக்கு நாராயணன் என்றாலே வார்த்தைகள் அவர் வாயிலில் வந்து நிற்கும்போலும்!

    'ஓராயிரம் ஈராயிரம் மூவாயிரம் நாமம் என்

    நாலாயிரம் நூலாயிரம் நாவரவே பேசும் அவை

    ஆராமுதன் தீராமுதன் இரார் புகழ் கூறும் தினம்

    ஆராதனை யார் செய்யிணும்!

    தீரா வினை தீரும்!’

    என்ன வரிகள்! என்ன குரல்வளம் வாணிக்கு! அதைவிட இந்தப் படத்திற்கு இசை அமைத்த ரமேஷ் வினாயகத்திற்கு ஒரு சல்யூட்!

    *****

    3

    பார்த்தது

    இன்றைய உலகத்தில் பணமும், பேராசையும், ரசனையின்மையும் அதிகமாகிவிட்டது என்று பொதுவாக தோன்றுகிறது!

    முன்பெல்லாம் ஊரில் அழுக்கு வேட்டி கட்டியவன் திடீரென்று வெள்ளை வேட்டி கட்டினால் கூட மனிதர்கள் அவரை சந்தேகக் கண்ணோடு பார்ப்பார்கள்!

    இவனுக்கு எப்படி இந்த வசதி ஒரே நாளில் வந்தது? என்று மனதிற்குள் யோசிப்பார்கள்! அந்த யோசனையில் இரண்டு வகை உண்டு! ஒன்று பொறாமை! இன்னொன்று அவன் நடத்தை மீதான சந்தேகம்!

    இப்போது யாரும் அப்படிப் பார்ப்பதேயில்லை! யோசிப்பதுகூட இல்லை!

    நடந்து போய்க்கொண்டிருந்தவன், திடீரென்று பென்ஸ் காரில் வந்தால் உடனே அவன் காலில் விழுந்து கூழைக்கும்பிடு போட மனிதர்கள் தயாராகிவிட்டார்கள்!

    இவையெல்லாம் பெரும்பாலும் நகர்ப்புறங்களில்தான்! ஆனால் கிராமத்து மனிதர்கள் நடுவே இந்த கண்ணியம், சமூக ஒழுங்கு இன்னும் இருப்பதாகவே நினைக்கிறேன்!

    அவர்களது மனங்களைக் கூட இந்த ஊடகத் தொடர்கள் தான் களங்கப்படுத்துகிறது!

    பயணத்தின் போது நான் பார்க்கும் மனிதர்கள் பலவித நம்பிக்கையை எனக்குள் விதைக்கிறார்கள்!

    பெரும்பாலான அதுவும் படிக்காத இளைஞர்களுக்குள், படிக்கவில்லையே என்கிற ஆதங்கத்தில் உழைத்து பெரிய மனிதனாக வேண்டுமென்கிற உந்துதல் அதிகமாகவே இருக்கிறது!

    மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிறித்துவபெண் ஒரு கடைத் தெருவில் காய்கறி விற்றுக்கொண்டிருந்தாள். கூடவே பக்கத்திலிருந்த தனது ஐந்து வயது மகனுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுக்கிறாள். ஆங்கிலத்தில் பேசியபடி சில்லரையை என்னிடம் கொடுத்ததை கண்டபோது வியந்தேன்!

    கேட்டபோது, அந்தப் பெண் சொன்னாள் 'நான் படித்தது எம்.பி.ஏ. இன்னொருவரிடம் கைகட்டி மாதச் சம்பளத்திற்கு நிற்பதைவிட என் கணவர் செய்யும் இந்தத் தொழிலில் வருமானமும் உண்டு! என் சுயமரியாதையும், சுதந்திரமும் கூட இருக்கிறதே' என்றபோது!

    அவளை வியந்து பார்த்தேன்!

    ஒரு ஆட்டோ ஓட்டுனர் பெயர் மூர்த்தி!

    காத்திருக்கும் வேளையில் ஆங்கில நாளிதழ்களை படித்துக் கொண்டிருப்பார்!

    அவர் ஒரு பி.காம் பட்டதாரி! அவர் ஆட்டோ ஓட்டுவதை கவுரவ குறைச்சலாக நினைக்கவில்லை!

    'இந்தத் தொழிலில் மேம்பட்ட பல மனிதர்களை நான் தினமும் பார்க்கிறேன்! என் பள்ளி, கல்லூரி சொல்லிக் கொடுக்காததை என் வாகனத்தில் வரும் மனிதர்கள் சொல்லிக் கொடுக்கிறார்களே சார்' அவரை நான்! வியந்து பார்த்தேன்!

    வழக்கமாக நான் கட்சி அலுவலகங்களுக்கு நிருபராக இருந்த காலத்தில் அந்த தலைவர்களின் பேட்டிக்காக போயிருக்கிறேன்!

    ஆனால் முதல் முறையாக ஒரு நிகழ்ச்சிக்காக மதிமுக அலுவலகம் போயிருந்தேன்!

    அங்கே ஒரு உணர்ச்சிபூர்வமான நிகழ்ச்சி!

    அங்கஹீனமான, இன்றைய சொலவடையில் ‘மாற்றுத்திறனாளி' என்று அழைக்கப்படுகிற 20 வயது இளைஞர் வசந்த்!

    இவர் மதிமுக அனுதாபி! விசுவாசி!

    கட்சி நிதி இல்லாமல் மதிமுக இணையதள நண்பர்கள் நிதி திரட்டி சேலத்தில் ஒரு சுயமாக தொழில் நடத்த ஒரு கடை வைத்துக் கொடுத்திருக்கிறார்கள்! வசந்த் என்கிற இந்த இளைஞனுக்கு!

    அந்தக் கடையின் சாவியையும், அவருக்கு லேப்-டாப், மொபைல் சார்ஜ் பண்ணுவதற்கு செல்போன்களையும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வழங்கினார்!

    நான் சிறப்பு விருந்தாளி!

    அந்த இளைஞர் சொன்னார். கட்சிக்காக நான், போஸ்டர் ஒட்ட முடியாது. ஓடியாடி வேலை செய்ய முடியாது, கையால் எழுத முடியாது! என் பேச்சால், உழைப்பால் நான் கட்சிக்கும் இந்த நிதி அளித்தவர்களுக்கும் விசுவாசமாக இருக்க முடியும்!

    'என்னை மாற்றுத்திறனாளி என்கிறார்கள்! ஆனால் நானே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாற்றத்தை உண்டாக்கும் திறனாளி என்கிறேன்' என்று உணர்ச்சிவசப்பட்டு அழுதபடியே சொன்னார்!

    அந்த வசந்த் என்கிற இளைஞரை நெகிழ்ந்து பார்த்தேன்!!

    படித்தது

    கல்வெட்டுகள், செப்பேடுகள், சரித்திரக் குறிப்புக்கள் இதைப் பல ஆண்டு காலமாக சேகரித்து எழுதுவதில் இந்தியாவில் கே.என். நீலகண்ட சாஸ்திரிக்கு மிக முக்கிய பங்கு உண்டு.

    அவர் இப்படி ஆராய்ச்சி செய்த நூல்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கும்!

    சாஸ்திரியின் ஆராய்ச்சியில் சோழர்கள் வரலாறு மிக முக்கியமானது!

    அதை 1989-ஆம் ஆண்டு முதன் முதலாக நியூ செஞ்சரி புக் ஹவுஸ் தமிழில் சோழர்கள்! என்கிற தலைப்பில் கொண்டு வந்தார்கள்.

    பிறகு அந்தப் புத்தகம் கிடைக்கவில்லை!

    14 ஆண்டுகள் அதன் சுவடுகளே கடைகளிலோ, நூலகங்களிலோ எனக்குத் தென்படவில்லை!

    பிறகு 2012-இல் நான்காவது பதிப்பு என்று கொண்டு வந்தார்கள்.

    சென்ற வருடம் 2013-இல் ஐந்தாவது பதிப்பு, கொண்டு வந்தார்கள்!

    இரண்டு தொகுப்பாக!

    வரலாறும், நம் தமிழர்களின் பெருமையும் தெரிந்து கொள்ள படிக்க வேண்டிய புத்தகம் இது!

    இதற்குக் காரணம் உண்டு!

    தென்னிந்திய வரலாற்றில் அதிகமான படைப்பாற்றல் நிறைந்தது சோழர் காலம்தான்!

    அந்தக் காலகட்டத்தில் தான் முதன் முதலாகத் தென்னிந்தியா முழுவதும் ஒரே அரசாங்கத்தின் ஆளுமையின் கீழ் கொண்டு வரப்பட்டது!

    புதிய சூழ்நிலைகள் தோன்றியபோது அதைச் சோழர்கள் எப்படி சமாளித்தார்கள்!

    அவர்கள் ஆட்சி நடத்தியபோது மக்கள் மீது அவர்களுக்கு இருந்த அக்கறை பிரமிக்க வைக்கிறது!

    உள்ளூர் ஆட்சிமுறை, கலை, சமயம், இலக்கியம் என்று எல்லா துறைகளிலும் அவர்கள் ஒரு முத்திரை பதித்தார்கள்.

    அவர்கள் எட்டிய உயரத்தை எதிர்காலத்தில் யாரும் எட்டக்கூடாது என்கிற ஆர்வம் எல்லா சோழ மன்னர்களுக்கும் இருந்தது!

    அதுதான் இன்று வரையில் உண்மை யாரும் எட்டிப் பிடிக்கவில்லை.

    இவர்கள் காலத்தில் தான் தமிழகம் ஒரு உயர்ந்த இடத்தை எட்டியது!

    இன்றைக்கு நாம் பேசுகிற ஏற்றுமதியை எந்த வசதியும், இல்லாத அந்த நாட்களிலேயே அவர்கள் திறம்படச் செய்திருக்கிறார்கள்!

    கடல் சார்ந்த வாழ்க்கைக்கான சூத்திரங்களை அவர்கள் காலத்தில் காண முடியும்!

    சோழர்கள் பற்றிய இந்த வரலாறு, ஒரு பெரிய சகாப்தத்தைப் பற்றி, முதல் முறையாக சொல்லப்பட்ட ஒரு ஆராய்ச்சி நூல் இது!

    இதற்கு ஒன்பதாம் நூற்றாண்டின் விஜயாலயன் பட்டத்திற்கு வந்த காலத்திலிருந்த கல்வெட்டுக்கள் நீலகண்ட சாஸ்திரிக்கு உதவியிருக்கின்றன!

    தமிழர்களின்ன கலை, இலக்கியம், சமயம், கட்டடக் கலை, உருவாக்கப்பட்ட கோயில்கள் அவர்களின் ஆட்சி முறையை இன்றைய விஞ்ஞான யுகத்தில் செய்ய முடியுமா என்பது தெரியவில்லை!

    மக்கள் சேவைக்குத் தேவை தொழில் நுட்பமில்லை! தெளிவான சிந்தனை! மக்கள் நலம், சுயநலமற்ற வாழ்க்கைதான் என்பதை சோழர்கள் வரலாறு உணர்த்துகிறது!

    ரசித்தது

    சமீபத்தில் நான் இரண்டு விஷயங்களை மிகவும் ரசித்தேன்!

    ரசனை என்பது நிகழ்கால நினைவுகள் மட்டுமே அல்ல! இப்படி நினைப்பவன் நான் கடந்த கால சம்பவங்கள், கதைகள், சரித்திரங்கள், இசை எல்லாமே என்னை இழுக்கும்! சின்ன வயதிலிருந்து அப்படி ஒரு பழக்கம்!

    இந்தத் தடைகளற்ற என் ரசனைக்கு நான் வளர்ந்த சூழலும் காரணமாக இருக்கலாம்! முதலில் பாரதி, கம்பன் மீது, ஈர்ப்பை ஏற்படுத்திய பிஜாபுரி தாத்தா என்கிற இஸ்லாமியர்!

    தன் 32 வயதிலும் எங்களோடு கிரிக்கெட்டும் விளையாடி, காத்தாடியும் விட்ட எதிர்த்த வீட்டு ஆங்கிலோ இந்திய சிட்னி! மதங்களுக்கு அப்பாற்பட்டு மனிதத்தில் பழகிய அந்தப் பழக்கம் அப்படியே என் ரசனைகளிலும் ஒட்டிக் கொண்டு விட்டதோ! எமர்ஜென்சிக்கு முன்பு வரை இருந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திராவையும், அவர் துணிச்சலையும் எனக்குப் பிடிக்கும்!

    ஜனவரி 21 1966-ஆம் ஆண்டு லால்பகதூர் சாஸ்திரி மறைவிற்குப் பிறகு இந்திரா பிரதமரானார்! அதே வருடம் மார்ச் மாதம் இந்தியப் பிரதமராக அமெரிக்கா போனார்! அப்போது அங்கே ஜனாதிபதி லிண்டன் ஜான்சன்!

    இந்தியாவில் இருந்த வரையில் சாதாரண காட்டன் புடவைகளில் வலம் வந்த இந்திரா உலக அரங்கில் தன்னை அழகாகக் காட்டிக் கொள்ள வேண்டுமென்று நினைத்தார்! அங்கு அவர் கலந்து கொள்ளப் போகும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்குமான புடவை, பிளவுஸ், அவரது கைப்பை வெவ்வேறு விதமாக அவரே தேர்வு செய்தார்!

    அங்கே தனக்கென தனியே ஒரு ஒப்பனை கலைஞரை தேர்வு செய்து கொண்டார்! இந்தப் பரந்த தேசத்தின் முதல் பெண் பிரதமர் என்பதால் இங்கே தன்னை ஆணாக காட்டிக் கொள்ள விரும்பிய இந்திரா அங்கே தன்னை ஒரு இயல்பான பெண்ணாக காட்டி பவனி வர முடிவு செய்தார்!

    அங்கே அவர் போன போது அவரது தோற்றமே மாறியிருந்தது! இந்தப் படத்தை நான் வெகுவாக ரசித்தேன்! அவரது அழகில் லிண்டன் ஜான்சனே மயங்கியது உண்மை! இதை இந்திரா தன் சரிதையில் சொல்லியிருக்கிறார்! அடுத்து 1971 இந்தியா - பாகிஸ்தான் போருக்கு முன் அவர் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி!

    அமெரிக்காவில் பெண்மணி இந்திராவை ரசித்தேன்! இந்த பிபிசி பெட்டியில் ஒரு கம்பீரமான ஆண்மையுள்ள பெண் பிரதமரான இந்திராவின் துணிச்சலான பேட்டியை ரசித்தேன்!

    *****

    4

    பார்த்தது

    வரப்போகும் காலங்களில் அரிய தகவல்களை தேடுவது கடினமாக இருக்கும்! அல்லது அனேகம் பேருக்கு நல்ல தகவல்கள் யாரிடமிருக்கும் என்கிற விஷயமே தெரியாமல் போகும்! அதுவும் இப்போது பல தொலைக்காட்சி சேனல்கள்! பழைய பாடல்கள் படங்கள் காட்ட வேண்டிய கட்டாயம்! ஆனால் படங்களின் பெயர்களை போடும்போது கவலையேபட மாட்டார்கள்! தவறான படங்களின் பெயர்களை போடுவார்கள்!

    அதுவும் குறிப்பாக இந்தக் கண்ணதாசன் வாலி பாடல்களில் அவர்களின் பெயர்களை போடும் போது வாலி எழுதிய பாடல்களில் கூட கண்ணதாசன் என்பார்கள்! ஊடகங்களுக்கும் கூட இந்தப் பழைய படங்கள் விஷயங்களுக்கு யாரை அணுக வேண்டுமென்பது கூட தெரியாது! அப்போதும் சரி, இப்போதும் சரி, எனக்கு பழைய பாடல்கள், படங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் எனக்கு கையடக்க அகராதியாய் நான் கருதும் மனிதர் அலிகான்தான்!

    சென்னை ஆற்காடு சாலையில், பழைய ராம் தியேட்டருக்கு, (இப்போது அது ஒரு திருமண மண்டபம்) நான்கைந்து ட்டடங்கள் தாண்டினால் பழைய பாடல் ஆராய்ச்சி மையம் என்கிற அழிந்தும், அழியாமலும் ஒரு பெயர்ப் பலகை இருக்கும்!

    அதன் உரிமையாளர் தான் அலிகான்!

    மொத்தம் 1.5லட்சம் பழைய திரைப்படப் பாடல்கள் இவரது வசமுள்ளது! இதில் பழைய தமிழ் திரைப்படப் பாடல்கள் மட்டுமே 45,000 இது தவிர இந்தி திரைப்படப் பாடல்கள்! மெல்லிசை, அந்த நாளைய பிரபல கர்நாடக வித்வான்களின் மேடைக்கச்சேரிகள்! இது தவிர 4,000 பழைய திரைப்பட பாடல் புத்தகங்கள்.

    சினிமாப்பாட்டிற்கு புத்தகம் வந்ததே இந்தத் தலைமுறையினருக்குத் தெரியாது! அலிகானை இந்த சினிமாப் பாடல்கள் பக்கம் இழுத்ததே இலங்கை வானொலி தான்! அன்றைய தமிழ் சினிமாவிற்கு முகவரியே இலங்கை வானொலிதான்! காலையில் 6 மணிக்கே பொங்கும் பூம்புனல் என்றுதான் துவங்குவார்கள் குறிப்பாக நமது நெல்லை வட்டாரக்காரர்களுக்கு இலங்கை வானொலியின் அருமை தெரியும்! ஆனால் நமது வானொலியில் மதியம் 1 லிருந்து 1.30 வரைதான் திரைப்படப் பாடல்கள்! இலங்கை வானொலியில் தொகுப்பாளர்களின் ரசனையும் மிக உயர்ந்ததாக இருக்கும்! அப்போது இலங்கை வானொலியில் அடிக்கடி வரும் பாடல் ‘தங்கமலை ரகசியம்' படத்தில் மிகப் பிரபலமான பாடலான 'அமுதை பொழியும் நிலவே' இந்தப் பாட்டுக்கு இசை டி.ஜி. லிங்கப்பா பாடலை எழுதியவர் கு.மா. பாலசுப்ரமணியம்!

    இந்தப் பாட்டின் வீச்சு தான் அலிகானை சினிமா பாடல்களுக்குள் இழுத்தது! இந்தப் பாடல்கள் வரும்போது அலிகான் வீட்டில் ரேடியோ கூட கிடையாது! திருமண வீடுகளில், அல்லது தெருவோரம் இருக்கும் டீக்கடை ரேடியோவில் தான் பாடல் கேட்க முடியும்! அப்படி நின்று பழைய பாடல்களை கேட்டவர் இவர்! 1959 இவருக்கு வேலை கிடைத்தது!

    அந்த நாளில் கிராம்போன் விலை பதினைந்து ரூபாய்!

    கறுப்பு நிற தட்டாக பாடல்களில் இசைத்தட்டுகள் வரும் விலை 50 பைசா! அலிகான் ஒரு திருமணத்திற்கு போயிருந்த போது, இந்தப் பழைய இசைத்தட்டுக்களையே ஓரத்தை உருக்கி தட்டாக்கி, அதில் வருபவர்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்!

    ஒரு தட்டில் தியாகராஜ பாகவதர் அசுவத்தாமர் பாடிய நவீன சாரங்கதாரா பாடல் இசைத்தட்டு என்பதை கண்டார்! இந்த இசைத்தட்டுகள் இப்படியா வெற்றிலை கொடுக்கும் தட்டாக பயன்பட வேண்டும்! அப்போதிலிருந்த இந்தப் பாடல்களை திரட்ட ஆரம்பித்தார்!

    இப்போது மாதிரி சட்டென்றல்லாம் பாடல்கள் கிடைக்காது! பல ஊர்களுக்குச் சென்று அந்த நாட்களில் பாடல்களை திரட்டினார் இவர்!

    இவர் மிகவும் சிரமப்பட்டது எம்.என். நம்பியார் கதாநாயகனாக நடித்த 'திகம்பர சாமியார்’ படப் பாடல்கள் தான்! இவர் இருப்பதோ சென்னையில்! ஆனால் இந்தப் பாடல்கள் தென்காசி அருகே ஒரு கிராமத்தில் இருப்பதாக கேள்விப்பட்டு உடனே ரயிலேறி அந்த ஊருக்கும் போனார் அலிகான்!

    ஒரு மலையடிவாரத்தில் ஒரு சின்ன கிராமத்தில் இருந்த ஒருவரிடம் இருந்தது. அவரிடமிருந்து அந்த இசைத்தட்டை வாங்கி, தென்காசிக்கு வந்து அங்கிருந்த கடையில் பதிவு செய்து கொண்டு வந்தாராம்! இவருடைய அருமையான சேகரிப்பும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு தெரியும்! 2004-ஆம் ஆண்டு வரை வந்த திரைப்படப் பாடல்களை இவரிடமிருந்து வாங்கி சேமித்து வைத்திருக்கிறார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா!

    அந்த நாளைய பணக்காரர்களுக்கு ரசனை இருந்தது! இந்த மாதிரி பொக்கிஷங்களை பணம் கொடுத்து வாங்கி பாதுகாப்பாக வைப்பார்கள்! இப்போது இதைப் பாதுகாக்கவே இவர் பொருளாதாரரீதியாக போராடினாலும், அதைக் காப்பாற்றி வருகிறார் இவர்! பழைய படங்கள், பாடல்கள் ஆராய்ச்சி வேண்டுபவர்கள் அலிகான் 9791161433 எண்ணுக்குத் தொடர்பு கொண்டால், ஆலோசனைகள் இலவசம்! இவரது சேவை எப்போதுமே கிடைக்கும்!

    படித்தது

    'இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு!'

    எழுதியவர் ஈ.எம்.எஸ். நம்பூதிர்பாட்!

    இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, இந்தியாவிலேயே முதல் கம்யூனிஸ் அரசை கேரளாவில் அமைத்த பெருமை இவருக்குண்டு!

    அரசியலமைப்புச் சட்டம் 356 முதன் முதலாக இவரது கேரள அரசைக் கலைக்கவே மத்திய நேரு அரசு பயன்படுத்தியது!

    இவர் 200க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியவர்.

    இந்திய வரலாற்றை மார்க்சீய கண்ணோடத்தில் பார்த்தவர்!

    இவர் எழுதிய புத்தகத்தை இலக்குவன் மொழியாக்கம் செய்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது அருமையான ஒரு தகவல் களஞ்சியம் இது!

    944 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில்தான் எத்தனை அரிய தகவல்கள்!

    ஏன் இந்தப் புத்தகம் அவசியம்!

    அதன் பதிப்புரையிலிருந்து சில வரிகள்!

    ‘நவீன வரலாறு என்பது வெடிமருந்து, அச்சுக்கலை, திருச்சபை மாற்றங்களில் தொடங்குவதில்லை. அது பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து துவங்க வேண்டுமென்பார்கள் அறிஞர்கள். காரணம் அதில்தான் மக்கள் அதிக அளவில் ஈடுபட்டார்கள்.

    அதைப் போலவே உலக சரித்திரத்தின் இன்னொரு நிகழ்வு இந்திய சுதந்திர போராட்டம்! ஆனால் இந்திய வரலாற்றினை எழுதிய அறிஞர்கள் ஆதிக்க சக்திகளின் பார்வையிலேயே அதை எழுதினார்கள்.

    இந்திய வரலாற்றை ஆரிய - திராவிட வருகை பற்றிய கதையாகவே எழுதினார்கள்.

    இந்த வகையில் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றினை போராட்டத்தில் பங்கு கொண்ட அனுபவத்துடன் முழுமையாக ஆய்ந்து எழுதியுள்ளார் தோழர் ஈ.எம்.எஸ். அவர் விடுதலை வீரர்; இடது சாரி இயக்கங்களை உருவாக்கிப் பாதுகாத்து வளர்த்ததில் பெரும்பங்கு ஆற்றியவர்; மார்க்சியத்தை ஆழ்ந்து கற்றுத் தேர்ந்து இந்திய மண்ணின் தனிச்சிறப்பு, மரபுகளுக்கேற்றவாறு அதனை பயன்பாட்டுக்குக் கொண்டுவந்த வளம் சேர்ந்த ஆசான்!

    பதிப்புரை தான் என் கருத்தும்!

    ரசித்தது

    நான் சிவாஜி ரசிகன்! அந்த நாளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எப்படியெல்லாம் மக்களின் நாடித்துடிப்பை பிடித்துப் பார்த்திருக்கிறார் என்பதை மக்களோடு படம் பார்த்து ரசிக்கத்

    Enjoying the preview?
    Page 1 of 1